பகுதி – 2.
அந்த வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. அதை வீடு எனச் சொல்வதை விட, பங்களா எனச் சொல்ல வேண்டுமோ? சென்னையில் இருந்து பதினைந்து கிலோமீட்டர்தொலைவில் இருந்தது அந்த பங்களா.
வீடு என்னவோ மாடர்ன் உலகத்தின் பிம்பமாக ஜொலிக்க, அதற்குள் இருந்த மனிதர்களோ நாகரீகத்தின் துவக்கப் படியில் நின்டிருந்தார்கள்.
“ஏத்தா வடிவு... உன் புள்ளை உனக்கு மாளிகையேல்லா கட்டிக் கொடுத்திருக்கான். நீ புண்ணியம் பண்ணியிருக்கத்தா” ஒரு வயதான பெண்மணி வடிவை வாழ்த்த, அவருக்கோ முகம்கொள்ளா புன்னகையும், பெருமிதமும்.
“எலேய் கோட்டைச்சாமி... உனக்கு வாழ்வுல... எம்மாம் பெரிய உசரத்துக்கு போய்ட்ட...” மற்றொருவர் கணவனிடம் பேசுவது கேட்க, அந்த பெருமிதம் இன்னும் அதிகரித்தது.
“நம்ம ஊரே வந்து தங்கலாம் போலையே... எம்புட்டு பெருசா இருக்கு”.
“நம்ம ஊரு பெரிய வீட்டுக்காரரோட வீடு மட்டுமில்ல... முத்தம், சுத்தி இருக்க இடம் கூட இந்த வீட்டுக்குள்ளாற நிக்கும் போலையே...”.
“அப்ப இனிமே நம்ம கோட்டச்சாமிதான் ஊர் பெரிய மனுஷனா?”.
“இல்லையா பின்ன... இந்த வருஷ திருவிழாவுல செலவழியப் போறது எல்லாம் நம்ம கோட்டைச்சாமி பணம் தான...”.
“எம்புட்டு உசரத்துக்கு போனாலும், பணம் வந்தாலும், அதைக் கொடுக்கதுக்கு ஒரு மனசு வேணும்லே... அது நம்ம கோட்டை கிட்ட இருக்கு” ஆளாளுக்கு அங்கே பேச, அவர்களுக்கு நிலையில்லா பெருமிதம்தான்.
ஆனால், இந்த பெருமையையும், புகழையும் தங்களுக்கு தேடிக் கொடுத்த மகன் அங்கே இல்லாதது அவர்களுக்கு மிகப்பெரும் குறையாகவே இருந்தது.
“வடிவு... எங்க உன் புள்ளையைக் காணோம்?” உறவுக்கார பெண்மணி ஒருத்தி கேட்க, வடிவு சற்று கவலையானார்.
வந்த உறவுகள் அனைத்தும், நேற்று முதல் தங்கள் மகன் விஷ்வாவைத் தேட, அவனோ வீட்டுக்கு வந்தே பல மாதங்கள் கடந்துவிட்டது என அவர் எப்படிச் சொல்வதாம்?
“அவனைத்தான் நம்ம கண்ணுலேயே காட்ட மாட்டேங்காளே... பொத்தி பொத்தில்ல வச்சிருக்கா” ஒருத்தி நொடித்துக் கொள்ள,
“நாமளும் வந்த நாள்ல இருந்து கேட்டுகிட்டுத்தான் கிடக்கோம். இன்னா வாறான், அந்தா வாறான்னு சொல்லுதாளே தவிர, அவனை வரச் சொல்லவும் காணோம்” கோட்டைச்சாமியின் அக்கா முத்து. சடைக்க, அவளுக்கு கூடவே ரத்தினமும், தங்கமும் சேர்ந்தது சிறப்பு.
கோட்டைச்சாமி தன் அக்காக்களின் வாயை அடைக்க முடியாமல் திணற, அங்கே வந்தான் அறிவு, விஷ்வாவின் தம்பி.
அவர்களது பெயர்களுக்கு ஏற்றாற்போல் முன்னர் மதிப்பாக நடந்தவர்கள்தான். எப்பொழுது தங்கள் தம்பியின் வாழ்க்கை முறை மாறத் துவங்கியதோ, அப்பொழுது முதல் அவன்மேல் பெரும் பொறாமைதான்.
அதில் கொஞ்சம் விதிவிலக்கானவள் என்றால் அது ரத்தினம் தான்.
“அம்மா, அப்பா... ஐயரு உங்களை அங்க தேடிகிட்டு இருக்கார். நீங்க இங்கே என்ன பண்றீங்க? முதல்ல போங்க...” அவன் படபடவென குரலுயர்த்தி கத்த, விட்டால் போதுமென அங்கிருந்து அகன்றார்கள்.
“என்ன ஐத்தைங்களா... சாப்ட்டீங்களா? இல்லன்னா போய் சாப்பிடுங்க” அவன் சொன்ன விதமே ஒரு தினுசாக இருக்க, அவனை முறைத்தார்கள்.
“என்னவே... நாலு காசு வந்துட்டா, சொந்தத்தை எல்லாம் மதிக்கத் தெரியாதோ?” முத்து, அவனிடம் கேட்க, அவனோ அவரை அசால்ட்டாக பார்த்தான்.
“சொந்தத்தை எல்லாம் மதிச்சுதான் கூப்பிட்டு ஒரு வாரமா நல்ல பெரிய ஹோட்டல்ல தங்க வச்சு, வண்டி வச்சு சென்னையை சுத்திக் காட்டிகிட்டு இருக்கோம்.
“சொந்தம் வேண்டாம்னு நினைச்சிருந்தா இப்படி செஞ்சு இருப்போமா? என்ன பேசறீங்க நீங்க?” அவன் கோபமாக கேட்க, முத்துவோ முகத்தை நொடித்துக் கொண்டார்.
“நல்லா செஞ்சீங்களே... எங்க... என் மவனும் சினிமாவுல நடிக்கணும்னு கேக்கானே, அவனுக்கு என்னத்த செஞ்சீங்கலாம்?” அவர் கோபமாக கேட்க, அவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
“எங்க அண்ணன் என்ன படமா எடுக்கறான்? உங்க மகனை நடிக்க வைக்க?” அவன் கேட்க, முத்துவோ சமாதானம் ஆகும் வழியைக் காணோம்.
“எடுத்த படமெல்லாம் அவன்கிட்டேதான வருது? அப்போ எல்லா பெரிய மனுஷங்களையும் அவனுக்குத் தெரியும்தான...?” அவர் எகிற, ‘இவரிடம் பேசுவது வீண்’ என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
“அதுக்குன்னு வர்றவங்க கிட்டே எல்லாம் கேக்க முடியுமா? அப்படி கேட்டா என்ன நினைப்பாங்கன்னு வேண்டாம்? அப்படிப் பாத்தா, நானே இந்நேரம் நடிகன் ஆகி இருக்கணுமே, ஏன் ஆகலை?” அவன் கேள்வியில், பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.
“என்ன இருந்தாலும் நீ அவன் தம்பி, நிமிஷத்துல அவன் உனக்கு என்ன வேண்ணா செய்வான். உன்னைய அவன் கூடவே கூட வச்சுக்கலாம்... இதெல்லாம் எங்ககிட்டே சொல்லிகிட்டா செய்வீக?” அவர் விடாமல் வாதாட சலித்துப் போனான்.
“எப்படியோ நீங்க சொன்னதையேதான் சொல்லிக்கிட்டு இருக்கப் போறீங்க. சாப்ட்டு தெம்பா பேசுங்க, போங்க...” சொன்னவன் அங்கிருந்து செல்ல, அக்கா தங்கைகள் அனைவரும் முணுமுணுத்தார்கள்.
“இவனுக்கு வந்த வாழ்வைப் பாத்தியா? ஊருக்குள்ள விவசாயம் பாக்க இடமில்லாம சென்னைக்கு ஓடி வந்த பய, இப்போ ஊரு அளவுக்கு வீடும் இடமும் வச்சிருக்கான்.
“அதை நமக்கும் கொஞ்சம் தரலாமுல்ல... நாம பாத்து வளத்த பய, இப்போ நம்மளையே மதிக்க மாட்டேங்கான்” முத்து இன்னுமே வாயை மூடாமல் போக,
“அக்கா, தம்பிதான நம்ம மூனுபேத்துக்கும் வீடு கட்டிக் கொடுத்திருக்கு, அதை மறந்துட்டு பேசாதக்கா” ரத்தினம் இடைபுகுந்து சொல்ல, அவளை முறைத்தாள்.
“என்னடி... உன் மவன் சம்பாதிக்கான் அந்த திமிரா? வீடு கட்டி குடுத்தா ஆச்சா? மீன் குடுக்கதை விட, மீன் பிடிக்க கத்துக் கொடுக்கணும்னு ஒரு சொலவடை கேட்டிருக்கியா?” கண்ணை உருட்டி தங்கையை கடிந்துகொண்டாள்.
“நாக்குல நரம்பில்லாம பேசாதக்கா... ஊர்ல இருந்த நிலத்தை எல்லாம், நம்மளை கட்டிக் கொடுக்கணும்னு தான் வித்தாக. தம்பிக்குன்னு அந்த ஓட்டு வீட்டைத் தவிர நம்ம அம்மா அப்பா ஒரு அடி நிலத்தை கூட அவனுக்குக்கு கொடுக்கலை.
“அவனுக்குன்னு ஒரு ஏக்கரா நிலத்தை கொடுத்திருந்தா கூட, இத்தனை வருஷமா சென்னையில வந்து ஆட்டோ ஓட்டி கஷ்டபட்டிருக்காது. அப்படியும் ஊர் திருவிழா, விசேஷம்ன்னா, அது சக்திக்கு புடவை எல்லாம் வாங்கிக் கொடுக்கத்தான் செஞ்சான்.
“இப்பதான் அவன் உழைக்காம உக்காந்து சாப்பிடறான்... அது உனக்கு பொறுக்கலையா? இதென்ன அவன் சம்பாத்தியமா? அவன் புள்ளை சம்பாதிக்கறது, அவன் உழைப்புல நாம உரிமை கொண்டாடிக்கலாம்... அவன் புள்ளை சம்பாத்தியத்திலும் பங்கு கேக்கறது முறையா?”.
அவர் நியாயம் பேச, “இந்தா பாருங்கடி ஒரு நியாயஸ்த்தி... உனக்கு வேண்டாம்ன்னா போ... நான் எனக்கு வேண்டியதை வாங்காமல் போகப் போறதில்லை. ஒரு பத்து லட்சமாவது தேத்திக்கிட்டுதான் போவேன்” முத்து சவால் விட, ரத்தினம் மறுப்பாக தலை அசைத்தார்.
“நீ என்னவே செஞ்சுக்கோ... குடுத்தா வாங்கிக்க, எனக்கு எதுவும் வேண்டாம். ஏய் தங்கம்... அவதான் புரியாம பேசறான்னா, நீயும் இவளுக்கு கூட்டா?” ரத்தினம் தங்கையிடம் பாய்ந்தார்.
“அவளுக்கு மட்டும் காசு கிடைச்சா கசக்குமா என்ன?” முத்து இடைபுக, ரத்தினம் தங்கத்தை பார்க்க, அவளோ இரண்டுகெட்டான் மனநிலையில் நின்றுகொண்டிருந்தாள்.
“உன் மண்டையையும் கழுவிட்டாளா? இது நல்லதுக்கில்ல, நான் அம்புட்டுதான் சொல்லுவேன்” ரத்தினம் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்.
சென்றவன், நேராக சென்று நின்றது வடிவிடம் தான். “மதினி... எங்க பெரியவனை இன்னுமே காணோம்?” அவரிடம் கேட்க, வடிவோ கையைப் பிசைந்தார்.
“வர்றேன்னுதான் சொன்னான் மதினி, இப்போ என்னன்னா போனையே எடுக்க மாட்டேங்கறான்” கையில் இருந்த பட்டன் போனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
“டேய் அறிவு... உன் அண்ணனுக்கு போனைப் போடுடா” அவர் சொல்ல,
“நான் ஒரு நூறு போன் பண்ணிட்டேன்... எடுக்கணுமே...” அவனும் கவலையாக நின்றிருந்தான்.
“ஓ... புள்ள வேலையா இருக்கான் போல...” ரத்தினம் சொல்ல, வடிவுக்கு கண்கள் கலங்கிப் போனது.
“அறிவு, ஒரு எட்டு போய் பாத்துட்டு வர்றியா?” தாய் கேட்க, அவரை நம்ப முடியாமல் பார்த்தான்.
“அம்மா, நாம அங்க போறது அவனுக்குப் பிடிக்காதுன்னு தெரியும் தான. வேண்டாம்மா... கண்டிப்பா அவனே வருவான். நீங்க வந்தவங்களை போய் கவனிங்க” அவன் சொல்ல, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
“எங்கிட்டு போனாலும், ‘வீடு கட்டின உன் மவனைக் காணோம்’ன்னே கேக்காவடா. எல்லாருக்கும் பதில் சொல்லி முடியலை. ஆனாலும் அவன் ஒரு எட்டு வந்துட்டு போயிருக்கலாம்டா...” அவர் சொல்ல, அவனுக்குமே அதே எண்ணம் தான்.
“சரி விடுங்க, சம்மாளிச்சுதான் ஆகணும். மறுபடியும் அவனுக்கு போனைப் போடுங்க, ஒரு எட்டு வந்துட்டு போகவாச்சும் சொல்லுங்க” சொன்னவன், வந்தவர்களை கவனிக்கச் சென்றான்.
இவர்கள் விடாமல் அழைக்க முயன்றுகொண்டிருந்த விஷ்வாவோ, தன் ஸ்டுடியோவில் திரையோடும், கணினியோடும் போராடிக் கொண்டிருந்தான்.