மனிதர்கள் என்ன தான் மோசமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்திருந்தாலும் அந்த நினைவுகளை விட்டு மீண்டு வர முடிவதில்லை
நாம் மறக்க நினைக்கும் நினைவுகளை தான் சுற்றி இருப்பவர்கள் அதையே கேட்டு கேட்டு அதிகப்படுத்துவார்கள் மன காயத்தை மட்டும் யாரும் ஆறவே விடுவதில்லை
அது போல தான் தன்யாவையும் பாவமா பார்ப்பது திருமணம் என்றால் அவளிடம் சொல்லாமல் இருந்து கொள்வார்கள் இதை எல்லாம் பார்த்து தான் தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டாள்
அப்பப்போது மருதனின் நினைவு வராமல் இல்லை அந்த சூழ்நிலையில் மருதன் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என எண்ணாமல் இருக்க முடியவில்லை
அவனின் அரவணைப்பு தேவைப் பட்டது இந்த ஊரையே விட்டு விட்டு அவனிடமே சென்று தஞ்சம் கொள்ள சொல்லி கெஞ்சியது மனம் அதற்கெல்லாம் பெயர் அப்போது புரியவில்லை என்றாலும் நாட்கள் செல்லச் செல்ல புரிந்து கொண்டாள் அவன் மீது இருந்த நேசத்தை
அவன் மீது இருக்கும் நேசத்தை தெரிந்து கொள்ளாமல் இருக்கும்போதே வேறொருவரை மணக்க முடியாமல் தவித்தாவள் அவன் மீது இருக்கும் நேசத்தை புரிந்த பிறகு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய எப்படி சம்மதிப்பால்
. அதற்காக மருதனை திருமணம் செய்யவும் நினைக்கவில்லை அதற்கு காரணமே பேச்சிதான் அவர் மகளை தன் கையில் இருக்கும் பாத்திரத்தை வாங்க விடாதவர் மகனுக்கு மனைவியாக்கியிடுவாரா மாட்டார் அதனால் அவன் மீது இருக்கும்
நேசத்தை மனதில் உள்ள பூட்டி வைத்துக் கொண்டால் அவனை திருமணம் செய்ய
ஒருனாலும் நினைத்துப் பார்க்க மாட்டாள்
ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க விதி முடிவு செய்து விட்டது
பழைய நினைவுகளுடனே கண் மூடினால் தன்யா இனியாவது மருதனுடன் வாழும் வாழ்கை சிறக்க வேண்டும் என கடவுளிடம் ஒரு ஆயிரம் முறை வேண்டிக் கொண்டாள்
மருதனுக்கு பழைய நினைவுகள் தான் தன்யாவை விட்டு விட்டு சிங்கப்பூர் போயிருக்கக் கூடாது என பலமுறை அவனை அவனே திட்டிக் கொண்டான் வெளிநாடு செல்லாமல் இருந்திருந்தால் அந்த நேரத்தில் தானே அவளை திருமணம் செய்து இருப்பான்
யாருக்காக எதற்காகவும் நிற்காமல் நிலாவை விரட்டி விட்டு மேலெழும்பி இருந்தான் சூரியன் .
காலை வேலை உணவை முடித்துக் கொண்டு தந்தையும் மகனும் பெண் பார்க்க செல்வதைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்
நாளை மாலை பெண் பார்க்க செல்வதற்கு முடிவு செய்தனர் முதல் வேலையாக கண்ணனிடம் தெரிவித்தனர் பவித்ராவின் வீட்டிற்கு மூர்த்தியும் பேச்சியும் நேரே சென்று அழைத்து வந்தார்கள்
இதோ பெண் பார்க்கும் படலமும் தொடங்கியது பவித்ரா மதியமே வந்து விட்டாள் அவள் வந்து தன்யாவை அலங்கரித்து கொண்டு இருந்தாள்
மாப்பிள்ளை சார்ப்பாக அவன் தாய் தந்தை தம்பி தங்கை தங்கை வீட்டுக்கார் அவ்வளவு தான் சொந்த பந்தங்களை எல்லாம் கல்யாணத்துக்கு மட்டுமே அழைக்கலாம் என கூறி விட்டார் மூர்த்தி
எல்லாமே மூர்த்தி கட்டுப்பாட்டில் தான் இருந்தது அவரை மீறி பேச்சியால் ஒன்றும் செய்ய முடியவில்லை அதுவும் ஒரு புறம் அவருக்கு கடுப்பாக இருந்தது திருமணத்தை நிறுத்தும் வழி தெரியாமல் அமைதியாகவே இருந்தார்
ஊர் சார்பில் ஊர் பெரியவர்கள் மட்டும் சிலர் இருந்தனர் பெண்ணை அழைத்து வரச் சொல்ல நல்ல பச்சை நிறத்தில் பட்டு உடுத்தி இருந்தாள் பவித்ராவின் கை வண்ணத்தில் தேவதையாகவே ஜொ
லித்தாள்
மருதனுக்கு அவளைப் பார்த்ததும் கண்ணை அங்கு இங்கு திருப்ப முடியவில்லை இப்போதே அவளை அள்ளிச் சென்று மார்ப்புக் கூட்டில் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும் போல் இருந்தது
கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனை அகிலன் தான் தொடையில் தட்டி இந்த உலகிற்கு இழுத்து வந்தான் மலங்க மலங்க முழித்தவனை பார்த்து தம்பியும் தங்கையும் சிரிக்க இவனும் அசடு வழிய சிரித்து தலையை கோதிக் கொண்டான்
தன்யாவும் மருதனை இடையிடையே பார்த்துக் கொண்டாள் ஆனால் அவளா வெளிப்படையா தெரியவில்லை
பெரியவர்கள் சேர்ந்து அடுத்து இரண்டு வாரம் கழித்து நிச்சயதார்த்தம் அதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு கல்யாணமும் பேசி முடிவு செய்யப்பட்டது
கல்யாணத்தை சிம்பிளாக வைத்துக் கொள்ளலாம் என கண்ணன் கூற அதை மறுத்து விட்டான் மருதன் இருவருக்கும்
இது முதல் கல்யாணமே அதனால் விமர்சையாக செய்ய வேண்டும் என கூறினான்
மருமகன் ஆசைப்பட்ட பின் அதற்கு அப்பில் உண்டா உடனே ஒத்துக்கொண்டார் கண்ணன் அவருக்கும் ஒரே பிள்ளை அவள் திருமணத்தை பெரிதாக செய்யவே ஆசைப்பட்டார்
அடுத்தடுத்து வேலைகள் துரிதமாக நடந்தது இரண்டு வாரம் இரண்டே நிமிடம் போல் ஓடிவிட்டது இதோ மருதனும் தன்யாவும் எதிரெதிரே அமர்ந்து இருக்க தாம்புலத் தட்டு மாற்றப்பட்டது இருவருக்கும் மோதிரம் கொடுக்க இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டனர்
நிச்சயதார்த்தம் கோவிலில் தான் நடந்தது நிச்சயம் முடிந்தது பவித்ராவும் தன்யா கோயில் குளத்தின் படியில் அமர்ந்திருந்தார்கள்
தன்யா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீயே எனக்கு அண்ணி நினைக்கும் போது குஸியா இருக்கு என்றால் பவித்ரா
ஏன் பவி அத்தை எப்படி என்ன கட்டிக்க சம்மதிச்சாங்க என்றாள் அதெல்லாம் அண்ணா பேசற மாதிரி பேசி கரட் பண்ணிட்டான் நீ அதை பத்தி எல்லா யோசிக்காத எங்க அண்ணனை பத்தி மட்டும் யோசி என்றால் கிண்டலாக
உங்க அண்ணனப் பத்தி என்ன யோசிக்கிறது என்றால் ஒன்றும் புரியாமல் ஹ்ஹ்ம்ம் எங்க அண்ணனை எப்படி சந்தோசமா வச்சிக்கனும்ணு யோசி நீ இன்னும் சின்னப் பிள்ளையாக இருக்க தன்யா எங்க அண்ணன் பாடு பாவம் தான் என்றால் சிரித்துக் கொண்டேன்
அடிப்பாவி அப்பாவியாட்டம் இருந்துட்டு என்ன பேச்சு பேசுற என்றால் தன்யா ஹேய் தன்யா இந்த விஷயத்துல நான் உனக்கு சீனியர் எதாவது டவுட் இருந்தா என்ன கேக்குற சரியா என்றாள்
சரிங்க சீனியர் என்றாள்
பவித்ரா தன்யா கையைப் பிடித்து கொண்டு தன்யா எங்க அண்ண மனசுல நீ தான் இருக்க எனக்கு என்னமோ உனக்காக தான் அண்ணா வெளி நாட்டுக்கு போயிருக்கும்னு தோணுது எங்க அண்ணண நல்லா பாத்துக்கோ என்றாள்
ஹே பவி என்ன இது சிரியஸா பேசுற அது உனக்கு செட்டாகல நீ எதுக்கும் கவலைப்படாத இனிமே எனக்கு உங்க அண்ணன் தான் உங்க அண்ணனுக்கு நான் தான் துணை எப்பவும் உங்க அண்ணன சங்கடப்பட வைக்க மாட்டேன் என்றாள் கைப்பிடித்து
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது இவர்களை பார்த்துவிட்டு அருகில் வந்தான் மருதன் அனைவர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு வருவதற்குள் அவனுக்கு போதும் போதும் என ஆகிவிட்டது இன்று எப்படியாவது தன்யாவை தனியாக சந்திக்க வேண்டும் என முடிவுடன் தான் வந்திருந்தான்
