ரகசிய கொலையாளி.....
பாகம் 48
தலை சுற்றுவது போல இருந்தது மஞ்சுளாவுக்கு.....
சார் கொஞ்சம் தண்ணி குடிச்சுக்க வா என்றாள்.
இந்தாங்க மேடம்..... என்று சொல்லி தன் முன்னால் இருந்த டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தான் மணிகண்டன்.
அதை குடித்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் மஞ்சுளா.
டெஸ்ட் ரிசல்ட் ஏதாவது தப்பா இருக்கும்..... அப்படிப்பட்டவர் கிடையாது என்னுடைய புருஷன்......
சில பேர் வீட்ல ஒரு மாதிரியும் வெளியே ஒரு மாதிரியும் இருப்பாங்க அப்படிப்பட்டவர் தான் உங்க புருஷன்...... என்றாள் மாயா.
இப்பவும் சொல்றேன்..... அந்த குழந்தைக்கு கண்டிப்பா என் புருஷன் அப்பாவா இருக்க வாய்ப்பே இல்லை.....
எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க.....
அவரு பேமிலி பிளானிங் பண்ணி இருக்காரு.....
எவ்வளவோ கேஸ்ல அதெல்லாம் வந்து ஃபெயிலியர் ஆயிருக்கு..... அதை வச்சு அவரா இருக்காதுன்னு சொல்ல முடியாது..... அதுவும் இல்லாம அவரே ஒத்துக்கிட்டாரு......
ஒரு நிமிஷம் என்னை வந்து அவரை பார்க்கா அலோ பண்ணுவீங்களா.... நான் அவர்கிட்ட பேசுறேன்.....
இல்ல அதெல்லாம் முடியாது.....
ப்ளீஸ் சார்..... அக்கா கிட்ட எல்லாமே சொல்லுவாரு அவரு ..... கேஸ் விஷயமா அவர் உண்மையை சொல்றதுக்கு உங்களுக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் இல்லையா..... என்றான் கோவிந்தன்.
நோ நோ..... கண்டிப்பா முடியாது..... நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க......... என்றான் மணிகண்டன்.
நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க..... என்றாள் மாயா.
அவர்கள் வெளியே சென்றதும் மணிகண்டனிடம் பேசினாள்.
சார் அவங்க ஒயிஃபை அவர் கிட்ட பேச வைக்கலாமே.....
இல்ல மாயா..... அது சரி வராது.....
ஏன் சார்.....
இன்ட்ராகேஷன்ல இருக்கிற ஒரு சஸ்பெக்ட் கிட்ட அவங்க பேமிலி பேசுறது சட்டப்படி தப்பு....
என்னதான் பேசுறாங்கன்னு பார்க்கலாமே..... நீங்கதான் சொன்னீங்க..... கோபி கிருஷ்ணன் எதையோ மறைக்கிறார்னு..... அது என்னென்ன நாம தெரிஞ்சுக்கலாம் இல்ல......
சிறிது நேரம் சிந்தித்தான் மணிகண்டன்.
ஓகே..... அவங்களுக்கு தெரியாம.... எப்படியாவது ஒரு ஆடியோ ரெக்கார்டரை அவங்க கிட்ட கொடுத்து அனுப்புங்க.....
ஓகே சார் சூப்பர் ஐடியா..... அப்படியே பண்ணலாம்.....
அவங்களை உள்ளே கூப்பிடுங்க..... என்றான் மணிகண்டன்.
மாயா அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.
ஓகே மேடம் உங்கள மட்டும் உள்ள அனுப்புறேன்.....
நீங்க போய் பேசிட்டு வரலாம்.....
ஓகே சார் தேங்க்ஸ்..... என்று சொல்லி எழுந்தவளிடம்.
மாயா ஒரு ஃபிலாஸ்க் பாட்டிலை நீட்டினாள்.
மேடம்..... உங்க ஹஸ்பண்ட் எதுவுமே சாப்பிடல..... இந்தாங்க இதுல பால் இருக்கு..... அது அவருக்கு குடுங்க..... என்றாள்.
சரிங்க மேடம் என்று சொல்லி அதை வாங்கிச் சென்றாள் மஞ்சுளா.
இந்த பிளாஸ்கின் கீழே இருந்த பிளாஸ்டிக் கப்பில் ரெக்கார்டரை வைத்திருந்தனர்.
அது தெரியாமல் அதை எடுத்துக் கொண்டு தன் கணவனிடம் சென்றாள் மஞ்சுளா.
அந்த ரூமில் மஞ்சுளாவை விட்டு விட்டு..... வெளியே வந்தாள் மாயா.
கோவிந்தனை வெளியே அனுப்பிவிட்டு..... ரெக்கார்டிங் ஆன் செய்தனர். ஹெட்போன்சில் மாயா மற்றும் மணிகண்டன் மட்டுமே கேட்டனர்.
உள்ளே சென்ற மஞ்சுளா..... தன் கணவனை பார்த்து அழுதாள்.
என்னங்க இது..... ஏன் இப்படி எல்லாம்..... யாருக்காக இதையெல்லாம் ஒத்துக்கறீங்க.....
நீங்க கண்டிப்பா இத செஞ்சிருக்க மாட்டீங்க..... எனக்கு நல்லாவே உங்கள பத்தி தெரியும்.... ப்ளீஸ் என்கிட்டயாவது உண்மையை சொல்லுங்க..... என்று கெஞ்சினாள் மஞ்சுளா.
அந்த பிளாஸ்க்ல என்ன?...... என்றான் கோபிகிருஷ்ணன்.
நான் என்ன கேட்கிறேன் நீங்க என்ன பேசுறீங்க......
நான் கேட்டதுக்கு முதல்ல நீ பதில் சொல்லு......
உங்களுக்கு பால் கொடுக்க சொல்லி கொடுத்து அனுப்பினார்கள்..... நீங்க எதுவுமே சாப்பிடலையாமே......
சிரித்தான் கோபிகிருஷ்ணன்.
என்னங்க நீங்க...... என்ன ஆச்சு உங்களுக்கு...... என்னதான் பிரச்சனை....... என்கிட்ட சொல்லுங்க.....
பிறகு சைகையில் பேசினான் கோபிகிருஷ்ணன்.
(கோபிகிருஷ்ணன் மற்றும் மஞ்சுளாவின் மகன் வினோத்..... காது கேட்காதவன்..... பிறவியிலேயே அப்படி இருந்ததால்..... அவனுடன் சேர்ந்து இவர்களுக்கும் சைகை பாஷை தெரியும்..... காது சரியாக கேட்காததால் அவனால் பேச இயலாது..... காக்ளியர் இம்பிளான்ட் செய்ததால் ஓரளவுக்கு கேட்கும் திறன் அவனுக்கு கிடைத்தது..... இருந்தாலும் மூவரும் சைகை பாஷையிலேயே வீட்டில் பேசிக் கொள்வார்கள். படிப்பில் மிகவும் திறமையானவன்..... ஐந்தாம் வகுப்பு வரையே ஸைன் லாங்குவேஜ் ஸ்கூலில் படித்தான்..... பிறகு அவனை நார்மல் ஸ்கூல்லையே சேர்த்தார்கள்).
சைகையில் கோபிகிருஷ்ணன் சொன்னதைக் கேட்டு
அதிர்ச்சியாகினாள் மஞ்சுளா.
பிறகு எதுவும் பேசாமல்...... வெளியே வந்தாள்.
அவர்கள் சைகையில் பேசிக் கொண்டார்கள் என்பது புரிந்தது மாயாவுக்கும் மணிகண்டனுக்கும்.
வெளியே வந்த மஞ்சுளாவிடம்.....
பேசிட்டிங்களா.....
பேசிட்டேன் மேடம்..... என்று மாயாவின் முகத்தைக் கூட பார்க்காமல் பதில் அளித்தாள் மஞ்சுளா.
உங்க ஹஸ்பண்ட் எப்ப கடைசியா வீட்டுக்கு வந்தாரு......
முந்தா நேத்து......நேத்து சாயந்திரத்துல இருந்து நான் ஃபோன் பண்ணிட்டு இருந்தேன் அவர் எடுக்கல நான் உடனே பயந்துட்டேன்......
உங்க கணவர் இப்போ என்ன சொன்னார்?..... என்றாள் மாயா.
உங்க கிட்ட சொன்னதையே தான் சொன்னார்.....
அப்படின்னா.....
அவர் தான் அந்த கொலையை செய்தார்......
என்னம்மா நீங்க..... நீங்கதானே சொன்னீங்க உத்தமர் ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்யாதவர் என்று...... என்றாள் மாயா.
மன்னிச்சிடுங்க மேடம் தெரியாம சொல்லிட்டேன்......
நான் போறேன்..... என்று சொல்லிவிட்டு தன் தம்பியை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியே சென்றாள் மஞ்சுளா.
என்ன ஆச்சு? என்ன ஆச்சு அக்கா..... என்று கேட்டுக்கொண்டே அவள் பின்னால் ஓடினான் கோவிந்தன்.
என்ன செய்றது சார்..... என்றாள் மாயா மணிகண்டனை பார்த்து.
நிச்சயமா யாரையோ காப்பாற்றுவதற்காக தான் கோபிகிருஷ்ணன் அந்த பழியை அவர் மேல போட்டுட்டு இருக்காரு...... முதல்ல யார் அந்த கல்ப்ரிட்டு ன்னு நம்ம கண்டுபிடிக்கலாம்......
ஆனா எப்படி சார்...... என்றாள் மாயா.
சொல்றேன்..... என்றான் மணிகண்டன்.
அன்றும் ஸ்டேஷனிலேயே தங்கி விட்டான் மணிகண்டன். மாயா சாயந்தரமாக கிளம்பிச் சென்று தன் அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து..... மணிகண்டன் கூறியது போல அவனுடைய வீட்டிற்கு தன் அம்மாவையும் அத்தை சிவகாமியும் அழைத்துச் சென்றாள்.
சிவகாமிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இரண்டு நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டனர். அதனால் சிவகாமியின் வீட்டிற்கு செல்ல பூர்ணிமா சம்மதித்தார். மணிகண்டன் அவர்களுடன் பூர்ணிமாவையும் நிரந்தரமாக தங்க சொன்னதை தன் அம்மாவிடம் சொன்னாள் மாயா.
உண்மையிலேயே..... உங்க பையன நீங்க ரொம்ப நல்லா வளர்த்து இருக்க சிவகாமி...... என்றார் பூர்ணிமா.
எனக்கு தெரியும் அண்ணி...... அவன் அப்படித்தான் சொல்லுவான்னு..... வயசான காலத்துல நான் உங்களுக்கு துணை நீங்க எனக்கு துணையாக இருக்கலாம்.... கோவில் குளம் எல்லாம் சேர்ந்து போலாம்..... நம்ம பசங்களும் நிம்மதியா சந்தோஷமா இருப்பாங்க......
சரி சிவகாமி..... என்றார் பூர்ணிமா.
மணிகண்டனுக்கு கால் செய்தாள் மாயா.
சொல்லு மாயா வீட்டுக்கு போயிட்டீங்களா......
ஆமாம் மாமா வீட்டுக்கு வந்துட்டோம்......
மாமி எப்படி இருக்காங்க.....
நல்லா இருக்காங்க மாமா..... என்று சொல்லி அவர்கள் பேசிய அனைத்தையும் கூறினாள்.
ரொம்ப சந்தோஷம் மாயா...... என்றான் மணிகண்டன்.
என்ன மாமா டல்லா இருக்க மாதிரி தெரியுது.....
அதெல்லாம் ஒன்னும் இல்ல மாயா நீ தூங்கு......
என்கிட்ட சொல்ல மாட்டீங்களா மாமா......
இந்த கேஸ நினைச்சு தான்..... என்றான் மணிகண்டன்.
அதான் நாளைக்கு லை டிடெக்டர் டெஸ்ட் பண்ண போறோம் இல்ல மாமா..... அப்புறம் என்ன......
அந்த டெஸ்டில் எல்லாம் தெரிஞ்சிடும் இல்ல...... அந்த ஆள் பொய் சொல்றாரா இல்ல உண்மைய சொல்லுறாரான்னு..... என்றாள் மாயா.
############
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.