• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராகம் 3

MK19

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
11
7
3
Tamil nadu
திருமண வரவேற்பு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது வந்த போது அமர்ந்திருந்த இடத்தை விட்டு நகராமல் அமர்ந்திருந்தாள் தன்யா மருதனும் இதை கவனித்தான்
தன் தாய் வந்து சாப்பிட அழைத்துச் சென்றார் முதலில் கவனித்தது அரவிந்தான் கொஞ்சமாக புன்னகைத்து அண்ணா என்றாள் அவன் பரிமாற இவளைப் பார்த்து விட்டு வேகமாக வந்தான் மருதன் அவனை தள்ளி விட்டு அவளுக்கு என்ன புடிக்குமோ அதைப்ார்த்து பார்த்து வைத்தான் அதை அவள் கவனிக்கவில்லை ஆனால் லட்சுமி கவனித்து விட்டார் தாய் மனம் இருவரையும் இணைத்து பார்த்து சந்தோசப்பட்டது அதே சமயம் தன் அண்ணியை நினைத்தும் பயமாக இருந்தது
சாப்பிட்டு விட்டு அம்மா போலாம் மா என்று தாயின் பின்னால் அழைந்து கொண்டிருந்தவளை சாப்பிட்டு வந்த பவித்ரா பார்த்து பிடித்து தன்னருகே அமர்த்திக் கொண்டாள்
வரவேற்பு முடிந்து அனைவரும் சென்று இருக்க நெருங்கிய உறவுகள் மட்டுமே மண்டபத்தில் இருந்தனர் வேலை முடித்து வந்த மருதன் தன்யா பவித்ராவின் அருகே அமர்ந்திருப்பதை பார்த்து வேகமாக வந்து தானும் ஒரு சேரை போட்டு அமர்ந்து கொண்டான்
என் செல்லம் என தன்யாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சி கொண்டு இருந்தாள் பவித்ரா அதைப் பார்த்து இவனுக்கு புகைச்சலானது ஏய் பேசாம இருடி என கையை எடுத்து விட்டாள் வரவேற்பிற்கு வந்தது பவித்ராவிற்கு ரொம்ப சந்தோஷம் எங்கே வராமல் போய்விடுவாளா என பார்த்துக் கொண்டே இருந்தாள்
உறவுக்காரப் பெண் வந்து அவளை அழைத்து போக இப்போது மருதனும் தன்யாவும் தான் தனித்திருந்தனர் மருதன் தன்யாவின் முகத்தையே பார்த்திருந்தான் அவள் சுத்தி மண்டபத்தையே ஒரு பார்வை பார்த்துவிட்டு மருதனை பார்த்தாள்
என்ன யாழன் என்னையே பார்க்கிறீங்க நா புதுசா தெரியறனா என்றாள் கூச்சத்தோடு
ஆமா ஸ்ரீ புதுசா தான் தெரியற நா போகும் போது இருந்த அந்த சின்னப் பொண்ண காணோம் நீ பெரிய மெஜ்ஜுர்ட்டான பொண்ணா மாறிட்ட அதான் பார்க்கிறேன் எனக்கு அந்த சின்னப் பொண்ணு தான் வேணும் என்றான்
என்ன யாழன் நேத்து போன மாதிரி சொல்றீங்க நீங்க போயி அஞ்சு வருஷம் ஆகிடுச்சு அப்ப மாற்றம் இருக்கும் தானே என்றாள்
ஹ்ஹ்ம் காலம் ஒருத்தர எவ்வளவு தூரம் மாத்திருக்கு என்றான்
சரி நீங்க எப்ப ரிட்டர்ன்
நம்ம கல்யாணம் முடிஞ்சு என்றான் என்ன சொன்னீங்க என்றாள் அதிர்ச்சியாக நம்ம பவித்ரா கல்யாணம் முடிஞ்சுன்னு சொன்னேன் என்றான் அவள் சந்தேகமாக பார்க்க சத்தியமா அதான் சொன்னேன் என்றான்
