• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 24.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
பகுதி – 24.

பூமிகாவின் கோரிக்கையில் தனக்குள் எழுந்த தடுமாற்றத்தையும், வலியையும் தனக்குள் புதைத்துக் கொண்டவன், “இதெல்லாம் என்ன கேள்வி பூமி? நான்தான் உன் பொண்டாட்டின்னு ஏற்கனவே சொல்லிட்டனே.

“உனக்கு என்மேல் எல்லா உரிமையும் இருக்கு... உன்னை எப்படி ஜட்ஜ் பண்ணுவேன்’ங்கற யோசனையையும், தயக்கத்தையும், பயத்தையும் முதல்ல விடு.

“இதுக்கெல்லாம் தயங்கற, பயப்படற இடத்தில் நான் உன்னை வச்சுக்க விரும்பலை. இருக்கப்போற கொஞ்ச நாள்ல ஃப்ரீயா இரு. என்கிட்டே என்ன வேண்ணா பேசு, கேளு... ஐ’ம் அட் யுவர் சர்வீஸ்...” அவன் சொல்ல, அவனது கரத்தை முழுதாக கோர்த்தவள், அவன் கழுத்தில் முகம் புதைத்தாள்.

“கல்யாணம் முடிஞ்ச உடனேயே, ஆம்பளைங்களுக்கு பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் தான் முன்னாடி இருக்குமாமே... அப்படியா?” அவள் அவனிடம் சின்னக் குரலில் கேட்க, மெல்லியதாக புன்னகைத்தான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, “உண்மையைச் சொல்லவா? பொய் சொல்லவா?” அவனும் அவள் கேட்ட அதே சின்னக் குரலில் வினவ, அவன் சட்டையைப் பிடித்து இழுத்தவள், சிணுங்கலாக அவனைப் பார்த்தாள்.

அதைப் பார்த்தவன், “சரி, நான் உண்மையையே சொல்றேன்... ஆமா... அது அப்படித்தான். இவதான் நம்ம பொண்ணுன்னு தெரிஞ்சாலே புத்தி பூரா எப்போ அவளை முழுசா தெரிஞ்சுப்போம்ன்னு தான் யோசிக்கும்.

“ஆம்பளைங்களும் உங்களை மாதிரி தயங்கிட்டு இருந்தா, யார் முதல்ல ஆரம்பிக்கறதாம்? எங்க பாட்டி ஒரு சொலவடை சொல்வாங்க... ‘ஆம்பளை வெக்கப்பட்டா கோமணமும் அவுராது, குலமும் விருத்தி ஆகாதுன்னு’ அது உண்மையும் கூட” அவன் அவள் நெற்றியில் முட்ட, அவன் கண்களை ஏறிட முடியாமல், மீண்டும் அவன் கழுத்தில் முகம் புதைத்தாள்.

அவளை மென்மையாக தூக்கி தன் மடியில் அவன் அமர வைத்துக் கொள்ள, அவன் கழுத்தை முழுதாக வளைத்து கட்டிக் கொண்டாள்.

“இப்போ நீங்க அப்படி இல்லையா?” அவள் கேள்வியில், அவனுக்கு வருத்தம்தான் எழுந்தது.

அவள்மீதான உடல் ஈர்ப்போ, தேவையோ அவனுக்கு ஏற்படவே இல்லை எனச் சொன்னால் அது முழுப்பொய். ஆனால், அதைப்பற்றி யோசிக்க கூட அவன் வெகுவாக பயந்தான். தன் ஒற்றை, தனிப்பட்ட பார்வைகள் கூட அவளை படபடக்க வைத்து, மூர்ச்சையாக்கும் என்கையில் அவன் எதை சிந்திக்கவாம்?

“ம்... ஆமா... நான் சொல்றதை முதல்ல நிதானமா கேளு பூமி. ஒரு பொண்ணோட இதழ் சுவை எப்படி இருக்கும்? அவளோட கன்னத்தோட மென்மை எப்படி இருக்கும்? அவளோட கழுத்தில் இளைப்பாறி, அவள் மார்புக்கு மத்தியில் தொலைந்து போவது எப்படி இருக்கும்?

“அவளோட மொத்த தேகத்தையும், அதன் வெம்மையையும் முழுசா உள்வாங்கும் சுகம் எப்படி இருக்கும். ஒரு பெண்ணுக்குள் முழுசா அடைக்கலமாகி திளைக்கும் பரம சுகம் எப்படி இருக்கும்னு எல்லாம் எனக்குத் தெரியும்.

“சொல்லப்போனா, அதையெல்லாம் கடந்து, மீண்டு, தெளிஞ்சு இப்போ நான் வந்திருக்கேன். சோ... எனக்கு அதை, அதாவது அந்த உணர்வை எங்கே எப்படி நிறுத்தணும்ன்னு நல்லாவே தெரியும். என்னைப்பத்தி நீ கவலைப் படாதே” அவன் சொல்ல, அவளிடம் பெருத்த அமைதி.

அவளது அமைதி நீண்டுகொண்டே செல்ல, “சாரி, நான் உண்மையைச் சொல்றேன்னு, உன்னை கஷ்டப்படுத்திட்டேனா?” பெரும் வருத்தமாக கேட்டான்.

அவள் மறுப்பாக தலை அசைக்கவே, “மனசால கூட கெட்டுப் போகாத உனக்கு நான் கொஞ்சம் கூட இணையே கிடையாதுன்னு எனக்குத் தெரியும் பூமி...” அவன் இயலாமையில் தடுமாற, அவனை இன்னும் இறுக கட்டிக் கொண்டாள்.

அவள் தன்னை அணைத்த விதத்திலேயே, அவள் அதையெல்லாம் யோசிக்கவில்லை எனச் சொல்ல, அவனுக்குள் ஒருவித சந்தோஷமும், நிம்மதியும் எழுந்தது.

“பூமி, மெதுவா... ரிலாக்ஸ்...” அவள் முதுகை வருடியவன், அவளது இதயத்துடிப்பை தன் தேகத்தில் அறிய முயன்றான். அது பலவீனமாக துடிப்பது தெரிய, அவனுக்குள் பெரும் கவலை.

“கொஞ்ச நேரம் படுத்துக்கறியா? ரொம்ப சோர்ந்து போயிருக்க” அவன் சொல்ல, சம்மதமாக தலை அசைத்தாள். உண்மையில் அவளால் சுத்தமாக முடியவில்லை என்பதுதான் உண்மை.

“சரி வா... உள்ளே வந்து படு... இங்கே வேண்டாம்...” சொன்னவன் அவளை கைகளில் அள்ளிக் கொள்ள, அவன் கழுத்தை கோர்த்திருந்த கரத்தை விலக்கிக் கொள்ளவே இல்லை.

“ஒரு நாப்பது கிலோ இருப்பியா பூமி?” அவள் காதுக்குள் அவன் முனக,

“ம்... முப்பத்தி எட்டு...” அவள் சொன்னதில் அவனுக்கு அத்தனை திகைப்பு.

“இன்னும் கொஞ்ச நாள் போனா, காற்றில் கரைஞ்சு, காணாமலே போய்டுவபோல. ஏதாவது சாப்ட்டியா? கீழே போய், நான் ஏதாவது வாங்கிட்டு வரவா?” அவளிடம் கேட்க, மறுப்பாக தலை அசைத்தாள்.

“நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சூப் குடிச்சேன்... இப்போ எதுவும் வேண்டாம்...” சொன்னவள், அவன் அவளைப் படுக்கையில் விட, தன் கரத்தை விலக்கிக் கொண்டாள்.

அவன் தன்னைவிட்டு விலகப்போன நிமிடம், தன் ஆக்ஸிஜன் மாஸ்க்கை விலக்கியவள், அவன் கன்னத்தில் அழுத்தமாக, ஆழமாக தன் இதழைப் பதிக்க, அவள் செய்கைக்கு இசைந்து அமைதியாக நின்றிருந்தான்.

அவனை முத்தமிட்டு விலகியவள், “நீங்க என்னென்னவோ சொன்னீங்களே, அதெல்லாம் எனக்கு எதுவும் முடியாது...” சின்ன வருத்தத்தில் அவள் சொல்ல, அவள் வாயை தன் விரலால் மூடினான்.

“மாஸ்க்கை கழட்டாதே... வேண்டாம்...” அவள் இதயம் தன் வேலையை வெகுவாக குறைக்க, உடலுக்குத் தேவையான, மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் லெவல் குறைந்துகொண்டே வருவதாக, அவர்களுடனே, ஆம்புலன்சில் இருக்கும் மருத்துவர் சொல்லியிருக்க, அவனுக்கு ஏக கவலை.

“என்னால உங்களுக்கு ஒரு சின்ன ‘தனிப்பட்ட’ சந்தோஷத்தை கூட தர முடியாது” அவள் கவலையாக,

“பூமி பிளீஸ்... நம்மளால முடியாததைப் பத்தி எல்லாம் நாம பேச வேண்டாம். அப்படி நீ எனக்கு என்ன தரணும்னு யோசிக்கற? அதெல்லாம் எதுவும் வேண்டாம் விடு... எனக்கு உன் கூட இருக்கறதே சந்தோஷம் தான்” சொன்னவன் அவளை விட்டு விலகிச் செல்ல, அவன் கரத்தைப் பிடித்து தடுத்தாள்.

“உங்களுக்கு எதுவும் வேலை இருக்கா?” அவள் கேட்க,

“வேலை இருந்தாலும், இன்னும் ஒரு வாரத்துக்கு செய்யறதா இல்லை. புதுசா கல்யாணமானவங்க வேலை எல்லாம் செய்யக் கூடாதாம்? சாமி குத்தம் ஆயிடுமாம்...” கன்னத்தில் ‘தப்பு’ போட்டுக்கொண்டு அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு பெரும் சிரிப்பு.

“பிறகு...?”.

“கதவை பூட்டிட்டு, ட்ரஸ் மாத்திட்டு, உங்க அண்ணாவுக்கு ஒரு மெஸ்சேஜ் போட்டுட்டு வர்றேன்...” சொன்னவன் அதைச் செய்ய, தன் இமைகளை சோர்வில் மூடிக் கொண்டாள்.

அதென்னவோ அவனுடனே, அவன் அருகிலேயே இருப்பது, தன் கஷ்டத்தையும் மீறி, ஒருவித ஆறுதலை அளிக்க, தன் அருகே வந்து படுத்தவனின் வெற்று தேகத்தைப் பார்த்து விழித்தாள்.

“என்ன முழிக்கற? நம்மளால் முடியாததை யோசிக்கறதை விட, முடியறதை செய்யலாம். நீ இதுக்கு கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணலன்னா சொல்லிடு, டிஷர்ட் போட்டுக்கறேன்” அவன் சொல்ல, அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்தாள்.

அவன் இதயத்துடிப்பை காது வைத்து கேட்டவள், அதன் லப்டப் ஓசை கொடுத்த தாலாட்டில் கவரப்பட்டாள்.

“நார்மல் ஹார்ட் இப்படித்தான் துடிக்குமா? எனக்கு இப்போதான் தெரியும். என் ஹார்ட் ரொம்ப ஸ்லோவாகும், திடீர்ன்னு ஓவர் ஸ்பீட்ல போகும்... இது நல்லா இருக்கு...” அவள் சொல்ல, அவள் இதழில் விரல் வைத்து தடுத்தான்.

“சரி... இன்னைக்கு ரொம்ப பேசிட்ட... கொஞ்சம் அமைதியா தூங்கு” அவன் சொல்ல, அவன் நெஞ்சை கரத்தால் வருடியவள், அவன் ரோமங்களை விரலால் வருட, அவனுக்குள் சில பல தடுமாற்றங்கள் நிகழ்ந்து படபடக்க வைத்தது.

ஆயிரம்தான் அவளது உடல்நிலையைக் கருதி, அவன் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முயன்றாலும், ஒரு பெண்ணின் பூந்தேகம் அவன் உடலோடு ஒட்டி உறவாடுகையில், அவன் உணர்வுகள் விழித்துக்கொள்ளாமல் போனால்தான் ஆச்சரியம்.

முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தவன், “ஒரு மாதிரி வாசனையா இருக்க பூமி...” தன்னை மீறி சொல்லிவிட, நன்றாக நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

“நான் ஃபெர்பியூம் எல்லாம் யூஸ் பண்றது இல்லையே. எனக்கு அது ஒத்துக்காது” சொன்னவள் அவன் கண்களிலும், முகத்திலும் எதையோ தேட, அவளது தேடலை உணர்ந்தவன் இமைகளை மூடிக் கொண்டான்.

அவளுக்குள் இனிமையாக ஏதோ ஒரு சுகந்தம் விரவ, மீண்டும் அவன் நெஞ்சில் தலை சாய்த்தாள். “நானும் அதைச் சொல்லலை... தூங்கு...” சொன்னவன், அவளை மென்மையாக அணைத்து படுத்து, இமைகளையும் வாயையும் இறுக மூடிக் கொண்டான்.

அவர்கள் இருவரும் தங்களை மீறி உறங்கிப் போயிருக்க, முதலில் கண் விழித்தது ஆகாஷ் தான். தனக்குள் நேரும் மாற்றம் அவனுக்குப் புரிய, தன்னை ஒட்டிப் படுத்திருந்தவளை மெதுவாக விலக்கியவன், எழுந்து பின்படிக்கட்டு வழியாக தென்னந்தோப்புக்குள் ஓடினான்.

சில பல நிமிடங்கள் அங்கே கழித்தவன், திரும்பி வருகையில், அவனது விழிகள் இரண்டும் ரத்தம்கட்டி சிவந்ததுபோல் தடித்து வீங்கி இருந்தது.

அப்பொழுது கண் விழித்து அவனைப் பார்த்த பூமிகா பயந்தே போனாள். “என்னங்க, உங்க கண்ணுக்கு என்ன ஆச்சு?” அவள் படபடக்க,

“பூமி... கீழே தென்னந்தோப்புக்கு போயிருந்தேன், ஏதோ பூச்சி கண்ணுக்குள் விழுந்துடுச்சு, அதுதான்... வேற ஒண்ணும் இல்லை” அவளை பதட்டப்பட விடாமல் வேகமாக சொன்னான்.

“கீழே டாக்டர் இருக்கார் பாருங்க... உடனே வாங்க...” அவள் அழைக்க,

“அங்கே போய்ட்டுதான் வர்றேன்... எரிச்சல், வலி எல்லாம் இல்லன்னா, அதுவே சரி ஆயிடும்னு சொன்னார். ரிலாக்ஸ்... வா... கீழே போகலாம்” சொன்னவன் அவளையும் அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.

அந்த நேரம் வேலையில் இருந்து வந்திருந்த சிவா, அவனைப் பார்த்துவிட்டு அவன் அருகே வர, மற்றவர்களின் கவனத்தை கவராதவாறு இருவரும் வெளியே சென்றார்கள்.

அந்த நேரம் காபி வேளை ஆகி இருக்க, காவேரி அனைவருக்கும் டீ ஸ்னேக்ஸ் கொடுக்கவே, அனைவரின் கவனமும் அங்கே சென்றது. பூமிகாவும் தன் தோழியை தேடிச் செல்ல, இங்கே இவர்களைத் தனியாக கவனிப்பார் யாரும் இருக்கவில்லை.

வெளியே சென்று திரும்பிய இருவரின் முகங்களும் இருண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை என்பது அவர்களுக்கு பெருத்த ஆறுதலாக இருந்தது.

பூமிகாவின் மனம் ஒரு மாதிரி அமைதியில் திளைத்திருக்க, தேன்மொழியோ சற்று பதட்டத்தில் இருந்தாள். அவளது பதட்டத்தைப் பார்த்த பூமிகா வாய்க்குள் சிரித்துக் கொள்ள, அதை அவள் கவனித்துவிட்டாள்.

“பூமி... சிரிக்கற பாத்தியா...? போ, நான் உன்மேல கோவமா இருக்கேன்” சற்று முறுக்கிக் கொண்டு அவள் அமர, தோழியை மென்மையாக கட்டிக் கொண்டாள்.

“தேனு... என்னவோ அவனைத் தெரியவே தெரியாதுங்கற மாதிரி பயப்படற? இதைப் பாத்தா சிரிக்காம என்ன செய்வாங்க?” தோழியிடம் நியாயம் கேட்க, அதற்கும் முறைப்புதான் பதிலாக கிடைத்தது.

“உனக்கு அண்ணனா இருக்கறப்போ நல்லாத்தான் இருப்பார்... என் ஆளா மாறும்போதுதானே விஷயமே இருக்கு” அவள் சின்னக் குரலில் சொல்ல, இப்பொழுது வாய்விட்டே சிரித்தாள்.

“அதுக்கு... அவனை என் அண்ணனாவே இருக்க சொல்ல முடியுமா? முதல்ல எழுந்து குளி...” அவள் சொல்ல, பிரபாவும் அங்கே வந்துவிட, அமைதியாக அவர்கள் சொன்னதைக் கேட்டாள்.

இவளுக்கு இங்கே மனதுக்குள் போராட்டம் நடக்க, நித்யானந்தமோ, ப்ரதிக்கிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“என்னப்பா, பேசணும்னு சொல்லிட்டு, இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” அவர் தன்னிடம் பேச தயங்குவது புரிய, அவரிடம் கேட்டான்.

“ப்ரதிக், இது அவசரக் கல்யாணம்ங்கறதால, உன் அண்ணாவுக்கு போன்ல தகவல் சொன்னதோட ஆச்சு. இப்போ ரிசப்ஷன் வைக்கலாம்ன்னா, பூமியை விட்டு எங்கேயும் வர மாட்டேன்னு நிக்கறா. அதைவிட, உன் தங்கச்சி வயசுதான் அவளுக்கும்... சின்னப் பொண்ணுப்பா...” அவர் சுற்றி வளைக்க, அவர் முகம் பார்த்தான்.

“அப்பா, சொல்ல வர்றதை பளிச்சுன்னு சொல்லுங்க...”.

“இப்போதான் காலேஜ் மூணாவது வருஷ பரீட்சையே எழுதப் போறா. இந்த நேரத்தில் உங்க வாழ்க்கையோட அடுத்தகட்ட நிலைக்குப் போறதை கொஞ்சம் தள்ளிப் போட்டா நல்லா இருக்கும்னு நாங்க நினைக்கறோம்.

“பூமி ஆசைப்பட்டாங்கற ஒரே காரணத்துக்காகத்தான், இந்த கல்யாணமே இவ்வளவு அவசரமா நடந்தது. அதுக்காக... உன் வாழ்க்கையை ஆரம்பிக்க கூடாதுன்னு நான் சொல்லலை... கொஞ்சம் கவனமா இருன்னு சொல்றேன்.

“உனக்கும் இருபத்தாறு வயசுதான் ஆகுது... இன்னும் ரெண்டு வருஷம் தாண்டி நீ அப்பா ஆனாலும் பரவாயில்லை... அந்த சின்னப் பொண்ணுக்கு இப்போவே சுமையைக் கொடுக்க வேண்டாமே...” அவர் வெகுவாக தயங்கி, தடுமாறி பேச, அவர் சொல்ல வருவது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

“அப்பா, அவ படிப்பு முடியற வரைக்கும் நான் கவனமா இருக்கேன்ப்பா” அவன் சொல்ல, அவருக்கு அப்பொழுதுதான் சற்று நிம்மதியாக இருந்தது.

“இந்த அப்பாமேலே கோபமெல்லாம் இல்லையே...”.

“என்னப்பா இப்படி கேட்கறீங்க? அவ எனக்கு கிடைப்பாளா? மாட்டாளா? அதை அம்மா ஏத்துப்பாங்களா?ன்னு எவ்வளவு டென்ஷன்ல இருந்தேன். இப்போ அவ எனக்கே எனக்குன்னு கிடைச்சுட்டா... அதுவே போதும்ப்பா... அம்மாகிட்டே ரொம்ப டென்ஷன் ஆக வேண்டாம்னு சொல்லுங்க” அவன் முடிக்க, நித்யானந்தம் திடுக்கிட்டார்.

“அது...” அவர் தடுமாற,

“நீங்க இவ்வளவு பெரிய விஷயத்தை, நீங்களா யோசிச்சு என்கிட்டே பேச வந்திருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அம்மா என்னதான் அவ மேலே கோபம் மாதிரி காட்டிகிட்டாலும், மொழி மேல அவங்களுக்கு எப்பவுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டுன்னு எனக்குத் தெரியும்ப்பா” உன்னை நான் அறிவேன் என அவன் சொல்லாமல் சொல்ல, அவருக்கு சற்று நிம்மதியே.

“இப்போ அவளுக்குன்னு இருக்கற முதல் சொந்தம் நீதான்... அவளைப் பார்த்துக்க. நான் அவளைக் கூட்டி வந்தேன், சாப்பாடு போட்டேன், படிக்க வச்சேன், தங்க இடம் கொடுத்தேன் அவ்வளவுதான். பாசம் எல்லாம் காட்டத் தெரியலை.

“உங்க அம்மாவும் அவகிட்டே நாலு வார்த்தை படிப்பு, பூமி பத்தி கேட்கறதோட சரி. பூமிகிட்டே கூட அவளால் மனசுவிட்டு பேச முடிஞ்சிருக்குமான்னு தெரியலை. பார்த்துக்கப்பா...” சற்று குற்றவுணர்வில் அவர் பேச, அவன் மனது பாரமாகிப் போனது.

இரவு உணவை அனைவரும் சேர்ந்தே உண்ண, ப்ரதிக் தேன்மொழியை பார்வையால் வருடிக் கொண்டிருக்க, ஆகாஷோ ஒரு மாதிரி நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருப்பதுபோல் பூமிகாவுக்குத் தோன்றியது.

தன் அருகே அமர்ந்திருந்தவனது கரத்தை அழுத்தி, பார்வையாலேயே ‘என்ன?’ என்பதுபோல் அவள் கேட்க,

“ஃபஸ்ட்நைட் டென்ஷன்... வேற எதுவும் இல்லை...” அவன் கண்ணடித்து சொல்ல, ஒரு மாதிரி திகைத்து விழித்து, வேகமாக மற்றவர்களை திரும்பிப் பார்த்தாள்.

அவளது செய்கையைப் பார்த்தவன், தேகம் குலுங்க சிரிக்க, அவன் தொடையில் வலிக்காமல் கிள்ளி வைத்தாள். “எல்லாம் தெரிஞ்சு சலிச்சவருக்கு புதுசா என்னவாம்?” அவனது விளையாட்டு புரிய, அவனிடம் கேட்டாள்.

“புதுப் பொண்டாட்டி ஆச்சே அதான்... போலாமா...?” வார்த்தையில் விளையாடியவன், பார்வையில் கூட அவளைவிட்டு விலகித்தான் இருந்தான். பார்வைக்கே பஞ்சம் என்கையில், அவளை சாதாரணமாக கூட தீண்டுவது எங்கே?
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
உணவு நேரம் முடிய, தேன்மொழிக்கு அலங்காரம் செய்யவதா? இல்லையா? என பிரபா யோசிக்க, “அம்மா, ஒரு சுடிதாரை போட்டு விடுங்க...” தாயிடம் ரகசியமாக சொன்னவன், தனக்கு கொடுத்திருந்த அறைக்குச் சென்றான்.

பிரபா அதைச் சொல்ல, தன் மகளின் அறைக்கு வர, “மேடம்...” தேன்மொழியின் அழைப்பில், அவளை நிமிர்ந்து பார்க்க, அடுத்த நிமிடம் அவர் காலில் விழுந்திருந்தாள்.

“தேன்மொழி... என்ன இது? முதல்ல எந்திரி...” அவளது தோளைப் பற்றி அவர் எழுப்ப, அவளோ அத்தனையாக அழுதுகொண்டிருந்தாள்.

“இப்போ எதுக்கு இப்படி அழற?” அவர் புரியாமல் கேட்டவர், அழுத்தமாக அவளைப் பற்றி எழுப்பினார்.

“நீங்க பயந்த மாதிரியே நான் பண்ணிட்டேன் தானே...” அவள் அழுகைக்கு நடுவில் கேட்க, அவள் கேட்க வருவது புரியாமல் குழம்பி, தன் மகளின் முகம் பார்த்தார்.

அவளோ தன் தோளைக் குலுக்கி, உதட்டப் பிதுக்க, “என்ன பயந்தேன்?” தேன்மொழியிடமே கேட்டார்.

“வயசுப்பசங்க இருக்கற வீட்டில், என்னை வச்சுக்க பயந்தீங்க தானே? அதையே... நான்...” அவள் ஒருமாதிரி சுற்றி வளைத்து சொல்ல, அவள் சொல்ல வருவது அவருக்குப் புரிந்தது.

“ஏற்கனவே என்ன பாவம் பண்ணோமோ...” துவங்கியவர் மகளது முகத்தைப் பார்த்துவிட்டு அதை நிறுத்தியவர், “உனக்கு நல்லது பண்ணோமா? கெட்டது பண்ணோமான்னே தெரியாமல் குழம்பி போயிருக்கேன்.

“இந்த நேரத்தில், உன் மனசையும் கொன்னு, உன்னை வெளியே அனுப்ப என் மனசாட்சி ஒத்துக்காது. எங்கே உன்னை அனுப்பிடுவோமோன்னு உன் ஃப்ரண்டு வேற கவலைப்படுவாளே, இது அதுக்காகவும் தான்.

“இனிமேல் இப்படி கண்டதையும் யோசிச்சு குழம்பாமல், ஒழுங்கா படிச்சு, நம்ம கம்பெனியில் போய் வேலை பாரு... விஜயவாடா கம்பெனியை நீங்க பார்த்துக்கற மாதிரிதான் இருக்கும். நான் சொல்றது புரியுதா?” அவர் கேட்க, அதை அவர் சொல்வதற்கான காரணம் அவளுக்கு முழுதாகப் புரிந்தது.

பூமிகாவை நினைவூட்டும் அனைத்து விஷயங்களில் இருந்தும் அவளைத் தள்ளி வைக்கவே அவர் அவ்வாறு சொல்கிறார் என்பதை உணர்ந்து, அவர்மேல் மரியாதை கூடியது.

அவரை அவள் நன்றியோடு பார்க்க, “அதே மாதிரி இனிமேல் என்னை அத்தைன்னு அழகா கூப்பிடு, இன்னுமே என்ன மேடம்?” அவர் கண்டிப்பாக சொல்ல,

“சரி அத்த...” அவள் சொன்ன வேகத்தில், அவள் பயந்துவிட்டாள் என அவருக்குப் புரிந்தது.

“சரி, ஒரு சுடிதாரை போட்டுக்கோ, அது போதும்... இல்ல, புடவைதான் கட்டிக்கணும்ன்னா உன் விருப்பம்...” அவர் சொல்ல, அவரது வார்த்தையை மீறுவாளா என்ன?

“நான் இன்னைக்கு உன்னோட இருக்கறேன்...” அவர் பூமிகாவிடம் சொல்ல, அவளோ மறுப்பாக தலை அசைத்தாள்.

“நான் அவர் கூட இருக்கறேன்...” அவள் சொல்லிவிட, அதற்கு மேலே அவர் அங்கே இருக்கவில்லை.

தாய் செல்லவே, “எங்க அம்மாவை புரிஞ்சுக்கவே முடியலை” அவள் புலம்ப,

“உங்க அம்மா ரொம்ப நல்லவங்க பூமி, கூடவே ரொம்ப பாவமும் கூட” இப்படிச் சொன்ன தோழியை அதிசயமாகப் பார்த்தாள்.

“என்ன தேனு சொல்ற?”.

“நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ, உங்க அம்மாவால எப்படி இப்படி இருக்க முடியுதுன்னு யோசிச்சு இருக்கேன். என் அம்மா, எனக்கு அவ்வளவு குளோஸ்... நான் வயசுக்கு வர முன்னாடியே, அதைப்பத்தி சொல்லி, எனக்கு புரிய வைக்கற அளவுக்கு குளோஸ்.

“ஆனா உங்க அம்மா, உன்னைப் பார்த்துக்கவோ, பேசவோ, கூடவே இருக்கவோ கூட செய்யாமல், இப்படி கல்லு மனுஷியா இருக்காங்களேன்னு நினைப்பேன்.

“ஆனா, போகப் போகத்தான் எனக்கு ஒரு உண்மை புரிஞ்சது... உங்க அம்மாவுக்கு உன்மேல கோபம் இல்லை, உன் அப்பா, அவங்க மாமியார் மேலதான் கோபம்ன்னு.

“அதுவும்... அவங்க கட்டாயத்தால் வந்து பொறந்த மகளுக்கு, அவங்களால் கஷ்டம் மட்டும்தான்னு நினைச்சு ரொம்ப கவலை. உன்மேலே ரொம்ப பாசம் வச்சுட்டா, நீ விட்டுப் போகும்போது, அவங்க தனி ஆயிடுவாங்களேன்னு பயம்.

“நீ படற கஷ்டத்தை, கையைக்கட்டி வேடிக்கை பார்க்கணுமேன்னு வேதனை. எல்லாம் இருந்தும், எந்த சந்தோஷமுமே இல்லாமல், சாகறதுக்கா நீ பொறந்தன்னு வருத்தம்.

“உன் முகத்துல இங்கே வந்து, இப்போ கொஞ்சம் சந்தோஷத்தை பார்க்கவே, என் பொண்ணுக்கு சந்தோஷமா வாழற வாழ்க்கைதான் கொடுத்து வைக்கலை, சந்தோஷமா சாகற வாய்ப்பாவது கிடைச்சிருக்கேன்னு நிம்மதியா இருக்காங்க.

“என்கிட்டே அவங்க பேசறது இல்லையே தவிர, என்னை வெறுத்தோ, வலிக்கவோ இன்னைக்கு, இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு வார்த்தை பேசினது இல்லையே” அவள் சொல்ல, தன் தாயின் மனநிலையை புரிந்துகொள்ள முயன்றாள்.

முன்னர் எல்லாம், ‘ஏன் நம்ம அம்மாவுக்கு என்னைப் பிடிக்கலை?’ என வருந்தி இருக்கிறாள், நாளடைவில் அது தேய்ந்து மறைந்து போயிருந்தது. இப்பொழுதோ, ஆகாஷைத் தவிர வேறு எந்த சிந்தையும் இருக்கவே இல்லை.

அவனது நினைப்பு வந்த உடனேயே, ‘அவரை எங்கே?’ என மனம் தேட, அவளது தேடலின் நாயகனே அங்கே வந்தான்.

“போலாமா?” ஹஸ்கி வாய்சில் அவன் கேட்க, அவளோ ‘என்ன இது?’ என்பதுபோல் தோழியை சுட்டிக் காட்ட,

“நாம அவங்களை டிஸ்டப் பண்ண வேண்டாம்... போய்டலாம்...” சொன்னவன், அவளைக் கைகளில் அள்ளிக் கொள்ள, அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள், “ஆல் தி பெஸ்ட் தேனு...” தோழியிடம் சொல்லிச் செல்ல, அவளோ ‘பத்திரம்...’ என காட்டினாள்.

அவர்கள் சென்ற மறு நிமிடமே, பிரபா தேன்மொழியின் கரத்தில் பாலைக் கொடுத்து, ப்ரதிக்கின் அறைக்கு போகச் சொல்ல, சற்று தயங்கி அவன் அறைக்குள் நுழைந்தாள்.

‘அவனை எங்கே?’ என பார்வையால் துழாவ, தன் முதுகின் பின்னால், கதவை அடைக்கும் ஓசையில், அப்படியே அசையாமல் நின்றுவிட்டாள்.

“ஹோய்... இதென்ன... புடவையில் வருவன்னு பாத்தா, சுடிதார்ல வந்து இம்சை பண்ற?” அவள் முதுகோடு வந்து ஒட்டிக் கொண்டவன், அவள் காதுக்குள் தன் இதழை வைத்து அழுத்தி கேட்க, அவள் இதயம் படபடத்தது.

“அது... அத்தை தான்...” காற்றாகிப் போன குரலில் அவள் சொல்ல,

“என்ன...? சரியா கேட்கலை...” சொன்னவன், தன் காதை, அவள் இதழுக்கு அருகில் கொண்டு சென்று கேட்க, அவளுக்கு மூச்சு விடவும் சிரமமாக இருந்தது.

“ரொம்ப டென்ஷனா இருக்க போல...? சரி வா... வந்து உக்காரு...” அவளை அழைத்துச் சென்றவன், படுக்கையில் அமர வைக்க, அவளோ அவனை ஏறிட்டும் பாராமல், விழிகளை அந்த அறைக்குள் சுழற்றினாள்.

அவள் கரத்தில் இருந்து பாலை வாங்கியவன், அதை அங்கே இருந்த மேஜைமேல் வைத்துவிட்டு வர, “அத்தை பாலை குடிக்கச் சொன்னாங்க” அவள் படபடக்க, “குடிக்கத்தான் போறேன்...” அவன் சொன்ன பாவனையில் கலவரமானாள்.

அதைப் பார்த்தவன், வாய்விட்டே சிரிக்க, “ஹையோ... சும்மா இருங்க” வெட்க மிகுதியில் குழறினாள்.

“சும்மாத்தானே இருக்கேன்... நான் உன்னை ஏதாச்சும் செஞ்சேனா?” அவன் அவளை நெருங்கி அமர,

“இவர் இப்படி பண்றதுக்கு, ஏதாவது செஞ்சா கூட பரவாயில்லை” அவள் முனகியது அவன் காதிலும் விழ, அவனது சிரிப்பு இன்னும் அதிகரித்தது.

அவள் தடுமாறி அமர்ந்திருக்க, தன் சிரிப்பை நிறுத்தியவன், “நீ சந்தோஷமா இருக்கியா மொழி? இப்போ கேட்கல, நார்மலாவே...” அவன் திடுமென கேட்கவே, அவன் முகம் பார்த்தாள்.

“இல்ல சொல்லேன்... எனக்கு தெரிஞ்சுக்கணும் போல இருக்கு. நான் இதுவரைக்கும் உன்கிட்டே அதைக் கேட்டதே இல்லை...” கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன், அவளையும் கரம் பிடித்து இழுத்து, தன் அருகே அமர்த்திக் கொண்டான்.

“எங்க அம்மா, அப்பா போனதோட, என் சந்தோஷம் எல்லாம் போய்டுச்சு. அதுக்குப் பிறகு நான் அனுபவிச்சது எல்லாம் ஒரு பயமும், பாதுகாப்பில்லாத நிலையும் தான்...” சொன்னவளின் கைகள் மெதுவாக நடுங்க, அதை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.

“பிறகு...” அவள் அமைதியாக, அதைக் கலைத்தான்.

“அப்போதான்... பூமி வந்து நின்னா... அவ என்னை வீட்டுக்கு கூப்ட்டப்போ, என்னோட நிம்மதியை வடிக்க வார்த்தையே கிடையாது. எதைப்பத்தியும் யோசிக்காம அவளோட வந்துட்டேன்.

“அதுக்குப் பிறகு, என்னைப்பத்தி யோசிச்சு கவலைப்பட எனக்கு பிடிக்கலை. நீங்க என்கிட்டே காதலை சொன்னப்போ, ஒரு மாதிரி பயம் தான் வந்தது. அது உங்க அம்மா பேசின பேச்சால இல்லை... என் மனசாட்சியே அதுக்கு ஒத்துக்கலை” அவள் மீண்டும் அமைதியாக, அவள் சற்று தெளிய காத்திருந்தான்.

“ஆனா பிறகு நடந்தது எல்லாம்... வாழ்க்கை என்னை இழுத்துட்டு போன கதை தான். எனக்கே ஞாபகம் இல்லாத என் பெரியப்பா பையனை அழைச்சுட்டு வந்து எங்க அம்மா அப்பாவுக்கு காரியம் பண்ண வச்சீங்களே, அந்த நிமிஷம்... நான் மொத்தமா விழுந்துட்டேன்.

“அதை உங்ககிட்டே ஒத்துக்க பயம்... ஆனாலும் அந்த போட்டோ கொடுத்தது எல்லாம்... என் உயிரைத் தொட்ட விஷயம். உங்களை மனசுக்குள்ள நான் ரசிக்க ஆரம்பிச்ச பிறகு, இந்த வாழ்க்கை எனக்கு வேற மாதிரி மாறுச்சு” அவள் உணர்ச்சிவசப்பட்டு சொல்ல, அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.

“உனக்கு நம்ம வீட்ல ஏதாவது குறை இருக்கா மொழி?”.

“குறையா? நான் கேக்காமலே எனக்கு எல்லாம் கிடைச்சதுங்க. நான் எதிர்பாக்காதது எல்லாமே கிடைச்சது...

“நீங்க என் வாழ்க்கையில் வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்... இது நடக்கவே செய்யாது, கூடாதுன்னு நான் என்னை கட்டுப்படுத்திகிட்டாலும், என்னால் என்னை மாத்திக்க முடியலை.

“அதுவும் அத்தை ஒத்துகிட்ட அந்த நிமிஷம்...” பேசிக் கொண்டே வந்தவள், அவனது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தவள், அவன் இதழ்களை வேகமாக கவ்விக் கொள்ள, தடுமாறி அவள்மேல் சரிந்தான்.

அவள் முத்தமிட ஏதுவாக தன் இதழ்களை அவளுக்கு கொடுத்தவன், அவள் இடையை வளைத்து, அவள் முதுகை அழுத்தி, அவள் சிகையில் குத்தியிருந்த கிளிப்பை அகற்றியவன், அவளது கூந்தலுக்குள் கரத்தை நுழைத்து, அவளோடு இன்னும் இறுக்கமாக தன் இதழ்களை ஒட்டிக் கொண்டான்.

அவள் அவனை முத்தமிட்டு பிரிய முயல, இப்பொழுது அவளது செய்கையை தனதாக்கியவன், அவள் இதழ்களுக்குள் நுழைந்து, அவள் இதழ்த்தேனை சுவைத்து, தன் தாகம் தீர்த்துக் கொள்ள, அவன் முத்தமிடும் விதத்தில் கிறங்கி, மயங்கிப் போனாள்.

அவனோடு தன் தேகம் இழைய, அவளது மென்மையை உணர்ந்து கிளர்ந்தவனோ, தன் முகத்தை இறக்கி, அவள் தேகத்தில் தன் முகத்தைப் புரட்ட, அவன் சிகை கோதி, தன் தேகத்தில் அவன் முகத்தைப் புதைத்தாள்.

அவனது இதழ்கள் அவள் தேகத்தில் அழுத்தி திளைக்க, அவன் அறிமுகப்படுத்தும் உணர்வுக்குள் மூழ்கினாள். பேச்சற்ற மௌனங்கள், ஆடைகள் கலையும், விலகும் சலசலப்புகள்... அவன் பார்வைகள் அவளை வெட்கம் கொள்ளச் செய்ய, அவள் கரம், அங்கிருந்த குழல் விளக்கை நிறுத்தியது.

“ஏய்... என்ன இது...?” அவன் தன்னவளை முழுதாக கண்டு திளைக்க முடியாத ஏமாற்றத்தில், மறுப்பாக குரல் கொடுக்க, அவன் இதழ்களை கொள்ளையிட்டாள்.

“இது ஏமாத்து வேலை...” அவளது முத்தத்தில் மூழ்கியவாறே அவன் முனக,

“ஹையோ... கூச்சமா இருக்குங்க... பிளீஸ்...” அவனது இதழ்களும் கரங்களும், அவளைக் கொள்ளையிட, அவனோ எதைத் தின்று தீர்க்க எனப் போராட, மூச்சு முட்டிப் போனாள்.

ஸ்... ம்மா... மெதுவா...” அவனது இதழ்கள் அவள் தேகத்தில் பல மாயங்கள் புரிய, சிதறிக் கொண்டிருந்தாள்.

ஒரு பெண்ணை முழுதாக காணும், உணரும் வேட்கை அவனுக்கு அதிகமிருக்க, பிடிவாதமாக அவன் அதை நிறைவேற்றிக்கொள்ள, அந்த இரவு விளக்கின் ஒளியில், அவன் கண்களை ஏறிட முடியாமல், வெட்கம் கொண்டு இமைகளை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.

அவன் கரங்கள் அவள் தேகம் முழுக்க பயணிக்க, இத்தனை வருடங்கள் தன் கரங்கள் கூட முழுதாக தொட்டு உணர்ந்திடாத பாகங்களை, அவன் உரிமையாக தொட்டு தீண்ட, தன் இதழ் கடித்து, அவன் கரத்தை விலக்க முயல, அவனது விரலசைவுகள் அவளை சிதறச் செய்தது.

“ம்மா... என்னடா பண்ற?” அவளால் தாள முடியாமல் புலம்பித் தவிக்க, அவளது அந்த புலம்பலை தன் இதழ்களால் விழுங்கினான்.

தனக்குள் சிதறிக் கொண்டிருந்தவளுக்கு, அவனது உணர்வுகள் அவளைத் தீண்ட, “என்னங்க...?” சிறு தடுமாற்றமாக அழைக்க, அவன் அந்தரங்கமாக, தனிப்பட்ட விதத்தில் சொல்லி, தன்னை அவளுக்கு உணர்த்த, மென்மையாக அவனைத் தீண்டினாள்.

“மொழி கொல்றடி...” அவன் புலம்ப, தன் செய்கை அவனுக்குப் பிடிக்கிறது எனப் புரிய, அவனிடமே என்ன செய்ய எனக் கேட்க, அவன் சொல்லிக் கொடுத்ததை செய்தவளுக்கு பெரும் சூறாவளியே தாக்கியது.

ஒரு கட்டத்தில் அவன் வேகமாக, அவள்மேல் தவழ்ந்தவன், அவளுக்கு நெருக்கமாக, தன் வேகம் கூட்டியவன், அவளிடம் கேள்வி ஒன்று கேட்க, எதற்கென கேட்க நினைத்தாலும், அதற்கான பதிலை அவள் சொல்ல, தன் வேகம் கூட்டினான்.

அவன் வேகத்தில் திணறி, அவன் வெற்று முதுகில் கைகோர்த்து வளைத்தவள், அவன் முகத்தில் வந்துபோகும் உணர்வை உள்வாங்கி திளைத்திருந்தாள்.

ஒரு கட்டத்தில் அவளால் முடியாமல் போக, அவனை இழுத்து கட்டிக் கொண்டவள், “போதுமே... முடியலை...” அவனிடம் கெஞ்ச, அவன் அவளை இன்னும் கதற வைத்தவன், அவளுக்குள் சிதறுகையில், அவளும் உச்சம்கண்டு சோர்ந்திருந்தாள்.

முழுதாக களைத்து சோர்ந்தவன், அவள்மீதே சரிய, அவனைத் தாங்கிக் கொண்டாள். “எதுக்கு டேட் கேட்டீங்க?” அவள் அவனிடம் கேட்க,

“உன் படிப்பு முடியற வரைக்கும் நாம பிளானிங்ல இருக்கலாம் மொழி” அவன் சொல்ல, அவனது அந்த அக்கறை பிடித்தது.

அவளை விட்டு விலகியவன், பாலைக் கொண்டுவந்து அவளுக்கும் கொடுத்து தானும் பருகினான். தங்களை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவர்களின் தேவைகள் இன்னுமே நீள, அந்த இரவை கொண்டாடிக் கழித்தார்கள்.

அதே நேரம்... பூமிகாவுக்கு அதிக மூச்சுத்திணறலாக... மற்றவர்கள் யாரையும் தொல்லை செய்யாமல், ஆம்புலன்சில் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தான் ஆகாஷ்.

தொடரும்......
 

Kothai Suresh

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
144
33
28
INDRANAGAR ADYAR
அச்சோ பூமி🥲🥲🥲🥲
ஒரு பக்கம் இவர்கள் வாழ்க்கை
ஆரம்பிக்க, மறுபுறம் அவர்களின் வாழ்க்கை அஸ்தமிக்கப் போகிறதோ? 🥲🥲🥲🥲🥲
 
  • Like
Reactions: Infaa

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
அவனின் நாட்களும் எண்ணப்படுகிறதோ..?அவ்ளோ கிட்டவா வந்துகிட்டு இருக்கு ..?
பூமிக்கும் முடியல, அவனுக்கும் முடியல ஆனாலும் அவன் தன்னை கவனத்தில் கொள்ளவே இல்லையே .
கன்னி நடக்க போகுதோ ..?
 
  • Like
Reactions: Infaa

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,726
617
113
45
Ariyalur
அச்சோ 🥺🥺🥺🥺🥺கடவுள் ரெண்டு விதமான சூழ்நிலைகளையும் ஒரே நேரத்துல ஏற்படுத்துறது கொஞ்சம் கஷ்டம் தான்
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
அச்சோ பூமி🥲🥲🥲🥲
ஒரு பக்கம் இவர்கள் வாழ்க்கை
ஆரம்பிக்க, மறுபுறம் அவர்களின் வாழ்க்கை அஸ்தமிக்கப் போகிறதோ? 🥲🥲🥲🥲🥲

எல்லாம் கடவுள் விட்ட வழி.... வேற என்ன சொல்ல?
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
அவனின் நாட்களும் எண்ணப்படுகிறதோ..?அவ்ளோ கிட்டவா வந்துகிட்டு இருக்கு ..?
பூமிக்கும் முடியல, அவனுக்கும் முடியல ஆனாலும் அவன் தன்னை கவனத்தில் கொள்ளவே இல்லையே .
கன்னி நடக்க போகுதோ ..?

ஒரு கட்டத்தில் நமக்கு நம்மை விட, நமக்கு பிடிச்சவங்க மேலே தானே நாட்டம் போகும். அதான் இப்படி....

நன்றி!
 
  • Love
Reactions: Thani

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
அச்சோ 🥺🥺🥺🥺🥺கடவுள் ரெண்டு விதமான சூழ்நிலைகளையும் ஒரே நேரத்துல ஏற்படுத்துறது கொஞ்சம் கஷ்டம் தான்

உண்மை தான்....

நன்றி!
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
318
26
28
Hosur
Todakdm onnu
Mudivu onna