• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 15)

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
இப்படியே நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து போயிருந்தது.

காலையில் ஸ்டேஷன் செல்லும் வழியில் கௌதமியை மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்றுவிக்கும் இடத்தில் இறக்கி விட்டு செல்லும் விஜய், மதிய உணவை மறந்து கடமையில் ஈடு பட்டு விடுவான். வீட்டுக்கு செல்லும் வழியில் கௌதமியை வீட்டில் இறக்கி விட்டு சென்று விடுவாள் வர்ஷினி.

வீட்டுக்கு வந்ததும் விஜய் காலையிலே சமைத்து விட்டு சென்றிருக்கும் உணவை சூடு காட்டி கொஞ்சமாக கொத்தி விட்டு அறைக்குள் அடைந்து கொள்வாள் கௌதமி. நேரமே போகாது அவளுக்கு.

ஆதர்யாவுடனோ, பழனியுடனோ அழைப்பை ஏற்படுத்தி மனக்கணக்கில் உரையாடி விட்டு நேரத்தை போக்குபவள் மீதி நேரங்களில் புத்தகமும் பேனையுமாய் திரிவாள்.

இல்லையெனில், யூடியூப்பை பார்த்து எதையாவது சமைக்க பழகுவாள். பெயர் கண்டு பிடிக்கப்படாத புத்தம் புது வகை உணவுகளை எல்லாம் சமைத்து அதை வேண்டா வெறுப்புடன் கொஞ்சமாக ருசித்துப் பார்ப்பவள் சுவை சுமாராக இருந்தால் மட்டும் இரவில் வேலை முடித்து விட்டு வரும் விஜயிடம் நீட்டுவாள்.

உயிர் பயத்துடன் அதை தொட்டு வாயில் வைத்துப் பார்ப்பவன் சுவை ரசிக்கும் படியாக இருந்தால் வெளிப்படையாகவே அவளைப் புகழ்ந்து விடுவான்.

மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சி பெற்று விட்டு வருபவள் கனவில் கார்த்திக்கிடன் சண்டை போடுகிறேன் என்ற பெயரில் ஓரிரு முறைகள் விஜயை உதைத்துத் தள்ளிய கதை வேறு! அப்போதெல்லாம் மாபெரும் தவறிழைத்து விட்டேனோ என நொந்து போய் அவளை முறைத்துத் தள்ளுவான் விஜய்.

அவனின் முறைப்பில் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு கட்டிலில் ஒரு மூலையில் படுத்துத் தூங்குபவள் காலை வரையில் தூக்கம் தொலைத்து, நாள் முழுவதும் வேலை செய்து விட்டுக் களைத்து படுத்துறங்கும் தன் மணவாளனை கன்னத்தில் கை குற்றி கொட்டக் கொட்ட விழித்து ரசிப்பாள்.

முன்பை விட மனதளவில் வெகுவாக நெருங்கிப் போயிருந்தனர் இருவரும்.

நன்றாகவே இருட்டி விட முன் ஸ்டேஷன் விட்டு வீட்டுக்கு வந்த விஜயின் கண்கள் முதலில் தேடியது என்னவோ கௌதமியைத் தான். வாசலில் மட்டுமே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

போதைப் பொருட் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களை அழகாக வலை விரித்துப் பிடித்தவன் அவர்களை கவனித்து விட்டு வீடு வந்திருந்தான். அவர்களை விரட்டிப் பிடித்ததில் காக்கி உடை மொத்தமும் வியர்வையில் நனைந்து போயிருந்தது.

உடையின் பட்டன்களை கழட்டி விட்டவாறு கௌதமியைத் தேடி அறைக்கு சென்ற விஜய், அறை விளக்கைக் கூட தட்டி விடாமல் கட்டிலின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தவளைக் கண்டு வேகமாக அவளருகில் விரைந்தான்.

அவளுக்கு என்னவோ ஏதோவென்று பதறியவன் விளக்கை ஒளிர விட்டு அவளின் நெற்றியை தொட்டுப் பார்த்தான். காய்ச்சலில் சுட்டுக் கொதித்தது அவளின் நெற்றி.

வேகமாக கையை இழுத்துக் கொண்ட விஜய், காக்கி சட்டையைக் கழட்டி ஒரு ஓரத்தில் வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தான். காலையில் சமைத்து விட்டுச் சென்றிருந்த உணவு வைத்த இடத்தில் வைத்தபடியே இருக்கக் கண்டதும், மதியம் அவள் சாப்பிடவில்லை என்பதைப் புரிந்து கொண்டு பற்களை அரைத்தான்.

சற்று நேரத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, அதில் துண்டை நனைத்தபடி அறைக்கு சென்றவன் அவளின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்து, அவளின் நெற்றியில் ஒற்றி எடுக்கத் தொடங்கினான். பல பேரை ஈவிரக்கம் இன்றி சுட்டுத் தள்ளி, இன்னும் பலரை அடித்துக் காயப்படுத்திய அவனின் வலுவேறிய கைகள் குளிர் காய்ச்சல் எடுத்தது போல் நடுங்கின.

"எ.. என்னை உங்க.. உங்களுக்கு பிடிக்காதா?" தூக்கத்தில் அவனின் கையைப் பிடித்து ஆட்டியபடி உளறினாள் கௌதமி. துண்டை அவளின் நெற்றியில் வைத்து அழுத்திப் பிடித்தவன் அவளை புருவம் நெறிய புரியாமல் நோக்கினான்.

"ப்.. ப்ளீஸ் சொல்லுங்க ஆதி..த்யா.. என்னை உங்களுக்கு பிடிக்காதா? நா..நான் எப்படி இருந்தா உங்களுக்கு பிடிக்கும்னு சொல்லுங்க. ப்.. ப்ளீஸ்.. நான் அப்டியே இருந்து.. இருந்திடறேன்.. எனக்கு நீங்க வேணும்.. உங்களை எனக்கு.. ஆதி.." தூக்கத்தில் வாய்க்கு வந்தபடி புலம்பியவள் அவனின் வயிற்றில் முகம் புதைத்தாள்.

அவள் உளறியதைக் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்த விஜய், ஸ்டேஷன் விட்டு வந்து இன்னும் பிரெஷப் ஆகாமல் அசுத்தமாக இருக்கிறேனே என நினைத்து அவளை தன்னிடமிருந்து விலக்கிப் படுக்க வைக்கும் போது தான், அவளின் கண்களில் கண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவளின் கண்ணீரைக் கண்டதும் அவனின் இதயத்தில் இரத்தம் வழிவது போல் வலியை உணர்ந்தான் விஜய்.

அவள் ஏன் தூக்கத்திலும் தன்னைப் பிடிக்கவில்லையா எனக் கேட்டு புலம்புகிறாள்? திடீரென்று என்னவாயிற்று! காலையில் துறுதுறுவென்று வாயாடித் திரிந்தவள் ஏன் திடீரென்று காய்ச்சலில் சுருண்டு விட்டாள் என பலவாறும் சிந்தித்தவன் அவளின் நெற்றியில் புறங்கை வைத்துப் பார்த்தான். இப்போது சூடு சற்றே தணிந்து இருந்தது.

அவளின் தலையை தூக்கி தலையணையில் கிடத்தியவன் குளித்து விட்டு வரலாமென எண்ணி அங்கிருந்து நகரப் போக,

"ப்ளீஸ்.. எங்கயும் போகாதீங்க.." என முனகியபடி அவனது கைகளைப் பிடித்து, மீண்டும் அவனது மடியிலே சாய்ந்து கொண்டாள் கௌதமி.

அவனது உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு. இருவரும் மனதளவும் மிகவும் நெருங்கிப் போயிருந்தனர் தான் என்றாலும் அதை வெளியில் காட்டிக் கொண்டதில்லை. இருவரும் நண்பர்கள் என்ற கோட்டைத் தாண்டி போகவில்லை.

"இனியாம்மா.." அவளது கன்னம் தட்டினான் விஜய். புரண்டு மறுபுறமாக படுத்துக் கொண்டவள், "ஐ லவ் யூ.. பப்லு.." என புலம்பித் தள்ளியதை அவன் செவியுறவில்லை.

மெதுவாக அவளை விட்டு விலகி குளியலறைக்குள் புகுந்தவள் குளித்து விட்டு வெளியே வரும் போது, தூக்கம் கலைந்து அங்குமிங்கும் புரண்டு கொண்டிருந்தாள் கௌதமி.

"திடீர்னு என்னாச்சுமா?" முகம் துடைத்த துண்டை தோளில் போட்டுக் கொண்டு அவளருகில் வந்தான் விஜய். வேகமாக மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டவள் அவன் அறையை விட்டு வெளியேறும் வரையே அவன் புறமாக திரும்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்.

அவளது இரண்டு மூன்று முறைகள் தட்டி உலுக்கிப் பார்த்த விஜய், அவளின் வித்தியாசமான நடவடிக்கைகளை புரியாமல் பார்த்து விட்டு அறையை விட்டு வெளியேறினான்.

வேக வேகமாக தோசை ஊற்றுவதற்காக மாவை தயார் செய்தவன் டிக்காஷன் தூக்கலாக போட்டு காஃபி போட்டு, அதை எடுத்துகொண்டு அறைக்குள் நுழைந்தான். அவள் இன்னுமே, அவன் வெளியேறும் போது எப்படிப் பாத்திருந்தாளோ அதைப் போல் தான் படுத்திருந்தாள்.

"காஃபி.."

மேஜை மேல் வைத்து விட்டு மேஜையோடு சேர்த்துப் போட்டிருந்த இருக்கையில் இழுத்து அமர்ந்து காஃபியை நிதானமாக அருந்தத் தொடங்கினான். அவனை மனமோ கௌதமியின் இந்த சிறு பிள்ளைத் தனமான கோபத்துக்கான காரணம் என்னவாய் இருக்கும் என்ற யோசனையில் மூழ்கிப் போய் விட்டது.

வெற்றுக் கப்பை எடுத்துக் கொண்டு எழுந்து நின்றவன் தொண்டையை செருமி, 'நான் வெளியே செல்கிறேன்' என்பதை கூறாமல் கூறி விட்டு அங்கிருந்து வெளியேறி விட்டான்.

பசி வயிற்றைக் கிள்ளியதால் வேகமாக எழுந்து நின்று காஃபியை குடித்து முடித்த கௌதமி, மீண்டும் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்ள, சற்று நேரத்தில் கையில் தோசைத் தட்டுடன் அறைக்குள் வந்த விஜய்,

"ஏன் லன்ச் சாப்பிடல?" சற்று அதட்டலான குரலில் கேட்டான். அவள் சாப்பிடாமல் பட்டினியில் கிடந்து இருக்கிறாளே எனக் கோபமாய் வந்தது அவனுக்கு.

அவள் பதில் கூறவுமில்லை. தலை தூக்கி அவனைப் பார்க்கவுமில்லை. விஜய்க்கு சிரிப்பே வந்து விட்டது. எதற்கு இந்த சிறு பிள்ளையாட்டாம் என நினைத்தபடி சற்று முன் அமர்ந்திருந்த அதே இருக்கையில் அமர்ந்து கொண்ட விஜய்

"இனியா.." என உரத்த குரலில் அழைத்தான். அவனது குரலில் பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவளின் கண்கள் அழுது அழுது சிவந்து போயிருந்தது.

"ஆல்ரெடி மதியம் சாப்பிடல. பீவர்ல சோர்ந்து போய் இருக்க.. இப்போ எதுக்கு அழறே.." மீண்டும் அதட்டியவன் தோசையை பீய்த்து அவளது வாயருகே நீட்டினான். வேண்டாம் என முகத்தை திருப்பிக் கொண்டாள் கௌதமி.

அவளை முறைத்துப் பார்த்தவன், "உன்னை சாப்பிடுன்னு சொன்னேன்.." குரலை உயர்த்தி கோபமாகக் கூற, வாயை திறந்து உணவை வாங்கிக் கொண்டவள் அதை மென்று விழுங்காமல் திருதிருவென்று விழித்து நின்றாள். தோசை நிரம்பிய கன்னங்கள் பப்லிமாஸ் போன்று உப்பி, அவளை மேலும் குழந்தையாய் காட்டியது விஜய்க்கு.

அவளை குரலுயர்த்தி அதட்டக் கூட மனம் வரவில்லை விஜய்க்கு! அவனைப் பொறுத்த வரைக்கும் அவள் ஒரு வளர்ந்த குழந்தை. அவளை தன் உள்ளங்கைகளில் தாங்கி, கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவனது ஆசை. அவளது நெருக்கத்தில் ஒரு வித மயக்கம்.. புதுவித உணர்வொன்று தாக்கிச் சென்று, அவனது மனதை அவள்பால் சாய்த்து விடும்.

அந்த உணர்வு தான் காதல் என்பதை அவன் உணர்ந்து கொண்டானா என்று கேட்டால், அது தான் இல்லை. கௌதமி என் தோழி! இதைத்தான் அடிக்கடி கூறுவான், வர்ஷினியிடமும் கூட!

"சீக்கிரம் சாப்பிடு.." அவன் உரத்த குரலில் அதட்டியதும்,

"கொடுமை பண்றீங்க நீங்க.." அவனுக்கு கேட்காத குரலில் முனகியபடி மெல்லாமலே உணவை விழுங்கிய கௌதமி, "எனக்கு பசியில்லைங்க.." என்று கூறத் தான் வாய் திறந்தாள். ஆனால் வாயிலிருந்து காற்றைத் தவிர வார்த்தைகளை எதுவும் வெளி வரவில்லை.

அதட்டிப் பிரட்டி இடையிடையே 'வேண்டாம்' என மறுத்தவளை சாப்பிட வைத்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.

'இவருக்கு என்னைப் பிடிக்காதுன்னா இவ்ளோ அக்கறை காட்டுவாரா? அவருக்கும் என்னை பிடிச்சுருக்கு. நான் மதியம் சாப்பிடலைனு எவ்ளோ கோப படறாரு. பீவர்னு சொன்னதும் இவ்ளோ அன்போட பாத்துக்குறாரு. அப்பறம் எப்படி இவருக்கு என்னைப் பிடிக்கலைனு சொல்லுவேன் நான்? இதெல்லாம் வெறும் கடமைக்காக பண்றது போலவா இருக்கு?' என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, இரண்டே இரண்டு தோசைகளை நாலாக மடித்து விழுங்கி விட்டு அறைக்குள் நுழைந்திருந்தான் விஜய ஆதித்யன்.

"இன்னொரு வாட்டி மதியம் சாப்பிடாம இருக்காத.. எப்பவும் இப்டியே சொல்லிட்டு இருக்க மாட்டேன். நேரத்துக்கு சாப்பிடணும்.." என கடுப்புடன் கூறியபடி அவளருகில் வந்தவன் அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

காய்ச்சல் இருந்த இடமே தெரியாமல் பறந்து போய் விட்டிருந்தது. உணவையும் மறுத்து விட்டு, விடாமல் அழுத்திருப்பதால் தான் இந்த காய்ச்சல் என்று புரிந்ததும் அவளை தீயென முறைத்தான்.

"சரி சொல்லு. எதுக்கு அழுத?"

"நானா.. நான்.. நான் எப்போ அழுதேன்? நான் நல்லாத்தான் இருக்கேன்ங்.." திக்கித் திணறியவளின் முகத்தைத் தூக்கி அவளின் கண்களைப் பார்த்தான் விஜய். அவனது கண்களை சந்தித்த புறகும் பொய் உரைக்க முடியவில்லை அவளால்.

"உங்களுக்கு என்னைப் புடிக்காதா?"

தன்னையும் மீறி பட்டென்று கேட்டு விட்டவள் கண்கள் கலங்க அவனது முகம் பார்த்தாள். தொண்டைக் குழியில் நீர் வற்றி, கண்களில் கண்ணீர் நிரம்பியது. அவ்வப்போது எச்சிலை விழுங்கி கரகரத்த தொண்டையை ஈரமாக்கிக் கொண்டாள்.

"அப்டினு யாருமா சொன்னது?"

"ப்ளீஸ் சொல்லுங்க.. உங்களுக்கு என்னை புடிக்காதா? நான் உங்களுக்கு முக்கியமான ஒருத்தங்க இல்லையா.. " தவிப்புடன் கேட்டா கௌதமி.

'உன்னை தவிர வேறு யாருமே எனக்கு முக்கியமில்லை இனியா' என அவன் கூற வேண்டுமென அவள் எதிர் பார்க்கவில்லை. சாதாரணமாக 'நீயும் முக்கியமானவள் தான்' எனக் கூறினாலே போதும் என்று தோன்றியது.

"இங்க பாருமா. நீ எதை எதையோ நினைச்சு குழம்பி போயிருக்க.. முதல்ல நீ இப்டி தூங்கி ரெஸ்ட் எடு.. " என்றவனைப் பார்த்து முடியாது என்பது போல் தலை அசைத்தவள்,

"ப்ளீஸ் பதில் சொல்லுங்க. உங்களுக்கு நான் எப்படி இருந்தா புடிக்கும்? என்னை உங்களுக்கு புடிக்காதா? ப்ளீஸ் சொல்லுங்க.. " என கெஞ்சலாய் கூறினாள்.

"உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும் இனியா.."

அவன் கூறியது அவளது காதுகளில் தேன் பாய்ச்சிய உணர்வைக் கொடுத்தது. நாளை வர்ஷினியை சந்தித்தால் விஜய் கூறியதை அவளிடமும் கூறி விட வேண்டும் என நினைத்துப் பெருமூச்சு விட்டவளுக்கு இன்று மாலையில் வர்ஷினி தன்னிடம் பேசிக் கொண்டிருந்த தருணம் கண்முன் விரிந்தது.

தொடரும்.
 
Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
சோதனை எலியாக்குனதில்லாம கத்துக்க சொன்னவன்கிட்டயே உன் வேலையை காட்றா பாரு இனியா🤣🤣🤣

ஒருவழியா முக்கியம்னு சொல்லிட்டான்.இந்த வளர்ந்த பாப்பா எப்போ அவ காதலை சொல்லுவா.ஒருவேளை கடைசி எபிலதான் சொல்லுவாளா🤫🤔🤔

வர்ஷீ மேடம் என்ன சொல்லி வைச்சாங்களோ😤😤😤
 
😁😁 நன்றி சகி.. ரொம்ப நன்றி ❤️❤️❤️
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
2,018
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️
அடடடடா நம்ம கௌதமி பிள்ளைக்கு திடீர்னு காய்ச்சல் வருது திடீர்னு போயிடுது ஒரே மேஜிக் காய்ச்சல் தான் 😀😀😀😀😀😀😀😀😀

இந்த வர்ஷா பிள்ளை கௌதமி கிட்ட என்னமோ ஏடா கூடமா சொல்லிருச்சு போல அதுதான் கௌதமுக்கு ஒரே பீலிங் ஆகி காய்ச்சல் கண்டு தன்னவனின் கவனிப்பில் காணாம போய்டுச்சு 😊😊😊😊😊😊😊
அடேய் விஜய் பையா ஏன்டா மனசுலயே affection வச்சுக்கிட்டு மருகுற உன்ன மாதிரி தான் எல்லா போலீஸ் ஆஃபீஸ்ர்ஸ் யும் கல்யாணம் பண்ணுனா துணைக்கு ஆபத்துன்னு இருக்காங்களா அய்யோ அய்யோ 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
 
😍❤❤❤ நன்றி சகி
 
Sri pavithra

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 17, 2022
Messages
32

Gowthami baby ku ennachu 😳😳😳
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
தெளிந்த நீரோடையில் எதற்கு வர்ஷினி கல்லெறிந்தாளாம் 😡😡😡😡
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
வர்ஷினியை நல்லவ னு நினைச்சால் அவ சகுனி வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டாளோ? 😠
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
தெளிந்த நீரோடையில் எதற்கு வர்ஷினி கல்லெறிந்தாளாம் 😡😡😡😡
எனக்கும் தெரியலையே 😣😣
 
Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
Actually... ஒரு rude பையன் கிட்ட இந்த அப்பாவி மாட்டிக்கிச்சே னு நெனச்சேன்... ஆனா இல்லை... அந்த அப்பாவி கிட்ட இவர் தான் மாட்டிக்கிட்டாரு... 🤭🤭😂

வர்ஷினி தானா....அவங்க இப்படி அழுது பீல் பண்ண காரணம்.. ஏன்... 🙄
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
Actually... ஒரு rude பையன் கிட்ட இந்த அப்பாவி மாட்டிக்கிச்சே னு நெனச்சேன்... ஆனா இல்லை... அந்த அப்பாவி கிட்ட இவர் தான் மாட்டிக்கிட்டாரு... 🤭🤭😂

வர்ஷினி தானா....அவங்க இப்படி அழுது பீல் பண்ண காரணம்.. ஏன்... 🙄
aama aama sagii :ROFLMAO:😂😂 enna panradhu namma hero pavam than😂😂
 
Top