லட்சுமி வந்து என்னடி அதிசயமா உட்கார்ந்துட போலாமா என்றார் ஹ்ஹ்ம் போலாம் மா என்று எழுந்தாள் சரி மருதா நாங்க போய்ட்டு காலையில வந்தறோம் என்றார் சரிங்க அத்தை என்று கூறி வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தான்
சிறு தலை அசைப்புடன் கிளம்பி விட்டாள் வாசலில் நின்று அவளையே பார்த்தான் இவளும் திரும்பி பார்க்க கண்சிமிட்டி சிரித்தான் இவளும் சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்
மருதனுக்கு தித்திப்பான நிமிடங்களாக இதயக்கூட்டில் சேமித்து வைத்தான் சிரித்து கொண்டே தலையை அழுத்த கோதிக் கொண்டான் திரும்பவும் டீன் ஏஜிருக்கு சென்றது போல் அப்படி ஒரு குதூகலம் இந்த இனிமையான மனநிலையுடன் உறங்கச் சென்றான்
வீட்டிற்கு வந்த தன்யாவிற்கும் மருதனின் நினைவுதான் தாய் தந்தைக்கு அடுத்து அவளுக்கு எல்லாமே அவனாக தான் இருந்தான் பிரச்சினைகளின் போதெல்லாம் மனம் அவனை அதிகமாக தேடியது அவன் நினைவுடனே உறங்கி விட்டாள்
காலை 6: 30 போல் முகூர்த்தம் ஐந்து மணிக்கே கிளம்பி வந்து விட்டனர் இருவரும் இளம் ரோஜா நிறத்தில் பட்டுப் புடவை கட்டி இருந்தாள் தாயின் வற்புறுத்தலால் இன்று கண்ணுக்கு மட்டும் மை போட்டு இருந்தாள்
அவள் மண்டப வாயிலில் நுழையும் போதே இரு ஜோடி விழிகள் அவளை நோக்கி விழுந்தது ஒருவரது வேறு யாரு நம்ம மருதன் தான் ரோஜா நிறத்தில் புடவை கட்டி பன்னீர் ரோஜா வாக நடந்து வந்தவளை விட்டு கண்கள் நகர மறுத்தது
மற்றொருவர் மருதனின் தந்தை மூர்த்தி
அவரும் மண்டபத்தில் நுழைந்தது முதல் அவளையே தான் பார்த்தார் அவருக்கு தன்யாவை மருதனுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என ஆசை சிறு வயதில் இருந்தே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டு பேச்சியிடம் பேசி பேச்சு வாங்கிக் கொண்டதெல்லாம் வேறு கதை
நேற்று போலவே இன்றும் ஒரு சேரை பிடித்து அமர்ந்து கொண்டாள் வாடி போய் பவியைப் பார்த்துட்டு வரலாம் என தாய் அழைத்ததுக்கும் நா வரலம்மா நீ‌போய் பாத்துட்டு வா என அனுப்பி விட்டாள்
அதைப் பார்த்த மருதன் வேலையை விட்டு விட்டு அவளிடம் சென்று ஏன் ஸ்ரீ இங்க உக்காந்துருக்க வா உன்ன பவி கூப்பிட்டா என அவள் சொல்ல வருவதையும் கேட்காமல் இழுத்துக் கொண்டு சென்று பவி ரூமில் தான் விட்டான்
தன்யாவைப் பார்த்ததும் குஷியான பவி தன்யா என கட்டிக் கொண்டு நா எப்படி இருக்கேன் என்றாள் ரொம்ப அழகா இருக்க என்றாள் அவளை அங்கு இங்கு என நகர விடாமல் தன்னுடனே வைத்துக் கொண்டாள்
இதைப் பார்த்து பேச்சிக்கு எரிச்சல் தான் இருந்தாலும் தன் மகள் கல்யாணம் என அமைதியாக இருந்து கொண்டார்
முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது பெண்ணை அழைத்து வரச் சொல்ல அங்கிருந்து மெதுவாக நழுவி வந்து விட்டாள்
