• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி- பாகம் 6

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal
ரகசிய கொலையாளி

பாகம் -6


அப்படியே கால் வந்த நம்பர் எல்லாத்தோட லொகேஷனும் நோட் பண்ணி வையுங்க.....

ஓகே சார்.... என்று சொல்லி விட்டு காவேரியின் முன்னால் கணவன் செல்வத்தின் நம்பரை பெயருடன் அனுப்பினான் நவீன்.

யமுனாவிற்கு கால் செய்தான் மணிகண்டன்.

ஹலோ.....

நான் தான் மேடம் எஸ் ஐ மணிகண்டன்.....

நம்பர் ஸேவ் பண்ணிட்டேன்.....சொல்லுங்க சார்....

உங்க ஹஸ்பண்ட் பெயர் அப்புறம் அவர் நம்பரை கொஞ்சம் எனக்கு மெஸேஜ் பண்ணுங்க.....

ஓகே சார்.... ஆனா அவர் பெங்களூர்ல இருந்து இன்னும் வரல..... இன்னும் லேண்ட் ஆகல..... ஃபிளைட்ல வந்திக்கிட்டு இருக்காரு...... மொபைல் ரீச் ஆகல..... நான் ஆல்ரெடி கால் பண்ணிட்டேன்..... என்றாள் யமுனா.

இட்ஸ் ஓகே..... நோ இஷ்யூஸ்..... நீங்க நம்பர் அனுப்புங்க.....நான் பார்த்துக்கொள்கிறேன்.......என்றான் மணிகண்டன்.

ஓகே சார்.... என்று சொல்லி அவன் நம்பரை அனுப்பினாள் யமுனா.

அந்த நம்பரை அப்படியே நவீனுக்கு அனுப்பி அந்த விக்டிம் கால் லிஸ்ட்ல இந்த நம்பர் இருக்கா.... ரீசென்ட் கால்ஸ்ல இருக்கா..... அப்படி இருந்தா டவர் லொகேஷன்.... கால் டியூரேஷன்.... எல்லாம் கலெக்ட் பண்ணி வையுங்க.... என்று வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினான் மணிகண்டன்.

ஓகே சார்..... என்று ரிப்ளை செய்தான் நவீன்.

சார்..... செயின் ஸ்நாட்சிங் கேஸ்ல அவங்க எதாவது சொன்னாங்களா?..... ஐ மீன் நம்ம செயின் ஸாநாட்சர்ஸ் ஃபோட்டாஸ் காட்டினா ஐடென்டிஃபை பண்ணுவாங்களா?..... என்றான் இளங்கோ.

அமைதியாக இருந்தான் மணிகண்டன்.

பிறகு ராஜேஷிடம்.....

நீங்க என்ன நினைக்கறீங்க ராஜேஷ்..... என்றான் மணிகண்டன்.

எதை பத்தி சார்......

இளங்கோ கேட்டதை பற்றி.....

இல்ல சார்..... அவங்க தான் ஃபேஸை பார்க்கலீயே.....

சரி..... மீனா கேட்ட கொஷின்ஸ் எல்லாம் கரெக்டா?

ஆமாம் சார்..... நானே சொல்லனும் ன்னு நினைச்சேன்...... மீனா நல்லா என்கொயரி பண்ணினா..... நிறைய கேள்விகள் கேட்டா....
எல்லாமே கேஸூக்கு கரெக்ட்டாகவும் கேஸூக்கு தேவையானதாகவும் இருந்துச்சு..... உண்மையிலேயே மீனா புத்திசாலி தான்..... நானா இருந்தா கூட இத்தனை கேள்விகள் கேட்டிருப்பேனா ன்னு தெரியல..... என்றான் ராஜேஷ்.

அப்படியா ராஜேஷ்..... பரவாயில்லையே அந்த அளவுக்கு புத்திசாலியா ஆயிட்டாளா மீனா..... என்றான் இளங்கோ.

இளங்கோ.... மைண்ட் யுவர் வேர்டுஸ்.....

சாரி சார்..... ஃபிரெண்டு தான அதனால வாடி போடி ன்னு பேசிட்டேன்...... என்றான் இளங்கோ.

எதுவுமே உங்களுக்கு தப்பா தெரியலையா ராஜேஷ்.....

எது சார்......

மீனா கேட்ட கேள்விகள்ல?

இல்லையே சார்......

விக்டிம் கிரைம் நடந்தது ஈவினிங் மணி 6.45 ன்னு சொன்னாங்க இல்ல?

ஆமாம் சார்.....

அந்த அக்யூஸ்டு கிட்ட வரும்போது அவன் கண்ணாடி போட்டிருந்தது தெரிந்தது ன்னு சொன்னாங்க இல்ல?

ஆமாம் சார்......

அப்போ மீனா என்ன கேட்டாங்க?

யோசித்து விட்டு கூலிங் கிளாஸா இல்ல பவர் கிளாஸ் மாதிரியா ன்னு கேட்டா...ங்க....

இப்போ தெரியுதா.... அவங்க என்ன தப்பா கேட்டிருக்காங்க ன்னு.....

இருவரும் திருதிருவென விழித்தனர்.

நைட்ல யாராவது கூலர்ஸ் போட்டு பைக் ஓட்டுவாங்களா?..... என்றான் மணிகண்டன்.

அட..... ஆமாம் இல்ல...... என்றனர் ராஜேஷ் மற்றும் இளங்கோ.

உங்களுக்கும் அது தோணலையா...... என்றான் மணிகண்டன்.

சாரி சார்..... என்றனர் இருவரும்.

உங்களை எல்லா கேஸூக்கும் கூட்டிக்கிட்டு போறேன்..... எல்லா கேள்விகள் கேட்கும் போது உங்களையும் தான் கூட வச்சிக்கிறேன்..... அப்படியும் எந்த மாதிரியான கேள்வி கேட்கலாம்.... எது கேட்கக்கூடாது ன்னு இன்னும் உங்களுக்கு தெரியல இல்ல?.....

அமைதியாக இருந்தனர் இருவரும்.

இப்போ அங்கே போன பிறகு போஸ்ட் மார்டம் பண்ண டாக்டர் கிட்ட நீங்க தான் டவுட்ஸ் எல்லாம் கேட்கப் போறீங்க.....

சார் நாங்களா?..... என்றான் ராஜேஷ்.

ஆமாம்....

முதல்ல ராபரி.... மாதிரியான சின்ன கேஸூக்கு என்கொயரி பண்ணி கத்துக்கறோம் சார்.... ஆனா மர்டர் அதுவும் இந்த மாதிரியான கொடூரமான மர்டர் ன்னா..... எங்களுக்கு பயமா இருக்கு சார்..... என்றான் இளங்கோ.

நான் கூடவே தான இருக்கேன்..... நீங்க கேளுங்க..... தப்பா இருந்தா நான் உங்களுக்கு சொல்றேன்..... என்றான் மணிகண்டன்.

நேத்து மாதிரி நவீனையே கூட்டி வந்திருக்கலாம்.... என்று நினைத்து கொண்டான் இளங்கோ.

ஒருவழியாக ஹாஸ்பிட்டலை அடைந்தனர்.

இளங்கோ மற்றும் ராஜேஷூக்கு சற்று பதட்டமாகவே இருந்தது. மணிகண்டன் முன்னே நடந்து சென்றான். அப்போது ராஜேஷ் இளங்கோவிடம்.....

டேய்..... ரொம்ப அவசியமா அந்த செயின் ஸ்நாட்சிங் கேஸ் பத்தி பேசனுமா உனக்கு?
தேவையில்லாம இப்போ வம்புல மாட்டிக்கிட்டோம்.

நீ தான் மீனா சூப்பரா கேள்வி கேட்டான்னு சொன்ன..... அதனால தான்...... தப்பா கேள்வி கேட்ட அவளையே சூப்பர் ன்னு சோல்றீயே நீ எப்படி கேள்வி கேட்குற பார்க்கலாம் ன்னு இப்போ சொல்லிட்டாரு.....

ஆனாலும் ஆரம்பிச்சது நீ தான.

இல்ல இல்ல உன்னால தான்....
என்று இருவரும் மெதுவாக சண்டைப் போட்டுக் கொண்டே நடந்து வந்தனர்.

திரும்பி பார்த்தான் மணிகண்டன்.

இருவரும் தங்கள் கேப்பை போட்டுக் கொண்டு வேகமாக ஓடிச் சென்று மணிகண்டன் அருகில் நின்றனர்.

சார்.... என்று சொல்லி சல்யூட் அடித்தார்கள்.

பத்து நிமிடத்திற்கு பிறகு போஸ்ட் மார்டம் பண்ணிய டாக்டர் வந்தார்.

ஹலோ டாக்டர்.... நான் எஸ்.ஐ. மணிகண்டன்..... என்று சொல்லி கை குலுக்கினான் மணிகண்டன்.

ஹலோ சார்..... நான் டாக்டர் குணசேகரன்..... என்றார் டாக்டர்.

நான் தான் இந்த கேஸை ஹேண்டில் பண்றேன்..... ரிப்போர்ட்டை பிரீஃபா சொல்ல முடியுமா?

ஓகே சார்.... என்றார் டாக்டர் குணசேகரன்.

திரும்பி ராஜேஷ் மற்றும் இளங்கோவை பார்த்தான் மணிகண்டன்.

எஸ் ஸார்.... என்று சொல்லி அவர்களும் கவனித்தனர்.

