பகுதி – 24.
பூமிகாவின் கோரிக்கையில் தனக்குள் எழுந்த தடுமாற்றத்தையும், வலியையும் தனக்குள் புதைத்துக் கொண்டவன், “இதெல்லாம் என்ன கேள்வி பூமி? நான்தான் உன் பொண்டாட்டின்னு ஏற்கனவே சொல்லிட்டனே.
“உனக்கு என்மேல் எல்லா உரிமையும் இருக்கு... உன்னை எப்படி ஜட்ஜ் பண்ணுவேன்’ங்கற யோசனையையும், தயக்கத்தையும், பயத்தையும் முதல்ல விடு.
“இதுக்கெல்லாம் தயங்கற, பயப்படற இடத்தில் நான் உன்னை வச்சுக்க விரும்பலை. இருக்கப்போற கொஞ்ச நாள்ல ஃப்ரீயா இரு. என்கிட்டே என்ன வேண்ணா பேசு, கேளு... ஐ’ம் அட் யுவர் சர்வீஸ்...” அவன் சொல்ல, அவனது கரத்தை முழுதாக கோர்த்தவள், அவன் கழுத்தில் முகம் புதைத்தாள்.
“கல்யாணம் முடிஞ்ச உடனேயே, ஆம்பளைங்களுக்கு பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் தான் முன்னாடி இருக்குமாமே... அப்படியா?” அவள் அவனிடம் சின்னக் குரலில் கேட்க, மெல்லியதாக புன்னகைத்தான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, “உண்மையைச் சொல்லவா? பொய் சொல்லவா?” அவனும் அவள் கேட்ட அதே சின்னக் குரலில் வினவ, அவன் சட்டையைப் பிடித்து இழுத்தவள், சிணுங்கலாக அவனைப் பார்த்தாள்.
அதைப் பார்த்தவன், “சரி, நான் உண்மையையே சொல்றேன்... ஆமா... அது அப்படித்தான். இவதான் நம்ம பொண்ணுன்னு தெரிஞ்சாலே புத்தி பூரா எப்போ அவளை முழுசா தெரிஞ்சுப்போம்ன்னு தான் யோசிக்கும்.
“ஆம்பளைங்களும் உங்களை மாதிரி தயங்கிட்டு இருந்தா, யார் முதல்ல ஆரம்பிக்கறதாம்? எங்க பாட்டி ஒரு சொலவடை சொல்வாங்க... ‘ஆம்பளை வெக்கப்பட்டா கோமணமும் அவுராது, குலமும் விருத்தி ஆகாதுன்னு’ அது உண்மையும் கூட” அவன் அவள் நெற்றியில் முட்ட, அவன் கண்களை ஏறிட முடியாமல், மீண்டும் அவன் கழுத்தில் முகம் புதைத்தாள்.
அவளை மென்மையாக தூக்கி தன் மடியில் அவன் அமர வைத்துக் கொள்ள, அவன் கழுத்தை முழுதாக வளைத்து கட்டிக் கொண்டாள்.
“இப்போ நீங்க அப்படி இல்லையா?” அவள் கேள்வியில், அவனுக்கு வருத்தம்தான் எழுந்தது.
அவள்மீதான உடல் ஈர்ப்போ, தேவையோ அவனுக்கு ஏற்படவே இல்லை எனச் சொன்னால் அது முழுப்பொய். ஆனால், அதைப்பற்றி யோசிக்க கூட அவன் வெகுவாக பயந்தான். தன் ஒற்றை, தனிப்பட்ட பார்வைகள் கூட அவளை படபடக்க வைத்து, மூர்ச்சையாக்கும் என்கையில் அவன் எதை சிந்திக்கவாம்?
“ம்... ஆமா... நான் சொல்றதை முதல்ல நிதானமா கேளு பூமி. ஒரு பொண்ணோட இதழ் சுவை எப்படி இருக்கும்? அவளோட கன்னத்தோட மென்மை எப்படி இருக்கும்? அவளோட கழுத்தில் இளைப்பாறி, அவள் மார்புக்கு மத்தியில் தொலைந்து போவது எப்படி இருக்கும்?
“அவளோட மொத்த தேகத்தையும், அதன் வெம்மையையும் முழுசா உள்வாங்கும் சுகம் எப்படி இருக்கும். ஒரு பெண்ணுக்குள் முழுசா அடைக்கலமாகி திளைக்கும் பரம சுகம் எப்படி இருக்கும்னு எல்லாம் எனக்குத் தெரியும்.
“சொல்லப்போனா, அதையெல்லாம் கடந்து, மீண்டு, தெளிஞ்சு இப்போ நான் வந்திருக்கேன். சோ... எனக்கு அதை, அதாவது அந்த உணர்வை எங்கே எப்படி நிறுத்தணும்ன்னு நல்லாவே தெரியும். என்னைப்பத்தி நீ கவலைப் படாதே” அவன் சொல்ல, அவளிடம் பெருத்த அமைதி.
அவளது அமைதி நீண்டுகொண்டே செல்ல, “சாரி, நான் உண்மையைச் சொல்றேன்னு, உன்னை கஷ்டப்படுத்திட்டேனா?” பெரும் வருத்தமாக கேட்டான்.
அவள் மறுப்பாக தலை அசைக்கவே, “மனசால கூட கெட்டுப் போகாத உனக்கு நான் கொஞ்சம் கூட இணையே கிடையாதுன்னு எனக்குத் தெரியும் பூமி...” அவன் இயலாமையில் தடுமாற, அவனை இன்னும் இறுக கட்டிக் கொண்டாள்.
அவள் தன்னை அணைத்த விதத்திலேயே, அவள் அதையெல்லாம் யோசிக்கவில்லை எனச் சொல்ல, அவனுக்குள் ஒருவித சந்தோஷமும், நிம்மதியும் எழுந்தது.
“பூமி, மெதுவா... ரிலாக்ஸ்...” அவள் முதுகை வருடியவன், அவளது இதயத்துடிப்பை தன் தேகத்தில் அறிய முயன்றான். அது பலவீனமாக துடிப்பது தெரிய, அவனுக்குள் பெரும் கவலை.
“கொஞ்ச நேரம் படுத்துக்கறியா? ரொம்ப சோர்ந்து போயிருக்க” அவன் சொல்ல, சம்மதமாக தலை அசைத்தாள். உண்மையில் அவளால் சுத்தமாக முடியவில்லை என்பதுதான் உண்மை.
“சரி வா... உள்ளே வந்து படு... இங்கே வேண்டாம்...” சொன்னவன் அவளை கைகளில் அள்ளிக் கொள்ள, அவன் கழுத்தை கோர்த்திருந்த கரத்தை விலக்கிக் கொள்ளவே இல்லை.
“ஒரு நாப்பது கிலோ இருப்பியா பூமி?” அவள் காதுக்குள் அவன் முனக,
“ம்... முப்பத்தி எட்டு...” அவள் சொன்னதில் அவனுக்கு அத்தனை திகைப்பு.
“இன்னும் கொஞ்ச நாள் போனா, காற்றில் கரைஞ்சு, காணாமலே போய்டுவபோல. ஏதாவது சாப்ட்டியா? கீழே போய், நான் ஏதாவது வாங்கிட்டு வரவா?” அவளிடம் கேட்க, மறுப்பாக தலை அசைத்தாள்.
“நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சூப் குடிச்சேன்... இப்போ எதுவும் வேண்டாம்...” சொன்னவள், அவன் அவளைப் படுக்கையில் விட, தன் கரத்தை விலக்கிக் கொண்டாள்.
அவன் தன்னைவிட்டு விலகப்போன நிமிடம், தன் ஆக்ஸிஜன் மாஸ்க்கை விலக்கியவள், அவன் கன்னத்தில் அழுத்தமாக, ஆழமாக தன் இதழைப் பதிக்க, அவள் செய்கைக்கு இசைந்து அமைதியாக நின்றிருந்தான்.
அவனை முத்தமிட்டு விலகியவள், “நீங்க என்னென்னவோ சொன்னீங்களே, அதெல்லாம் எனக்கு எதுவும் முடியாது...” சின்ன வருத்தத்தில் அவள் சொல்ல, அவள் வாயை தன் விரலால் மூடினான்.
“மாஸ்க்கை கழட்டாதே... வேண்டாம்...” அவள் இதயம் தன் வேலையை வெகுவாக குறைக்க, உடலுக்குத் தேவையான, மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் லெவல் குறைந்துகொண்டே வருவதாக, அவர்களுடனே, ஆம்புலன்சில் இருக்கும் மருத்துவர் சொல்லியிருக்க, அவனுக்கு ஏக கவலை.
“என்னால உங்களுக்கு ஒரு சின்ன ‘தனிப்பட்ட’ சந்தோஷத்தை கூட தர முடியாது” அவள் கவலையாக,
“பூமி பிளீஸ்... நம்மளால முடியாததைப் பத்தி எல்லாம் நாம பேச வேண்டாம். அப்படி நீ எனக்கு என்ன தரணும்னு யோசிக்கற? அதெல்லாம் எதுவும் வேண்டாம் விடு... எனக்கு உன் கூட இருக்கறதே சந்தோஷம் தான்” சொன்னவன் அவளை விட்டு விலகிச் செல்ல, அவன் கரத்தைப் பிடித்து தடுத்தாள்.
“உங்களுக்கு எதுவும் வேலை இருக்கா?” அவள் கேட்க,
“வேலை இருந்தாலும், இன்னும் ஒரு வாரத்துக்கு செய்யறதா இல்லை. புதுசா கல்யாணமானவங்க வேலை எல்லாம் செய்யக் கூடாதாம்? சாமி குத்தம் ஆயிடுமாம்...” கன்னத்தில் ‘தப்பு’ போட்டுக்கொண்டு அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு பெரும் சிரிப்பு.
“பிறகு...?”.
“கதவை பூட்டிட்டு, ட்ரஸ் மாத்திட்டு, உங்க அண்ணாவுக்கு ஒரு மெஸ்சேஜ் போட்டுட்டு வர்றேன்...” சொன்னவன் அதைச் செய்ய, தன் இமைகளை சோர்வில் மூடிக் கொண்டாள்.
அதென்னவோ அவனுடனே, அவன் அருகிலேயே இருப்பது, தன் கஷ்டத்தையும் மீறி, ஒருவித ஆறுதலை அளிக்க, தன் அருகே வந்து படுத்தவனின் வெற்று தேகத்தைப் பார்த்து விழித்தாள்.
“என்ன முழிக்கற? நம்மளால் முடியாததை யோசிக்கறதை விட, முடியறதை செய்யலாம். நீ இதுக்கு கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணலன்னா சொல்லிடு, டிஷர்ட் போட்டுக்கறேன்” அவன் சொல்ல, அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்தாள்.
அவன் இதயத்துடிப்பை காது வைத்து கேட்டவள், அதன் லப்டப் ஓசை கொடுத்த தாலாட்டில் கவரப்பட்டாள்.
“நார்மல் ஹார்ட் இப்படித்தான் துடிக்குமா? எனக்கு இப்போதான் தெரியும். என் ஹார்ட் ரொம்ப ஸ்லோவாகும், திடீர்ன்னு ஓவர் ஸ்பீட்ல போகும்... இது நல்லா இருக்கு...” அவள் சொல்ல, அவள் இதழில் விரல் வைத்து தடுத்தான்.
“சரி... இன்னைக்கு ரொம்ப பேசிட்ட... கொஞ்சம் அமைதியா தூங்கு” அவன் சொல்ல, அவன் நெஞ்சை கரத்தால் வருடியவள், அவன் ரோமங்களை விரலால் வருட, அவனுக்குள் சில பல தடுமாற்றங்கள் நிகழ்ந்து படபடக்க வைத்தது.
ஆயிரம்தான் அவளது உடல்நிலையைக் கருதி, அவன் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முயன்றாலும், ஒரு பெண்ணின் பூந்தேகம் அவன் உடலோடு ஒட்டி உறவாடுகையில், அவன் உணர்வுகள் விழித்துக்கொள்ளாமல் போனால்தான் ஆச்சரியம்.
முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தவன், “ஒரு மாதிரி வாசனையா இருக்க பூமி...” தன்னை மீறி சொல்லிவிட, நன்றாக நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
“நான் ஃபெர்பியூம் எல்லாம் யூஸ் பண்றது இல்லையே. எனக்கு அது ஒத்துக்காது” சொன்னவள் அவன் கண்களிலும், முகத்திலும் எதையோ தேட, அவளது தேடலை உணர்ந்தவன் இமைகளை மூடிக் கொண்டான்.
அவளுக்குள் இனிமையாக ஏதோ ஒரு சுகந்தம் விரவ, மீண்டும் அவன் நெஞ்சில் தலை சாய்த்தாள். “நானும் அதைச் சொல்லலை... தூங்கு...” சொன்னவன், அவளை மென்மையாக அணைத்து படுத்து, இமைகளையும் வாயையும் இறுக மூடிக் கொண்டான்.
அவர்கள் இருவரும் தங்களை மீறி உறங்கிப் போயிருக்க, முதலில் கண் விழித்தது ஆகாஷ் தான். தனக்குள் நேரும் மாற்றம் அவனுக்குப் புரிய, தன்னை ஒட்டிப் படுத்திருந்தவளை மெதுவாக விலக்கியவன், எழுந்து பின்படிக்கட்டு வழியாக தென்னந்தோப்புக்குள் ஓடினான்.
சில பல நிமிடங்கள் அங்கே கழித்தவன், திரும்பி வருகையில், அவனது விழிகள் இரண்டும் ரத்தம்கட்டி சிவந்ததுபோல் தடித்து வீங்கி இருந்தது.
அப்பொழுது கண் விழித்து அவனைப் பார்த்த பூமிகா பயந்தே போனாள். “என்னங்க, உங்க கண்ணுக்கு என்ன ஆச்சு?” அவள் படபடக்க,
“பூமி... கீழே தென்னந்தோப்புக்கு போயிருந்தேன், ஏதோ பூச்சி கண்ணுக்குள் விழுந்துடுச்சு, அதுதான்... வேற ஒண்ணும் இல்லை” அவளை பதட்டப்பட விடாமல் வேகமாக சொன்னான்.
“கீழே டாக்டர் இருக்கார் பாருங்க... உடனே வாங்க...” அவள் அழைக்க,
“அங்கே போய்ட்டுதான் வர்றேன்... எரிச்சல், வலி எல்லாம் இல்லன்னா, அதுவே சரி ஆயிடும்னு சொன்னார். ரிலாக்ஸ்... வா... கீழே போகலாம்” சொன்னவன் அவளையும் அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.
அந்த நேரம் வேலையில் இருந்து வந்திருந்த சிவா, அவனைப் பார்த்துவிட்டு அவன் அருகே வர, மற்றவர்களின் கவனத்தை கவராதவாறு இருவரும் வெளியே சென்றார்கள்.
அந்த நேரம் காபி வேளை ஆகி இருக்க, காவேரி அனைவருக்கும் டீ ஸ்னேக்ஸ் கொடுக்கவே, அனைவரின் கவனமும் அங்கே சென்றது. பூமிகாவும் தன் தோழியை தேடிச் செல்ல, இங்கே இவர்களைத் தனியாக கவனிப்பார் யாரும் இருக்கவில்லை.
வெளியே சென்று திரும்பிய இருவரின் முகங்களும் இருண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை என்பது அவர்களுக்கு பெருத்த ஆறுதலாக இருந்தது.
பூமிகாவின் மனம் ஒரு மாதிரி அமைதியில் திளைத்திருக்க, தேன்மொழியோ சற்று பதட்டத்தில் இருந்தாள். அவளது பதட்டத்தைப் பார்த்த பூமிகா வாய்க்குள் சிரித்துக் கொள்ள, அதை அவள் கவனித்துவிட்டாள்.
“பூமி... சிரிக்கற பாத்தியா...? போ, நான் உன்மேல கோவமா இருக்கேன்” சற்று முறுக்கிக் கொண்டு அவள் அமர, தோழியை மென்மையாக கட்டிக் கொண்டாள்.
“தேனு... என்னவோ அவனைத் தெரியவே தெரியாதுங்கற மாதிரி பயப்படற? இதைப் பாத்தா சிரிக்காம என்ன செய்வாங்க?” தோழியிடம் நியாயம் கேட்க, அதற்கும் முறைப்புதான் பதிலாக கிடைத்தது.
“உனக்கு அண்ணனா இருக்கறப்போ நல்லாத்தான் இருப்பார்... என் ஆளா மாறும்போதுதானே விஷயமே இருக்கு” அவள் சின்னக் குரலில் சொல்ல, இப்பொழுது வாய்விட்டே சிரித்தாள்.
“அதுக்கு... அவனை என் அண்ணனாவே இருக்க சொல்ல முடியுமா? முதல்ல எழுந்து குளி...” அவள் சொல்ல, பிரபாவும் அங்கே வந்துவிட, அமைதியாக அவர்கள் சொன்னதைக் கேட்டாள்.
இவளுக்கு இங்கே மனதுக்குள் போராட்டம் நடக்க, நித்யானந்தமோ, ப்ரதிக்கிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“என்னப்பா, பேசணும்னு சொல்லிட்டு, இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” அவர் தன்னிடம் பேச தயங்குவது புரிய, அவரிடம் கேட்டான்.
“ப்ரதிக், இது அவசரக் கல்யாணம்ங்கறதால, உன் அண்ணாவுக்கு போன்ல தகவல் சொன்னதோட ஆச்சு. இப்போ ரிசப்ஷன் வைக்கலாம்ன்னா, பூமியை விட்டு எங்கேயும் வர மாட்டேன்னு நிக்கறா. அதைவிட, உன் தங்கச்சி வயசுதான் அவளுக்கும்... சின்னப் பொண்ணுப்பா...” அவர் சுற்றி வளைக்க, அவர் முகம் பார்த்தான்.
“அப்பா, சொல்ல வர்றதை பளிச்சுன்னு சொல்லுங்க...”.
“இப்போதான் காலேஜ் மூணாவது வருஷ பரீட்சையே எழுதப் போறா. இந்த நேரத்தில் உங்க வாழ்க்கையோட அடுத்தகட்ட நிலைக்குப் போறதை கொஞ்சம் தள்ளிப் போட்டா நல்லா இருக்கும்னு நாங்க நினைக்கறோம்.
“பூமி ஆசைப்பட்டாங்கற ஒரே காரணத்துக்காகத்தான், இந்த கல்யாணமே இவ்வளவு அவசரமா நடந்தது. அதுக்காக... உன் வாழ்க்கையை ஆரம்பிக்க கூடாதுன்னு நான் சொல்லலை... கொஞ்சம் கவனமா இருன்னு சொல்றேன்.
“உனக்கும் இருபத்தாறு வயசுதான் ஆகுது... இன்னும் ரெண்டு வருஷம் தாண்டி நீ அப்பா ஆனாலும் பரவாயில்லை... அந்த சின்னப் பொண்ணுக்கு இப்போவே சுமையைக் கொடுக்க வேண்டாமே...” அவர் வெகுவாக தயங்கி, தடுமாறி பேச, அவர் சொல்ல வருவது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
“அப்பா, அவ படிப்பு முடியற வரைக்கும் நான் கவனமா இருக்கேன்ப்பா” அவன் சொல்ல, அவருக்கு அப்பொழுதுதான் சற்று நிம்மதியாக இருந்தது.
“இந்த அப்பாமேலே கோபமெல்லாம் இல்லையே...”.
“என்னப்பா இப்படி கேட்கறீங்க? அவ எனக்கு கிடைப்பாளா? மாட்டாளா? அதை அம்மா ஏத்துப்பாங்களா?ன்னு எவ்வளவு டென்ஷன்ல இருந்தேன். இப்போ அவ எனக்கே எனக்குன்னு கிடைச்சுட்டா... அதுவே போதும்ப்பா... அம்மாகிட்டே ரொம்ப டென்ஷன் ஆக வேண்டாம்னு சொல்லுங்க” அவன் முடிக்க, நித்யானந்தம் திடுக்கிட்டார்.
“அது...” அவர் தடுமாற,
“நீங்க இவ்வளவு பெரிய விஷயத்தை, நீங்களா யோசிச்சு என்கிட்டே பேச வந்திருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அம்மா என்னதான் அவ மேலே கோபம் மாதிரி காட்டிகிட்டாலும், மொழி மேல அவங்களுக்கு எப்பவுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டுன்னு எனக்குத் தெரியும்ப்பா” உன்னை நான் அறிவேன் என அவன் சொல்லாமல் சொல்ல, அவருக்கு சற்று நிம்மதியே.
“இப்போ அவளுக்குன்னு இருக்கற முதல் சொந்தம் நீதான்... அவளைப் பார்த்துக்க. நான் அவளைக் கூட்டி வந்தேன், சாப்பாடு போட்டேன், படிக்க வச்சேன், தங்க இடம் கொடுத்தேன் அவ்வளவுதான். பாசம் எல்லாம் காட்டத் தெரியலை.
“உங்க அம்மாவும் அவகிட்டே நாலு வார்த்தை படிப்பு, பூமி பத்தி கேட்கறதோட சரி. பூமிகிட்டே கூட அவளால் மனசுவிட்டு பேச முடிஞ்சிருக்குமான்னு தெரியலை. பார்த்துக்கப்பா...” சற்று குற்றவுணர்வில் அவர் பேச, அவன் மனது பாரமாகிப் போனது.
இரவு உணவை அனைவரும் சேர்ந்தே உண்ண, ப்ரதிக் தேன்மொழியை பார்வையால் வருடிக் கொண்டிருக்க, ஆகாஷோ ஒரு மாதிரி நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருப்பதுபோல் பூமிகாவுக்குத் தோன்றியது.
தன் அருகே அமர்ந்திருந்தவனது கரத்தை அழுத்தி, பார்வையாலேயே ‘என்ன?’ என்பதுபோல் அவள் கேட்க,
“ஃபஸ்ட்நைட் டென்ஷன்... வேற எதுவும் இல்லை...” அவன் கண்ணடித்து சொல்ல, ஒரு மாதிரி திகைத்து விழித்து, வேகமாக மற்றவர்களை திரும்பிப் பார்த்தாள்.
அவளது செய்கையைப் பார்த்தவன், தேகம் குலுங்க சிரிக்க, அவன் தொடையில் வலிக்காமல் கிள்ளி வைத்தாள். “எல்லாம் தெரிஞ்சு சலிச்சவருக்கு புதுசா என்னவாம்?” அவனது விளையாட்டு புரிய, அவனிடம் கேட்டாள்.
“புதுப் பொண்டாட்டி ஆச்சே அதான்... போலாமா...?” வார்த்தையில் விளையாடியவன், பார்வையில் கூட அவளைவிட்டு விலகித்தான் இருந்தான். பார்வைக்கே பஞ்சம் என்கையில், அவளை சாதாரணமாக கூட தீண்டுவது எங்கே?