ரகசிய கொலையாளி......
பாகம் 46
கிண்டல் பண்ணாதீங்க அத்தை..... என்றாள் மாயா.
சரிம்மா நீ தான் வந்துட்டே இல்ல..... நீ போய் அம்மாவை பாத்துக்கோ நாளைக்கு காலையில நான் வரேன்..... என்றார் சிவகாமி.
ஓகே அத்தை..... ரொம்ப தேங்க்ஸ்......
என்னம்மா தேங்க்ஸ் எல்லாம் சொல்லி என்னை மூன்றாவது மனுஷியாக ஆக்குற......
அய்யோ..... அப்படி எல்லாம் இல்ல அத்தை..... எங்க அம்மா ஏதாவது ஹெல்ப் பண்ணினாலும் நான் தேங்க்ஸ் சொல்லுவேன்..... அதே மாதிரி தான் இப்போ உங்களுக்கும் சொன்னேன்....
அவள் தலையை கோதி வட்டுவிட்டு சரி மா வரேன் பை..... என்றார் சிவகாமி.
அவர் வெளியே சென்றதும்...... தன் அம்மாவை பார்க்க உள்ளே சென்றாள் மாயா.
டாக்டர்கள் செக் செய்து விட்டு சென்று விட்டனர்.....
அம்மா என்று சொல்லி அவரை கட்டிக் கொண்டாள் மாயா.
ஏம்மா இப்படி பண்ணீங்க...... என்ன பத்தி அக்கரையே இல்லல உங்களுக்கு.....
அமைதியாக இருந்தார் பூர்ணிமா.
என்கிட்ட பேச மாட்டிங்களா அம்மா...... என்று கண்கள் கலங்க கேட்டாள் மாயா.
அம்மாவாயிற்றே..... மகள் கண்கள் கலங்கியதால்..... அதற்கு மேல் அமைதி காக்க முடியாமல் பேசி விட்டார்
பூர்ணிமா.
மாயா என்னை மன்னிச்சிடு மா..... உங்க அத்தை மேல இருக்கிற கோவத்துல அப்படி பண்ணிட்டேன்..... ஆனா இப்ப தான் தெரியுது அவ எவ்வளவு நல்லவ ன்னு..... வாழ்க்கைக்கு பணம் தான் முக்கியம் என்று நினைத்தேன்...... ஆனா அன்பும் பாசமும் தான் முக்கியம்னு சிவகாமி எனக்கு நல்லா புரிய வச்சிட்டா..... என் கூட பிறந்தவன் ஆச்சே என் தம்பி....
என் காலத்துக்கு அப்புறம் அவன் உன்ன நல்லா பாத்துக்குவான்னு நினைச்சேன்..... ஆனா நம்ம இங்க வந்த நாலு நாள்ல ஒரு நாள் கூட ஃபோன் பண்ணி பேசல..... உன் பர்த்டேக்கு கூட விஷ் பண்ணல..... அதுக்கு மேல என் தம்பி பொண்டாட்டி..... அவன் கால் பண்ணனும்னு சொன்னா கூட அவ விட மாட்டா.
அப்படி எல்லாம் இல்லம்மா...... அவங்க ஒரு அடி தள்ளி இருக்காங்க அவ்வளவுதான்..... எனக்கு வாட்ஸ் அப்ல விஷஸ் மெசேஜ் அனுப்பினாங்க...
யாரு மாமா வா மாமியா....
மாமா தான்.....
அப்ப கூட அவ அனுப்பல இல்ல.....
மாமி மறந்து இருப்பாங்க அம்மா விடுங்க அம்மா.....
நம்ம எப்படா அங்கிருந்து போவோம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா போல.......
அம்மா யாரையும் அப்படி நினைக்காதீங்க மா......
இந்த விஷயத்துல நீ உங்க அப்பா மாதிரியே இருக்கடி செல்லம்......
என்னம்மா அத்தை வந்து போனதுல..... அவங்க பேச்சு வழக்கு ஒட்டிகிச்சா என்ன..... கண்ணு செல்லம் எல்லாம் சொல்றீங்க.....
ஏய் உங்க அப்பா அப்படிதாண்டி பேசுவாரு...... மறந்துட்டியா......
அப்பாவை போய் மறக்க முடியுமா..... நீங்க அத்தையை புரிஞ்சுகிட்டீங்க இல்ல அது போதும்......
சிவகாமியை பத்தி எனக்கு நல்லா தெரியும் ஏற்கனவே..... அவங்க வசதி இல்லாதவங்க..... நீ கல்யாணம் ஆகி அங்க போன நான் கஷ்டப்படுவேன்னு யோசிச்சேன்..... ஆனா கல்யாணம் பண்ணிட்டு போறதுக்கு வசதி முக்கியம் இல்ல நல்ல மனுஷங்க தான் முக்கியம்னு புரிஞ்சுகிட்டேன்..... நாளைக்கு சிவகாமி பையன வர சொல்லு.... நான் அவனையும் நேரா பார்த்துட்டு என்னோட சம்மதத்தை சொல்றேன்......
ரொம்ப தேங்க்ஸ் மா என்று சொல்லி கட்டிக் கொண்டாள் மாயா.
ஒரு நாளிலேயே உனக்கு அவ்வளவு பிடிச்சிருச்சா அவனை.....
ஒரு நாள் இல்ல அம்மா ரெண்டு நாள்......ஆமாம்மா சின்ன வயசிலேயே எனக்கு மணி மாமாவ ரொம்ப பிடிக்கும் ...... அவர் பேசுவதும் நம்ம குடும்பத்து மேல வச்சிருக்க பாசமும் உங்க மேலேயும் அப்பா மேலேயும் வச்சிருக்க மரியாதையும்..... அவர் மேல எனக்கு காதல் வந்துடுச்சு.......
சரிமா உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்......
தேங்க்யூ சோ மச் மா.....
#############
காலை டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தது......
சார் சார் ரிசல்ட் வந்துடுச்சு சார்...... என்று வேகமாக வந்தான் நவீன்.
நவீன் நீங்க போய் வாங்கிட்டு வந்தீங்களா...... என்றான் மணிகண்டன்.
ஆமா சார் எனக்கும் இளங்கோவுக்கும் ராத்திரி ஃபுல்லா தூக்கமே வரல..... எப்படியாவது உண்மையை தெரிஞ்சுக்கணும்னு நினைச்சோம். அதான் இளங்கோ சார் வந்து..... நான் இங்க பார்த்திருக்கிறேன் நீ போய் ரிசல்ட் வாங்கி சார் கிட்ட குடுன்னு சொன்னாரு......
ஓகே..... ஓபன் பண்ணலாமா.....
சார்..... ராஜேஷ் சார் இளங்கோ சாரும் நீங்க ரிசல்ட் ஓபன் பண்ண பிறகு என்னன்னு என்ன கால் பண்ணி சொல்ல சொன்னாங்க......
ஓகே இரண்டு பேருக்கும் கான்பரன்ஸ் கால் போடுங்க நவீன்.....
ஓகே சார்......
மணிகண்டன் அந்த டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் ஐ பிரித்தான்.
மேட்சிங் என்று இருந்தது.
கான்ஃபரன்ஸ் காலையில் இருவருக்கும் மெசேஜ் சொல்ல..... அனைவரும் ஷாக் ஆகினர்.....
அப்போ இவன் தான் கல்பிரெட்டா......
விக்டிம் காவேரி வயித்துல வளர குழந்தையோட அப்பாவா இவர் இருக்கலாம்..... ஆனா இவரு தான் காவிரியை கொலை செஞ்சாருன்றதுக்கு இன்னும் நமக்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை..... அதனால அவசரப்படாதீங்க..... என்றான் மணிகண்டன்.
சார் நம்ம விசாரிக்க வேண்டிய முறையில விசாரிச்சா உண்மையைத் தானா சொல்லிடுவான்..... என்றான் ராஜேஷ் ஃபோனில்.
ராஜேஷ் இளங்கோ நீங்க ரெண்டு பேரும் வாங்க..... நம்ம விசாரிக்கலாம்..... என்றான் மணிகண்டன்.
அடுத்த பத்து நிமிடத்தில் ராஜேஷ் வந்துவிட்டான்.
15 நிமிடத்தில் இளங்கோ வந்து விட்டான்.
மீனாவும் வந்து விட்டாள்.
மணிகண்டன் தன் அம்மாவிற்கு போன் செய்து.....
அவனால் வர முடியாது என்றும்..... எவ்வளவு சீக்கிரமாக அவர் சென்று மாயாவை அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டான்.
அரை மணி நேரத்தில் மாயாவும் வந்து விட்டாள்.
உள்ளே நுழைந்ததும்.....
அனைவரும் மாயாவுக்கு விஷ் செய்தார்கள்.
இன்டராகேஷன் ரூமுக்கு போகலாமா என்றான் மணிகண்டன்.
அமைதியாக அமர்ந்து இருந்தான் கோபிகிருஷ்ணன்.
மணிகண்டன் தலையசைக்கே ரெக்கார்டிங் ஐ ஆன் செய்தான் ராஜேஷ்.
சொல்லுங்க சார் உங்க பேர் என்ன.....
மணிகண்டன் இவ்வாறு மரியாதையாக பேசுவது மாயா உட்பட யாருக்குமே பிடிக்கவில்லை.....
அமைதியாக இருந்தான் கோபி கிருஷ்ணன்.
இங்க பாருங்க சார்..... டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சு..... உங்களோட சேம்பில்ஸ் இறந்து போன காவிரியோட வயித்துல வளர்ந்த குழந்தையோட சேம்பில்ஸோட மேட்ச் ஆயிடுச்சு..... நீங்கதான் அந்த குழந்தையோட அப்பான்னு எங்களுக்கு தெரியும்......
உண்மைய ஒத்துக்கிறீங்களா......
ஆம் என்று தலையை அசைத்தான் கோபிகிருஷ்ணன்.
எதுக்காக கொலை செஞ்சீங்க சொல்லுங்க......
மறுபடியும் அமைதியாக இருந்தான்.
இப்ப நீங்க சொல்லலைன்னா எங்களோட விசாரிப்பு விதமே வேற மாதிரி இருக்கும். வயசுல பெரியவர் ஆச்சேன்னு கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசிட்டு இருக்கோம்.....
எதையோ யோசித்த கோபிகிருஷ்ணன்.....
சரிங்க சார் நான் உண்மையை எல்லாம் சொல்லிடறேன்.
நான்தான் அந்த குழந்தைக்கு அப்பா.... அவ என்ன பிளாக்மெயில் பண்ணா..... அதனாலதான் அவளை கொன்னுட்டேன்..... தயவு செஞ்சு இதுக்கு மேல என்ன எதுவும் கேட்காதீங்க..... நான் கோர்ட்ல வந்து இதையே சொல்லிடுறேன்.
இதையே சொல்றீங்களா..... அப்படின்னா நாங்க என்னமோ சொல்லி கொடுத்த மாதிரி இல்ல சொல்றீங்க..... என்றான் ராஜேஷ்.
இல்ல நான் இப்போ உங்ககிட்ட சொன்னத அங்க கோர்ட்லயும் சொல்லிடறேன்னு சொன்னேன்......
ரெக்கார்டிங் ஆப் செய்துவிட்டு அனைவரும் வெளியே வந்தனர்.
##############
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.