வளவன் 3
நாச்சியன் கயிற்றுக்கட்டிலில் கிடந்தவனைப் பரிசோதிக்க அவன் அருகில் செல்ல அதற்குள் அங்கே இருந்த ஒரு பெரியவர் அவரினை தடுத்தார்.
"ஏப்பா ஒரு நிமிஷம் நில்லுப்பா. என்ன இருந்தாலும் இவன் நம்ம ஆளுங்க கிடையாது. நீ இவனுக்கு வைத்தியம் பார்த்து இவனுக்கு ஏதாவது ஆகி அப்பறம் நம்ம மேல யாரும் புகார் சொல்லிடக் கூடாதுல " என்று கூறவே,
"அதுக்காக ஒரு உயிரை அப்படியே விட முடியுமா ஐயா.! யாரா இருந்தா என்ன நம்ம வைத்தியம் பார்ப்போம். சரியானா நல்லது தான் இல்லன்னா யாராவது தேடி வந்தா தகவல் சொல்லுவோம். அவ்வளவு தான் நம்மளால இதுக்கு மேல என்ன பண்ண முடியும் ?" என்று நாச்சியன் பதிலுக்கு கூறினார்.
"ஆமா தாத்தா அப்பா சொல்றது சரி தான் எதுக்கு வேண்டாம்னு சொல்றீங்க ? " என்று எங்கே நான் கஷ்டப்பட்டு அவனை அங்கிருந்து இங்கே சுமந்துக் கொண்டு வந்ததுக்கு பலன் இல்லாமல் போய்விடுமோ என்ற நினைப்பில் செங்கமலி கேட்க,
"ஏய் என்னடி பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும் போது நீ குறுக்க பேசுற வாய மூடு " என்று தன் மகளை அடக்கினார் சமுத்திரா.
அந்த பெரியவரை தொடர்ந்து ஊர்க்காரர்களும் தங்களுக்கு எதுவும் பிரச்சினை வந்து விடக்கூடாது, தாங்கள் நிம்மதியாக சந்தோஷமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்துக் கொண்டிருக்க, யாரின் உதவியும் நாடாமல் இருக்க, இவனின் மூலம் தங்களின் வாழ்க்கைக்கு பூகம்பம் வந்து இந்த காட்டினை விட்டு தங்களை வெளியேற சொல்லி விட்டால் என்ன செய்ய முடியும் ? அவர்களின் உலகமே அந்த காடு தான் அப்படி இருக்க அவர்களால் அவனுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு மனமில்லை.
"அப்போ என்ன தான் பண்ணலாம். இவனை இப்படியே விட முடியாதுல " என்று நாச்சியன் கேட்க,
அதே நேரம் அங்கிருந்த கமுதி என்ற ஒருவன், " ஏ...புள்ள நீ எங்க இருந்து இவனை கூட்டிட்டு வந்தே ?" என்றுக் கேட்கவே, அவளும் அந்த இடத்தினை கூற அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து விட்டனர்.
அவ்வளவு தூரத்தில் இருந்தா இந்த இடம் வரை இவனை சுமந்து கொண்டு வந்தாள். அதிர்ச்சி தான் அனைவருக்குமே...அவள் சொன்னதைக் கேட்டு கமுதிக்கோ எரிச்சல் உள்ளுக்குள் பொங்கிக் கொண்டு இருந்தது.
காரணம் கமுதி செங்கமலியை ஒரு தலையாக காதலிக்க எப்படியும் இந்த ஊருக்குள் தானே அவளை பெண் கொடுப்பார்கள் அந்த நம்பிக்கையில் தான் அவளின் மீது காதலை வளர்த்திருந்தான். ஆனால் எவனோ ஒருத்தனை அவள் சுமந்துக் கொண்டு வந்ததை அவனால் சுத்தமாக ஏற்க முடியவில்லை.
