ரகசிய கொலையாளி.....
பாகம் -8
உடனே அனைவரும் ஆளுக்கு ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டி அவர்களுக்கும் டின்னர் வாங்கி வரச் சொன்னார்கள்.
பெருமூச்சு விட்டபடி அனைவரிடமும் 100 ரூபாய் நோட்டுகளை வாங்கி கொண்டு....
எல்லாருக்கும் இட்லி தானே?..... என்றான் இளங்கோ.
ஆமாம்.... என்றனர் அனைவரும்.
வெளியே வந்து மணிகண்டனின் அருகில் நின்றான் இளங்கோ.
ஒரு நிமிஷம்.... என்று ஃபோனில் சொல்லிவிட்டு...
என்ன இளங்கோ.... என்றான் மணிகண்டன்.
சார்.... எல்லாரும் இட்லி வாங்கி வரச் சொன்னாங்க.... உங்களுக்கு என்ன வேண்டும்?
எனக்கு எதுவும் வேண்டாம்..... அம்மா வீட்ல டிபன் வச்சிருக்காங்க.... இப்போ தான் ஃபோன் பண்ணாங்க.... நீங்க எல்லாம் வாங்கி சாப்பிடுங்க..... நான் இந்த ஃபோன் பேசிவிட்டு கிளம்பறேன்..... என்றான் மணிகண்டன்.
என்னது கிளம்பறாரா.... என்று நினைத்து கொண்டான் இளங்கோ.
உடனே ஸ்டேஷனிற்கு உள்ளே சென்றான் இளங்கோ.
சார் டின்னருக்கு வீட்டுக்கு போறாராம்..... என்றான் அனைவரிடமும்.
என்ன.... என்றனர் அனைவரும்.
இளங்கோ.... ஒரு ஐடியா.....
என்ன?
சாருக்கு சர்ப்ரைஸா ஒரு பர்த் டே கேக் ஆர்டர் பண்ணலாம்...... அது வர வரைக்கும் சார் வெயிட் பண்ணி தான ஆகனும்...
அப்போது சார் லவ் ஸ்டோரியை கேட்கலாம்.....
கில்லாடி மீனா நீ.... என்றான் ராஜேஷ்.
சரி மீனா.... நீ சொன்னது போல இந்த எல்லா காசையும் வைத்து கேக் ஆர்டர் பண்ணிடறேன்..... ஆனா சார் கிட்ட கேக் வர வரைக்கும் வெயிட் பண்ண சொல்ல வேண்டியது நீ தான்.
என்னது நானா?
ஐடியா உன்னோடது தான.... அப்போ நீ தான் சொல்லனும்.....
ஐடியா தான் நான் சொன்னேன் இல்ல....
சார் கிட்ட சொல்ற வேலையை நீங்க யாராவது பண்ணுங்க.....
நோ நோ நோ.... எங்க எல்லாரையும் விட நீ தான் சாரோட லவ் ஸ்டோரியை கேட்க ஆவலா இருக்க..... ஸோ நீ தான் சொல்லனும்..... என்றான் ரவி.
ரவி அண்ணா..... நீங்களும் இவனுங்களுக்கு சப்போர்டா..... என்றாள் மீனா.
நீ சார் கிட்ட பர்மிஷன் வாங்கி விடு.... அப்புறம் ஆர்டர் பண்றேன்.
சப்போஸ் ஆர்டர் போட்ட பிறகு .... வேண்டாம் ன்னு சொல்லி கிளம்பிட்டாரு ன்னா.... கேக் வேஸ்ட் ஆகிடும்..... என்றான் இளங்கோ.
மீனா.... பீ ரெடி.... சார் வராரு.... என்றான் ராஜேஷ்.
அப்போது உள்ளே வந்த மணிகண்டன்.
என்ன எல்லாரும் அமைதியாக இருக்கீங்க.....
அண்ணா..... என்றாள் மீனா தயக்கமாக தலையில் கேப் இல்லாததை பார்த்து விட்டு.
சொல்லுமா.....
நாங்க எல்லாம் சேர்ந்து உங்களுக்கு பர்த்டே க்கு கேக் ஆர்டர் பண்ணி இருக்கோம்..... அரை மணி நேரம் வெயிட் பண்ணி கேக் பண்ணிட்டு சாப்பிட்டு விட்டு போங்களேன்..... பிளீஸ்...
எதுக்கு இதெல்லாம் புதுசா.... போன வருஷம் அதுக்கு முன்னாடி வருஷம் எல்லாம் இப்படி பண்ணல.... இப்போ மட்டும் ஏன்?
இல்ல அண்ணா.... போன வருஷம் நீங்க இந்த ஸ்டேஷன் ஹெட் இல்ல.... அந்த எஸ் ஐ ஒத்துக்க மாட்டாரு.... அதனால பண்ணல.... இப்போ தான் நீங்க பிரமோஷன் வாங்கி நம்ம ஸ்டேஷன் ஹெட் ஆகிட்டீங்களே.... அதுக்கு தான்.....
நல்லா பேசுறா பாரு இந்த மீனா.... என்றான் ராஜேஷ் இளங்கோவிடம்.
ஆமாம் சார்.... உங்க பேரை சொல்லி நாங்களும் கேக் சாப்பிடுவோம் இல்ல?.... என்றான் ராஜேஷ்.
பசங்க ஆசைப் படறாங்க இல்ல தம்பி..... ஓகே சொல்லு.... என்றார் பன்னீர் செல்வம்.
எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணிட்டீங்க..... ஓகே.... நான் அம்மா கிட்ட கால் பண்ணி லேட்டா வருவேன் ன்னு சொல்லிடறேன்..... என்றான் மணிகண்டன்.
ஓகே அண்ணா...
தேங்க்ஸ்.... என்றாள் மீனா.
இளங்கோவிடம் கையை உயர்த்தி சைகை செய்ய அவன் கேக் ஆர்டர் செய்தான்.
மணிகண்டன் தன் அம்மாவிற்கு கால் செய்தான்.
அம்மா..... ஸ்டேஷன்ல எல்லாரும் எனக்கு பர்த் டே கேக் ஆர்டர் பண்ணி இருக்காங்க.... அது வர அரை மணி நேரம் ஆகுமாம்..... கேக் கட் பண்ணி விட்டு சாப்பிட்டு விட்டு வர ஒரு மணி நேரம் ஆயிடும்.
டின்னரும் சாப்பிட்டு விட்டு வரப் போறீயா டா கண்ணா?
இல்ல மா...
டின்னர் வீட்டுக்கு வந்து தான்.... உங்க கூட தான் சாப்பிடனும் ன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்.
ஓ.... சரிப்பா.... நான் மாத்திரை போட்டுகொண்டு இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு வெயிட் பண்றேன்...
நீ வந்த பிறகு இரண்டு இட்லி சாப்பிட்டுக்கிறேன்.
அம்மா.... நீங்க ஷூகர் பேஷன்ட்.....உங்களுக்கு பசிக்கும் ன்னு எனக்கு தெரியும்.... நீங்க சாப்பிடுங்க.... எனக்கு உங்க கையால சாப்பாடு மட்டும் போடுங்க போதும்..... நீங்க தூங்குற டைமுக்குள்ள வந்திடறேன்.....
சரிப்பா.... வீட்டுக்கு வந்திட்டு ஃபோன் பண்ணு...
காலிங் பெல் சப்தம் ரூம்ல கேட்க மாட்டேங்குது.... என்றார் மணிகண்டனின் அம்மா சிவகாமி.
சரிம்மா.... நீங்க போய் மாத்திரை போட்டுகொண்டு சாப்பிடுங்க.... இப்போ ரெண்டு அப்புறம் ரெண்டு எல்லாம் வேண்டாம்.... ஒழுங்கா வயிறு ஃபுல்லா சாப்பிடுங்க.....
சரிடா கண்ணா.... நான் சாப்பிடறேன்..... நீ பார்த்து ஜாக்கிரதையா வா.... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் சிவகாமி.
பேசிவிட்டு உள்ளே வந்தான் மணிகண்டன்.
சார்.... அந்த காவேரி விக்டிமோட எக்ஸ் ஹஸ்பண்ட் ஃபோன் பண்ணாறா?.... என்றான் ரவி.
இல்ல ரவி.....
அந்த ஆள் அப்படி கெஞ்சினான்.... உங்க நம்பர் வேணும்ன்னு..... இப்போ கால் பண்ணலையா?.....
தெரியல..... இதுவரைக்கும் கால் வரல.....
அண்ணா..... என்றாள் மீனா.
சொல்லுமா.....
உங்க லவ் அப்புறம் என்னாச்சு?
ஓ..... அதுக்கு தான் இந்த கேக் ஆர்டரா?
சே சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை அண்ணா..... நாங்க ஏற்கனவே பிளான் பண்ணினது தான்.
ஆமாம் சார்..... என்றான் இளங்கோ.
சொல்லுங்க சார்..... என்றான் ராஜேஷ்.
சரி..... எது வரைக்கும் சொன்னேன்?
உங்க அம்மா உங்க மாமி கிட்ட பேசினது வரைக்கும்.
ஓ..... ஓகே.....
அப்புறம் என் அம்மா மறுபடியும் என் மாமா கிட்ட கேட்டாங்க.
அண்ணா..... பணம் இருந்தா தான் மரியாதை கிடைக்குமா?.... என்றார் என் அம்மா.
பணம் இருந்தா கூட உன் பிள்ளையை என் பொண்ணுக்கு கட்ட மாட்டேன்..... என்றார் மாமி.
ஏய்.... வாடா.... என்று சொல்லி என் இழுத்துக் கொண்டு ரூமிற்கு சென்று பைகளை எடுத்துக் கொண்டு அந்த நேரத்தில் கிளம்ப சொன்னார் என் அம்மா.
என் மாமா என் அம்மாவிடம் வந்து.
வேண்டாம் சிவகாமி..... இந்த நேரத்தில் போகாத.....நல்லது இல்ல.... மச்சானுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு.....
உனக்கு வருத்தமில்ல.... இல்ல அண்ணா?
கஷ்டமா தான் இருக்கு மா..... ஆனா அவளை மீறி என்னால எதுவுமே பேச முடியாது. அவளை பத்தி உனக்கு தெரியும் இல்ல.... எவ்வளவு பிரச்சனை பண்ணுவா ன்னு..... எனக்கு என் பொண்ணு கூட இருக்கனும்.... அவ சண்டைப் போட்டுக் கொண்டு என் பொண்ணை என் கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிக்கிட்டு போயிட்டா.... நான் செத்திடுவேன்.....
அண்ணா.... எதுக்கு நல்ல நாள் அன்னைக்கு இப்படி எல்லாம் பேசறீங்க..... நீங்க நல்லா இருங்க அது போதும்.... நாங்க கிளம்பறோம்.... என்றார் என் அம்மா கண்கள் கலங்க.
அப்போது அங்கே வந்த என் மாமி.
என்ன தங்கச்சியை சமாதானம் செஞ்சு முடிச்சாச்சா.....
உள்ள வாங்க.....வேலை இருக்கு.....
சிவகாமி கிளம்புறா.... என்றார் என் மாமா.
எதுக்கு.....
விசேஷம் நடக்கும் போது நாத்தனாரை துரத்திட்டா ன்னு..... எனக்கு பேர் வாங்கி தரத்துக்கா..... நாளைக்கு போக சொல்லுங்க.... இப்போ வாங்க நம்ம பொண்ணு கூட சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாம்..... என்றார் மாமி.
சினிமாவுல தான் இந்த மாதிரி வில்லியை பார்த்திருக்கேன் சார்..... என்றான் இளங்கோ.
அப்புறம் நீங்க ரெண்டு பேரும் தங்கிட்டீங்களா அண்ணா..... என்றாள் மீனா.
ஆமாம்.... அப்புறமும் கிளம்பி போனா அதனால மாமாவுக்கு தான் பிரச்சனைன்னு சொல்லி நாளைக்கு காலைல போயிக்கலாம் ன்னு அம்மா சொன்னாங்க.
கண்ணா..... வீட்டுக்கு போன பிறகு அப்பா கிட்ட இங்கு நடந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் பா..... என்று என்னிடம் கண்கள் கலங்க கேட்டார் அம்மா.
சரிம்மா..... என்றேன்.
ஏன் சொல்லக் கூடாது ன்னு கூட நீ கேட்க மாட்டீயா டா கண்ணா..... என்றார் என் அம்மா.
அம்மா..... நீங்க சொன்னீங்கன்னா அதுக்கு முக்கியமான காரணம் இருக்கும்..... அதனால ஏன் எதுக்கு ன்னு நான் கேட்க மாட்டேன்.... என்றேன்.
கண்ணா..... என்று சொல்லி என்னை கட்டிப் பிடித்து கொண்டு அழுதார் என் அம்மா.
###########
தொடரும் .....
அ . வைஷ்ணவி விஜயராகவன் .