• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராகம் 7

MK19

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
11
7
3
Tamil nadu
கோயம்புத்தூர் விமான நிலையம் மருதன் கிளம்பி விட்டான் வந்து விமானம் ஏற்றி விடுவதாக கூறிய தாய் தந்தையை ஏதேதோ கூறி விட்டு வந்தான் அவர்களைப் பொருத்தவரை அவன் சிங்கப்பூர் சென்று பக்கத்து நாட்கள் ஆகிவிட்டது

மருதா யோசிச்சு பாரு நீ கண்டிப்பா போகணுமா என்றான் ஆமா டா என்னால அவளை வேற ஒருத்தனுக்கு பொண்டாட்டியா பாக்க முடியாது என்றான்

அவனை கட்டி அணைத்து ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தான் இதோ இயந்திரப் பறவையில் ஏறி கண்மூடி அமர்ந்து கொண்டான் காலத்தின் பாதையில் பயணிக்க முடிவு செய்து கொண்டான் காலம் அவன் இழந்த பொக்கிஷத்தை திருப்பி அவன் கையில் சேர்க்கும் ஆட்டத்தை ஆடத் தொடங்கி இருந்தது

நாளை காலை திருமணம் மருதன் சிங்கப்பூர் வந்து வேலையிலும் சேர்ந்து விட்டான்

காலை திருமணம் வீடு கலைக்கட்டி தான் இருந்தது ஆனால் திருமணப் பெண்ணிடம் தான் கலை இல்லை மனம் என்னவென்று சொல்ல முடியாது பாரமாக இருந்தது அவளால் எதிலுமே ஒன்றமுடியவில்லை எல்லாரும் அவளுக்கு பயம் என விட்டு விட்டனர்

திருமண நாளும் விடிந்தது தன்யாவின் மனம் ஏதோ தவறாக நடக்கப் போவது போல் படபடப்பாகவே இருந்தது

திருமணம் பேசி முடிவு செய்து இரண்டு மாதங்கள் ஆகியும் அஜய் இன்று வரை அவளிடம் பேசிபழக முயலவில்லை அது இவளுக்கு பெரிதாக தெரியவில்லை

இதோ இன்னும் சற்று நேரத்தில் திருமணம் தன்யாவை முழுமையான திருமண அலங்காரத்தில் மணமேடையில் அமர வைத்திருந்தனர் முதலில் மணமகனை அழைக்க பெண்ணை அமர வையுங்கள் மாப்பிள்ளை வந்து விடுவார் எனக்கு கூறி முதலில் தன்யாவை அமர வைத்தனர்

முகூர்த்த நேரம் நெருங்க நெருங்க மண்டபமே பதட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது மணமேடையில் தன்யா அமர்ந்திருக்க அருகே அமர்ந்து தாலி கட்ட வேண்டிய அஜயை காணவில்லை அதனால் வந்த பரபரப்பு

அஜய் கல்லூரி படிக்கும் முதல் அவனுக்கு வேறொரு பெண்ணுடன் காதல் இருக்க வேற்று மதத்தினர் பெண்ணை அவன் விரும்புவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவசர அவசரமாக கல்யாணம் ஏற்பாடு தொடங்கி விட்டனர்

திருமணம் முடிந்தால் மனம் மாறி விடுவான் என முட்டாள்தனமாக முடிவெடுத்து விட்டனர் இதை அனைத்தும் பேச்சிக்கும் தெரியும்

நேற்று இரவு மண்டபத்தில் கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு என் காதலியுடன் வாழ சென்று விட்டான் இது அறியாதவர்கள் காலையில் அவசர அவசரமாக அவனை தேடிக் கொண்டு இருக்கிறார்கள்

மண்டபம் முழுவதும் இந்த செய்தி தீயாக பரவியது லட்சுமி ஒருபுறம் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார் தன் மகள் வாழ்வில் இனி எப்படி இருக்கும் கண்ணன் ஒருபுறம் இடிந்து அமர்ந்து விட்டார்

அவசர அவசரமாக திருமண ஏற்பாட்டை கவனித்தது இதற்கு தான் என்பது இப்பொழுதுதான் இவர்களுக்கு புரியவே வந்தது

அடுத்தது என்ன எப்போதும் போல் கூட்டத்தில் ஒருவன் திடீர் மாப்பிள்ளையாக ஆகி விடுவான் அப்படித்தானே ஆனால் இதற்கு கண்ணன் சம்மதிக்கவில்லை தன் பெண் இக்கட்டான சூழ்நிலையில் ஒருவரின் கரம் கோர்ப்பதை அவர் விரும்பவில்லை ஆனால் வேண்டாம் என மறுத்துவிட்டார் இதில் தன்யாவிற்கு மிகவும் சந்தோஷம்தான்

இந்த பரபரப்பில் இருக்கும் போது அஜயின் தந்தைக்கு போன் வந்தது போனில் சொல்லப்பட்டு செய்தி யாருமே எதிர்பார்க்காதது தான் காதலிக்காக ஊரை விட்டு ஓடிய அஜய் லாரி ஒன்றில் மோதி உயிரிழந்து விட்டான்


இதைக் கேட்டதும் இத்தனை நேரம் அமைதியாக தங்கள் மேல் தவறு என பேசாம இருந்த செல்வி மகன் இறந்தது தெரிந்ததும் இது அத்தனைக்கும் தன்யாவின் ராசி தான் காரணம் என மனதே இல்லாமல் ஒரு சிறுப் பெண் மேல்
பழி சுமத்தினார்

இவ்வளவு நேரம் அவளை பாவமாக பார்த்து இருந்த ஊர் ஜனங்கள் கூட இப்போது அவள் ராசியால் தான் இப்படி ஆகிவிட்டது என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசிச் சென்றனர் இது இவளின் ராசியா இல்லை இவள் வேண்டாம் என்று வேறுப் பெண்ணை தேடிச் சென்றவன் விதியா

இது எப்படி பட்ட மூடநம்பிக்கை பெண்ணின் ராசி தான் காரணம் என்று நம்புகிறது இந்த முட்டாள் மனிதர்கள் விதியின் ஆட்டத்திற்கு இந்த பாவப்பட்ட பெண் வர்க்கம் என்ன செய்யும்

இதோ தன்யாவை மனம் புண்படும்படி வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிட்டு கலைந்து சென்றனர் அனைவரும் அவ்வளவு தானே அவர்கள் வேலை முடிந்தது ஒருவரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வேதனை படுத்தி விட்டு அவரவர் வேலையை காணச் சென்று விடுவார்கள் ஆனால் பாதிக்கப்பட்ட நபரின் நிலை அவரின் மனநிலை என எதுவுமே யாருக்குமே புரிவதில்லை

இனி அப்பெண்ணின் வாழ்க்கை அவ்வளவு தான் ஒரே அடியாக அடித்து முடக்கி விட்டனர்

திருமண மண்டபத்தில் இருந்து வீடு திரும்பினர் லட்சுமியும் கண்ணனும் தீயில் போட்ட புழுவாக துடித்து போய் விட்டார்கள்

தன்யா வந்ததும் ரூமில் அடைந்தது தான் வெளியே எதற்குமே வரவில்லை அவளுக்கு திருமணம் நின்றது சந்தோசமாக தான் இருந்தது இனி படிக்க போகலாம் என நினைத்தால் ஆனால் அஜய் இறப்பிற்கு தன்னை காரணமாக ஆகியதை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது‌

மூர்த்தி வந்து இருவரையும் சமாதானப் படுத்தி ஆறுதல் கூறி இரவுணவையும் வாங்கி வந்து சாப்பிட வைத்து அங்கையே தங்கிக் கொண்டார் வரும்போது பவித்ராவின் அழைத்து வந்தார்

பவித்ரா தன்யாக் கூடவே இருந்து அவளிடம் பேச்சுக் கொடுத்து சாப்பிட வைத்து அவள் கூடவே படுத்துக் கொண்டாள் அண்ணன் இல்லாத குறையை நிவர்த்தி செய்து இருந்தாள்

பேச்சி அக்காவின் வீட்டிற்க்கு சென்று விட்டார் இறப்பு வீடு சடங்கெல்லாம் முடிந்து தான் வீடு திரும்புவார்


அரவிந்திற்கு நண்பர்கள் மூலம் தன்யாவின் திருமணத்தில் நடந்தது எல்லாம் அறிந்தவன் உடனே மருதனுக்கு அழைக்க போன் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது

பிறகு அவனே அழைத்தும் தன்யாவைப் பற்றி கூறும் போதெல்லாம் அதைப் பற்றி பேசாமல் தடுத்து விடுவான் இவனும் பலமுறை கூற முயற்சி செய்தும் கூற முடியாமல் போய்விட்டது

பேச்சியும் யாரின் மூலமும் தன்யாவின் திருமணம் நின்ற செய்தி மருதனிடம் சென்று அடையாமல் பார்த்துக் கொண்டார்

விதியோ பேச்சியின் சதியோ திருமண செய்தி மருதனுக்கு தெரியவே இல்லை

கூண்டுக்கிளி போல் எப்போதும் ருமியிலே அடைந்து கிடந்தாள் ஒரு இறுக்கமான சூழலை குடும்பத்தில் உலாவி வந்தது இப்படியாகவே ஒரு மாத காலம் அடைவது பிளஸ் டூ ரிசல்ட் வந்திருந்தது

