• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராகம் 5

MK19

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
11
7
3
Tamil nadu
குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும் அதனால் தன்யாவை குழப்பி விட்டு வீட்டிற்கு வந்து விட்டான் விசில் அடித்து கொண்டே உள்ளே நுழைந்தவனை எல்லாரும் பேவெனப் பார்க்க அசடு வழிய சிரித்து கொண்டே உள்ளே சென்று விட்டான்

மாலை மேலேறி சென்றவன் தான் இரவு உணவுக்கு தான் இறங்கி வந்தான் அனைவரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருந்தனர்

மருதா மாப்பிளைட்ட போயி பேசீட்டேன் புள்ளைட்ட கேட்டுட்டு முடிவ சொல்றேன் சொல்லிட்டாரு என்றார் மூர்த்தி

சரிங்க அப்பா அவங்க சொல்லட்டும் பாப்போம் என்றான்

அதேநேரம் தன்யா வீட்டில் வந்ததில் இருந்து ஏதோ யோசனையாக இருந்ததால் யாரும் அவளை தொந்தரவு செய்யவில்லை

எதாவது பேசினால் சாப்பிடாமல் படுத்து விடுவாள் என இரவு உணவுக்கு பின் பேசலாம் என இருந்தார் கண்ணன் உணவை எடுத்து வைத்து விட்டு வந்து அவளை அழைத்தார்

மூவரும் ஒன்றாக அமர்ந்து தான் சாப்பிட கண்ணன் முதலில் சாப்பிட்டு விட்டு தன்யா சாப்பிட்டு வெளிய வா கொஞ்ச நேரம் உக்கார்ந்து இருக்கலாம் என கூறி போய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார் தன்யாவிற்கு இப்பொழுது இருக்கும் மன நிலையில் போய் தந்தையிடம் அமர்ந்து பேச முடியவில்லை இருந்தாலும் தந்தைக்காக சாப்பிட்டதும் அவர் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்

லட்சுமி அவர்களுடன் இணைந்து கொண்டார் கண்ணன் மகளின் முகத்தைப் பார்ப்பதும் யோசிப்பதும் ஆகவே இருந்தார் தந்தை ஏதோ சொல்ல தயங்குவதுமாக இருக்க அவரை புரிந்து கொண்டு என்னப்பா ஏதாவது சொல்லனுமா என்றாள்

ஆமா தங்கம் எத்தனை நாளைக்கு இப்படியே தனியாவே இருப்ப உனக்குன்னு ஒரு துணை வேண்டாமா? ஏம்பா திடீர்னு இப்படி கேக்குறீங்க ஏற்கனவே குழப்ப நிலையில் இருப்பதால் இதுவும் அவளை மேலும் குழப்பியது

இல்லம்மா நம்ம மூர்த்தி மச்சான் வந்து மருதனுக்கு உன்ன பொண்ணு கேட்டு போனாரு நான் புள்ளைட்ட கேட்டுட்டு முடிவு சொல்றேன் சொல்லி இருக்கேன் நீ என்ன சொல்ற நீ சொல்றது தான் முடிவு

இங்க பாரு தன்யா இந்த உலகத்தில் தனியாவே வாழ்க்கையை ஓட்ட முடியாது நானும் உங்க அப்பாவும் எத்தனை நாளைக்கு உன் கூட இருக்க போறோம் உனக்குன்னு ஒரு துணை வேண்டும் அது மருதனா இருந்தா இன்னும் சந்தோசம் தான் நல்லா யோசிச்சு முடிவு சொல்லு என்றார் லட்சுமி

ஏம்பா நா உங்க கூடவே இருந்துகிறேன்பா என்றாள் அழுகையுடன் எங்க கண்ணு போகப் போற அடுத்த தெரு தானே அப்பா நான் வந்து அடிக் கொருக்கா பார்ப்பேன் நீயும் வரலாம் எனக்கு பயமா இருக்கு எங்களுக்கு அப்புறம் நீ தனி மரமா நிக்க கூடாது உனக்கு அண்ணன் தம்பி இல்லை யார நம்பி உன்னை தனியா விட்டுட்டு நாங்க கண்ணு மூடுவது என்றவர் கண்ணிலும் கண்ணீர் பளபளத்தது

தன்யா மாறி மாறி தாய் தந்தையர் முகத்தையே பார்த்தாள் அது எப்படியாவது சம்மதம் சொல்லிவிட்டேன் என்று எதிர்பார்ப்பு இருந்தது இருந்தாலும் ஒரு முறை பட்ட புண்ணால் மறுமுறை சம்மதம் சொல்ல பயமாக இருந்தது பா நா யோசிச்சு சொல்றேன் பா என்றாள் அதுவே தன்யா மனம் மாறி விடுவாள் என்ற நம்பிக்கை கொடுத்தது

எழுந்து அறைக்கு சென்றாள் தூக்கம் வரவில்லை மனம் மருதன் சொன்னதையும் இப்போது தந்தை சொன்னதையும் மாறி மாறி போட்டு குழப்பியது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை

எத்தனையோ மாப்பிள்ளைகளை வேண்டாம் என மறுத்தவளால் இன்று ஏனோ மருதனை மறுக்க முடியவில்லை அவன் மீது பிடித்தமா அதை கேட்டால் விடை தெரியவில்லை ஆனால் அவனை வேண்டாம் என்று ஒரேடியாக மறுக்க முடியவில்லை

ஒரு மணி நேரமாக ரூமில் நடைபயணம் நடந்து ஒரு வழியாக ஒரு வழியை கண்டு கொண்டால் எதுவாக இருந்தாலும் பார்த்து விடலாம் தாய் தந்தைக்காக ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவோடு அவள் தந்தையை காணச் சென்றாள்

அவள் போனபோது அமர்ந்திருந்த அதே இடத்தில் தான் இருவரும் அமர்ந்திருந்தனர் லட்சுமி முந்தானையால் கண்ணை துடைத்துக் கொண்டிருந்தார் பார்க்கும் போதே மனம் வலித்தது

இவள் சென்று இருவருக்கும் நடுவே அமர்ந்து கொண்டாள் ஏமா தங்கம் தூக்கம் வரலையா ஏன் எந்திரிச்சு வந்துட்டேன் என்று லட்சுமி தான் பதறினார் ஒன்னும் இல்லம்மா தூக்கம் வரல என்றால்

இருவரையும் மாறி மாறி பார்த்தாள் எப்படி சொல்வது என்று அவளுக்கு புரியவில்லை கண்ணன் தான் என்னடா என கேட்க அப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றாள்

இருவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி மகளை கட்டிக்கொண்டு அழுதே விட்டார் லட்சுமி கண்ணனும் மகளை அணைத்துக் கொண்டார் இனியாவது மகள் வாழ்வு சிறக்க வேண்டும் என இருவரும் மனதார அந்த கடவுளை வேண்டிக் கொண்டார்கள்

காலம் கடத்தாம உடனே மூர்த்திக்கு போன் போட்டு கூறிவிட்டார் கண்ணன் அவருக்கும் ஏகபோக குசி தான் அவர் வேகமாக ஓடி மகனிடம் கூறினார் அவன் சாப்பிட்டு விட்டு வாசலில் தான் நடந்து கொண்டு இருந்தான்

சரிப்பா ஒரு நல்ல நாளா பாருங்க போய் பொண்ணு பாத்துட்டு வரலாம் என்றான் அவரும் தலையாட்டி உள்ளே சென்றுவிட மீன் சிக்கிவிட்டது என மனதில் கூறி கமுக்கமாக சிரித்துக்கொண்டான்

இப்போதே அவளிடம் பேச வேண்டும் என பரபரப்பாக இருந்தது அவனுக்கு ஆனால் ஏற்கனவே தெளிவில்லாமல் இருப்பவளிடம் தானும் பேசி அவளை குழப்ப வேண்டாம் என நிச்சயம் முடியும் மட்டும் அமைதி காக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டான்

பெரியவர்கள் எதிர்கால திட்டமிடலில் இருக்க கட்டிலில் சாய்ந்து இருந்த தன்யாவும் கிணற்றுக்கு அடியில் அமர்ந்திருந்த மருதனும் இருவரும் தங்களின் கடந்த காலத்தில் பயணப்பட்டு கொண்டிருந்தனர்

நாமும் இவர்களுடன் பயணிக்கலாம் ஒரு சின்ன பிளாஷ்பேக்

ஆஆஆ அம்மா வலிக்குதும்மா அடிக்காதம்மா அடிக்காத இனிமேல் போக மாட்டோமா என ஊரைக் கூட்டும் அளவு கத்திக் கொண்டிருந்தாள் தன்யா

கண்ணன் வந்து லட்சுமியை பிடித்து பிரித்து விட்டார் ஏம்மா பிள்ளையப் போட்டு இந்த அடி அடிக்கிற என்றார் கண்ணனை பார்த்த ஓடிப்போய் கட்டிக்கொண்டு அப்பா என ஒரு மூச்சு அழுது தீர்த்து விட்டாள்

ஏன்மா என்ன ஆச்சு என்றார் என்ன செஞ்சான்னு உங்க புள்ளைட்டே கேளுங்க என்றார் லட்சுமி இன்னும் கோபம் அடங்காமல் உங்க பிள்ளை பசங்க கூட சேர்ந்துகிட்டு மாங்கா தோப்புக்கு போய் மாங்க புடிங்கிட்டு வந்து இருக்கா

அதுக்கு ஏன் பிள்ளைய போட்டு இந்த அடி அடித்து இருக்க ஹ்ஹ்ம்ம் போன முறையே அந்த தோப்புக்காரன் வந்து பொட்ட புள்ளைன்னு தான் விட்டேன் அடுத்த முறை வந்தா கட்டி போட்ருவேனு மிரட்டி விட்டு போனனான் மறுபடியும் அதே வேலையே பார்த்துட்டு வந்துருக்கா என்றார் மூச்சு வாங்க

தன்யா இனிமே நீ மருதன் கூட சேந்துட்டு அந்த தோப்புக்கு போக கூடாது சரியா என்றார் நல்ல புள்ளையாக தலை ஆட்டிக் கொண்டாள் இதுதான் தன்யா தாய் 100 முறை சொன்னாலும் கேட்காததை தந்தை ஒரு முறை சொன்னதும் கேட்டுக்கொல்வாள்

தன்யா இப்போதுதான் ஒன்பதாவதில் இருக்கிறாள் இன்னும் வயதுக்கு வராதது அவளுக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இருக்கிறது மருதனுடனும் அவனின் நண்பர்களுடனும் சேர்ந்து கொண்டு இவள் செய்யும் சேட்டைகள் ஏராளம்

தினமும் பள்ளி முடிந்ததும் அவனுடன் சேர்ந்து கொண்டு தோப்புக்கு போவது வயலுக்கு போவது வாய்க்காலுக்கு போய் குளிப்பது பசங்களுடன் சேர்ந்து வந்து கிரிக்கெட் விளையாடுவது என தினமும் எதையாவது செய்து தாயிடம் அடி வாங்கிக் கொள்வார் அது அவளுக்கு பெரிய விஷயம் ஆகவே இல்லை ஆனாலும் வலிப்பது போல கத்து கத்து என கத்தி ஊரை கூட்டி விடுவாள்

இவள் வயது பிள்ளைகள் எல்லாம் பெரிய மனுஷியாய் இருக்க இவள் மட்டும் வயதுக்கு வராமல் இன்னும் சிறுப்பிள்ளை போல சுற்றுவது அவள் தாய்க்கு கவலையாகவே இருந்தது

மருதனும் அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் இருந்தான் இருவரும் ஒன்றாகவே பள்ளிக்கு வருவது திரும்பி போவது என எப்பொழுதும் ஒன்றாகவே தான் ஊர் சுற்றி இருந்தனர் இதை அவன் தாய்க்கு தெரியாமல் படு சீக்ரட்டாகவே வைத்திருந்தான்

அவ்வளவு அடியும் வாங்கிட்டு சத்தமில்லாமல் போய் அந்த முக்கில் மருதனை கண்டுவிட்டு வேகமாக போய் அவனிடம் பாவாடையை தூக்கி காலில் விழுந்த அடியில் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார் அவன் பாவாடை இழுத்து விட்டு இப்படி தூக்கக்க கூடாது என கூறி வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு சென்றான் இப்படி அனைத்திற்க்கும் அவளுக்கு மருதன் தேவை ஆனால் அவளுக்கு தோல் கொடுக்க வேண்டிய சமயத்தில் அவன் இல்லாமல் போய்விட்டான்

காலம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்து விட்டது மருதன் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு காலேஜ் கோயம்புத்தூர் கல்லூரியில் ஹாஸ்டலில் சேர்ந்து விட்டான்

தன்யா பத்தாம் வகுப்பில் இருந்தால் பவித்ரா எட்டாவது தன் அண்ணன் கூடவே இருப்பதால் தன்யாவை ஏனோ பவித்ராவிற்கு பிடிப்பதே இல்லை

அவன் கோயம்புத்தூர் சென்ற பின் சிறகொடிந்த பறவையாக ஸ்கூல் ஸ்கூல் விட்டா வீடு என தன் கூட்டில் சுருண்டு கொண்டாள்

பத்தாவது போய் மூன்று மாதத்தில் பூப்பெய்து விட்டாள் அத்தனை நாட்கள் சிறு பெண்ணாக தெரிந்தவர் திடீரென பெரிய பெண்ணாக பொறுப்பானவளாகவும் மாறி விட்டாள்

தன்யா வயதுக்கு வந்து விசேஷமாக செய்தனர் காலேஜ் போய் அப்போதுதான் விசேஷத்திற்கு என லீவெடுத்து வந்திருந்தான் மருதன்

அவளை விட்டு பிரிந்து இருக்கும் போதே அவளைப் பற்றிய கண்ணோட்டம் மாறி இருக்க இன்று சேலையில் பார்த்ததும் தொப்புக்கடீர் என காதல் குளத்தில் குதித்து விட்டான் பிவெக்கால் போட்டு ஒட்டியது போல் மனதோடு ஒட்டிக் கொண்டால் தன்யா

ஆனால் தன்யாவிற்கு அதெல்லாம் தெரியவில்லை பல நாள் கழித்து பார்த்த நண்பனோடு ஆசை தீர பேசி கழித்துக் கொண்டாள் அவ்வளவே

காதலை இப்போது சொல்ல கூடாது அவளுக்கும் வயது வரவேண்டும் என மனதிற்குள்ளே பூட்டிக் கொண்டான் ஆனால் காதலும் பசி தூக்கம் போல தானே வந்தவுடனே உரியவரிடம் தெரிவித்து விட வேண்டும்

அவன் இப்போது சொல்லாமல் விட்டு இனி எப்போது சொல்லவே முடியாது என்பதை அவன் அறியவில்லை