• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - Intro

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
ஹாய் ப்ரண்ட்ஸ்,

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை எல்லாம் சந்திக்க ஓடி வந்துவிட்டேன். எனது முந்தைய கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை, கருத்துக்களை எல்லாம் நீங்க இந்த கதைக்கும் தரணும்னு கேட்டுக்கறேன்.

கதையின் தலைப்பு : வண்ண நிழல்கள்
நாயகன் : விஷ்வா, ஆகாஷ்
நாயகி : நிர்மலா (எ) நிக்கி, பூமிகா.

பொதுவாக நிழல் என்றாலே கறுப்பு வெள்ளை தானே. இதென்ன வண்ண நிழல்கள்... அதுதானே சுவாரசியமே.

வாழ்க்கையில் சில விஷயங்களை நாம கேள்வி கேட்கவே முடியாது. அதுவும் நம்மை மீறி சில விஷயங்கள் நடக்கும்போது அதற்கு நாம அடி பணிந்துதான் ஆகணும். டீனேஜ் பருவத்திலேயே பெயரும் புகழும் பணமும் ஒரு மனுஷனுக்கு வந்துட்டா அவன் வாழ்க்கை எப்படி மாறிப் போகும் என்பதற்கு உதாரணம் விஷ்வா என்றால், என்ன தப்பு செய்தோம் என்றே தெரியாத வயதில் தீர்க்க முடியாத நோயில் துன்பப்படுவது ஒரு மிகப்பெரிய சாபம்.

அப்படி ஒரு சூழ்நிலையில், நிலையில் வளரும் நம்ம நாயகி பூமிகாவுக்கு வாழ்க்கையில் தானும் ஒரு மிகவும் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டியதுதான் ஆசையே. இயற்கையாக மூச்சு விடுவதும், ஓடுவது, விளையாடுவது... பருவ வயதில் ஒரு அணைப்பு, முத்தம்... தனக்கென ஒருவன் என்ற எதிர்பார்ப்பு இது எல்லாம் இயற்கை தானே. அதையே அடைய முடியாத அவள் நிலை... அப்படி இருக்கும் அவளுக்குள்ளேயும் காதல் வந்தால்? அதையும் அந்த காதலன் ஏத்துகிட்டா? ஆனால் அவன் தன்னை மனதுக்குள் ஏற்று விரும்பக் கூடாது என அவள் நினைத்தால்?

ரொம்ப குழப்பறேன் தானே? இந்த குழப்பம் எல்லாம் தீர கதையை நீங்க படிக்கணும்.

வாங்க சீக்கிரமே உங்களை சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது,

நான்...
உங்கள்,
இன்பா அலோசியஸ்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
எப்போதிலிருந்து ஸஸ்டார்ட் பண்றீங்க? டேக் பண்ணுங்க

வெள்ளிக்கிழமை முதல் துவங்குகிறேன்.