• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 27.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
பகுதி – 27.

ஆகாஷ், பூமிகாவிடம் என்ன சொன்னானோ? அடுத்த நாள் முதல், அவள் முகத்தில், கண்களில், மனதில் இருந்த கலக்கங்கள் விலகி ஓட, அவளால் முடியவில்லை என்ற பொழுதும் தன் வருத்தத்தையோ, பயத்தையோ அவள் வெளியே காட்டவே இல்லை.

அவளுக்குள் அந்த பயமோ, கலக்கமோ இருந்ததாகவும் தெரியவில்லை. அவளிடம் எப்பொழுதும் ஒரு ஆழ்ந்த அமைதியும், இளம் புன்னகையும் இதழில் பூத்திருக்க, அவனுடனே இருந்தாள்.

அன்று அவள் தோப்புக்குச் செல்ல வேண்டும் எனச் சொல்ல, அவளை தூக்கிக்கொண்டு அவன் நடந்தான்.

பூமிகாவால் சுத்தமாக, தனியாக நடக்க முடியவில்லை. அவளுக்கு அதிகபட்சம் ஒரு வாரம் எனச் சொல்லி இருக்க, அவளது வீட்டினர் அனைவரும் அங்கே இருந்தார்கள்.

அவர்கள் அனைவரின் முகங்களிலும் கவலை தெரிந்து கொண்டே இருக்க, “நீங்க எல்லாம் இப்படி வருத்தப்படறதா இருந்தா இங்கே இருக்காதீங்க. உங்களை எல்லாம் எனக்கு இப்படி பார்த்துட்டே சாக வேண்டாம்... நான் சந்தோஷமா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா?” அவள் இப்படி கேட்டிருக்க, முயன்று சாதாரணமாக நடமாடினார்கள்.

அவளைத் தூக்கிக்கொண்டு, அவன் வெளியே செல்வதைப் பார்த்த நித்யானந்தம், மறுத்து எதையோ சொல்லப் போனார். “அப்பா, அவங்களை விடுங்க...” அவர் சொல்ல, அமைதியாகி விட்டார்.

“என்னங்க... எங்கேயாவது ஒரு ஓரமா உக்காரலாம்...” அவள் சொல்ல, அவன் தன் பார்வையைச் சுழற்றினான்.

“அந்த தென்னை மரம்...” அவள் கை காட்ட, அதுவோ கிடைமட்டமாக போய், நேராக வளர்ந்திருந்தது.

“ஓ... உட்காரலாமே...” சொன்னவன், அங்கே அவளை அமரவைத்து, தானும் அவளோடு அமர்ந்தான்.

பூமிகா பேசினாலும், அவளால் சுத்தமாக பேச்சு வரவில்லை. அவளை பேசவே கூடாது என டாக்டர் சொல்லி இருக்க, “பேசாம இருந்தா சாக மாட்டேனா?” எனக் கேட்டு அவரது வாயை அடைத்திருந்தாள்.

இப்பொழுது இருபத்திநான்கு மணி நேரமும் அவள் அந்த ஆக்ஸிஜன் மாஸ்குடனே இருக்க, அவன் அருகே அமரவே, அதைக் கழட்டச் சொன்னாள்.

“கஷ்டமா இருந்தா சொல்லிடணும்...” என்ற கோரிக்கையோடு அவன் அதைச் செய்ய, அவனது டிஷர்ட்டைப் பற்றி அருகே இழுத்து, அவன் முகம் முழுக்க முத்தமிட்டாள். அவளை மென்மையாக வளைத்துக் கொண்டவன், அவள் செய்கைக்கு உடன்பட்டு அமர்ந்திருக்க, சில பல நிமிடங்கள் கடக்கவே அவள் விலகி அமர்ந்தாள்.

“அவ்வளவுதானா? நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேனே...” அவன் கண்களில் குறும்போடு சொல்ல, அவனைப் போலியாக முறைத்தாள்.

“விஸ்வாமித்திரர் எல்லாம் கட்டுக்கதைன்னு நான் நினைச்சேன்...” அவள் சொல்ல, பக்கென சிரித்து வைத்தான்.

“நான் அப்படி இல்லைன்னு இந்த நிமிஷம் கூட என்னால் ப்ரூவ் பண்ண முடியும்... ம்ச் ஆனா...” சொன்னவன், அவள் நெற்றியில் முட்டினான்.

“அதெல்லாம் சும்மா... நல்ல கல்லாட்டம் உட்காந்து இருக்கீங்க. கிஸ் பண்ணது ஒரு பொண்ணு, பொண்டாட்டின்னு எங்கேயுமே உருகக் காணோமே?” அதென்னவோ அவனது கட்டுப்பாடு அவளுக்கு ஒருவித சோர்வை அளித்தது.

“உள்ளுக்குள்ள உருவமாகி திணறிகிட்டு இருக்குன்னு சொன்னா உனக்குப் புரியுமா?” காற்றில் பறந்துவந்த ஒரு இலை, அவள் மடியில் வந்து விழ, அதை தன் கரத்தால் எடுத்தவாறே அவன் கேட்க, அவன் கன்னம் பற்றி, தன் முகம் காண வைத்தாள்.

“அப்படின்னா...?” அவளுக்கோ புரிந்தும் புரியாத ஒரு தடுமாற்றம்.

“அது எப்படின்னு எல்லாம் சொல்ல மாட்டேன்... முடிஞ்சா தெரிஞ்சுக்கோ..” சொன்னவன், அவளது கண்களை சந்திப்பதை தவிர்த்தான்.

தான் உணர்ச்சிவசப்படக் கூடாது என்பதில் அவள் கொள்ளை பிடிவாதமாக இருக்க, “உருவமாகறதுன்னா...?” அவளுக்கு அதைத் தெரிந்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதம் எழுந்தது.

“அதை விடு... இந்த ட்ரெஸ் என்ன புதுசா? கலர் நல்லா இருக்கே...” அவன் பேச்சை மாற்றினான்.

‘இதை என்னன்னு தேனுகிட்டே கேட்கணும்’ மனதுக்குள் குறித்துக் கொண்டவள்,

“முதல்ல இது என்ன கலர்ன்னு சொல்லுங்க பார்ப்போம்...?” அவள் சவால்விட, அவனோ விழித்தான்.

“அய்யய்யோ... இந்த டாப்பிக்கை நான் எடுத்தே இருக்க கூடாது” அவன் அலற, அவளோ விடுவதாக இல்லை.

“பச்சை கலர்ல இருக்கற என் சூப்பை பார்த்துட்டு, இதென்ன சிவப்பு கலர்ல இருக்குன்னு கேட்டீங்க? அன்னைக்கு லைட் எல்லோ கலர்ல கேசரி பண்ணா, இதென்ன கலர்பொடி போடாமல் பண்ணி வச்சிருக்கீங்கன்னு கேட்கறீங்க? என்ன இதெல்லாம்?” சற்று சிணுங்கலாக கேட்டாள்.

“எனக்கு கலர் கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆகும்னு சொன்னேனா இல்லையா? பிறகு இப்படி கேட்டா?” அவன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொள்ள, அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

“சரி கேட்கலை... நான் இப்போ போட்டிருக்கறது என்ன கலர்ட்ரஸ்ன்னு மட்டும் சொல்லுங்க...” அவள் இதழ்களில் இளம் நகை பூத்தது.

“எல்லோ” “லைட் ப்ளூ” “ஆரஞ்சு” அவன் ஒவ்வொரு லைட் கலர்களையும் சொல்ல,

“ஹையோ போதும்... இது ஒயிட்... அதில் சின்ன ஊதா பூ இருக்கு... போங்க நீங்க, சும்மா விளையாடறீங்க தானே...” அவன் காலரை இறுக பற்றி அருகே இழுக்க, அவள் மூக்கோடு தன் மூக்கை உரசியவன், அவள் இதழில் குட்டி முத்தம் வைத்து விலகினான்.

“ம்கும்... நான் அத்தனை முத்தம் குடுத்ததுக்கே இவ்வளவுதானா? நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்னு சொன்னீங்க... நீங்க என்னன்னா, கஞ்சூஸ் மாதிரி ஒண்ணே ஒண்ணு குடுக்கறீங்க?” அவள் குறைபட, அவளது சிகை கோதி, அவளது முகத்தை தன் நெஞ்சில் புதைத்தான்.

அவளும் வாகாக அவனோடு ஒட்டிக் கொள்ள, “விஸ்வாமித்திரர் இருக்கற மாதிரி, விஸ்வாமித்திரி மாதிரி நீ இருப்பியான்னு தெரியலையே. இல்லன்னா ஒன்னு என்ன... நூறு முத்தம் கொடுப்பேன்” அவன் அவள் காதுக்குள் சொல்ல, அவன் நெஞ்சில் குத்தினாள்.

“நான் அப்படி என்ன உருகிடுவேன்னு இவ்வளவு பயப்படறீங்க?” அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்தவள், அவன் கண்களையே பார்த்திருந்தாள்.

“நீ என்னை ‘ஹேட்’ பண்ணா பரவாயில்லை, லவ் பண்றியே... அப்படின்னா, நான் கொஞ்சம் ‘லவ் மேக்கிங்’ ப்ராசஸ் பண்ண ட்ரை பண்ணாலும், நீ உடனே பல மடங்கு அதுக்கு எக்சைட் ஆவ. அது அவ்வளவு நல்லதில்லை.

“எனக்கும் உன் ஹார்ட்ல கிஸ் பண்ணணும்னு ரொம்ப ஆசை... ஆனா நீ தூங்கற நேரம் தவிர்த்து, என்னால் அதைச் செய்ய முடிஞ்சதே இல்லை. ரொம்ப பயமாத்தான் இருக்கு... இப்போ அதைச் செய்யவா?” அவன் கேட்க, என்ன தடுத்தாலும், அவள் இதயம் படபடத்துப் போனது.

‘இது எப்போ...? எப்போதுமேயா?’ அந்த கற்பனைகள் கொடுக்கும் வேகம் அதிகம் இருந்தது.

அதை உணர்ந்தவன், “பூமி... ரிலாக்ஸ்...” அந்த ஆக்ஸிஜன் மாஸ்கை வேகமாக அணிவித்து அவளிடம் படபடத்தான்.

“இல்ல, இல்ல... இல்ல...” அவனைத் தடுத்தவாறே சொன்னவள், இமைகளை அழுத்தமாக மூடி, தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்தாள்.

“ஓகே... ஓகே... இது வேண்டாம் விடு... டென்ஷன் ஆகாதே. நாம வந்து ரொம்ப நேரமாச்சு, அவங்க எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க... வா...” அவன் மரத்தின் கிளையில் இருந்து இறங்கி நின்றான்.

அவளை அவன் தூக்கிக் கொள்ள முயல, “கிஸ் மீ ஆகாஷ்...” அவள் சொல்ல, மறுத்து எதையும் சொல்லத் தோன்றாமல் அவள் முகம் பார்த்து நின்றான்.

அவன் அசையாமல் போக, “சரி போலாம்...” அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

“ஓய்... என்ன இது? சரி... நான் கிஸ் பண்றேன்... பட் நீ ப்ராமிஸ் பண்ணு, உனக்கு எதுவும் ஆக விட மாட்டன்னு எனக்கு வாக்கு கொடு...” அவன் சொல்ல, அவளுக்கு அது எந்த அளவுக்கு முடியும் என்று தெரியாமல் தடுமாறினாள்.

“என்னை ‘அப்படி... அங்கே’ எத்தனை முறை கிஸ் பண்ணி இருக்கீங்க?” அவள் சின்னக் குரலில் கேட்க, அவனது இதழ் ஓரம் சிரிப்பில் துடிக்க, கண்களில் அத்தனை குறும்பு கூத்தாடியது.

அதைப் பார்த்தவள்... “ஆகாஷ்...” அவள் சிணுங்க...

“நான் கவுண்ட் பண்ணது இல்லையே... நீ என்னோட இருக்கும் போதெல்லாம் ஐ டூ...” அவன் தோளைக் குலுக்க, அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை.

“பிளீஸ்...” அவள் கெஞ்ச, அவளை நெருங்கியவன், அந்த மரம் சற்று உயரத்தில்தான் இருந்தது என்பதால், அவளை நெருங்கி, அவள் இடையில் கரம் கொடுத்து, பட்டும் படாமல் அவள் நெஞ்சிருக்கும் பகுதியில் முத்தமிட, அவளோ அவன் தலையை தன் தேகத்தில் அழுத்தினாள்.

பட்டென அவளை விலக்கவோ, விலகவோ, அவள் கரத்தை விலக்கிவிடவோ என எதுவும் செய்யாமல், அசைவின்றி அவள் தேகத்தோடு தன் இதழை ஒட்டிக் கொண்டான்.

தன் இமை மூடி, அவன் தோளில் தலை சாய்த்தவள், “போலாம்...” எனச் சொல்லும் வரைக்கும் அவன் அசையவே இல்லை.

அவள் சொல்லவே, அவளைக் கரத்தில் ஏந்திக் கொண்டவன், “இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு பிறந்தநாள் வருது... உனக்கு என்ன கிப்ட் வேணும்?” அவன் கேட்க, அந்த நிமிடங்களில் தாக்கத்தை அவன் குறைக்க முயல்வது அவளுக்கு நன்கு புரிந்தது.

“நீங்க...” அவள் சொல்ல, அவள் முகம் பார்த்தான்.

“நீங்கதான் வேணும்...” அவள் அழுத்திச் சொல்ல,

“நான் உனக்குத்தான்... உனக்கு மட்டும்தான்... வேற சொல்லு” அவள் கேட்பது புரிந்தும், புரியாதவன்போல் நடித்தான்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
“நீங்க நடிச்சாலும் பரவாயில்லை... உங்களுக்கு புரிஞ்சிடுச்சுன்னு எனக்குத் தெரியும். சாகப்போறவ... உங்களை முழுசா தெரிஞ்சுட்டே போறேன்...” அவன் சிகைக்குள் கை கோர்த்து நெரித்தவள், அவனைக் கவரும் புன்னகை பூக்க, அவளோடு அப்படியே எங்காவது சென்றுவிடத்தான் அவன் தேகமும், மனமும் ஏங்கியது.

“வாழ்க்கைல சாக மட்டுமே போறோம்னு வாழ்ந்துட்டு இருந்தேன். இப்போ... எல்லாத்தையும் உங்களோட சேர்ந்து அனுபவிக்க ஆசை வருது” அவள் சொல்ல, அவள் கண்களுக்குள் துழாவினான்.

“வருத்தமா எல்லாம் இல்லை... ஆசையா தான் சொல்றேன். சாகப் போறோம்னு வருத்தம் இல்லை... ஆனா சாக வேண்டாம்னு ஆசையா இருக்கு. அதே நேரம், இந்த கஷ்டத்தில் இருந்தெல்லாம் ஒரேடியா விடுதலைன்னு யோசிக்கும்போது...” சொன்னவளின் முகம் அத்தனையாக கனிந்து கிடக்க, அவளது கழுத்தில் துருத்திக்கொண்டு தெரிந்த எலும்பில் இதழ் பதித்தான்.

“விடுதலைதான் பூமி... இந்த வலி, வேதனை, துக்கம்... எல்லாத்தில் இருந்தும் விடுதலை. அதை மட்டும் நினைச்சுக்கோ... உன்னோட நானும் இருப்பேன்” அவன் நெகிழ்ந்து உரைக்க, அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

அவளது அறைக்கு அவளைத் தூக்கி வந்தவன், அவளைப் படுக்கையில் விட, ‘என்னோட இருங்களேன்...’ என்னும் பார்வை பார்த்தாள்.

“ஃபேமிலி டைம்... என் எனிமியை பாரு... உன் கிட்டேயே அவளை விட மாட்டேங்கேன்னு ரொம்ப கம்ப்ளெயின்ட்... அவளோட பேசிட்டு இரு” அவன் சொல்ல, அப்பொழுதுதான் தான் அவளிடம் கேட்க நினைத்தது நினைவுக்கு வந்தது.

‘சரி...’ என்பதுபோல் தலை அசைத்தவள், செல்லப் போனவனை தடுத்து, “என்னை தனியா விட்டுட்டு எங்கேயும் போகக் கூடாது” கட்டளை போலவே சொல்ல, “போகவே மாட்டேன்” உறுதி அளித்தவன் எழுந்து சென்றான்.

வெளியே வந்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, ப்ரதிக் ஓடிவந்து அவன் தோளை அழுத்தினான்.

“மூச்சு விடறதுக்கு கூட ரொம்ப சிரமப்படறா... எனக்கு என்னவோ பயமா இருக்கு. அவளை ஹாஸ்பிடல் கூட்டி போயிடலாமே...” தன் வேதனையை விழுங்கியவாறு அவன் கேட்க, அவனோ மறுத்தான்.

“அவ இங்கேதான் இருக்கணும்னு ஆசைப்படறா... அது உங்களுக்கே தெரியுமே, பிறகு இப்படி பேசினா எப்படி? உண்மை என்னன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்...” ப்ரதிக் சொல்ல, ஆழ மூச்செடுத்து தன்னை நிதானித்தான்.

“சாகலாம் ப்ரதிக்... ஆனா இவ்வளவு கஷ்டப்பட்டு வேண்டாம்...” சொன்னவன் அங்கிருந்து செல்லப் போக, அனைவரின் நெஞ்சத்திலும் பாரமேறிப் போனது.

பூமிகாவுக்கென சூடாக தண்ணீர் எடுக்க வந்த தேன்மொழியும் அவன் பேசுவதைக் கேட்டு நிற்க, அவள் கண்ணீர் விட்டு அழுதாள்.

அதைப் பார்த்தவன், “அவ கூடவே இருங்க... பார்த்துக்கோங்க... அவளைத் தனியா விடாதீங்க” சில நிமிட நேரங்கள் கூட பூமிகா தனியே இருப்பதை தாங்க முடியாமல் அவளிடம் சொன்னான்.

“அவளுக்கு குடிக்கறதுக்கு ஏதாவது கொண்டு போகத்தான் வந்தேன்... இப்போ போய்டுவேன்” அவன் சொன்னதற்காக கோபம் எல்லாம் கொள்ளாமல், அவனது பேச்சுக்கான காரணம் புரிய நெகிழ்வாகவே பதில் கொடுத்தாள்.

எத்தனையோ நாள்... ‘அவருக்கு என்னை நிஜமாவே புடிக்குமா? இல்லன்னா என்மேல இரக்கப்பட்டு பாசமா நடந்துக்கறாங்களா?’ என தோழி கேட்ட நினைவு எழ, அவனது உண்மையான பாசம் கண்டு உருகினாள்.

“அவ ரொம்ப கொடுத்து வச்சவ...” கண்ணில் நீரோடு அவனிடம் தேன்மொழி சொல்ல, மறுப்பாக தலை அசைத்தான்.

“இல்ல, நான்தான் கொடுத்து வச்சவன்.... பார்த்துக்கோங்க...” சொன்னவன், சிவாவின் அலைபேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விரைந்தான்.

சிவாவும் அவன் பின்னால் ஓட, “இதை நானே பார்த்துக்கறேன் சிவா... உனக்கு சிரமம் வேண்டாம்” அவன் சொல்ல, சிவாவின் முகத்தில் அப்படி ஒரு கோபம் எழுந்தது.

“நீ இதுவரைக்கும் சொன்ன எதையாவது நான் கேட்காமல் இருந்து இருக்கேனா? இப்போ நான் எதையும் செய்யப் போறதில்லை... வேடிக்கை மட்டும்தான் பார்க்கப் போறேன்...” பெரும் கூச்சலில் சிவா கத்த, அப்படியே அமைதியாகிவிட்டான்.

“தேனு... தேனு...” அறைக்குள் இருந்து பூமிகாவின் குரல் கேட்க, பதறிக்கொண்டு ஓடினாள்.

“பூமி... இங்கேதான் வருவேன்னு தெரியாதா? எதுக்கு இப்போ இவ்வளவு எனர்ஜியை வேஸ்ட் பண்ற? என்ன வேணும்? பாத்ரூம் போகணுமா? குடிக்க ஏதாச்சும் வேணுமா? கஷ்டமா இருக்கா? டேப்லட் தரவா?” அவள் அருகே அமர்ந்தவள், அத்தனை பதட்டப்பட, அவள் கரத்தை பற்றிக் கொண்டாள்.

அவள் தோழியின் முகம் பார்க்க, அங்கே எப்பொழுதும் உறைந்து போயிருக்கும் வருத்தம் காணாமல் போயிருக்க, உள்ளுக்குள் பெருத்த நிம்மதியாக உணர்ந்தாள்.

“இனிமேல் என்னை மிஸ் பண்ண மாட்டியே...?” அவள் கேட்க, அவள் முன்னால் அழுதுவிடக் கூடாது என பிடிவாதமாக இருந்தவளுக்கே கண்கள் கலங்கிப் போனது.

“நீதான் பூமி எனக்கு முதல்ல...” சொன்னவள் அவளது கன்னத்தில் முத்தமிட, சிறு புன்னகையை சிந்தினாள்.

“அப்போ அண்ணா?” அவள் குறும்பாக கேட்க, சற்று சிணுங்கினாள்.

“அவரு என் உயிர் போதுமா? இப்போ சொல்லு, எதுக்கு கூப்ட்ட?” தோழியின் அருகில் நெருங்கி அமர்ந்தாள்.

“எனக்கென்னவோ நீதான் என் அம்மான்னு தோணுது...” குரலும், வார்த்தைகளும் நிதானமாக, சின்னதாகவே இருக்க, தேன்மொழிக்குள் அத்தனை ஆர்ப்பரிப்பு.

‘இவ போகப்போறா...’ அந்த உண்மையை ஏற்க முயன்றாள்.

“அம்மான்னே வச்சுக்கோ... இப்போ அதால என்னவாம்?” இத்தனை வருடங்களாக இரவு பகல் பாராமல் உடன் இருப்பவளாயிற்றே... இப்பொழுது கூட, ஆகாஷுக்காகத்தான் விலகி நிற்கிறாளே தவிர, ப்ரதிக் கேட்டால் கூட மறுப்பவள் ஆயிற்றே.

“நான் ஒன்னு கேட்கவா?” அவள் சற்று தயங்க,

“இதென்ன பூமி புதுசா? நாம இதுவரை எதைப் பேச தயங்கி இருக்கோம்? நீ கேளு”.

“நீ கல்யாணமானவங்கறதால இதை கேட்கறேன்னு இல்ல... நாமதான் எல்லாம் பேசுவோமே...” பூமி சொல்ல, தேன்மொழி அவளை செல்லமாக முறைத்தாள்.

“என்னன்னு சொல்லு...” முறைப்பாகவே கேட்க, பூமிகா அதற்கு மேலே பெரிதாக தயங்கவில்லை. அவர்கள்தான் பல வருடங்களாக எதையும் தைரியமாக பேசிக் கொள்பவர்கள் ஆயிற்றே.

“நான் அவரை கிஸ் பண்ணேன்... என்னவோ மண்ணாட்டம் உக்காந்து இருந்தார். நான் உங்களை கொஞ்சம் கூட டிஸ்டப் பண்ண மாட்டேங்கறனா?’ ன்னு கேட்டேன்... அதுக்கு....

‘“என்னோட உணர்வு உள்ளுக்குள்ள உருவமாகி திணறிகிட்டு இருக்குன்னு சொன்னா உனக்குப் புரியுமா?’ன்னு கேட்டார்... என்னன்னு சொல்லுங்கன்னு சொன்னதுக்கு அவர் பதில் சொல்லலை... அப்படின்னா என்னன்னு உனக்குப் புரியுதா?” தன்னிடம் இப்படிக் கேட்ட தோழியை குறும்பு புன்னகையில் பார்த்திருந்தாள்.

“ஹோய்... இது உங்க பெர்சனல்டி...” அவளுக்கு பதில் சொல்ல தயக்கம் கொஞ்சம் இருந்தாலும், தோழியை தவறாக எல்லாம் நினைக்க தோன்றவில்லை.

“பரவாயில்லை... நாங்க ‘லவ் மேக்கிங்’ எல்லாம் பண்ணிடலை... நீ சொல்லு” தோழியை தூண்டினாள்.

“நீ சொன்னியே... அதுதான் பதில்... உனக்கு தெளிவா புரியணும்ன்னா...” சொன்னவள், வேகமாக தன் அலைபேசியை எடுத்து, எதையோ டைப் செய்தவள், ஒரு புகைப்படத்தை தெரிவு செய்தாள்.

“பூமி... ரிலாக்ஸ்... அதுக்கான பதில் இதுதான்...” சொன்னவள், அதை அவளிடம் காட்ட, பட்டென அவள் கரத்தில் இருந்து அலைபேசியை வாங்கி, படுக்கையில் குப்புற கவிழ்த்து வைத்தாள்.

“தேனு... இப்படியா? நிஜமாவா?” அவளுக்கு நம்ப முடியாத ஆச்சரியமாக இருந்தது.

“என்னை ‘இந்த’ அளவுக்கு யோசிக்கற அளவுக்கு நான் அவரை டிஸ்டப் பண்றேனா? ஆனா அவர் அதை என்கிட்டே எக்ஸ்ப்ரஸ் பண்ணாதே இல்லையே” குறையாக சொல்ல, அவள் கரத்தை தட்டிக் கொடுத்தாள்.

“அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டன்னு அவருக்கு தெரியும் தானே” அவள் கேலிபோல் சொல்ல, பூமிகாவின் முகம் சோர்ந்து போனது.

“அவருக்கு கஷ்டமா இருக்கும் தானே... இந்த அளவுக்கு யூஸ்லெஸ்ஸா நான் இருக்கறது எனக்கே புடிக்கலை” அவள் சொல்ல, “பூமி...” அவளை அதட்டினாள்.

“இதை நீ அவர்கிட்டே சொன்னா என்ன நினைப்பார்ன்னு சொல்லு பார்ப்போம்...” ஆகாஷைப்பற்றி நன்கு அறிந்தவளாகவே கேட்டாள்.

“இப்படி நீ யோசிக்கறதா இருந்தா கூட, இனிமேல் உன்கிட்டே நான் பேசக் கூட மாட்டேன்னு சொல்வார். அதாவது பெர்சனலா பேச மாட்டேன்னு சொல்வார். என்கிட்டே பேசாமல் எல்லாம் அவரால இருக்க முடியாது” அவள் அத்தனை பெருமையாக சொல்ல, இவளுக்கு கொள்ளை சந்தோஷம்.

“தெரியுது இல்ல... அப்போ விடு...” தேன்மொழி சொன்னாள்.

“ஆனாலும், அவருக்கு எதுவுமே செய்யாமல்... செய்ய முயற்சி பண்ணாலே ஏதாவது ஆயிடுமோன்னு பயந்து... நான் ரொம்ப சுயநலவாதி தேனு” அவள் வருத்தப்பட, தேன்மொழியால் அதைப் பார்க்க முடியவில்லை.

“பூமி... அவர்கிட்டே போய் சொல்லிடுவேன்...” அவள் சொல்ல, அமைதியானாள்.

“அவருக்கு நான் ஏதாச்சும் செய்யணும் தேனு... ஏதாவது ஐடியா சொல்லேன்” அவளிடம் கேட்க,

“உன்னை நீ அமைதியா வச்சுக்க முடிஞ்சா எவ்வளவோ செய்யலாம்... ஆனா அது முடியாது பூமி... உங்க அண்ணாவோட சின்ன பார்வைக்கே நான் படபடத்துப் போறதும், சின்ன தொடுகைக்கே சிலிர்க்கறதும், அதுக்கும் மேல போனா, வெடிச்சு சிதறும் உணர்வும் எனக்கு தெரியும்” சில உணர்வுகள் அவளுக்கும் பொது என்கையில் எச்சரிக்கத் தோன்றியது.

“தேனு...” அவள் குரலில் பரவசத்தையும் மீறி, கொள்ளை வருத்தம் ஒலிக்க, தோழியை இறுக கட்டிக் கொண்டாள்.

தானும் அவளை கட்டிக் கொண்டவள்... “பூமி... வருத்தப்படறியா?” மெதுவாக கேட்டாள்.

“ஆமா... ரொம்ப... கல்யாணத்துக்கு முன்னாடி, அண்ணா உன்னை நெருங்கி, நீ வேணும்னு ஆசைப்படும்போது... அவனோட இருக்க கழுத்து வரைக்கும் ஆசை இருந்திருக்கும், ஆனா செய்ய முடியாமல் நீ கஷ்டப்பட்டிருப்பியே, அப்படி இருக்கு...” அவள் தன் உணர்வுகளைச் சொல்ல, அதை மிகச் சரியாக உள்வாங்கினாள்.

“கடவுள் கொடூரமானவன் பூமி...” தேன்மொழி சபிக்க, அவளை விட்டு விலகி, அவளைப் பார்த்தாள்.

“இப்பவுமா?” ஆச்சரிய முகம் காட்ட, வாய்விட்டே சிரித்த தேன்மொழி, “உன் விஷயத்தில் சொன்னேன்....” அவள் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தாள்.

“ம்ஹும்... இல்லவே இல்லை... சாகறதுக்குன்னு வாழ்ந்துட்டு இருந்த என்னை, ஒவ்வொரு நாளையும் ரசிச்சு வாழ வச்சிருக்கார். நான்தான் கொஞ்சம் ஓவரா ஆசைப்படறேன்... இந்த லவ் எல்லாம் மூணு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் என்னன்னு எனக்குத் தெரியுமா?

“இல்லன்னா எனக்கு வரும்னுதான் நான் நினைச்சேனா? இப்போ எனக்கே எனக்குன்னு அவர்... அவருக்கும் என்னைப் புடிக்கும், என்னோட வாழணும்ங்கற அளவு புடிக்கும்ன்னா... அவர் எப்படி கொடூரமானவர்ன்னு சொல்வ?” அவளிடம் சண்டைக்குப் போனாள்.

“ஹப்பா... அவர் நல்லவர்தான்... நல்லவரே தான்... இப்போ உன்னை குளிக்க வைக்கவா? இல்லன்னா நேரமாகட்டுமா?” இப்பொழுது பூமிகாவால் தனியாக எழுந்து எதையும் தனிச்சையாக செய்ய முடியவில்லை என்பதால் கேட்டாள்.

“இல்ல... கொஞ்ச நேரமாகட்டும்... அவரை எங்கே?”.

“என்ன அவரை குளிக்க வைக்கச் சொல்லப் போறியா?” கேலியாக அவள் கேட்க, பூமிகாவின் முகத்தில் யோசனையின் அறிகுறியாக புருவமத்தியில் பெரிய முடிச்சு.

தொடரும்.....
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
Thenu thevai illatha ideas kodukuralo Bhoomiku

தோழி ஒன்றை கேட்கையில் அவளால் எப்படி மறுக்க முடியும்? தேனு அவ மேலே உயிரையே வைத்து இருப்பவள். சோ....

நன்றி!
 
  • Like
Reactions: gomathy