• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராகம் 4

MK19

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
12
17
3
Tamil nadu
தன்யாவை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறினான் மருதன் நல்ல மனநிலையில் தாய் தந்தையிடம் சமாதானமாக கூற நினைத்தான் காலையில் இருந்து இதற்காகவே ஒத்திகை பார்த்து கொண்டான் ஆனால் இப்படி கோபத்துடன் சொல்லி விட்டான்

இதைக் கேட்டு இருவருக்கும் அதிர்ச்சி தான் மூர்த்திக்கு மகன் மனதில் இருக்கும் ஆசையை தன்னிடம் கூட கூறவில்லையே என வருத்தமாக இருந்தது

பேச்சி தான் கொதித்து எழுந்து விட்டார் என்னடா சொல்ற அவ உனக்கு வேணாம் நான் தான் அப்பவே சொல்லிட்டேனே அவ உனக்கு வேண்டாம் என்று இன்னும் அவளை தான் நினைச்சுட்டு இருக்கியா நீ அதுக்கு தான் இத்தனை வருஷம் வராமல் இருந்திருக்க அவள கட்டிகருக்கு நா ஒருநாளும் ஒத்துக்க மாட்டேன் அவ ஒரு ராசி இல்லாதவடா என்றார்

அதைக் கேட்டது அம்மா பேச்சி என்று இருவர் குரலும் ஒரு சேர ஒலித்தது அவர் பயந்தே விட்டார் ஏனோ பேச்சிக்கு அவளை பிடிப்பதே இல்லை இப்போது தான் ராசி இல்லாதவள் என கூறுகிறார் ஆனால் சிறு வயதிலிருந்து மூர்த்திக்கு ஆசை இருந்தும் பேச்சிக்கு பிடிப்பதே இல்லை மகனுக்கு அவள் மேல் பிடிப்பிருப்பது தெரிந்து தான் அவளுக்கு அவசரமாக திருமணம் செய்ய பார்த்தார்

மகனுக்கு நல்ல வசதியாக இருக்கும் பொண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் அதுமட்டுமின்றி அவளை மூர்த்திக்கும் மகனுக்கும் மிகவும் பிடிப்பதால் அவளை திருமணம் செய்து கூட்டி வந்தாள் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என நினைத்து கொண்டு தான் அவளை வேண்டவே வேண்டாம் என்கிறார்

மூர்த்தி மனைவியை விட்டுவிட்டு மகனிடம் திரும்பி ஏம்பா மருது அந்த புள்ளைய புடிச்சிருந்தா என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல நான் பேசி கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்னுல

அப்பா ஸ்ரீக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணும் போது அம்மாட்ட சொன்னேன் அவங்க தான் கல்யாணம் எல்லாம் பேசிட்டாங்க இனி பேசினா நல்லா இருக்காது அப்படின்னு சொல்லி வாய அடிச்சுட்டாங்க பா இத்தனை வருஷமா அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு தான் நினைச்சுட்டு இருங்க கல்யாணம் தப்ப தான் தெரியும் என்றான் ஆற்றாமையோடு

திரும்பி மனைவியை முறைத்தார் என்ன பேச்சி இது பையன் ஆசைப்பட்டானா என்கிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே எத்தனை காலம் இதை மறைத்து வைத்திருக்கிறாய் என் பையன் வாழ்க்கையே கெடுக்க பாத்துட்ட

இப்படி கேட்டது பதறிவிட்டார் ஐயோ நான் அப்படின்னு நினைக்கலங்க என் பையன் நல்லா இருக்கணும் சந்தோஷமா இருக்கணும்னு தானே நினைப்பேன் என்றார் அழுகையோடு

தாய் அழுவதும் மனசு கேட்காமல் நின்று கொண்டிருந்தவரை இழுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர வைத்து அவனும் கீழே அவர் காலக்கடியில் அமர்ந்து கொண்டான்

அம்மா ஏன்மா அவளை உனக்கு புடிக்கலை என்றான் அவ ஒரு ராசி இல்லாதவ டா அவ ராசினால தானே அவளை கட்டிக்கப் போறவன் செத்து போய்ட்டார் என்றார் அழுதுக் கொண்டே

