• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி......பாகம் -49

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal

ரகசிய கொலையாளி......

பாகம் -49

நம்ம வாய்ஸ் ரெக்கார்டர் கொடுத்து அனுப்பி இருக்கோம்னு தெரிஞ்சு..... அதுக்கேத்த மாதிரி சைகைல பேசிட்டாரு..... அதேபோல நாளைக்கு லை டிடெக்டர் டெஸ்ட்க்கும் அதே போல எதாவது பண்ணினா என்ன பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

மாமா கூகுள்ல அது கூட வரும்..... லை டிடெக்டர் டெஸ்ட் எப்படி சீட் பண்றது..... லை டிடெக்டர் டெஸ்ட்ல சீட் பண்றவங்களை எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு.....

ஆமாம் மாயா அதை தான் படிச்சிட்டு இருக்கேன்.......

ஓகே மாமா..... ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்..... தூங்கி ரெஸ்ட் எடுங்க..... பை..... குட் நைட்.....

குட் நைட் மாயா.....
பை.....
மாயா ஒரு நிமிஷம்..... என்றான்.

ஃபோனை வைக்க சென்றவள் உடனே அதை காதில் மறுபடியும் வைத்து.....

சொல்லுங்க மாமா.....

ஒன்னு சொல்லணும்.....

சொல்லுங்க மாமா.....

நீ என்னோட ரூம்ல படுத்துக்கோ.....

ஓகே.....

உனக்காக அங்க ஒண்ணு வச்சிருக்கேன்.....

என்னது......

நீயே பார்த்துட்டு கால் பண்ணு..... என்னோட டேபிள் டிராயர்ல வச்சிருக்கேன்.

ஓகே மாமா..... என்று சந்தோஷமாக சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட்டு மணிகண்டனின் ரூமிற்கு ஓடினாள்.

என்னடி எதுக்கு இப்படி வேகமா ஓடுற.... என்றார் பூர்ணிமா.

ஒன்னும் இல்லம்மா நான் மாமா ரூம்ல போய் தூங்க போறேன்.....

சிரித்துக் கொண்டே இருவரும் ஓகே ஓகே என்றனர்.

இதுவே மாமா வீட்ல இருந்தா...... கல்யாணத்துக்கு முன்னாடி...... இந்த மாதிரி ஓகே சொல்லுவாங்களா ரெண்டு பேரும்..... என்று நினைத்து சிரித்துக் கொண்டே ரூமிற்கு சென்றாள் மாயா.

அவனுடைய ரூமுக்கு சென்றாள்.

கதவை மூடிவிட்டு ரூமை ஒரு முறை சுற்றி பார்த்தாள். மிகவும் அழகாக இருந்தது..... அனைத்து பொருட்களையும் அழகாக அடுக்கி வைத்திருந்தான்.
கப்போர்ட்டில் துணிகளை மிகவும் அழகாக அடுக்கி வைத்திருந்தான்..... பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது..... மணிகண்டன் சொன்னது ஞாபகம் வர..... டேபிள் டிராயரை திறந்து பார்த்தாள் மாயா.

அதில் ஒரு ஆல்பம் இருந்தது..... அதை எடுத்துப் பார்த்தாள். அதில் அவளுடைய ஒரு வயது முதல் வயதுக்கு வந்த நாள் வரை எடுத்த புகைப்படங்களை கட் செய்து ஒட்டி..... அதன் பக்கத்தில் சில கவிதைகளை எழுதி இருந்தான்..... பார்த்தது மிகவும்
சந்தோஷமாக இருந்தது அந்த கவிதையின் அர்த்தங்கள்..... அவள் மேல் அவன் கொண்ட காதலை வெளிப்படுத்தியது..... அந்த காதல் அவளையும் அவன் மேல் ஈர்க்க செய்தது.....

தேங்க்ஸ் மாமா..... போட்டோக்களை விட நீங்கள் எழுதிய கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு..... என்று மெசேஜ் செய்தாள் மாயா.

ஹேக் செய்வது போல் இருந்த எமோஜிகளை போட்டு
அனுப்பினான் மணிகண்டன்.

மாயாவும் அதே போல அனுப்பினாள்.

பிறகு அந்த ரூம் பெட்டில் படுத்துக் கொண்டு..... மணிகண்டனை நினைத்தபடியே தலையணையை கட்டிப்பிடித்து தூங்கினாள் மாயா.

##############

காலை எழுந்ததும் தன் அம்மா மற்றும் அத்தையிடம் சொல்லிவிட்டு வேலைக்கு சென்றாள் மாயா. மாயா மற்றும் மணிகண்டன் இருவருக்கும் டிபன் மற்றும் லஞ்ச் பேக் செய்து கொடுத்தார்கள் சிவகாமி மற்றும் பூர்ணிமா இருவரும். இருவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டாள் மாயா.

அம்மா அத்தை..... நீங்க ரெண்டு பேரும் இதே மாதிரியே ஒத்துமையா இருக்கனும்..... என்றாள்.

கண்டிப்பா மா..... என்றார் சிவகாமி.

இல்ல மாயா..... கண்டிப்பா எங்க ரெண்டு பேருக்கும் இடையில் பிரச்சனை வரும்..... வராம எல்லாம் இருக்காது.....

அம்மா......

இருடி.... நான் சொல்றதை கொஞ்சம் கேளு..... உனக்காக நானும் மணிக்காக சிவகாமியும் ஒருத்தர் கோபப்படும் போதோ இல்ல வருத்தப்படும் போதோ இன்னொருத்தர் அதை பெரிசு பண்ணாம விட்டுக்கொடுத்து போயிடுவோம்..... நீ கவலைப்படாத..... இது நான் சிவகாமி கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்..... என்று சொல்லி சிரித்தார் பூர்ணிமா.

அப்பாடா..... நான் கூட என்ன இப்படி சொல்றீங்களே ன்னு பயந்திட்டேன் அண்ணி..... என்றார் சிவகாமி.

நானும் தான் பயந்திட்டேன் அத்தை..... என்றாள் மாயா.

அனைவரும் சிரித்தனர்.

சரி..... நான் கிளம்பவா.... பை..... என்றாள் மாயா.

ஒரு நிமிஷம் டி கண்ணு..... என்று உள்ளே சென்று இன்னொரு செட் யூனிஃபார்மை எடுத்து வந்து கொடுத்தார் சிவகாமி.

ரெண்டு நாளா அதே டிரெஸ்ல இருக்கான் மா..... இன்னைக்கு இதை சேஞ்ச் பண்ணிக்க சொல்லு....

சரிங்க அத்தை என்று சொல்லிவிட்டு இருவருக்கும் பை சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி ஸ்டேஷனுக்கு சென்றாள் மாயா.

ஏற்கனவே அங்கேயே குளித்துவிட்டு ரெடியாக இருந்தான் மணிகண்டன். மாயா கொண்டு போன உடையை மாற்றிக்கொண்டு டிபன் சாப்பிட்டார்கள்.

பத்து மணி அளவில் லை டிடெக்டர் கருவியுடன் அந்த டாக்டர் வந்தார்.

கோபி கிருஷ்ணனை அமர வைத்து அவன் தலை மற்றும் கைகளில் நிறைய ஒயர்களை மாட்டி அதை சிஸ்டமில் கனெக்ட் செய்தார்கள்.

மணிகண்டனிடம் அந்த டாக்டர்.

சார்..... ஸ்டார்ட் பண்ணலாமா..... என்றார்.

யெஸ் சார்..... என்று சொல்லி வீடியோ ஆன் செய்தான் மணிகண்டன்.

ஒவ்வொரு கேள்வியாக கேட்க ஆரம்பித்தார் டாக்டர்.

உங்க பேர் என்ன.....

கோபிகிருஷ்ணன்.....

என்ன வேலை பண்றீங்க......

ஏசி சர்வீஸ் வேலை பார்க்கிறேன்......

எந்த கம்பெனிக்கு கொஞ்சம் டீடைலா சொல்லுங்க......

கம்பனி எல்லாம் இல்ல..... ஃபிரீ லான்சர் மாதிரி...... ஆன்லைன்ல என்னோட நம்பரை ரெஜிஸ்டர் பண்ணி இருக்கேன்..... கால் வந்துச்சுன்னா போய் சர்வீஸ் பண்ணிக் கொடுத்திட்டு வருவேன்.

ஓகே.....
உங்களுக்கு இறந்து போன காவேரியை தெரியுமா.....

தெரியும்.....

எப்படி தெரியும்......

எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் குடியிருந்தாங்க.....

அவங்க கூட உங்க பழக்கம் எந்த அளவு......

பதில் இல்லை அமைதியாக இருந்தான் கோபிகிருஷ்ணன்.

சொல்லுங்க.....
அவங்கள கொலை செஞ்சது......

மறுபடியும் அமைதி.....

இதோ பாருங்க ஒழுங்கா பதில் சொல்லிடுங்க..... இல்லனா உங்களுக்கு தான் பிரச்சனை.....

நான்தான் கொலை செய்தேன்.....

மணிகண்டன் அந்த டாக்டரை பார்க்க.....

பொய் சொல்லல சார் உண்மை தான் சொல்றாரு..... என்று தலை அசைத்தார் டாக்டர்.

எப்படி கொலை செய்தீர்கள்......

என்னோட வாரிசு அவ வயித்துல வளரதுன்னு பிளாக்மெயில் பண்ணா..... ஊரை கூட்டி எல்லாருக்கும் சொல்லி என் குடும்பமானத்தை வாங்கிடுவேன்னு சொன்னா..... கோவத்துல தலையில அடிச்சேன்...... இறந்துட்டா.....

இறந்துட்டாங்கன்னு தெரியல அப்புறம் எதுக்கு அவங்க தலையை அறுத்து எடுத்து அவங்க மடியில வச்சீங்க.....

பிறக்கப் போற குழந்தையை என் மடியில போட்டு விளையாட வைப்பேன்னு என்கிட்டையே சவால் விட்டா...... அந்தக் கோபத்துல அப்படி செஞ்சிட்டேன்......

அந்த ரஸியா தான்.... நீங்க கொலை செஞ்சதை பார்த்த ஒரே சாட்சியா.....

ஆமாம்......

எப்படி அவங்கள நீங்க சும்மா விட்டீங்க......

என்னை பிளாக் மெயில் பண்ணது என்னை டார்ச்சர் பண்ணது எல்லாமே காவேரி தான்..... அந்தப் பொண்ணு ரஸியா எதுவும் பண்ணல..... தேவையில்லாம எதுக்கு அந்த பொண்ண நான் கொல்லனும்......

அப்படின்னா எதுக்கு அன்னைக்கு ஹாஸ்பிடல் போனீங்க......

அந்த பொண்ணு..... எப்படி இருக்கா நல்லா இருக்காளா என்று பார்க்கிறதுக்கு தான் வந்தேன்..... மத்தபடி அவளை கொல்லனும் என்ற எண்ணம் என்கிட்ட இல்ல.....

இந்த கொலையை நீங்க ஒத்துக்கறதுனால உங்களுக்கு மரண தண்டனை கூட கிடைக்கலாம் பரவாயில்லையே......

நான் செஞ்ச கொலைக்கு தான மரணம் தண்டனை..... அதை ஒத்துக்கிறது எனக்கு பிரச்சனை இல்லை..... நான் என்னோட மரண தண்டனையை சந்தோஷமா ஏற்றுக்கொள்வேன்......

அப்படின்னா உறுதியா சொல்றீங்களா இந்த கொலையை நீங்கதான் செஞ்சீங்கன்னு..... என்றார் டாக்டர்.

ஆமாம்......என்றான் கோபிகிருஷ்ணன்.


#############

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.