ரகசிய கொலையாளி.....
பாகம் 53
கிரைம் பிரான்ச்சிலிருந்து இந்தியன் போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு மாற்றுதல் செய்து தரும்படி கேட்டுக் கொண்ட மாயாவிடம்......
சேலரி கம்மி ஆயிடும் பரவாயில்லையா...... என்றார் சிபிஐ உயர் அதிகாரி.
பரவாயில்லை சார்..... நான் என்னோட மாமாவுடன் சேர்ந்து வேலை செய்வது தான் பெருசா நினைக்கிறேன்..... பணத்தை இல்ல..... என்றாள் மாயா.
ஓகே யூவர் விஷ்..... என்று சொல்லி அப்ரூவலில் ஸைன் செய்தார் சிபிஐ உயரதிகாரி.
மாயாவின் விருப்பத்திற்கு ஏற்ப அவளுக்கு இந்தியன் போலீஸ் டிபார்ட்மெண்டில் வேலை கிடைத்தது. ஆனால் மணிகண்டன் வேறு போலீஸ் ஸ்டேஷன் மாயா வேறு போலீஸ் ஸ்டேஷன்.
இருப்பினும் தன் மாமாவுடன் வேலைக்கு செல்வது
அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
நல்ல நாள் பார்த்து இருவருக்கும் கல்யாணம் பிக்ஸ் செய்தார்கள் சிவகாமி மற்றும் பூர்ணிமா.
கோவிலில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று மணிகண்டன் கூறவே..... அனைவரும் சம்மதித்தனர்..... ரெஜிஸ்டர் ஆபீஸில் சட்டப்படி திருமணம் முடித்துவிட்டு.....
வடபழனி முருகன் கோவிலில் மணிகண்டன் மற்றும் மாயா இருவருக்கும் கல்யாணம் நடந்தது.
மாயா மற்றும் மணிகண்டன் இருவரும் சந்தோஷமாக இருந்தனர்...... பூர்ணிமா மற்றும் சிவகாமியும் கூட சந்தோஷத்தில் இருந்தனர்.
மணிகண்டன் ஸ்டேஷனில் வேலை செய்த அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். பூர்ணிமாவின் தம்பி குடும்பமும் வந்திருந்தார்கள். மேலும் மாயாவின் தோழிகள் மற்றும் அவளுடன் டெல்லியில் வேலை செய்த ஃபிரண்ட்ஸ்.... என்று அனைவரும் வந்து இருந்தார்கள். மணிகண்டன் மற்றும் மாயா இருவரின் உயர் அதிகாரிகளும் வந்திருந்தார்கள்.
கல்யாணம் முடிந்து பக்கத்தில் இருக்கும் சரவணபவன் ஹோட்டலில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டனுக்கு கால் வந்தது.
யாரு மாமா...... என்றாள் மாயா.
டிஎஸ்பி.....
அவர் நீங்க கல்யாணத்துக்கு கூப்பிட்டீங்களா......
கூப்பிட்டேன் இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு..... அதனால விஷ்ஷஸ் மட்டும் சொல்றேன்..... தப்பா நினைக்காதீங்கன்னு சொன்னாரு......
ஓ...... இப்ப விஷ் பண்றதுக்கு தான் கூப்பிடுறாரா......
மே பி.....
ஃபோனை எடுத்து
ஹலோ குட் ஆப்டர்நூன் சார் ..... என்றான் மணிகண்டன்.
..........
எஸ் சார்.....
.........
ஓகே சார்.....
.........
ஓகே சார்.....
என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு.
பொண்டாட்டி...... வேலை வந்துருச்சு போலாமா..... என்று சொல்லி கண்ணடித்தான் மணிகண்டன்.
நான் ரெடி மாமா..... வாங்க போகலாம்.....
தம்பி என்னப்பா...... தாலி கட்டின உடனே வேலைக்கு கிளம்புறீங்க..... என்றார் சிவகாமி.
அம்மா இந்தாங்க என் கார்டு..... எல்லாரும் சாப்பிட்டதும்..... பே பண்ணிட்டு..... ஆட்டோ இல்ல கேப் புடிச்சு நீங்களும் மாமியும் வீட்டுக்கு போயிடுங்க......
நாங்க போயிட்டு வரோம்...... என்றான் மணிகண்டன்.
பை அத்தை..... பை அம்மா...... என்றாள் மாயா.
ஹோட்டல் ரூமில் டிரஸ் சேன்ஜ் செய்ய சென்றனர் இருவரும் .....
சீக்கிரமா டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோ...... டைம் ஆகிறது போகலாம்...... என்றான் மணிகண்டன்.
மாமா எனக்கு வெக்கமா இருக்கு.....
எதுக்கு.....
இல்ல..... எப்படி மாமா நான் உங்க முன்னாடி டிரஸ் சேஞ்ச் பண்ணுவேன்.
ஏய்..... இப்போ நீ என் பொண்டாட்டி டி.....
அதுக்காக உடனே வெட்கம் எல்லாம் போயிடுமா என்ன.....
சரி நான் திரும்பிக்கிறேன்..... நான் மாத்திக்கோ.....
ஓகே மாமா.....
என்னடி டக்குனு ஓகே சொல்லிட்ட......
பின்ன என்ன..... நீங்க ஃபார்மாலிட்டிக்கு தான் சொன்னீங்களா?.....
ஆமாம் ஆமாம்......
நானும் ஃபார்மாலிட்டிக்கு தான் சொன்னேன்...... என்று சொல்லி சிரித்தாள் மாயா.
அடிப்பாவி..... நான் கூட உண்மையாவே என்னை திரும்ப சொன்னீயோன்னு நெனச்சு பயந்துட்டேன்.....
ஃபர்ஸ்ட் டே கூட நான் ரெடி..... என்று சொல்லி கண்ணடித்து சிரித்தாள் மாயா.
அவளை ஹக் செய்தான் மணிகண்டன்.
நானும் ரெடி தான்..... ஆனா கடமை நம்ம ரெண்டு பேரும் அழைக்குதே..... என்ன பண்றது..... ஃபர்ஸ்ட் நைட்டே இன்னைக்கு நடக்குமா என்று தெரியவில்லை......
ஏன் அப்படின்னு சொல்றீங்க மாமா.....
இல்ல கேஸ் விஷயமா போறோம்ல..... வீட்டுக்கு வர முடியுமா இல்ல வர முடியாதா ன்னு தெரியல .....
அப்படின்னா..... இப்போ ஒரே ஒரு கிஸ் மட்டும் பண்ணிக்கலாமா மாமா...... என்று அவள் சொன்னது தான் தாமதம்...... மணிகண்டனின் இதழ்கள் மாயாவின் இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தது.
இரண்டு நிமிடத்திற்கு பிறகு..... தங்கள் கடமையை செய்ய இருவரும் தங்களது யூனிபார்மை மாற்றிக்கொண்டு பைக்கில் கிளம்பினார்கள்.
பைக்கில் செல்லும் போது மாயா மணிகண்டனை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
ஏய் பொண்டாட்டி..... நம்ம ஹனிமூனுக்கு போகல..... கேஸ் விஷயமா போறோம்...... ரெண்டு பேரும் யூனிஃபார்ம்ல வேற இருக்கோம்..... பப்ளிக் யாராவது நம்மை ஃபோட்டா பிடிச்சு சோஷியல் மீடியாவுல போட்டா..... அவ்வளவு தான்..... நம்ம இமேஜ் டேமேஜ் ஆயிடும்......
நமக்கு தான் கல்யாணம் ஆயிடிச்சே.....
அது பாக்குறவங்களுக்கு தெரியுமா..... அப்படியே தெரிஞ்சாலும்..... இன்ஸ்பெக்டர் பொண்டாட்டி கூப்பிட்டு கொண்டு பைக்ல ஊர் சுத்தறாரு..... போடுவாங்க..... இதெல்லாம் தேவையா......
உடனே கையெடுத்தாள் மாயா..... சற்று இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்தாள். பிறகு அவனிடம் பேசினாள்.
என்ன கேஸ் மாமா.....
மர்டர்.....
மறுபடியுமா.....
ஏன்..... இவ்வளவு சோர்வாயிட்ட.....
இல்ல மறுபடியும் முதல்ல இருந்தா..... அப்படின்னு நினைச்சேன்..... அதான் என்னையும் அறியாமல் அந்த சோர்வு வார்த்தைல வந்துடுச்சு......
சிரித்தான் மணிகண்டன்.
யாரு.....
தெரியல போனால் தான் தெரியும்.....
ஓ..... ஓகே மாமா.....
ஒரு வழியாக கிரைம் ஸ்பாட்டிற்கு சென்றார்கள் மாயா மற்றும் மணிகண்டன். இருவரும் பைக்கில் இருந்து இறங்கி தங்களுடைய கேப்பை தலையில் மாட்டிக் கொண்டார்கள்.
அந்த பங்களாவின் கேட் திறந்து வைக்கப்பட்டிருந்தது. நாய்கள் இரண்டு வலது பக்கமாக இறந்து கிடந்தது. போலீஸ் ஆட்கள் சிலர் அங்கு இருந்தார்கள். இடது பக்கமாக செக்கியூரிட்டி ஆள் ஒருவர் காரைத் தரையில் விழுந்து இறந்து கிடந்தார். தலையிலிருந்து வழிந்த ரத்தம் குட்டை போல தேங்கி இருந்தது. இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ளே நடந்து சென்றார்கள் மாயா மற்றும் மணிகண்டன்.
உள்ளே இருந்த ஒரு வயதான பெண்மணி தரையில் விழுந்து இறந்து கிடந்தார். தலையைத் திருப்பிக் கொன்று இருந்தார்கள். பார்க்கவே கொடூரமாக இருந்தது. கண்கள் திறந்து இருந்தது.... அந்த வயதான அம்மாவை பார்த்த மாயாவிற்கு என்னவோ போல் இருந்தது. மிகவும் வருத்தமாக இருந்தது.
சார்...... என்றார் ஒரு கான்ஸ்டபிள் மணிகண்டனை பார்த்து.
சொல்லுங்க சார்.....
உள்ளேயும் ஒரு டெட் பாடி இருக்கு.....
வாட்...... இரண்டு பேருன்னு தானே சொன்னாங்க.....
ஆமா சார் தகவல் கிடைத்தது என்னமோ ரெண்டு பேரு தான் ஆனா உள்ளேயும் உண்டு ஒரு டெட் பாடி இருக்கு.....
உள்ளே சென்றனர் மாயா மற்றும் மணிகண்டன்.
இங்கே ஒரு சின்ன குழந்தை தூங்குவது போல இருந்தது. ஆனால் தலையணையை வைத்து அந்த பிஞ்சு குழந்தையின் உயிரையும் எடுத்திருந்தார்கள்.
இதை பார்த்ததும் மணிகண்டன் மற்றும் மாயாவிற்கு கண்கள் கலங்கியது. தங்களுடைய தொப்பியை கழட்டி விட்டு கண்களை துடைத்துக் கொண்டனர்.
யார் முதல்ல பாத்தது..... என்றான் மணிகண்டன்.
சார் நான் தான்..... என்று சொல்லி ஒருவர் வந்தார்.
நீங்க யாரு......
சார் நான் இந்த வீட்டு தோட்டக்காரன்...... தினமும் சாயந்தரம் ஒரு ஆறு மணிக்கு போயிட்டு காலையில ஆறு மணிக்கு வந்துருவேன்.
எப்பவுமே கேட்டுப்பூட்டி தான் இருக்கும்..... வாட்ச்மேன் இருப்பாரு..... ஆனா நான் இன்னைக்கு காலையில வரும்போது கேட்டு திறந்து இருந்தது. உள்ளே நான் வரும்போது பார்த்தா இந்தப் பக்கம் நாயுங்க ரெண்டும் செத்து கிடந்ததிருந்தது. அப்புறம் இந்த பக்கம் பார்த்தா வாட்ச்மேன் சிங்காரம் கீழே விழுந்து கிடந்தார்..... நான் கூட தண்ணி அடிச்சிட்டு விழுந்துட்டாரா..... இல்ல கால் தடுக்க விழுந்துட்டாரா நினைச்சுக்கிட்டே கிட்ட வந்து பார்க்கும் போது தலையிலிருந்து நிறைய ரத்தம் போய் இருந்தது. அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன் ஏதோ ஒரு பிரச்சனை..... சிங்காரத்துக்கு உயிர் இல்லன்னு தோணுச்சு...... அம்மாகிட்ட சொல்லலாம்னு உள்ளே போனா..... அம்மாவும் கீழே விழுந்து கிடந்தாங்க...... கிட்ட போய் அம்மா அம்மா என்று கூப்பிட்டேன்..... அம்மா ஒரு உடம்பிலும் அசைவு இல்லை..... கண்கள்லாம் மேலே பார்த்திருந்தது..... அம்மாவுக்கு உயிர் இல்லன்னு தெரிஞ்சிடுச்சு...... அதனாலதான் எதையும் தொடாம உடனே போலீசுக்கு ஃபோன் செஞ்சேன்..... என்று சொல்லி முடித்தான் தோட்டக்காரன் முத்து.
சார்...... இவர்கிட்ட எல்லாத்தையும் எழுதி வாங்கிக்கோங்க..... என்றான் மணிகண்டன் அங்கிருந்த கான்ஸ்டபிளை பார்த்து.
ஓகே சார்..... என்று சொல்லி தோட்டக்காரனிடம் பேசிக் கொண்டிருந்தார் கான்ஸ்டபிள்.
மாயாவிற்கு அந்த குழந்தையின் முகம் நினைவில் தோன்றி கொண்டே இருந்தது.
மாயா...... என்று அழைத்தான் மணிகண்டன்.
கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு.....
எஸ் சார்...... என்றாள் மாயா.
அக்கம் பக்கத்து வீடுகளில் நேரா போய் விசாரிக்கலாம்...... வாங்க.....
ஓகே சார்..... என்று சொல்லி தன் தொப்பையை தலையில் மாட்டிக் கொண்டு இருவரும் அந்த கேசை விசாரிக்க சென்றனர்.
மாயா மற்றும் மணிகண்டனின் இந்தத் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை வாங்கி தர நாம் அவர்களுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லலாம்.
###############
முற்றும்.
அ. வைஷ்ணவி விஜயராகவன்.