பேச்சி நம்ம கிட்டயும் பொண்ணு இருக்கு அதை மறந்துடாத இனி ஒரு வார்த்தை அந்த புள்ளைய பத்தி நீ பேசக்கூடாது என மூர்த்தி அதட்டலாக சொல்லவும் கப் சிப் என வாயை மூடி கொண்டார்

மருதன் பெருமூச்சு உடன் அம்மா நான் இப்ப சொல்றது தான் கடைசி கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ஸ்ரீ கூட தான் இல்லை உனக்கு இஷ்டம் இல்லைனா நா கல்யாணம் பண்ணாமையே இருந்துக்கறேன் திரும்பி சிங்கப்பூர் போயிறேன் என்றான்

அச்சச்சோ என் ராசா உனக்கு பிடிச்ச பொண்ணையே கட்டிக்கோ அம்மா ஒன்னும் சொல்ல மாட்டேன் சிங்கப்பூர் போகாம எங்க கூட இருந்துருயா என்றார்

மூர்த்தி மகனை மனதில் மெச்சி கொண்டார் எப்படி பேசணுமோ பேசி பேச்சியையே கறைத்து விட்டானே என
சரிப்பா நாளைக்கு நா போயி மாப்பிள்ளைட்ட பேசிட்டு வரேன் ஒரு நல்ல நாளா பார்த்து பொண்ணு பார்க்க போயிடலாம் சரியா பேச்சி என்றார்

அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் மகனுக்காக பொத்தாம் பொதுவாக தலையை ஆட்டினார் எங்கே வேண்டாம் என்று சொல்லி மீண்டும் ஊருக்கு சென்று விட்டால் இனி பார்க்கவே முடியாதோ என்ற பயம் வந்து விட்டது

மருதன் அப்பாடா எப்படியோ ஒரு விக்கெட் காலி என மனதில் நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டான் மாமியாரை சரி கட்டி விட்டாயிற்று இனி மருமகளை கவனிக்க வேண்டுமே என இனி அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டான்

இந்த நாள் இப்படியே ஓடிவிட்டது பேச்சி பவித்ராவுக்கு போன் போட்டு மருதன் தன்யாவை திருமணம் செய்து கொள்ள போகிறான் என்பதை தெரிவித்தார்

அவளுக்கு ஏகபோக குசி தான் தன்யா. என்றாலே அவளுக்கு பிரியம்தான் இது அவளே அண்ணி என்றால் சொல்லவா வேண்டும். அகிலனுக்கும் தெரியும் ஆனால் அவனுக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை

மறுநாள் காலை முதல் வேலையாக லட்சுமி வீட்டிற்கு வந்திருந்தார் மூர்த்தி
அண்ணணைப் பார்த்ததும் பரபரத்தார் எண்ணண்ணே இவ்வளவு நேரமா வந்துரூக்கீங்க என்ன எதாவது முக்கியமான விஷயமா என்றார் காபியை ஆற்றிக் கொண்டே

ஆமாமா முக்கியமான விஷயம் பேசத்தான் வந்தேன் மாப்பிள்ளை எங்கம்மா

அவரு தோப்புக்கு போனாரு இருங்க போனப் போட்டு வர சொல்றேன் என போன் போட்டு கண்ணனை வர சொல்லி இருந்தார்

மூர்த்தி தங்கையை ‌ பார்க்க வராமல் இருக்க மாட்டார். வாரம் இரு முறை தவறாமல் வந்து தங்கயை தங்கை மகளை பார்த்துவிட்டு தான் செல்வார் ஆனால் இன்று நேரமே வந்திருப்பதால் தான் லட்சுமிக்கு இந்த பரபரப்ப

போன் போட்டு பத்தே நிமிடத்தில் வந்து விட்டார் கண்ணன் வாங்க மச்சான் என அழைத்துக் கொண்டு உள் நுழைந்தார்


வாங்க மாப்ள உங்களுக்காக தான் காத்திருந்தேன் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றார்

என்ன மச்சான் சொல்லுங்க என்றார் ஏத்தா லட்சுமி நீயும் வந்து இங்கன உட்காரு என எதிரே இருந்த சேரை காண்பித்தார் லட்சுமி வந்து அமர்ந்ததும்
இருவர் முகத்தையும் ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தார்

மருதனுக்கு தன்யாவே கேட்கலாம்னு வந்தேன் எனக்கு முண்ணமே தன்யாவை மருமகளாக்கிக்கணும் இஷ்டம் தான் ஆனா சூழ்நிலை என்னமோ ஆகிப்போச்சு இப்பதான் ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் யோகம் கூடி வந்திருக்கு போல நீங்க என்ன சொல்றீங்க மாப்பிள்ளை என்றார்

இருவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின அதிர்ந்த முகத்தை வைத்தே தெரிந்து கொண்டார் மூர்த்தி

கண்ணன் யோசனையாக இருக்க அவர் யோசிகட்டும் என விட்டு விட்டு லட்சுமியிடம் என்னம்மா லட்சுமி நீ என்ன சொல்றே என்றார்

அண்ணே நான் என்ன சொல்லப் போறேன் மருத நம்ம பையன் அவனுக்கு பொண்ண கொடுக்க எனக்கு ரொம்ப ஆசை சந்தோஷமா இருக்கு அண்ணா அப்பவே நான் சொன்னே ன் பொறுங்க நம்ம மருதனுக்கு பொண்ணு குடுக்கலாம்னு என ஒரே சந்தோசமாக கூறினார்

மாப்ள நீங்க என்ன சொல்றீங்க எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க என்றார்

மருதனை பத்தி எந்த குறையும் சொல்ல முடியாது அவனுக்கு பொண்ணு தருவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் புள்ளை கிட்ட கேட்டுட்டு அப்புறமா சொல்றேன் என்றார் மூர்த்திக்கு சந்தோசமே சரிங்க மாப்பிளை புள்ளைட்ட கேட்டுட்டு முடிவ சொல்லுங்க என்று கிளம்பி விட்டார்

மாலை 4 மணி அளவில் தன்யாவின் ஸ்கூலின் அருகில் வண்டியை நிறுத்தி அதன் மேல் சாய்ந்து நின்று இருந்தான் மருதன் தன்யாவிற்காக காத்துக் கொண்டிருந்தான்

தன்யா காலையில் வரும் பொழுது வண்டி ரிப்பேர் ஆனதால் அதை தந்தையிடம் விட்டுவிட்டு தோழியுடன் தான் வண்டியில் வந்து இருந்தால் இப்பொழுதும் அவளுடன் தான் கிளம்ப இருந்தால் கேட்டில் ஏறும் போதே மருதனை பார்த்து விட்டாள் அதனால் தோழியிடம் கூறி விட்டு அவனை நோக்கி நடந்தாள்

மருதனும் நின்று அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான் மருதன் அருகே வந்து என்ன யாழன் யாரப் பாக்க நிக்கிறீங்க என்றாள் சிரித்துக்கொண்டே வேற யாரப்பாக்க உன்னதான் பாக்க வந்தேன் என்றான் என்னையா எதுக்கு என்றால் யோசனை உடன் இங்கையே எல்லாமே பேசணுமா வா இந்த கடைக்குல்ல போய் பேசலாம் என அருகே இருந்த காபி ஷாப்புக்குள் அழைத்துச் சென்றான்


இருவரும் கடைக்குள் வந்து ஒரு இடத்தை பார்த்து அமர்ந்து கொண்டனர் மருதன் தன்யா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் 10 நிமிடமாக எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்தான்

என்ன யாழன் பேசணும்னு கூட்டிட்டு வந்துட்டு அமைதியாவே இருக்கீங்க என்ன சொல்லணும் சொல்லுங்க என்றால்

என்ன சொல்லணும்னா நம்ம கல்யாணத்தப் பத்தி நீ தான் சொல்லணும்

நம்ம கல்யாணம்னா புரியல என்ன யாழன் சொல்றீங்க

ஹ்ஹ்ம்ம் ஸ்ரீ நான் நேர விஷயத்துக்கே வரேன் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா இதுவரைக்கும் நடந்த எல்லாத்தையும் மறந்துடலாம் நாம புதுசா வாழ ஆரம்பிக்கணும் ஸ்ரீ நீ என்ன சொல்ற

யாழன் நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியல எனக்கு கல்யாணமே வேண்டாம் இங்க வந்து என் கதையெல்லாம் கேட்டு என் மேல பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிக்கலாம் நினைக்கிறீங்களா

நான் எதுக்கு உன்ன பரிதாபபட்டு கல்யாணம் பண்ணிக்கணும் உனக்கு என்ன ஏதாவது பிரச்சனையா ஒன்னு பண்ணு நீ வேணா என் மேல பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிக்கோ