"தாத்தா அவருக்கு உசுரு இல்லைனாலும் நான் அப்படியே விட்டுட்டு வந்து இருப்பேன். ஆனா உசுரு இருக்கு. மயக்கத்தில இருக்கும் போது நான் இங்க கூட்டிட்டு வராம அப்படியே விட்டுட்டு வந்தா கரடி, நாய், சிங்கம் இப்படி ஏதாவது வந்துன்னா என்ன பண்ண முடியம். நம்ம யாருக்குமே பாவம் பண்ண கூடாதுன்னு நினைக்கிறவங்க அப்படி இருக்கும் போது ஒரு உசுர கொன்ன பாவம் வேண்டாம் அப்படின்னு சொல்லி தான் நான் இங்க கூட்டிட்டு வந்தேன். இப்ப நீங்க என்னடானா இவரால பிரச்சனை வந்துரும்னு சொல்லி வேண்டாம்குறீங்க ? அப்போ நான் அங்கே இருந்து கூட்டிட்டு வந்ததுக்கு எந்த அர்த்தமும் இல்லாம போயிடும்ல " என்று கேட்கவே, அவளின் நியாயமான பேச்சினைக் கேட்டு அனைவருமே யோசித்தனர்.
"சரி அப்ப நம்ம மூதாதையர் கிட்ட கேட்போம். அவர் அருள் வாக்கு நல்லபடியா சொல்லிட்டாரு அப்படின்னா நாச்சியன் நீ இவனுக்கு வைத்தியம் பாரு. அவரு வாக்கு கொடுக்கலைன்னா இவனை நம்ம எங்கேயாவது கூட்டிட்டு போய் விட்டுருவோம் " என்று அந்த கூட்டத்தில் இருந்த பெரியவர் கூற, இவர்களும் சரி என கேட்டுக் கொண்டிருந்தனர்.
பின் அனைவரும் மூதாதையர் ஆக தெய்வமாக வழிபடும் ஒரு இடம் இருக்க, அந்த இடத்திற்குச் சென்றனர்.
இவர்களின் இந்த குக்கிராமத்தை ஆரம்பித்து வைத்தவர் பரம்பரை பரம்பரையாக நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த ஒருவர் தான் அவர்களுக்கு இப்பொழுது தெய்வம். அவரை தான் அவர்கள் கடவுளாக வணங்கினர். இந்த கிராமத்தை உருவாக்கிய அவர்கள் என்றுமே இந்த கிராமத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயலை தங்களுக்கு கூற மாட்டார்கள் என்ற நினைப்பில் தான் இப்பொழுது அந்த ஊரில் இருந்த அனைவரும் சிலையாக அவரின் ஒரு உருவ பொம்மையை செய்து வைத்திருக்க அங்குச் சென்று நின்றனர்.
சில நிமிடங்கள் செல்ல அவரை வழிபடுவதற்கு தேவையான பொருட்களை எல்லாம் கொண்டு வந்து வைத்தனர். சேவலையும் கொண்டு வந்தனர். மலர்களாலும் இலைகளாலும் ஆன மாலைகளை அந்த சிலைக்கு போட்டுவிட்டு பூஜை செய்யும் பூசாரியான ஒருத்தர் அடுப்பு கறியை எடுத்து தன் மீது பூசிக்கொண்டு பூஜையை ஆரம்பித்தார்.
அனைவருமே கரம் குவித்து அவரை வழிபட திடீரென அவருக்குள் அவர்கள் வணங்கும் தெய்வம் புகுந்து விட்டது. அவர்களின் மூதாதையார் இப்பொழுது அந்த பூசாரிக்குள் வரவே, "எதுக்குடா என்னை வர வைச்சீங்க ? உங்களுக்கு என்னடா வேணும் சொல்லுங்க ?" என்று ஆடிக்கொண்டே அவர் கேட்க, அவரின் கரங்களில் ஒரு புறம் நெருப்பு மற்றொரு புறங்களில் ஈட்டி போன்ற கூர்மையான ஆயுதம்.
"புதுசா நம்ம கூட்டத்துக்குள் ஒருத்தன் வந்து இருக்கான். அவனை நம்ம ஏத்துக்கணுமா ஏத்துக்க கூடாதான்னு எங்களுக்கு தெரியல. அதுக்கு நீ தான் ஒரு வழியை காட்டணும். அவன் இப்போ பேச்சு மூச்சு இல்லாம மயக்கத்துல கிடக்கான். வெளியூரை சேர்ந்தவன் போல ஆபத்துல வந்து நம்ம கிட்ட நிற்கிறான். இப்ப என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்க ?" என்று தங்களின் கோரிக்கையை அவரிடம் கூறவே, அவரும் அதனை ஏற்று தன் கையில் இருந்த ஆயுதத்தை வைத்து முன்னே இருந்த சேவலின் தலையை வெட்டினார்.
அந்தத் தலையின் ரத்தம் அங்கிருந்து ஒரு குவளையில் படிந்தது. அந்த குவளையை எடுத்து அவர்கள் தெய்வமாக வணங்கும் அந்த சிலைக்கு அபிஷேகம் செய்யவே, அதுவோ கருமையாக மாறியது.
அந்த அபிஷேகம் சிகப்பாக இருந்தால் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம். அதே கருப்பாக அவருக்கு பிடித்த நிறமாக மாறி விட்டால் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்பது தான் அர்த்தம். அனைவரின் பார்வையும் அந்த அபிஷேகம் செய்யும் இடத்தில் தான் இருந்தது. அவர்கள் நினைத்ததுப் போலே கருமையாகி விடவே, பின் என்ன உத்தரவு கொடுத்து விட்டது என நினைத்தனர்.
"சாமி உத்தரவு கொடுத்துருச்சி " என்று அந்தப் பெரியவர் கூற,
"ஆமாடா போ அவனுக்கு நீ உதவி பண்ணு. அவனால எந்த பிரச்சினையும் வராது. நம்மளால தான் அவனுக்கு நல்லது நடக்கும்டா போங்க " என்று ஆடிக்கொண்டே கூற, அவர்களும் சரி எனக் கூறி அந்த பூசாரியின் காலில் விழுந்து வணங்கினர்.
பின் அவரை ஆசுவாசப்படுத்த அவரும் பழைய நிலைக்கு திரும்பினார்.
"அப்போ நான் இப்பவே போய் வைத்தியத்தை ஆரம்பிக்கிறேன். எப்படி இருக்கானோ அந்த பையன் ?" என கூறிக்கொண்டு நாச்சியன் செல்ல, அவனோடு தான் அந்த கூட்டமும் சென்றது.
தன் தந்தையோடுப் பின்னே வேகமாய் ஓடினாள் செங்கமலி. அவளின் அந்த தவிப்பு, பதட்டம் தங்களுக்கு அனுமதி கொடுத்து விட வேண்டும் என்று அவள் வேண்டிக் கொண்ட விதம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
இப்பொழுது நாச்சியன் தன் வீட்டுக்கு வந்து அந்த கயிற்று கட்டிலில் மூச்சையாக்கி படுத்திருந்தவனின் கரத்தினை பிடித்து அவனின் துடிப்பு எப்படி இருக்கிறது என்பதை பரிசோதித்தார். பின் அவனின் காயங்களை எல்லாம் ஆராய்ந்துப் பார்த்தார்.
அவர் சில செடிகளின் பெயரை எல்லாம் செங்கமலியிடம் கூற, அவளும் அதனை எடுத்துக் கொண்டு வந்தாள். அதிலிருந்து சிலதை எடுத்து இதையெல்லாம் அரைத்துக் கொண்டு வருமாறு கூறினார்.
அவளும் அவளின் அன்னையும் அந்த மருந்தை அங்கிருந்த கல்லில் தட்டிச் சாறு பதத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்தனர்.
"இவன் இதை முதல்ல குடிக்கணும். அப்பறம் இவனுக்கு நாம கட்டு போட்டு விடனும் நாட்டுக்கோழி முட்டையை எடுத்துட்டு வாங்க சீக்கிரம் " என்று அவர் ஒவ்வொன்றாக என்னவெல்லாம் கேட்கிறாரோ அதெல்லாம் அன்னை மகள் இருவரும் செய்தனர்.
அருகிலிருந்த ஆண்களை வைத்து மருந்தினை புகட்டினார். அவர்களின் தொழிலே வைத்தியம் என்று ஆன பின் அதுவும் அவர்கள் வழங்கும் கடவுளே உத்தரவு கொடுத்த பின் சமுத்திராவால் எதுவும் செய்யாது இருக்க முடியாது அல்லவா !
எப்படியாவது தன் கணவனுக்கு உதவி புரிய வேண்டும் அதுவே அவரின் ஒவ்வொரு நாள் வேலையும். இது செங்கமலியும் சேர்ந்துக் கொண்டது தான் ஆச்சரியம். செங்கமலி எப்பொழுதுமே தந்தையின் அருகில் இருந்துக் கொண்டு அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை தான் பார்த்துக் கொண்டிருப்பாள். ஆனால் இப்பொழுது அவள் அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்ய அதையெல்லாம் அங்கு ஒரு சிறிய பாறை போன்று இருந்த கல்லில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் கமுதி.
