• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 09)

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
முதலிரவுக்காக கௌதமியை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் ஆதர்யா. தான் விரும்பிய திருமணம் நடந்து விட்ட ஜோலிப்போ, முதலிரவுக்கான பதட்டம் கலந்த வெட்கமோ, எதிர்பார்ப்புகள் நிறைவேறிய சந்தோஷமோ கௌதமியின் முகத்தில் துளியும் இல்லை.. அவளின் கண்கள் களையிழந்து போயிருந்தன.

அவளின் தலையில் பூச்சூடி விட்ட ஆதர்யா சிறு புன்னகையோடு நிமிர்ந்தாள். அது வெகு கடினப்பட்டு ஒட்ட வைக்கப்பட்ட புன்னகை என்று அவளின் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலே யாருக்கும் தெரிந்து விடும்.

அவளின் பார்வை அதே அறையின் கட்டிலில் அமர்ந்து நெற்றியை உள்ளங்கைகளால் தாங்கி கண்களை மூடியிருந்த சாதுர்யாவை வருத்தத்துடன் நோக்கியது. கார்த்திக் நம்முடன் இல்லை என்ற விடயத்தை அவள் இன்னுமே ஏற்றுக்கொள்ளாமல் அழுது கொண்டே தான் இருந்தாள். இந்த இரு வாரங்களில் அவளின் புன்னகை முகத்தை கண்டவர் அங்கு யாருமே இருக்க முடியாது. அவனை நினைத்து நினைத்து அழுதாள்.

பெருமூச்சுடன் கௌதமியின் காதோரம் குனிந்த ஆதர்யா, "இப்டியே மூஞ்சை டல்லா வைச்சுட்டு இருக்காத கௌதமி! கொஞ்சம் ஸ்மைல் பண்ணு ப்ளீஸ்.." என்று கெஞ்சலாகக் கூற, கண்களை விட்டு வெளியே சிந்தவிருந்த கண்ணீரை உள்ளிழுத்து சிறு புன்னகையை இதழ்களில் ஒட்ட வைத்துக் கொண்டாள் கௌதமி.

அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த யமுனா, கௌதமியின் தலை வருடி விட்டாள். மொத்தத்தில் சொல்லப் போனால் அங்கு யாரின் முகத்திலும் சந்தோசம் என்ற ஒரு விடயத்தை கண்டு கொள்ளவே முடியாமல் எல்லோரின் முகமும் வாடிப் போய் இருந்தது.

அறைக்குள், ஜன்னலருகே நின்று வானை வெறித்துக் கொண்டிருந்தான் விஜய். தேய்பிறை முழுவதுமாக தேய்ந்து வளர்பிறை வளர்ந்து கொண்டிருந்தது. அந்த பிறை கூட அவனின் கண்களுக்கு அழகாய் தெரியவில்லை. இனி, இந்த வளர்பிறை நிலவைப் போலே உன் வாழ்விலும் சந்தோசங்கள் வளர்ந்து கொண்டே செல்லும் என யாராவது அவனிடம் வந்து கூறினால் நம்பும் நிலையில் அவன் தான் இல்லை. ஆனால் அதுவே உண்மை!

அறைக் கதவை திறந்து கொண்டே உள்ளே நுழைந்தார் செல்வநாயகம். இளையமகனைத் தான் இழந்து விட்டேன். மூத்த மகனிடமாவது இரண்டு வார்த்தைகளை பேசி ஆறுதலடைவோம் என எண்ணினார் போலும்..

கதவின் திருகு திருகப்படும் சத்தத்திலே மெதுவாக திரும்பிப் பார்த்த விஜய், அங்கு நின்றிருந்தவரைக் கண்டு வேகமாக அங்கிருந்து நகர முயல, "ஒரு ரெண்டு வார்த்தை பேசிட்டு போ விஜய்.."என்று கெஞ்சலாகக் கூறினார் அவர்.

அவரின் வார்த்தைகளில் ஏக்கமும் கலக்கமும் இழையோடியதை விஜய்யால் புரிந்து கொள்ள முடிந்தாலும் அவரிடம் நின்று பேசும் அளவுக்கு மனம் வரவில்லை அவனுக்கு! எதுவும் பேசாமல், பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு விறைப்பாய் நின்றான்.

"என்னை மன்னிக்கவே மாட்டியாப்பா? நான் எந்த தப்புமே செய்யலன்னு சொல்லுறதை ஏண்டா நீ நம்பவே மாட்டேங்கற.. ரொம்ப வலிக்குதுடா.." நெஞ்சை நீவி விட்டபடி உடைந்த குரலில் கூறியவரை மேலிருந்து கீழாக ஒரு அலட்சியப் பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.

"உங்கம்மா தான் அவசரப் பட்டுட்டா.. அதுக்காக நீ என்னை தள்ளி வைச்சிருக்கிறது எந்த விதத்துல நியாயம் விஜய்.. இந்த அப்பாவை ஒரு வாட்டி மன்னிச்சு விடக்கூடாதா?" என்று கேட்டவருக்கு, முதல் மனைவி அலமேலுவின் நினைவில் கண்கள் கலங்கியது. தோளுக்கு குறுக்காக தொங்கிக் கொண்டிருந்த துண்டை தூக்கி ஈரமான கண்களை துடைத்துக் கொண்டார்.

"மன்னிப்பு மன்னிப்புனு எதுக்கு என் உயிரை வாங்கறீங்க.. நான் மன்னிச்சா என்ன.. மன்னிக்கலன்னா தான் என்ன இப்போ.. ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். பழசை எல்லாம் சொல்லி இன்னும் வருத்தப்படுத்தாம ப்ளீஸ் இங்கிருந்து போய்டுங்க. நான் உங்களை மன்னிச்சா அம்மாவோட ஆத்மா என்னை மன்னிக்காது.." என்றவன் வெறுப்புடன் முகம் சுழித்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

செல்வநாயகம் நின்ற இடத்திலே நின்றான். விஜய ஆதித்யனை அவனின் தாய் அலமேலு இவ்வுலகில் தனியாய் விட்டு விட்டு, தூக்கு மாட்டி இறக்கும் போது இவனுக்கு வெறும் மூன்றே வயது தான். அப்போது அவனுக்கு அவ்வளவாக விவரம் இல்லாதபடியால் தந்தையுடனே ஒண்றி தாயின்றிய ஏக்கத்தை தீர்த்துக் கொண்டான்.

அலமேலு தூக்கு மாட்டி இறப்பதற்கான காரணம் அவனுக்கு தெரிந்ததும் செல்வநாயகத்தையும், அவரின் இரண்டாம் மனைவி யமுனாவையும் மொத்தமாக தள்ளி வைத்தவன் அவர்களை மனதார வெறுக்க ஆரம்பித்து விட்டான். அவர்களின் குழந்தைகளான, தன் தங்கை தம்பியரிடம் கூட அவ்வளவு நெருக்கமாகப் பழகாமல் தள்ளியே நின்று விட்டான்.

இருபது வயதிருக்கும் போது வீட்டை விட்டு வெளியேறிச் சென்றவன் பகுதி நேர வேலை பார்த்து தன் வயிற்றுப் பசியை போக்கிக் கொண்டு, தன் இலக்கை நோக்கிக் காலடி எடுத்து வைத்தான். அவனை வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்ற பலமுறைகளும் தோல்வியை மட்டுமே தழுவினர் யமுனாவும் செல்வமும்..

ஆனால் 'அண்ணா' 'அண்ணா' என்று உயிரைக் கொடுத்த கார்த்திக்கிடம் மட்டும் அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருந்தவன், ஒரு நாள் கூட தன் அன்பை கார்த்திக்கிற்கு வெளிப்படையாக காட்டியதில்லை. அவனுக்காக எதையும் செய்ய துணிவான் விஜய். அவனின் எல்லையற்ற அன்பை உணர்ந்து தான் வைத்திருந்தான் கார்த்திக்கும்! அந்த தைரியத்தில் தான் இறுதி நேரத்திலும் கூட தோழியின் கரத்தை அவனின் கரத்தில் அழுத்தி விட்டு இறந்து போனது..

தன் மேல் எந்தத் தவறும் இல்லை என தன் தரப்பு நியாயத்தை விளக்க வரும் செல்வநாயகத்தை ஒற்றை வெறுப்புப் பார்வையாலோ அலட்சியப் பார்வையாலோ தள்ளியே நிறுத்தியவன், அவரின் நியாயத்தை எந்த சந்தர்ப்பதிலும் கேட்க வெண்டும் என நினைக்கவே இல்லை.

அந்த அறையில் ஃப்ரேம் வடிவில் புன்னகைத்துக் கொண்டிருந்த அலமேலுவை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த செல்வம், உடைந்த மனதோடு அங்கிருந்து வெளியேறி சென்று விட்டார்.

அவர் சென்ற சற்று நேரத்தில் குளித்து விட்டு துவாலையை இடுப்பில் சுற்றிக் கொண்டு வெளியே வந்த விஜய், தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான். கடமை நேரங்களில் கம்பீரமும் பொறுப்புணர்வும் நிறைந்திருக்கும் கண்களில் இப்போது அலட்சியமும் வெறுமையும் மட்டுமே குடி கொண்டிருந்தது.

மடித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த டீஷர்ட் ஒன்றையும் முக்கால் பேண்ட் ஒன்றையும் அணிந்து கொண்டவன் ஈரம் சொட்டிய கேசத்தை கைகளால் விசிறி விட்டான். அவன் வீட்டுக்கு வருவதே ஆடைக்கொரு முறை கோடைக்கொரு முறை தான்! அப்படி வந்தால் உடுத்திக் கொள்வதற்காகவென்று டீஷர்ட், சட்டை, பேண்ட் என எல்லாவற்றையும் அழகாக மடித்து எடுத்து வைத்திருப்பான் கார்த்திக். ஆடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருவரும் சிறு வயதில் ஒன்றாக இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படமொன்று ஒட்டி வைக்கப்பட்டு இருந்தது.

அதை இரு நொடிகள் வருடிப் பார்த்தவனுக்கு அந்த அறைக்குள் இருப்பதே மூச்சடைப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. எந்த மூலையைப் பார்த்தாலும், அவன் ஆதர்யாவின் திருமணத்துக்கு வந்திருந்த போது கார்த்திக் செய்த சேட்டைகள் தான் நினைவில் வந்தது அவனுக்கு.

நெஞ்சை நீவி விட்டு மூச்சை சீராக்க முயன்றவன் அறையை விட்டு வெளியேறவென நகர, அறைக் கதவை திறந்து கொண்டு உள் நுழைந்தாள் கௌதமி. அவளைப் பார்த்ததும் தான் தனக்கு திருமணமாகி விட்ட விடயமே நினைவு வந்தது விஜய ஆதித்யனுக்கு. அவளை அறை வரை அழைத்து வந்த ஆதர்யா அங்கிருந்து நகர்ந்து செல்வது தெரிந்தது.

கௌதமியை எப்படி எதிர் கொள்வதென்று அவனுக்கு புரியவில்லை. அவளின் பெயர் என்னவென்று கூட தனக்குத் தெரியாத என்ற யோசனையில் அவள் நின்றிருந்த நேரம், கையிலிருந்த சொம்பை மேஜை மேல் வைத்து விட்டு தொப்பென்று அவன் காலில் விழுந்தாள் கௌதமி.

அவளை வெறித்தவன் நிதானமாக பின்னகர்ந்து நின்று, குனிந்து அவளைத் தூக்கி விட்டான். புருஷன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது, சிறு விடயத்திற்கும் அழுது கலங்குவது போன்ற விடயங்கள் விஜய்க்கு சற்றும் பிடிக்காது.