உங்களை எதுக்கு பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணனும் என்றால் புரியாமல்

ஆமா என்னை விட நீ சின்ன புள்ள உன்ன கல்யாணம் பண்றதுக்கு நான் பரிதாபாட்ட எனக்கு 27 வயசு ஆச்சு அப்ப என்ன நீ பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணா தானே உண்டு எனக்கே வயசு ஆகிடுச்சுல என்றான்

யாழன் விளையாடாதீங்க எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல அதனால இனிமேல் என்கிட்ட இதை பத்தி பேசாதீங்க என்றாள்

சரி நான் இனிமே கல்யாணத்தை பத்தி பேச மாட்டேன் நானும் உன் கூட சேர்ந்து அன்னை தெரசா மாதிரி ரெண்டு பேரும் சேவை செய்யலாம் இந்த உலகமே நம்மளை பத்தி பேசனும் இனிமேல் என்றான்

யாழன் நீங்க எதுக்கு கல்யாணம் பண்ணாம இருக்கணும் ஏதாவது நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கலாம் இல்ல

நான் பார்த்த நல்ல பொண்ணு தான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்லிடுச்சே அத்தை புள்ள நீ நீயே எனக்கு வாழ்க்கை கொடுக்க மாட்டேங்குற அப்புறம் எங்க நான் வேற புள்ளைய தொழ வருது என்றான் சோகமாக

யாழன்ன் என்னைய ஏன் இப்படி குழப்பறீங்க ப்ளீஸ் என்ன விட்ருங்க எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் எந்த கெட்ட பேரு வேண்டாம் ப்ளீஸ் என்னை விட்ருங்க என்று தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள்

நிதானமாக அவளைப் பார்த்து விளையாட்டை கைவிட்டு அவள் கையை எடுத்து தன் கைகள் பொதிந்து கொண்டான் ஸ்ரீ நான் சொல்றதை கேளு எல்லாத்துக்கும் கடந்த காலத்துல எவ்வளவோ கஷ்டம் இருக்கும் அதை தாண்டி வரணும்

உனக்காக இல்லாட்டியும் அப்பா அம்மாவுக்காக எனக்காகவும் யோசி உன் கைய புடிக்கணும்னு நெனச்சிட்டேன் இனி இந்த ஜென்மத்துல உன் கையை தவிர வேற யாரு கையும் புடிக்க மாட்டேன் நீ என்ன கட்டிக்கிட்டாலும் சரி இல்லைனாலும் எனக்கு இரண்டு மாசம் லீவு லீவா இருக்கறதும் நிரந்தரமா இங்கையே இருக்கறதும் உன் முடிவுல தான் இருக்கு என்றான்
நல்லா யோசிச்சு நல்ல முடிவு சொல்லு ஸ்ரீ என்றான்


அவளுக்கு கண்ணீர் கோடாக கன்னத்தை நனைத்தது தன் கையால் தொடைத்தான் அழாதமா எல்லாம் சரியாயிடும் என கையில் அழுத்தம் கொடுத்தான்

வா போலாம் என்று அவளையும் அழைத்துக் கொண்டு வண்டியில் அவள் வீட்டில் விட்டுவிட்டு அவன் வீட்டிற்கு சென்றான் எப்படி வீட்டுக்கு வந்தோம் என்று அவளுக்கு தெரியவில்லை மாய உலகில் சிக்கிக் கொண்டது போல் இருந்தது

மருதனுடன் வண்டியில் வந்ததும் தன்யா குழப்பமாக இருப்பதையும் பார்த்துவிட்டு அவளிடம் ஒன்றும் கேட்காமல் அமைதியாக இருந்து கொண்டாள் லட்சுமி

கரம் பிடிப்பானா காதலன்?? வாடிய செடி இனி பூத்துக் குலுங்குமா காலம் தான் பதில் சொல்லும்??
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
399
199
43
Tirupur
பரவால்லையே குண்டை போட்டு அம்மா வாயை அடைச்சிட்டான் 👍

அடுத்து தன்யாகிட்ட குண்டை போட்டு முடிவை அவ கையிலே குடுத்திட்டான் 👌

என்ன முடிவு எடுப்பாளோ🤔