ரகசிய கொலையாளி......
பாகம் 44
மீனா பதட்டமாக பேசினாள்.
ஹலோ சார் சார்.....
என்னாச்சு மீனா என்ன ஆச்சு.... என்றான் மணிகண்டன்.
ரஸியாவை பார்க்க இரண்டு பேர் வந்தாங்க......
அதுல ஒருத்தன்..... ராஜேஷ் போலீஸ் இன் தெரிஞ்சதும் அட்டாக் பண்ணான்..... அப்புறம் ராஜேஷ் எப்படியோ சமாளிச்சு அவனை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கான்.....
ராஜேஷ்க்கு ஏதாவது அடிபட்டதா......
ஆமா சார்.....
என்னாச்சு எங்க அடிபட்டச்சு......
அவன் பாக்கெட் நைஃப் வச்சிருந்தான் அதுல ராஜேஷோட கையை கிழிச்சுட்டான் சார்....
அப்புறம் என்ன ஆச்சு......
அதுக்குள்ள ராஜேஷ் அவன் கையில இருந்த கத்திய தட்டி விட்டுட்டு..... கையை பின்னாடி முறுக்கி..... கை விலங்கு போட்டு உட்கார வைத்திருக்கிறான்.
டாக்டர் ராஜேஷ்க்கு டிரீட்மென்ட் பண்ணாங்களா.....
ஆமா சார் ஒரு ஆறு தையல் போட்டு இருக்காங்க......
தையல் போடுற அளவுக்கு காயம் ஆழமா இருந்துச்சா.....
ஆமா சார் ரத்தம் நிறைய போச்சு.....
இப்போ..... ராஜேஷ் எங்க.....
கட்டு போட்டுகிட்டு அவன் கூட உட்கார்ந்திருக்கான்......
நான் உடனே வரேன்..... என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு மாயாவிடம்.
மாயா கம் லெட்ஸ் கோ.....
என்னாச்சு சார்......
போற வழியில சொல்றேன் வாங்க மேடம்......
ராஜேஷ் இல்லாததால்.... இன்னோவாவை மணிகண்டனே ஒட்டி சென்றான்..... மாயா அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். மீனா சொன்ன அனைத்தையும் மாயாவிடம் சொல்லிக் கொண்டே ரஸியா அட்மிட் செய்யப்பட்ட ஹாஸ்பிடலுக்கு சென்றான் மணிகண்டன்.
அப்போது..... அங்கே 45 முதல் 50 வயது மதிப்புள்ள ஒருவர் அமர்ந்திருந்தார். ராஜேஷ் தன் கையையும் அந்த ஆளுடைய கையையும் ஹேண்ட் கஃப்பில் பூட்டி வைத்திருந்தான்.
ராஜேஷ் நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க இதுக்கு மேல நான் பாத்துக்குறேன்..... என்று சொல்லி ஹேண்ட் கஃப்பை ரிலீஸ் செய்தான் மணிகண்டன்.
இல்ல சார் நானும் உங்க கூட ஸ்டேஷனுக்கு வரேன்.....
ராஜேஷ் உங்களுக்கு அடிபட்டு இருக்கு ரத்தம் நிறைய போய் இருக்கு..... இந்த நிலைமையில உங்களுக்கு கண்டிப்பா ரெஸ்ட் தேவை..... இவனை நான் செல்லுல வைக்கிறேன்..... முதல்ல டி என் ஏ டெஸ்ட் எடுக்கலாம்.... அதுக்கப்புறம் இன்ட்ராகேஷன் வச்சுக்கலாம்..... அதனால நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க...... நாளைக்கு தான் இன்ட்ராகேஷன்.
ஓகே சார்..... அப்படின்னா நான் வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வரேன்......
டேக் கேர் ராஜேஷ்..... பை.....
ஓகே சார்..... பை.....
அவனை இன்னோவாவில் ஏற்றிக் கொண்டு வந்து
ஸ்டேஷனின் சிறையில் அடைத்தனர்.
சார் இப்ப ஏன் இன்ட்ராகேஷன் வேணாம்னு சொல்றீங்க..... என்றாள் மாயா.
இல்ல மேடம்..... இப்ப அவர்கிட்ட எந்த கேள்வி கேட்டாலும்..... தெரியாது....
சும்மாதான் போனேன்...... அப்படின்னு சொல்லுவாரு.....
சும்மா போனவங்க ஏன் கத்தி எடுத்துக்கிட்டு போகணும்...... என்றாள் மாயா.
நான் அதை தற்காப்புக்கு வச்சிருக்கேன்.....
அவர் திடீர்னு அட்டாக் பண்ணவே நான் திருப்பி அட்டாக் பண்ணேன் அப்படி இப்படின்னு ஏதாவது கதை சொல்லுவார்.... ஏன்னா ராஜேஷ் அன்-யூனிஃபார்ம்ல இருந்தாரு..... அவர் போலீசுன்னு தெரிஞ்சி இருந்தா நான் அவரை அட்டாக் பண்ணி இருக்க மாட்டேன்...... இப்படி ஏதாவது பதில் தான் கிடைக்கும் ......
சரி இப்ப நாளைக்கு என்கொயரி பண்ணா மட்டும் எப்படி கரெக்டான பதில் கிடைக்கும்னு நினைக்கிறீங்க......
இன்னைக்கு டி என் ஏ டெஸ்டுக்கு கொடுத்தாச்சு.....
நாளைக்கு காலைல ரிசல்ட் கிடைத்துவிடும்..... பாசிட்டிவா வந்துச்சுன்னா அப்புறமா நம்ம விசாரிக்கிற விதமே வேற...... யாரா இருந்தாலும் உண்மையை சொல்லித்தான் ஆகணும்...... அதனால ஒரு நாள் வெயிட் பண்றது இல்ல தப்பு இல்ல...... இதுவே இவர் மேல தப்பு இல்லாம..... நம்ம தெரியாம அரெஸ்ட் பண்ணி இருந்தா......
சரி..... இப்ப எஃப் ஐ ஆர் போட வேண்டாமா.....
கண்டிப்பா போடணும்..... ராஜேஷை அட்டாக் செய்ததுக்காக.....
ஓகே ஓகே சார்..... சரி இப்ப நம்ம என்ன பண்ணலாம்......
இப்ப அவரோட மொபைல் நம்பரை வாங்கி..... அது இறந்து போன விட்டம் காவிரியோட கால் ஹிஸ்டரியில் இருக்கான்னு பார்க்கலாம்.....
ஓகே சார்.....
அந்த ஆளிடம் இருந்து மொபைல் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ஃபோன் காண்டாக்ட் லிஸ்டில் காவிரியின் நம்பர் இருக்கிறதா என்று செக் செய்தனர்.
இல்லை.....
பிறகு..... அவருடைய காண்டாக்ட் லிஸ்டில் இருக்கும் ஏதாவது நம்பர் காவிரியின் கால் ஹிஸ்டரியில் இருக்கிறதா என்று செக் செய்தனர்.
அதுவும் இல்லை.....
மாயா மற்றும் மணிகண்டன் இருவருக்கும் கடுப்பாக இருந்தது.
இந்த கேஸூக்கு ஏன் ஒரு லீடு கூட கிடைக்க மாட்டேங்குது..... என்றான் மணிகண்டன்.
மொபைல் நம்பர் மற்றும் ஆதார் கார்டை வைத்து அவனுடைய பெயர் கோபிக்கிருஷ்ணன் என்றும் அவன் காவேரியின் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவன் என்றும் தெரிந்தது.
காவேரியின் கொலைக்கும் கோபிக் கிருஷ்ணனுக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்று மணிகண்டனுக்கு தோன்றிது.
மாயாவிடம்..... நீங்க கிளம்புங்க..... நான் இன்னைக்கு இங்கு தான் இருக்கப்போறேன்.... என்றான்.
ஆனா சார்..... எதுக்கு......
இல்ல..... இவன் அக்கியூஸ்டா இருந்தா கண்டிப்பா தப்பிக்க நினைப்பான்..... அதனால ஸ்டேஷனில் நாலு இல்ல ஐந்து ஆள் இருக்க வேண்டியது அவசியம்..... என்று பேசிக் கொண்டே ஸ்டேஷனிற்கு வெளியே வந்தனர் மணிகண்டன் மற்றும் மாயா.
ஆனா ஹாஸ்பிட்டல்ல அத்தை.....
நான் அவங்களுக்கு வண்டி புக் பண்ணி கொடுத்திடறேன்.... அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க.....
நாளைக்கு மறுபடியும் அவங்களை ஹாஸ்பிட்டலில் பார்த்துக்க சொல்லவா.....
ஓகே..... அவங்களுக்கு ஓகே ன்னா..... எனக்கும் ஓகே தான்....... முடிஞ்சா நாளைக்கு காலைல நானே வந்து அம்மாவை ஹாஸ்பிட்டல்ல டிராப் பண்ணிட்டு உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன்.....
ஓகே மாமா.... ஓ சாரி.....
அதான் ஸ்டேஷனுக்கு வெளியே வந்திடடோம்.... தலைலேயும் கேப் இல்லல..... ஸோ எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம்.....
ஓகே டா மாமா....
சரி டி.... ஜாக்கிரதையா போ..... போகும் போதே உனக்கும் மாமிக்கும் வீட்ல இருந்து டிரெஸ் எடுத்துக் கொண்டு போயிடு..... நாளைக்கு காலைல நான் வரும்போது ரெடியா இரு..... நேரா லேபுக்கு போய்
டி. என். ஏ டெஸ்ட் ரிசல்ட் வாங்கிக் கொண்டு வந்திடலாம்.
ஓகே மாமா.....
சரி டி பை.....
பை மாமா..... என்று சொல்லி விட்டு ஆட்டோவில் ஏறி சென்றாள் மாயா.
மணிகண்டனுக்கு கால் வந்தது.
எடுத்து ஹலோ என்றான்.
சார்..... இன்னும் ரவி சார் வரல சார்...... என்றாள் மீனா.
டைம் ஆகுது இன்னுமா வரல ரவி சார்.....
ஆமாம் சார்..... குமார் வந்து என்ன பிக்கப் பண்ண வெயிட் பண்ணிட்டு இருக்கான்.....
ஓகே ஓகே நான் கால் பண்ணி பாத்துட்டு சொல்றேன்.....
இல்ல சார் நானே கால் பண்ணிட்டேன் அவர் எடுக்கல......
அப்படியா.....சரி நான் வேற யாரையாவது அரேஞ்ச் பண்ணி விடுறேன்.
ஓகே சார் தேங்க்ஸ்..... பை....
ஓகே மா..... பை.....
வேறு ஒரு கான்ஸ்டபிளை போக சொல்லிவிட்டு..... இளங்கோவிற்கு கால் செய்தான்.
சொல்லுங்க சார்.....
அங்க ஏதாவது சஸ்பிசியஸ் இன்சிடென்ட் இருக்கா.....
இல்ல சார் அப்படி எதுவும் இல்லை.....
ஓகே..... நவீனம் நீங்களும் சேஃப் தான இளங்கோ.
ஆமா சார் நாங்க ரெண்டு பேரும் சேஃபா தான் இருக்கோம்.
ஓகே குட்.... ஒன் ஷாட் இன்ஃபர்மேஷன்..... ஒருத்தரை இந்த கேஸ் விஷயமா அரெஸ்ட் பண்ணி இருக்கோம்.... நீங்களும் இந்த டீம்ல இருக்கீங்க இல்ல அதனால இன்ஃபார்ம் பண்றேன்.
ஓகே சார்......
###############
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.