வளவன் - 10
நாச்சியன் செங்கமலி இருவரின் விடாம முயற்சியால் பேச ஆரம்பித்திருந்தான் வளவன்.
முதல் முதலாக செங்கமலி அவனிடம் உன் பேர் என்ன என்று சைகையால் கேட்கவே, அவனும் வளவன் என்று அழகாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன் பெயரை தானே உச்சரித்தான். அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம் சிறுவயதில் பேசியது அல்லவா.
வளவன் என்று அவன் கூறியதை கேட்டு அவளும் அப்படியே அதை உச்சரிக்க அதைக் கேட்கத்தான் அவனால் முடியவில்லை. தன்னால் இப்பொழுது பேச முடிந்ததே அதுவே போதும். தன் ஊருக்கு சென்று பேசுவதைக் கேட்பதற்கு மிஷின் வாங்கி தன் செவியில் மாட்டிக் கொள்ளலாம் என நினைத்தான்.
அவனின் சந்தோஷத்துக்கு அந்த நொடி அளவே இல்லை நாச்சியன் காலில் விழுந்து நன்றி கூறினான்.
"ரொம்ப சந்தோஷம். நினைச்சு கூட பார்க்கல என்ன பேச வச்சதுக்கு எப்படி உங்களுக்கு நன்றி சொல்லணும்னே தெரியல " என்று அவரின் கரங்களை இறுகப் பற்றி கொண்டு வளவன் கூறவே,ஒரு வைத்தியருக்கு இதை விட சிறந்த பாராட்டு எதுவுமில்லை.
"நீ பேசறதுக்கு முழுக்க முழுக்க காரணம் செங்கமலி தான். நீ நன்றி சொல்லணும்னா அவளுக்கு தான் சொல்லணும் " என்கவே, அவனும் அவளைக் கண்டு விழியாலே காதலோடு நன்றி கூறினான். அவன் அந்த விழியால் பேசும் மொழி அவளுக்குப் புரிந்தது.
"சரிப்பா இனிமே நீ நல்லா கைய கால்ல அசைச்சு பாரு. அப்ப தான் அதுவும் சீக்கிரமாகவே சரியாகும் " என்று கூறவே, அவனும் சரி என கூறினார்.
"அப்பா அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். இந்த காடு முழுக்க கூட்டிட்டு போய் நடக்க வச்சு அவரை சீக்கிரம் நான் சரி படுத்துறேன் " என சந்தோஷமாக செங்கமலி கூற,
வளவனுக்கு நடப்பது அனைத்தும் கனவா நிஜமா என்று தான் தோன்றியது. தான் இவர்களிடம் வந்தது தனக்கு அடிப்பட்டு இவர்கள் கவனித்தது. செங்கமலி தன்னை அக்கறையோடு கவனித்துக் கொண்டது அதையெல்லாம் விட தான் இப்போது பேசுவது அவனுக்கு கனவு போன்று தான் தோன்றியது.
அங்கிருந்தவர்களிடம் அவனும் பேச ஆரம்பிக்க அவர்களுமே அவனிடம் சகஜமாகப் பேசினர். என்ன அவனுக்கு கேட்கும் திறன் தான் இல்லாது போனது .
அப்படியே நாட்கள் கடக்க கைகளிலும் காலிலும் போட்ட அந்த கட்டுகளைப் பிரித்து இப்பொழுது அவன் நன்றாக அசைத்து நடக்க ஆரம்பித்தான். அவனால் தனியாக நடக்க முடியும் சில கடினமான பொருட்களையும் தூக்க முடியும் அந்த அளவுக்கு இப்பொழுது முன்னேறி வந்திருந்தான். அன்று வளவனை அருகில் இருக்கும் நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறினால் செங்கமலி.
"நீங்க ரெண்டு பேரும் தனியா எல்லாம் போக வேண்டாம் பொற்கொடியையும் சேர்த்து கூட்டிட்டு போங்க. அப்பறம் ஊருக்குள்ள தான் பேச்சு வரும் " எனக் கூறி சமுத்திரா சென்று விட அவளையும் அழைத்துக் கொண்டு மூவரும் அருகில் இருக்கும் நீர்வீழ்ச்சிக்குச் சென்றனர். போகும் போது பேசிக் கொண்டே சென்றனர்.
அப்பொழுது செங்கமலி எப்படி அவனை தோளில் சுமந்துக் கொண்டு பல மையில் தூரம் நடந்து வந்ததை பொற்கொடி அவனுக்கு சைகையால் கூறவே, அதைக் கேட்டவனுக்கு உள்ளமெல்லாம் தவித்தது. தன்னால் அவர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது என நினைத்தாலும் அவளை ஒரு பொழுதும் அவனால் விட்டு இருக்க முடியாது இன்னும் சில நாட்களில் தான் இங்கிருந்துச் செல்ல வேண்டும் ? அதற்கு முன் செங்கமலி தனக்கு வேணும் என்று அவனின் உள்ளம் துடியாய் துடித்தது.
வேண்டாம் இங்கிருந்துச் சென்றால் அவளை மறப்பதற்கு தான் முயற்சி செய்யலாம் அல்லது அவள் நினைவிலேயே இருந்து விடலாம் என்று தான் முடிவு எடுத்தான் கமுதி கூறியதற்கு பிறகு...
ஆனால் இப்பொழுது பொற்கொடி செங்கமலி பட்ட துயரத்தை கூறியதும் இதற்குப் பிறகு இவளை விட்டுச் செல்வதற்கு அவனுக்கு மனமோ வரவில்லை.
அதை விட நேற்று இரவு செங்கமலியிடம் அந்த காட்டிற்குள் தனியாக சென்ற போது என்னென்ன துயரங்களை எல்லாம் அனுபவித்தாய் என்று கேட்கும் பொழுது காட்டுனாய் தன்னை துரத்தியது, பாம்புகளை தான் கொன்றது, விஷப்பூச்சிகள் தன்னை கடித்தது எல்லாம் அவளோ கூறியவாறு இருந்தாள்.
அதைக் கேட்டவனோ அந்த நொடியை கலங்கி விட்டான். இப்பொழுது பொற்கொடி கூறியதற்குப் பிறகு முற்றிலுமே அவள் வேண்டுமென்று முடிவெடுத்தான். அருகில் இருந்த அந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்லவே இவர்கள் இருவரும் தனித்து இருக்கட்டும் என அவர்களின் பார்வையை வைத்து அறிந்து கொண்டாள் பொற்கொடி.
"சரி இவ்வளவு தூரம் வந்துட்டோம்ல பக்கத்துல இருக்கிற விறகை எல்லாம் நான் பொறுக்கிட்டு வந்துடுறேன் " எனக் கூறி பொற்கொடி அங்கிருந்து சென்று விட, இப்பொழுது இவர்கள் இருவர் மட்டுமே தனியாக இருந்தனர். சுற்றிலும் பசுமை மட்டுமே.
"வாங்க இந்த தண்ணில குளிச்சனா உடம்புல உள்ள அசதியெல்லம் அப்படியே தீர்ந்து தீர்ந்துடும் வாங்க " என்று அவரின் கரம் பற்றவே, அந்த பற்றிய கரத்தினை விடாமல் அழுத்தியவனோ தன் அருகில் இழுக்க நெஞ்சில் கை வைத்து அவன் விழிகளைக் கண்டாள்.
"செங்கமலி எனக்கு நீ வேணும். என் கூடவே இரு. ப்ளீஸ் முடியாதுன்னு மட்டும் சொல்லிராதே. நான் உன்ன என் உயிரா நேசிக்கிறேன் " என அவளின் மைவிழிகளைக் கண்டு கூற,
அவளுக்கும் அதே எண்ணம் தான் ஆனால் வாய் திறந்து சொல்ல முடியவில்லை. என்னுடைய இருந்து விடு இங்கேயே என்று தான் கூறினால் அவன் ஏற்றுக்கொள்வானா என்ற எண்ணம் தான் அவளை பேசி விடாது தடுத்தது. அவள் அமைதி அவனை என்னவோ செய்ய சட்டென இழுத்து அவளின் இதழோடு இதழ் பதித்தான்.
இருவருக்குமே அது முதல் முத்தம் புது விதமான உணர்வுகள் எல்லாம் மேனியில் பாய்ந்தோட விடுபட முடியாத மயக்கத்திற்கு இருவருமே சென்று விட்டனர். அவனின் கரங்களோ அவளின் மேனியில் தான் வலம் வந்துக் கொண்டிருந்தது.
அவளுமே அதற்கு ஈடு கொடுப்பது போல் அவனின் சிகைக்குள் தன் கரம் கோர்த்து மென்மையை வருட, அந்த மென்மை அவனை முன்னேறச் செய்தது. தீண்டிய இதழ்களை விடுபட முடியாது அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு தான் காதலை வெளிப்படுத்தினான். பெண்ணவலோ அவனிடம் உருகி தன்னை முழுவதும் இழக்க அந்த நொடி கூட தயாராகத்தான் இருந்தாள்.
ஆனால் தன் கட்டுப்பாட்டை இழக்காத வளவனும் தேன் சுவையை மட்டும் பருகி விட்டு மெல்ல அவளிடம் இருந்து விலகினான். அவனின் முகம் காண முடியாது செந்தாழம் பூவாய் முகமோ சிவக்க தலைகுனிந்து நிற்கவே, இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
இதற்குப் பிறகாவது அவள் மௌனத்தை விடுத்து பதில் கூறுவாளா என்று எதிர்பார்க்க அப்பொழுதும் அவளிடம் மௌனம் மட்டுமே பின் பொற்கொடி வரும் சத்தம் கேட்கவே இருவரும் விலகினர். அந்த நீர்வீழ்ச்சியில் சிறிது நேரம் குளித்து முடித்து இயற்கை காற்றை வாங்கிக்கொண்டு பொழுது சாயும் நேரம் தான் மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
உயிர் நாடி வரைச் சென்ற அந்த முத்தத்தின் தாக்கம் இருவருக்குள்ளும் நிறைந்திருந்தது. ஒரு உடலாய் இருவரும் கலக்க தான் இல்லை ஆனால் முழுவதுமாக மனதால் ஒன்றியே இருந்தனர்.
எப்படித்தான் இரு வாரங்கள் கடந்தது என்று தெரியவில்லை. இப்பொழுது முழுமையாக குணமடைந்திருந்த வளவன் தன் ஊருக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருந்தான். அவனை அங்கிருப்பவர்கள் தடுக்கவும் இல்லை இங்கிருந்து போ என அவனைப் போக கூறவும் இல்லை. ஆனால் அவனாகச் செல்ல வேண்டும் என நினைத்தான். அவனைப் பெற்றவர்கள் அங்கு இருக்க அதைவிட முக்கியம் தன் செவியை சீக்கிரம் சரி படுத்தி விட வேண்டும் என்று எண்ணம்.
தன்னவள் தான் பதில் கூறவில்லை இங்கு இருப்பவர்களிடம் தான் ஏன் கேட்கக் கூடாது அவர்களின் சம்மதத்தோடு இவளை அழைத்துச் செல்லலாம் என்ற நினைப்பில் வளவன் கிளம்பி இருக்க, அனைவரும் அங்கு தான் கூடியிருந்தனர்.
அவனை டவுனுக்கு அழைத்துச் செல்ல ஒருவன் தயாராக காத்திருந்தான்.
நாச்சியன் கொடுத்த மருந்துகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வர ஊர்காரர்கள் அனைவரிடமும் கரம் குவித்து தன்னை காத்த அனைவருக்கும் அவர்களின் மண்ணில் விழுந்து பணிந்து வணங்கினான்.
"நான் என்னைக்கும் உங்க யாரையுமே மறக்க மாட்டேன். நான் இங்கே இருந்த இந்த ரெண்டு மாசமும் எனக்கு மறக்க முடியாத நினைவுகள் தான். இப்போ இங்க இருந்து போறேன்னு நினைச்சா கூட எனக்கு ஒரு துளி கூட சந்தோஷமே இல்ல. இருந்தாலும் என்னை பெத்தவங்க எனக்காக அங்கே இருப்பாங்க. அதுக்காக தான் நான் இப்ப போறேன் "
"சரி தம்பி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க. அப்பறம் தம்பி சொல்றோம்னு தப்பா நினைச்சுக்காதீங்க. இப்படி இந்த காட்டுக்குள்ள நீங்க எங்களை பார்த்ததை வெளியில யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். அப்படி நீங்க சொல்லி எங்களுக்கு எந்த பிரச்சனையாவது வந்துட்டா நாங்க நிம்மதியா சந்தோஷமா ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். அரசாங்கம் வந்து எங்களை கெடுத்து விடக்கூடாது. நீங்க சொல்ல மாட்டீங்கன்னு எங்க சாமி மேல சத்தியம் பண்ணிட்டு போங்கப்பா " என்றதும்,
அவனும், "கண்டிப்பா நான் யார்கிட்டயும் இந்த விஷயத்தை சொல்ல மாட்டேன். ஆனா நீங்க எல்லாருமே கவனமா இருங்க. என்னடா தங்கம் இடம் கொடுத்தா இவன் கோபுரத்தை பிடிக்க பார்க்குறானே அப்படின்னு நினைக்காதீங்க. நான் இப்ப உங்க எல்லார்கிட்டையும் ஒரே ஒரு விஷயம் மட்டும் கேட்கிறேன். அதுக்கு நீங்க மாட்டேன்னு மட்டும் சொல்லிறாதீங்க. நீங்கள் என்னை உங்கள்ல ஒருத்தனா நினைச்சா செங்கமலியை என்னோடவே அனுப்பி வைங்களேன். நான் அவளை உயிரா நேசிக்கிறேன். நான் நல்லபடியா பார்த்துப்பேன். அவ எனக்கு வேணும் அவ இல்லன்னா என்னால ஒரு நாள் கூட இருக்கவே முடியாது. நான் அவ கிட்ட என் காதலை சொல்லிட்டேன். ஆனா அவ உங்க எல்லாருக்காகவும் அவளோட பெத்தவங்க பத்தியும் யோசிச்சு இன்னுமே எனக்கு முடிவு சொல்லாம தான் இருக்கா. அதனால தான் நான் உங்ககிட்ட இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் கோரிக்கையை நீங்க எல்லாருமே நிறைவேத்தி வையுங்களேன் " என்று அவர்களின் அனைவரின் முன்னே முட்டியிட்டு தன் கையேந்தி அவர்கள் இனத்தவரின் பெண்ணை கேட்டான்.
செங்கமலியின் பெற்றவர்களுக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. அந்த ஊரில் முடிவெடுக்கும் ஒரே ஒரு உரிமை இப்பொழுது அந்த ஊரின் பெரியவரான ஒருவருக்கு மட்டும் தான் இருக்கிறது.
அவரும் நீட்டிய கரங்களைப் பிடித்து அவனை எழ வைத்து, "இங்கே பாருப்பா நீ செங்கலியை கல்யாண கட்டிக்க நினைக்கிற எங்களுக்கு புரியுது. ஆனா எங்களுடைய கொள்கையை நாங்க என்னைக்குமே விடமாட்டோம். அதனால எங்களை மன்னிச்சிரு. உனக்கு செங்கமலி வேணும் அப்படின்னா நீ எல்லாத்தையுமே விட்டுட்டு இங்க வந்து எங்களோடவே இருந்திரு. செங்கமலியை நீ கல்யாணம் பண்ணிட்டு இங்கே எங்களோட ஒரு சந்தோஷமா வாழ்க்கை வாழலாம். இனி உன்னோட முடிவு தான்ப்பா எங்களுடைய முடிவு. நாங்கள் சொல்லிட்டோம் " என்றதும், தனக்காக அவன் தன்னோடு இங்கே இருப்பானா என்ற எண்ணத்தில் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தோட வளவனை தான் கண்டாள்.
செங்கமலியின் அருகே சென்றவன் அவளின் கரங்களைப் பிடித்து, உதடு துடிக்க அவனிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. அவளுக்கும் அப்படித்தான் இருந்தது.
"நான் கிளம்புறேன். உன்னை நீ பார்த்துக்கோ. என் மேல நீ வச்சிருக்குற நம்பிக்கையை எப்பவுமே இழந்துடாதே " எனக் கூறவே அந்த வார்த்தையிலே அவளுக்கு புரிந்து விட்டது. அவன் செல்ல வேண்டும் ஆனால் தன்னையும் இழக்கக்கூடாது என நினைக்கிறான் என்பது
அவனால் நிச்சயம் தான் இப்பொழுதுச் சென்று திரும்பி வருகிறேன் என்று உறுதியளிக்க முடியாது. அவனைப் பெற்று இருபத்தி எட்டு வருஷமாக வளர்த்த அவரின் பெற்றவர்கள் இதற்கு சம்மதம் கூற வேண்டும் அல்லவா ?என்ற நினைப்பிலேயே அவன் அவர்கள் அனைவரிடமும் விடை பெற்று அங்கிருந்துக் கிளம்பினான்.
அவனை ஒருவன் அழைத்துச் செல்ல, இருவரும் அந்த ஊரினை விட்டு வெளியேறினர். விழிகள் மறைந்ததும் வீட்டுக்குள் சென்ற செங்கமலியோ அவன் படுத்திருந்த அதே கயிற்றில் கட்டிலில் அவன் வாசனையை நுகர்ந்து அழுதவாறே இருந்தாள்.
நாட்கள் கடந்துக் கொண்டே இருந்தது. பௌர்ணமியும் அமாவாசையும் மாறி மாறி வந்தது. செங்கமலியோ அவளின் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் இழந்து உடலாலும் பலவீனமாகிக் கொண்டே இருந்தாள்.
மகள் அவன் சென்றதை மறந்து விடுவாள் என்று பெற்றவர்கள் நினைத்திருக்க, அவளோ ஒவ்வொரு நாளும் அவன் இல்லாத நிமிடங்களை நினைத்து நினைத்து தன்னையே வருத்திக் கொண்டு தான் இருந்தாள்.
எப்படித்தான் மூன்று மாதங்கள் சென்றதென்றே தெரியவில்லை. அன்று செங்கமலிக்கு திருமண ஏற்பாடுச் செய்திருந்தனர். அவள் மனதினை மாற்றும் என நினைத்து பெற்றவர்கள் இந்த முடிவை எடுத்தனர். கமுதியோடு தான் திருமணம்.
கமுதி இவர்களிடம் மன்னிப்பு கேட்டு செங்கமலியை திருமணம் செய்துக் கொள்ள கேட்க, நாட்கள் கடந்ததில் அவன் திரும்ப வரமாட்டான் என்று நினைப்பில் பெரியவர்கள் எல்லாம் பேசி இவர்களின் திருமணத்திற்கு ஒத்துக்க வைத்து ஏற்பாடு செய்து இந்த நாள் வரை வந்து விட்டது.
இன்னும் சற்று நேரத்தில் கமுதி செங்கமலியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்து விடுவான். இப்பொழுது கூட அவளின் நினைப்பு முழுவதும் மனதால் வளவனே கணவன் என்றே எண்ணியது.
விழி மூடி கரங்கள் இரண்டையும் குவித்து, 'கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிற. அவர் இல்லாத ஒரு வாழ்க்கையே எனக்கு வேண்டாம். என்னால இந்த கல்யாணத்தை ஏத்துக்கவே முடியாது ' என நினைத்து விழித்திறக்க அவளின் முன்னே வளவன் நின்றிருந்தான்.
அது அவளுக்கு மட்டும் ஆச்சரியமில்லை. அந்த ஊர்காரர்களுக்கு ஆச்சரியம் தான்.
இரு கரங்களையும் நீட்டி அவளை அழைக்கவே, சிறு குழந்தையென புள்ளிமான் போல் துள்ளி குதித்துக் கொண்டு அவனிடம் வந்து நெஞ்சில் வந்து ஒட்டிக் கொண்டாள்.
அவளின் முகம் முழுவதும் முத்தமிட்டு கரம் பற்றி அங்கிருந்தவர்களிடம் அழைத்து வந்தான். இப்பொழுது அவனுக்கு செவித்திறனும் வந்துவிட்டது. அவனின் பெற்றவர்களை சம்மதிக்க வைத்து ஒரு வழியாக போராடி இங்கு வந்து விட்டான்.
இனி அவனின் வாழ்க்கை இங்கு தான். செங்கமலி தன் மனைவி. இவர்களோடு தான் இருக்கப் போகிறேன் என்று அவன் எடுத்த முடிவினை அவர்களிடம் கூற, அவர்களுக்கும் சந்தோஷம்.
செங்கமலிக்காக இவன் இதெல்லாம் செய்தது இவர்களின் காதலை எண்ணி ஒரு நொடி வியந்து தான் போனான் கமுதி. அதனாலே அவன் குணத்தினை மாற்றி விட்டுக் கொடுத்தான். அன்றே இவர்களின் திருமணத்தை அங்கிருந்த அனைவரும் நல்லபடியாக முடித்து வைக்க முற்றிலும் வளவன் இப்பொழுது செங்கமலிக்கு சொந்தமானான்.
"இந்த வனத்துக்கு தேவதையே எங்க பொண்ணு செங்கமலி தான்.
இத நாங்க அடிக்கடி சொல்லுவோம். இப்ப இந்த வனதேவகி ஏத்த வளவனே நீ தான்பா. நீங்க ரெண்டு பேருமே நீண்ட ஆயுளோட இருக்கணும் " என்று அங்கிருந்த அனைவருமே வாழ்த்த, அன்றிலிருந்து அவனது பெயர் கூட வனதேவதையின் வளவன் என்றே மாறியது.
வளவன் செங்கமலி இருவரும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க காத்திருக்க, அவர்கள் இருவருமே சந்தோஷமாக அ
தில் பயணிக்க வேண்டும் என்று நாம் இதிலிருந்து வாழ்த்தி விட்டுச் சென்று வருவோம்.
சுபம்...
முழுவதுமாக படித்து விட்டு தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி