• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி......பாகம் 45

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal

ரகசிய கொலையாளி......

பாகம் 45


என்ன டீடைல்ஸ் சார்..... என்றான் இளங்கோ.

ரஸியா நியூஸ் டிவில பாத்தீங்க இல்ல..... என்றான் மணிகண்டன்.

ஆமா சார்..... அப்பவே நினைச்சேன்....அது டிராப் தானா....

ஆமாம்..... ஒருத்தர் வந்து ரஸியாவை பார்க்க வந்தாரு..... அப்போ ராஜேஷ் விசாரிக்க நினைச்சப்ப.... அட்டாக் பண்ணாரு.... அதனால ராஜேஷுக்கு கையில அடிபட்டு ஹாஸ்பிடல் அட்மிட் ஆயிருக்காரு.

அச்சச்சோ ராஜேஷ்க்கு என்ன ஆச்சு.....

பயப்படுற மாதிரி எதுவும் இல்லை..... ஆறு தையல் போட்டு இருக்காங்க.....

ஓ மை காட்....
அப்ப அவன் தான் காவிரியை கொலை செய்திருப்பானா......

டி என் ஏ சாம்பிள்ஸ் கொடுத்து இருக்கோம்..... டெஸ்ட் ரிசல்ட் நாளைக்கு வந்த உடனே தான் தெரியும்.....

ஓகே சார்...... நாங்க ஸ்டேஷனுக்கு வந்து விடலாமா.....

இல்லை இன்னைக்கு ஒரு நாளைக்கு இருங்க.... நாளைக்கு டெஸ்ட் ரிசல்ட் என்ன வருதுன்னு பார்க்கலாம்.... இப்ப இருக்கிறவர் தான் கொலைகாரர்ன்னு தெரிஞ்சதுன்னா..... அதுக்கப்புறம் நீங்களும் நவீனும் வந்துடுங்க.

ஓகே சார்.....

நவீனுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க.....

ஓகே சார்.....

############

ஹாஸ்பிடலின் உள்ளே நுழைந்தாள் மாயா.
மணிகண்டன் கூறியது போல தன் வீட்டிற்கு சென்று அவளுக்கும் அவளுடைய அம்மாவிற்கும் மாற்று உடை எடுத்துக்கொண்டு அந்த ஆட்டோவில் ஹாஸ்பிடல் சென்றாள்.

வாம்மா..... இன்னிக்கு நாள் எப்படி இருந்தது..... முதல் நாள் சென்னையில வேலைக்கு போயிருக்கியே.....என்றார் சிவகாமி.

நல்லா இருந்துச்சி அத்தை அதெல்லாம் விடுங்க.....
உங்களை பார்த்துட்டு அம்மா என்ன சொன்னாங்க..... திட்டினாங்களா சண்டை போட்டாங்களா..... ரொம்ப கோபப்பட்டாங்களா..... நீங்க ஏன் வெளியே உட்கார்ந்து இருக்கீங்க..... உங்களை வெளியே போக சொல்லிட்டாங்களா..... என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் மாயா.

இரும்மா ஏன்மா டென்ஷன் ஆகுற..... என்று சிரித்துக் கொண்டே கூறினார் சிவகாமி.

இல்ல அத்தை கண்டிப்பா எங்க அம்மா ஏதாவது பிரச்சனை பண்ணி இருப்பாங்க எனக்கு நல்லாவே தெரியும்......

அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல..... சரி மணிகண்டன் என்ன சொன்னான்.... அவன் வருவானா இல்ல நானே வீட்டுக்கு போகணுமா.....

அத்தை காலையிலிருந்து என்னதான் நடந்துச்சு அத சொல்லுங்களேன்.....

நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு.....

நான்தான் முதல்ல உங்ககிட்ட கேள்வி கேட்டேன் நீங்க தான் அதுக்கு பதில் சொல்லாமல் வேற கேள்வி கேக்குறீங்க.....

