• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி, பாகம் 7

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal
ரகசிய கொலையாளி

பாகம் -7


சாரி எல்லாம் வேண்டாம் பா..... புரிஞ்சிக்கோ போதும்..... இந்த காலத்து பசங்களுக்கு எல்லாமே ஃபோன் தான்.... என்று பேசிக் கொண்டே நடந்து சென்றார் டாக்டர்.

இளங்கோ ராஜேஷிடம்.

தேவையாடா இது உனக்கு..... என்றான்.

அசடு வழிய சிரித்தான் ராஜேஷ்.

மணிகண்டன் சிரித்தான்.

ரிப்போர்ட்டை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள் மணிகண்டன் ராஜேஷ் மற்றும் இளங்கோ.

காரில் செல்லும் போது.....

என்ன சார்..... விக்டிம் பெரெக்னெண்டா இருக்காங்க ன்னு சொன்னாரு டாக்டர்..... என்றான் ராஜேஷ்.

ஹூம்..... அதான் நானும் யோசித்து கொண்டு இருக்கேன்..... என்றான் மணிகண்டன்.

என்னாச்சு ராஜேஷ்.... என்றான் இளங்கோ.

அந்த விக்டிம் ஒரு டைவர்ஸி.... வேலைக்கார லேடி சொன்னதை வச்சு பார்த்தா.... குழந்தை இல்லாததால தான் டைவர்ஸ் ஆயிடிச்சுன்னு சொன்னாங்க..... என்றான் ராஜேஷ்.

ஓ..... ஓகே .....
சார்..... அப்போ பிரைம் சஸ்பெக்ட் அந்த குழந்தையோட அப்பாவாக இருக்கலாம் இல்ல?.... என்றான் இளங்கோ.

சஸ்பெக்ட் ஓகே.... பிரைம் சஸ்பெக்ட் ன்னு கன்ஃபார்மா சொல்ல முடியாது இளங்கோ.... என்றான் மணிகண்டன்.

ஏன் சார்.....

அந்த விக்டிம் யாரையாவது லவ் பண்ணி இருக்கலாம்.... இல்ல ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்கலாம்..... இல்ல அவங்க ஆர்டிஃபீஷியலா
இன்செமினேஷன் ( செயற்கை கருவூட்டல்) பண்ணி இருக்கலாம்..... இது எதுவுமே தெரியாம நீங்க எப்படி பிரைம் சஸ்பெக்ட் ன்னு கன்ஃபார்மா சொல்லுவீங்க..... என்றான் மணிகண்டன்.

ஓ.... இதுல இவ்வளவு இருக்கா.... என்று நினைத்து கொண்டான் இளங்கோ.

சாரி சார்.... என்றான் இளங்கோ.

சாரி எல்லாம் சொல்ல வேண்டாம் இளங்கோ..... எல்லா பக்கத்தில் இருந்தும் திங்க் பண்ணனும்..... என்றான் மணிகண்டன்.

ஓகே சார்..... என்றான் இளங்கோ.

ஸ்டேஷனுக்கு சென்ற பிறகு.... அந்த ரிப்போர்டை ரவியிடம் கொடுத்து அனைத்தையும் ஃபைல் பண்ணி எடுத்துக் கொண்டு வாங்க.... என்றான் மணிகண்டன்.

ஓகே சார்.... என்று சொல்லி விட்டு நவீனை அழைத்து கொண்டு கேபினுக்குள் சென்றான் ரவி.

சொல்லுங்க.... யார் கிட்டே எல்லாம் பேசனீங்க.....

சார்.... முதல்ல அந்த விக்டிமோட ஹஸ்பண்ட் கிட்ட பேசினோம்.

கான்வர்சேஷன் ரெக்கார்டு பண்ணீங்களா?

எஸ் ஸார்.... என்று சொல்லி போட்டு காட்டினான் ரவி.

ஹலோ.... நாங்க ஈ1 போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசறோம்.

சொல்லுங்க சார்...

உங்க பேரு செல்வம் தான?

ஆமாம் சார்.....

உங்க ஒயிஃப்.....

சார்.... டைவர்ஸ் ஆயிடிச்சு.....

ஓகே உங்க எக்ஸ் ஒயிஃப் காவேரி இறந்திட்டாங்க......

வாட்..... என்று அதிர்ச்சியாக ஆனான் செல்வம். பிறகு தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு
எப்படி சார்..... என்னாச்சு?

யாரோ அவங்களை கொலை பண்ணிட்டாங்க.....

என்ன சார் சொல்றீங்க..... யாரு.....

இன்வஸ்டிகேஷன் பண்ணிக்கிட்டு இருக்கோம் சார்.....

சார்..... அவ உண்மையிலேயே ரொம்ப நல்லவ சார்.....
என்று சொல்லி கலக்கமாக பேசினான் செல்வம்.

சார்..... எங்க எஸ்.ஐ. உங்க கிட்ட நேரடியாக என்கொயரி பண்ணனும் ன்னு சொன்னாரு..... அப்போ நீங்க வரணும்.....

கண்டிப்பா சார்.....
சார்.....

சொல்லுங்க சார்.....

என் ஒயிஃபை எங்க பார்க்கலாம்..... என்றான் சற்று கலக்கமாக.

போஸ்ட் மார்டம் நடக்குது சார்..... பாடியை எங்க அனுப்புவாங்க ன்னு எனக்கு தெரியாது..... நீங்க எஸ்ஐ சாரை தான் கேட்கனும்.....

சார்..... அவரோட நம்பர் கொஞ்சம் தரீங்களா?

இப்போ சார் மீட்டிங்ல இருக்காரு கால் பண்ணாதீங்க..... நான் உங்களுக்கு மெஸேஜ் பண்றேன்.....

ஓகே சார்..... தேங்க்ஸ்.....

ஓகே சார்.....

சார்..... ஒரு நிமிஷம்.....

என்ன சார்.....

எந்த ஹாஸ்பிட்டல்ல போஸ்ட் மார்டம் நடக்குது ன்னு சொல்றீங்களா?

இல்ல சார்..... தெரியாது..... தெரிஞ்சாலும் எஸ் ஐ சார் பர்மிஷன் இல்லாம சொல்லக் கூடாது.

ஓ..... ஓகே சார்.....
சார்.....

இப்போது சற்று எரிச்சலாகவே பேசினான் ரவி.

என்ன்ன.... சார்.... என்று அழுத்தமாக.

சாரி சார்..... எப்படி கொலை பண்ணி இருக்காங்க ன்னு மட்டும் சொல்லுங்க..... பிளீஸ்.....

வேண்டாம் சார்..... தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவீங்க..... நீங்க நேர்ல வாங்க சொல்றோம்....

பிளீஸ் சார்.....

பெருமூச்சு விட்டபடி..... கழுத்தை அறுத்து..... என்று மட்டும் சொன்னான் ரவி.

அழுகையுடன் ஃபோனை வைத்து விட்டான் செல்வம்.

என்ன ரவி சார் நீங்க..... என்றான் மணிகண்டன்.

இல்ல சார்..... அவன் ரொம்ப கட்டாயப் படுத்தி கேட்டதால தான் சொன்னேன்.....

ஓகே விடுங்க.... ரெக்கார்டு ஆகி இருக்கே..... விக்டிம் டீடெயில்ஸ் டிஸ்கிளோஸ் பண்ணக் கூடாது ன்னு உங்களுக்கு தெரியும் இல்ல.

நான் வேறு எதுவும் சொல்லல சார்..... காஸ் ஆஃப் டெத் மட்டும் தான் சொன்னேன்..... என்றான் ரவி.

அப்படியா?..... இதை படிங்க..... என்று சொல்லி ரவியிடம் அந்த ரிப்போர்டை காட்டினான் மணிகண்டன்.

அதை படித்து பார்த்து விட்டு..... தலையில் அடித்ததால் தான் உயிர் பிரிந்திருக்கிறது..... என்பதை தெரிந்து கொண்டான் ரவி.

சாரி சார்...... என்றான் ரவி.

விடுங்க..... இதுக்கு மேல என்ன பண்ண முடியும்.....

சரி..... அடுத்தது யாருக்கு எல்லாம் கால் பண்ணீங்க..... என்றான் மணிகண்டன்.

விக்டிம் கூட வேலை செய்யறவங்க.... கார்மேகம் விக்டிம் மேல் அதிகாரி.
கலை, ரஸியா - உடன் வேலை செய்பவர்கள்.
தர்மா , மோகன் - கீழ் வேலை செய்பவர்கள்.

நவீன் சிலரிடம் கேள்வி கேட்டு இருக்கிறான்....

ரவி சிலரிடம் கேள்வி கேட்டு இருக்கிறான்....

கலை மற்றும் ரஸியாவிடம் மீனா கேள்வி கேட்டு இருக்கிறாள்.

அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக போட்டு காட்டினான் நவீன்.

