• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 12)

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கிழக்கு வெளுத்து அன்றைய விடியல் மிக அழகாய் விடிந்தது!

வாசலில் கேட்ட பேச்சு சத்தத்திலே தூக்கம் கலைந்து எழுந்த கௌதமி, "யாரிது காலைலயே?" என சலித்தபடி கை நீட்டி சோம்பல் முறித்து கொட்டாவியை இழுத்து விட்டாள். பழனியின் கத்தலிலும் திட்டலிலும் விடியும் விடியல்கள் அவளுக்கு திருப்தியை தரவே தராது. ஆனாலும் என்ன செய்வது என என நினைத்துக் கொண்டே வாசலுக்கு நடந்தாள்.

சோபாவில் அமர்ந்து லேப்டாப் பார்த்துக் கொண்டிருந்த விஜயை இடுப்பில் கை குற்றி முறைத்துக் கொண்டிருந்த பெண்ணை ஆச்சரியமாகப் பார்த்தவள், "யாருப்பா இது?" என முனகினாள். தன்னவனுடன் தனக்கில்லாத நெருக்கம் அந்தப் பெண்ணுக்கு இருக்கிறதோ என லேசாக பொறாமையும் வந்து தொலைத்தது.

"என்னை கோபப்படுத்தாத வர்ஷ்.. பேசாம ஒரு ஓரமா உக்காந்துக்க. இல்லாட்டி உங்க டாடிக்கு கால் பண்ணி உங்க பொண்ணு என் வீட்டுல தான் இருக்கானு சொல்லிடுவேன்..." அவனின் மிரட்டலில் மேலும் முறைத்தவள்,

"எந்த நாளும் ஒரே மிரட்டல் தானா விஜய்? ஹவ் போரிங்!" என முனக, அவளை முறைப்பதற்கென நிமிர்ந்தவன் அறைக் கதவோரம் நின்றிருந்த கௌதமியைக் கண்டான். அவனின் பார்வை தன்னில் படிவதை உணர்ந்ததும் லேசாக புன்னகைத்தாள் கௌதமி.

"வர்ஷ்.." வாய் ஓயாமல் திட்டிக் கொண்டிருந்தவளை அழைத்து கௌதமியைக் கண் காட்டினான். அவன் கண் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த வர்ஷினி, "ஹேய் கௌதமி!" என அழைத்தபடி அவளை நெருங்கி நடந்தாள்.

"இவங்களுக்கு என்னை தெரியுமா?" என முனகியபடி ஆச்சரியமாக விழி விரித்தவளை, "ஹவ் ஆர் யூ கௌதமி?" என்று கேட்டபடி அணைத்துக் கொள்ள முயல, வேகமாக பின்னகர்ந்து நின்றாள் கௌதமி.

அவளை ஏன் என்பது போல் பார்த்தாள் வர்ஷினி. அவளுக்கு முதல் பார்வையிலே தன்னைப் பிடிக்காமல் போய் விட்டதோ? இல்லையெனில் தன் அணைப்பை ஏற்க விரும்பாது தள்ளி நிற்க வேறேதும் காரணங்கள் உண்டோ என தீவிரமான யோசனையில் அவள் மூழ்கும் முன்பே,

"ஐம் சாரிக்கா. நான் தூங்கி எழுந்ததுமே ஹாலுக்கு வந்துட்டேன். பிரெஷ் ஆகல. பல்லு கூட விலக்கல தெரியுங்களா?" என்று பற்களைக் காட்டி இழித்தபடி கூறினாள் கௌதமி.

இருவரும் நெற்றி சுருங்க பார்த்துக் கொண்டிருந்த விஜய் தன்னை மறந்து லேசாக புன்னகைத்து விட்டான். அவளின் குழந்தைத் தனத்தில் கவரப்பட்ட வர்ஷினி வாய் விட்டே சிரித்தபடி விஜயை திரும்பிப் பார்த்தாள். 'உனக்கு இப்படி ஒரு மனைவியா?' என்ற கேள்வியும் அவளின் பார்வையில் தேங்கி இருந்ததை விஜய் புரிந்து கொள்ளாமல் இல்லை.

"இருங்க வந்திடறேன்.." என்றவள் விஜயின் புறம் திரும்பி அவனின் முக பாவனைகளைக் காண வெட்கி மீண்டும் அறைக்குள்ளே ஓடி விட்டாள்.

அரைமணி நேரத்தில் கௌதமி குளித்து, உடைமாற்றி வரும் போது இருவரும் வாசலோடு ஒட்டிப் போடப்பட்டிருந்த மேஜையில் அமர்ந்திருந்தனர். மேஜையில் காலை உணவாக இட்லி, தோசை, சட்னி என சாதாரண உணவு வகைகள் அழகாக அடுக்கப்பட்டு இருந்தது.

"வா கௌதமி!" கௌதமியைக் கண்டதும் அழைத்த வர்ஷினி, அவளுக்கு அருகே இருந்த ஒரு இருக்கையை இழுத்து அமருமாறு செய்கை செய்தாள். ஃபோனில் எதையோ தீவிரமாக டைப் செய்து கொண்டிருந்த விஜயைப் பார்த்தபடியே அவள் காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டாள் கௌதமி.

"இப்போ நீ பிரெஷ் ஆகிட்டதால, என்னை இன்ட்ரோ பண்ணிக்கலாம் இல்லையா?"

வர்ஷினியின் கேள்வியில் வெள்ளந்தியாய் சிரித்த கௌதமி, "ம்ம்.." என தலை அசைத்தாள்.

"ஐம் கீதவர்ஷினி. மதுரை கமிஷனர் சக்திவேலோட ஒரே பொண்ணு. இன்ஸ்பெக்டர் விஜய ஆதித்யனோட ஃபிரண்டு!" என்றவளை முறைத்துப் பார்த்த விஜய், "இந்த அறிமுகம் தேவை தானா?" என்று கேட்டான். கண்களை சிமிட்டி 'சும்மா' என்பது போல் இதழசைத்தாள் வர்ஷினி.

கௌதமி சரியென்று தலை அசைத்தாள். ஆனால் சற்று பயமாகவும் இருந்தது அவளுக்கு. விஜயைப் பார்த்த மாத்திரத்திலே அவனிடம் மனதைப் பறிகொடுத்து விட்டவள் கார்த்திக்கின் மூலமாக அவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதை அறிந்ததும் அவனின் காக்கி உடைக்கும் அஞ்சி இரண்டு வாரங்களாக இரவில் தூக்கம் தொலைத்த விடயம் அவளைத் தவிர வேறு எவருக்கும் தான் தெரியவில்லையே!

இப்போது வர்ஷினியும் கூட கமிஷ்னரின் மகள் தான் எனtத் தெரிந்ததும் பயத்தில் முகம் வெளுத்து விட்டது. காரணம் அறியா விட்டாலும் கௌதமியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை சரியாகவே கண்டு கொண்ட விஜய், வர்ஷினியை மனதினுள் அர்ச்சித்து விட்டு கௌதமியின் தட்டில் இட்லியைப் பரிமாறி விட்டு தன் தட்டிலும் வைத்துக் கொண்டான்.

"இங்க நானும் இருக்கேன்.." விஜயைப் பார்த்து முறைப்புடன் கூறினாள் வர்ஷினி. அவளின் குரலில் தான் சிந்தனை தெளிந்த கௌதமி தன் தட்டில் உணவு பரிமாறப்பட்டிருப்பது கண்டு விஜயை திரும்பிப் பார்த்தாள்.

"அதான் கை இருக்குல்ல? பரிமாறி சாப்பிடு" என்ற விஜய் தன் பாட்டில் சாப்பிட ஆரம்பித்து விட, புலம்பிக் கொண்டே தன் தட்டில் பரிமாற சாப்பிட ஆரம்பித்தாள் வர்ஷினி. அவளைப் பார்க்கும் போது ஏதோ போல் ஆகியது கௌதமிக்கு.

'அவங்களுக்கும் பரிமாறி இருக்கலாம் இவரு' என நினைத்தவள் தன் பாட்டில் சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

"அப்பறம், என் நண்பனைப் பத்தி ஒரு ரெண்டு லைன் சொல்லட்டுமா கௌதமி? ரொம்ப இல்ல. ரொம்பவே நல்ல பையன். கொஞ்சம் முரட்டுத் தனம். சொடக்கிடற நேரத்துல கோபம் புசுபுசுனு ஏறிடும். சரியான கோபக் காரன். ஆனால் மனசளவுல இன்னுமே குழந்தை மாதிரி!"

"வர்ஷ்.."

"கொஞ்சம் வெயிட் பண்ணு விஜய். முழுசா சொல்லி முடிச்சிடறேன்.." ஏதோ பேச வந்த விஜயை இடையில் கை நீட்டித் தடுத்த வர்ஷினி, மீண்டும் கௌதமியின் புறமாக திரும்பினாள்.

"யாரு கூடவாவது கோச்சுக்கிட்டால் நான்லாம் அவங்களைப் பேசியே கொல்லுவேன். ஆனா இவன் பேசாம உம்முனு மூஞ்சை தூக்கி வைச்சுட்டே கொல்லுவான். சைலன்ட் கில்லர்னு நினைச்சுக் கோயேன்.. நினைச்சது எதுவா இருந்தாலும் உடனே கிடைச்சுடனும் இவனுக்கு. சொல்றது எதுவா இருந்தாலும் உடனே நடந்திடனும். யாரையும் அவனோட லைஃப்க்குள்ள அவ்ளோ ஈஸியா உள்நுழைய விட மாட்டான். ஒரு வாட்டி கையைப் பிடிச்சிட்டான்னா வாழ்நாள் பூரா விடவே மாட்டான்.."

'என் கையை ரெண்டு வாட்டி பிடிச்சு குலுக்கி இருக்காரு. ஆனா உடனே விட்டுட்டாரே!' என சோகமாக நினைத்த கௌதமி, அதை அப்படியே வெளியே சொல்லி விட, விஜய் நிமிர்ந்து வர்ஷினியை முறைத்தான்.

வர்ஷினிக்கு தலையை எங்காவது முட்டிக் கொள்ளலாம் போல் தோன்றியது கௌதமி கூறியதை கேட்டதும்!

"அய்யயோ! சட்டுனு நீ ஃபீல் ஆகிடாதமா கௌதமி. கையைப் பிடிச்சுக்கிட்டாங்கறது அவனுக்கு யாரையாவது பிடிச்சுப் போச்சுன்னானு அர்த்தம்.. அவனுக்கு யாரையாவது பிடிச்சுப் போச்சுன்னா எந்த சந்தர்ப்பத்துலயும் அவங்களோட கையை விடவே மாட்டான்னு சொல்ல வரேன். உனக்கு புரியுதா?"

"ஓஓ.. சரி சரி.." தலையை பூம் பூம் மாடு போல் ஆட்டி வைத்தாள் கௌதமி.

"ஆனாலும் உன் நிலைமை ரொம்ப கஷ்டம்டா.." என வாய்க்குள் முனகிய வர்ஷினி, விஜயை பரிதாபமாகப் பார்த்தாள். அதை புரிந்து கொண்ட விஜய், புரியாதது போல் உணவுத் தட்டில் தன்னைப் புகுத்திக் கொண்டான்.

"அப்பறம் கௌதமி.. நாளைல இருந்து விஜய் காலைலயே ஸ்டேஷன் போயிடுவான். அதுக்கு பின்னால நீ தனியா தான் இருக்கனும். என்ன பண்ண போற?"

"நானா? நான் என்ன பண்ணுறது அக்கா.. இங்க ஐடி ஆபீஸ் தேடி இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணனும். அப்போவாவது வேலைக்கு போகலாம் இல்லையா?" என்று கேட்டவளின் பார்வை விஜயை நோட்டமிட்டது. விடிந்தது முதலே அவன் தன்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லையே. இப்படியே சென்றால் நமக்கிடையில் எங்கே புரிதல் வரப் போகிறது என வருந்தினாள்.

"நீங்க என்ன சொல்லுறீங்க?" விஜயின் புறமாக திரும்பி தயக்கமாக கேட்க, இட்லியை வாயில் போட்டவன், "உனக்கு பிடிச்சதை பண்ணு!" என்று கூற, மலர்ந்த முகத்துடன் சரியென்று தலை அசைத்தாள் கௌதமி.

"நான் ஐடி கம்பெனிஸ்ல சான்ஸஸ் இருக்கானு தேடிப் பார்க்கிறேன் கௌதமி" என்றவளை பார்த்து சரியென்று தலை அசைத்தவள் சாப்பிட ஆரம்பித்து விட்டாள். யாருக்காகவும் சாப்பாட்டை விட்டுக் கொடுக்க மாட்டாள் அவள்.

சற்று நேரத்தில் வர்ஷினி இருவரிடமும் கூறிக்கொண்டு கிளம்பி விட, யோசனையுடன் சோபாக் குஷனை கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்த விஜயின் அருகில் வந்து தொப்பென்று அமர்ந்தாள் கௌதமி.

யோசனை கலைந்து அவளைப் பார்த்த விஜய், "உனக்கு கராத்தே தெரியுமா? இல்லாட்டி மார்ஷல் ஆர்ட்ஸ் ஏதாவது தெரியுமா?" என்று கேட்க, இல்லை என்பது போல் மறுப்பாக தலை அசைத்து இதழ் பிதுக்கினாள் கௌதமி.

"நீ மார்ஷல் ஆர்ட்ஸ் கத்துக்கறியா? இல்லேன்னா கராத்தே கிளாஸ்ல ஜோயின் ஆகிக்கறியா? இதுல எதையாவது தெரிஞ்சி வைச்சிருக்கணும் மா.. என்னை சுத்தி, நம்மல சுத்தி நிறைய ஆபத்துக்கள் வர வாய்ப்பிருக்கு இல்லையா?" என்று கேட்டவனுக்கு காலையில் வந்த மிரட்டல் அழைப்பும், அதில் கௌதமியை சார்ந்து பேசப்பட்ட பேச்சும் தான் நினைவில் வந்தது. தனியாளாய் இருந்திருந்தால் இதற்கு எல்லாம் பயந்திருக்கவே மாட்டான். ஆனால் முன்பு போல் அவன் இப்போது தனியாள் அல்லவே!

"என்னது நானா?" அதிர்ச்சியில் விழி விரித்தாள் கௌதமி. அவளின் பிளந்திருந்த வாய்க்குள் வெளிர் வெள்ளைப் பற்கள் தெரிந்தது அவனுக்கு.

"ஆமா நீதான்.." என்றபடி அவளின் தாடையில் ஆள்காட்டி விரலை வைத்து தூக்கி, அவளின் பிளந்திருந்த வாயை மூடி விட்டான். ரகசியப் பேழை இரு செவ்விதழ்களால் பூண்டிடப்பட்டது போல் எண்ணம் தோன்றியதும் தன் எண்ணப் போக்கை கண்டு தன்னையே திட்டிக் கொண்டான்.

"ஆனா நான் எப்படி.."

அவள் திணற, அவளது கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவன், "ப்ளீஸ் எனக்காக கத்துக்கோ இனியா." என்றான் கெஞ்சலாய்! அவனின் கெஞ்சலை விழி விரியப் பார்த்தவளுக்கு அவனின் 'இனியா' என்ற ஒற்றை அழைப்பு காதில் ஏறவில்லை.

கண்கள் சுருக்கி, "ப்ளீஸ்.." என்று கூற, அதற்கு பிறகும் மறுக்க மனம் வருமா என்ன அவளுக்கு? மனமேயின்றி, அவனின் 'எனக்காக!' என்ற வார்த்தைக்காக சரியென்று தலை அசைத்தாள்.

எந்த நம்பிக்கையில் 'எனக்காக' என்ற வார்த்தையை உபயோகித்தான் என்று அவனுக்கும் தான் புரியவில்லை. ஒருவேளை.. எனக்காக, தனக்கு ஒவ்வாத பாலையே பருகியவள் ஆயிற்றே! இதெல்லாம் பெரிய விடயமாயென்று நினைத்தானோ என்னவோ.. அவள் சரியென்று தலை அசைத்ததும் பூக்கூடையொன்று சொரிந்தது போல் இருந்தது அவன் தலை மேல்!

"தேங்க்ஸ்.." என்றவன் அவளின் கன்னங்களைப் பற்றி நெற்றியோடு நெற்றி முட்டினான். சிறு வயதில் தாயுடனும் இப்படித்தான் நெற்றி முட்டி விளையாடி இருப்பேன் என்ற சிந்தனையுடன் அவன் புன்னகைக்க, அவனது கண்களை நேருக்கு நேர் எதிர்க் கொள்ள திராணியற்று கண்களை இறுக மூடிக் கொண்டாள் கௌதமி.

அவளின் மூடிய கண்களை சில நொடிகள் பார்த்திருந்து விட்டு அவளை விட்டு விலகி அங்கிருந்து நகர்ந்தவன் 'எந்த உரிமையில் அவளுடன் நீ நெருங்கி உறவாட முயல்கிறாய்?' என்ற மனதின் கேள்விக்கு பதில் ஆராய முற்பட்டான்.

தொடரும்.
 
Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
ஏன்மா கௌதமி இப்புடிதான் மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு வெளில சொல்லுவியாமா.உன்னோட ஒரே சிரிப்பா இருக்கே🤣🤣🤣🤣😂😂😂😂

இன்சு க்கு இப்புடி ஒரு குழந்தை மனைவியா😤😤🥰

பாரேன் இனியானு எல்லாம் சொல்றான் விஜய்💜💜

வர்ஷ் ஒரு நல்ல தோழி❣️❣️

அதானே புடிக்காத பாலையே நீ குடுத்ததுக்காக குடிச்சவ.இதை உனக்காக செய்யமாட்டாளா🤍🤍💚
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
2,018
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️அடேங்கப்பா விஜய் என்கிற உராங்குட்டான் உள்ள இப்படி ஒரு பாசிடிவிட்டி யா 😲😲😲😲😲ஆத்தி ஆத்தி என்னம்மா silent ரொமான்ஸ் அதுல மனைவியை எப்படி கூப்பிடணுமுன்னு வேற ம்ம்ம்ம்ம் இனியா ம்ம்ம்ம்ம் சூப்பர்

வர்ஷா ஒரு நல்ல entertainment தோழி 😍😍😍😍😍
 
😍😍❤️❤️நன்றி சகி ❤️
 
நன்றி சகி ❤️❤️❤️❤️❤️
 
Solai aaru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2022
Messages
95

டெடி குடுத்து விளையாட விடுற குழந்தைக்கு, கல்யாணம் பண்ணி வைச்சா இப்பிடித்தான் பண்ணும், இதில அம்மணிக்கு லவ் ஒரு கேடு...
 
Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
286
ரொம்ப அப்பாவியா இருக்காளே.இவள அடப்பாவியா மாத்துவானா இன்சு😁
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
ரொம்ப அப்பாவியா இருக்காளே.இவள அடப்பாவியா மாத்துவானா இன்சு😁
ஹாஹா 😂😂 நல்ல ரைமிங்கு..
 
Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
646
கராத்தே மாஸ்டர் என்ன பாடுபடப் போகிறாரோ.அந்த ஜீவனுக்காக பாவப் படுகிறேன்.
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
வர்ஷினி 😊😊😊

என்ன இந்த பாப்பா இத்தனை தத்தியாக இருக்கின்றாள் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

வந்ததும் மிரட்டலா 😳😳😳 யாரடா அந்த வில்லன் 🤨🤨🤨
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
கெளதமியை வைச்சு மிரட்டுறனா யாராக இருக்கும் ஒருவேளை கண்மணிட வழி அவளோட குடும்பத்தை சேர்ந்த ஆளாக யாரும் இருக்குமோ? அதுவும் இவ்வளவு காலம் இல்லாமல் திடீரென்று? ஆனால் ஒரு விஷயம் உறுதி இவங்க இரண்டு பேரையும் பற்றி நல்லா தெரிஞ்ச ஆளாக தான் இருக்கும்
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கராத்தே மாஸ்டர் என்ன பாடுபடப் போகிறாரோ.அந்த ஜீவனுக்காக பாவப் படுகிறேன்.
😂😂
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
வர்ஷினி 😊😊😊

என்ன இந்த பாப்பா இத்தனை தத்தியாக இருக்கின்றாள் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

வந்ததும் மிரட்டலா 😳😳😳 யாரடா அந்த வில்லன் 🤨🤨🤨
விமர்சனத்துக்கு நன்றி சகி 💛💛💛
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கெளதமியை வைச்சு மிரட்டுறனா யாராக இருக்கும் ஒருவேளை கண்மணிட வழி அவளோட குடும்பத்தை சேர்ந்த ஆளாக யாரும் இருக்குமோ? அதுவும் இவ்வளவு காலம் இல்லாமல் திடீரென்று? ஆனால் ஒரு விஷயம் உறுதி இவங்க இரண்டு பேரையும் பற்றி நல்லா தெரிஞ்ச ஆளாக தான் இருக்கும்
இருக்கலாம் இருக்கலாம்.. விமர்சனத்துக்கு நன்றி சகி 💙
 
Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
கையை பிடிச்சிட்டு உடனே விட்டுட்டாரு... அத படிச்சிட்டு பக்குனு சிரிச்சிட்டேன்... 🤭😂

வர்ஷி சொன்னது போல... அவர் கொஞ்சம் பாவம் தான்... 😅🤭

என்ன உரிமை அஹ்... பொண்டாட்டி ன்ற உரிமை தான் ப்பா... 😍
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கையை பிடிச்சிட்டு உடனே விட்டுட்டாரு... அத படிச்சிட்டு பக்குனு சிரிச்சிட்டேன்... 🤭😂

வர்ஷி சொன்னது போல... அவர் கொஞ்சம் பாவம் தான்... 😅🤭

என்ன உரிமை அஹ்... பொண்டாட்டி ன்ற உரிமை தான் ப்பா... 😍
thanks sakii... ;) :love: ❣️
 
Top