வளவன் - 2
நீரோடையில் அடித்துச் செல்பவனைக் கண்டு பொற்கொடி யோசித்தவாறு இருக்க, அவள் யோசிக்கும் அந்த நொடிக்குள் செங்கமலியோ செயல்பட ஆரம்பித்திருந்தாள்.
அவ்வளவு வேகமாய் அந்த நீரோடையை நோக்கி ஓடியவாறே அவளின் இடுப்பில் ஒரு கயிறைக் கட்டியிருந்தாள்.
"ஏய் செங்கமல்லி, என்னடி பண்ற நீ ?" என்று பித்து பிடித்தது போன்று வேகத்தோடு ஓடுபவளைக் கண்டு பொற்கொடி கேட்க,
"அந்த கயத்தோட இன்னொரு நுனியை நீ கரை ஓரமாய் இருக்கிற மரத்தில இறுக்கமா கட்டிடுடி " என கூறியவாறு அங்கு இருந்த அந்த நீரோடையில் குதித்து விட்டாள்.
எப்பொழுதுமே காட்டுப்பகுதிக்கு செல்லும் பொழுது அவர்களிடம் முக்கிய தேவையான பொருள்கள் இருக்கும். கத்தி கயிறு திடீரென மரம் ஏறும் சூழ்நிலை ஏற்பட்டால் ஏறுவதற்காகவே அதனை வைத்திருப்பார்கள். அது தான் இப்பொழுது செங்கமலிக்கு உதவி புரிந்தது.
அவள் கூறிய அடுத்த நொடி பொற்கொடியும், 'இவ வேற ' என வேகமோடு ஓடி அந்த கயிறின் மற்றொரு பகுதியை எடுத்துக்கொண்டு கரையோரம் இருந்த மரத்தில் தன்னால் எவ்வளவு இறுக்கமாக முடியுமோ அந்த அளவு இறுக்கத்தோடு கட்டி விட்டாள்.
கட்டி முடித்து மூச்சினை விட்டு திரும்பிக் காண நீரோடு நீராக அவன் அடித்துச் சென்று கொண்டிருக்க அவனை பிடிக்கும் முயற்சியில் நீந்தி அடித்துக் கொண்டிருந்தாள் செங்கமலி.
'ஐயோ யாருன்னே தெரியாதவனுக்கு போய் இவ வேற இப்படி குதிச்சிட்டாளே. இப்ப நான் என்ன பண்றது ?' என பயத்தோடு புலம்பிக்கொண்டு அந்த கரை ஓரமாக அவளும் ஓடி வர, அடித்து வரும் தண்ணீரை விட வேகத்தோடு முந்தி அடித்து அவனை நெருங்கினாள்.
'அவன் யார் என்று தெரியாது அவன் தன் இனத்தையும் சேர்ந்தவன் அல்ல அப்படி இருக்க இவள் ஏன் இப்படி செய்கிறாள் ? ' என்று பொற்கொடி நினைக்க,
'யாராக இருந்தால் என்ன தன் கண் முன்னே ஒருவன் தண்ணீரில் அடித்துச் செல்கிறான். அவன் உயிரோடு இருக்கிறானா அல்லது இறந்து விட்டானா என்று தெரியாது. ஆனால் தன்னால் முடிந்த உதவியை அவனுக்கு செய்ய வேண்டும் ' என்ற எண்ணம் தான் அந்த நொடி செங்கமலியின் மனதில் இருந்தது.
ஒரு வழியாக தலை குப்புறக் கவிழ்ந்து தண்ணீரோடு அடித்துச் சென்றுக் கொண்டிருந்தவனின் தலைமுடியை பற்றி பிடித்து இழுத்தவளோ அவனை இறுகப் பற்றி கரை நோக்கி இழுத்து வந்து கொண்டிருந்தாள்.
தன் தோழி அவனோடு வருவதைக் கண்ட பொற்கொடியோ, "ஏய் நான் இங்க இருக்கேன் பாரு " என்று தன் கரங்களை அசைக்க, பலம் கொண்டு நீரின் வேகத்தை தாக்குப் பிடித்து அவனை ஒரு வழியாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தாள்.
கரையருகே வந்ததும் பொற்கொடியும் ஒரு கரம் கொடுக்க, அவனை இருவரும் சேர்ந்து அந்த நிலப்பரப்பில் படுக்க வைத்தனர்.
நீரிலே ஊறி விட்டதின் அடையாளமாக அவனின் மேனியெல்லாம் சுருங்கி வெளீர் நிறமாக காட்சிக் கொடுத்தான்.
உடலில் ஆங்காங்கு ரத்த காயங்கள் இருந்தது. பெண்கள் இருவருக்கும் அவன் அணிந்திருந்த உடை புதிதாக காட்சி கொடுக்கும் ஒருவனை அவர்கள் ஒரு நொடி வித்தியாசமாக தான் கண்டனர்.
'இவன் யாராயிருக்கும் ?" என்று பொற்கொடி கேட்க,
"யாருக்கு தெரியும். இரு முதல்ல உயிர் இருக்கா இல்லையான்னு பார்க்கலாம் " எனக் கூறி அவனின் நாடியைப் பிடித்து பரிசோதித்துப் பார்த்தாள். பின் அவனின் நெஞ்சில் தன் செவியை வைத்து இதயத்துடிப்பின் ஓசை கேட்கிறதா என்று சோதித்துப் பார்த்தாள்.
சில மணித்துளிகளுக்குப் பின்னால் அவன் உயிரோடு இருக்கிறான் இப்போதைக்கு ஆழ்ந்த மயக்கத்துக்குச் சென்று விட்டான் என்பதை புரிந்துக் கொண்டாள்.
"என்னாச்சு ? ரொம்ப நேரமா
பார்த்துக்கிட்டு இருக்க உசுரு இருக்கா இல்லையா ?" என தோழியான பொற்கொடி கேட்க,
"உயிர் இருக்குடி. ஆனா இப்ப இவங்க மயக்கத்துல இருக்காங்க. என்ன பண்றது நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போனா தான் வைத்தியம் பார்க்க முடியும். என் கிட்ட இதுக்கான மூலிகை இல்ல. அப்பாவுக்கு தான் தெரியும். எனக்கு எப்படி பார்க்கணும் தெரியாதே ? "என்று செங்கமலி கூறினாள்.
"ஏய் என்னடி விளையாடுறியா.
அவ்வளவு தான் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா உன்ன கொன்னே போடும். எவனையோ கூட்டிட்டு வந்து இருக்கீங்க அப்படின்னு சொல்லி சண்டை போட்டுட்டு இருப்பாங்க. நமக்கு எதுக்கு தேவையில்லாம பிரச்சனை யாராவது இவங்கள தேடி வருவாங்க. தேடி வந்தனா அவங்க கூட்டிட்டு போவாக. நம்ம முதல்ல இங்கிருந்து போயிடலாம் " என்று பயத்தோடு பொற்கொடி கூறினாள்.
"இல்லடி என்னால இப்படியே விட்டுட்டு போக முடியாது. எங்க அப்பா வைத்தியம் தொழில் ரொம்ப மதிக்கிறவரு. உசுருக்கு போராடிக்கிட்டு இருக்கிறதை காப்பாத்துறது தான் நம்மளோட கடமை. இப்படியே விட்டுட்டு போன எப்படி ? உனக்கு தான் தெரியும் எத்தனையோ மிருகம் இங்கே இருக்குன்னு. ஏதாவது வந்து இவங்களை ஏதாவது பண்ணிச்சுன்னா என்ன பண்ண முடியும் ?"
"அதுக்காக எப்படி நம்மளோட இடத்துக்கு கூட்டிட்டு போக முடியும் நம்ம ரெண்டு பேருமே பொம்பளைங்க "
"என்னால தூக்கிட்டு போக முடியும் எனக்கு நம்பிக்கை இருக்கு " என்றதும்,
"சரிடி நீ தூக்கிருவ நானும் ஒத்துக்கிறேன். நீ தான் ஒன்னுக்கு ரெண்டு மூட்டையை தூக்கினவளாச்சே இவனை தூக்குறது உனக்கு என்ன கஷ்டமா ? ஆனா இங்க இருந்து நம்ம இடத்துக்கு போகணும்னா எவ்வளவு தூரம் இருக்கு அவ்வளவு தூரம் நீ தூக்கிட்டு வந்திருவையா " என சந்தேகமாய் ஆச்சரியத்தோடு கேட்டாள்.
"வேற என்னடி பண்ண முடியும் ?போகும் போது நம்ம ஆளு யாராவது இருந்தாங்க அப்படின்னா அவங்களை சேர்த்து உதவி பண்ண சொல்லலாம். இப்போதைக்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நம்ம கூட்டிட்டு போகலாம் ஒரு கைப்பிடி " எனக் கூறி அவனின் கரங்களை எடுத்து தன் தோளின் மீது போட்டுக் கொண்டு அவனை தனக்குப்பின் ஏற்கனவே தன்னிடம் இருந்த ஒரு துணியை வைத்து தன் இடுப்பில் கட்டிக்கொண்டு முதுகோடு முதுகில் சேர்த்து வைத்து தூக்கி நடக்க ஆரம்பித்தாள்.
தன் தோழியை நினைக்கும் போதே பாவமாக இருந்தது பொற்கொடிக்கு. அவளாலும் என்ன தான் செய்து விட முடியும். அவளுக்கு துளி கூட சுமக்க முடியாது. பொற்கொடி மென்மையான குணம் கொண்டவள் என்பதால் அவளின் கைகளுமே மென்மையான கரங்கள் தான்.
ஆனால் செங்கமலியோ அப்படி அல்ல. அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மெல்ல மெல்ல நடந்து கொண்டே இருந்தனர். யாராவது தங்களின் உதவிக்கு வர மாட்டார்களா என்று தான் பொற்கொடியின் மனம் எண்ணிக் கொண்டிருந்தது.
"நான் வேணா கொஞ்ச நேரம் தூக்கிப் பார்க்கவாடி " என்றுக் கேட்க,
"அதெல்லாம் உன்னால முடியாதுடி நானே எப்படியாவது தூக்கிட்டு வந்துடுறேன் " மூச்சு வாங்க அவனின் பாரத்தை தாங்க முடியாது, அவளின் மேனியெல்லாம் வலி எடுக்க தூக்கிக்கொண்டு நடந்து வந்தாள்.
ஒரு மணி நேரப் பயணத்திற்குள் செல்ல வேண்டிய பாதையில் இரண்டு மணி நேரமாக அவர்கள் நடந்து வந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரின் கெட்ட நேரமோ என்னமோ அன்று அவர்களின் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என்று யாருமே அவர்கள் செல்லும் பாதையில் இடையில் வரவே இல்லை. ஒரு வழியாக தாங்கள் வசிக்கும் இடத்திற்கு வந்துச் சேர்ந்தனர்.
மயங்கியே விடும் அளவுக்கு சென்றிருந்தால் செங்ககமலி. அவளால் துளி அளவு கூட முடியவில்லை. வந்துவிட்டோம் வந்துவிட்டோம் என்று நினைப்பு தான் அவளின் முழு நம்பிக்கையை கொடுத்தது. இன்னும் நான்கு ஐந்து அடிகள் தான் எடுத்து வைத்தால் இவனை பத்திரமாக தன் இடத்தில் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்திலே பல்லை கடித்துக்கொண்டு தன் கொட்டகைக்கு வந்திருந்தாள்.
குடிசை வீட்டில் வெளியே இருந்த கயிற்றுக் கட்டிலில் அவனை அமர வைத்து அவளும் அப்படியே அமர்ந்து தன் இடுப்பில் இருந்த துணியை அவிழ்த்து விட, அவனோ அந்த கட்டிலில் சரிந்து விட்டான். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார் சமுத்திரா.
வெளியே வந்தவரோ கண் முன் இருந்த செயலைக் கண்டு அதிர்ந்து போய், "என்னங்கடி இது ? யாருடி இவன், பார்த்தா நம்ம ஆள் மாதிரியே இல்லை. எங்கிருந்துடி இவன தூக்கிட்டு வந்து இருக்கீங்க ? எப்ப பாரு போக, வரும் போது கிளியை பிடிச்சுட்டு மான புடிச்சுட்டு வருவே. அது என்ன இப்போ எவனையும் கூட்டிட்டு வந்திருக்கே. என்னடியாச்சு உனக்கு? ஒரு வேலை எதையும் வேட்டையாடுறேன்னு இவன கொன்னுட்டையாடி " என்று செங்கமலியின் அன்னையோ பயத்திலும் தவிப்பிலும் மகளிடம் கேட்க, அதற்கு பதில் கூட கூற முடியவில்லை. அப்படியே தரையிலே மயங்கி சரிந்து விட்டாள்.
தன் மகள் மயங்கி விழுந்ததை கண்ட சமுத்திராவோ அவளை தாங்க முயற்சிச் செய்ய பொற்கொடி வேகமாய் அங்கிருந்த குவளையை எடுத்துக் கொண்டு வந்து நீரினை அவளின் மீது தெளித்து விட்டாள். தன் மீது தண்ணீர் பட்ட பின்பு தான் லேசாக விழி திறந்தவள் முன்னிருந்த அந்த குவளையில் இருந்த தண்ணீர் மொத்தமும் குடித்து விட்டாள்.
அங்கிருந்து ஒரு விசிறியை எடுத்து தன் தோழிக்கு பொற்கொடி விசிறி கொண்டு இருக்க, "என்னடி நடக்குது இங்கே ?" என்று தலையே வெடித்து விடும் உணர்வில் சமுத்திரா கேட்க, பொற்கொடி தான் நடந்த அனைத்துமே கூறினாள்.
"அம்மயி இவங்களுக்கு உசுரு இருக்கு. நான் போய் ஐயாவை கூட்டிட்டு வாரேன் " எனக் கூறிய பொற்கொடி அங்கிருந்துச் சென்று விட,
'தன் மகள் செய்தது நல்ல காரியமாகவே இருந்தாலும் இவனை இப்படி கூட்டிட்டு வந்ததில் எதுவும் பிரச்சனை வந்து விடுமோ ?' என்ற பயத்திலே இருந்தார் சமுத்திரா.
மகளை ஆசுவாசப்படுத்த உதவி செய்துக் கொண்டிருந்தார். அவளின் கைகளை எல்லாம் அமுக்கி விட்டுக் கொண்டிருக்க, அவளின் மேனியெல்லாம் சிவந்திருந்தது. அவனின் பாரத்தை தாங்கிக்கொண்டு வந்ததில்.
"நான் சுடு தண்ணி வைக்கிறேன்டி ஒத்தடம் கொடுப்போம் இப்பவே இல்லனா வீக்கம் ரொம்ப ஆயிடும் " என்று மகளை எண்ணி பரிதவிப்போடு கூற,
"அம்மா எனக்கு ஒன்னும் இல்ல முதல்ல இவங்களுக்கு என்ன ஆச்சுன்னு பார்ப்போம் " என்று அவனை எண்ணி காரணமே இன்றி திடீரென கலக்கம் கொண்டாள்.
செங்கமலிக்கு யார் இவன் ? அவன் பெயர் கூட தெரியாது. அவனை பற்றி சிறு துளி கூட தெரியாது அப்படியிருக்க அவளின் மனம் ஏனோ அவனுக்காகப் போராடியது.
சில மணி நேரங்களுக்கு பின் அவளின் தந்தை நாச்சியன் அங்கு வரவே கயிற்றுக் கட்டிலில் கிடந்தவனை தான் கண்டார்.
பொற்கொடிச் சென்று இந்த விஷயத்தை சொன்னதுமே நாச்சியனோடு சேர்ந்து உடன் இருந்த அனைவருமே அங்கு வந்து விட்டனர்.
இப்பொழுது அவர்களின் வீட்டின் முன் கூட்டமே கூடி விட்டது. அவனை ஆச்சரியமாகத்தான் பார்க்கின்றனர்கள். கிழிந்த உடை என்றாலும் அவன் அணிந்திருந்த உடை அவர்களுக்கு வித்தியாசமாக இருந்தது. இவர்கள் அணியும் உடையும் அவன் அணிந்திருந்த உடையும் முற்றிலும் மாறுபட்டது.
அவனின் மேனியில் ஆங்காங்கு தங்கங்கள் இருப்பதைக் கண்டனர். அவர்களுக்கு அது தங்கம் என்று தெரிந்தாலும் இது இப்படித்தான் இருக்குமோ என்று ஆச்சரியமாக கண்டனர்.
ஆராய்ச்சி எல்லாம் பின் வைத்துக் கொள்ளலாம் அவனுக்கு என்ன ஆயிற்று என்பதை பரிசோதிக்க நினைத்த நாச்சியன் வைத்தியம் பார்க்க அவனின் அருகில் சென்றார். அவனின் மீது கரங்களை வைக்கப் போகும் நொடி அங்கிருந்த ஒரு பெரியவர் அவரை தடுத்தார்.
தொடரும்...
படித்து விட்டு தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்...

Last edited: