• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 08)

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கார்த்திக்கின் வலக்கரத்தை தன் கைகளுக்குள் சிறை பிடித்தபடி அமர்ந்திருந்த விஜயின் பார்வை, அவனது உடலில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த கட்டுக்களை வெறித்துக் கொண்டிருந்தது. கார்த்திக் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு அவனைப் பார்த்தான்.

அவன் எதையோ தன்னிடம் கூற வருவதைப் புரிந்து கொண்டவன், "என்ன கார்த்திக்?" என்று கேட்டான். வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் அவனின் மனம் தம்பி நின்றிருந்த நிலைக் கண்டு ஊமையாய் அழுது கொண்டு தான் இருந்தது.

காலையில் வர்ஷினியுடன் கதைத்து விட்டு காஃபி ஷாப்பை விட்டு வெளியேறும் போதே, ஆதர்யா அவனுக்கு அழைப்பு விடுத்து, கார்த்திக்கிற்கு ஆக்சிடண்ட்' என்ற விடயத்தைக் கூறி விட்டாள். உடனே யாரிடமும் கூறிக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி வந்தவன் வார்டிற்கு வெளியே நின்றிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் ஐசீயூ வார்டினுள் புகுந்து விட்டான்.

பப்லுவை இங்கே வரவழைக்க வேண்டும் என்ற ஆசையோடு சுற்றிக் கொண்டிருந்த கௌதமிக்கு, அவனைப் பார்த்ததும் இந்த மாதிரி ஒரு கவலைகரமான சூழ்நிலையில் தான் நீ இங்கே வர வேண்டுமா என்ற எண்ணம் தான் தோன்றியது. நண்பனின் நிலையைக் கண்ட பிறகு, மனம் கவர்ந்தவனின் வருகையை நினைத்து முழுதாக சந்தோசப்படக் கூட முடியவில்லை அவளால்..

"நான் என்ன சொன்னாலும் செய்விங்களாண்ணா?" மிகவும் கடினப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தான் கார்த்திக். ஏன் இப்படியொரு கேள்வி! என்ற கேள்வியைக் கண்களில் தேக்கியபடி அவனை முறைத்துப் பார்த்தான் விஜய்.

அவனது பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்ட கார்த்திக் பார்வையை சுழற்றினான். தன்னை சுற்றித் தான் முழுக் குடும்பமும் நின்றிருப்பதைப் பார்த்ததும் கண்கள் கலங்கியது. ஆளோடு ஆளாக நண்பன் குணமாகி விட்டான் என்ற மகிழ்ச்சியில் ஒரு புறமாய் நின்று கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த கௌதமியைத் தன்னருகே வருமாறு கண் காட்டினான்.

"கார்த்தி.." அவன் தன்னை அழைக்கும் வரையே காத்திருந்தவள் போல் வேகமாக அவனருகில் சென்று நின்றவள், "உனக்கு ஒண்ணுமில்லடா.. எதுக்கு கண் கலங்கற.." என்றபடி கார்த்திக்கின் கலங்கிய கண்களை தன் கைகளால் துடைத்து விட்டாள்.

விஜயின் கண்கள் அவளை சுற்றி வட்டம் போட்டது. அழுதழுது சிவந்து போயிருந்த அவளின் நீள்விழிகளும், உப்புக் கரித்திருந்த அவளின் மாநிறக் கன்னங்களும், அவள் கார்த்திக் மேல் வைத்திருந்த அன்பின் அளவை எடுத்துக் கூறியது அவனுக்கு. அடிக்கடி புறங்கைகளால் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டபடி மூக்கை உறிஞ்சுவதைக் காணும் போது சிறு குழந்தையாய் தெரிந்தாள் அவள். உள்ளுக்குள் ஏதோவொரு உணர்வு மின்னலாய் தாக்கி மறைய, தன்னையும் மறந்து சற்று நேரம் அவளையே பார்த்திருந்தான் விஜய்.

"ரொம்ப பயந்துட்டியா.." கார்த்திக்கின் கேள்வியில் இல்லையென்பது போல் தலை அசைத்தவள், "அவ்ளோ ஈஸியா நீ என்னையும் சதுவையும் நிம்மதியா இருக்க விட மாட்டேனு தெரியும் கார்த்தி.." என்றாள் புன்னகையுடன். ஆயிரம் பூ ஒரு சேரப் பூத்தது போல் இருந்தது அவளின் புன்னகை!

கார்த்திக் உடல் குலுங்க சிரித்தான். சிரிக்கும் போதே ஒரு வித அசௌகரிகத்தை உணர்ந்தவனுக்கு உடல் அசையும் போது உயிரே போவது போல் இருந்தது. கண்களை மூடித் திறக்கும் போது, அவனது பார்வையை கண்ணீர் மறைத்திருந்தது. கண்களை சுழற்றி தன் குடும்பத்தை மொத்தமாய் ஒரு முறைக் கண்ணார ரசித்தான்.

மூச்சு விட சிரமமாவது போல் இருந்தது. நெஞ்சுக் கூடு ஏற இறங்க கடினப்பட்டு மூச்சை இழுத்து விட்டவன், விஜய் பற்றி இருந்த தன் கையைப் பார்த்தான். விடாமல் இன்னுமே பற்றிக் கொண்டு தான் இருந்தான் அவன்.

தன் மற்றொரு கையை நீட்டி கௌதமியின் கையைப் பற்றியவன் அதை விஜயின் கையோடு கோர்த்து விட, விஜய் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தான்.

"எனக்காக.. ப்ளீஸ்'ணா இவளை கண் கலங்காம பாத்துக்கோங்க" கண்கள் சுருக்கிக் கூறும் போதே தொண்டை அடைத்தது. கதறி அழ வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

"இவளை எனக்கு ரொம்ப புடிக்கும்ணா.. ப்ளீஸ் எனக்காக இவளைக் கலியாணம் பண்ணிக்க.. ரொம்ப நல்ல பொண்ணு.. ஆனா கொஞ்சம் வாயாடி. குழந்தை அவ.. அப்பறம் ஆது, சது கூட உன் அன்புக்காக ரொம்ப ஏங்குறாங்கணா. இனிமே அவங்க பக்கத்துல நான் இருப்பேனோ இல்லையோ தெரியல. ராகேஷ் மாமா.. ஆதுவை நல்லா பாத்துக்கோங்க.. சது அம்மாப்பாவை.." கூறும் போதே கண்கள் சொருகியது.

ஒரே விக்கலோடு அடங்கிப் போன உயிரை பார்த்து, "கார்த்தி.." எனப் பெருங் குரலெடுத்து முதலில் கதறியது ஆதர்யா தான். அவளுடன் ஒன்றாகவே ஜனித்தவன் ஆயிற்றே!

அவன் கோர்த்து விட்ட கைகளைக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த கௌதமி ஆதர்யாவின் அலறலில் துடித்து விழுந்தாள். உடல் தூக்கி வாரிப் போட, பற்றியிருந்த விஜயின் கையை மேலும் இறுக்கிக் கொண்டவள் மூச்சடங்கிப் போயிருந்த கார்த்திக்கைப் பார்த்து "கார்த்தி.." என அலறினாள்.

அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் கண்கள் சுழன்று மயங்கி விழ, அவளின் உடல் அதிர்வை உணர்ந்து அமைதியாய் கார்த்திக்கை வெறித்து கொண்டிருந்த விஜய் வேகமாக அவளைத் தாங்கிப் பிடித்தான். அதற்குள் அவள் மொத்தமாய் மயங்கி விட்டிருந்தாள்.

கார்த்திக்கை சோதித்த வைத்தியர், "ஹீ ஈஸ் நோ மோர்.." என்று கை விரித்து விட, இருந்த இடத்திலே மடங்கி அமர்ந்து அழத் தொடங்கினாள் ஆதர்யா. அவளருகில் வந்து நின்ற ராகேஷ், அவளைத் தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.

ஒவ்வொருவரும் நின்ற இடத்திலே நின்று கண்ணீர் சிந்த, தன் கைகளில் மயங்கி விழுந்திருந்தவளை வெறித்துப் பார்த்த விஜய், அவளைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தான். அவளை ஒரு சாதாரண வார்டின் கட்டிலில் கிடத்தி விட்டு தாதியிடம் கூறிக் கொண்டு பழைய இடத்துக்கே திரும்பி வந்தான்.

அண்ணா அண்ணா என்று நாய் குட்டி போல் பின்னாலே அலைந்தவன் இப்போது உயிரோடு இல்லை என்பதை, தன் கண்களாலே அவனின் உயிரற்ற உடலைக் கண்ட பிறகும் நம்ப முடியவில்லை அவனால்.. நெஞ்சுறுதி பூண்ட காளைக்கும் கண்கள் கலங்கி ஓரிரு துளிகள் கன்னத்தில் சிந்தியது.

"கண்ணை திறக்க சொல்லுணா அவனுக்கு. ஒண்ணாவே இருந்துட்டு திடீர்னு என்னை தனியா விட்டுட்டுப் போக அவனுக்கு எப்படி மனசு வந்துச்சு?" விம்மலோடு கேட்டபடி அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் ஆதர்யா. வெகு நாட்கள் கழித்து தங்கையின் நெருக்கத்தைப் பெற்றதில் மனம் இளகியவன் அவளின் தலையை வருடி விட்டான்.

சதுவின் நிலை இதை விட மோசமாக இருந்தது. கார்த்திக் இறக்கவில்லை என்று கூறி, "எந்திரிண்ணா.. இங்க எல்லாரும் எதை எதையோல்லாம் சொல்லுறாங்க.. எனக்கு பயமா இருக்கு. உனக்கு எதுவும் ஆகலனு சொல்லுண்ணா.." என்றபடி அவனைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

வைத்தியர் எல்லோரையும் வற்புறுத்தி வெளியே அனுப்பி வைக்க, அங்கிருந்து வெளியேறியவர்கள் ஆளுக்கொரு மனநிலையுடன் சோர்ந்து போய் அமர்ந்து கொண்டனர் இருக்கைகளில்!

கௌதமி மயக்கத்திலிருந்து கண் விழிக்கும் போது அவளருகில் அமர்ந்திருந்தான் பழனிவேல்.

"பாப்பா.."

கண்களை உருட்டி அவரைப் பார்த்தவளுக்கு அழுகை பொங்கி வந்தது. "பப்பு.. கார்த்தி நம்மல விட்டுட்டு போய்ட்டான் பப்பு.." என்று அழுதவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவர் அவளின் தலையை வருடி விட்டார்.

"அழாத பாப்பா.." அவர்களின் நட்பைக் கண் கூடாக கண்டு விட்ட பிறகும் 'அழாதே' என்று கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை என்று உணர்ந்து தான் இருந்தார். ஆனாலும் கௌதமியின் கண்ணீரைப் பார்க்க சகிக்கவில்லை அவrரு்கு! உயிர் உருகும் வலியை உணர்ந்தார் தனக்குள்.

"நேத்து கூட என்கிட்டே ரொம்ப நல்லாதானே பப்பு அவன் பேசிட்டு இருந்தான். திடீர்னு எப்படி எல்லாரையும் விட்டுட்டு அவனால போக முடிஞ்சுது? கார்த்தியைப் பார்க்கணும் பப்பு.. ப்ளீஸ் என்னைக் கூட்டிட்டு போ.. நான் அவனைப் பார்க்கணும்.."

"வீட்டுக்கு எடுத்துட்டு போய்ட்டாங்க பாப்பா.. வா நாம வீட்டுக்கு போகலாம்.." என்று கூறி கௌதமியை கட்டிலை விட்டு எழுந்து அமர உதவி செய்தவர் அவளின் கண்களைத் தன் கைகளால் துடைத்த்து விட்டார். கலைந்திருந்த முடிகளை கைகளால் வாரி விட்டவர் தாதியிடம் கூறிக் கொண்டு, கௌதமியை அழைத்துக் கொண்டு வெளியே நடந்தார்.

நேற்று வரைக்கும் தன்னுடன் சண்டையிட்டு, தனக்காக வருத்தப்பட்டு, தன்னை நினைத்து அக்கறை கொண்டு, தனக்கு விரும்பியதை எல்லாம் பெற்றுத் தந்து, தன்னுடனே இருந்த கார்த்திக் என்ற ஜீவன், இனிமேல் தன்னுடன் இருக்கப் போவதில்லை என நினைக்கும் போதே கண்ணீர் வந்தது. விடாமல் அழுது கொண்டே இருந்தாள்.

வீடு வந்து சேர்ந்த பிறகும் பைக்கை விட்டுக் கீழிறங்காமல் அழுது கொண்டே இருந்தவளைத் தட்டிய பழனி, "கண்ணை துட பாப்பா.. இல்லேன்னா நானே உன்னை அறைஞ்சிருவேன்.." என அதட்டலாகக் கூறினார். எவ்வளவு அழுதாலும் வற்றாத ஜீவநதியாய் ஊற்றெடுத்த கண்ணீரை கடினப்பட்டு உள்ளிழுத்தவள் வாயில் கை வைத்து விம்மலை அடக்கிக் கொண்டாள்.

இப்படியே ஒரு வாரம் சத்தமின்றிக் கடந்து போனது.

கார்த்தி கார்த்தி என புலம்பி ஊண் உறக்கம் தொலைத்தவளை அடித்து மிரட்டி சாப்பிட வைத்த பழனி, இரவும் பகலும் கூடவே இருந்தான்ர். சிறு வயதிலிருந்து கண்ணீரும் கஷ்டமும் என்னவென்று தெரியாமல் அவளைக் கண்ணுக்குள் வைத்து வளர்த்தவருக்கு அவளின் கண்ணீர் மிகுந்த வருத்தத்தை தந்தது. கார்த்திக்கின் இழப்பை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அன்று மயங்கிப் போனவளை தனி வார்டில் விட்டுச் சென்ற விஜய், அதன் பிறகு அவளைக் கண்டு கொள்ளவே இல்லை. அதை உணரும் நிலையில் அவளும் இருக்கவில்லை.

இதற்கிடையில் கார்த்திக்கின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, பழனியிடம் வந்து கௌதமியைப் பெண் கேட்டிருந்தார் செல்வநாயகம். மகளின் மனமறிந்து வைத்திருந்த பழனி உடனே சம்மதம் தெரிவித்து விட்டார். ஒரு புறத்தில் கண்ணீரும் கம்பளையும் என ஒவ்வொருவரும் புலம்பிக் கொண்டிருக்க, மறுபுறம் காதோடு காது வைத்தாற்போல் திருமண ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது.

அதைப் பற்றி விஜய் கேள்வியுற்றபோதும் கூட பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. கார்த்திக் தன் கையைப் பிடித்துக் கூறிய விடயம். அவன் இறுதியாய் கூறிய விடயமும் அதுவே.. அதை மறுக்க முடியவில்லை அவனால்! அவன் மறுக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் தான் செல்வநாயகம் அவனின் சொந்த முடிவைக் கேளாமலே திருமண ஏற்பாடுகளில் மூழ்கிப் போனது!

இன்னும் ஒரு வாரம் கடந்த நிலையில், ஊராரில் விசேஷமான சிலர், உறவினர்களின் முன் கௌதமியின் கழுத்தில் தாலியேற்றி அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான் விஜய ஆதித்யன், தன் தம்பியின் ஆசைக்காக!!

இதில் பெரும் அவலம் ஏதேன்றால், தன் மனைவியானவளின் பெயர் என்னவென்று கூட அறிந்திருக்கவில்லை அந்தக் காளை. அதை அறிந்து கொள்ளும் எண்ணமும் அப்போது அவனுக்கு இருக்கவில்லை என்பதுவே உண்மை!

தொடரும்.
 
Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
#வண்ணமலரேவாசம்தருவாயா
#உப்பாறு
#அத்தியாயம்_8

ஹைய்யோ விஜயையும் கௌதமியையும் சேர்த்து வைக்க வேற வழியை யோசிச்சிருக்கலாமே😔😔🥲கொடுத்த சத்தியத்தை காப்பாத்திட்டு போய்டான்😟

ஏன்பா இப்படி பண்ணீங்க.என்னால இந்த கதையை படிக்கவே முடியல.ரொம்ப கஷ்டமா இருக்கு😔😔

இதெல்லாம் கனவுன்னு,பிளான் பண்ணது,பிரான்க்னு ஏதாவது சொல்லிரமாட்டீங்களானு இருக்கு.கௌதமிக்கு நல்லா நட்பா கடைசி வரைக்கும் வருவான்னு நினைச்சேன்.மேல என்னால இதை தொடர்ச்சியா படிக்க முடியுமாண்ணு தெரியல😭🥲😭.ஏன்னா முதல்ல இருந்தே கார்த்திக்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.அதான் என்னால ஏத்துக்கவே முடியலை.இது என்னோட பீலிங்ஸ்மா.என் கமெண்ட்னால நீங்க டிஸ்டர்ப் ஆகாதிங்க👍👍❣️❣️
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
2,018
ரெம்பவே கஷ்டமான எபி சகி 😢😢😢😢😢😢😢😢கார்த்திக்கை இப்படியா காலிபண்ணுவீங்க உங்க கூட காய் ஆமாம் ☹️☹️☹️☹️☹️☹️☹️
 
நன்றி சகி ❤❤❤
 
என் கூட காய் விடாதீங்க.. நானே பாவம் சகி 😐😐 நன்றி ❤❤🤩🤩
 
Sri pavithra

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 17, 2022
Messages
32

Finally karthiya konnu pair a onu serthutingka 😪😪😪😪😪😪 karthi paavo. Kadesi nerathula kuda avanoda friend kaga yosichan. Avana pudika karaname avan gouthami mela vecha anubu dhaa💓💓💓💓💓❤❤
Anyway super akka 👌👌👌👌👌👌👌👌👌👌 ipo indha pair serna evlo naala agumo 😂😂😂
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
Finally karthiya konnu pair a onu serthutingka 😪😪😪😪😪😪 karthi paavo. Kadesi nerathula kuda avanoda friend kaga yosichan. Avana pudika karaname avan gouthami mela vecha anubu dhaa💓💓💓💓💓❤❤
Anyway super akka 👌👌👌👌👌👌👌👌👌👌 ipo indha pair serna evlo naala agumo 😂😂😂
நன்றி சகி.. தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் ❤❤❤❤️
 
Solai aaru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2022
Messages
95

அமைச்சரே கண்ணு வேர்த்திடிச்சு. ஆனா இப்பிடி ஒரு நல்ல நட்பை வளரவிடாம மண்ணில புதைச்சத ஏற்க முடியல. பாவம் எவ்ளோ மனசு கஷ்டப்பட்டிருப்பா..

ஆனா இவன் என்ன மனுஷன். இயந்திரம் மாதிரி உணர்ச்சியே இல்லாம நடந்துக்கிறானே! பாவம் கொளதமி.
 
Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
286
கார்த்தியை அநியாயமா கொன்னுட்டீங்களே😥
So sad..ரொம்ப கஷ்டமா இருக்கு.கண்ணுல தண்ணியேவந்துருச்சு லாஸ்ட்டுல அவன் தவிப்பை பார்த்து....
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கார்த்தியை அநியாயமா கொன்னுட்டீங்களே😥
So sad..ரொம்ப கஷ்டமா இருக்கு.கண்ணுல தண்ணியேவந்துருச்சு லாஸ்ட்டுல அவன் தவிப்பை பார்த்து....
அவனை போட்டுத் தள்ளனும்னு நானுமே நினைக்கல 😐 ஆனா திடீர்னு வந்த யோசனையால அப்டி பண்ணிட்டேன். அப்றம் நானும் வருத்தப் பட்டேன் 😐😣😣
நன்றி 💛
 
Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
646
கார்த்தியை கொன்று தான் பப்புவை வாழ வைக்க வேண்டுமா.
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
அழுகை மட்டுமே எனக்கு 😭😭😭😭

பாப்பாவின் நல்லவனுக்கு ஏன் இப்படியாக வேண்டும் 😢😢😢😢🤧🤧🤧🤧

கொடுத்த வாக்கை காப்பாற்ற உயிர் பிரியும் தருவாயிலிலும் அதை நினைவு கூர்ந்து தன் நட்பின் ஆழத்தை செயலால் காட்டி விட்டான் 🥹🥹🥹🥹🥹

கல்யாணம் முடிந்தது. ஆனால் சந்தோஷப்பட முடியவில்லை ஆத்தரே 😔😔😔
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
இரண்டு பேரை சேர்த்து வைக்க ஒருத்தரை போட்டு தள்ளனுமா? இதெல்லாம் ரொம்ப டூ மச்..சகி. ஆல்ரெடி பிளாஷ்பேக் ல இரண்டு பேரை போட்டு தள்ளிட்டு இபாபோ மூனாவதாக இப்படி பண்றீங்க.
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
நட்போட முக்கியத்துவத்தை காட்ட உயிரை இழந்தது போல காட்டினது ஏற்றுக்க முடியல..ரொம்ப கஷ்டமாக இருக்கு
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கார்த்தியை கொன்று தான் பப்புவை வாழ வைக்க வேண்டுமா.
அப்பறம் தான் இந்த யோசனை எனக்கும் வந்துச்சு 😣😣😣
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
அழுகை மட்டுமே எனக்கு 😭😭😭😭

பாப்பாவின் நல்லவனுக்கு ஏன் இப்படியாக வேண்டும் 😢😢😢😢🤧🤧🤧🤧

கொடுத்த வாக்கை காப்பாற்ற உயிர் பிரியும் தருவாயிலிலும் அதை நினைவு கூர்ந்து தன் நட்பின் ஆழத்தை செயலால் காட்டி விட்டான் 🥹🥹🥹🥹🥹

கல்யாணம் முடிந்தது. ஆனால் சந்தோஷப்பட முடியவில்லை ஆத்தரே 😔😔😔
கொஞ்சம் கொஞ்சமா மறந்திடலாம் சகி.. அவனோட இழப்பு கதையோட இறுதியில யாபகமே வராதுன்னு நம்புவோம் 😜😜💛
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
இரண்டு பேரை சேர்த்து வைக்க ஒருத்தரை போட்டு தள்ளனுமா? இதெல்லாம் ரொம்ப டூ மச்..சகி. ஆல்ரெடி பிளாஷ்பேக் ல இரண்டு பேரை போட்டு தள்ளிட்டு இபாபோ மூனாவதாக இப்படி பண்றீங்க.
வேற யாரையும் போட்டு தள்ள கூடாதுன்னு நினைச்சிருக்கேன் சகி 🙈 நம்பி படிக்கலாம் 😁💙
 
Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
ஏன் dr... இப்படி... இதோட... மூணு பேரு... 🥺🥺🥺🥺

சத்தியமா இதை எதிர்பாக்கல... கஷ்டமா இருக்கு... 😭😭

இனிமே இப்படி யாரையும் போட்டு தள்ளாதீங்க plz... 🥺😭💔

கல்யாணம் ஆயாச்சா...
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
ஏன் dr... இப்படி... இதோட... மூணு பேரு... 🥺🥺🥺🥺

சத்தியமா இதை எதிர்பாக்கல... கஷ்டமா இருக்கு... 😭😭

இனிமே இப்படி யாரையும் போட்டு தள்ளாதீங்க plz... 🥺😭💔

கல்யாணம் ஆயாச்சா...
மாட்டேன் மாட்டேன். இந்த ஸ்டோரில அந்த 3 பேரும் மட்டும்தான் இலக்கு 😂
 
Top