காலம் மாறினாலும் காதல் மாறாது
உயிர் உடலை விட்டு பிரிந்தாலும் உயிரை விட்டு காதல் பிரியாது உன் கரம் சேரவே எனது பிறப்பு
மருதன் வீட்டிற்கு உள் நுழைந்ததும் வேகமாக ஓடி போய் வெளியே எட்டிப் பார்த்தாள் பவித்ரா என்னடா என்ன பாக்குற என்றான்
ஹ்ஹ்ம்ம் அண்ணா தன்யா இருந்தா இப்ப தான் போறா நீங்க வந்துட்டீங்க அதான் இருக்காலானு பாத்தேன் ஆனா அவ தெரு தாண்டி போய்ட்டா என்றாள் சலித்துக் கொண்டு
சரிடா பரவாயில்லை வா அப்பறம் பாத்துக்கிறேன் என்றான்
ஆனால் முன்னிருந்த தெளிவு இப்போது இல்லை சத்தம் இல்லாமல் யாரிடமும் பேசாமல் தன் அறையில் சென்று முடங்கி விட்டான்
அங்கு இருந்து தன்யா தன் வீட்டிற்கு வந்து விட்டாள் ஏன்டீ அத்தைட்ட குடுத்து டியா ஹ்ஹ்ம் குடுத்தாச்சுமா யாழன் வந்துருக்காராமா என்றாள்
ஆமா அண்ணா காலையில கூப்பிட்டு சொன்னாரு என்றார் சரி என்று அறைக்கு சென்று விட்டாள்
தன்யா ஶ்ரீ கண்ணா -லட்சுமியின் ஒரே செல்வ புதல்வி மருதயாழனின் அத்தை மகள் 3 வருட டீச்சர் டிரையினிங் முடித்து விட்டு பக்கத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறாள் பவித்ராவை விட இரண்டு வயது பெரியவள் திருமணம் என்றாலே எட்டிக்காயா கசந்தது அவளின் பழைய கால அனுபவம் அப்படி
தன்யா மருதன் இருவருடைய நினைவும் ஒரே நேர்கோட்டில் தங்களின் கடந்த காலத்தைப் பற்றி அசை போட்டது அப்படியே இருவரும் உறங்கிய விட்டனர்
காலை வேலை அழகாக விடிந்தது தன்யா ஸ்கூல் இருக்கு கிளம்பி சென்று இருந்தால் 10 மணி போல் கையில் பையுடன் தன்யா வீட்டிற்கு வந்திருந்தான் மருதன் மருதனை பார்த்ததும் லட்சுமிக்கு ஒரே சந்தோசம் தான் அவர் தூக்கி வளர்த்தவன் ஆயிற்று தன்னை பார்க்க வரவில்லை என கவலையாக இருந்தது தன் அண்ணி போல் அவனும் நடந்து கொள்கிறான் எனத் தோன்றியது
அத்தை என ஒடி வந்து அணைத்து கொண்டான் என்னத்தை அப்படியே இருக்கீங்க உங்களுக்கு வயசே ஆகைல என்றான் போடா படவா என்றார் சிரித்தபடி உக்காரு வா என அமரவைத்து சாப்பிட குடுத்தார்
அவன் வீட்டிலே சாப்பிட்டுவிட்டு தான் வந்தான் இருந்தும் அத்தைக்காக கொஞ்சம் சாப்பிட்டான் என்னப்பா இத்தனை வருசமா இங்க வராமையே இருந்துட்ட அண்ணி தான் ரொம்ப கவலை பட்டாங்க என்றார் உண்மையான வருத்தத்துடன்
ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டான் பேச்சு அத்தையிடம் இருந்தாலும் வீட்டை சுற்றியே பார்வை இருந்தது அத்தை ஶ்ரீ எப்படி இருக்கா என்றான் அதற்கு மேல் என்ன கேட்பது என தெரியவில்லை இருக்கா என்றார்
இனி உன் கல்யாணம் எப்ப என்றார் ஐயோ அத்தை என்னை விட்ருங்க எனக்கு கல்யாணமே வேண்டாம் என்றான் ஏனோ இந்த காலத்துப் புள்ளைக எல்லாம் புரிஞ்சுக்கவே முடியவில்லை என்றார் ஒரு பெருமூச்சுடன் மாமா வர அவரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு திரும்பினான்
தன்யா வீட்டிற்கு வந்தவுடன் மருதன் வந்து விட்டு போனதைப் பற்றி கூறினார் தன்னால் அவரை காணமுடியவில்லை என வருத்தமாக இருந்தது ஆனால் மாமா வீட்டிற்கு சென்று பார்த்து வர நினைக்கவில்லை
மருதன் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது இன்னும் கல்யாணத்திற்கு இரண்டு நாட்களே உள்ளது
அன்று மாலை நேரம் மேலே ரூமிற்கு இடையே உள்ள இடத்தில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தாள் பவித்ரா மருதன் படியில் ஏறி வர அவள் பேசும் சத்தம் கேட்டது. யாரிடமோ பேசுகிறாள் என அசால்டாக ஏறி வந்தவன் தன்யாவின் பெயர் கேட்டதும் காதை கூர்த்திட்டி கேட்க தொடங்கினான்
ஏய் தன்யா நாளைக்கு கண்டிப்பாக வந்துடுவல அந்த பக்கம் என்ன கூறப்பட்டதோ ஏய் அதெல்லாம் தெரியாது கல்யாணத்துக்கு வர நாளைக்கும் வர என்றால் சத்தியமா வந்துடற நிச்சயதார்த்தத்துக்கு வர வரன்னு கடைசில வரல அதே மாதிரி பண்ணிட கூடாதுடி நாளைக்கு வரல நான் அங்க வந்துருவேன் என்றால் கடைசியில் வரேன் என அவள் சத்தியம் செய்யாத குறையாக சொன்னதும்தான் விட்டாள்
மேலேறி வந்தவன் பவித்ராவின்அருகே சென்று அமர்ந்தான் என்ன பவி யாருகிட்ட பேசிட்டு இருக்க என்றான் தெரிந்து கொண்டே தன்யா தான்ணா நாளைக்கு வர சொல்லி கூப்பிட்டு இருந்தேன் நிச்சயித்துகே இப்படி தான் வரலை அதான் இப்பவே கூப்பிட்டு ஒரு அலார்ட் என்றாள்
ஏன் உன் நிச்சயத்துக்கு கூட வர முடியாத அளவுக்கு மேடம் ரொம்ப பிஸியோ ஆமா நீங்க ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸ் இல்லையே எப்படி இப்போ
அது நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாதா ஸ்கூலுக்கு வேலைக்கு போனோம் அப்படி க்ளோஸ் தன்யா நல்ல பொண்ணுணா பாவம் எல்லாரும் சேர்ந்து அவள இப்படி எந்த விசேசத்துக்கும் வராத மாதிரி பண்ணிட்டாங்க என்றாள் சோகமே உருவாய் அவளை தாய் அழைக்க எழுந்து சென்றுவிட்டாள்
குழந்தை இல்லை போல என அவனாகவே ஒரு காரணம் கண்டறிந்து கொண்டான் அதற்கும் சேர்ந்து வருத்தப்பட்டு கொண்டான்
வீடு நிறைய சொந்தங்கள் பேச்சு சிரிப்பாக கேலியுமாக கலை கட்டியது திருமண வீடு
மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு எல்லாம் முடிந்த அனைவரும் மண்டபத்திற்கு சென்றுவிட்டனர் லட்சுமி தான் மண்டப வாயிலில் தன்யாவைப் பார்த்து கொண்டு நின்றிருந்தார் அங்கு வந்த மருதன் என்னத்தை ஏன் இங்கே நிக்கிறீங்க என்றான்
தன்யா வருவா அதான் கையோடு கூட்டிட்டு போலாம்னு நிக்கிறேன் என்றார் நீங்க போங்க அத்தை அவுங்க வந்தா நா கூட்டிட்டு வரேன் என்றான் அவர் தயங்கிய தயங்கிய நிக்க போங்கத்தை என வலுக்கட்டாயமாக அனுப்பி விட்டான்
அவரை அனுப்பி விட்டான் ஆனால் அவளை பார்த்து எப்படி அழைத்து செல்வது என படபடப்பாக இருந்தது போய் அரவிந்தை அழைக்கலாம் என நினைத்தான்
திரும்பும் போது பார்த்து விட்டான் அவளை இத்தனை காலம் என்னவள் என்னவள் என மனதில் நினைத்துக் கொண்டு இருந்தவளை மெல்லிய வொர்க் சேலையில் எந்த அலங்காரம் இல்லாமல் புன்சிரிப்புடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் அசைய மறுத்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்
அவள் காலுக்கு அடியில் சரணாகதி அடையத் துடித்த மனதை கட்டுப்படுத்த தெரியாமல் நின்று இருந்தான் அவளும் இவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்
ஹலோ யாழன் எப்படி இருக்கீங்க என்றாள் அதெல்லாம் எங்கே அவன் காதில் விழுந்தது உயிர் உள்ள சிலையாக மாறிவிட்டான்
மறுபடியும் சத்தமாக யாழன் என அழைக்கவும் தான் தூக்கத்தில் இருந்து விழித்தது போல் மூழி முழி என முழித்தான் ஏங்க யாழன் என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க என்றால்
வா வா வாங்க ஸ்ரீ என்றான் சாரி ஏதோ ஒரு யோசனை அதான் நீங்க எப்படி இருக்கீங்க உங்க ஹஸ்பண்ட் எங்கே என்றான் பின்னாடி எட்டி பார்த்து
விளையாடுறீங்களா யாழன் இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு என்னமோ சரியில்லை என்று சிரித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் இதுதான் தன்யா கடந்து வந்த பாதைகளின் பலனாய் எதையுமே சிரித்துக் கொண்டு நடக்கும் பக்குவத்தை அடைந்திருந்தால்
அவள் உள்ளே சென்றுவிட இவனுக்குத்தான் ஒரு குழப்பமாக இருந்தது இப்ப நாம என்ன கேட்டோம் என்ன தலையை சொரிந்து கொண்டு யோசனை உடனே அரவிந்தை தேடிச் சென்றான் இப்போது குழப்பத்திற்கு பதில் தெரியவில்லை என்றால் மண்டை வெடித்து விடும் அவனுக்கு
அரவிந்தை பார்த்து கையோடு அவனையும் அழைத்து கொண்டு மண்டபத்தின் பின் புறம் சென்றான் எதுக்குடா வேலை இருக்கு நேரத்துல இங்க கூட்டிட்டு வந்திருக்கேன் என்றான் அரவிந்த் டென்ஷனாக
டேய் மச்சான் உன் கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்டா ஏன்டா உனக்கு பேசறதுக்கு நேரமே இல்லையா டா என்றான்
டேய் இது ரொம்ப முக்கியமான விஷயம்
என்றான் சரி சொல்லு என்றான் டேய் அரவிந்த் எப்படி கேக்கணும்ணு தெரியலை சரி தெரிஞ்சுட்டு வந்து சொல்லு என்றான் டேய் விளையாடதடா சரி சொல்லு மச்சி என்றான் தோலில் கை போட்டு அது வந்து ஸ்ரீ இருக்கால எந்த ஸ்ரீ அதான் தன்யா ஆமா உன் அத்தை பொண்ணு அவளுக்கு என்னடா என்றான்
அவகிட்ட இன்னைக்கு உங்க ஹஸ்பண்ட் எங்கே என்று கேட்டால் விளையாடாதீங்க சொல்லிட்டு போறா டா என்றான்
அடப்பாவி அப்ப உனக்கு இன்னும் உண்மை தெரியாதாடா என்றான் எந்த உண்மை என்றான் யோசனை யுடன்
டேய் டேய் அந்த புள்ளைக்கு அன்னைக்கு கல்யாணமே ஆகல டா இத பத்தி உன்கிட்ட நிறைய டைம் பேச வந்த நீ தான் அவளை பத்தி பேசாத சொல்லி ஸ்டாப் பண்ணிட்ட உங்க வீட்டிலேயே யாரும் இத பத்தி சொல்லலையா என்றான்
மத்த எதுவுமே அவன் காதில்.
விழவில்லை கல்யாணம் ஆகல என்பதற்கே அவன் வானில் பறக்க ஆரம்பித்து விட்டான் மருதா என அவனை உலுக்கிய பிறகே தெளிந்தான் டேய் அப்ப உண்மையிலேயே கல்யாணம் ஆகலையா என்றான் சரியாக தான் கேட்டதா என சந்தேகத்துடன்
இல்ல பாவம்டா இந்த புள்ள கல்யாணம் நின்றதுல இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டுருச்சு தெரியுமா என்றான்
சரி விடுடா அவளை நான் கல்யாணம் பண்ணி என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கிறேன் கவலைப்படாத மச்சான் என்றான் சந்தோஷத்துடன் மருதனின் பழைய சந்தோசம் மீண்டு வந்திருந்தது
டேய் உண்மையாவா நீ தன்யாவா கல்யாணம் பண்ணிக்க போறியா டா ரொம்ப சந்தோசம் என்றான் அரவிந்த் உண்மையான சந்தோசத்துடன்
டேய் என்னடா இப்படி கேக்குற அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு சொல்லி தானே இங்கையே வராம இருந்தேன் இனி அவளை கல்யாணம் பண்ணிட்டு தான் ஒய்வேன் என்றான் முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன்
மூர்த்தி அழைக்க இருவரும் மண்டபத்திற்கு வந்து விட்டனர் இருவரும் வேலையில் கவனமாக மருதனின் பார்வை மட்டும் அடிக்கொரு தரம் தன்யா வையே சுற்றி சுற்றி வந்தது
அதை தன்யாவும் கவனித்திருந்தால் மருதனின் பார்வை மாற்றத்தை குறுகுறுப்பாக இருந்தது ஜுஸ் குடுக்க வந்தவன் அவளிடம் மட்டும் கையில் குடுத்து விட்டு கையை உரசி சென்றான்
அரவிந்த் டேய் சாமி எப்படிடா இப்படி சடன் ஜேன்ஜ் என்றான் கேலிப் புன்னகை உடன் அதற்கும் அவன் வெட்கப்பட்டு சிரிக்க ஐயோ அம்மா என்ன விட்டுடு டா என ஓடியே விட்டான்
மருதன் திரும்பி தன்யாவை பார்த்தான் இப்போதே தன்னுடன் வைத்துக் கொள்ள நினைத்தான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளை திருமணம் முடிக்க நினைத்தான்