• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 15.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
பகுதி – 15.

ஸ்டுடியோ வாசலில் மயக்கம் போட்டு விழுந்த விஷ்வாவை தூக்கிக்கொண்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடினார்கள். அவன் மற்றவர்களுக்கு முகம் தெரியும் அளவுக்கு பிரபலம் இல்லை என்பதால், எந்தவிதமான பிரச்சனையும் அங்கே இருக்கவில்லை.

“டாக்டர்.... இவர் திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டார், கொஞ்சம் என்னன்னு பாருங்க” மருத்துவரிடம் சொல்ல,

“எங்கே? எப்படி ஆச்சு? எதனால மயக்கம் போட்டார்?” தன் ஸ்டெதஸ்கோப்பை எடுத்து மாட்டிக் கொண்டவர், வேகமாக வந்தார்.

“எதனாலன்னு தெரியலை டாக்டர்... பார்ட்டிக்கு வெளியே போயிருந்தார்” வாசுதேவன் தயக்கமாக இழுக்க, மருத்துவரின் புருவம் முடிச்சிட்டது.

“ஓ... நீங்க கொஞ்சம் வெளியே இருங்க, நான் என்னன்னு பார்க்கறேன்...” சொன்னவர் வேகமாக அவனைப் பரிசோதிக்கத் துவங்கினார்.

அவனது நெஞ்சில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து அழுத்தியவர், அவனது கருவிழிகளை பரிசோதிக்க, அவரது புருவம் முடிச்சிட்டது.

உடனடியாக ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொன்னவர், அவனது புஜத்தில் ஒரு ஊசியை இறக்கிவிட்டு, ட்ரிப்ஸ் மாட்டி விட்டார்.

“சிஸ்டர்... இவர் கொஞ்ச நேரம் தூங்கட்டும்... டிஸ்டப் இல்லாமல் பார்த்துக்கோங்க. கண் முழிச்ச உடனே என்கிட்டே வந்து சொல்லுங்க” சொன்னவர், அங்கிருந்து வெளியேறி, தன் அறையை நோக்கிச் செல்ல,

“டாக்டர்... விஷ்வா...?” வாசுதேவன் கேள்வியோடு அவர் முன்னால் நின்றார்.

“வாங்க... சொல்றேன்...” அவர் அழைக்கவே, அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தவர், “நீங்க எல்லாம் பார்ட்டிக்குப் போகலையா?” தன் மூக்குக் கண்ணாடியை கழட்டி மேஜைமேல் வைத்தவர், கேள்வி கேட்டார்.

“இல்ல டாக்டர்... அது மூவி சக்சஸ் பார்ட்டி... எங்களுக்கு அழைப்பு இல்லை. அதை விடுங்க... விஷ்வாவுக்கு என்ன?” வாசுதேவன் சற்று நிதானமாக இருக்க, முருகன் பயந்து போயிருப்பது அவருக்குத் தெரிந்தது.

“ஓ... அவன் உங்க அசிஸ்டண்டா?” வாசுதேவனை அவருக்குத் தெரியும் என்பதால் அவ்வாறு கேட்டார்.

“இல்ல டாக்டர்... இப்போ என் ஸ்டுடியோல அவன்தான் வேலை பார்க்கறான். நான் எல்லாத்திலும் இருந்து கொஞ்சம் விலகிட்டேன்... அவனுக்கு என்ன?” அதைச் சொல்லாமல், இவர் தேவையில்லாமல் கேள்வி கேட்கிறாரே என இருந்தது.

“பார்ட்டியில் தண்ணி மட்டும் இருந்த மாதிரி தெரியலையே... மிட்டாயும் சாப்ட்டிருப்பார் போல?” இருக்கையில் நேராக நிமிர்ந்து அமர்ந்தவர், வாசுதேவனை நேர் பார்வை பார்த்தார்.

“என்ன...?” சற்று அதிர,

“என்னண்ணே ஆச்சு...? மிட்டாய்ன்னா...?” முருகன் கேட்ட பிறகுதான், அவனது நினைவே வந்தது.

“முருகா, நீ கொஞ்சம் வெளியே இரு” வாசு சொல்ல,

“இதுக்கு வாயை மூடிகிட்டே இருந்து இருக்கலாம்... போச்சா...?” புலம்பினாலும் அங்கிருந்து செல்ல அவன் மறுக்கவில்லை.

அவன் செல்லவே, “டாக்டர்... அதிகமாயிடுச்சோ?” கையைப் பிசைந்தவாறே கேட்டார். அவர்கள் பாஷையில் ‘மிட்டாய்’ என அவர் எதைச் சொல்கிறார் என வாசுவுக்குப் புரிந்தது. அதைவிட ‘விஷ்வா போதை மாத்திரை சாப்பிடுவானா?’ என்பது பேரதிர்ச்சியை கொடுத்தது.

“முன்ன நீங்க தூக்கம் வராம இருக்கணும்ன்னு ட்ரக்ஸ் எடுத்துப்பீங்களே, அந்த மாதிரி இல்லை இது... அவனை தூங்கவே விடாது...” அவர் யோசனையாகவே சொல்ல,

“அவன் எங்க டாக்டர் தூங்கறான்? மாசத்தில் அஞ்சு நைட் தூங்கினா ஆச்சரியம். கிடைக்கற நேரத்தில் ஒருமணி நேரம், ரெண்டு மணிநேரம் தான் அவனோட தூக்கமே...” வாசு கவலையாக சொல்ல, மருத்துவர் மறுப்பாக தலை அசைத்தார்.

“இதில் அடிக்கடி அவனுக்கு தலைவலி வேற, சில நாள் அஞ்சு பெயின்கில்லர் வரைக்கும் போட்டுக்கறான். வேண்டாம்ன்னாலும் கேட்கறது இல்லை. டாக்டரைப் போய் பார்த்து எடுத்துக்கன்னா, அதையும் செய்யலை...

“இப்போ அவன் ட்ரக்ஸ் எடுத்துகிட்டது அதிகமோ? என்ன போட்டான்னு தெரியலையே” ‘இது தேவையா அவனுக்கு?’ என்பதுதான் அவரது யோசனையாக இருந்தது.

“ப்ளட் டெஸ்ட்க்கு சொல்லி இருக்கேன்... வரதுக்கு எப்படியும் நாலுமணி நேரமாவது ஆகும். அது வந்ததுக்குப் பிறகுதான், என்ன ட்ரக்ஸ், எவ்வளவு அளவுன்னு எல்லாம் தெரியும்.

“இந்த ட்ரக்ஸ் எல்லாம் நாங்க கட்டுப்படுத்தறோம்னு போலீஸ் என்னதான் வலை விரிச்சு பிடிச்சாலும், உங்களுக்கெல்லாம் விதம் விதமா எங்கே இருந்துதான் கிடைக்குதோ போங்க...” மருத்துவர் சற்று கோபமாகவே சலித்துக் கொள்ள, வாசுவிடம் ஒரு சங்கடமான புன்னகைதான்.

“அது டாக்டர்... அவனுக்கு ஏதும் ஆபத்து இல்லையே...?” வாசுவின் குரலில் கவலை மட்டுமே.

“டெஸ்ட் ரிசல்ட் வராமல் என்னால் எதையும் சொல்ல முடியாது. சரியா தூங்கறது இல்ல... தானா வலி மாத்திரை எடுத்துக்கறது... இதில் போதைப்பொருள் பழக்கம் வேற... இவன் நல்லவன்னு சர்ட்டிஃபிகேட் வேற கொடுக்கறீங்க” சொன்னவர் தன் வேலையைப் பார்க்கத் துவங்க, வாசுதேவன் அமைதியாக எழுந்து வெளியே வந்துவிட்டார்.

“என்னண்ணே சொன்னார்... சாருக்கு என்னவாம்?” முருகன் படபடத்தான்.

“சரியான தூக்கம் அவனுக்கு இல்லை இல்ல... அதான்... வேற எதுவும் இல்லை” சமாளித்தவர், இருக்கையில் அமர்ந்தார்.

“என்னவோ மிட்டாய்ன்னாரே... போதை மாத்திரை தானே...?” அவன் கேட்க, ‘இவனுக்கு எப்படித் தெரியும்?’ என்பதுபோல் பார்த்தார்.

“என்னண்ணே... ஒரு படத்தோட டைரக்டர் அவரோட அசிஸ்டன்ட் கிட்டே, ‘என்ன செய்வியோ தெரியாது.... எனக்கு அந்த மிட்டாய் வேணும்’ன்னு காட்டு கூச்சல் போட்டு வாங்கி வர வச்சாரே... மறந்துட்டீங்களா?” அவன் அவரிடம் திருப்பிக் கேட்க, அமைதியாக இருந்தார்.

“இதில் இருந்தெல்லாம் விலகியே இரு முருகா... இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. சும்மா ட்ரை பண்ணுவோமேன்னு ஆரம்பிச்சு... அது கிடைக்க என்ன வேண்ணா செய்யலாம்னு ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டுடும்” அவனை அவர் எச்சரிக்க, வேகமாக மறுத்தான்.

“ஹையோ... அண்ணே... ஒரு சாதாரண விஸ்கி, பிராண்டியே என்னவெல்லாம் செய்யும்னு எனக்குத் தெரியும். நான் எல்லாம் செத்தாலும் அது பக்கமே போக மாட்டேன்...” அவன் உறுதியாகச் சொல்ல, அவனது தந்தையின் நினைவு வாசுதேவனுக்கு வர, அவன் தோளைத் தட்டினார்.

“நாம இங்கே இருந்து என்ன செய்யப் போறோம்? ஸ்டுடியோவுக்கு போய்ட்டு வரலாம். நான் அந்த நர்ஸ் கிட்டே சொல்லிட்டு வர்றேன்” வாசுதேவன் செல்லவே, அவனும் உடன் சென்றான்.

“அண்ணே... வேண்ணா சாரோட அம்மாவை வரச் சொல்லுவோமா? அவங்க வந்து இருக்கட்டுமே” முருகனுக்கு விஷ்வாவின் தாயின் முகம் கண்முன் தோன்றி மறைய கேட்டான். இந்த நேரத்திலாவது அவர் ஆசை தீர மகனுக்கு அருகே இருக்கட்டுமே என்ற எண்ணம் அவனுக்கு.

வாசுதேவனுக்கோ, விஷ்வாவின் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் என்னவாக இருக்கும் எனத் தெரியாமல் இருக்கையில், ரிஸ்க் எடுக்க அவர் தயாராக இல்லை.

“அதெல்லாம் அவர் கண் முழிச்ச பிறகு சொல்லிக்கலாம் வா...” சொன்னவர், ஸ்டூடியோவில் இருக்கும் வேலைகளை கவனிக்கப் போனார்.

பிறகு விஷ்வாவின் ரிசல்ட் வந்துவிட்டது, அவன் கண் விழித்துவிட்டான் எனத் தகவல் வர, வேகமாக மருத்துவமனைக்கு வந்தார்.

நேராக மருத்துவரைச் சென்று பார்த்தவர், “டாக்டர்... ரிசல்ட் என்ன சொல்லுது?” சற்று பயத்துடனே கேட்டார்.

“அவனோட பேரன்ஸை நான் பார்க்கணும்” எடுத்த உடனே அவர் இவ்வாறு சொல்ல, சற்று பயந்து போனார்.

“அவங்க எல்லாம் கிராமத்து ஆளுங்க... என்னன்னு என்கிட்டே சொல்லுங்க டாக்டர்...” வாசுதேவன் நிலைமையை சற்று விளக்க மருத்துவர் அவரை அழுத்தமாகப் பார்த்தார்.

“அடித்தட்டு நிலையில் இருந்து வந்துட்டு, இந்த சின்ன வயசில், வயாகரா லெவல் மாத்திரை எல்லாம் அவருக்கு அவசியமா? இந்த மாதிரி இல்லீகலா கிடைக்கற மாத்திரை எல்லாம், எந்தவிதமான பக்க விளைவுகளைக் கொடுக்கும்னு யாருக்குமே தெரியாது.

“நீடித்த, நிலைத்த... நிறைவான உறவுக்குன்னு விளம்பரம் பண்ற ப்ராடக்ட்டையே நம்ப முடியாதுங்கும் போது... ‘எரக்ஸன்’ இறங்கவே செய்யாத இந்த மாதிரி மாத்திரை எல்லாம்... மூளை முதல், நரம்பு மண்டலம் வரைக்கும் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்னு நம்மளால் கணிக்கவே முடியாது.

“அந்த மாத்திரையை அடிக்கடி எடுக்கறேன்னு சொல்றார்... அதுவும் அந்த மாத்திரையோட நேம் கூட தெரியலை. அந்த மாத்திரையை போட்ட பிறகு தனக்குள்ளே என்ன மாற்றம் வரும் என்று மட்டும்தான் அவருக்கு சொல்லத் தெரியுது.

“யூ நோ ஹௌ சீரியஸ் இஸ் திஸ்? அதில் இருந்து இந்த நிமிஷமே அவர் வெளியே வந்தாகணும். இல்லன்னா... கொஞ்ச நாள்ல என்ன வேணா நடக்கலாம்” மருத்துவர் சொல்லச் சொல்ல, வாசுதேவனுக்கு பதில் சொல்ல முடியாத நிலையே.

“வாழ வேண்டிய வயசு.... சின்னப் பையன்... என்ன ஒரு இருபது, இருவத்தஞ்சு வயசு இருக்குமா? சினிமாவில் அவ்வளவு சாதிக்கறான், அவனோட திறமையை அதில் காட்டாமல், இப்போ யார்கிட்டே அவனோட ஆண்மையை நிரூபிக்கணுமாம்? அதுவும் இப்படி...?” மருத்துவர் கோபமாகவே கேட்டார்.

“அது டாக்டர்...” அவரால் எப்படி சொல்ல முடியும்?

“எதுவுமே முறையா செஞ்சால் பிரச்சனை இல்லை... சப்போஸ் அவருக்கு செக்ஸ்ல பிரச்சனைன்னா, ஒரு நல்ல டாக்டர்ட்ட போய் கைடன்ஸ் வாங்கலாமே... சின்னப் பையன்...” அவனது அந்த இளம் வயது, அவரை அவ்வளவு கவலை கொள்ளச் செய்தது.

“நான் அவன்கிட்டே சொல்றேன் டாக்டர்... இப்போ அவரை நாங்க கூட்டி போகலாமா? ஏதாவது மருந்து?” கேட்கலாமா? வேண்டாமா? என்ற தயக்கத்திலேயே கேட்டார்.

இன்னும் இருபத்திநாலு மணி நேரத்துக்கு, அவருக்கு எந்த மருந்து கொடுத்தாலும் அது வேலை செய்யாது. நான் கொடுக்கற மருந்தை நாளைக்கு தண்ணியில் கலந்து குடுங்க. இனிமேல் அவர் அந்த மாத்திரை பக்கமே போகக் கூடாது... பார்த்துக்கோங்க...” அவர் அழுத்திச் சொல்ல, தலையை அசைத்தார்.

‘நான் சொல்லி அவன் கேட்க... சரிதான்... அவனைப் பெத்தவங்ககிட்டே வேண்ணா சொல்வோமா?’ நினைத்தவர், உடனே அந்த யோசனையைக் கைவிட்டார்.

“நீங்க அவன்கிட்டே சொல்லிட்டீங்களா டாக்டர்?” பிறகு அந்த வேலை வேறு தன் தலையில் விடிந்துவிடுமோ என்ற பயம்வேறு அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

“அதெல்லாம் அவர் கண் முழிச்ச உடனேயே சொல்லியாச்சு...” அவர் சொல்ல,

‘அப்படின்னா இனிமேல் அது அவன் பாடு...’ எண்ணியவர், அத்தனை ஆசுவாசமாக உணர்ந்தார். விஷ்வாவின் கோபமும், செயல்பாடுகளும் அவருக்குத் தெரியுமே, அப்படி இருக்கையில் ரிஸ்க் எடுக்க அவர் தயாராக இருக்கவில்லை.

“நான் இப்போ அவனை அழைச்சுட்டு போகவா?”.

“ம்... கூட்டி போங்க... ஒரு ரெண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட்ல அவரை இருக்கச் சொல்லி இருக்கேன்... அதை மட்டும் பார்த்துக்கோங்க” அவர் சொல்லவே, விஷ்வாவை நோக்கிச் சென்றார்.

“விஷ்வா... போகலாம்...” வாசுதேவன், அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகள், அவனது பர்ஸ்... வாட்ச் என அனைத்தையும் எடுத்துக் கொள்ள, அவரை ஏறிட்டு பார்க்கவே அத்தனை தயங்கினான்.

‘டாக்டருக்கு தெரியவந்த விஷயத்தை இவர்கிட்டே சொல்லி இருப்பார் தானே... வயாகரா...’ அவன் யோசனையைக் கலைத்தது வாசுதேவனின் குரல்.

“விஷ்வா... செருப்பை போட்டுக்கோங்க... வீல்சேர்ல போகலாம்...” அவர் சொல்லிக் கொண்டிருக்க, தன் ஷூ எப்படி செருப்பாக உருமாறியது என்ற யோசனையோடு அவர் பின்னால் வீல் சேரில் சென்றான்.

மற்ற நேரமாக இருந்திருந்தால், ‘நடந்தே வருகிறேன்’ என முறுக்கி இருப்பான். இப்பொழுது தான் செய்துவைத்த செய்கையில் தாக்கம் அவனை அவரிடம் வாதாட விடவில்லை. வழக்கமாக அட்வைஸ் என துவங்கும் அவர், எதையும் கேட்டுக் கொள்ளாதது வேறு அவனுக்கு உறுத்தலாக இருந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க அவன் நினைத்தாலும், அவனது வேலை அவனை அனுமதிக்க வேண்டுமே... ஒருநாள் ஓய்விலேயே, வேலைகள் மலைபோல் தேங்க, மறுநாளே தன் கணினியின் முன்னால் அமர்ந்துவிட்டான்.

“விஷ்வா... இன்னும் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு...” வாசுதேவன் துவங்க,

“நான் பார்த்துக்கறேன்... மெடிசின் மட்டும் குடுங்க...” அந்த குரலே, என்னிடம் எதையும் பேசாதே என அவரை எச்சரிக்க, தன் வாயை பசைபோட்டு இறுக ஒட்டிக் கொண்டார்.

அடுத்த வாரத்திலேயே நிக்கி அவன் வீட்டுக்கு வர, அவன் அந்த மாத்திரையை மறுக்கவே, அவளது பிடிவாத குணம் கண்டு திகைத்துப் போனான்.

“அந்த மாத்திரை இல்லன்னா உங்களால் எதுவுமே ஒழுங்கா ‘செய்ய’ முடியாது. நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா? இந்த ஒரு முறை மட்டும்... பிளீஸ்...” அவளது கெஞ்சலுக்கு முன்னால், அவனது மறுப்புகள் செல்லாக்காசாகிப் போக, அவன் அவளுக்கு உடன்பட்டிருந்தான்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
***நித்யானந்தமும், ப்ரதிக்கும் சென்னைக்கு கிளம்பிப் போயிருக்க, பூமிகா நாகர்கோவிலிலேயே தங்கிவிட்டாள். செஃப் அவர்கள் கிளம்பும் நாள், அங்கே வந்திருக்க, பூமிகாவின் சாப்பாட்டு பொறுப்பு மீண்டும் அவர்வசம் வந்திருந்தது.

அன்று காலையில் ஆகாஷ் ஒரு மாதிரி சாய்ந்து, சாய்ந்து நடந்தவாறு, சுவரில் முட்டிக் கொண்டு, சோபாவில் இடித்துக் கொண்டு, இறுதியாக சாப்பாட்டு மேஜையில் தட்டி ஆகாஷ் நிற்க, அவனது செய்கையைப் பார்த்து பூமிகா வாய்விட்டே சிரித்தாள்.

தேன்மொழி அதை அசையாமல் பார்த்திருக்க, “ஹல்லோ... என்ன சிரிப்பு?” கேட்டவன், பூமிகாவுக்கு எதிரே வந்து அமர்ந்தான்.

“இதென்ன இப்படி நடக்கறீங்க?” அவன் தலையைப் பிடித்து உதறிக் கொண்டிருக்க, அரைச் சிரிப்பு இன்னும் மிச்சமிருக்க அவனிடம் கேட்டாள்.

“ஓ... இதுவா...? இதுதான் மூன் வாக்...” அவன் சிரிக்காமல் சொல்ல, அவளோ சிரித்தாள்.

“மூன் வாக்கா?” பூமிகா புரியாமல் கேட்க,

“ஆமா... கேள்விப் பட்டதில்ல? நிலாவில எல்லாம் நாம நினைச்ச மாதிரி நேரா எல்லாம் நடக்க முடியாதாம். அது ஒரு பக்கம் நம்மளை இழுத்துகிட்டு போகுமாம்... அதைத்தான் இங்கே பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன். யூ வன்னா ட்ரை...?” அவள் பக்கம் கையை நீட்ட, தேன்மொழி வேகமாக வந்து அவனது கரத்தை தட்டி விட்டாள்.

“ஏய் எனிமி... உனக்கும் எனக்கும்தான் பேச்சு கிடையாதே... பிறகு நீ எதுக்கு குறுக்கே வர்ற?” அவளிடம் சண்டைக்குப் பாய்ந்தான்.

“ஹலோ... அவளுக்கு இருக்கற வாக்கே போதும்... மூன் வாக்கெல்லாம் தேவை இல்லை. நீங்க பிஹெச்டி தான பண்றதா சொன்னீங்க? மூன் வாக்குக்கு எல்லாம் எதுக்கு போறீங்க?” தேன்மொழி படபடத்தாள்.

“இந்த எனிமி என்ன உனக்கு மவுத் பீசா? பூமி... யூ டெல்...” தேன்மொழியை முறைத்தவாறே பூமிகாவிடம் கேட்டான்.

“ம்ஹும்... எனக்கு பயமா இருக்கு...” அவள் நிஜமான பயத்தில் சொல்ல, அவனோ தோளைக் குலுக்கிக் கொண்டான்.

“அப்போ சரி... நானே மூன் வாக் போறேன்...” சொன்னவன், மீண்டுமாக அதேபோல் சாய்த்துக்கொண்டு நடந்து, அங்கிருந்த அனைத்து பொருட்களிலும் வேண்டுமென்றே முட்டிக் கொள்ள, காவேரி அவனை வந்து தடுத்தார்.

“டேய்... இதென்னடா விளையாட்டு...? முதல்ல இதை நிறுத்து, பாரு நெத்தியில் இடிச்சுகிட்டு இருக்க... இன்னைக்கு நம்ம வீட்லதான் உனக்கு டிபன்... புது செஃப் அருமையா சமைக்கறார்... வா... வந்து சாப்பிடு” அவனை கைபிடித்து அழைத்து வந்து, சாப்பாட்டு மேஜையின் முன்னால் அமர்த்தினார்.

“காவேரி... உனக்கு என்மேல இருக்கற பாசம், இங்கே யாருக்கும் இல்லை. பாரு, எனக்கு கண்ணு கூட லைட்டா வேர்க்குது” அவன் கண்களில் தண்ணீர் வழிய, ‘அடப்பாவி...’ என்பதுபோல் தேன்மொழி பார்க்க, பூமிகா அவனுக்கு பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

“அண்ணே... சாப்பாடு கொண்டு வாங்க...” காவேரி அழைக்கவே, உள்ளே இருந்து சில மூடிபோட்ட பாத்திரங்களை, மேஜைமேல் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனார்.

“நீயும் உக்காரும்மா... பூமி... உனக்கு?” காவேரி கேட்கையிலேயே, ஒரு பவுலில் சூப் கொண்டுவந்து அவளுக்கு முன்னால் வைத்தார்.

“இது பாப்பாவுக்கு...” அவர் கொடுக்க, மெல்லிய புன்னகையில் அதை வாங்கிக் கொண்டாள்.

ஆகாஷ் அவனாகவே தட்டில் பொங்கல், சாம்பார், வடை என எடுத்து வைத்துக்கொண்டு உண்ணத் துவங்கியவன், அவளது பவுலை எட்டிப் பார்த்துவிட்டு வேகமாக அவளுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டான்.

“என்ன...? ஏன்...?” பூமிகா அவனது முதுகுக்குப் பின்னால் கேட்க,

“நான் ரொம்ப டேஸ்ட்டா சாப்ட்டுட்டு இருக்கேன், நீ சப்புன்னு எதையோ குடிக்கற, என் சாப்பாட்டைப் பார்த்து கண்ணு வச்சன்னா? அதான்...” அவன் விளக்கம் கொடுக்க, அவளுக்கு சிரிப்புதான் வந்தது.

“எனக்கு அதெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு கிடையாதே... அதே மாதிரி இது சப்புன்னு இருக்கும்னு உங்களுக்கு யார் சொன்னா?” அவள் நிதானமாக விளக்க,

“ஓ... அப்போ டேஸ்ட்டா இருக்கா?” கேட்டவன், அவள் குடித்துக் கொண்டிருந்த ஸ்பூனை, அவள் கரத்தில் இருந்து அப்படியே திருப்பி, அதை சுவைத்துப் பார்க்க, அவன் முகம் போன போக்கில் அவளுக்கு சிரிப்பு வெடித்துக் கிளம்பியது.

கூடவே அவனது அந்த செய்கை... அவள் இதழ்களில் உறவாடிக் கொண்டிருந்த ஸ்பூனை, தன் இதழ்களுக்கு மாற்றி, அவனும் சுவைத்திருக்க, அவன் அதைப்பற்றிய நினைவே இல்லாமல் இருக்க, அவள்தான் தடுமாறிப் போனாள்.

மற்றவர்கள் யாரும் இவர்களை கண்டுகொள்ளாமல் போக, மீண்டுமாக சூப்பை அருந்துகையில், அவளுக்கு மொத்த தேகமும் ஒரு மாதிரி சிலிர்க்கும் உணர்வு.

“என்ன ஆச்சு?” அவன் அமைதியாக இருக்கவே அவனிடம் கேட்டாள்.

“கும்பிபாகத்தை விட மோசமா இருக்கு... இந்த இட்லியும், காரச் சட்டினியும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாரு...” சொன்னவன், அவள் எதிர்பார்க்காத வேளை, அவளுக்கு அதைக் கொடுத்திருக்க, சில பல நொடிகள் அவள் இதயம் தன் துடிப்பை நிறுத்திய உணர்வு.

பழக்கமில்லாத காரத்தில் அவள் கண்கள் சட்டென கலங்கிவிட, வேகமாக அந்த சூப்பை எடுத்து பருகினாள்.

“பாத்தியா... எம்புட்டு டேஸ்ட்டா இருக்கு...” அவளது கண்ணீரை தன் கைக்குட்டையால் ஒற்றி எடுத்தவாறே கேட்டான்.

“எனக்கு ஆயில், காரம் கொலஸ்ட்ரால் ஃபுட் எல்லாம் சாப்பிடக் கூடாது” அவன் செய்கையில் விளைந்த கூச்சத்தில் திளைத்தவாறே அவள் சொல்ல, இதயம் படபடத்துவிட்டதை அவளால் தடுக்க முடியவில்லை.

தேன்மொழி உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க்கை கொண்டுவந்து அவளுக்கு மாட்டி விட, “சாப்பிடத்தான் கூடாது... எல்லாத்தையும் டேஸ்ட் பார்க்கலாம் தான? டேஸ்ட் கூட பாக்காமல் வாழ்ந்து என்ன சாதிக்கப் போறோம்? பொங்கல் ஒரு வாய் சாப்பிடு...” அவன் சொல்ல, அவளோ ஆக்ஸிஜன் மாஸ்குக்குள் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

“அவ கஷ்ட்டப்படறா... நீங்க என்னன்னா...” தேன்மொழி எதையோ சொல்லப் போக, பூமிகா அவளைப் பார்த்த பார்வையில் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

‘எங்களுக்கு நடுவே நீ வராதே...’ என்னும் விதமாக அவள் பார்த்திருக்க, தேன்மொழிக்கு அது நன்கு புரிந்தது.

“இதுக்கு முன்னாடி இவ கஷ்டப்பட்டதே இல்லையா? இன்னைக்குதான் புதுசா?” அவன் கேட்க, அது உண்மை இல்லை என தேன்மொழிக்கே தெரியுமே, அவள் பேசுவாளா என்ன?

“உங்களுக்கு இப்படி இருந்தா தெரியும்” தேன்மொழி வாய்க்குள் முனக,

“எனக்கு மட்டும் இப்படின்னா... எனக்குப் புடிச்சது அத்தனையும் செஞ்சு பார்த்துட்டு, அனுபவிச்சுட்டு போய் சேர்வேன்... இப்படியா... மண்ணாந்தை மாதிரி... ஹும்...” அவன் கேட்க, பூமிகா முகத்தில் வாடாத புன்னகையே.

“சாவறதுக்கு வாழறேன்னு அவளை மாத்தினதே சுத்தி இருக்க நீங்க எல்லாரும்தான்... அவ ஒவ்வொரு நாளும் வாழறான்னு சொல்லிக் கொடுக்கத் தெரியலை... பேச்சு மட்டும்...” அவன் இப்பொழுது தேன்மொழியை முறைக்க, அவளுக்கு தன் தவறு புரிய, அவனைப் புரிந்துகொள்ள முயன்றாள்.

காவேரி அங்கே வெறும் பார்வையாளர் மட்டும்தான்... சின்னவர்களின் பேச்சையும், அவனது தெளிவையும் ரசித்தவர், அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டிருந்தார்.

“சரி... நான் சாப்ட்டேன்... காவேரி... குளத்துக்கு போய்ட்டு வர்றேன்” சொன்னவன் கிளம்ப, பூமிகாவின் பார்வை அவனையே ஆர்வமாக ஏறிட்டது.

தொடரும்....
 

Kothai Suresh

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
144
33
28
INDRANAGAR ADYAR
அச்சோ இந்த விஷ்வா வுக்கு விடிவு காலமே இல்லையா பாவம்,
ஆகாஷ் 👌👌👌👌👌
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
சூப்பர் சூப்பர் ♥️♥️♥️♥️♥️♥️நிக்கி சாகுறதும் இல்லாம விஷ்வா வையும் சேர்த்து சாக வச்சுடுவா போல

அப்படித்தான் நடக்கும் போல....

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
அச்சோ இந்த விஷ்வா வுக்கு விடிவு காலமே இல்லையா பாவம்,
ஆகாஷ் 👌👌👌👌👌

விஷ்வா அவனாக தெளிந்தால்தான்

ஆகாஷ் அருமையானவன்.

நன்றி!