வனதேவதை - 1
வனதேவதையின் வளவன்
இந்தக் கதை முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவானது. இதில் நான் யாரையும் இகழ்ச்சிப்படுத்தி எழுதவில்லை. அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வாழும் ஒரு சிறிய குக்கிராமத்தை வைத்து இக்கதையை நான் தொடங்குகிறேன். அவர்களின் வாழ்க்கை முறை என் கற்பனை மட்டுமே !
அத்தியாயம் 1
கிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பச்சை மலை....
இரவில் பெய்த மழை துளிகள் புல் நுனிகளில் பனித்துளியாக இருக்கும் அழகே கண்கொள்ளாக் காட்சியானது தான்.
வளைந்து வலிந்துச் சென்றது பாதை, வலி எங்கும் அடர்த்தியான மரங்கள், பசுமை போர்த்திய கம்பளம் எங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கவே, மலைத்து வியந்துப் போனேன் பசுமையை எண்ணி...
மலையின் அடிவாரத்தில் இருந்து நிமிர்ந்துப் பார்த்தால், எப்படி கடலின் எல்லை தெரியாதோ அதே போன்று தான் இங்கு இந்த காட்டின் எல்லை எங்கு இருக்கிறது என்றே தெரியாது. அப்படி ஒரு பசுமையான குளுமை சூழ்ந்த மூலிகை வாசம் நிறைந்த இடம்.
ஆகாயத்திலிருந்து வெள்ளியென கொட்டும் சாரலில் பாறை எல்லாம் மினுமினுக்க கதிரவன் எழுப்பும் இருட்டும் வெளிச்சமும் மத்தாப்பு போல் இமையா காட்சியாக தான் இருந்தது அங்கு வாழ்ந்தவர்களுக்கு.
இயற்கையின் அழகு கொட்டி கிடக்க, கொஞ்சம் எழிலில் மதி சொக்கி நிற்க, மரங்கள் ஒன்றோடு ஒன்று பேசும் சலசலப்பு, காற்று சுழற்றி அடிக்கும் ஓசையும், அழகின் பிறப்பிடமாக இருக்கும் அந்த இடத்தை விட்டு நகர மனமே வராது யாவருக்கும்.
மலைகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் வனவிலங்குகள், மூலிகை, தாவரங்கள் இப்படி அனைத்தும் அந்த சிறிய குக்கிராமத்தை சுற்றி இருந்தது. அந்த கிராமத்தின் பெயர் பட்டியூர். இப்படி ஒரு கிராமம் மலைப்பகுதிக்குள் இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது. அந்த ஊரில் மொத்தமே இருபது குடும்பம் தான் இருந்தது. ஆட்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் என்பது பேர் தான் இருக்கும்.
சிறியவர்கள் வயதானவர்கள் பெரியவர்கள் என்று அனைவருமே அந்த ஊரில் இருந்தனர்.
அவர்களின் வழக்கம் அந்த ஊர் பெண்களை வெளியில் மணம் முடிக்க கொடுப்பதில்லை.
ஊருக்குள்ளே கொடுப்பது தான் அவர்களின் வழக்கம். அந்த கிராமம் தான் அவர்கள் உயிர் மூச்சு. வெளியூர் என்றால் என்னவென்று தெரிந்தும் அங்குச் செல்ல விரும்ப மாட்டார்கள். அவர்களை யாரும் தொந்தரவு தராது நிம்மதியாக ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர் இந்த மக்கள்.
சந்தோஷமோடும் சொந்தங்களோடும் பொழுதினை கழிக்க படிப்பு என்றால் என்ன என்று கூட அவர்களுக்கு தெரியாது. அங்கு இருந்த நிலங்களில் அவர்கள் ஏதாவது விவசாயம் செய்வது, அங்கு தானாக முளைக்கும் பொருள்களை வைத்து தனது பசியை தீர்த்துக் கொள்வது, வனவிலங்குகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு தற்காப்புக் கலை கற்றுக் கொள்வது இப்படி அவர்களுக்கான தேவையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
இது என்னோட இடம், இது உன்னோட இடம் இந்த இடத்தில எதுக்கு நீ விவசாயம் பண்ற ? என்று அவர்களுக்குள் ஒரு நாளும் சண்டை என்று வந்தது கிடையாது.
எப்படி வரும் அனைவரும் தான் சொந்தம் என்று ஆயிற்றே ? சிறிய உணவு கிடைத்தாலும் அதை பகிர்ந்துக் கொள்வது தான் அவர்களின் வழக்கம். மண் வீடு குடிசை வீடு மரங்களால் அமைக்கும் பரன் இப்படித்தான் அங்கு அவர்களின் வாழ்வாதாரமும் தங்கும் வசதியும்.
"அடியேய் செங்கமலி இன்னும் என்னடி உனக்கு தூக்கம் வேண்டி கிடக்கு ? சீக்கிரம் அந்த கஞ்சியை குடிச்சிட்டு சட்டுபுட்டுன்னு உங்க அப்பா கேட்ட அந்த மூலிகையை போய் பறிச்சிட்டு வா போ " என படுத்துக்கொண்டு இருந்த செங்கமலியை அவளின் அன்னை சமுத்திரா உசுப்பினார்.
அவளோ சினுங்கியவாறு அந்த கயிற்றுக் கட்டிலில் திரும்பிப் படுத்து, "அம்மா அதெல்லாம் பக்கத்துல தான் இருக்கு. கொஞ்ச நேரம் தூங்குறேன் " எனக் கூறியவாறு வனவிலங்குகளின் தோல்களால் நெய்யப்பட்ட போர்வையை இழுத்து மூடிக் கொண்டாள்.
'இவள வச்சுக்கிட்டு என்ன தான் பண்ண ? அந்த மனுஷன் வேற வந்தான்னா கத்து கத்துன்னு கத்துவான். அடுப்பு வேற எரியவே மாட்டேங்குது. நேத்து பெஞ்ச மழையில, நனைஞ்சு வேற போச்சு விறகு ' என புலம்பிக்கொண்டு அந்த வீட்டின் முன்னே இருந்த விறகு அடுப்பில் கஞ்சியைக் காய்ச்சிக் கொண்டு இருந்தார்.
'இவ வேற சொன்னா கேக்க மாட்டா இவளை எல்லாம் அடிச்சா தான் தெரியும் ' சீற்றமோடு எழுந்தவரோ அங்கிருந்த ஒரு விறகு குச்சியை எடுத்து மகளின் முதுகிலே ஒரு அடி வைக்க, அடுத்த நொடி வலி தாங்காது அலறி அடித்து எழுந்து அமர்ந்தாள்.
"ஏன்மா இப்படி பண்ற ?என்னைக்காவது என்னால அப்பா உன்னை திட்டி இருக்காரா. நிம்மதியா தூங்க கூட விட மாட்டீங்களா ? இப்ப என்ன நான் போய் அந்த மூலிகையை பறிச்சிட்டு வரணும் அவ்வளோ தானே பறிச்சிட்டு வரேன் " என கூறிக்கொண்டே அங்கிருந்த தண்ணீரில் தன் முகத்தை அழுத்த தேய்த்து கழுவினாள்.
பின் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து பல் துலக்கியவள் ஏற்கனவே இருந்த பழைய கஞ்சியையும் சரசரவென மேனிக்குள் இழுத்துக் கொண்டாள்.
அந்த கஞ்சியில் அப்படியொரு சுறுசுறுப்பு தன் உள்ளமெல்லாம் எப்பொழுதுமே தென்படுவதை அவள் ஒவ்வொரு நொடியும் உணர்ந்துக் கொண்டு தான் இருப்பாள்.
பின், "ஏய் பொற்கொடி பொற்கொடி " என்று பக்கத்து குடிசையில் இருக்கும் ஒரு பெண்ணை இவள் வீட்டில் இருந்தவாறு கத்தி அழைக்கவே, அவளின் அன்னையோ மகளைக் கண்டு முறைத்தவாறு தன் செவியை தான் சத்தம் கேட்க முடியாது மூடினார்.
அடுத்த நொடி அவளும் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து, " என்னடி என்ன வேணும் ?" என்க,
"நான் மூலிகை பறிக்க போறேன் நீ வரியா அப்படியே நீரோடையில குளிச்சிட்டு வந்துரலாம் " என்றதும் அவளோ சரி எனக் கூறினாள்.
இருவரும் மாற்றுடையை எடுத்துக் கொண்டு கிளம்ப, "இங்க பாருங்கடி இரண்டு பேரும் இன்னும் சின்ன பொண்ணு கிடையாது வயசுக்கு வந்துட்டீங்க. சும்மா நின்னுக்கிட்டு இருக்காதீக ? காத்து கருப்பு அடிச்சிட போகுது. போனோம்மா வந்தோம்மான்னு இருக்கணும். உங்க அப்பாரு பத்து மணிக்கு வந்துருவாரு அதுக்குள்ள அந்த மூலிகையை கொண்டு வந்திரு " என்றதும் இவளும் சரி எனக் கூறி தன் தோழியோடு ஒரு கூடையை எடுத்துக்கொண்டு சந்தோஷமாக அங்கிருந்துக் கிளம்பினாள்.
இருவரும் அவர்கள் தங்கி இருந்த இடத்தை விட்டு வெளியேறி காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தனர்.
விலங்குகள் வந்தாலும் தங்களை பாதுகாத்துக் கொள்ள என்ன தேவையோ அதை எப்பொழுதுமே அவர்கள் கைவசம் வைத்துக் கொள்வார்கள்.
ஆண்களாவது வெளியே எங்காவதுச் சென்று வருவார்கள். ஆனால் பெண்களுக்கு அந்த காடு தான் அவர்களின் உலகம். அதை விட்டு அவர்கள் எங்குமே செல்ல மாட்டார்கள். இவர்களுக்கு தேவையான பொருட்களை கூட இந்த காட்டினை விட்டு அறுபது கிலோ மீட்டர் தாண்டி ஆறுகளை கடந்து வெளியேச் சென்றால் தான் மக்களை பார்க்க முடியும். அப்படி என்றாவது வருஷத்துக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ அந்த ஊரிலிருந்து யாராவதுச் சென்று முக்கிய பொருள்களை மட்டும் வாங்கிக்கொண்டு வந்து விடுவர். செ ல்லும் வழியில் நன்றாக பழுத்திருந்த ஒரு பழத்தினை பிடுங்கி இருவரும் உண்டவாறு தான் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்படியே பூக்களைப் பார்த்தால் அதை எடுத்து தலையில் வைத்துக் கொள்வது இவர்களின் வழக்கமே..!
இப்படித்தான் அந்த காடு அவர்களுக்கு சொந்தமானது. அந்த காட்டுக்கு கூட ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை இவர்களுக்கு தெரியாது. எந்த இடத்திற்கெல்லாம் சென்றால் திரும்ப தங்கி இருக்கும் இடத்திற்கு வர முடியுமோ அந்த இடத்திற்கு எல்லாம் சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுத்து விடுவார்கள் பெரியவர்கள். தங்கள் வீட்டு பெண்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்றால் கூட பயமில்லாது இருப்பார். எப்படி பழகிய இடத்தில் பயம் இருக்கும் ?
செங்கமலி இவளே நம் கதையின் நாயகி. பருவ மங்கை. இவள் தந்தை நாச்சியன், அன்னை சமுத்திரா இருவருக்கும் இவள் ஒற்றை மகள். இவளின் தோழி பொற்கொடி பக்கத்து வீட்டில் இருப்பவள். சிறு வயதிலிருந்து ஒன்றாகவே இருவரும் சுற்றிக்கொண்டு தான் வருவார்கள்.
நாச்சியன் வைத்தியராக அந்த குக்கிராமத்தில் இருக்கிறார். பரம்பரையாக வைத்தியர் தொழில் பார்க்கும் குடும்பம் அவர்களுடையது தான். அதனாலே சிறு வயதிலிருந்தே தன் மகள் செங்கமலிக்கு ஒவ்வொரு மூலிகை செடியின் மருத்துவப் பயன்கள் என்ன என்பதை, அவளை தான் எங்கெல்லாம் சொல்கிறோமோ அங்கெல்லாம் அழைத்துக் கொண்டுச் சென்று கற்றுக் கொடுத்து விட்டார்.
அதன் படி தான் இன்று நண்டு கடித்தால் சட்டென்று விஷமுறிவு எடுப்பதற்கு தேவைப்படும் மூலிகையை தான் மகளை காலையிலே பறித்து விட்டு வந்து வைத்து விடு எனக் கூறி நண்பனின் வயலுக்கு அவரோடுச் சென்றிருந்தார்.
அந்த குக்கிராமத்தில் அழகு அறிவு மட்டுமல்லாது திறமையானவள் என்றால் அது செங்கமலி மட்டுமே !
நடு இரவில் கூட காட்டுக்குள் சென்று வா என்றால் தைரியமாக சென்று வரும் திறமை கொண்டவள். மரம் ஏறுவது நீச்சல் அடிப்பது இப்படி ஆண்கள் செய்யும் வேலைகள் கூட அவள் கற்று வைத்திருந்தாள். அவளை தன் மகளாக வளர்க்காத மகனாக தான் வளர்த்தார் நாச்சியன்.
நீண்ட தூரம் பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக வாசனையை வைத்து அந்த மூலிகைச் செடியை கண்டுபிடித்து விட்டாள். அதன் அருகில் சென்றவளோ முதலில் முழுவதுமாக வேரிலிருந்து மேல் தளிர் வரைக்கும் ஆராய்ந்து பார்த்தாள். பின் தன் கையில் இருந்த கத்தியை வைத்து அந்த இலையை பிடுங்கி, கொண்டு வந்த கூடையில் போட்டுக் கொண்டாள்.
"ஏன்டி அதான் அந்த செடியை பார்த்துட்டீல ? அப்புறம் எதுக்கு அதை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தே ?" என்று உடன் வந்து பொற்கொடி கேட்கவே,
"டக்குனு நமக்கு தேடி வந்தது கிடைச்சுருச்சுன்னு சொல்லி புடுங்கிறக் கூடாது. முதல்ல அதுல எதுவும் ஆபத்து நமக்கு இருக்கா அப்படிங்கிறத பார்க்கணும். சொல்ல முடியாது இந்த சின்ன சின்ன செடிகள்ல கூட பூச்சிகளும் இருக்கும் அதுவும் இல்லாம நம்ம தேடி வந்த செடி இது தானா அப்படிங்கறதை தெளிவு படுத்தணும். நமக்கு கண்டிப்பா வேணும். இங்க இருக்குற செடிகள் எல்லாம் ஒரே போல தான் இருக்கும் " என்று அவளோ தந்தை தனக்கு கற்றுக் கொடுத்ததை தோழியிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
"என்னமோடி எனக்கெல்லாம் அதை பத்தி தெரியாதுப்பா. நமக்கு களை வெட்ட, விறகு வெட்ட, மீன் பிடிக்கிறது இது தான்ப்பா தெரியும். சரி சரி வா நேரமாச்சு சட்டுபுட்டுன்னு பக்கத்துல தானே ஓடை இருக்கு. அதுல குளிச்சிட்டு வீட்டை பார்த்து போவோம் உங்க அம்மா வேற நடுவானத்தில சூரியன் வர்றதுக்குள்ள வர சொல்லுச்சு "
"அது அப்படித்தான் சொல்லும் ஆனா என் அப்பாரு எப்படியும் உச்சி வேலைக்கு மேல தான் வருவாரு. எனக்கு தெரியாதா சரி வா போய் குளிக்கலாம். முதல்ல இந்த மூலிகையை நான் பத்திரப்படுத்தி வச்சிக்கிறேன் " என்றவள் அந்த வாசனைக்கு பூச்சிகளும் அதில் எதுவும் மற்ற திரவமும் படாதவாறு அதனை அந்த கூடைக்குள் மூடி வைத்திருந்தாள்.
நிமிர்ந்துப் பார்த்தால் வானம் மட்டும் தான் தெரிந்தது விழிகளுக்கு. மரங்களும் செடிகளும் சில்லென்று வீசும் காற்றும் எட்டிய தூரம் வரை பசுமை தான். அது மலைப்பகுதி என்பதால் எப்பொழுதுமே அதன் வெப்பநிலை இப்படித்தான் காட்சிக் கொடுக்கும். தண்ணீர் இல்லாது வற்றாத ஆறாகவும் செடிகள் எல்லாம் காய்ந்து சருகுகள் ஆகும் இப்படி ஒரு நாளும் அவர்கள் பரம்பரை கண்டதே இல்லை.
ஓடைக்கு வந்துச் சேர்ந்தவர்கள் தன் அந்தரங்களை மட்டும் மறைக்கும் அளவிற்கு உடையை அணிந்துக் கொண்டு அந்த நீரோடையில் இறங்கி குளிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு எந்த நொடியும் பயம் என்பது இல்லை. யாராவது வந்து விடுவார்களோ என்று அவர்கள் நினைக்கவே மாட்டார்கள்.
அப்படியே வந்தாலும் அவர்களின் கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் அங்கு வருவார்கள் என்பதால் சந்தோஷமாக ஒரு குளியலை போட்டு மீண்டும் மாற்று உடைய எடுத்து ஒரு மரத்தின் அருகே நின்று மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது தான் பொற்கொடியின் பார்வை அந்த நீரோடையின் மீது பதிந்தது. யாரோ ஒருவன் தலைக்குப்புற கவுந்து அந்த நீரில் அடித்து வருவதைக் கண்டவளோ உடனே அதை தன் தோழியிடம் கூறவே அவளும் அதைத்தான் பார்த்தாள்.
மூர்ச்சையாகி இருந்த ஒரு மனிதன் தண்ணீரின் வேகத்தில் அடித்து சென்றுக் கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த அந்த உடுப்பிலே தெரிந்தது தங்களுடைய ஆட்கள் இவன் இல்லை என்று இப்பொழுது என்ன செய்வது என்று பொற்கொடி யோசிக்கும் நேரத்தில் செங்கமலியோ தோழியின் அருகிலே இல்லை.
தொடரும் ...
தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

Last edited: