• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 10)

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கீழ் வானில் தன் வீரக் கதிர்களை விரித்து உட்சாகத்துடன் உதயமானான் கதிரோன்.

பொழுது முற்றாக விடியும் முன்பே தூக்கம் கலைந்து எழுந்த விஜய், கைகளை நீட்டி சோம்பல் முறித்தான். ஜாக்கிங் போக வேண்டும் என எண்ணியபடி போர்வையை உதறிக் கொண்டு எழுந்து நின்றவன் குளியலறைக்குள்ளிருந்து வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு புருவம் சுருக்கினான்.

எழுந்து சென்று என்னவாகிற்று என்று கேட்டுப் பார்ப்போமா என நினைத்தாலும், எப்படி குளியலறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்வது.. அந்த அளவுக்கு நமக்குள் பலமான உறவொன்று இல்லையே எனத் தயங்கி நின்றான்.

சில நொடிகள் கடந்த பிறகும் அவள் விடாமல் வாந்தி எடுக்கும் சத்தத்தில் மேலும் குழம்பியவன் எழுந்து சென்று குளியலறைக் கதவை தட்டினான். கதவு வெறுமனே சாற்றி இருந்தபடியால் கதவு தானாக திறந்து கொள்ள, மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தான். வாஷ்பேஷினின் கைப்பிடியைப் பற்றியபடி குனிந்து நின்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் கௌதமி.

இவனைக் கண்டதும் கைகளை நீட்டி அருகில் வருமாறு செய்கை செய்ய, பாத்ரூமிற்காக உபயோகப்படுத்தும் செருப்பை அணிந்துகொண்டு உள்ளே நுழைந்தவன் அவளின் நீட்டியிருந்த கையைப் பற்றிக் கொண்டான். உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது அவளுக்கு. நேற்றிரவு அவனின் கைகளை பற்றிக் குலுக்கியபோதும் கூட இதே போல் தான் உணர்ந்தாள்.

"என்னாச்சு திடீர்னு?" அவளின் முதுகை வருடி விட்டபடி சாதாரணமாக கேட்க,

"பால்.. நேத்து நைட் குடிச்ச பால் ஒத்துக்கல.. எனக்கு பால் ஒத்துக்காது.." எரிச்சலைக் கொடுத்த தொண்டைக் குழியை கைகளால் நீவி விட்டபடி கூறியவள் நீரில் கால் வழுக்கி விழப் போக, அவளின் கைகளை மேலும் இறுக்கமாய் பற்றிக் கொண்ட விஜய், அவளை அறைக்குள் அழைத்து வந்தான்.

"பால் ஒத்துக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டு எதுக்கு குடிக்கனும்?" சற்று கண்டிப்பான குரலில் கேட்டபடி டப்பாவில் இருந்த டேப்லெட்டை எடுத்து நீட்டினான் விஜய்.

தான் கொடுத்த காரணத்தினால் தான் அவள் மறுக்காமல் குடித்திருப்பாள் என்று புரிந்து கொள்ள முடிந்தது அவனால். நான் கூறினேன் என்பதற்காக தனக்கு ஒத்துக்காது என அறிந்தும் அதை அருந்துவதற்கான அவசியம் தான் என்ன என்று அவனின் மனம் கேள்வி எழுப்பியது. கிளம்பிய கோபத்தை தனக்குள்ளே புதைத்துக் கொண்டான்.

அவள், அவனின் அக்கறையில் மனம் குளிர்ந்து அவன் நீட்டிய டேப்லெட்டை கைகளில் எடுத்து தண்ணீரோடு சேர்த்து விழுங்கினாள்.

'நீங்க கொடுத்து நான் எப்படி குடிக்காம இருப்பேன்? அதான் குடிச்சிட்டேன்..' என மனதினுள் கூறியவள் அதை வெளிப்படையாக கூறாமல் கட்டிலில் சோர்வாய் சரிந்தாள்.

கபோர்ட்டில் இருந்து கையில்லாத பனியன் ஒன்றையும் ஃபுல் பேண்ட் ஒன்றையும் எடுத்துக் கொண்டு குளியலறை நுழைந்த விஜய், பல்லை விளக்கி முகத்தை மட்டும் அலசி விட்டு அந்த ஆடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான். கட்டிலில் சாய்ந்திருந்தவளை கடைக் கண்ணால் ஒரு பார்வை பார்த்தவன் பிறகு ஜாக்கிங் கிளம்பி விட்டான்.

காலையில் உணவு மேஜையில் கூடி இருந்தனர் எல்லோரும். இரு வாரங்களாக தனியாகவே உணவை தட்டில் வைத்து தனியாக அமர்ந்து தான் உணவு உட்கொண்டான் விஜய். இன்று கௌதமியும் இருப்பதால் ஆதர்யா அவனை கெஞ்சிக் கூத்தாடி உணவு மேஜை வரை அழைத்து வந்திருந்தாள். கார்த்திக்கிற்கு அடுத்த படியான அன்பை அவள் மேல் தான் வைத்திருந்தான் விஜய்.

யமுனா உணவு பரிமாற வரும் போது தட்டை இழுத்துக் கொண்டவன் தானே உணவை தட்டில் போட்டுக் கொள்ள, மனம் வருந்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்துக் கொண்டாள் யமுனா.

விஜய்க்கு அருகில் சோர்வாக அமர்ந்து உணவுத் தட்டில் கோலம் வரைந்து கொண்டிருந்தாள் கௌதமி.

அவளின் சோர்வை வேறு விதமாக புரிந்து கொண்ட யமுனா, "என்னடா பப்புவை ரொம்ப மிஸ் பண்றியோ.." என புன்னகையுடன் கேட்க, ஆமென்று தலை அசைத்து பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள் அவள்.

"அடிங்க.. பொய் சொல்லுறியா நீ? ம்மா இவ பொய் சொல்லுறாம்மா.. காலைல தூங்கி எழுந்த பாதி எழாத பாதியா இவ ஓடுனது அவளோட பப்புவைப் பார்க்க தான். அங்க போய் பப்பு கையால டீ குடிச்சுட்டு வயிறு முட்ட சாப்டுட்டு வந்ததால தான் இப்போ தட்டுல கோலம் போட்டுட்டு இருக்கா.." கௌதமியை செல்லமாக முறைத்தபடி கூறிய ஆதர்யாவை,

"ஆது. அவ இவனு பேசாத.. இப்போ அவ உன்னோட அண்ணி.." என அதட்டி அடக்கினாள் யமுனா.

திரும்பி கௌதமியைப் பார்த்த விஜயின் மனதில் அந்த பப்பு யாரென்ற கேள்வி மட்டும் தான் ஓடிக் கொண்டிருந்தது. அவளின் அப்பாவி முகம் அவனுக்கு சிறு புன்னகையை ஏற்படுத்தினாலும், வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

"இப்போ எதுக்கு இப்டியே மூஞ்சியை இப்டி வைச்சுட்டு இருக்க? உன் பப்பு கையால சாப்பிட்டதும் அப்டிலாம் சாப்பிட வேணாம்னு சொல்லிடப் போறோமா நாம.. நமக்கு தான் உன்னை பத்தி நல்லா தெரியுமே.."

யமுனாவை நிமிர்ந்து பார்த்த கௌதமி, "பப்பு என்னை ரொம்ப மிஸ் பண்ணுறாங்க அத்தை.." என்றாள் சிறுகுரலில்.

யமுனாவின் மனம் சட்டென்று இரங்கியது. கௌதமியிடம் அவளுக்கு பிடித்ததே இந்த அப்பாவி முகமும், குழந்தைப் பேச்சும் தான். அவளுக்கு, கௌதமி மருமகள் அல்ல.. சது, ஆதுவைப் போல் இன்னொரு மகள்.

"ரொம்ப தூரமாவா இருக்க? நினைச்ச நேரம் ஓடிப் போய் உன் பப்புவை பார்த்துட்டு வந்துடலாம் இல்லையா.. பாவம் அவரும் என்னதான் பண்ணுவாரு.. வீட்டுல தனியா இருப்பாரா இருக்கும்.." என்று கூற, சரியென்று தலை அசைத்தாள் கௌதமி.

சாப்பிட்டு முடித்து தட்டில் கை கழுவி விட்டு எழுந்து நின்ற விஜய், "நாளைக்கு நான் போயாகனும். ரெண்டு நாள் தான் ஸ்டேஷன்ல லீவ் கேட்டிருக்கேன்.." என்று மொட்டையாக கூறி விட்டு எழுந்து சென்று விட,

"என்னது நாளைக்கேவா?" என வாய் பிளந்தாள் கௌதமி.

அவளைப் பரிதாபமாக பார்த்தாள் ஆதர்யா. இவள் பழனியைப் பார்க்காமல் எப்படி அங்கு சென்று இருக்கப் போகிறாளோ என கவலையாய் இருந்தது அவளுக்கு. ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து நின்ற கௌதமி, ஆதர்யாவின் கையிலிருந்து செல்வத்தின் கைகளுக்கும், செல்வத்தின் கைகளில் இருந்து யமுனாவின் கைகளுக்கும் என பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த மிதுனை தூக்கிக் கொண்டாள். மிதுன் ஆதர்யாவின் மகன்.

"ஏண்டா குட்டிப் பையா.. தாத்தா பாட்டிக்கு சாப்பிட விட மாட்டியா?" என கொஞ்சிக் கொண்டே அங்கிருந்து நழுவியவள் உணவு மேஜையில் அமர்ந்திருந்தவர்கள் அசந்த நேரம் பார்த்து பழனியைப் பார்க்க ஓடி விட்டாள்.

"பப்பு.." வீட்டினுள் நுழையும் போதே கத்திக் கொண்டு தான் உள்ளே நுழைந்தாள்.

அவளின் சத்தத்தில் வாசலுக்கு விரைந்த பழனி, "குட்டிப் பையா.." என கொஞ்சியபடி மிதுனை தூக்கிக் கொண்டான். துறுதுறுவென்று இருக்கும் மிதுனை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

"பப்பு.. இங்கே நானும் இருக்கேன் இல்லையா.." முகத்தை கவலையாக வைத்தபடி கூறியவள், "நான் சொன்னதை எல்லாம் பண்ணி முடிச்சிட்டீங்களா பப்பு?" என்று கேட்டாள். இல்லையென்று தலை அசைத்தவரை கோபமாக முறைத்தாள்.

"பாப்பா.. நீ போற இடமெல்லாம் என்னால பின்னாலயே வந்துட்டு இருக்க முடியுமா சொல்லு. மாப்பிள்ளை உன்னை நல்லாப் பாத்துப்பாரு. எதுக்கு என்னையும் அங்க கிளம்ப சொல்லற.."

"நான் இல்லாம நீங்க மட்டும் இங்க தனியா இருந்திடுவீங்களோ.." நக்கல் கலந்த குரலில் கேட்டாள் கௌதமி.

"இல்லைதான். என்னால என் பாப்பாவை பார்க்காம இருக்க முடியாது. அதுக்குன்னு.."

"சும்மா எதையாவது சொல்லிட்டு இருக்காதீங்க பப்பு.. உங்களுக்கு நான் இல்லாம இருக்க முடிஞ்சாலும் என்னால முடியாது. உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காக நீங்க வந்து தான் ஆகணும். பப்லுவோட வீட்டு ஏரியாவிலயே ஒரு ரெண்ட் வீடு பாருங்க. உங்க ஆபீஸ் எம்டி கிட்ட பேசி உங்க வேலையை, அங்க இருக்கிற பிரான்ச்க்கு மாத்திக்கங்க. தினமும் என்னைப் பார்த்த மாதிரியும் இருக்கும். வேலை நடந்த மாதிரியும் இருக்கும்.. எப்படி என் ஐடியா?"

பழனிக்கு மறுக்க முடியவில்லை. கௌதமி பிறந்த சில வாரங்களிலே இந்த வீட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு இங்கு வந்து விட்டவர் இந்த பகுதி மக்களுடன் நன்றாக ஒன்றி விட்டான். இப்போது திடீரென்று இங்கிருந்து எப்படி செல்வது என சிந்தித்தார்.

"என்ன பப்பு யோசிக்கிறீங்கம் நாளைக்கு நாம அங்க போறோம்.. ப்ளீஸ் நீங்களும் வாங்க. இல்லேன்னா நான் வீட்டுலயே இருந்திடுவேன்"

அவளின் குரலில் பொய் இருப்பதாய் தெரியவில்லை பழனிக்கு. விஜயை அவள் எவ்வளவு தான் மனமார விரும்பி இருந்தாலும் காதலை விட, இருபத்தி ஒரு வருடங்கள் சீராட்டி வளர்த்த தந்தையின் அன்பு தான் அவளுக்கு பெரிதாக தெரியும் என்று அவருக்கு தான் தெரியுமே.. அவள் கூறியது போல் பிடிவாதம் பிடித்து தன்னுடனே தங்கி விடுவாளோ என அஞ்சி நின்றார் அவர்.

"எனக்கு இங்க நிறைய வேலை இருக்குடா பாப்பா.. நீ மாப்பிள்ளை கூட போ. நான் ரெண்டு வாரமோ, மூணு வாரமோ கழிச்சு நிதானமா என் வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு அங்க வந்திடறேன்.. "

அவளை சமாதானப்படுத்த தான் இப்படிக் கூறினாraரே விர, இரண்டு மூன்று வாரங்கள் அல்ல.. மாதங்களே கடந்தாலும் தான் அங்கே சென்று விடப் போவதில்லை என அவருக்கு நன்றாகவே தெரியும். மகளைக் கட்டிக் கொடுத்த பிறகும் மகளை ஒட்டிக் கொண்டு திரிகிறாரே என ஊரார் பேசுவதை கேட்க விரும்பவில்லை அவர்.

பழனி கூறியதை நம்பி விட்ட கௌதமி, "நிஜமாவே வந்திடுவீங்க இல்லையா?" என்று கேட்டபடி மிதுனை தூக்கிக் கொள்ள, ஆமென்று தலை அசைத்தவர் அவளை அனுப்பி வைத்து விட்டுப் பெருமூச்சு விட்டார். தன் ஒரே மகளைப் பிரிய அவருக்கும் தான் மனமில்லை. இவ்வளவு நாள் சேட்டைகள் புரிந்து, தன் கவலைக்கு மருந்தாக தன்னுடன் ஒன்றாகவே இருந்த மகள், இனிமேல் இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை என்ற எண்ணமே கசந்தது. மனம் மலையை விட கனத்தது.

ஆனால் மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டால், அவள் தந்தையை விட்டும், குடும்பத்தை விட்டும் பிரிந்து கணவன் வீடு செல்ல வேண்டும் என்பது தானே நியதி?..

கௌதமி வீட்டுக்குள் நுழைந்ததும், வாசலில் அமர்ந்து ராகேஷுடன் (அவளின் கணவன்) உரையாடிக் கொண்டிருந்த ஆதர்யாவிடம் தாவி விட்டான் மிதுன்.

"அண்ணா உன்னை தேடுனாரு கௌ.. அண்ணி.."

கௌதமி என அழைக்க வந்தவள் 'அண்ணி' என்று கூறியதைக் கேட்டதும் சிரிப்பு தான் வந்தது கௌதமிக்கு. ஆனால் அவளின் கணவன் நின்றிருந்த படியால் எதுவும் கூறாமல் அமைதியாய் நகர்ந்தவளுக்கு 'எதற்காக அவர் என்னைத் தேடி இருப்பாரு?' என்ற சிந்தனை தான் ஓடியது.

அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, லேப்டாப்பின் பென்டிரைவைப் பொருத்தி எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்த விஜய் நிமிர்ந்து பார்த்தான்.

"அது.. சாரிங்க.. கதவை தட்டாமலே வந்துட்டேன்.." நுனி நாக்கை கடித்து விடுவித்தவள் பாவமாக கூற, பரவாயில்லை என்பது போல் தலை அசைத்தவனின் பார்வை 'நீ எங்கே சென்றாய்?' என்று கேட்பது போல் இருந்தது அவளுக்கு.

"அது.. நான் பப்புவை பார்த்திட்டு வரலாம்னு போனேன்.. சொல்லாமலே போய்ட்டேன் இல்லையா.. சாரிங்க.."

தினமொன்றுக்கு இவள் எத்தனை முறைகள் மன்னிப்பு கேட்பாளோ என வியந்தவன், "பப்பு யாரு?" என புரியாமல் கேட்க,

"என் பப்பு தான்.." என்றவள், "அச்சோ பப்பு என்னோட அப்பா.." என்றாள். தன் விளையாட்டுத் தனத்தை நினைத்து தன் தலையிலே தட்டிக் கொள்ளவும் மறக்கவில்லை.

"ஓ.." என்றவனுக்கு மனதிலிருந்து எதோவொரு சுமை இறங்கியதாய் தோன்றியது. காரணம் தான் தெரியவில்லை.

"உன்கிட்ட பேசணும். நேரம் இருக்கா?"

'பேசணும். இப்டி உக்காருன்னு அதிகாரமா ஒரு வார்த்தை சொன்னாலே உன் காலடியில மண்டியிட்டு உக்காந்தப்பேன் பப்லு.. ' என நினைத்தவள் ஆமென்பது போல் தலை அசைத்து விட்டு அவன் கைக்காட்டிய இடத்தில் தயக்கத்துடன் அமர்ந்து கொண்டாள்.

"நாளைக்கு நான் போயாகணும்! நீ வேணும்னா இங்கயே தங்கிக்க. நான் மந்த்லி ஓர் வீக்லி வந்து உன்னைப் பார்த்திட்டு போறேன்.." சில நொடிகளுக்கு பிறகு லேப்டாப்பில் பார்வையை வைத்தபடி கூறியவனை தன்னிஷ்டத்துக்கு முறைத்துப் பார்த்த கௌதமி,

"அப்பறம் நான், நான் இங்கே நீயும் அங்கேனு ஃபீலிங் சோங் தான் பாடிட்டு இருப்பேனாக்கும்.." என வாய்க்குள் முனகினாள்.

நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள்
வருசமானதேனோ..
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும்
விளக்கமானதேனோ.. ' என எங்கோ ஓரிடத்தில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

தொடரும்.
 
Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
#வண்ணமலரேவாசம்தருவாயா
#உப்பாறு
#அத்தியாயம்_10

எல்லாரும் கார்த்திக்கை மறந்துட்டு நார்மலுக்கு வந்துட்டாங்க😔😔

பப்பு யாராதான் இருந்தா இவனுக்கு என்னவ்வாம்😤😤😤🤫

இவளுக்கு ஒத்துக்காதுன்னா இவ பால் வேண்டாம்னு சொல்லணும்.ஆனா பப்லு பப்லுனு உருகறவ எப்புடி வேண்டானு சொல்லுவா🤧🤧🤧😤😤🤭

யமுனா மேலயும் கோவமா விஜய்க்கு.அவங்க மருமகளை மகளா பார்க்கற நல்லவங்களாத்தான் இருக்காங்க🤫🤔🤔
 
நன்றி சகி 😍❤❤❤❤️
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,989
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️
அப்பாவுக்கு பப்புன்னும் புருசனுக்கு பப்புலுண்ணும் பேரு வச்சுருக்குப்பா பச்ச பிள்ளை வாயில விரல் வச்சாலும் கடிக்க தெரியாது, அய்யோ அய்யோ இப்படி ஒரு குழந்தையை கட்டுனதுக்கு விஜய் பீலிங் ஆகப்போறானோ இல்ல உறுன்னு இருக்குற இவனை முதல் தடவை பார்த்ததும் காதலிக்க ஆரம்பிச்ச கௌதமி பீலிங் ஆகப்போகுதோ 😳😳😳😳😳விஜய், கௌதமிய கூட கூப்பிட்டு போவானா 🤔🤔🤔🤔🤔
 
ஹாஹா 😂😂 பொறுத்திருந்து தான் பாக்கணும் சகி.. 😜😜
நன்றி ❤️❤️❤️❤️
 
Sri pavithra

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 17, 2022
Messages
32

sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema 👌👌👌👌👌💓❤ gouthamiya romba pudichirukku 💥😁
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
நன்றி சகி ❤❤️
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
பப்பு என்றதும் பொசஸ்சிவ்னஸ் வந்து விட்டதோ 🤣🤣🤣🤣

அவளின் சிறுபுள்ளைத்தனத்தையும் ரசிக்குறான், ஆனால் விட்டு செல்லவும் நினைக்கின்றானே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
பொலீஸாக இருக்கிறான் ஆனால் சல்லி பய 1 சதத்திற்கும் பயன் இல்லாமல் மூளையை அடகு வைச்சுட்டு இருக்கிறான்
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
இவருக்கு அவ மேல துளியும் அக்கறை இல்லை ஆனால் பொஸிவ்னஸ் மட்டும் தாராளமாக வரும் போல
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
பப்பு என்றதும் பொசஸ்சிவ்னஸ் வந்து விட்டதோ 🤣🤣🤣🤣

அவளின் சிறுபுள்ளைத்தனத்தையும் ரசிக்குறான், ஆனால் விட்டு செல்லவும் நினைக்கின்றானே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
நினைத்ததும் சென்று விடுவானா என்ன 😜😜
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
இவருக்கு அவ மேல துளியும் அக்கறை இல்லை ஆனால் பொஸிவ்னஸ் மட்டும் தாராளமாக வரும் போல
😂😂 கஷ்டம் தான்
 
Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
அவர்ட்ட பால் குடிக்க சேராது னு சொல்ல வேண்டியது தான...

பொண்டாட்டி அஹ் கூட்டிட்டு போக யோசிங்க விஜய்...

என்ன சொல்வாங்க...
 
💓💓
 
Top