பகுதி – 23.
விஷ்வா, தன் வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்தவன், அடுத்ததாக எந்த வேலையையும் எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனையோ விதமான கோரிக்கைகள், கெஞ்சல்கள், மிரட்டலுக்கு கூட அடிபணியாமல், பிடிவாதமாக நின்று சாதித்தான்.
ஸ்டுடியோவை வாடகைக்கு எடுத்திருந்தவரிடம் கணக்கை முடித்தவன், வீட்டை முடிக்கப் போகையில், அதை எல்லாம் வேதாந்த் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டார்’ என்ற பதில் வரவே, அமைதியாக திரும்பிவிட்டான்.
தன் ஸ்டுடியோவுக்கு வந்தவன், தான் வேலை செய்த இடத்தை, சிஸ்டங்களை என கைகளால் வருடி, பார்வையால் நிறைத்து என நின்றிருக்க, அவனைப் பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவனுக்கு கண்கள் கலங்கியது.
விஷ்வாவுக்கு இதுவரை நடந்தவை எல்லாம் கனவுபோல் இருந்தது. அந்த இடத்தில் அவன் செலவழித்த பத்து வருடங்கள்... பத்தொன்பது வயது துவங்கி, இருபத்தெட்டு வயது வரைக்கும் அவனோடான வாழ்க்கையில் பின்னைப் பிணைந்த இடம் அது.
‘வாழ்க்கையில் என்னவாகப் போகிறோம்?’ என எண்ணிக் கொண்டிருந்த அவனை, ‘இதுதான் உன் அடையாளம்’ என காட்டிய இடம். பணத்தை கணக்கு பார்த்து செலவழித்தது போய், அந்த பணத்தை கணக்கு பார்க்கவே முடியாத அளவுக்கு நேரமும் இல்லாமல், பொறுமையும் இல்லாமல் ஓடிய காலங்கள்.
‘எல்லாம் இதற்குத்தானா? உடலும் மனமும் கூட மொத்தமாக ஓடிக் களைத்தது, இப்படி நொடியில் அணைந்து போகவா?’ அதை நினைக்கையிலேயே மனம் பாரமாகிப் போனது.
அவன் அப்படியே நின்றுகொண்டிருக்க, “தம்பி...?” அவனைக் கலைத்தார் வாசுதேவன்.
முன்னர் ‘தம்பி’ என அழைத்தாலே, ‘பெயரைச் சொல்லி கூப்பிடுங்க...’ என கத்தும் அவன், இன்று அமைதியாக அவரைத் திரும்பி பார்க்க, அவருக்கு அத்தனை பாவமாக இருந்தது.
அவன் முகத்தில் மொத்தமாக படர்ந்திருந்த தாடியும், மீசையும் ட்ரிம் கூட செய்யப்படாமல் அடர்ந்திருக்க, ஆளே அடையாளம் தெரியாமல் போயிருந்தான்.
“சொல்லுங்க சார்...” அந்த இடத்தை விட்டு பிரியா முடியாத ஏக்கம் அவன் குரலில் தெறிக்க, அவனை தோளோடு அணைத்து ஆறுதல் சொல்ல அவரது கரங்கள் பரபரத்தது.
ஆனால் அப்படி எதையும் செய்ய முடியாமல் திணறியவர், “இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படியே நிப்பீங்க? வீட்டுக்குப் போங்க, ரெஸ்ட் எடுங்க... மிச்சமிருக்க உங்களோட நாட்களையாவது உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருங்க...” அவர் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டான்.
அந்த வீடு அவனுக்கு அந்நியமாகிப்போய் வருடங்கள் பல கடந்துவிட்டது என எண்ணியவன் அதை வெளியே சொல்லவில்லை.
“ம்...” அவன் சோர்வாக குரல் கொடுக்க,
“இந்த உலகத்தில் நம்மளைப் பெத்தவங்களை விட யாருமே சரியா புரிஞ்சுக்க மாட்டாங்க தம்பி. நீங்க எந்த நேரம் போனாலும், எப்படிப் போனாலும் அவங்களுக்கு அரவணைக்க மட்டும்தான் தெரியும்” அவனது எண்ணவோட்டம் புரிந்தாற்போல் அவர் சொல்ல, இப்பொழுது அவன் இதழ்களில் கண்ணுக்கு எட்டாத புன்னகை.
“உண்மைதான்...” சொன்னவன், தன் அலைபேசியில் வாரம் தவறாமல் வரும் தாயின் அழைப்பையும், தம்பியின் அழைப்பையும் எண்ணிக் கொண்டான்.
“அவங்ககிட்டே மனசுவிட்டு பேசுங்க தம்பி... எல்லாத்தையும் உங்களுக்குள்ளே போட்டு அழுத்தாதீங்க...” இன்றுவரைக்குமே அவனுக்கு இருக்கும் பிரச்னையை அவர்களிடம் அவன் சொல்லாமல் போயிருக்கவே அவனிடம் சொன்னார்.
“எதுக்கு சார்... விடுங்க...” அவன் சோர்வாக சொல்ல,
“ஐயோ தம்பி... அப்படி சொல்லாதீங்க... இந்த ஒரு விஷயத்திலேயாவது நான் சொல்றதைக் கேளுங்க” அவர் சொல்லவே, அரை மனதாக தலையை அசைத்தான்.
“அப்போ நான்... கிளம்பறேன்... என் முடிவெல்லாம் உங்களுக்கு தெரியவருமான்னு தெரியலை” அவன் சொல்ல, அத்தனை நேரமாக இருந்த தடையைத் தகர்த்து, அவனை இறுக தழுவி இருந்தார்.
அவர் கண்கள் கலங்கி கண்ணீர் வழிய, முடிந்த அளவு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவர், “இருக்கற கொஞ்ச நாளையாவது உங்களுக்கு புடிச்ச மாதிரி, நீங்க இருக்கணும்னு ஆசைப்பட்ட மாதிரி சந்தோஷமா வாழப் பாருங்க தம்பி...” ‘நீங்க நல்ல ஆயிசோட இருக்கணும்’ சொல்ல வந்ததை அவர் சொல்லவில்லை.
அவர் தன்னை அணைத்துக் கொள்ளவே, தானும் அவரை அணைத்தவன், “இதெல்லாம் நானே தேடிகிட்டதுதான் சார்... சாட்டையை சுழட்டின மாதிரி, நிமிஷத்தில் எல்லாம் மாறிப் போச்சு... முதலும் சரி, முடிவும் சரி” சொன்னவன், முருகனைப் பார்க்க, வேகமாக அவன் அருகே வந்தான்.
அவரை விட்டு விலகி நின்றவன், “என்னடா முருகா, சினிமாவில் முகம் தெரிஞ்சே ஆகணுமா? இல்லன்னா ஊருக்கு போய், ஏதாவது தொழில் பண்ணி பிழைக்கற ஐடியா இருக்கா?” அவனிடம் கேட்க, அவனுக்கு எதுவும் புரியாத நிலைதான்.
“சார்... இவனுக்கு என்ன வேணும்னு கொஞ்சம் பார்த்து செய்ங்க” அவன் சொல்ல,
“அண்ணே... நான் ஊருக்கே போறேண்ணே... சினிமாவில் கூட்டத்துல அடியாளா அடி வாங்க இதுக்கு மேல தெம்பில்லை. அங்கே போய், எங்க அப்பாவோட மளிகைக்கடையையே பார்த்துக்கறேன்...” அவன் சொல்ல, தன் சட்டைப் பையில் இருந்து செக்கை எடுத்து அவன் கையில் வாசுதேவனின் கரத்தில் கொடுத்தான்.
“சார்... இவனோட ஊருக்குப் போய், இவன் மளிகைக்கடையை கொஞ்சம் பெருசா மாத்திக் கொடுங்க” அவன் சொல்ல, அதில் இருந்த தொகையைப் பார்த்தவருக்கு கொஞ்சம் ஆச்சரியமே.
“அண்ணே...” முருகன் அவன் காலிலேயே விழ, அவனைத் தடுத்து தாங்கிப் பிடித்தான்.
“இதை ஏன் உன்கிட்ட தரலை தெரியுமா? உன்னை நம்ப முடியாது, அதான்... ஊரோட போய், உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோ முருகா. இந்த கனவு உலகம் உனக்கு செட் ஆகாது, வேண்டாம்” சொன்னவன், ஒரு வழியாக அங்கே இருந்து பிரிய மனமின்றி பிரிந்து சென்றான்.
தன் அலைபேசியில் இருந்த சிம்மை கழட்டியவன், ஸ்டுடியோவுக்கு வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் வீசினான். அதற்குமேலே அதன் அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. அரை மனதாக தன் காரை கிளப்பிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.
அவன் வீட்டுக்குச் செல்கையில், அவனது தம்பி வேலைக்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருக்க, தந்தையோ சாப்பாட்டு மேஜையின் அருகே, தரையில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார்.
அவனது கார் சத்தம் வெளியே கேட்கையிலேயே அவர்கள் அனைவரின் கவனமும் வாசலுக்குச் செல்ல, நெடுநாள் தாடியும், மீசையுமாக வந்து நின்ற அவனை, இப்படி ஒரு கோலத்தில் அங்கே யாரும் எதிர்பார்க்கவில்லை.
“எய்யா... சாமி... வாய்யா... என்ன கோலம் இது? வா... வந்து உக்காரு... அறிவு, அந்த ஃபேனைப் போட்டு விடு...” தாய் படபடக்க, தாயின் கரத்தை கெட்டியாக பற்றிக் கொண்டான்.
“அம்மா...” அழைத்தவனுக்கு, அத்தனை மாதங்களாக கட்டி வைத்திருந்த சோகம் எல்லாம் பொங்கி வழிய, தாயின் மடியில் படுத்து, கதறி அழத் துவங்கினான்.
“அண்ணே... என்னண்ணே... என்ன ஆச்சு? வேலையில் ஏதும் பிரச்சனையா? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். அது ஒண்ணுதான் வேலையா? ஆயிரம் வேலை இருக்கு...” அறிவு அவன் காலுக்கு அருகே அமர்ந்தவன், ஆறுதல் சொல்ல, விஷ்வாவோ தன் அழுகையைத் தொடர்ந்தான்.
அவனது அழுகை நிற்காமல் போகவே, வேகமாக தன் அலைபேசியை எடுத்தவன், வாசுதேவனுக்கு அழைத்தவாறே வீட்டுக்கு வெளியே செல்ல, அவரோடு பேசியவனுக்கு, அவர் சொன்னவற்றைக் கேட்டு, தகர்ந்துபோய் அப்படியே படிக்கட்டில் அமர்ந்துவிட்டான்.
முதல் வேலையாக தன் வேலைக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்தவன், ஒரு மெயிலை அனுப்பிவிட்டு, அவனும் கண்ணீர் விட்டு அழுதான்.
ஆயிரம் இருந்தாலும், விஷ்வாவின்மீது பெரும் கோபமே இருந்தாலும், தன் அண்ணனைக் கண்டு அவனுக்கு ஒரு பிரமிப்பு இருந்தது, பெரும் பாசம் இருந்தது. அப்படி இருக்கையில், ‘அவனுக்கா இப்படி ஒரு நிலைமை?’ என நினைக்க நினைக்க மனம் நொந்து போனான்.
அவன் அங்கே அப்படி அமர்ந்திருக்க, அவனது தந்தை கோட்டைச்சாமி வந்து அவனது தோளைத் தொட்டார்.
“அப்பா...” அழைத்தவன் வேகமாக தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
“என்ன அறிவு...? அவர் என்ன சொன்னார்?” தகப்பன் கேட்க, அவரிடம் சொல்ல அவனுக்கு வாய் வரவே இல்லை.
“எதுவும் இல்லப்பா...?” அவன் சமாளிக்க முயன்றாலும், அவனது குரலும், முகமும் அதற்கு ஒத்துழைக்க மறுத்தது.
“உண்மையைச் சொல் அறிவு...” அவர் சிறு அழுத்தமாக குரல் கொடுக்கவே, தற்போது இருக்கும் விஷ்வாவின் உடல்நிலை முதல், அவன் நேசித்த பெண் அவனை விட்டுச் சென்றுவிட்டாளாம் என்பது வரைக்கும் அவன் சொல்ல, கோட்டைச்சாமியும் கலங்கி நின்றிருந்தார்.
“என்ன அறிவு சொல்ற? என் குலசாமிக்கா இப்படி ஒரு நிலைமை? உன் அம்மாவுக்குத் தெரிஞ்சா, அவ உசுரையே விட்டுடுவாளே...” அவர் பதற, அவனுக்குமே அந்த கவலை தொற்றிக் கொண்டது.
அந்த அவனது நிலையை ஜீரணிக்கவே ஆண்கள் இருவருக்கும் ஒரு நாள் ஆக, இரண்டாம்நாள் காலையில் அறிவு தன் அண்ணனைத் தேடிச் சென்றான்.
“அறிவு, வேலைக்குப் போகல?” படுக்கையில் எழுந்து அமர்ந்தவன் கேட்க, அவனது அறையின் திரைச் சீலைகள் அனைத்தையும் ஒதுக்கி, அறைக்குள் வெளிச்சம் வர வைத்தான்.
“ஒரு வாரம் லீவ் போட்டிருக்கேன்... எல்லாம் எனக்குத் தெரியும்ண்ணா...” அவன் சொல்ல, ‘ஓ...’ என்னும் பாவனையைக் கொடுத்தவன், அதற்கு மேலே என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியானான்.
“இந்த அண்ணா மேல இன்னும் கோபத்துலதான் இருக்கறியா அறிவு?” அவன் சிறு சங்கடமாக வினவ, சின்னவனோ பதறினான்.
“என்னண்ணா பேசற? உன்மேல கோபமா? அதெல்லாம் இல்லை... நீ எதுக்கு இப்படி இருக்கற? வா... வந்து இந்த தாடி, மீசையை எல்லாம் எடு, இது உனக்கு நல்லாவே இல்ல. வா...” அவனைப் பிடிவாதமாக அவன் எழுப்ப, தம்பியின் முகம் பார்த்தான்.
“என்னண்ணா? என்னன்னு சொல்லு” அவன் பார்வையை உணர்ந்து அவனிடம் கேட்டான்.
“இது... எல்லாருக்கும் தெரியுமா?”.
“அம்மாவுக்கு இன்னும் தெரியாது... தெரிஞ்சா தாங்க மாட்டாங்க. இது உண்மையா இருக்காதுண்ணா... நாம வேற நல்ல பெரிய ஹாஸ்பிட்டலா பார்க்கலாம்” அவனுக்கு ஒன்று என்பதை, அவனால் இன்னும் ஏற்க முடியவில்லை.
“கீழே போய்... கார் டிக்கியில் ஒரு கவர் இருக்கும், அதை எடுத்துட்டு வா” அவன் சொல்ல, ‘அது இப்போ எதுக்கு?’ எனப் பார்த்தான்.
ஆனாலும், தன் அண்ணன் சொன்னதை அவன் தட்டாமல் செய்ய, கீழே போய் அதைக் கொண்டு வந்தவனிடம், அதைப் பிரிக்கச் சொல்ல, உள்ளே இருந்து நான்கு ஐந்து ஃபயில்கள், அதுவும் வேறு வேறு மருத்துவமனையின் பெயர்களைத் தாங்கி இருக்க, அறிவின் கண்களில் கண்ணீர்.
“அண்ணா...” அவன் குரல் நடுங்க, முகம் கலங்க தன் அண்ணனைப் பார்க்க,
“ஒன்னுக்கு, ஐந்து ஒப்பீனியன்... ஹாஸ்பிடல் பாத்தாச்சு. ரிசல்ட் என்னவோ ஒண்ணுதான்...” இன்னதென விளங்காத ஒரு குரலில் அவன் சொல்ல, அறிவால் அதை ஏற்க முடியவில்லை.
“இது சரியாகாதாண்ணா...?” குரலில் அப்படி ஒரு ஏக்கம், பயம்.
“இல்லன்னுதான் சொல்றாங்க...” சாதாரணமாக சொல்ல முயன்றான்.
“இல்ல, நான் ஒத்துக்க மாட்டேன்... நாம இன்னைக்கு ஹாஸ்பிடல் போய், மறுபடியும் கேட்கலாம். இப்போ நீ வா...” சொன்னவன், அவனுடனே இருந்து, அவனுக்கு வேண்டிய அனைத்தையும் செய்தான். இந்த தம்பியை என்னவெல்லாம் சொல்லி காயப்படுத்தினான். ஆனால் இன்று தனக்காக தன் தம்பி படும் துன்பம், கவலை... தன்னுடனே அவன் இருப்பது என அனைத்தும் அவனை அசைத்துதான் போட்டது.