வளவன் - 4
பெங்களூர் மாநகரத்தில்...
காலை நேரத்தில் தொலைக்காட்சியில் கந்த சஷ்டி கவசம் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அதைக் கேட்டவாறு பூஜையறையில் இருந்து வரும் சாம்பிராணியின் வாசத்தை நுகர்ந்தவாறு அடுக்களையில் காலை உணவினை சமைத்துக் கொண்டிருந்தார் தாரகை.
அவருக்கு தினமும் காலை பரபரப்பாக தான் இருக்கும். ஆனால் ஒரு நாளும் எந்தவொரு பதட்டமும் இல்லாது தன் கணவருக்கும் மகனுக்கும் என்ன தேவையோ அதனை சரியாக செய்து நேரத்திற்கு கொடுத்து விடுவார். இப்பொழுது மகன் வெளியூர்ச் சென்றிருக்கவே கணவர் ஆடிட்டர் வேலைப் பார்க்க அவருக்காக தான் காலை உணவினை முருகரை மனதில் எண்ணி அவரின் 'ஓம் சரவணபவ ' என்ற மந்திரத்தை ஒலித்தவாறே சமைத்தார்.
தாரகையின் கணவனான மயில்நாதன் அப்பொழுது தான் குளித்து முடித்து இடுப்பில் கட்டிய டவலோடு வந்து பூஜையறையில் வாசனை மலர்களாலும் சாம்பிராணி நறுமணத்தாலும் பரவி இருந்த தெய்வங்களின் முன்னே விழுந்து வணங்கினார்.
"அப்பனே முருகா இன்னிக்கு நாள் நல்லபடியா அமோகமா போகணும் முருகா. அதுக்கு நீ தான் துணையா இருக்கணும் " என்று வேண்டிக்கொண்டு அங்கிருந்த திருநீரை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டார்.
அதே நேரம் அவருக்கு சூடான காஃபியைக் கொண்டு வந்து தாரகை கொடுக்க இன்முகத்தோடு வாங்கிக் கொண்டார்.
"இன்னைக்கு உங்களுக்கு சாம்பாரும் வெண்டைக்காவும் பொரியலும் வச்சிருக்கேன். ஓகே தானே வேற ஏதாவது செய்யணுமா சொல்லுங்க சீக்கிரம் செஞ்சிரலாம். இன்னும் நேரம் இருக்கு. வளவன் தான் இல்லைல " என்றுக் கேட்கவே,
"போதும் போதும். அப்பறம் நான் ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே கிளம்புறேன் நீ பேக் பண்ணி வச்சிரு. வளவன் எதுவும் கால் பண்ணான்னா ? அவன் கிட்ட இருந்து இரண்டு நாளா எந்த தகவலும் வரலையே ? எப்பவுமே டூர் போனா நம்ம கிட்ட பேசுவான்ல " என்று மயில்நாதன் கேட்டார்.
"ஆமாங்க என்னன்னே தெரியல ரெண்டு நாளா கால் பண்ணவே இல்ல. நானும் அவனோட பிரெண்டுக்கு கால் பண்ணி கேட்டேன் நேத்து நைட்டு. ரிங்கே போக மாட்டேங்குது. சரி பார்ப்போம். இன்னைக்கு ஆப்டர்நூன் போல மறுபடியும் ட்ரை பண்ணி பார்க்கலாம் அப்படின்னு நினைச்சுட்டேன். போகும் போதே சொன்னான் நான் மலைப்பகுதிக்கு தான் போறேன் அங்கே சிக்னலே கிடைக்காதுன்னனு. என்னை நினைச்சி நீங்க கவலைப்படாதீங்கன்னு சொல்லிட்டு இருந்தான் " கூறிக் கொண்டிருக்கும் போதே குக்கரின் விசில் சத்தம் கேட்கவே, மீண்டும் சமையலறைக்குள் புகுந்து விட்டார்.
ஏனோ மயில்நாதனுக்கு உள்ளமெல்லாம் ஒரு தவிப்பு. காலையிலிருந்து தனது வலது கண்ணும் உறுத்துவதுப் போன்று எண்ணம். அவரை பொறுத்தவரை அவருக்கு கண் உறுத்துகிறது என்றால் ஏதாவது கெட்டது நடக்கப்போகிறது என்று தான் அவரின் மனம் ஒவ்வொரு நொடியும் கூறும்.
சரி எதுக்கும் மகனிடம் ஒரு வார்த்தை பேசி விடலாம் என நினைத்தவரோ தன் மகனுக்கு அழைக்க அழைப்புச் செல்லவில்லை. பின் அலுவலகத்திற்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கிளம்ப ஆரம்பித்தார்.
