லவ் 1
இது என்னோட இரண்டாவது தொடர் கதை.. நம்ம வைகை தள மக்களுக்காக இதை திரும்பவும் இங்கே பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி…
நிறை குறை கூறி ஊக்கம் அளிக்கணும்…
ரொம்ப எதார்த்தமான கதைக்களம்.. தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் அனைவருக்கும் நன்றி… ஒருநாள் விட்டு ஒருநாள் கண்டிப்பா எபிசொட் வந்துடும்… அதனால தைரியமா படிங்க… கண்டிப்பா உங்களை ஏமாத்த மாட்டேன்...
வாங்க கதைக்குள்ள போகலாம்…
அந்த அதிகாலை (8மணி ) பொழுதில்…
'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா'
தன் மொபைலில் வந்த ரிங் டோன் இல் லயித்து புன்னகை முகமாக எழுந்து அமர்ந்து கைகள் இரண்டையும் நன்கு தேய்த்து முகத்தில் பதித்து பின்னர் உள்ளங்கைகளில் கண்களை பதித்து தன் அன்றைய நாளை துவங்கி வைத்தாள்...…
போன் எடுத்து யார் என பார்த்து கொண்டு இருக்கும் பொழுதே மீண்டும் கண்ணனின் பாடல் இசைக்க ஆரம்பித்தது…
"சொல்லு ரவி… " அவந்திகா
"என்னை ரவி சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல… போடி… " அவந்திகாவின் தோழி பைரவி செல்ல கோபத்துடன் பற்களை கடித்தாள்…
"இப்போ அதுவா முக்கியம்… இவ்ளோ காலையில எதுக்கு போன் அதை சொல்லு… " தூக்கம் களைந்த கவலை அவளுக்குள்
"அச்சோ சாரி அவந்திகா இன்னிக்கி மார்னிங் 9 க்கு ஒரு மீட்டிங் கூடவே டிபனும்… அத ரிமைண்ட் பண்ண தான் கால் பண்ணேன்… நா நேரா அங்க வந்துடறேன்… நீ சீக்கிரம் ரெடி ஆகு… " பைரவி
"ஓகே ஓகே பாய்… " அவந்திகா
அவந்திகா அறிவான அழகான 24 வயது மங்கை… பொறியியல் பயின்ற உடன் தந்தையின் கம்பெனியில் தனக்கு என ஒரு பொறுப்பை ஏற்று இன்று வரைக்கும் அதை சரியாக செய்து வருகிறாள்…
தந்தை மணிவாசகம் கட்டட கலை துறையில் ஒரு நிரந்தர இடம் பிடித்தவர்… அன்பானவர், அதட்டி உருட்ட தெரியாத நேர்மையான மனிதர்…
தாய் தாமரை கைவினைப் பொருட்கள் மீது கொண்ட காதலால் அதை தன் திறமைக்கு ஏற்ப செய்பவர்… தனி வகுப்புகளும் எடுக்கிறார்… சத்தமாக பேசும் இவர் குணம் மட்டுமே இவரின் மைனஸ்… மற்றபடி நல்ல குணமுள்ள பெண்மணி…
"அம்மா மீட்டிங் இருக்கு எனக்கு டிபன் எதுவும் வேண்டாம்… நா ரெடி ஆகிட்டு கிளம்பனும் " அவந்திகாவின் தாய்க்கு உணவு வீணாக கூடாது.. அதில் சற்று கண்டிப்புடன் இருப்பார் அதற்காகவே இன்டர்காமில் இதை கூறிவிட்டு வைத்தாள்
"சரிம்மா… " தாமரையின் இந்த பதிலை போன் இல்லாமலே அவந்திகாவால் கேட்க முடிந்தது..
"என்னவாம் உன் பொண்ணுக்கு காலையில இண்டர்காம் ஒலிக்கிது" சிரித்து கொண்டே கேட்டார் மணிவாசகம்
"ஹ்ம்ம் உங்க வேலை எல்லாம் அவ தலையில் கட்டிட்டு கூலா பேப்பர் படிச்சிட்டு இருக்கீங்க… பாவம் புள்ள இவ்ளோ சீக்கிரம் எழுந்து மீட்டிங் போக போறா… " தாயின் ஆதங்கம் தெரிந்தது தாமரையின் குரலில்
"அடடா டைம் எட்டு கமல்… இப்போ கூட எழுந்துகளனா எப்டி? அவ ரொம்ப சமத்து எல்லாத்தையும் சரியா செய்வா… நீ கத்தி பேசாதேயென்… " 8 மணிக்கு எழுந்து கொள்ளும் 24 வயசு பொண்ணுக்கு குடுக்குற செல்லத்தை பார்த்து கொஞ்சம் பொறாமை கொண்ட மணிவாசகம்
"இன்னொரு முறை என்னை கமல்ன்னு கூப்டு பாருங்க… காளியா ஆகிடுவேன்… " பேச்சை மறந்து சண்டைக்கு ரெடியாகிய மனைவி
"டைம் ஆச்சு கமல் நா ரெடி ஆகுறேன்… ஹாஹாஹா… " வம்பு இழுப்பேன் ஆனா சண்டைக்கு ரெடி இல்லை என ஓடிவிட்டார்
"உங்களை…. " ஓடியவரை பார்த்து சிரித்தார் தாமரை
"அம்மா நா கிளம்பிட்டேன் பாய்… அப்பா கிட்ட சொல்லிடுங்க…" (கையில் ஐபோன்10 உடன் சிறு மெல்லிய பர்ஸ் , இடது கையில் மெல்லிய பிரேஸ்லெட், சிறிய கருப்பு பொட்டு, உயர் ரக சுடிதார்… அதன் விலை இவள் சொன்னாள் தான் உண்டு… இல்லையெனில் அதன் தரம் உணர்ந்தவர் மட்டுமே அதை ரசிப்பர்… அவ்வளவு சாதாரணமாக இருந்தது அவ்வுடை.. )
"சரிம்மா ஒழுங்கா சாப்பிடணும்.. மீட்டிங்ல இத மறந்துடாத… " தாயின் கரிசனம் வார்த்தைகளில்..
தனது காரை எப்பொழுதும் தானே ஓட்டுபவள் கிளம்பி ஹோட்டலின் உள்ளே கொண்டு சென்றதும் செக்யூரிட்டி இவளிடம் சாவி வாங்கி காரை பார்க் செய்தார்...
"ஹெல்லோ மேம் மீட்டிங்கு எல்லாம் ரெடி… அவங்கள ரிஸீவ் பண்ணி இப்போதான் உள்ள விட்டுட்டு வந்தேன்… " பர்சனல் செகரெட்டரி பைரவி…
"ஹ்ம்ம் யா வில் கோ பைரவி… " வேலை நேரத்தில் அவந்திகா
மீட்டிங் முடித்து உணவு உண்டு வெளியே வர நன்பகலை எட்டி இருந்தது…
தன் போனை சைலன்ட் மோடில் இருந்து எடுத்த நொடி அது இசைக்க தொடங்கியது…
இவ கிட்ட இருந்து எப்பவோ இந்த அழைப்பை எதிர் பார்த்தேன் எனும் விதமாக ஒரு நமுட்டு சிரிப்புடன் அட்டென் செய்தாள் அவந்திகா…
"………." அழும் விம்மல் சத்தம் ரம்யாவிடம் இருந்து
"போன் பண்ணா ஹல்லோ சொல்லணும் அத விட்டுட்டு இப்போ எதுக்கு இப்டி ஒரு அழுகாச்சி சீன்… நீ அழுது முடிச்சிட்டு போன் பண்ணு பாய்.."
தோழி அழைத்து எதுவும் பேசாமல் அழுததிலேயே விஷயம் என்ன என யூகித்து இருந்தாள் அதனால் எந்த பதட்டமும் இல்லாமல் பேசி வைத்து விட்டாள்அவந்திகா …
மீண்டும் வந்த அழைப்பை ஏற்று "இப்போ சொல்லு என்ன பிரச்னை… "
"ரமேஷ் வீட்ல அவனுக்கு பொண்ணு பாக்குறாங்க அத பத்தி நேத்து என்கிட்ட போன்ல சொல்லிட்டு இருந்தான் அப்போ... அப்போ…. என் அப்பா ரூம் குள்ள வந்துட்டாரு… நா அழறத பாத்துட்டு என்ன ஏதுன்னு கேட்டு ரொம்ப கோவப்பட்டாரு… " ரம்யா
"ஹ்ம்ம் கோவப்படாம கொஞ்சுவாங்களா? சரி சொல்லு அங்கிள் கடைசியா என்ன தான் சொன்னாரு…" அவந்திகா
"எங்க சின்ன அத்தைக்கு என் எதிர்லயே போன் போட்டு அடுத்த வாரம் உன் பையனோட என் பொண்ணுக்கு நிச்சயம் எல்லாரையும் கூட்டிட்டு வந்து சேருன்னு சொல்லிட்டு போய்ட்டாரு… " அழுகையுடன் ரம்யா
"ஹாஹாஹா அங்கிள் செம்ம ஸ்மார்ட்…" உண்மையாகவே பாராட்டும் குரலில் அவந்திகா
"என்னடி எவ்ளோ பெரிய விஷயம் சொல்லி இருக்கேன்… நீ கிண்டல் பண்றியா? " அவளுக்கு இவளின் சிரிப்பு சத்தத்தில் கடுப்பு ஏறியது...
"சரி சரி விடு பாத்துக்கலாம்… உன் ரமேஷ் கிட்ட சொல்லிட்டியா? " சமாதான உடன்படிக்கை போடும் அவந்திகா
"சொல்லிட்டேன்… வீட்ட விட்டு வா.. கல்யாணம் செஞ்சிக்கலாம்ன்னு சொல்றான்.." சலிப்புடன் ரம்யா
"அது சரி… அப்போ உங்களுக்கு ரெண்டு வீடும் வேண்டாமா?" மெல்லிய கோபம் எட்டி பார்த்தது அவந்திகாவிற்கு
காதலுக்கு பச்சை கொடி காட்டுபவள் தான்..அதையும் யாரையும் துன்புறுத்தாத வகையில் செய்வாள்… அவளுக்கும் திகட்ட திகட்ட காதல் செய்து கல்யாணம் முடிக்க ஆசை தான்… ஆனால் இதுவரை அவளின் மனதை அசைத்து பார்க்கும் ஆண் மகன் கண்களில் சிக்க வில்லையே…
யாரும் இல்லாமல் ஒரு திருமணம் வேண்டாம் என்று தானே இவளிடம் பேசிக்கொண்டு இருப்பது என நினைத்து "என்ன இப்டி சொல்ற? எனக்கு எங்க அப்பா எவ்ளோ உயிர்ன்னு உனக்கு தெரியும் தான? " அப்பாவின் பாசம் குரலில் ஆதங்கமாய் வந்தது ரம்யாவிற்கு
"ஆமா நல்லா தெரியும்… உனக்கு நியாபகம் இருக்கானு பாத்தேன்… " தோழி தவறு செய்ய கூடாது என வழி நடத்தும் அவந்திகா
"ஏண்டி நீ கூட என்னை புரிஞ்சிக்க மாட்டேங்குற… அவனும் புரிஞ்சிக்கல அப்பாவும் பச்.. போடி… " உண்மையான வருத்தம் அவளிடம்…
"சரி சரி ரொம்ப சலிச்சிக்காத… ரமேஷ் கிட்ட பேசி அடுத்து என்னனு பாக்குறேன்… நீ சகஜமா இரு… பாய்… " அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்…
பின்பு பைரவியிடம் என்ன செய்ய வேண்டும் என கச்சிதமாய் ஒரு பிளானை கூறி அலுவலகம் கிளம்பினாள்…
அவள் எப்பொழுதும் ஒரு பிரச்னை என்றால் ஒன்றுக்கு 3 தீர்வுகளை வைத்து இருப்பாள்… அதை தான் இதிலும் செய்ய போகிறாள்…
இதற்கு எதிர் பதமாய் ஒருவன் வேலை வெட்டி இன்றி நண்பர்களுடன் ஊரை சுற்றிக்கொண்டு தாயின் திட்டிலும் தந்தையின் முறைப்பிலும் குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறான்…
அவன் தான் நம்ம ஹீரோ அர்விந்த் (அவனுக்கு அரவிந்த்ன்னு கூப்பிட்டா கோவம் வரும்… இதுவரை யாருமே அவனை ஒழுங்காக கூப்பிட்டது இல்லை என்பது இங்கே சிறப்பு செய்தி )
தாய் ரோஜாவனம் இல்லத்தரசி.. தந்தை ராமராஜன் மிலிட்டரியில் ஒரு சண்டையின் போது தன் வல கரத்தில் குண்டடி பட்டு பாதியில் வீடு வந்து சேர்ந்தவர்…
இப்பொழுது ஜீவனத்திற்கு ஒரு தாவர பூங்காவைபோல் ரோஜாவனம் என்று மனைவி பெயரில் நர்சரி வைத்து நடத்தி வருகிறார்…
செலவுக்கு காசு கேட்க மட்டுமே அவ்விடம் செல்வான் அர்விந்த்… வேறு எதுவும் அவனுக்கு அங்கு தெரியாது…
வயது 26..பொறியியல் பட்டதாரி… வேலை கிடைக்காமல் கிடைக்கும் வேலையை செய்ய பிடிக்காமல் சுற்றி திரியும் இளைஞன்… இன்னும் என்ன சொல்ல அவனை பத்தி இனி நீங்களே தெரிஞ்சிக்கோங்க...
"டேய் நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டா… நீயும் லவ் பண்ணி அது சீக்கிரமாவே புட்டுகவும் செய்யணும் டா… போடா டேய்… மனசே ஆறலை … எவ்ளோ கஷ்ட பட்டு அவளை ஒத்துக்க வச்சேன்… இப்டி செஞ்சிட்டியே டா… " அர்விந்திடம் கத்தி சண்டை போட்டு கொண்டு இருந்தான் அவனின் நண்பன் கார்த்திக்
"டேய் நா என்ன டா செஞ்சேன்… அவளையும் அவ வீட்டையும் அவளுக்கு கொஞ்சமா எடுத்து சொன்னேன்… உன்கிட்ட இருந்து பிச்சிகிட்டு ஓடிட்டா… இவ உனக்கு செட் ஆக மாட்டா மச்சி.. " செய்தது சரி என நண்பனிடம் வாதிட்டு கொண்டு இருந்தான் அர்விந்த்
"உனக்கு என்ன டா பிரச்னை… நா தான கட்டிக்க போறேன்… நா சமாளிக்க போறேன்… உன்னை வந்து ஹெல்ப் கேட்டேனா? " உள்ளுக்குள் ஓஓஓஓ என்று அலறும் மனதை அடக்க முடியாமல் வெடித்தான் கார்த்திக்…
ஏனென்றால் அவளிடம் காதலை சொல்ல மூன்று மாதம் பின்னாடியே அலைந்தான்... கூறிய அடுத்த இரண்டு மாதம் வரை அவளை காதலை ஒத்துக்கொள்ள வைத்தான்…
இதுவரை அர்விந்த் திடம் இருந்து காப்பாற்றிய தன் ஐந்து மாத காதலை ஐந்து நிமிடத்தில் களைத்தவனை வெட்டவா குத்தவா எனும் விதத்தில் பார்த்துக்கொண்டு இருந்தான்...
அவனின் பேச்சுக்கு சம்பந்தம் இல்லாமல் "ஹெல்ப் கேட்ட பிறகு தான் ஹெல்ப் பண்ணனுமா? நா உன் நண்பேன்டா… உனக்காக இத கூட செய்ய மாட்டேனா நண்பா?"
"இல்லை டா நீ எனக்கு இனிமே வில்லன் டா… "
அவனின் கடுப்பை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு "சரி விடு மச்சி... வாயேன் அப்டியே கிரௌண்ட்க்கு போய் ஒரு ஆட்டம் ஆடிட்டு வரலாம்… "
"என் லைப் ல நீ ஆடின ஆட்டம் பத்தலை உனக்கு ஹ்ம்ம்ம்… விளையாட கூப்பிட்ற… எப்டி டா உன்னால ...ச்ச இப்டி இருக்க முடியுது… "
"ஹாஹாஹா வாடா வா… வாழ்க்கையோட தத்துவத்தை அப்புறம் கத்துதர்றேன் இப்போ பிரியாணி சாப்பிடலாம்…"
இவனை திருத்த முடியாது என தலையில் அடித்துக்கொண்டு …. இனி அடுத்த பெண்ணை பார்த்து, பேசி,பழகி,காதல் சொல்லி, ஒத்துக்கொள்ள வைத்து… அப்பாடா… நினைக்கும் பொழுதே மூச்சு முட்டியது கார்த்திக்கு...
இதுதான் அர்விந்த்… அதாவது நம் கண்களில் படும் சாதாரண பையன்… கொஞ்சம் சேட்டை செய்யும் இளைஜன்… ஆனால் ரொம்ப நல்லவன்…
எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்குமாமே அப்டியா?
ஈர்க்கும் எனில் இணையுமா?
இனிதான் அலப்பறைகள்… என்கூடவே வாங்க ஜாலியா ஒரு ரைடு போய்ட்டு வரலாம்
… )