• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி......பாகம் 43

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
43
43
Maduravoyal

ரகசிய கொலையாளி......

பாகம் 43


காலை எழுந்து மாயாவிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு சென்றான் மணிகண்டன்.

நர்ஸ் அப்போது வந்து மாயாவிடம்
.....

மேடம் அது உங்க அம்மாவா.....

ஆமாம் சிஸ்டர்.....

நைட் இரண்டு தடவை கான்ஷியஸ் வந்தது அவங்களுக்கு. உங்க பேரு மாயா வா.....

ஆமாம் சிஸ்டர்...... இப்ப எப்படி இருக்காங்க எங்க அம்மா.....

பிரச்சனை எதுவும் இல்ல நல்லா இருக்காங்க..... ஆனா நைட்டு உங்க பேர தான் சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

கண்கள் கலங்கியது மாயாவிற்கு.

இப்ப போய் பாக்கலாமா அம்மாவ.....

இல்ல இப்ப தூங்குறாங்க..... நான் சொல்லும் போது அவங்களுக்கு ஏதாவது குடிக்க வாங்கிட்டு வாங்க.... காபி டீ அவங்களுக்கு எது பிடிக்குமோ அது வாங்கிட்டு வாங்க. இங்க கேண்டின்ல காபி டீ கிடைக்காது.

இல்லையே நேத்து நானும் என் மாமா அவன் காபி குடிச்சோமே......

இல்ல பேஷண்டுக்கு நாங்க கொடுக்க மாட்டோம்..... அட்டெண்டர்ஸ், ஸ்பெஷல் விசிட்டர்ஸ் அவங்களுக்கு மட்டும்தான் கேண்டின்ல காபி கிடைக்கும்.

ஓகே ஓகே.....

சுகர் இல்லாம குடுங்க......

ஓகே சிஸ்டர்......

ஆனா இப்ப வேணாம் நான் சொல்றேன்...... அவங்க தூங்குறாங்க......

சரிங்க சிஸ்டர்......

அரை மணி நேரத்தில் மணிகண்டனும் சிவகாமியும் வந்தார்கள்.

மணிகண்டன் முதலில் நடந்து மாயா அருகில் வந்தான்.

என்ன மாமா அதுக்குள்ளே வந்துட்டீங்க.....

நீ தனியா இருக்கியே மாயா..... உனக்கு இது தெரியாத இடம் வேற.

ஸ்மைல் செய்தாள் மாயா.

அதுக்கு பின்னால் மெதுவாக நடந்து வந்தார் சிவகாமி.

மாயா அருகில் வந்து.....

கண்ணு நல்லா இருக்கியா மா...... எவ்வளவு நாளாச்சு உன்னை பார்த்து...... என்றார் சிவகாமி.

நல்லா இருக்கேன் அத்தை...... நீங்க எப்படி இருக்கீங்க.....

இருக்கேன் மா...... டாக்டர் என்னம்மா சொன்னாங்க அம்மாவை பத்தி......

கவலைப்பட வேண்டாம்னு சொன்னீங்க அத்தை..... ஆனா அத்தை......

சொல்லுமா.....

அம்மா கண்டிப்பா உங்கள திட்டுவாங்க ..... உங்க மேல கோபப்படுவாங்க ..... நீங்க எப்படி......

மாயா..... நீ அதை பத்தி எல்லாம் கவலைப்படாத மா நான் பாத்துக்குறேன்...... என்றார் சிவகாமி.

மாயா உனக்கு எங்க அம்மாவ பத்தி தெரியாது..... அவங்களுக்கு ரொம்ப பொறுமை அதிகம்...... நீ கவலையே படாதே..... கண்டிப்பா மாமியை நல்லா பாத்துப்பாங்க... என்றான் மணிகண்டன்.

அய்யோ மாமா..... நான் என் அம்மாவை நினைச்சு கவலைப்படவில்லை..... அத்தையை நினைச்சு தான் கவலைப்படுறேன்...... என்றாள் மாயா.

இப்போ நான் வீட்டுக்கு போய் ரெடி ஆகி வேலைக்கு போ..... என்றார் சிவகாமி.

நர்ஸ் அம்மாவுக்கு காபிக்கு கொடுக்க சொன்னாங்க.

நான் வீட்டில் இருந்தே காபி டிபன் லஞ்ச் எடுத்துட்டு வந்துட்டேன் அம்மா......

டிபன் லஞ்ச் எல்லாம் ஹாஸ்பிடல்லே தருவாங்க அத்தை......

அப்படியா...... எனக்கு தெரியாது..... அதுவும் இல்லாம ஹாஸ்பிடல் கொடுக்கிறது சில பேருக்கு பிடிக்காது..... அதான் வீட்ல இருந்து செஞ்சு எடுத்துட்டு வந்துட்டேன்.

எத்தனை மணிக்கு எழுந்து செஞ்சீங்க...... இவ்வளவு சீக்கிரமா காபி டிபன் லஞ்ச் எல்லாமே கொண்டு வந்துட்டீங்களே......

எல்லாம் பழக்கம்தான் மா.....

சரிங்க அத்தை நான் கிளம்பவா.....

சரி மா மணிகண்டன் கூடவே போறியா......

ஆமாம் அத்தை.....

சரி ரெண்டு பேரும் பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வாங்க.... பை......

பை அம்மா.....
பை அத்தை.....
என்று இருவரும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

அத்தை என்றும் மறுபடியும் உள்ளே வந்தாள் மாயா.

என்னம்மா எதையாவது மறந்து விட்டாயா......

இது என்னோட கார்டு அத்தை இதை வச்சுக்கோங்க..... எங்க அம்மா உங்களால பாத்துக்க முடியலன்னா ஒரு கால் பண்ணுங்க..... நான் வந்திடறேன்.

சரி மா.... என்று சொல்லி கார்டை வாங்கி தன் பர்சில் வைத்துக் கொண்டார் சிவகாமி.

வெளியே வந்தாள் மாயா.

பைக்கிள் காத்திருந்தான் மணிகண்டன்.

என்ன ஆச்சு எதுக்கு மறுபடியும் உள்ள போன......

அத்தை கிட்ட என் ஃபோன் நம்பர் குடுத்துட்டு வரேன்.....

அம்மா கிட்ட தான் என் நம்பர் இருக்கே..... நீயும் நானும் ஒன்னா தானே வேலை பண்ண போறோம்....
அப்புறம் என்ன......

அத மறந்துட்டேன்..... என்று சொல்லி தன் தலையில் அடித்து சிரித்துக் கொண்டாள் மாயா.

மாயாவின் குவாட்ரசுக்கு அழைத்துச் சென்றான் மணிகண்டன்.

அவன் வெளியே காத்திருக்க...... கால் மணி நேரத்தில் ரெடியாகி வெளியே வந்தாள் மாயா.

என்ன ஒரு பொண்ணால கால் மணி நேரத்துல கூட ரெடி ஆக முடியுமா...... எனக்கு ஒரே ஆச்சரியமா இருக்கே..... என்று கிண்டல் செய்தான் மணிகண்டன்.

மாமா அந்த விஷயத்துல நீங்க லக்கி தான்..... நான் ரொம்ப நேரம் எல்லாம் டிரஸ் பண்ண டைம் எடுத்துக்க மாட்டேன்.

உண்மையிலேயே நான் லக்கி தாண்டி.....

சிரித்தாள் மாயா.

மாயாவை சிபிஐ பிரான்ச் ஆபீஸ்சில் விட்டுவிட்டு..... மணிகண்டன் தன் ஸ்டேஷனுக்கு சென்றான்.

ஜாயினிங் ஃபார்மாலிட்டி எல்லாம் முடித்துவிட்டு வருவதாக மாயா கூறினாள்.

அப்போது சாக்ஷி மணிகண்டனுக்கு கால் செய்தாள்.

என்ன சார் நியூஸ் ஓகேவா..... டெலிகாஸ்ட் பண்ணிடலாமா.....

எஸ் எஸ் சாக்ஷி நானே உங்களுக்கு கால் பண்ணனும்னு நெனச்சேன்....

இட்ஸ் ஓகே சார் நோ இஸ்யூஸ்... ஹாஃப் அன் ஹவர்ல இந்த நியூஸ் டிவில டெலிகாஸ்ட் ஆயிடும் .

ஓகே சாக்ஷி தேங்க் யூ சோ மச்....பை....

ஓகே சார்.... பை.....

நியூஸ் டெலிகாஸ்ட் ஆனது...... மணிகண்டன் மீனாவிற்கு கால் செய்தான்.

மீனா......

எஸ் சார்.....

நான் உங்க கூட டியூட்டிக்கு ராஜேஷையும் அனுப்புறேன்.

என்னாச்சு சார் ஏதாவது பிரச்சனையா.....

இந்த பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை..... நியூஸ் டிவி ல டெலிகாஸ்ட் ஆயிடுச்சு..... அதனால எப்ப வேணா அந்த அக்யூஸ்ட் வரலாம்..... சோ பீ கேர்ஃபுல்......

ஓகே சார்.... ஷியூர்.....

ராஜேஷ் கால் மணி நேரத்தில் அந்த ஹாஸ்பிடலுக்கு சென்றான்.

மீனாவுடன் அவனும் ரஸியாவின் பாதுகாப்பிற்கு காவல் இருந்தனர்.

கேஸ் ஜாயினிங் ஃபார்மலிட்டீஸ் எல்லாத்தையும் முடித்துவிட்டு மாயா மணிகண்டனின் ஸ்டேஷனிற்கு சென்றாள்.

மணிகண்டன் மற்றும் அவன் ஸ்டேஷனில் இருந்த போலீஸ்காரர்கள் அனைவரும் மாயாவை வரவேற்றனர். பொக்கே மற்றும் பூ மாலை கொடுத்து வரவேற்றனர்.

பரவாயில்லையே எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் சிபிஐ ஆஃபீஸர இந்த மாதிரி கவனிக்க மாட்டாங்களே..... நீங்க எல்லாரும் ரொம்ப பெரிய மனசு உள்ளவங்க தான் போங்க..... என்று சொல்லி சிரித்தாள் மாயா.

அப்படி எல்லாம் இல்ல மேடம்..... நீங்க மணி சாரோட உட்பீ..... அதுக்காக தான் உங்களுக்கு இந்த மரியாதை..... என்றார் ரவி.

ஓஹோ..... அதுக்காக தானா..... நான் கூட பேசி விஷயமாக வரவே இப்படி ஒரு மரியாதையோ ன்னு நினைச்சேன்.

சரி வாங்க மிஸ் மாயா. கேஸ் பத்தின டீடெயில்ஸ் தரேன்.

தேங்க்யூ சார்..... என்றாள் மாயா.

மணிகண்டனின் கேபினுக்குள் சென்று அமர்ந்தாள் மாயா.

காவிரியின் கொலை கேஸ் ஃபைலை மாயாவிடம் எடுத்துக் கொடுத்தான் மணிகண்டன்.

அப்போது விக்டிம் காவேரியின் கால் டேட்டாவை பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா.

நம்பர் செக் செய்யும்போது இது யாருடைய நம்பர் என்று ஒரு நம்பரை காட்டி கேட்டாள் மாயா.

ஒன் மினிட் செக் பண்ணிட்டு சொல்றேன்..... என்று சொல்லி அன்நோன் நம்பர்ஸ் செக் செய்த லிஸ்ட்டை எடுத்து மாயாவிடம் கொடுத்தான் மணிகண்டன்.

அதையும் கால்ஸ் லிஸ்டேயும் பார்த்து செக் செய்து கொண்டிருந்தாள் மாயா.

அப்போது மணிகண்டனின் ஃபோன் அடித்தது.

எடுத்து ஹலோ என்றான் மணிகண்டன்.

ஹலோ சார்..... என்று பதட்டமாக பேசினாள் மீனா.

##############

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.