அனைவருமே விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஆனால் அவர்கள் யாரிடமும் காவேரி எவ்வாறு இறந்தாள் என்று மூவருமே கூறவில்லை.

ஓகே..... நாளைக்கு விக்டிம் ஆஃபீஸூக்கு நேராக போய் விசாரிக்கலாம்..... என்றான் மணிகண்டன்.

அப்போது மணிகண்டனின் ஃபோன் அடித்தது.

ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே சென்று பேசினான்.

சாராடோ ஆள் போல.... என்றான் ராஜேஷ்.

ஆனாலும் சார் எல்லார் கிட்டேயும் குறை கண்டுப் பிடிக்கிறார்..... என்றான் இளங்கோ.

குறை கண்டு பிடிக்காத படி நீ நடந்துக்கனும் பா..... என்றார் பன்னீர் செல்வம்.

சார்...... நாங்க இப்போ தான கத்துக்கறோம்.... என்றான் ராஜேஷ்.

இரண்டு வருஷமா வேலை செய்றீங்க..... இன்னும் தெரியல ன்னு சொன்னா எப்படி.....

சரி எங்களை விடுங்க ரவி சார்..... என்றான் இளங்கோ.

உங்களை விட ஒரு வருஷம் முன்னாடி சேர்ந்தான் அவ்வளவு தான்.....

உங்களுக்கு எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் சார்..... என்றான் நவீன்.

15 வருஷம்.....

ஓ.... சூப்பர் சார்.....

சார் உங்களுக்கு இவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கே.... நீங்க ஏன் எஸ் ஐ ஆகல.....

அதுக்கு டிகிரி பிஜி முடிச்சிருக்கனும்.... அதுவும் இல்லாம அதுக்கு தனி ஃபிட்னஸ் டெஸ்ட் இருக்கு..... ஏஜ் லிமிட் இருக்கு.... அதுக்குள்ள நம்ம பாஸ் பண்ணிட்டா பிரமோஷன் கிடைக்கும்.... அதெல்லாம் என்னால முடியல.... அதான் சீனியர் பிசி லெவலோட நிறுத்திக்கிட்டேன்.

ஓ.... ஓகே சார்.... சாரி சார்....

எதுக்கு?

இல்ல .... நீங்க ஏன் இன்னும் பிசி யாகவே இருக்கீங்க ன்னு கேட்டதுல நீங்க ஹர்ட் ஆகி இருப்பீங்களோ ன்னு.....

அப்படி எல்லாம் இல்லை பா.....
சரி சரி..... இந்த கேஸிலே இருக்காம மத்த பென்டிங் கேஸையும் கவனியுங்க.....

ஓகே சார்..... என்று சொல்லி விட்டு மற்ற ஃபைலை எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது மீனா இளங்கோவிடம் வந்து.

டேய்.....

என்னது டேய் யா?

அதான் நீயும் கேப் போடல.... நானும் கேப் போடல இல்ல.... அப்புறம் என்ன?

சரி சரி சொல்லு.....

போய் டின்னர் வாங்கிட்டு வரீயா.....

எதுக்கு....

பசிக்குது டா.....

பொய் சொல்லாத டி.....

டி யா.....

நீ மட்டும் டா சொல்லுவ.... நான் டி சொல்லக்கூடாதா....

இரு இரு மணி அண்ணா உள்ள வரட்டும்.... அப்புறம் இருக்கு உனக்கு....

அம்மா தாயே.... என்ன வேணும் சொல்லு.... காசைக் கொடு......

இந்தா 100 ரூபாய்.....

இதுக்கு என்ன வரும்?

இட்லி சட்னி சாம்பார் வரும்.....

இதை நீ வீட்ல போய் சாப்பிட வேண்டியது தானே?
ஆமாம்.... இந்த நேரம் உன்னோட ஹஸ்பண்ட் வந்து உன்னை பிக்கப் பண்ணிட்டு போயிருப்பாரே..... ஏன் என்னாச்சு இன்னும் வரல.....

நான் தான் குமாரை லேட்டா வரச் சொன்னேன்..... என்றாள் மீனா.

எதுக்கு..... என்றான் இளங்கோ.

மணி அண்ணா கிட்ட மீதி கதை கேட்க.... என்றாள் மீனா.

அடிப் பாவி.... அதுக்கு தான் பசிக்குது ன்னு பொய் சொல்லி என்னை வாங்கி வரச் சொல்றீயா?..... என்றான் இளங்கோ.

############

தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன் .