விக்டிமை தலையில் அடித்து தாக்கி இருக்கான்..... விக்டிம் இறந்தபிறகு தலையை கட் பண்ணி இருக்கான்.....

அக்கியூஸ்டு கன்ஃபார்மா ஆணா தான் இருக்கும் ன்னு நினைக்கறீங்களா?

எஸ் ஸார்..... தலையை கட் பண்றது அவ்வளவு சுலபமானது இல்ல..... அவ்வளவு ஃபோர்ஸ் அன்ட் ஸ்ட்ரென்த் இருக்கனும் ன்னா..... ஒண்ணு ரொம்ப ஸ்ட்ராங்கான ஜிம் இல்ல ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷலிஸ்ட் அந்த மாதிரி.... அது கூட வெயிட் லிஃப்ட்டிங் அந்த மாதிரியான பெண்ணாக இருக்கலாம்..... இல்ல நல்ல திடகாத்திரமான ஆணாக இருக்கலாம்.

ஓ ஓகே..... புரியுது..... நீங்க சொல்றதை வச்சு பார்த்தா 90% ஆண் தான் அக்கியூஸ்டு..... கரெக்டா.....

எஸ்...... ஐ திங்க்..... அக்கியூஸ்டு 25 - 45 வயதிற்குள்ள ஆளாக தான் இருக்க முடியும்.... ஏன்னா அவங்களுக்கு தான் அந்த அளவுக்கு வலிமை இருக்கும்.

ஓகே சார்...... ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட்.....

இன்னொரு முக்கியமான விஷயம்.....

சொல்லுங்க சார்.....

விக்டிம் பிரெக்னென்டா இருந்திருக்காங்க....

வாட்..... என்று மூவரும் ஷாக் ஆனார்கள்.

எஸ்..... டி.என்.ஏ சேம்பில்ஸ் கலெக்ட் பண்ணி லேப்பிற்கு அனுப்பி இருக்கேன்.....

எவ்வளவு மன்த்ஸ்?..... ஐ மீன் ஃபீடஸ்?

த்ரீ டூ ஃபோர் மன்த்ஸ் ஃபீடஸ்.....

ஓகே சார்..... தேங்க்ஸ்..... ரிப்போர்ட்.....

என்னோட அசிஸ்டன்ட் கிட்ட வாங்கிக்கோங்க..... என்றார் குணசேகரன்.

மணிகண்டன் திரும்பி ராஜேஷ் மற்றும் இளங்கோவை பார்த்தான்.

அவர்கள் இருவரும் சென்றனர்.

அவர்கள் சென்றதும்..... டாக்டர் மணிகண்டனிடம்.

சார்..... ஏதோ வென்ஜன்ஸ்ல கொலை பண்ண மாதிரி தெரியுது.....

எஸ் டாக்டர்..... நீங்க சொல்லும் போது எனக்கும் அப்படித்தான் தோணுச்சு..... என்றான் மணிகண்டன்.

ஓகே சார்..... இந்த கேஸ் பத்தி வேற எதாவது தெரியனும் ன்னா எனக்கு கால் பண்ணுங்க.... என்று சொல்லி தன் கார்டை கொடுத்தார் டாக்டர் குணசேகரன்.

அப்போது வந்த ராஜேஷ் டாக்டரிடம்.

டாக்டர்..... இன்னுமா இந்த விசிட்டிங் கார்டு எல்லாம் வச்சிக்கிட்டு இருக்கீங்க.... ஃபோன்ல நம்பர் ஸ்டோர் பண்ணிக்கிட்டா போச்சு....... என்றான்.

மணிகண்டன் அவனை பார்த்து முறைத்தான்.

சாரி சார்..... என்றான் ராஜேஷ்.

சார்.... எந்த காலமாக இருந்தாலும் விசிட்டிங் கார்டு யூஸ் ஆகும்.... எல்லா நேரத்திலும் ஃபோன் கை கொடுக்காது..... உங்களுக்கோ இல்ல உங்க வீட்ல யாருக்காவது தீடீரென உடம்பு சரியில்லை ன்னா..... அந்த நேரத்தில ஃபோன் ஆஃப் ஆயிடிச்சுன்னா.... இல்ல ஹேங் ஆயிடிச்சுன்னா..... என்ன பண்ணுவீங்க..... கடையை தேடி ஓடி.... சரி செஞ்சு அப்புறம் டாக்டர் நம்பரை பார்த்து கால் பண்ணுவீங்களா?......என்றார் டாக்டர் குணசேகரன் ராஜேஷிடம்.

சாரி டாக்டர்..... என்றான் ராஜேஷ்.

எப்பவுமே ஃபோனையே நம்பிக்கிட்டு இருக்கக்கூடாது...... என்றார் டாக்டர்.

புரியுது டாக்.... சாரி.....

#############

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.