"இனிமே இப்டி கால்ல கைல விழ அவசியம் இல்ல.." எனக் கூறியவன் சற்று நகர்ந்து நிற்க, மேஜை மேலிருந்த சொம்பை எடுத்து அவனுக்கு நீட்டினாள். அவளது கைகள் குளிர்காய்ச்சலில் நடுங்குவது போல் படபடவென்று நடுங்குவதைக் கண்டு அவளின் முகத்தைப் பார்த்தான் விஜய்.

நடுக்கத்தில் கீழுதடுகள் பற்களுக்கு இரையாக்கப்பட்டு சிதைந்து கொண்டிருக்க, இமைகள் நொடிக்கொரு தரம் வேகமாக மூடித் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பார்வை தரை நோக்கி தாழ்ந்திருந்தது.

அவளின் கையிலிருந்த சொம்பை வாங்கிக் கொண்டவன் குவளையில் ஊற்றி அவளுக்கு நீட்ட, "வேண்டாம்" என்பது போல் தலை அசைத்தாள் கௌதமி. அவளின் கைகளில் குவளையை திணித்து விட்டு சொம்பைத் தூக்கி அதிலிருந்த பாலைக் குடித்தவன் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

கையிலிருந்த குவளையை பாவமாகப் பார்த்தவள் கண்களை மூடிக் கொண்டு ஒரே மிடறில் அதைக் குடித்து விட்டு அவனுக்கு சற்றுத் தள்ளி கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள்.

இப்படியே சில நிமிடங்கள் கடந்து போனது. முதலில் அவள் ஆரம்பிக்கட்டும் என அவனும், பாய்ஸ் ஃபர்ஸ்ட் என்ற பிடிவாதத்தில் அவளும் நின்றிருக்க, அங்கே அமைதி மட்டுமே நிலவியது.

"நான் யாருனு உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்ல.. ஐம் விஜய ஆதித்யன்.." அவனே தான் முதலில் கரம் நீட்டினான்.

'உன்னை எனக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லனு சொல்லு பப்லு.. எனக்கு தெரிஞ்சதெல்லாம் உன்னை மட்டும் தான்..' என கூக்குரல் இட்டது அவளது மனம். தயக்கமாக தன் கையை அவனின் நீட்டப்பட்ட கைகளோடு பிணைத்தவள்

"ஐம் கௌதமி இனியாள்.." என்றாள். அவள் கூறியது அவளுக்கே கேட்கவில்லை. தொண்டையை செருமிக் கொண்டு மீண்டுமொரு முறை தன் பெயரைக் கூறியவளுக்கு உள்ளங்கை வியர்த்து ஊற்றியது. அவனின் கைகளுக்குள் துவண்டு போயிருந்த தன் கைகள் என்றும் இப்படியே இருக்க வேண்டும் என விரும்பினாள்.

"திடீர்னு நடந்த திருமணம். உனக்கும் கண்டிப்பா ஏத்துக்க முடியாம தான் இருக்கும். நீ கார்த்திக்காக இந்த கலியாணத்துக்கு ஓகே சொன்ன மாதிரி தான் நானும் அவனுக்காக தான் கலியாணம் பண்ணிக்கிட்டேன்.. உனக்கு தேவையானது எதுவா இருந்தாலும் என்கிட்டே தயங்காம கேட்கலாம்.."

பேசியபடியே அவளின் கைகளுக்குள் சிறைப் பட்டிருந்த தன் கையை நாசுக்காக உறுவிக் கொண்டான் விஜய். இந்த திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பமில்லை என அவன் மறைமுகமாக கூற வருகிறான் என்பதை புரிந்து கொண்டவள் மனமேயின்றி சரியென்று தலை அசைத்தாள்.

அதற்கு மேலும் பேசுவதற்கு எதுவுமில்லை என்பது போல் கட்டிலில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான் விஜய். கைகளைப் பிசைத்தபடி நின்றிருந்தவள் வெகு நேரம் கழித்து அவனுக்கு சற்றுத் தள்ளி, கட்டிலின் ஒரு பக்கத்தில் சாய்ந்து கொண்டாள்.

அவளின் கனவு முழுதும் கார்த்திக் தான் வந்தான். அவளிடம் சண்டையிட்டான். அவளின் உணவைப் பறித்து தன் வாயில் அடைத்து இவளைப் பார்த்து இழித்து வைத்தான். மிக அழகிய வார்த்தைகளை உபயோகித்து இவளைத் திட்டி கடுப்பேற்றினான். இவளின் முடியை இழுத்து தலையில் கொட்டி விட்டு ஓடினான். பழனியின் உணவை நா தட்டி தட்டி உண்டு அவனை புகழ்ந்து தள்ளினான்..

தூக்கத்திலும் லேசாய் புன்னகை சிந்தினாள் கௌதமி!
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
சூப்பர் சூப்பர் எபி ♥️♥️♥️♥️♥️♥️ரெண்டு பேருமே கார்த்திக் நினைவுகளில் ரெம்பவே பாதிக்க பட்டிருக்காங்க. எப்போ தான் விஜய் கௌதமியை ஏத்துப்பான் 🤔🤔🤔🤔🤔🤔
 
போக போக ஏத்துப்பான் சகி 😂😂 வெயிட் பண்ணுங்க ❤
 
Sri pavithra

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 17, 2022
Messages
32

Miss u karthi 😪😪😪😪😪😪😪
Vijay ottaama pesitu nagkarnthu podarane 😑😪😪😪😪 epo avangka normal aavangka?
Super moving akka 👌👌👌👌👌👌
 
Solai aaru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2022
Messages
95
ஆனா என்ன நாடக்கும்னு ஆர்வமா இருக்கு
 
Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
263
கார்த்திக் பிரிவில் இருந்து மீண்டு வருவதே கஷ்டமா இருக்கும் அவளுக்கு..அவன் அவளை புரிந்து கொள்வானா?
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கார்த்திக் பிரிவில் இருந்து மீண்டு வருவதே கஷ்டமா இருக்கும் அவளுக்கு..அவன் அவளை புரிந்து கொள்வானா?
😍❤️ நன்றி
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
அவள் மனதில் அவன் தானென்ற உண்மை எப்போது தெரிய வருமோ 🥺🥺🥺🥺

கனவிலும் அவளை சிரிக்க வைக்கின்றானே அவளின் நல்லவன் 🥹🥹🥹🥹
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
இந்ண சிடுமூஞ்சியை கல்யாணம் பண்ணி வைச்சதற்கு அவன் பண்ணி வைக்காமலே போயிருக்கலாம். இவன் ஏதோ மனதில் நினைச்சுட்டு அலமேலு இறப்பில் உண்மை தெரியாமல் இருக்கிறான் போல.
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
டேய்! ஆதி உனக்கு தான் விரும்பாத கல்யாணம்! அவளுக்கு அப்படி இல்லடா ..
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
அவள் மனதில் அவன் தானென்ற உண்மை எப்போது தெரிய வருமோ 🥺🥺🥺🥺

கனவிலும் அவளை சிரிக்க வைக்கின்றானே அவளின் நல்லவன் 🥹🥹🥹🥹
💙💙
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
இந்ண சிடுமூஞ்சியை கல்யாணம் பண்ணி வைச்சதற்கு அவன் பண்ணி வைக்காமலே போயிருக்கலாம். இவன் ஏதோ மனதில் நினைச்சுட்டு அலமேலு இறப்பில் உண்மை தெரியாமல் இருக்கிறான் போல.
டேய்! ஆதி உனக்கு தான் விரும்பாத கல்யாணம்! அவளுக்கு அப்படி இல்லடா ..
அதை அவன் என்னைக்கு உணருவானோ 🚶‍♀️🚶‍♀️
 
Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
கார்த்திக்... 😔

அவர நெனச்சாலே... கண்ணு கலங்குது... 🥺

ஆதி...கெளதமி... லைப் இனி எப்படி இருக்கும்... ❤
 
❤❤
 
Top