• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

லவ் ஸ்டோரி 4

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
லவ் 4

நாள் : வெள்ளிக்கிழமை

இடம் : வடபழனி முருகன் கோயில், சென்னை

"மணி ஆறரை ஆகுது தம்பி இன்னும் உங்க பிரண்ட் எப்போ வருவார்… 7 குள்ள மாங்கல்ய தாரணம் செய்யணும்… வந்த பிறகு சொல்லுங்கோ நா போய் பூஜைக்கு தயார் செய்றேன்… "
ஐயர் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்…

"சரிங்க சாமி… இப்போ வந்துடுவான்… " அதிபன் அவருக்கு பதில் சொல்லி நண்பன் வருகிறானா என பார்த்தான்…

எல்லோரும் கோயிலின் வாயிலையே பார்த்துக்கொண்டு இருந்தனர்…

சிறிது நேரம் அனைவரையும் காக்க வைத்தே ஓடி வந்தான் அரவிந்த்…

வெள்ளை வேட்டி தங்க நிற சட்டை அணிந்து கண்களில் கூலர்ஸ் ஒரு கையில் எதையோ மறைத்தும் மறுகையில் வேட்டியின் அடி நுனியை ஸ்டைலாக பிடித்துக்கொண்டும் ஓடிவந்தான் அரவிந்த்..

அங்கே கோயில் வளாகத்தில் இருந்த அநேக பெண்கள் ஆண்களின் கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது…

முருகனின் சன்னதியில் நின்று கொண்டு இருந்த மணமக்கள் ஆர்த்தி, அதிபன், அரவிந்தனின் நண்பர்கள் கார்த்திக், வருண், ஷாம் மற்றும் ஆர்த்தியின் பக்கத்தில் அவளின் தோழிகளாக பைரவியும் அவந்திகாவும் நின்றிருந்தனர்

இதில் அவந்திகாவின் கண்கள் அரவிந்தை விட்டு இப்படி அப்படி நகரவில்லை அந்த நேரம் ஒரு பெண்மணி 2 கைகளிலும் விளக்கு ஏந்தி விநாயகர் சன்னதிக்கு சென்று கொண்டு இருந்தார்…

ஒரே ஒரு கணம் விளக்குக்கு நடுவில் அர்விந்த் தெரிந்தான்…
அவந்திகாவிற்கு...

அவ்வளவுதான்... வேறு எங்கும் மணி அடிக்கவில்லை…. அவந்திகாவின் இதயத்தில் லப்டப் ஓசையே மணி அடிப்பதை போல் அடித்தது…. தாளம் தப்பி துடித்தது மேலும் அவளின் எண்ணங்களுக்கு வலு சேர்க்க அவன் ஓடி வரும் வேளையில் அடித்த காற்றில் அவனின் அடர்த்தியான கேசம் அவளுக்கு கடல் அலைகளை ஞாபகப்படுத்தியது...

இப்படி ஒருத்தி தன்னைப்பற்றி உருவேற்றுகிறாள் என தெரியாமல்…. கோயிலில் ஆங்காங்கே இருந்த பெண்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறோம் எனவும் யோசியாமல்…. அங்கிருந்த பெண்ணை பெற்றவர்கள் பெண்ணுக்கு ஏற்றவன் என எண்ணியதையும் உணராமல்…. புன்னகை முகத்துடன் அதே தோரணையுடன் ஓடிவந்து மாப்பிள்ளையின் அருகில் அவன் கைகளில் வைத்திருந்த மாங்கல்யத்தை வைத்தான் அர்விந்த்…

மாங்கல்யமும் சங்கிலியும் வாங்கிய அதிபன் அதை எப்படி கோர்ப்பது என தெரியாமல் அப்படியே கொண்டு வந்திருந்தான்…

அதை சரி செய்யவே அர்விந்த் கோயிலுக்கு வெளியே பூவிற்கும் பெண்மணியிடம் சென்று கோர்த்து வாங்கி வந்திருந்தான்...

பின்புதான் தன்னை சுற்றி உள்ள அனைவரையும் பார்த்தான்... அப்பொழுதும் அவந்திகாவின் பார்வை மாறவே இல்லை…. அவனுக்கு அவள் ஏதோ எல்லோரையும் போல் பார்க்கிறாள் என்ற அளவே அவன் நினைத்தது…

அதற்குள் வெளியே வந்த ஐயர் தங்கச் சங்கிலியில் சிறிதாக மஞ்சள் கயிறு கோர்த்து இருந்த தாலியை தீபாராதனைத் தட்டில் வாங்கிச் சென்று முருகனின் பாதத்தில் வைத்து அதற்கு பூக்கள் தூவி மணமக்களுக்கு முருகனின் அருள் வேண்டினார் அய்யர்...

அடுத்ததாக மாங்கல்யத்தை எடுத்து கண்களில் ஒற்றி அதிபனிடம் கொடுத்து ஆர்த்தியின் கழுத்தில் சூட சொன்னார்….

இதற்காக மற்ற அனைவரையும் இவர்களுக்கு எதிர்ப்புறமாக நிற்க வைத்தார் அதிலும் அவந்திகாவின் அருகில் அரவிந்த் நிற்கும்படி ஆனது இதில் அவந்திகாவிற்கு மெல்லிய படபடப்பு கூட உண்டானது…அர்விந்த்க்கு அப்படி எதுவும் இல்லை போல… எப்பொழுதும் போல் சிரித்த முகத்துடன் நின்று இருந்தான்...

அதிபன் மாங்கல்யத்தை சூட்டி ஆர்த்தியை சரிபாதியாக ஏற்றான்… இருவர் மனங்களும் நிறைந்து இருந்தது…. முருகனும் புன்னகை முகத்துடன் ஆசி வழங்கி கொண்டு இருந்தார்...

இரண்டு ஆதரவற்றவர்களுக்கும் இனி அவர்களே ஒருவருக்கு ஒருவர் ஆதரவு இதை இருவரும் மனதில் கூறிக்கொண்டனர்..

இருவருக்கும் இந்நிமிடம் மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.. அத்தருணத்தை கார்த்திக் தன் மொபைலில் நிழற்படம் ஆக ஏற்றினான்

அனைவரின் வாழ்த்தையும் பெற்று வெளியே வந்து அங்கு உற்சவ மூர்த்தியான முருகனை வேண்டி நின்றனர்

அதற்குள் அரவிந்தும் ஷ்யாமும் அங்கு இருந்த பெரியவர்கள் சிலரை அழைத்து வந்து நிறுத்தியிருந்தனர் ..

இவர்கள் வேண்டுதல் முடித்து கண் திறக்கும் தருவாயில் கண்ணெதிரே இத்தனை கூட்டத்தை எதிர்பார்க்காத மணமக்கள் இன்பமாக அதிர்ந்தனர் ..

பெரியவர்களிடம் அட்சதையை வருண் கொடுத்துக்கொண்டு இருந்தான்... அனைவரும் ஒருசேர நின்று மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தினர்...

அனைத்தும் முடிந்த பிறகு பிரகாரத்தில் அமர்ந்தனர்.. சம்பிரதாயமாக அதிபன் தான் அறிமுகப் படலத்தை தொடங்கினான்...

"இவன் அரவிந்த் அடுத்து கார்த்திக், ஷியாம், இவன் வருண் இவங்க எல்லோரும் என்னோட ஜூனியர்ஸ் என்கிட்ட யாரும் பேசாத போது இவங்கதான் எப்ப பார்த்தாலும் என்னை இழுத்து வச்சு பேசுவாங்க... பெரும்பாலும் என்னை தனியாக விட மாட்டானுங்க.. ரொம்ப நல்ல பசங்க.." நெகிழ்ச்சியாக கூறிக்கொண்டே போனான்..

அரவிந்த் தான் "போதும் பாஸ் ரொம்ப லென்தா போகுது... ஹாய் ஹாய் "என அங்கு இருந்த பெண்களுக்கு அறிமுகமாய் புன்னகையுடன் கூறினான்... இதைக்கூட மற்ற நண்பர்கள் சிரிப்புடனே பார்த்துக்கொண்டிருந்தனர்..

அடுத்து ஆர்த்தி தொடங்கினாள் "இவங்க அவந்திகா என்னோட காடியன், ஸ்பான்சர், அக்கா எல்லாமே… அவங்க பைரவி இந்த அக்காவும் ரொம்ப ஸ்வீட் என்னை அவங்கள்ல ஒருத்தியா பார்த்து எல்லாத்தையும் செய்வாங்க…"

அவந்திகாவும் பைரவியும் புன்னகையுடன் "ஹாய் கைஸ் உங்களை சந்தித்ததில ரொம்ப சந்தோஷம்".... என அவந்திகா அரவிந்தை பார்த்தும் பைரவி அனைவரையும் பார்த்தும் கூறினர்…

அதிபனும் ஆர்த்தியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து புரிந்து பின்பு நேசித்து ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை எனும் எண்ணம் வந்தபிறகு தான் திருமணம் செய்தனர்..

அவந்திகாவிடம் தான் முதலில் கூறினாள் ஆர்த்தி... எந்த மறுப்பும் கூறாமல் அனைத்து ஏற்பாட்டையும் செய்து இன்று திருமணமே முடித்து வைத்து இருந்தாள் அவந்திகா...

அவந்திகா 10 வதும், ஆர்த்தி எட்டாம் வகுப்பும் படிக்கும்போதுதான் ஆர்த்தியை சந்தித்தாள்.. அவந்திகாவின் பிறந்தநாளுக்கு ஏதாவது ஆசிரமம் செல்ல முடிவெடுத்த மணிவாசகம் காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்தா குருகுலம் அழைத்துச் சென்றார்….

அங்கு அவந்திகா ஆர்த்தியை பார்த்த நிமிடமே பிடித்துப்போய் அவளுக்கு எல்லாமுமாக இருக்கப்போவதாக மணிவாசகத்திடம் கூறினாள்…

மணிவாசகம் கூட அவள் ஏதோ ஆர்வத்தில் கூறுவதாக நினைத்தார்... ஆனால் தான் அப்படி இல்லை என அடுத்து வந்த நாட்களில் நிரூபித்தாள் பெண்..

ஆம் ஆர்த்திக்கு அனைத்துமாக ஆகி போனாள் அவந்திகா...

அவ்வாறுதான் ஆர்த்தி இவர்களிடம் ஐக்கியமானது... இதையெல்லாம் ஆர்த்தி எண்ணி பார்த்துக்கொண்டு இருந்த அதே நேரத்தில்…

அதிபன் அவந்திகாவிடம் ஒரு உதவியை வேண்டி இருந்தான்…

உண்மையில் அவந்திகாவிற்கு அது அதிபனுக்கு செய்யும் உதவியாக படவில்லை... அதிபன் இவளுக்கு செய்யும் உதவியாக பட்டது…

இவர்கள் நால்வரும் சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் தன்னால் ஆன உதவியை செய்யுமாறும் அவந்திகாவிடம் வேண்டி இருந்தான்...

அவந்திகா நேரடியாக அதிபனுக்கு பதில் பேசாமல் பைரவியிடம்… அப்போதே பைரவியின் மெயில் ஐடியை கொடுக்கும்படியும் உடனடியாக அவர்களே ரெஸ்யூம் சென்ட் பண்ணும் படியும் பணித்தாள்..

கூடவே வரும் திங்கள் கிழமை நடக்கும் இன்டர்வியூவில் நீங்களும் கலந்து கொள்ளுபடி நேரடியாக அரவிந்தை பார்த்து கூறினாள்.. இதில் எந்த இடத்திலும் எந்தவித தயக்கமோ திமிரோ இல்லாமல் சாதாரணமாக கூறினாள் அவந்திகா…

இந்த பண்பு அங்கு இருந்த ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் ஈர்த்தது...

அனைவரும் சேர்ந்து அவந்திகாவிற்கு நன்றி தெரிவித்து அவர்களின் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்…திங்கட்கிமை கட்டாயம் வருவதாக கூறி கிளம்ப தொடங்கினர்…

அதே சந்தோஷத்துடன் அதிபன் ஆர்த்தி இனி வாழப்போகும் அப்பார்ட்மென்டிற்கு தனது காரிலேயே அழைத்துச் சென்றாள் அவந்திகா அது இனோவா டைப் கார் என்பதால் அதிபனின் நண்பர்களையும் தாராளமாக சுமந்தது…

இருவரையும் வீட்டிற்குள் ஆரத்தி எடுத்த பின்பே விட்டாள் பைரவி..
பின்பு அவர்களுடன் இருந்து காலை உணவு முடித்து மற்ற அனைவரும் கிளம்பினர்...

அவந்திகா தன் காரிலேயே அரவிந்த் மற்றும் அவன் நண்பர்களை கிண்டியில் இறக்கிவிட்டு சென்றாள்... இதில் அரவிந்தனும் அவனின் நண்பர்களும் மிகவும் நன்றியோடு அவளைப் பார்த்தனர்…

அவர்கள் இறங்கியதும் பைரவி தான் பேச்சை தொடங்கினாள்…

" அவந்திகா என்ன? உன் முகத்துல இன்னைக்கு ஏதோ வித்தியாசமா தெரியுது "

"அது என்ன வித்தியாசம் உனக்கு தெரிஞ்சத சொல்லு…" சிரிப்புடன் வினவினாள்

"ஹான்… உன் முகத்துல ஏதோ தவுசன்ட் வாட்ஸ் பல்பு எரியுது சொல்வாங்களே அந்த மாதிரி ஏதோ எரியுது"

" ஹா ஹா ஹா ஹா எனக்கு தெரியறத்துக்கு முன்னாடியே உனக்கு என்னோட வித்தியாசம் எல்லாமே தெரிந்துவிடுமே…" பெருமையாக கூறினாள்

"அப்ப மாற்றம் நிகழ்ந்தது உண்மை அப்படித்தானே" விடவில்லை பைரவி

" ஆமா ரவி எனக்கு அர்விந்த்தை பிடிச்சி இருக்கு… "

"என்னது அரவிந்த புடிச்சிருக்கா அவன இன்னிக்கு தான் முதல் முறையாக பார்க்கிற நீ… கார் ல கூட நீ எதுவும் பெருசா யார்கூடவும் பேசலியே… நான்தான் அவங்களோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருந்தேன்… "
அவளால் நம்ப முடியவில்லை…

"நான் எங்கடி பேச… எனக்கு பாக்கவே நேரம் பத்தலை… இவ்ளோ சீக்கிரம் கிண்டி வரும்னு நினைக்கவே இல்ல… " கனவில் பேசுபவள் போல் கூறினாள்

"அடிப்பாவி அப்போ எங்க உயிரெல்லாம் பணயம் வச்சி நீ சைட் அடிச்சிட்டு வந்து இருக்க..
அப்படித்தான…." நெஞ்சில் கை வைத்து போலியாய் அதிர்ந்தாள்...

"ஹீஹீஹீ அப்டி இல்லடி… அப்புறம் அவன நீ இனிமே… " முடிக்காமல் வார்த்தைகளை இழுத்தாள் அவந்திகா

"என்ன? அண்ணான்னு கூப்பிடணுமா? " பற்களை கடித்து கொண்டே பதில் உரைத்தாள் பைரவி...

"அடி என் வெல்லக்கட்டி… " என திருஷ்டி கழித்து உதடு குவித்து முத்தம் ஒன்றை காற்றில் பைரவிக்கு பார்சல் செய்தாள் பைரவி...

"நீ கவலை படற அளவுக்கு ஒன்னும் இல்ல இங்க… அவன் என்னை கவனிக்கல… நா சொன்னதை மட்டும் தான் கவனிச்சான்… சோ நீ நினைக்கற சீன்லாம் எனக்கு இல்ல… போதுமா? " தன்னை புரிய வைக்கும் வேகம் இவளிடம்

அவள் கூறியதை பெரிதாக எடுக்காமல் அர்விந்த் பற்றி பேசினாள் "எவ்ளோ ஜெம் ல என் ஆளு… "

"ஆமா ஆமா.. போக போக தான் தெரியும்… அதுவும் இல்லாம ஒரு முதலாளியை எப்டி பாக்கணுமோ அப்டித்தான் பாப்பான் உன்னை… வேற எப்டி பாத்தாலும் அவன் தப்பானவன்னு ஆகிடும்…" கறாராக பேசினாள் பைரவி

"அப்புறம் எப்டி லவ்வு கல்யாணம் குழந்தைலாம் ரவி? "

அவள் இவ்வளவு நேரமாக கண்ட கனவை பற்றி தோழியிடம் டவுட் கேட்டாள்… அதற்கு பைரவி பற்களை கடித்து சாப்பிடுவது போல மென்றாள்…

"ஹ்ம்ம் இப்டியே பேசிகிட்டு வண்டி ஓட்டு… எல்லாம் நடந்துடும்… "

"சரி சரி… டென்ஷன் ஆகாத… "

பின்னர் இருவரும் அலுவலகம் சென்று வேலையில் ஆழ்ந்தனர்…

கார்த்திக் தான் வாய் ஓயாமல் அவந்திகாவை பற்றி பேசிக்கொண்டே இருந்தான்…

"டேய் மச்சி, டேய் அரவிந்தா உன்ன தான் டா… எவ்ளோ அடக்கமா அழகா அறிவா ஒரு முதலாளியா நமக்கு…என்னால நம்பவே முடியல டா… "

"அடேய் இன்னும் நம்மள வேலைக்கு சேர்க்கல...அதுக்குள்ள முதலாளி அது இதுன்னு… "

அர்விந்த் எதையும் மிகவும் ஆழமாக யோசிப்பவன் இல்லை..

"இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குடா அவங்களை.." கார்த்திக் கனவில் உளறுபவன் போல் பேசினான்

"அடப்பாவி இதெல்லாம் தப்பு டா… "

"இது வெறும் லைக்கிங் தான் மச்சி… ஆனா நீயும் அவங்களும் கோயில்ல ஒன்னா நின்னது அப்டியே என் கண்ணுல நிக்குது டா அரவிந்தா.." லயித்து கூறினான் கார்த்திக்

"தப்புடா கார்த்தி இப்டி நினைக்க கூட கூடாது டா… அவங்க எவ்ளோ பெரிய மனசு வச்சி நம்மளை வேலைக்கு கூப்பிட்டு இருக்காங்க… நம்ம பிரச்னை எல்லாத்தையும் சரி பண்ண போற கடவுள் டா… "

இதை கேட்டதும் கார்த்திக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது… தான் பைரவியை பார்த்த பார்வையை இனி தொடரக்கூடாது என முடிவு செய்து கொண்டான்…

வருண் மிகவும் சந்தோசமாக இருந்தான்.. அதை வெளிப்படையாக நண்பர்களிடம் பகிரவும் செய்தான்… அவனுக்கு தன் தகப்பனிடம் திட்டு வாங்குவது குறையுமே… ஆம் குறைத்தாவது திட்டுவார்...

ஷியாம் தான் அமைதியாக அனைவரையும் பார்த்து கொண்டு இருந்தான்… அவன் இந்த பேச்சில் கலந்து கொள்ளவில்லை….

ஷியாம் கணித்தது என்ன? அவனின் கவனம் யார் மீது? அடுத்த எபிசொடில்…

இனி இனிதாய் ஒரு காதல் பயணம் 🏃‍♀️….
 
Top