• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 23)

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
'எனக்கு உங்க எல்லார்கூடவும் கடைசி வரை இருக்க பாக்கியம் இல்ல யமுனா. எனக்குள்ள ஏதோ வித்தியாசத்தை உணர்ந்து டாக்டரை பார்க்க போனேன். வோமிட் பண்ணும் போது, இருமும் போதுலாம் பிளட் வருது. பிளட் கேன்சர்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.

கிரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருக்கேனாம். காப்பாத்த எந்த வழியும் இல்லைனும் சொல்லிட்டாங்க. நான் இனி உயிரோட இருந்தாலும் உங்களுக்கு தான் கஷ்டம். நோய்ல அவதிப்பட்டு நான் இறந்து போய்டறதை விட இப்போ போறேன் யமுனா.. தினம் தினம் என்னை நினைச்சே நான் வருத்தப்பட்டு வாழுற வாழ்க்கை எனக்கு வேணாம்.

விஜய்யை நல்லா பார்த்துக்க.. அவனுக்கு நானும் நீயும் ஒன்னுதான். சின்ன வயசுல அவ உன் சித்தின்னு சொல்லி கொடுத்தாலும் அம்மா அம்மான்னு அவன் உன்னை கூப்பிட காரணம், இறைவன் என்னை அவன் கூட கடைசி வரைக்கும் இருக்க வைக்க விரும்பாதது தான்னு இப்போ புரியுதும்மா.. அவனுக்கு நீயே அம்மாவா மாறிடு. அவனுக்கு நீன்னா உயிரு.

இந்த நேரத்துலயும் சுயநலமா யோசிக்கிறேன்னு நினைக்காதம்மா.. அவரையும் பார்த்துக்க. விஜய்க்காகவாவது அவருக்கு ரெண்டாந்தாரமா ஆகிடும்மா.. உன்னை வற்புறுத்தலை. உன் மனசு சொல்றதை மட்டும் பண்ணு. உன் அத்தான் ரொம்ப நல்லவரு. நான் உங்க எல்லாரையும் விட்டுப் போறேன்..'

யமுனா கையில் திணித்த மஞ்சள் வண்ண காகிதத்தை வாசித்த பிறகு தான், அது தன் தாய் அலமேலுவின் கடிதம் என்று புரிந்தது விஜய்க்கு. அதில் இருந்ததை எல்லாம் வாசித்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த விடயம் அவனுக்கு முற்றிலும் புதிதல்லவா..

தாயின் இறப்புக்கு ஏதோவொரு விதத்தில் தந்தை தான் காரணம் என எண்ணி இருந்தவனின் எண்ணத்தை முழுவதுமாக முறியடிப்பது போல் இருந்தது இந்தக் கடிதம். கடிதத்தோடு சேர்த்து ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்டும் மடித்த வாகிலே இருந்தது. மடித்து வைத்திருந்த அச்சில் அந்த கடிதம் நாலாய் வேறாகியே விட்டுருந்தது. அதில் அலமேலுவுக்கு பிளட் கேன்சர் என்ற உண்மை உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.

காலத்தோடு சேர்த்து அந்தக் கடிதமும், மெடிக்கல் ரிப்போர்ட்டும் கூட வெள்ளை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்துக்கு மாறி, காகிதத்தின் சில இடங்கள் எழுத்துக்கள் கூட தெரியாத அளவுக்கு சிதைந்து போயிருந்தது.

அதிர்ச்சியில் உறைந்து நின்றவனின் கை கண்ணீருடன் அந்த காகிதத்தை வருடிக் கொடுத்தது.

"இது.. இது உங்கம்மா கைப்பட எழுதின கடிதம். அவ இறந்து இரண்டு மாசம் கழிச்சு அவளோட கபோர்ட்டுல இருந்து என் கைக்கு கிடைச்சுது.

இப்போ தான் அக்காவோட பிரிவுல கொஞ்சம் கவலை ஆறி இருக்காரு.. இந்த உண்மை என்னோடயே புதைஞ்சு போகட்டும்னு நினைச்சு இந்த கடித விஷயத்தை உங்கப்பா கிட்டருந்து கூட மறைச்சு வைச்சு, அக்காவோட ஆசை இதுல இருக்குங்கற ஒரே காரணத்துக்காக இதை அவரோட கையில கொடுத்தேன். அதுவும் நாலைந்து மாசம் கழிச்சு!

உங்கம்மா சொன்ன ஒரே காரணத்துக்காக தான் நானும் அவரும் கலியாணம் பண்ணிக்கிட்டேன். இருந்தும் மனசு தாங்காம தினம் தினம் உங்கம்மா கிட்ட மன்னிப்பு கேட்டேன். ஏன் தெரியுமா? அவளோட இடத்துல நான் குந்திட்டு இருக்கேன்ல.. அதுக்காக!..

அலமு உன்னோட பெரிம்மா இல்ல. அம்மா தான்னு இவரு உன்கிட்ட ஆயிரம் வாட்டி சொல்லணும்னு ட்ரை பண்ணி இருப்பாரு. அவரோட காதல் மனைவிக்கு பிறந்த புள்ளை நீ.. உன்மேல உயிரையே வைச்சிருக்காரு. உண்மையை மறைக்கணும்னு நினைக்கல அவரு.. அப்பறம் எதுக்கு என்னோட அம்மாவையே எனக்கு பெரிம்மானு சொன்னாருன்னு யோசிக்கிறியா..

நீங்க உண்மையை சொல்லிட்டிங்கன்னா நான் டிவோர்ஸ் வாங்கிட்டு போய்டுவேன். விஜய் என்னை சித்தியா பார்க்கறதை விட நான் உங்க எல்லாரையும் விட்டு தள்ளிப் போய் தனியா வாழறதே சுகம்னு சொல்லி உங்கப்பாவை மிரட்டி அவரோட வாயை அடைச்சதே நான்தான். அதனால தான் உண்மையை சொல்ல முடியாம தத்தளிச்சு அவரும் உண்மையை உன்கிட்ட இருந்து மறைச்சது.

நீ போனா போடினு அவருக்கு என்னை அம்போனு விட்டுட்டு உன்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம் தான். ஆனால் அதையும் விரும்பல அவரு. நான் போய்ட்டேன்னா விஜய் தனியாகிடுவான். அவனுக்கு அம்மாப் பாசம் கிடைக்காம போயிடும்னு பயந்தாரு.

இப்போ சொல்லு. தப்புலாம் என் மேல தானே? அப்பறம் எதுக்கு அவருக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கற.." என்று விஜய்யைப் பார்த்து மூச்சிறைக்கப் பேசியவள்

"ஐம் சாரிங்க. இந்த கடிதத்தை, அவனாவே உங்களை மன்னிச்சு உங்க கிட்ட பேசுற வரைக்கும் அவன் கையில ஒப்படைக்க கூடாதுன்னு என்கிட்டே சத்தியம் வாங்கி இருந்திங்க.. அவன் உங்களை யாரோட உதவியும் இல்லாம பரிபூரணமா நம்பணும்னு ஆசைப்பட்டிங்க. ஆனா அது எதுவுமே நடக்கல.

இவ்ளோ நாள் சத்தியத்தை உடைக்காம அமைதியா தான் இருந்தேன். இப்போ உங்க உடல்நிலை தெரிஞ்சதுக்கு அப்பறமும் அதை மறைச்சி, இவன் வீம்போட உங்களை நெருங்காமலே இருந்துடுவான்னு பயம். அதான் சொல்லிட்டேன். ஐம் சாரி..

மொத்த தண்டனையும் நான் வாங்கிக்கறேன் தப்பில்லாத நீங்க மட்டுமாவது சந்தோசமா இருங்க.." என்று கூறினாள்.

விடாமல் பேசியதில் மூச்சிறைத்தது அவளுக்கு. தொண்டைக் குழியில் நீர் வற்றி இருமத் தொடங்கி விட்டாள்.

பிரமை பிடித்தது போல் நின்றிருந்த விஜய் மேஜை மேல் இருந்த ஆறிப் போன தேநீரை எடுத்து அவளிடம் தயக்கமாக நீட்டினான். ஆவி பறக்க பறக்க சூடாக இல்லை என்றாலும், வறண்ட தொண்டையை ஈரளிப்பாக்கவாவது உதவுமே என்று நினைத்தான்.

அவனின் கையைத் தட்டி விட்டவள், "இது என் அம்மாவோட கை எழுத்து தானானு ஏண்டா இன்னுமே கேட்கல.. இதெல்லாம் வெறும் செட்டப்புன்னு சொல்லுவனு எதிர்பார்த்தேன்.." என்று ஆத்திரத்துடன் கூற, அவளை அடிபட்ட பார்வை பார்த்தான் விஜய். அவனின் கையிலிருந்து தட்டப்பட்ட தேநீர் கப் காலடியில் கொட்டிக் கிடந்தது.

தந்தை குற்றவாளி என நினைத்திருந்த தன் மேலே நொடியில் வெறுப்பு பரவி விட்டது அவனுக்குள்.

எதிராளிக்கு தண்டனை கொடுக்க முன் அவன் செய்த தவறு விசாரிக்கப்பட்டு, தவறு அவன் புறம் தானா என்பதை ஆராய்ந்து, தவறு அவன் புறமே இருந்தாலும் அவன் தவறிழைத்ததற்கான சூழ்நிலை என்ன.. அவன் பக்க நியாயம் என்னவென்பதைத் தேடியறிந்து, பிறகு தான் தண்டனை கொடுக்கப் படுகிறது.

தன் விவேகமும் அறிவும் தேவையான சந்தர்ப்பத்தில் எங்கே சென்று விட்டது? ஒருநாளாவது தந்தையின் புறத்தில் ஏதாவது ஒரு நியாயம் இருக்குமோ என்று சிந்திக்கவில்லையே என தன்னையே நொந்து கொண்டான்.

"விஜய்.." என அழைத்து, அவனை சிந்தனை உலகிலிருந்து வெளியே இழுத்து வந்த செல்வநாயகம், அவனை தன்னருகே வருமாறு கை நீட்டினார். திடம் பூண்ட ஆண் காளையவனின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

என்ன மாதிரியான அன்பிது எனப் புரியவில்லை அவனுக்கு. ஒருநாள், இரண்டு நாள் தண்டனை அல்ல.. ஒரு வருட, இரண்டு வருடத் தண்டனையல்ல.. கிட்டத்தட்ட 12,13 வருடங்கள்.. இவ்வளவு நாள் அவரைப் புரிந்து கொள்ளாமல் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தே, அந்த ஒற்றைப் பார்வையின் மூலமே அவரைக் கொன்று விட்டவன் மீது இன்னுமே பாசம் குறையாமல் கட்டியணைக்க கை நீட்டி அழைக்கிறாரே என நினைத்தான்.

ஓடிச் சென்று அவரின் நீட்டிய கரத்தைப் பற்றி கண்ணோடு ஒற்றிக் கொள்ள வேண்டும் என ஆர்வம் துளிர்த்தாலும் அதற்கு தனக்கு தகுதியே இல்லை என தன்னையே தாழ்த்திக் கொண்டு பின் வாங்கினான் விஜய்.

அதற்கு மேலும் அங்கிருக்க மனமில்லை. வேகமாக அறையை விட்டு வெளியேறியவன் நேராக வந்து புகுந்தது அவனுடைய அறைக்குள் தான்.

"ஐம் சாரிப்பா.." என வாய் விட்டுப் புலம்பியவன் கட்டிலில் முடங்கி அமர்ந்து உடைந்து அழ ஆரம்பித்தான்.

கண்ணீரை மலையளவு வெறுத்தான். கண்ணீர் தான் தன் முதல் எதிரி என நினைத்துத் தான் பாறையாய் தன்னை செதுக்கி, உணர்வுகளற்ற ஜடமாய் வாழ பழகிக் கொண்டது. பல வருடங்கள் கழித்து இன்று மனக்கவலை தீர அழுகிறான் ஆடவன்..

எவ்வளவு நேரம் யோசனையின் பிடியில் அப்படியே அமர்ந்திருந்தானோ, கள்ளத்தனமாக அறைக் கதவு திறக்கப்படும் சத்தத்தில் சட்டென்று தலை தூக்கிப் பார்த்தவன், ஒரு கண்ணை மாத்திரம் அறைக்குள் நுழைத்து திருட்டுத்தனமாய் உள்ளே எட்டிப் பார்த்த கௌதமியை சரியாகவே கண்டு கொண்டான்.

சிரிக்கத் தான் நினைத்தான். ஆனால் முடியவில்லை அவனால். மனம் மிகவும் வாட்டமுற்றிருந்தது.

"என்னங்க.. என்னாச்சுங்க.."

அவனின் வாடிய முகத்தைக் கண்டதும் அறைக்குள் நுழையலாமா வேண்டாமா என்ற யோசனையில் மூழ்கி இருந்தவள் பதறித் துடித்துக் கொண்டு அவனருகில் ஓடி வர, அது வரையே காத்திருந்தவன் போல் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் விஜய்.

இப்போது அவளின் அணைப்பும் அருகாமையும் தான் பெரிதளவில் தேவைப்பட்டது அவனுக்கு. அவளின் அணைப்பில் மனக் கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீர்வதை உணர்ந்தவனின் அணைப்பு மேலும் மேலும் இறுகிக் கொண்டே சென்றது.

பெருமூச்சு விட்டபடி அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து கண்களை மூடிக் கொண்டான். வாழ்நாள் முழுவதும் இப்படியே இருந்தால் அடிக்கடி ஒர்க் டென்ஷன் காரணமாக உபயோகிக்க நேரிடும் பிபி மாத்திரைகள் தனக்கு தேவையே இல்லை என்று தோன்றியது அவனுக்கு.

வலியில் நெளிந்த கௌதமி, அவனின் கலக்கமாக முகம் கண்டு தன் வலி மறந்து தயக்கத்துடன் அவனின் தலை கோதி விட்டாள். அவளின் தலை கோதலில் ஏழேழு சொர்க்கங்களை கடந்து வந்தான் காளை.

"என்னாச்சுங்க.."

அவள் கேட்டது தான் தாமதம், அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த புலம்பல்களை ஆரம்பித்து நடந்ததை எல்லாம் மடை திறந்த வெள்ளமாய் கொட்ட ஆரம்பித்து விட்டான் ஒரு சிறு குழந்தையாய்.

அவனுக்கே இது புதுவித அனுபவமாய் தான் தெரிந்தது. கவலைகளை தனக்குள்ளே பூட்டி வைத்து வெதும்பி சாவதை விட, மனதுக்கு நெருங்கிய ஒரு உறவின் மடியில் தலை சாய்த்து தன் கவலைகளை பகிர்ந்து கொள்வதால் மனப்பாரங்கள் தீரும் என்பதை இன்று தான் அறிந்து கொண்டான்.

பப்புவிடம் மணிக்கணக்கில் பேசி தன் கவலைகளை தீர்த்துக் கொள்வதை போல், தன்னிடம் அவனின் கவலைகள் யாவையும் பகிர்ந்து கொள்ளட்டும் என எண்ணினாள் போலும், தலை கோதலை நிறுத்தாமல் அவன் கூறுவதை எல்லாம் தலை அசைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள் அவளும்.

அவளின் கழுத்து வளைவில் புதைந்திருந்த அவனின் தலை எப்போது அவளின் மடியில் சாய்ந்ததென்று இருவருக்குமே தெரியவில்லை. புலம்பியபடியே அவளைக் கட்டிலில் அமர்த்தி அவளின் மடியில் தலை சாய்த்து கண்மூடி இருந்தான் விஜய்.

மனம் சற்று லேசாகியதும் தலை வருடிக் கொடுத்த கௌதமியின் கை விரல் நுனிகளில் சிறு முத்தங்களைப் பதித்தவன் அவளின் கையை தன் கைக்குள் சிறைப்படுத்தியபடி தன்னை மறந்து உறங்கி விட்டான்.

எவ்வளவு நேரம் உறங்கினானோ, தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் போது நடுவானில் கதிரோன் உஷ்ணம் பரப்ப ஆரம்பித்து விட்டிருந்தான். கண்களை சுழற்றி மனையாளைத் தேடின அவனின் கண்கள்.

அவள் இல்லை என்றானதும் சலிப்புடன் எழுந்தமர்ந்தவன் முகத்தைக் குளிர்ந்த நீரால் அடித்துக் கழுவிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

ஹாலில் ஆதர்யா மிதுனை மடியில் கிடத்தி ஃபோன் பார்த்துக் கொண்டிருக்க, சாதுர்யாவின் விரித்து விட்டிருந்த முடியை பின்னலிட்டுக் கொண்டிருந்தாள் யமுனா.

"விஜிண்ணா.. " என்ற சாதுர்யாவின் விழிப்பில் தலை தூக்கிப் பார்த்த யமுனா, விஜய்யின் பார்வை தன் மீது படிவதைக் கண்டதும் பின்னலிட்டுக் கொண்டிருந்த கூந்தலை பாதியிலே விட்டு விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்.

சுருக்கென்று வலித்தது விஜய ஆதித்யனுக்கு. வலி முகத்தில் பிரதிபலிக்காதவாறு கண்களை சிமிட்டி கண்களை சுழற்றியவன், "அவ எங்க?" என்று இருவரிடமும் பொதுப் படையாய் கேட்க, அந்த 'அவ' யார் என்று அறிந்தாலும்,

"யாரைக் கேட்கற அண்ணா?" என சிறு சிரிப்புடன் கேட்டாள் ஆதர்யா.

அவளின் குரலில் இருந்த கிண்டலை அறியாதாவனா அவன்?

அவளை லேசாய் முறைத்தவன், "உங்க அண்ணி.." என்று இழுக்க,

"அண்ணியா.. அண்ணி எதுக்குண்ணா? வீட்டுல இருக்க அலுப்படிக்குதுனு சொல்லிட்டே இருந்தா.. கண்டிப்பா பப்புவைப் பார்க்க அவ வீட்டுக்கு ஓடி இருப்பா.." கேலியில் ஆரம்பித்தவள் விஜய்யின் முறைப்பு தாளாமல் உண்மையை கூறி விட்டாள்.

சரியென்று தலை அசைத்தவன் சமையலறையை எட்டிப் பார்க்க, சமையலறைக்குள் இருந்து அவனை புன்னகையுடன் பார்த்திருந்த யமுனா வேகமாக சுவருக்கு பின்னால் மறைந்து கொண்டாள். ஆனால் அவள் மறைவதை விஜய்யின் போலீஸ் கண்கள் சரியாகவே கண்டு கொண்டதை அவள் அறியவில்லை.

நமட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவன் வீட்டை விட்டு வெளியேறி நடக்க,

"எங்க போறீங்க விஜிண்ணா?" என்று கத்திக் கேட்டாள் சாதுர்யா.

அவளின் தொடையில் அழுந்தக் கிள்ளிய ஆது, "ஹே சும்மாருடி. அவரு கௌதமியைத் தேடி பழனி அங்கிள் வீட்டுக்கு போறாரு போல.." என்று அவளது காதில் கிசுகிசுக்க,

"உண்மையாவா?" அவள் கிள்ளிய இடத்தை தேய்த்து விட்டபடி கண்களை அகல விரித்துக் கேட்டாள் சாதுர்யா. அண்ணன் அவ்வளவு சீக்கிரம் மாறி இருப்பான் என்பதை சற்றும் நம்பத் தயாரில்லை அவள்.

"ஆமாடி. அவளை யாருக்குத் தான் புடிக்காது? அண்ணா கௌதமியைப் பார்க்கற பார்வைலயே தெரியுது, அவரு அவளை ரொம்ப லவ் பண்றாருனு. கண்ணை கசக்கிட்டு ரூமை விட்டு வெளியே வந்து அவர் கேட்ட முதல் கேள்வியே, அவ எங்க.. இன்னுமேவா புரியல உனக்கு?"

புரிந்தது என்பது போல் அசட்டுச் சிரிப்புடன் தலை அசைத்த சாதுர்யா, கேட்டை திறந்து கொண்டு அங்கிருந்து நடந்து மறைந்தவனை புன்னகையுடன் வெறித்தாள்.

கார்த்திக்கின் இடத்தை முழுவதுமாக இல்லை என்றாலும், ஓரளவாவது நிரப்பி தன் உள்மன ஏக்கங்களை இவனாவது தீர்த்து வைக்கக் கூடாதா என கார்த்திக்கின் அன்புக்காக ஏங்கித் தவித்த அவளின் மனம், விஜய்யை நினைத்துப் பெருமூச்சு விட்டது.

வாசல் மணி அடிக்கப்பட்டதும் மகளுக்காக பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்த பழனி வாசலுக்கு ஓடி வந்தார். மகளைக் கண்ட சந்தோசத்தில் மனம் பூரித்து இருந்தவர் முதன் முறையாக் வாசல் வரை வந்திருந்த மருமகனைக் கண்டு மேலும் சந்தோசமடைந்து அவனை வரவேற்று, உபசரித்து, நலம் விசாரித்தார்.

அவரின் கேள்விகளுக்கு எல்லாம் புன்னகையுடன் பதில் கூறியவன் 'கௌதமி இப்போது தான் அறைக்கு சென்றாள்' எனக் கூறி அவர் கைக் காட்டிய அறை நோக்கி சென்று கதவைத் திறந்தான்.

உள்ளே அவள் இருப்பதற்கான எந்த ஆரவாரமும் இல்லாமல் இருப்பது கண்டு திரும்பப் போனவன் சுவற்றில் தொங்கிய ஃப்ரேமைக் கண்டு அப்படியே நின்றான்.

ஒரு ஆணும் பெண்ணும் கரம் கோர்த்து நடந்து போவது போலான ஒரு பென்சில் சித்திரத்தை ஃப்ரேம் வடிவில் தொங்க விட்டிருந்தாள் கௌதமி. அதற்கு கீழால் எழுதப்பட்டிருந்த எழுத்து மிக சிறிதாக இருந்தபடியால் அதைப் படிக்க நினைத்து அதனருகே சென்று அதை உற்றுப் பார்த்தான்.

அந்தப் பெண்ணின் கரமும், ஆணின் கோர்க்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு இதய வடிவத்தை வரைந்து அதற்குள் 'பப்லு அன்ட் கௌதமி' என்று ஆங்கில எழுத்தில் எழுதப்பட்டு இருந்தது. அது கௌதமியில் எழுத்து தானென்பதை பார்த்த மாத்திரத்தில் கண்டு கொண்டு விட்டான்.

அன்றொரு நாள் இரண்டு வரிக் கவிதை ஒன்றை எழுதி நன்றாய் இருக்கிறதா என்று கேட்டாளே.. அந்த எழுத்துக்கும் இதுக்கும் ஒரு துளியேனும் வித்தியாசம் இல்லை.

அப்படியானால் 'பப்லு யார்?' என மனம் எழுப்பிய கேள்வியை, அப்போது தான் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவளிடம் நேரடியாகவே கேட்டு விட, கையிலிருந்த பஜ்ஜித் தட்டைக் கீழே விட்டு பதில் கூறாமல் விழித்தாள் கௌதமி.

தொடரும்.
 
Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
பாவம் சது.விஜய் கிட்டவாது கார்த்திக் மாதிரி அன்பு கிடைக்காதுனு ஏங்குற.யமுனா மம்மி எவ்ளோ பெரிய உண்மை சொல்லிட்டாங்க🙄🙄ஒருவழியா கௌதமியோட காதலை தெரிஞ்சிக்கப்போறான் ஆதி
 
😍❤️❤❤ ஆமா தெரிஞ்சிப்பான் கூடிய சீக்கிரத்துல.. நன்றி 😍
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
2,018
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️
இவ்வளவு வருஷம் கடந்துதான் யமுனா விஜய் கிட்ட லெட்டர், மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் காமிக்கணுமா, முன்னாடியே காமிச்சிருந்தா வசந்தம் விளையாடும் வீடு ஆகியிருக்கும் 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
பப்லு யாருனு தெரியுற வரை விஜய் கௌதமி கிட்ட முழு உரிமையும் எடுத்துக்க மாட்டான் போல 🙄🙄🙄🙄🙄🙄🙄
 
😁😍❤️❤️ நன்றி நன்றி சகி
 
Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
286
சது போல நாங்களும் கார்த்திக்கை மிஸ் பண்ணுறோம்😒
பப்லுவே பப்லுவை யாருன்னு கேக்குதே!!!😂😂😜
 
Sri pavithra

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 17, 2022
Messages
32

Alamu pavom 😪😪😪😪
Epdiyo gwthamiyoda lv matter innaiku vijay ku therinjium pola💓💓💓💓 waiting sis
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
சது போல நாங்களும் கார்த்திக்கை மிஸ் பண்ணுறோம்😒
பப்லுவே பப்லுவை யாருன்னு கேக்குதே!!!😂😂😜
Naanum naanum.. Naanum kaarthiya miss panren 😝😝
Nanri sakii
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
அலமேலுவோட உண்மை காரணத்தை அப்போவே சொல்லியிருந்தா இந்தா வீண் மன உளைச்சல் தேவையே இல்லையே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தாய் மடியாக தாரம் வந்துவிட்டதினால் அனைத்தையும் அவளுடமே கொட்டி விட்டான் போல 😜😜😜
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
அடேய மண்டு. நீஉண்மையிலே போலீஸா டவுட்டாக இருக்கு? இவ்வளவு பெரிய மண்டுவாக இருக்கே!
 
Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
மடையா? அந்த பப்லு வேற யாரும் இல்ல நீ தான்!
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
அலமேலுவோட உண்மை காரணத்தை அப்போவே சொல்லியிருந்தா இந்தா வீண் மன உளைச்சல் தேவையே இல்லையே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தாய் மடியாக தாரம் வந்துவிட்டதினால் அனைத்தையும் அவளுடமே கொட்டி விட்டான் போல 😜😜😜
சில உண்மைகள் உடனுக்குடன் வெளி வந்து விடுவதில்லையே சகி..
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
மடையா? அந்த பப்லு வேற யாரும் இல்ல நீ தான்!
😂😂 அதை அவன் உணர வேண்டாமா சகி
 
Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
அவர் கிட்ட சொன்னாதானே அவருக்கு தெரியும்... 😔

அலமு ம்மா அவர் மேல கோபப்படாம பேசுங்க...

போச்சு... மாட்டிக்கிட்டாங்க கௌதமி... 😅

பப்லு நீங்க தான் ப்பா... 😍
 
Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
அவர் கிட்ட சொன்னாதானே அவருக்கு தெரியும்... 😔

அலமு ம்மா அவர் மேல கோபப்படாம பேசுங்க...

போச்சு... மாட்டிக்கிட்டாங்க கௌதமி... 😅

பப்லு நீங்க தான் ப்பா... 😍
பப்லு அவரு தான்னு கௌதமியே சொல்லிக்கட்டும். இடைல நாம எதுக்கு 😁😍❤️
 
Top