தாரகையும் சரியாக அதே நேரம் காலை உணவினை முதலில் வெளியே உள்ள காகத்திற்கு வைப்பதற்காக ஒரு வாழை இலையில் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார்.
தினமும் அவர் காகத்துக்கு உணவு கொடுத்த பின் தான் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் உண்பார்கள். எப்பொழுதுடா தனக்கு உணவு வரும் என்றும் தாரகையின் உணவுக்காக வெளியே காகங்களும் காத்திருக்கும் அன்றும் அப்படி தான் சென்றார்.
அதை வைக்கும் போதே முதலில் அவரின் விழிகளுக்கு விழுந்தது அண்டங்காக்கா தான். இதை கண்டால் கெட்டது என்று பெரியவர்கள் கூறுவதை நினைத்தவரோ, 'அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ' என தன் மனதிற்குள்ளே கூறி மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தார்.
அதே நேரம் உணவினை உண்பதற்கு மயில்நாதன் டைனிங் டேபிளில் அமர அவருக்கு உணவு பரிமாறிக் கொண்டு, "போயும் போயும் நான் காலையில இந்த அண்டங்காக்காவை தான் பார்த்து தொலையணுமா " என்று புலம்பவே,
"அதை போய்யா பார்த்தே. எப்பவுமே நம்ம அதை பார்க்கவே மாட்டோமே இன்னைக்கு என்ன அது நம்ம வீட்டு பக்கம் வந்திருக்கு. எனக்கு வேற காலையில இருந்து மனசு சரியில்லை. கண்ணு வேற உறுத்திக்கிட்டே இருக்கு என்னாச்சுன்னு தெரியலையே ?" என்று பெரியவர்கள் இருவரும் நினைத்துக் கொண்டிருக்கும் அதே நேரம் மயில்நாதனின் கைப்பேசி ஓசை எழுப்பியது.
புதிதாக ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வரவே அதனை எடுத்தார்.
"ஹலோ யாரு சொல்லுங்க ?" என்று எடுத்ததும் கேட்க,
"நாங்க திருச்சி ஹாஸ்பிட்டல்ல இருந்து பேசுறோம். கரிகாலன் யாருன்னு உங்களுக்கு தெரியுமா ?அவர் தான் இந்த நம்பரை கொடுத்து கால் பண்ண சொன்னாரு " என்றார்கள்.
"நல்லாவே தெரியுமே என் பையனோட பிரெண்டு தான். ஹாஸ்பிட்டல் இருந்து பேசுறீங்களா என்ன விஷயம் ? கரிகாலனுக்கு என்னாச்சு ?" என்றுக் கேட்க,
"அவங்க நல்லா தான் இருக்காரு இதோ கொடுக்கிறேன் நீங்களே பேசுங்க " என அந்த செவிலியர் கரிகாலனிடம் கொடுத்தார்.
அதனை வாங்கி குரல் தளர, "அப்பா என்ன மன்னிச்சிடுங்கப்பா, வளவன் நம்மள விட்டு போயிட்டான் " என்கவே திகைத்து அப்படியே இருக்கையில் அமர்ந்து விட்டார்.
தன் கணவனின் அதிர்ச்சியை கண்ட தாரகைக்கோ என்னவென தெரியாது நொடியில் உள்ளமெல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்தது.
"ஐயோ என் பையன். என்னப்பா சொல்ற ? வளவனுக்கு என்னாச்சு நீ எங்க இருக்கே ?" என்று தவிப்போடுக் கேட்கவே, மீண்டும் அந்த செவிலியர் வாங்கி தாங்கள் இருக்கும் முகவரியை கூறினர்.
இவர்களோ இங்கே பெங்களூரில் இருக்க அந்த முகவரியோ திருச்சியில். கைபேசியை வைத்தவரோ தன் மனைவியிடம் அதனைக் கூற, ஒரே மகன் இந்த உலகத்தை விட்டு போய்விட்டான் என திடீரென கூறினால் எந்த தாயால் தான் அதனை ஏற்றுக் கொள்ள முடியும் ?
"இல்ல என் பையன் என்னை விட்டு போக மாட்டான். நான் அவனை நேர்ல பார்க்கணும். வாங்க சீக்கிரம் அந்த இடத்துக்கு போகலாம் " என்கவே, முதலில் மனைவியை ஆசுவாசப்படுத்தியவருக்கு தங்களுக்கு கிடைத்த இந்த தகவல் பொய்யாக இருக்க வேண்டும் என்று அப்பொழுது கூட அவர்களின் வீட்டு பூஜை அறையில் இருந்த அனைத்து தெய்வங்களையும் வேண்டினார். நண்பன் ஒருவனின் மூலம் பிளைட் டிக்கெட் புக் செய்தார் மயில்நாதன்.
நேரம் செல்ல மாலை நேரம் வந்து விடவே ஒரு வழியாக பெங்களூரில் இருந்து திருச்சிக்கு வந்துச் சேர்ந்தனர். பின் தங்களிடம் இருந்த முகவரியை வைத்து அந்த மருத்துவமனைக்கு இருள் சூழ்ந்த நேரம் வந்து விட்டனர்.
மயில்நாதன், தாரகை இருவரின் ஒரே செல்ல மகன் தான் வளவன். சிறு வயதில் திடீரென ஒரு நாள் விளையாடிக் கொண்டிருக்கும் போது தெரியாமல் தரையை ஒட்டி இருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததில் ஒரு வழியாக உயிர் பிழைத்தாலும் அவனுக்கு பேசும் திறனும் கேட்கும் திறனும் செயல் இழந்து விட்டது.
அப்போது இருந்து அவனை தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினர் பெற்றோர்கள். வளர வளர அவனும் சுதந்திரமாக தான் வளர்ந்தான். தனக்கு ஒரு குறை இருக்கிறது என்பதை பெரிதாக எடுக்கவில்லை. மற்றவர்கள் போல் அவனாலையும் எளிதாக அனைவரின் முன்னிலையிலும் வாழ முடிந்தது. பேச வேண்டும் என்றால் மட்டும் தான் அவனால் அதை வாய் திறந்து கூற முடியாத துன்பம்.
தன் முன் இருக்கும் யாராவது தன்னை திட்டினார்கள் கூட அது அவனுக்கு கேட்காது, கடவுள் ஏன் தன் ஒற்றை மகனுக்கு இப்படி ஒரு கஷ்டத்தை கொடுத்து விட்டார். இருவரும் சேர்ந்து செல்லாத மருத்துவமனையே இல்லை. மீண்டும் தன் மகனைப் பேச வைக்க வேண்டும் அவனின் செவி திறனை சரிப்படுத்த வேண்டும் என நினைத்தார்கள்.
ஆனால் வருடங்கள் கடந்து அவனும் இளைஞன் ஆகிவிட்டானே தவிர எந்த பயனும் இல்லாதுப் போனது.
கல்லூரி முடிந்ததும் வீட்டிலேயே சில காலம் இருந்தவன் அப்படியே வீடியோ கேம் தயாரிப்பது, கோடிங் எழுதுவது, டிசைன் செய்வது இப்படி தனக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வந்து, அவனுக்காக பல கம்பெனி வரிசையில் காத்திருக்கும் நிலையில் தன் திறனை வளர்த்துக் கொண்டான்.
வீட்டுக்குள்ளே அவனாளும் எத்தனை வருடங்கள் தான் இருக்க முடியும் ? தன் கல்லூரி நண்பனோடு வெளியேச் சுற்றுலா சென்று வரலாம் என நினைத்து கரிகாலனோடு கிளம்பினான். இவன் இப்படிச் செல்வது முதல் முறையல்ல. அடிக்கடி நடக்கும் என்பதால் கரிகாலனை நம்பி அவனின் பெற்றோர்களும் அவனை விட்டனர். ஆனால் இப்பொழுது அவர்களுக்கு கிடைத்த தகவல் வளவனின் இறப்புச் செய்தி தான்.
மருத்துவமனையில் கரிகாலனின் குடும்பமும் காவல் அதிகாரிகள் என்று அனைவரும் அங்கே இருக்க, வளவனின் பெற்றோர் வந்தனர்.
அவர்கள் ஏற்கனவே கரிகாலனின் அக்கா திருமணத்திற்கு குடும்பத்தோரோடு வந்திருந்ததால், கரிகாலனின் குடும்பத்தார் இவர்களை அறிந்திருந்தனர்.
அவர்களைக் கண்டதுமே கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றெடுக்க தாரகை என்ன நடந்தது என்பதைக் கேட்க அதுவரை கரிகாலனிடம் விசாரித்த காவல் அதிகாரிகள் இப்போது தகவலை கூறினர்.
கரிகாலன் வளவன் இருவருமே தங்களின் டூவீலரில் மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கே வளைவு பாதையில் இருவரும் சென்ற போது எதிரே திடீரென ஒரு காட்டுனாய் பக்கவாட்டில் இருந்த மலையில் இருந்து வேகமாய் வந்து சாலையில் விழவே இதனை எதிர்பாராது கரிகாலன் பிரேக்கிட முயற்சித்தான்.
அதுவோ முடியாதுப் போக வண்டியோ அவனின் கைகளை மீறி பயணித்தது. அருகில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி தூக்கி வீசவே, பின்னே அமர்ந்திருந்த வளவன் அந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நொடியில் யாரின் விழிகளுக்கும் தெரியாமல் மறைந்துப் போனான். கரிகாலன் முன்னே அமர்ந்திருந்ததால் அவன் சாலையில் விழுந்து விட்டான்.
அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டமோ எப்பொழுதாவது தான் இருக்கும். கரிகாலன் மயங்கி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பு சிலர் அவனைக் காண, உடனே மருத்துவமனைக்கும் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்து விட்டனர்.
அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் அங்கு வந்து மயக்கத்தில் இருந்த கரிகாலனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு நாள் முழுவதும் அவனுக்கு மயக்கம் தெளிந்த பின்பு தான் அவன் யார் என்ற தகவல்களை அவர்கள் விசாரித்து பின் அவனின் குடும்பத்தாரிடமும் கூறினர்.
அப்போது தன்னோடு வந்தவனுக்கு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை என்று கூறவே, மற்றொரு காவல் அதிகாரி அதனை விசாரிக்க தான் செய்திருந்தார். அவர்கள் விசாரித்த வரை அந்த மலையில் இருந்து கீழே விழுந்த யாருமே உயிரோடு இருக்க மாட்டார்கள். அவர்களைத் தேட நினைத்தால் எலும்பு கூட கிடைக்காது அவ்வளவு ஆபத்தான பகுதி அது என்று அங்கே வசிக்கும் அனைவரும் அவரிடம் கூறி இருக்கவே வளவன் இறந்து விட்டதாக மேலதிகாரியிடம் தகவல் கூறிவிட்டனர்.
இதுவரை நடந்த அனைத்தையுமே அந்த காவல் அதிகாரி வளவனின் பெற்றோரிடம் கூற, தன் மகன் இந்த உலகத்தை விட்டுச் சென்று விட்டான் என்பதை தன் நெஞ்சத்தில் பதிய வைக்க முடியாது கதறலோடு அப்படியே மயங்கிச் சரிந்தார் தாரகை.
அங்கிருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதிக்க ஆரம்பித்தனர். காவல் அதிகாரிகளிடம் எப்படியாவது தங்களின் மகனின் உடலையாவது தாங்கள் காண வேண்டும் அவனின் இறுதிச்சடங்கையாவது தாங்கள் செய்ய வேண்டும் தங்களின் ஒற்றை மகன் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தயவு செய்து கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று காலில் விழாத குறையாக மன்றாடினார் மயில்நாதன்.
வனவிலங்குகள் நடமாடும் அந்த காட்டுப்பகுதிக்குள் யாரும் உள்ளே சென்று தேட முடியாது என்று அந்த காவல் அதிகாரி கூறிவிட்டு அங்கிருந்து தங்களுக்கு வேண்டிய தகவல்களையும் வாங்கிச் சென்று விட்டனர்.
இப்பொழுது என்ன செய்வது என்பது தெரியாது, ஒரு புறம் மனைவி மயக்கத்தில் கிடக்க மறுபுறம் மகனை இழந்த வேதனையிலும் தவிப்பிலும் அப்படியே மருத்துவமனை என்றும் பாராது தரையில் சரிந்து நெத்தியில் அடித்துக் கொண்டு கதறி அழுதார். அதை பார்த்த கரிகாலனின் குடும்பத்தார் தான் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர்.
"கவலைப்படாதீங்க சார் எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு கமிஷனர் சார் நல்லாவே தெரியும். நம்ம நேரா அவர்கிட்ட போய் பேசலாம் " என்று கரிகாலனின் தந்தை கூற, சிறு துளி நம்பிக்கை பிறந்தது.
தன் மகனின் உடலையாவது கடைசியாகப் பார்த்து விட வேண்டும் என்ற துடிப்பிலே அவர் ஒவ்வொரு நொடியையும் அதன் பின் செலுத்த ஆரம்பித்தார். ஆனால்அவருக்கு தெரியாத ஒரு விஷயம் வளவன் உயிரோடு வனதேவதையின் வீட்டில் பத்திரமாக இருக்கிறான் என்று.
தொடரும்
படித்து விட்டு தங்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Last edited: