கண்
பேசும்
வார்த்தைகள்
புரிவதில்லை
காத்திருந்தால்
பெண்
கனிவதில்லை
ஒரு
முகம்
மறைய
மறு
முகம்
தெரிய
கண்ணாடி
இதயம்
இல்லை
கடல்
கை
மூடிமறைவதில்லை
காற்றில்
இலைகள்
பறந்த
பிறகும்
கிளையின்
தழும்புகள்
அழிவதில்லை
காயம்
நூறு
கண்ட
பிறகும்
உன்னை
உள்
மனம்
மறப்பதில்லை
இந்த பாடல் தான் அவனின் ஹெட்போன் வழியாக சென்று இதயத்தில் அதிர்ந்தது இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் தனக்காகவே எழுதியது போல் இருக்கும் மனம் தான் அமைதி இல்லாமல் தவித்தது
இயந்திரப் பறவை தன் இலக்கை. நோக்கி பயணிக்க தொடங்கியது இயந்திர பறவையின் ஜன்னலோர இருக்கையில் காதில் ஹெட்போனுடன் கண் மூடி அமர்ந்திருந்தான் மருதயாழன் நம் கதையின் நாயகன்
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான் தெளிவான வானத்தையும் மேகத்தையும் ரசிக்காமல் ரசிக்க முடியாமல் கண் மூடி அமர்ந்திருந்தான் சொந்த ஊரை நோக்கி அவன் பயணம் ஆனால் சொந்த ஊருக்கு செல்வதற்கான எந்த சந்தோஷமும் அவன் முகத்தில் தெரியவில்லை அதற்கு மாறாக மேம்பட்ட எரிச்சலும் சோகமும் தான் இருந்தது
கோயம்புத்தூர் விமான நிலையம் தன் லக்கேஜுடன் வேக நடையில் வந்து கொண்டிருந்தான் மருதயாழன் விமான நிலையத்தை விட்டு வெளியேறி கொண்டு இருந்தவனை டேய் மருதா மருதா என்று கூப்பிட்டு கொண்டே பின்னாள் ஓடினான் அரவிந்த் மருதயாழனின் நண்பன்
நின்று திரும்பி பார்த்தான் வேகமாக ஓடி வந்தவன் அவன் எதிரே வந்து மூச்சு வாங்க நின்றான் டேய் அரவிந்த் நீ இங்க என்னப் பண்றே என்றான் சிரித்தபடியே ஹ்ஹ்ம் என் கேர்ல் பிரண்ட் வரா அதான் என்றான் எங்கடா என்றான் அவனுக்கு பின் எட்டிப் பார்த்து டேய் உன்ன பிக் அப் பண்ணத்தான் வந்தேன் வாடா என்று அவன் பேகை வாங்கிக்கொண்டு கார் நோக்கி நடந்தான்
இருவரும் காரில் ஏறி அவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர் கோயம்புத்தூர் அருகே உள்ள வளர்ந்து வரும் கிராமம் தான் அவன் சொந்த ஊர் கார் ஊரை நோக்கி செல்ல நினைவுகளோ பின்னோக்கி நகர்ந்தது
ஏன்டா என்ன யோசனை ஊர விட்டு போய் 5 வருஷமாச்சு திரும்பி ஊருக்கு வர சந்தோசமே இல்லாம இருக்கியேடா எல்லாத்தையும் ஓவர் கம் பண்ணி வாடா என்றான்
மச்சான் அட்வைஸ் பண்றது ஈசி ஆனா அனுபவிக்கரவங்கலுக்கு தான் தெரியும் அந்த வலி நான் இழந்தது என் வாழ்க்கைய என்றான் மருதயாழன்
அப்பா அம்மா பாவம் இல்லையா
இல்ல எல்லாம் அவங்க நாலதான் பிரிவோட வலி அவங்களுக்கும் தெரியட்டும் சரி அது விட்றா நான்தான் வேலைய பாரு நா போய்க்கிறேனு சொன்னன்ல என்றான்
ஏன்டா ரொம்ப வருஷம் கழிச்சு வர அங்கையே இருந்துட்டும் உன்ன அப்படியே விட்ற சொல்றியா முடியாது உங்கூட வந்து ஒரு வாரம் உன்னை டிஸ்டர்ப் பண்ணி கல்யாணம் முடிச்சுட்டு தான் கிளம்புறேன் என்றான் நண்பனுக்காக பத்து நாட்கள் லீவ் போட்டு வந்திருந்தான்
அவர்கள் பயணமும் பேச்சும் நீண்டு கொண்டே இருந்தது
மருதயாழன் மூர்த்தி -பேச்சியம்மாளின் மூத்த வாரிசு இரண்டாவது பவித்ரா மூன்றாவது அகிலன்
மருதயாழன் பிஏ எக்கனாமிக்ஸ் முடித்து விட்டு சிங்கப்பூருக்கு சென்று ஐந்து வருடங்கள் ஆகி விட்டது பவித்ரா வின் திருமணத்திற்காக தான் வந்துள்ளான் பவித்ரா மருதயாழனை விட ஐந்து ஆண்டுகள் சிறியவள் மூன்றாவது அகிலன் இன்ஜினியரிங் படித்து கொண்டு இருக்கிறான் இவனுக்கும் இவன் அண்ணணுக்கும் ஏழு வயது வித்தியாசம்
கார் மருதனின் வீட்டு வாசலில் வந்து நின்றது கார் சவுண்ட் கேட்டதும் பவித்ரா முதலில் வேகமாக ஓடி வந்தாள் மருதனை இறக்கி விட்டு விட்டு தன் இல்லம் நோக்கி சென்றான் அரவிந்த்
இறங்கி நின்று வீட்டை பார்த்தான் போகும்போது ஓட்டு வீடாக இருந்ததை தன் தந்தை தன் சம்பாதித்தால் பெரிய வீடாக மாற்றி இருந்தார் கட்டி முடித்ததும் போட்டோ எடுத்து அனுப்பி இருந்தார் இருந்தாலும் நேரில் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது
லக்கேஜ் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான் பவித்ரா ஓடிவந்து அண்ணனை கட்டிக்கொண்டு ஒரே அழுகை இருவருக்கும் ஐந்து வருட வித்தியாசம் இருந்தாலும் நல்ல பிணைப்பு இருந்தது
தன் அண்ணன் வந்தால் தான் கல்யாணமே செய்து கொள்வேன் என ஒற்றைக்காலில் நின்றவள் ஆயிற்றே அண்ணன் மேல் அவ்வளவு பாசம் ஏதேதோ காரணங்கள் சொல்லி வராமல் இருந்தவன் தங்கை திருமணத்திற்காக இதோ வந்து நிற்கிறான்
மறுபுறம் வந்து அகிலன் அணைத்து கொண்டான் தம்பி தங்கையை பிரியமுடன் அணைத்து கொண்டான்
ஐயா தங்கம் மருது என தன் வயதையும் மறந்து ஒடி வந்தார் பேச்சி இருவரையும் விளக்கி விட்டு தன் மகனை ஆச தீர பார்த்தார் ஏய்யா இத்தனை வருசமா வராமையே இருந்துட்ட என்றார் அழுகையுடன்
அம்மா அழாதா அதான் வந்துடேனே உங்க கூட தான் இருக்கப் போறேன் என சமாதானம் செய்தான் தந்தை வந்து வாப்பா மருது என அழைக்க அவரையும் கட்டிக் கொண்டான் சரி பேச்சி புள்ளைய உள்ள கூட்டிட்டு போ என்றார்
ஆமா எவ்வளவு தொல இருந்து வந்துருக்கான் எம்புள்ள வாசல்லையே நிக்க வச்சுகிட்டு தள்ளுகடா என இருவரையும் தள்ளி விட்டு விட்டு அவனை உள்ளே அழைத்து சென்றார்
அண்ணா வந்துருச்சு நீ நாமெல்லாம் பேச்சி கண்ணுக்கு தெரிய மாட்டோம் என்று அகிலன் கூற இருவரும் சிரித்து ஹைபை அடித்துக் கொண்டனர் பேச்சி திரும்பி முறைத்து விட்டு சென்றார்
கண்ணு குளிச்சிட்டு வா சாப்பிட்டு தூங்கி எந்திரிப்பியாமா மேல இருக்க ரூம் உன்னோடது தான் அகிலா டேய் அகிலா அண்ணனோட துணி மணி யெல்லாம் கொண்டு போய் மேலை வெச்சிட்டு வா என்றார் பேச்சி அண்ணா நீ வந்துடைனு அம்மாக்கு தலை கால் புரியவில்லை என்றான் சிரித்தபடியே தம்பி தலையில் கொட்டி விட்டு சென்றான்
நின்று வீட்டை சுற்றி பார்த்தான் நன்றாக கட்டியிருந்தார் தந்தை கீழே மூன்று பெட்ரூமும் மேலே இரண்டு பெட் ரூம் அழகாக கட்டிருந்தார் முதலில் சென்று கிணறு இருக்கிறதா என பார்த்து வந்தான் கிணறு அப்படியே தான் இருந்தது அதை பார்த்தது ஏக போக குஷி
அங்கேயே நீர் இறைத்து குளிக்க ஆரம்பித்து விட்டான்
வயலுக்கு சென்று திரும்பி வந்த மூர்த்தி மகன் கிணற்றுக்கடியில் குளிப்பதை பார்த்து மருதா ஏன்டா கிணத்து தண்ணீரில் குளிக்கிற சளி புடிச்சுக்க போகுதுடா என்றார் இல்லப்பா கிணறு பார்த்ததும் குளிக்கணும் ஆச வந்துருச்சு இதோ வந்துட்டம்பா எனக் கூறிக் கொண்டு துண்டால் தலையை துடைத்துக் கொண்டே வந்தான்
பேச்சி சாப்பாடு எடுத்து வைத்தார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு சாப்பிட்டனர் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது
தம்பி மருதா செத்த நேரம் தூங்கி எந்திரிச்சு பவித்ராவுக்கு பார்த்த மாப்பிள்ளைய போய் பார்த்துட்டு வந்துடறலாம் என்றார் மூர்த்தி
சரிப்பா என்று விட்டு என்ன பவி மாப்பிள்ளை புடிச்சி இருக்கா பவித்ரா வெட்கப்பட அடடா என் தங்கச்சி வெட்கம் எல்லாம் படுறாளே என்றான் சிரித்துக் கொண்டே
தந்தையிடம் மாப்பிள்ளையை பற்றி விசாரித்திருந்தான் போனிலே அவனைப் பற்றி கேட்டு இங்கு தன் நண்பர்களுடன் இணைந்து அவனைப் பற்றி நன்கு விசாரித்து பிறகே பச்சைக் கொடி காட்டினான்
என்ன தான் வெளி நாட்டில் இருந்தாலும் தம்பி தங்கைகளை கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
சாப்பிட்டு முடித்தவுடன் தாயும் தந்தையும் படுக்க செல்ல இளசு இரண்டும் போனில் ஐக்கியமாய் விட இவன் அவன் அறைக்கு சென்றான் உறக்கம் வரவில்லை ஆனால் உடல் அசதியாக இருந்தது முதலில் அரவிந்த்துக்கு கூப்பிட்டு விசாரித்தான்
ஹலோ என்றான் தூக்க கலக்கத்தில் என்னடா நல்லா தூங்கற போல் என்றான் மருதன் டேய் இப்ப தான் உனக்கு என் நினைப்பு வருதா தூங்கறவன ஏன்டா டிஸ்டர்ப் பண்ற தயவு செய்து தூங்கு என்ன விடு என்றான்
அரவிந்த்திற்கு செம்ம அலுப்பு காலையில் இருந்து இவனுக்காக காத்திருந்தது கார் ஓட்டி வந்தது என படுத்தும் உறங்கி விட்டான்
இவனும் படுத்து விட்டான் கண் மூடினால் சலக் சலக் என்ற கொலுசு சத்தமும் யாழன் என்ற அழைப்பும் தான் காதில் மாறி மாறி ஒலித்தது ஊருக்கு வந்ததில் இருந்து பழைய ஞாபகம் அதிகமாக தொரத்தியது
பாடலை போட்டு ஹெட்செட் போட்டு கண்ணை மூடினான்
மாலை 5 மணி கீழே பேச்சு சத்தம் கேட்க மருதன் முழிப்பு தட்டியது தந்தை மாப்பிள்ளையை பார்க்க போக வேண்டும் என சொன்னது ஞாபகம் வர வேகமாக எழுந்து தயாராகி வந்தான்
கீழே அகிலனும் தந்தையும் தயாராக இருந்தார் வாப்பா நல்லா தூங்கினியா இந்தா காபி குடி என்று தாய் குடுத்த காபியை குடித்து விட்டு தந்தை தம்பியுடன் மாப்பிள்ளையை பார்க்க கிளம்பி விட்டனர்
கையில் பாத்திரத்துடன் வீட்டிற்கு உள் நுழைந்தாள் தன்யா அவளைப் பார்த்ததும் பவித்ரா சந்தோசமாக ஓடி போய் அணைத்துக் கொள்ள அப்பாடா நீயே வந்துட்டேன் எப்படிடா உன்ன வந்து பாக்குறதுன்னு நினைச்சுட்டு இருந்தேன்
மெல்லிய புன்னகையுடன் எதுக்கு பவி என்றால் ஆமா தினமும் பார்த்து ஒரு வாரம் பாக்காம நல்லாவே இல்லை என்றாள்
சிரித்து கொண்டே தலையை இடம் வலமாக ஆட்டினாள் வாடி அம்மா என நீட்டி முழங்கி அழைத்தார் பேச்சி வரத்த இந்தாங்க அம்மா சீம்பால் கொடுத்தாங்க என்று அங்கிருந்த மேசையில் வைத்தாள் கவனமாக அதை எடுத்து கொண்டு அவர் சென்று விட அவளும் இருவரிடமும் விடைபெற்றாள்
அவளை வழி அனுப்பி வைக்க பின்னாடியே வந்தாள் பவித்ரா ஏன்டீ என இவள் திரும்பி பார்கக அண்ணா வந்துருக்கு இரு பாத்துட்டு போலாம் என்றாள் மெதுவாக எப்போ என்றாள் காலையில வந்துச்சு சரி நா அப்பறம் வந்து பார்கிறேன்
எனக் கூறி விட்டு சென்று விட்டாள்
அவள் வீட்டிலிருந்து வெளியேறிய அடுத்த நிமிஷம் வீட்டிற்குள் நுழைந்தான் மருதன்