• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராகம் 6

MK19

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
11
7
3
Tamil nadu
எல்லாம் நல்லபடியாக தான் சென்று கொண்டிருந்தது அவரவர் படிப்பில் பிசியாக இருந்தார்கள் காலச்சக்கரம் யாருக்கும் நிற்காமல் ஓடியது மூன்று வருடங்கள் போனதே தெரியவில்லை
விதியும் அவர்கள் வாழ்வில் பகடை விளையாட்டை விளையாட ஆயத்தம் ஆகி விட்டான்

தன்யா பிளஸ் டூ தேர்வு எழுதி முடிந்திருந்தால் மருதனும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே வேலை தேடிக் கொண்டிருந்தான் இந்த சமயம் தான் சிங்கப்பூரில் இருந்து வேலை அப்ளை செய்திருக்க அது கிடைத்தும் இருந்தது இருந்தும் போலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் தான் சுத்திக் கொண்டிருந்தான்

அவனுக்கு தன்யாவை திருமணம் செய்து அவளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் அதற்காக வெளிநாடு சென்று நன்றாக சம்பாதிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தான் ஆனால் ஊரையும் உறவுகளையும் விட்டு செல்லவும் மனம் வரவில்லை

இரண்டு மனமாகவே சுற்றிக் கொண்டு
இருந்தான் இந்த சமயம் தான் பேச்சி தன்யாவின் வீட்டிற்கு வந்திருந்தார்

தன் தூரத்து உறவில் அக்காவின் மகனுக்காக தன்யாவை பெண் கேட்டு வந்திருந்தார் தன் அண்ணியே வேறொருவருக்கு பெண் கேட்டு வந்திருக்க அவரின் மனநிலை நன்றாகவே புரிந்தது

லட்சுமிக்கு மருதனுக்கு பெண் குடுக்க ஆசை இருக்க ஆனால் அது நடக்க கூடாது என்பதற்காகவே இப்பொழுது வேறொருவருடன் தன்யாக்கு திருமணம் செய்ய பார்க்கிறார் பேச்சி

ஏன் தன்யாவை பிடிக்கவில்லை என்பதற்கெல்லாம் பேச்சியிடம் காரணமே இல்லை கண்ணனும் அப்படிஒண்றும் வசதி குறைவானவர்கள் இல்லை 30 பவுன் போட்டு கட்டிக் கொடுக்கும் அளவிற்கு அளவான வசதியானவர் தான் இருந்தாலும் பேராசை கொண்டிருந்தார் பேச்சி

தன் மகனுக்கு 100 பவுன் போட்டு கட்டி வைக்கலாம் என்று மனக்கணக்கு போட்டிருந்தார்

லட்சுமி சின்ன பெண் படிக்க வேண்டும் என எத்தனையோ முறை வேண்டாம் என்று மறுத்து விட்டார் இருந்தாலும் பேச்சியின் தொடர் படை எடுப்பால் வேறு வழி இல்லாமல் சரி பெண்ணை பார்த்துவிட்டு போகட்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தார்கள் கண்ணனும் லட்சுமியும்
ஆனால் மூர்த்தி இதை எதையுமே அறியவில்லை

மூர்த்தியிடம் லட்சுமி கூறவும் இல்லை இதனால் அவர்களுக்குள் சண்டை வேண்டாம் என நினைத்து மறைத்து விட்டார்

பேச்சியும் மூர்த்தியிடம் அக்கா செல்வி தன்யாவை கோயிலில் பார்த்து பிடித்து விட்டதால் லட்சுமியிடம் அஜய்க்கு நேராக சென்று பெண் கேட்டு இருக்கிறார் என்றே கூறினார்

பெண் பார்க்க மாப்பிள்ளையையும் அழைத்து வந்திருந்தார்கள் மாப்பிள்ளை பார்க்க லட்சணமாக அழகாகத்தான் இருந்தார் ஐடியில் வேலை வயதும் குறைவாகவே இருந்தது தன்யாவை படிக்க வைப்பதாக வாக்கும் கொடுத்தார்கள் பெண் வீட்டில் கேட்டதுக்கெல்லாம் தலையை தலையை ஆட்டினர்

ஆனால் ஒரே நிபந்தனை கல்யாணம் சீக்கிரமாக நடக்கனும் ஜாதகத்தில் பிரச்சினை உள்ளது என கூறினர்

அதற்கு கண்ணன் மனமே இல்லாமல் சரியென ஒப்புக் கொண்டார் இதில் மூர்த்திக்கு விருப்பமே இல்லை ஆனால் மாப்பிள்ளையின் முடிவில் தலையிட முடியவில்லை அதனால் அமைதியாக இருந்து கொண்டார்

இங்கு பேச்சுவார்த்தை முடிந்து கல்யாண தேதி குறித்து முடித்து விட்டார்கள் ஆனால் அதை அறியாமல் அங்கு ஒருவன் காதல் கடலில் நீந்தி கொண்டு இருந்தான்

கல்யாண தேதி குறித்து ஒருவாரம் கழித்து வந்தான் மருதன் வந்ததும் பெரிய இடியாக தலையில் இறங்கியது தன்யா கல்யாண செய்திதான் கேட்டதும் நொருங்கி விட்டான்

நேராக சென்று நின்றது தாயிடம் தான் அவர் தனக்கு உதவுவார் என நம்பினான் ஆனால் இத்தனைக்கும் காரண கர்த்தாவே அவர்தானே

இவ்வளவு வேகமாக தன்யாவுக்கு திருமணம் செய்ய நினைப்பதே இவனால் தானே செமஸ்டர் லீவுக்கு வரும்போதெல்லாம் அவளுடன் நேரம் செலவிடுவதை பல முறை கண்ணாலே பார்த்து விட்டார் அதிலும் பவித்ராவின் பூப்பெய்தும் விழாவில் மருதன் தன்யாவின் பின்னாலே சுற்றியது யார் கண்ணில் பட்டதோ இல்லையோ பேச்சி கண்ணில் பட்டு விட்டது

அதனால் காலம் தாழ்த்தினால் மகன் கை மீறி சென்று விடுவான் என பயம் வந்துவிட்டது அதனால் தான் இந்த அவசர கல்யாண ஏற்பாடு

பூஜையை ஆரம்பித்தவரிடமே போய் நிறுத்த சொன்னால் நடக்குமா

நேரே சென்று தாயிடம் தான் நின்றான்
அம்மா என்றான் உள்ளே போன குரலில் அதிலே அவர் சுதாரித்து விட்டார் அவனிடம் என்ன சொல்ல வேண்டும் என யோசித்து தான் வைத்து இருந்தார்

ஏம்பா ராசா என்ன வேணும்
மா உங்கிட்ட ஒரு விசயம் கேட்கனும் தன்யாக்கு திருமணம் முடிவு பண்ணிட்டாங்களாமா எனக்கு அவளை புடிச்சு இருக்கு என்றான்

உனக்கு பிடிச்சு இருக்கா ஐயோ ராசா முன்னமே சொல்லி இருக்கலாம்லயா இப்ப பேசி எல்லாம் முடிவு பண்ணதும் எப்படியா போய் கேக்குறது அது சங்கடம் இது ரெண்டு பக்கமும் நமக்கு சொந்தம் வேறயா வேண்டாம்யா அந்தப் புள்ளைய மறந்துறு என அழுவதுப் போல் முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டே எழுந்து சென்று விட்டார்

மருதனுக்கு என்ன செய்வது என தெரியாத நிலை தான் தன்யா வேண்டும் என உள்மனம் பெருங்குரல் எடுத்து அழுததது அவளை அடையும் வழி தெரியவில்லை அவளிடம் காதலை கூறி இருந்தால் கூட பரவாயில்லை தன் காதல் சொல்லும் முன்பே காணல் நீராய் போனதே என மனம் வெதும்பியது

அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டது போல் மூச்சு விடவே சிரமப்படுவது போல் ஒரு நிலையில் இருந்தான்

ஏனோ தந்தையிடம் கூற முயலவில்லை விதி அப்படி நடக்க விடுமா இரு நாட்களாக யோசித்து ஒரு முடிவுடன் வீட்டில் இருந்து கிளம்பி
தான்யா வீட்டை நோக்கி நடந்தான்

போகும் வழியில் கண்ணனை தோட்டத்தில் இருந்தார் அவரைப் பார்க்கத்தான் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தான்

அவரைப் பார்த்ததும் அவரை நோக்கி நடந்தான் மாமா என்றான் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து இருந்தவர் திரும்பி அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே வாப்பா மருதா உக்காரு என அருகே அமர்த்திக் கொண்டார்

சிறிது நேரம் அமைதியாகவே இருந்தான் ஏங்க மாமா தன்யாக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கீங்களா மா என்றான்

ஆமா மருதா மாப்பிள்ளை பாத்து பேசி முடிச்சுட்டோம் உனக்கு தெரியுமே உங்க சொந்தகாரங்க அஜய் அவர்தான் தன்யாவையும் மேலே படிக்க வைக்கிறேன் சொல்லிருக்காங்க என்றார்

மாமா என்று அவன் ஏதோ கூற வர மருதா என‌ அவன் கைப்பிடித்து எனக்கு பையன் இல்லை அந்த இடத்துலே இருந்து கல்யாண வேலைய நீ தான் பாத்துக்கணும் என்றார்

மருதன் தன்யாவின் திருமணத்தை நிறுத்த சொல்லலாம் மாமாவிடம் தன் மனதில் உள்ளதை கூறலாம் என வந்தான்

கல்யாணத்தை நிறுத்த சொல்லிக் கூற வந்தவனிடமே கல்யாண பொறுப்பை தலை மேல் தூக்கி வைத்தார் இனி என்ன கூறுவது என்ன செய்வது என தெரியாமல் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு எங்கு செல்கிறோம் எனத் தெரியாமல் கால் போன‌ போக்கில் நடந்து எப்போதும் தன்யாவும் மருதனும் வந்தமரும் வாய்க்கால் மேட்டில் வந்து அமர்ந்து கொண்டான்

ஏதேதோ சிந்தித்தான் மனம் ஒரு நிலையில் இல்லை மனம் ஒரு குரங்கு போல் கெட்ட செயல்களையும் மனதில் பதித்தது எழுந்து நின்று வாய் விட்டு கத்தினான் இன்னும் மனம் பாரம் குறையவில்லை

இனி இங்கிருந்தால் தன்னால் தன்யாவின் மானத்திற்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடும் என இங்கிருந்து சிங்கப்பூருக்கு கிளம்ப முடிவெடுத்துவிட்டால் இன்னும் சிங்கப்பூருக்கு செல்ல நாட்கள் இருந்தும் அனைவரிடமும் கூறிவிட்டு எவ்வளவு சீக்கிரமாக செல்ல முடியுமா சென்று விட வேண்டும் என தீர்மானத்தோடு வீடு திரும்பினான்


கல்யாண அமளிதுமளியில் யாருமே தன்யாவை கண்டு கொள்ளவில்லை அவளுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை ஏன் என்று லட்சுமி கேட்டதற்கு பதில் தெரியவில்லை

அவளுக்கு தான் சிறு வயதில் இருந்தே தந்தை சொல்லைத் தவிர்த்து பழக்கம் இல்லையே அதனால் இதை தவிர்க்கவும் முடியவில்லை செய்து கொள்ளவும் முடியவில்லை

மருதனை அதிகமாக தேடியது ஆனால் அவன் இங்கிருக்கானா இல்லை கோயம்புத்தூரில் இருக்கிறானா என்பதே அவளுக்கு தெரியவில்லை மனம் அவனைத் தான் தேடி ஒடியது அவனிடம் சென்று இந்த திருமணத்தை நிறுத்த சொல்லலாம் என்று நினைத்தால் ஆனால் அவனும் அதற்கு தான் போராடுகிறான் என்பதை அவள் அறியவில்லை

சிறு பெண் அதனால் அவன் மேல் உள்ளது என்ன என்று கூட அவளுக்கு பிரித்தறிய முடியவில்லை இப்படியே நாட்கள் கழிய மருதன் சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏற்பாட்டில் இருந்தான்

இன்று மருதன் அனைவரிடமும் கூறிவிட்டு கிளம்பி விட்டான் நேராக கோயம்புத்தூர் தன் அறைக்கு தான் சென்றான்

அரவிந்த் தான் வந்து கதவை திறந்து அழைத்து சென்றான் மருதனின் காதல் கதையை அறிந்த ஒரே ஜீவன் அவன் தான் அங்கு நடந்த அனைத்தையும் கூறினான் ஆம்பளை பசங்க அழக்கூடாது என்பதை எல்லாம் மறந்து அழுதே விட்டான்

அரவிந்திற்கு அவனை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றிருந்தது வெளிநாடு போக வேண்டாம் என எத்தனையோ முறை சொன்னாலும் கேட்க மறுத்தான் முடிவு செய்து கொண்டான் இனி மாற்ற மாட்டான் என புரிந்து விட்டு விட்டான்

பேச்சிக்கு சந்தோசமாக இருந்தது மகன் வெளி நாடு சென்று விட்டான் இனி அவன் வருவதற்குள் அவள் திருமணம் முடிந்து குழந்தை குட்டி என மாறி விடுவாள் மகனுக்கு நல்ல வசதியாக பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என மனக்கோட்டை கட்டினார் ஆனால் அது என்றுமே மனக் கொட்டை தான் நிஜத்தில் நிறைவேறாது என்பதை அப்போது அவர் அறியவில்லை

பேச்சி போல் தான் நம் நாட்டில் பலப் பெற்றோர் மகனுக்கு மனைவி தேடுவதை விட தனக்கு மருமகளை தான் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் அனைத்தையும் குழந்தைகள் சந்தோஷத்திற்காக செய்பவர்கள் ஏனோ திருமண விசயத்தில் மட்டும் அதை எதிர் பார்ப்பதில்லை

காதலை சொல்லாத காதல் ஜோடிகள் ஒருவரைப் பற்றியே இன்னொருவரின் சிந்தனையே இருந்தது


இன்னார்க்கு இன்னார் என்று மனிதன் ஜோடி சேர்ப்பதில்லை அது ஆண்டவனின் செயல் யாருக்கு யார் என்பதை என்றும் நாம் அறிய முடியாது.....