மேடையில் நெருங்கிய உறவுகள் இருக்க தன்யா கீழே வந்து நின்று கொண்டாள் மருதன் வந்து மறுபடியும் இழுத்துக் கொண்டு போய் தன்னருகே நிறுத்திக் கொண்டான்
இருவரும் நெருக்கமாக நின்றனர் தன்யாவின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது அது மருதனுக்கே கேட்டது கையைப் பிடித்து அழுத்தி சமாதானம் செய்தான் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் அவனும் குனிந்து அவளைத் தான் பார்த்தான் இது யாரு கண்ணுக்கு தெரிந்ததோ இல்லையோ கேமிரா கண்கள் படம்பிடித்து கொண்டது
ஐயர் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்றதும் தான் இருவரும் பார்வையை திருப்பி பொண்ணு மாப்பிள்ளையை பார்த்தனர்
திருமணம் முடிந்து விருந்து நடந்து கொண்டிருந்தது ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த மருதனைத் தான் பார்த்திருந்தால் தன்யா இவன் இருந்து இருந்தால் தன்னை எதற்குமே வேதனை பட விட்டிருக்க மாட்டான் என நினைத்து கொண்டாள் அவனையே பார்த்திருக்க அவன் திரும்பி பார்த்து கண் சிமிட்டி சென்றான்
தன்னை கண்டு கொண்டான் என தெரிந்ததும் திரும்பி அடென்சன் மோடில் உட்கார்ந்து கொண்டாள் அதைப்பார்த்து சிரித்துக் கொண்டே சென்றான் அவனைப் பார்க்காதே என மூளை சொன்னாலும் கண் பேச்சைக் கேட்காமல் அவனையே சுற்றியது
திருமண சடங்குகள் முடிந்து பவித்ரா கண்ணீருடன் தன் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் அனைத்து வேலையும் முடிந்து அப்பாடா என அமர்ந்து விட்டான் மருதன் எவ்வளவு அலுப்பு இருந்தும் தன்யாவை தேடி வந்து அவள் அருகே தான் அமர்ந்திருந்தான்
என்ன மருதன் டயர்டா ஆகிட்டீங்களா என்றால் ஆமா ஸ்ரீ நீ வந்தா தான் கல்யாணம் இருந்ததா கல்யாணம் சொன்னாங்க என் மேல இருக்க பாசத்துலன்னு நெனச்சேன் ஆனா இப்ப தானே தெரியுது எல்லா வேலையும் என்கிட்ட கொடுத்து பெண்ட நிமித்திட்டாங்க என்றான்
அதைக் கேட்டு அவள் கலகலவென சிரித்தால் எதையாவது ஒன்னு சொல்லி அவளை சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தான்
இவர்களின் காதல் விவகாரத்தில் ஒருவனை மறந்து விட்டான் அரவிந்த் இப்போது தான் அவன் ஞாபகம் வர அவனை தேடினான் ஸ்ரீ ஒரு மினிட் இந்த அரவிந்த் எங்க என்று பாத்துட்டு வரேன் என்றான் உடனே அவள் சிரித்தபடி அங்க பாருங்க என்றாள் அவள் சொன்ன பக்கம் திரும்பி பார்க்க அரவிந்த் ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்
பவித்ராவின் தோழி தான் பார்த்ததும் பிடித்து விட காலையிலிருந்து அவள் பின்னால் தான் ஐயாவின் ஜாகை அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டு திரும்பி அரவிந்த ஒரு பொண்ணு புடிச்சிட்டான் என்றான்
அனைவரும் வீட்டிற்கு கிளம்பி விட்டனர் மண்டபம் காலி செய்து கொடுத்துவிட்டு மருதனும் அரவிந்தும் கிளம்பி விட்டார்கள்
