• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.....பாகம் 52

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal

ரகசிய கொலையாளி.....

பாகம் 52

இவ்வளவு நேரம் அமைதியாக அவர் பேசியதை ரெக்கார்ட் செய்து கொண்டு இருந்த மணிகண்டன்.
கேள்விகளை கேட்க ஆரம்பித்தான். மாயாவையும் கேள்விகளை கேட்க சைகை செய்தான்.

ஆல் ஷூட் பீ ரெக்கார்டட்..... என்று ராஜேஷிடம் கூறினான் மணிகண்டன்.

எஸ் ஸார்...... என்றான் ராஜேஷ்.

மாயா..... நீங்க ஃபர்ஸ்ட் இன்ட்ராகேஷன் ஸ்டார்ட் பண்ணுங்க..... என்றான் மணிகண்டன்.

எஸ் ஸார்..... என்றாள் மாயா.

என்னோட வாரிசு அவ வயித்துல வளரதுன்னு பிளாக்மெயில் பண்ணா..... ஊரை கூட்டி எல்லாருக்கும் சொல்லி என் குடும்பமானத்தை வாங்கிடுவேன்னு சொன்னா..... கோவத்துல தலையில அடிச்சேன்...... இறந்துட்டா..... அப்படின்னு நேத்து நீங்க சொன்னிங்களே...... அது எப்படி லைட் டிடெக்டர்ல பொய்யின்னு காட்டல.... நீங்க ஏதாவது சீட் பண்ணீங்களா .....

வாரிசு என்று தான் சொன்னேன்..... என்னோட குழந்தைன்னு சொல்லல..... வாரிசுன்னா குடும்ப வாரிசு..... அது எனக்கு தான் பொறக்கணும்ன்னு அவசியம் இல்லை..... என் தலைமுறையினருக்கு யாருக்கு பிறந்தாலும் அது எங்க குடும்ப வாரிசு தான்..... அதனால நான் சொன்னது பொய் கிடையாது.....

ரஸியாவை பார்க்க எதற்கு அன்றைக்கு ஹாஸ்பிடல் போனீங்க..... நீங்க செஞ்ச கொலைய தான் அவங்க பார்க்கவே இல்லையே.....

தெரியும்..... அந்த பொண்ணுக்கு மயக்க மருந்துடன் சேர்ந்து போத மருந்தையும் சேர்த்து கொடுத்து இருக்கா அந்த காவேரி..... அதனால அந்த பொண்ணுக்கு பிரம்ம புடிச்ச மாதிரி ஆயிடுச்சு..... அந்த பொண்ணு நான் கொலை செய்ததை பார்க்கவே இல்லை..... அதே மாதிரி ஒரு மணி நேரத்துக்கு மேல எந்த தடையத்தையும் விடலையான்னு நான் தேடிப் பார்த்துட்டேன்..... அதனால நீங்க ஏற்கனவே போட்ட நியூஸ்ல..... கண்டிப்பா உங்களுக்கு எந்த தடையமும் கிடைச்சி இருக்காது..... என்னை பிடிக்க தான் நீங்க இப்படி பண்றீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்....

இந்த பொண்ணு நல்லாயிருச்சுன்னு நியூஸ்ல கேள்வி பட்டேன்..... என்னவோ தெரியல..... அந்த பொண்ணு நல்லா இருக்காளான்னு பாக்கணும்னு தோணுச்சு ..... அதனால அவளுக்கே தெரியாம தூரமா இருந்து பாத்துட்டு போகலாம்னு நினைச்சேன். இந்த முறையும் இது ஒரு டிராப்பா இருக்குமோ அப்படின்னு தோணுச்சு..... இருந்தாலும் அந்த பொண்ண பார்க்கணும்...... எப்படி இருக்காளோ அந்த பொண்ணு அப்படின்னு நினைச்சு வந்து நானே மாட்டிக்கிட்டேன்.....

தடைங்கள தேடிப்பார்த்து அழித்துவிட்டேன் என்று சொன்னீங்களே அப்படி என்ன தடையங்களை அழிச்சீங்க...... என்றான் மணிகண்டன்.

நான் அவங்க வீட்டு வாசல் வழியாக உள்ள வந்தேன்..... உள்ள நுழையும் போது எனக்கு கொலை பண்ற எண்ணம் இல்லாததால நான் எல்லாத்தையும் தொட்டு இருப்பேன்னு எனக்குள்ள தோணுச்சு..... அதனால எங்க எல்லாம் என் கை பட்டு இருக்கும்னு எனக்கு தோணுச்சோ அந்த எல்லா இடத்தையும் என் கைரேகையை அழிச்சேன்..... அப்புறம் காவிரி தலையில நான் அடிச்ச சுத்தி..... அப்புறம் கழுத்தை அறுக்கும் போது நான் யூஸ் பண்ண கத்தி..... எல்லாத்தையும் எடுத்துகிட்டேன்...... அதனால எனக்கு கான்ஃபிடென்ட்டா தெரியும்..... உங்களால எந்த தடையுமும் அங்கிருந்து என்னை பிடிக்கிற மாதிரி எடுத்து இருக்க முடியாதுன்னு...... நான் மட்டும் அந்த பொண்ணு ரஸியாவ பார்க்க வரலைன்னா..... கண்டிப்பா என்னை உங்களால பிடிச்சிருக்கவே முடியாது...... என்றான் கோபிகிருஷ்ணன்.

உண்மை அது தான் என்பதால் வேற எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் மணிகண்டன்.

வேற ஏதாவது கேள்வி கேட்க போறீங்களா என்று தன் டீம் மெம்பர்கள் அனைவரையும் பார்த்து கேட்டான் மணிகண்டன்.

சார் இது கேஸூக்கு சம்பந்தமா இல்ல..... நான் கேட்கலாமா என்றாள் மீனா.

கேசுக்கு சம்பந்தம் இல்லைன்னா..... அப்புறம் எதுக்கு கேள்வி கேட்கறீங்க மீனா..... என்றான் மணிகண்டன்.

அது வந்து சார்.....

சரி கேளுங்க..... ரெக்கார்டிங் ஆஃப் பண்ண வேண்டாம்..... தேவையில்லாத கேள்விகளை அப்புறம் டெலீட் பண்ணிக்கலாம்..... என்றான் மணிகண்டன்.

ஓகே சார்..... என்றான் ராஜேஷ்.

காவிரி இறந்தது உங்க பையனுக்கு தெரியுமா என்றாள் மீனா.

தெரியும்..... ஆனா நான் தான் கொலை செஞ்சேன்றது, இப்பதான் தெரியும்......

உங்க பையனுக்கு காவேரி உண்மையாவே அவரை லவ் பண்ணலைன்னு தெரியுமா.....

அதுவும் இப்பதான் தெரியும்..... ஆனா இதெல்லாம் நான் சொன்னேன் என்பதால அவன் நம்பல....
என் மேல ரொம்ப கோபத்துல இருக்கான்..... அவன் காவேரியை லவ் பண்ணதனாலதான் நான் அவளை கொன்னுட்டதா அவன் நினைக்கிறான்.

நீங்க அவர் கிட்ட எந்த ஆக்சன்லயும் சொல்லலையே எப்படி அவருக்கு புரிந்திருக்கும்......

வாயசைப்பு வைத்து அவன் கண்டுபிடித்து விடுவான்..... என் பையன் ரொம்ப பிரில்லியன்ட்.....

அனைத்து விசாரணையும் முடித்துவிடவே...... கேசை ஃபைல் செய்து கோர்ட்டில் கோபிகிருஷ்ணனை ஆஜர் செய்தனர்.

இரண்டு மாத வழக்காடலுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.

திட்டமிடப்படாத கொலை என்பதாலும்..... கொலையாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டதாலும்..... ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும்..... மூன்று லட்சம் அபராதமும் கட்ட சொல்லி தீர்ப்பு வழங்கப்பட்டது. வினோத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு டிவி, மீடியா மற்றும் ரெக்கார்ட்ஸில் காவேரியின் வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கு அப்பா வினோத் தான் என்று மணிகண்டன் மற்றும் அவனுடைய டீம் மெம்பர்ஸ் கூறவில்லை. மேலும் கேஸை ஃபைல் செய்யும் போதே கோபிகிருஷ்ணன் மற்றும் மஞ்சுளாவின் வேண்டுகோளுக்கு இணங்கி வினோத்தை இந்த கேஸில் சம்பந்தப் படுத்தவில்லை.

கேஸை சீக்கிரமாக முடித்ததால் மாயாவிற்கு விருது பரிந்துரைக்கப்பட்டது. மணிகண்டனே கேஸை 90% முடித்து விட்டார் என்பதை மாயா கோர்ட்டில் கூறியதால் மணிகண்டனுக்கும் விருது வழங்கப்படும்.... மற்றும் வேலையில் உயர்பதவி கிடைக்கும் என்று கூறினார் நீதிபதி.

மஞ்சுளாவும் வினோத்தும் கோர்ட்டின் வெளியே அமர்ந்திருந்தார்கள்.

கோபி கிருஷ்ணனை போலீஸ் அழைத்து சென்ற போது..... மஞ்சுளா அவர் அருகில் சென்று அழுதாள்.

அவன் தலையை தடவிக் கொடுத்து..... கவலைப்படாதம்மா..... நம்ம வினோத்த நல்லபடியா பார்த்துக்கோ...... என்னோட சேவிங்ஸ் இருக்கு..... மாதாமாதம் உங்களுக்கு அதுல இருந்து வருமானம் வரும்..... கவலைப்படாதீங்க..... தைரியமா இருங்க......

என்னோட தைரியமே நீங்க தானேங்க.... நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன்.....

நம்ம பையன் வினோத்துக்காக நீ இருந்து தான் ஆகணும்..... என்று கட்டளை இடுவது போல சொன்னார் கோபிகிருஷ்ணன்.

பிறகு தன் மகனை பார்த்தார். அவன் தலையை திருப்பிக் கொண்டான். அவர் மேலும் கோபம் இன்னும் அவனுக்கு குறையவில்லை என்று நன்றாக புரிந்தது அவருக்கு.

விரக்தியாக சிரித்துவிட்டு போலீஸூடன் சென்றார் கோபிகிருஷ்ணன்.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர் மாயா மற்றும் மணிகண்டன்.

வினோத் தன் அப்பாவின் மேல் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்தது. மணிகண்டன் அவன் அருகில் சென்று அமர்ந்தான்.

புருஷோத்தமனுடன் காவேரி எடுத்துக்கொண்ட போட்டோக்களை காண்பித்தான். அவன் அப்படியும் நம்பவில்லை..... பிறகு வேறு வழி இன்றி..... புருஷோத்தமனும் காவேரியும் பேசிக்கொண்ட வாட்ஸ் அப் சேட்டுகளை காண்பித்தான் மணிகண்டன்.

அதை மிகவும் அந்தரங்கமாக இருவரும் சாட்டில் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டான் வினோத். ஒரு சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரிடம் அவனை ட்ரீட்மென்ட்க்கு அனுப்பி வைத்தார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தான் வினோத்.

அடுத்த மாதத்தில் இருந்து தன் அம்மாவுடன் தன் அப்பாவை பார்க்க சென்றான். அவரிடம் சைகையில் மன்னிப்பு கேட்டான்.

சிபிஐ இல் மணிகண்டன் உடன் சேர்ந்து வேலை செய்யவே தான் கேஸை சீக்கிரமாக முடித்தேன்..... என்று தன் உயர் அதிகாரிகளிடம் கூறினாள் மாயா.

மேலும் தான்..... கிரைம் பிரான்ச்சிலிருந்து இந்தியன் போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு மாற்றுதல் செய்து தரும்படி கேட்டுக் கொண்டாள்.


#############

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.