இப்ப என்ன இன்னைக்கு ஃபுல்லா என்ன நடந்துச்சுன்னு நீ தெரிஞ்சுக்கணும் அவ்வளவுதானே......

ஆமாம் அத்தை.

காலையில நான் முதல்ல உள்ள போன உடனே..... யாரோ வேலை செய்றவங்க நெனச்சு..... தெரியாமல் என்கிட்ட இருந்து காபி வாங்கி குடிச்சாங்க. குடிச்ச அடுத்த நொடி என்னை திரும்பி பார்த்தாங்க.

நீயா நீ ஏன் இங்க வந்த.... அப்படின்னு கத்தினாங்க.....

அண்ணி.....

இன்னொரு வாட்டி என்ன அண்ணி என்று கூப்பிட்ட அவ்வளவு தான் உனக்கு மரியாதை கெட்டிடும்....

சரி கூப்பிடல.....

ஏன் இங்க வந்த.....

உங்கள பாத்துக்க.....

நீ பார்த்துக்கணும் என்ற அவசியம் எனக்கு கிடையாது.....

இப்ப இருக்கே.....

என்ன சொல்ற.....

நீங்க வாழறது உங்க பொண்ணுக்காக.... நான் வாழறது என் பையனுக்காக..... அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் இல்ல..... இன்னைக்கு தான் முதல் நாள் டியூட்டி உங்க பொண்ணுக்கு.... அவ அங்க போகலைன்னா..... அது எவ்ளோ பெரிய பிரச்சனை ஆயிடும்..... அப்படி இருக்க இந்த நேரத்துல இப்படி நீங்க பண்ணலாமா.....

உனக்கே தெரியுது நான் அவளுக்காக தான் வாழறேன்னு..... ஆனா அது அவளுக்கு தெரியலையே..... கல்யாணம் பண்ணா உன் பையன தான் பண்ணுவேன்னு சொல்றா..... அதுவும் என் சம்மதத்தோடு தான் பண்ணுவேன்னு சொல்றா..... நான் உயிரோட இல்லனா யார்கிட்ட சம்மதம் கேட்பா.....

நீங்க நினைக்கிறது மட்டும்தான் நடக்கணும்னு நினைக்கிறீங்க இல்ல அண்ணி......

அண்ணின்னு கூப்பிடாதன்னு சொன்னேன்......

சரி கூப்பிடல.... நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.....

நான் பொண்ணு நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா.....

நல்லா இருக்கணும்னு நினைச்சிருந்தீங்கன்னா நீங்க இப்படி ஒரு முடிவு பண்ணி இருக்க மாட்டீங்களே...... உங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தால் அவள் வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சியோட வாழ்ந்திருப்பா..... அது நரகம் என்று உங்களுக்கு தெரியாதா..... பெத்த அம்மாவை சண்டை போட்டு..... அவங்க உயிர் போறதுக்கு காரணமா இருந்துட்டோமேன்னு தோணுச்சுன்னா எப்படி ஒரு பொண்ணால நிம்மதியா வாழ முடியும்..... ஒரு அம்மாவா இத நீங்க செய்யலாமா.....

அமைதியாக இருந்தார் பூர்ணிமா.

நான் என் பையன்னு சொல்லல..... வேற யாரு உங்க பொண்ணு லவ் பண்றேன்னு சொல்லி இருந்தாலும்..... நம்ம பொண்ணு நல்ல முடிவை தான் எடுப்பா..... வாழ்க்கையில அவளுக்கு நல்லது கெட்டது தெரியும்..... அதனால அவளுக்கு துணையாக இருப்போம்ன்னு நினைத்தீர்களா..... அத விட்டுட்டு..... அவளுக்கு மரணத்துக்கு நிகரான தண்டனையை கொடுக்க பார்த்தீங்களே......

எனக்கு உன்னோட எந்த அட்வைஸ் கேட்கத் தேவையில்லை..... நானே என்ன பாத்துக்குறேன் தயவு செஞ்சு போயிடு.....

அப்பாடா இது போதும் .....

என்ன சொல்ற நான் உன்ன போய்டுன்னு சொன்னேன்..... நீ என்னை பாத்துக்க ஓகேன்னு சொல்லல......

இல்ல நான் அதுக்காக சொல்லல...... என்னை எனக்கு பார்க்க தெரியும்னு சொன்னீங்க இல்ல..... அதுக்காக சொன்னேன்..... இப்போ சூசைட் பண்ணனும் என்ற எண்ணம் போயிடுச்சு இல்ல.

மிச்.... வெளியே போ.....

சாரி அண்ணி...... நான் போக மாட்டேன்..... எங்க அண்ணன் இப்ப இல்ல....
எங்க அண்ணன் ஸ்தானத்துல உங்கள வச்சு உங்களை பார்க்க வந்திருக்கேன்..... உங்களுக்கு புடிச்சாலும் புடிக்கல நாலும் இன்னைக்கு நான்தான் உங்களை பார்த்துக்க போறேன்..... உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணி..... இப்பவும் சொல்றேன் உங்களோட அன்பு பாசம் உறவு மட்டும்தான் வேணும்னு நான் ஆசைப்படறேன். சத்தியமா ஒரு ரூபா கூட எங்க அண்ணனோட காசு எனக்கு வேண்டாம்..... இதுக்கு மேலயும் நீங்க என்ன நம்பலைன்னா..... நீங்க என்கிட்ட பேச வேண்டாம்..... ஆனா நான் இன்னைக்கு ஃபுல்லா உங்களுக்கு என்ன தேவையோ.... நீங்க கேட்டாலும் கேட்கல நானும் அதை செஞ்சு தருவேன்.....

அதற்கு மேல் பூர்ணிமாவால் ஒன்னும் சொல்ல முடியவில்லை.

அன்று முழுவதும்..... சாப்பாடு போட்டு பிசைந்து ஸ்பூன் போட்டு தருவது.... பாத்ரூம் செல்ல கைதாங்களாக அழைத்துச் செல்வது..... ட்ரிப்ஸ் முடிந்தவுடன் நர்ஸைக்கு கூப்பிட்டு மாற்ற சொல்வது.... ஈவினிங் காபி வாங்கி வந்து கொடுத்தது..... மாத்திரை மருந்துகள் இன்ஜெக்ஷன் வாங்கி வந்து கொடுத்தது..... போன்ற எல்லா வேலைகளையும் செய்தார் சிவகாமி.

என்று அனைத்தையும் மாயாவிடம் சொல்லி முடித்தார் சிவகாமி.

அப்போ இப்ப ஏன் வெளியே உட்கார்ந்து இருக்கீங்க அத்தை.....

இல்லம்மா பயப்படாத டாக்டர் உள்ள செக் பண்ணிட்டு இருக்காங்க அதனால என்னை வெளியே அனுப்பி இருக்காங்க......

ஓகே அத்தை...... ஒரு நிமிஷம் என்னென்னமோ நெனச்சு பயந்து போயிட்டேன்.....

சரி இப்போவாது என் கேள்விக்கு நீ பதில் சொல்லு.....

அவருக்கு ஸ்டேஷன்ல வேலை இருக்காம்.... உங்களை ஆட்டோ புக் பண்ணி வீட்டுக்கு போக சொன்னாரு..... முடிஞ்சா காலையில வீட்டுக்கு வந்து உங்களை வீட்ல இருந்து இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு என்னை கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு..... உங்களுக்கு ஓகேவா இருந்தா......

எதுக்கு ஓகே வான்னு கேக்குற என்னை கூட்டிட்டு வரதுக்கா இல்ல உன்ன கூட்டிட்டு போறதுக்கா..... என்று சொல்லி சிரித்தார் சிவகாமி.

அத்தை..... கிண்டல் பண்ணாதீங்க..... என்று சொல்லி சிரித்தாள் மாயா.

############

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.





















 
  • Like
Reactions: Gowri Yathavan