என்னடா என்ன பிளான் எப்படி கல்யாணம் பண்ணப் போற என்றான் அரவிந்த் வீட்டிற்கு வரும்போது ஹ்ஹ்ம்ம் முதலை அப்பாட்ட பேசலாம் அப்பறம் அவகிட்ட பேசிக்கிறேன்
உன் காதல் கதையை சொல்ல வேண்டியது தானே என்றான் இல்ல இப்ப சொல்ல மாட்டேன் அவ எங்கிட்ட வரட்டும் அப்பறம் சொல்லிக்கிறேன் என்றான்
திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகி விட்டது பவித்ரா மறு வீட்டிற்கு வந்து ஒரே நாளில் சென்று விட்டாள்
அன்று காலை நேரமே எழுந்து மருதன் ரூமிலே நடந்து கொண்டிருந்தான் ஒருமுறைக்கு ஆயிரம் முறை பேச வேண்டியதை ஒத்திகை பார்த்து கொண்டான்
கீழே தந்தையின் சத்தம் கேட்டது பத்து நிமிடம் கழித்து இறங்கி வந்தான் அவன் தாயும் அவனுக்காக தான் காத்திருந்தார் அவன் இறங்கி வந்ததும் ஒருகவரைக் குடுத்தார் அவன் என்னமா இது என்றான்
ஐயா மருது உனக்கு தரகர்ட்ட சொல்லி வைச்சிருந்தேன் அவரு இப்ப தான் வந்து இந்த போட்டோ எல்லாம் குடுத்துட்டு போனாரு நீ பார்த்துட்டு எந்த புள்ள புடிச்சிருக்குன்னு சொல்லு விரசனா உங் கல்யாணத்தையும் முடிச்சுடுவோம் என்றான் சந்தோசமாக
அம்மா எனக்கு இதுல இருக்க எந்த பெண்ணையும் பிடிக்காது என்றாலும் கோபமாக ஏன்யா பாக்காமயே சொல்ற பார்த்துட்டு சொல்லு என்றார் அவருக்கு மகன் இங்கிருந்து செல்லும் முன் திருமணம் முடித்து விட வேண்டும் என நினைத்தார்
இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு உள்ளே இருந்து வந்து சோபாவில் அமர்ந்தார் மூர்த்தி என்னப்பா என்ன ஆச்சு என்றார் மருதனிடம் உடனே பேச்சி பாருங்க இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கலாம் னா ஒத்துக்க மாட்டிக்கிறான் என்றார்
ஏன்பா கல்யாணம் பண்ணாம இப்படியே இருக்க முடியுமா உனக்கு வயசாகிட்டே போகுது இல்ல அம்மா பாத்த பொண்ண புடிக்கலையா உனக்கு எதாவது பொண்ணு புடிச்சுதுனா சொல்லு என்றார்
திருடனுக்கு தேள் கொத்தனதை போல் முழி முழி என முழித்தார் பேச்சி அவருக்கு தான் தெரியுமே அவன் காதல் விவகாரம் என்ன சொல்லப் போறானோ என அவனையே பார்த்தார்
தன் தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு அப்பா எனக்கு தன்ய ஸ்ரீ யப் புடிச்சுருக்கு அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுகிறேன் என ஏழு வருடமாக மனதில் பூட்டி வைத்ததை போட்டு உடைத்து விட்டான் மருதயாழன்
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
தன்யாக்கு என்ன பிரச்சினை?🤔 ஏன் முதல்ல நடக்கவிருந்த கல்யாணம் நின்னது?🤔

பேச்சிக்கு ஏன் தன்யாவை பிடிக்கலை? 🤔 மகனோட காதல் தெரிஞ்சும் ஏன் பொண்ணுங்க போட்டோவை காட்டுறா? 🙄

இப்போ மருதன் வேற மனசுல இருக்கிறதை சொல்லிட்டான் இனி என்ன நடக்குமோ🧐

அடுத்த எபிக்கு வெயிட்டிங்❤️