அரவிந்திடம் அனைவரையும் பார்த்துக்க சொல்லி விட்டு இவளைக் காண ஓடி வந்திருந்தான்
மருதன் வந்து தன்யா பக்கத்தில் சற்று இடைவெளி விட்டு அமரந்தான் இதை பார்த்து பவித்ரா சிரிக்க என்னடி சிரிக்கிற என்றான்
ஒன்னும் இல்லப்பா ஒண்ணுமே இல்ல என கிண்டலாக கூறிவிட்டு இருவருக்கும் தனிமை தந்து சென்றுவிட்டாள்
தன்யா குளத்தையை பார்க்க மருதன் தன்யாவையே பார்த்தான் எவ்வளவு நேரம் தான் பார்த்தாலும் அவனுக்கு சலிக்கவே இல்லை ஆணின் குறுகுறு பார்வையால் நெளிந்தாள்
அவள் நெளிவதைக் கூட ரசித்துப் பார்த்தான் சிரித்து கொண்டே தலையை கோதி விட்டான்
தன்யா திரும்பி மருதன் முகத்தை ஆழமாக பார்த்தால் அவன் இரு புருவங்களை தூக்கி என்னவென்றான் ஒன்றும் இல்லை என தலையை வேகமாக ஆட்டி திரும்பிக் கொண்டாள்
என்ன ஸ்ரீ மேடம் என்ன ஒரே யோசனை என்றான் யாழனப் பத்தி தான்
என்றாள்
யாழனப் பத்தி என்ன யோசிக்கிறீங்க
என புருவம் சுருக்கி கேட்டான்
ஒவ்வொரு கேள்வியின் போதும் அதற்கு தகுந்த மாதிரி மாறும் புருவத்தையே பார்த்தால் மருதன் தன்னை பார்ப்பது தெரிந்து திரும்பி கொண்டாள்
ஏங்க யாழன் எனக்காக தான் இங்க இருந்து வெளிநாடு போனீங்களா என்றாள் ஏன் ஏன் திடீர்னு கேட்கிற என்றான் இல்ல பவி தான் சொன்னா
ஸ்ரீ உன்கிட்ட சொல்றதுக்கு நிறைய விஷயம் இருக்கு ஆனா அதையெல்லாம் நான் இப்ப சொல்ல மாட்டேன் நீ என்கிட்ட என் பொண்டாட்டியா முழுசா வரணும் அப்ப தான் என் மனசுல இருக்குறதெல்லாம் சொல்லணும் எனக் கூறினான்
தன்யாவிற்க்கு சட்டுனு கண்கள் கலங்கிவிட்டது நிமிர்ந்து மருதனை பார்த்தால் ஏன்மா எதுக்கு அழுகுற என்றான் கண்ணீரை துடைத்து விட்டு
எனக்கு எல்லாரும் சொல்ற மாதிரி என் ராசியால உங்களுக்கு ஏதாவது ஆயிருமோனு பயமா இருக்கு யாழன் என்றாள்
அவனுக்கு மனமே பாரமாகிவிட்டது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மை என இந்த அப்பாவி பெண்ணையே நம்ப வைத்து இருக்கிறார்களே என்று
அவள் முகத்தை கையில் ஏந்தி கொண்டான் அவள் கண்ணையே ஊடுருவி பார்த்தான் இங்க பாரு ஸ்ரீ எல்லாரும் உன்ன பலவீனப்படுத்த அப்படி சொல்றாங்க ஆனால் அப்படி நீ பலவீனமாய் இருக்க கூடாது நீ என்னவள் மருதயாழன் பொண்டாட்டி கெத்தா இருக்கணும் இந்த மாதிரி அழுக கூடாது என்றான் கண்ணீரை துடைத்து விட்டான்
நீ ஒன்னும் ராசி இல்லாதவள் இல்ல உன்னைய வேணாம்னு சொல்லிட்டு போணானே அவன்தான் ராசி இல்லாதவன் ஆனால் எல்லாரையும் விட நான் தான் ரொம்ப லக்கியானவன் என்றான்
தன்யா புரியாமல் பார்க்க என்ன பார்க்கிறாய் என்று கூறி அவள் கைபிடித்து தன் கையோடு கூட கோர்த்துக் கொண்டான் இந்த கையை பிடிக்கிற பாக்கியம் எனக்கு தானே கிடைச்சிருக்கு அப்ப நான் லக்கியானவன் தானே என்றான் சிரித்துக் கொண்டே
சட்டுனு இரண்டு கன்னங்களும் ரோஜா இதழ் போல் சிவந்து விட்டது அதை பார்த்து மருதனுக்கு உடம்பெல்லாம் புதிய ஹார்மோன் உற்பத்தியாகியது
இத்தனை பேச்சுகளிலும் அவள் முகத்தை விடாமல் அவன் கரங்களில் தான் வைத்திருந்தான் மெதுவாக நெருங்கி நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் அதுவே கூறியது அவனின் உரிமையை
அனைவரும் வீட்டிற்கு கிளம்ப ஜோடி புறாக்களை பவித்ரா தான் வந்து அவர்கள் கூட்டிலிருந்து பிரித்து கூட்டி வந்தால்