நல்ல மதிப்பெண் எடுத்து இருந்தால் பல நாட்களுக்குப் பின் கண்ணன் தன்யாவிடம் பேச சென்றார் தன்யா என்றார் குரல் கரகரத்தது அப்பா என்று சென்று கட்டிக் கொண்டாள்

அவருக்கு தன்னால் தானே தன் மகளுக்கு இப்படி ஒரு சூழல் என குற்ற உணர்வு அதனால் மகள் முகத்தில் எப்படி முளிப்பது என தெரியாமல் பேசாமல் இருந்தால்

ஆனால் அதை அறியாத தன்யா தந்தையும் தன்னை ராசி இல்லாதவளாக நினைத்து விட்டார் என நினைத்து மனதில் போட்டு வேதனை அடைந்தாள்

மகள் அழும் வரை விட்டு முதுகை நீவி விட்டார் மகள் தலையை கோதி நீ ஏம்மா அழுகிறேன் உன்னை விட்டுட்டு போறவன் தானே உன் ராசியால ஒன்னும் நடக்கல யாரு என்ன சொன்னாலும் என் பொண்ணு எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் என் பொண்ணா எப்பவும் என் கூடவே இருக்கணும் உனக்கு எந்த குறையும் இல்லாம அப்பா பார்த்துக்கிறேன் என்றார் அதுவே அவளுக்கு பெரிய பலமாக இருந்தது

இங்கப் பாரு தன்யா எல்லாம் பிரச்சினையும் தள்ளி வைச்சுட்டு படிக்கனும்னு ஆசைப் பட்டதை படி என்றார்

அவளுக்கும் அது தான் சரி எனப் பட்டது அதனால் இந்த ஊரை விட்டு சற்று தள்ளி போய் படிக்கிறேன் என கூறி கோயம்புத்தூரில் டீச்சர் டிரையினிங் ஹாஸ்டலில் தங்கி படித்தால்


லீவிற்கு வரும் போது தெரிந்தவர்களை சந்திக்கும் போதெல்லாம் ஏதோ பாவப்பட்ட ஜென்மத்தை போல் பார்ப்பதும் தன் முகத்தில் முழித்தாள் கூட ராசி ஒட்டிக் கொள்ளும் போல் நடப்பதால் மிகவும் மனவருத்தம் கொண்டாள்

ஒரு நாள் தாய் ஏதோ செய்து அதை பவித்ராவிற்கு குடுக்க சொல்ல அதை எடுத்துக் கொண்டு பேச்சி வீடு நோக்கி சென்றாள்

தூக்கு வாலியை பவித்ரா கையில் கொடுக்க வெடுக்கென்று பிடிங்கி பவித்ரா அவக் கையிலே இருந்து எதுவும் வாங்கக் கூடாது அவளே ராசி இல்லாதவ என வெடுக்கென்று பேச அதிலிருந்து தான் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கொண்டாள்

தன் அத்தையே அப்படி நினைக்க இனி வெளி ஆட்கள் சொல்லவா வேண்டும் அதனால் எங்கும் எதற்கும் செல்ல மாட்டாள்

மூன்று வருடங்கள் டீச்சர் டிரையினிங் முடித்து அங்கேயே வேலை தேடியவளை ஒத்த புள்ள நீயும் வெளி ஊரூலையே இருந்துக்கறே என சங்கடப் பட தாய்க்காக ஊருக்கே வந்து விட்டாள்

அதன் பிறகு எத்தனையோ மாப்பிள்ளை வந்தும் திருமணம் என்ற ஒன்றே வேண்டாம் என மறுத்து விட்டாள்

என்னதான் சிரித்து கடந்து போக கற்றுக் கொண்டாலும் மனதில் வலி ஆறாத வடுவாக பதிந்து தான் போனது வெளியில் இருந்து பார்த்தால் சின்ன விஷயமாக தெரியும் ஆனால் அவரவருக்கு தான் தெரியும் வலியின் வீரியம்

இருவரும் கடந்த கால நினைவிலிருந்து மீண்டு வந்திருந்தனர் ஆனால் அது தந்த வலியில் இருந்து மீள முடியவில்லை

தான்யா வின் கதையெல்லாம் அரவிந்த் பவித்ரா மூலம் அறிந்து இருந்தான் மருதன்

இனியாவது அவளை சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து கொண்டான் மருதன்

தன்னைப் பிடிக்காத அத்தை வீட்டிற்கே செல்லப் போகிறோம் இன்னும் என்னென்ன பேச்செல்லாம் கேட்ட போகிறோமோ அதற்கு தயாராக இருக்க வேண்டும் என தன்யா
நினைத்து கொண்டாள்

இதில் யார் நினைத்தது நடக்கும் எல்லாம் விதியின் கரங்களில் ? ? ?