"சரிப்பா பையன் கண்ணு முழிச்சுட்டான்னா தகவல் சொல்லு " எனக் கூறி அங்கிருந்து அனைவருமே அவரவர் வேலையை பார்க்கச் சென்று விட்டனர்.
பொழுது சாயம் நேரம் வரை அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார் நாச்சியன். அவன் எப்பொழுது கண்விழிப்பான் என்று அவருக்கே தெரியாது. ஆனால் என்ன மருந்தெல்லாம் கொடுக்க வேண்டுமோ அதெல்லாம் அவனுக்கு அவர் சரியாக கொடுத்து விட்டார்.
இப்பொழுது அவன் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் காத்திருந்தார். அவனின் கைகளிலும் காலிலும் பலமாக அடிபட்டிருக்க எலும்பு முறிவும் ஏற்பட்டிருந்தது. அதற்கு சில இலைகளையும் நாட்டுக்கோழி முட்டையையும் வைத்து துணியால் அதனை இறுக்கமாக கட்டி இருந்தார். அவனின் கழுத்தோடு சேர்ந்து கைகளை கட்டி இருக்க கால்லை அசைக்க முடியாதவாறு இருந்தது.
ஒரு வழியாக அனைத்தும் முடிந்து விடவே, "அப்பா என்ன இது இவ்வளவு பெரிய கட்டுப்போட்டு விட்டு இருக்கீங்க ? நான் பார்த்தப்ப அவருக்கு அங்கங்க காயம் தானே இருந்தது ?" என்றுக் கேட்கவே,
"ஆமாம்மா அதெல்லாம் வெளிக்காயம். உள் காயம் இவனுக்கு ரொம்பவே இருக்கு. பாறையில மரத்தில எல்லாம் மோதி இருக்கான். அதனால கை காலுல எலும்பு முறிவு வந்திருக்கு. நான் இப்போ இந்த வைத்தியம் பண்ணி இருக்கேன். இந்த பையன் கண் விழிச்சா தான் வேற எங்கேயாவது இவனுக்கு வலிக்குதான்னு நம்ம தெரிஞ்சுக்க முடியும் " என அவனைக் கண்டவாறே கூறினார்.
"சரிங்க. ஆனா இவனை இப்படியே வச்சு இருக்க முடியாதுல. வெளியேவே இருந்தா எப்படி ராத்திரி நேரம் மழை விழுகும், இல்ல குளிர் தாக்கும், ஏதாவது பூச்சி வரும். என்ன பண்ண முடியும் நம்மளால ?" என்று சந்தேகமாய் சமுத்திரா கேட்க, அப்போது தான் அவருக்கும் அந்த யோசனை தோன்றியது.
இது வரைக்கும் அந்த ஊரை சேர்ந்தவர்கள் யாராவது அவரிடம் வைத்தியம் பார்க்க வந்தால் அவரோ ஒன்று அவர்களின் வீட்டில் சென்றுப் பார்த்து விட்டு வருவார். இல்லையா இவரிடம் வந்து பார்த்த பின் அவர்கள் வீட்டுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் இவனை இப்பொழுது தங்க வைக்க வேண்டும் என்ன செய்யலாம் ?என்று யோசித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து அனைவரின் வீடுகளும் பெரும்பாலும் சின்ன சின்ன குடிசை போன்று வீடுகள் தான்.
பெற்றவர்கள் இருவரும் யோசித்து கொண்டு இருக்கும் நொடியே சட்டென, "அப்பா நான் படுத்திருப்பேன்ல அந்த சின்ன முடக்கு இருக்குல வீட்டுக்குள்ள. அங்கையே இவரை படுக்க வச்சுக்கலாம். நான் அம்மா கூட வெளியில படுத்துக்கிறேன் " எனக் கூறினாள். அதனைக் கேட்ட
கமுதியோ தூரத்தில் நெருப்பினை விட பல மடங்கு தீயாய் எரிந்துக் கொண்டிருந்தான்.
தொடரும்...
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

Last edited: