ரகசிய கொலையாளி.....
பாகம் -50
யாரையாவது காப்பாற்றுவதற்காக..... இல்ல வேற யாரையாவது செஞ்ச கொலைய..... உங்க மேல போட்டுக்கறீங்களா.....
இல்ல நான்தான் கொலை செய்தேன்......
எப்படி அந்த வீட்டை விட்டு வெளியே வந்தீங்க.....
ஜன்னல் கதவை ஸ்க்ரூ கழட்டி தான் ஏசி அவுட்டோர் யூனிட்டை சர்வீஸ் பண்ணுவேன்..... அதேபோல கழட்டி வெளியே வந்து மறுபடியும் ஸ்க்ரூ பண்ணிட்டேன்......
அனைவரும் அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தனர். அடப்பாவி..... என்று நினைத்துக் கொண்டாள் மீனா.
இந்தக் கொலையில வேற யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா.....
அமைதியாக இருந்தான் கோபிகிருஷ்ணன்.
சொல்லுங்க இந்த கொலையை உங்க கூட சேர்ந்து வேற யாராவது செஞ்சாங்களா .....
இல்ல..... நான் மட்டும்தான் செஞ்சேன்.....
நீங்க கொலை செய்யும் போது அந்த வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க......
காவேரியும்.... அவளோட ஃபிரண்டு ரஸியாவும்.
நீங்க கொலை செய்யும் போது அவங்க என்ன பண்ணிட்டு இருந்தாங்க......
அவ என் கூட வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்தா.... வயிற்றில் வளர குழந்தையை பத்தி எல்லாருக்கும் சொல்லிடுவேன் ன்னு என்னை பயமுறுத்துக்கிட்டு இருந்தா.....
அவங்க என்ன உங்க கிட்ட காசு கேட்டாங்களா......
இல்ல......
அவங்க குழந்தையை உங்க குழந்தையா எடுத்து வளர்க்க சொன்னார்களா.....
இல்ல......
கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்களா.....
இல்ல......
பின்ன எதுக்கு அவங்கள கொன்னீங்க......
அவ வயித்துல வளருற குழந்தையை பத்தி என் மனைவிக்கும் மகனுக்கும் தெரிய கூடாதுன்னு.....
நீங்க அவங்க கிட்ட அபார்ஷன் பண்ண சொல்லி கேட்டீங்களா......
ஆமாம் கேட்டேன்......
அதுக்கு அவங்க ஒத்துக்கிட்டாங்களா......
இல்ல ஒத்துக்கல......
அதனாலதான் அவங்களைக் கொன்னீங்களா..
ஆமாம்.....
இந்த கொலையை நீங்கதான் செஞ்சேன்னு ஒத்துக்கறதுனால உங்களுக்கு கிடைக்க போற தண்டனையை நீங்க ஏத்துக்க தயாரா இருக்கீங்களா.....
ஆமாம்......
சரி செஷன் முடிஞ்சுச்சு.....
மணிகண்டன் ராஜேஷை பார்க்க.....
கோபிகிருஷ்ணனை அழைத்துக் கொண்டு செல்லில் போட்டான் ராஜேஷ்.
கோபிகிருஷ்ணன் சென்றதும்.....
மாயா மற்றும் மணிகண்டன் அந்த டாக்டரிடம் பேசினார்கள்.
என்னாச்சு சார்..... பொய்தான சொல்றான்...... என்றாள் மாயா.
இல்ல மேடம்..... மிடில்ல வேரியேஷன்ஸ் இருந்ததே தவிர...... எதுவும் பொய்யில்லை..... பயத்துல அந்த வேரியேஷன்ஸ் போறதுக்கு வாய்ப்பு இருக்கு..... ஆனா அவர் சொன்னது எல்லாமே உண்மைதான்..... என்றார் டாக்டர்.
அப்படின்னா..... லைட் டிடெக்டர் டெஸ்ட் முடிஞ்சிடுச்சா.....
ஆமாம் மேடம்.....
அப்போ அவன் தான் வந்து கொலை செஞ்சானா......
என்றாள் மீனா.
இந்த டெஸ்ட் ரிசல்ட் வச்சு பார்க்கும்போது..... அவரு பொய் சொல்லல..... மணிகண்டன் சார் எழுதிக் கொடுத்த கேள்வி எல்லாமே கேட்டுட்டேன்..... அதுக்கு வந்த பதில் எல்லாமே உண்மைன்னு தான் இந்த டெஸ்டை சொல்லுது..... அதுக்கப்புறம் அந்த கொலையா அவர் செஞ்சாரா இல்லையான்னு நீங்க தான் முடிவு பண்ணிக்கணும்.....
தேங்க்யூ சோ மச் டாக்டர்..... என்று கை கொடுத்தான் மணிகண்டன்.
சார் உங்களுக்கு எதுவும் கேட்க வேண்டாமா டாக்டர் கிட்ட..... என்றாள் மாயா.
இல்ல அவர் தான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டாரே..... வேற என்ன கேட்க வேண்டியது இருக்கு.....
அமைதியாக இருந்தாள் மாயா.
டாக்டர் கிளம்பி சென்றதும் மாயா மணிகண்டனிடம் பேசினாள்.
நீங்க தானே சார் சொன்னீங்க கண்டிப்பா இந்த கொலையை வந்து கோபிகிருஷ்ணன் செஞ்சு இருக்க வாய்ப்பு இல்லன்னு.....
கோபிகிருஷ்ணன் இந்த கொலையை செஞ்சிருக்க வாய்ப்பில்லை என்று நான் சொல்லல...... ஆனா அவர் கொலை செய்ய வேற எதுவும் காரணம் இருக்கு...... காவிரியோட வயித்துல வளர குழந்தை அவரோடதில்லைன்னு எனக்கு தோணுது......
ஆனா டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் தான் மேட்ச் ஆயிடுச்சே.....
இன்னுமா உங்களுக்கு புரியல மாயா.....
என்ன சொல்றீங்க சார்.....
இன்னும் கொஞ்ச நேரத்துல கோபிகிருஷ்ணன் வாயாலயே உண்மை என்னன்னு தெரிஞ்சிரும்......
ஸ்டேஷனில் இருந்த அனைவரும் ஆச்சரியமாக மணிகண்டனை பார்த்தனர்.
அப்போது இளங்கோ ஒருவனை அழைத்து வந்தான்.
மஞ்சுளா மற்றும் அவளுடைய தம்பி கோவிந்தனும் வந்தனர்.
அனைவரும் இன்ட்ராகேஷன் ரூமில் அனுமதிக்கப்பட்டனர்.
மஞ்சுளா தலைகுனிந்து அமர்ந்து இருந்தாள்.
மணிகண்டன் கோவிந்தனை வெளியே போகச் சொன்னான்.
நான் ஏன் வெளியே போகணும் எங்க அக்கா மாமா எல்லாரும் இங்க இருக்கும்போது.....
நவீனை பார்த்தான் மணிகண்டன். நவீன் கோவிந்தனை அழைத்து வெளியே சென்று விட்டு விட்டு உள்ளே வந்தான்.
இப்போ உண்மைய சொல்றீங்களா மிஸ்டர் கோபிகிருஷ்ணன்.
கண்களில் நீர் வழிந்தது மஞ்சுளாவுக்கு. கோபிகிருஷ்ணனின் கண் கலங்கினார்.
சார் இந்த பையன் யாரு..... என்றாள் மீனா.
இது இவங்க பையன் வினோத்.
ஓகே ஓகே.....
நீங்க ரெண்டு பேரும் பேசலைன்னா உங்க பையன பேச வைக்க வேண்டி இருக்கும்.....
இல்ல சார் உண்மையை சொல்லிடறோம்..... என்றனர் மஞ்சுளா மற்றும் கோபி கிருஷ்ணன்.
என் பையன் பிளஸ் டூ படிக்கும் போது..... நாங்க அந்த வீட்டில இருந்தோம்..... அதான் இறந்து போன காவேரி ஓட வீட்டு பக்கத்துல இருந்தோம்..... எனக்கும் என் மனைவிக்கும் தமிழ் எழுத படிக்க தெரியாது..... பேச தான் தெரியும்..... அதனால என் பையனுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பா அந்த காவிரி..... ஆரம்பத்துல எந்த பிரச்சனையும் இல்லை..... அவ சொல்லிக்கொடுத்தால நல்ல மார்க்கே வாங்கினான் என் பையன். அப்போ அவளுக்கும் அந்த புருஷோத்தமனுக்கும் தொடர்ப்பு இருந்துச்சு..... அவன் அரஸ்ட் ஆகி ஒரு மாசம் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தப்ப..... என் பையனையே எப்படியோ மயக்கி..... மாத்திரை எல்லாம் கொடுத்து..... அவளோட ஒண்ணா இருக்க செஞ்சிருக்கா..... என்று சொல்லும் போதே அவருடைய குரல் தழுதழித்தது.
இவனும் அவளை ஒரு தலையா காதலிச்சு இருக்கான். ஆனா இவன் கிட்ட இருந்து அவளுக்கு தேவைப்பட்டது ச***** மட்டும்தான். இது தெரியாம..... அவளும் இவனை உண்மையா காதலிக்கிறதா நினைச்சு அவ கூட நிறைய நாள் ஒண்ணா இருந்திருக்கான். இந்த உண்மை தெரிஞ்சு நான்..... என் மனைவி கிட்ட கூட சொல்லாம..... காலேஜ்காக வேற இடம் போலாம்னு சொல்லி வீட்டை காலி பண்ணி கூட்டிட்டு போயிட்டேன்..... ஆனா அப்பவும் அவ விடல..... ட்ரெயின்ல தினமும் பார்க்கிறது..... வாரத்துல ஒரு நாள் லீவ் போட்டு..... இவனை கூட்டிட்டு வெளியே போய் ச***** வச்சிக்கிறது..... அப்படி இருந்திருக்கா.....
ஒரு நாள் இவங்க ரெண்டு பேரும் ஹோட்டல் ரூமுக்கு போறத நான் பார்த்தேன்..... என் பையன தனியா கூட்டிட்டு போய் அடிச்சு திட்டி பார்த்துட்டேன்..... நான் ஏற்கனவே வாய் பேச முடியாமல் காது கேட்காமல் இருக்கிறதால..... அந்த காவிரி உண்மையாவே அவளை காதலிக்கிறானு நினைச்சிட்டான்..... அவளை விட நல்ல துணை இவனுக்கு கிடைக்காதுன்னு நினைச்சிட்டான்.
இது மனைவிக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையா ஆயிடும்னு நான் அவ கிட்ட சொல்லல......
மஞ்சுளா கோபிகிருஷ்ணன் பேசுவதை கேட்டு அழுதாள்.
அப்போ உங்க பையனோட குழந்தை தான் அவங்க வயித்துல வளர்ந்ததிருந்துச்சா..... என்றாள் மாயா.
ஆமாம்......
அதுக்காக தான் நீங்க அவங்களை கொன்னீங்களா...... என்றான் மணிகண்டன்.
இல்ல.....
என்ன நடந்துச்சுன்னு..... தெளிவா சொல்லுங்க...... என்றான் மணிகண்டன்.
என் பையன் பத்து நாள் காலேஜ் டூர் போனான்..... இது தான் நல்ல சந்தர்ப்பம் ன்னு நினைச்சு அந்த காவிரி கிட்ட பேசிப் போனேன்...... எப்படியாவது என்னுடைய பையனை விட்டிடு ன்னு கெஞ்சப் போனேன்..... ஆனா அன்னைக்கு நடந்த விஷயமே வேற...... என்றான் கோபி கிருஷ்ணன்.
அனைவரும் கோபிகிருஷணன் பேசுவதை கேட்டுக் கொண்டும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டும் இருந்தனர்.
##############
தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.