• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வனதேவதை வளவன் - 5

MK15

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
33
44
18
Tamil nadu
வளவன் - 5

இரவு நேரம் போல் செங்கமலி கூறியதைக் கேட்டு பெற்றவர்கள் ஒத்துக் கொண்டனர்.

அவர்களுக்கும் வேற வழி இல்லையே அதனாலே அங்கிருந்த பொற்கொடியின் தந்தையை அழைத்து நாச்சியனும் அவரும் சேர்ந்து மூர்ச்சையாகி இருந்த வளவனை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.

செங்கமலி படுக்கும் அந்த கயிற்றில் கட்டிலில் அவனை படுக்க வைத்தனர். அவனுக்கு பக்கவாட்டில் ஒரே ஒரு தடுப்பு மட்டும் இருந்தது. அது தான் அவர்களைப் பொறுத்தவரை அறை. அந்த தடுப்பு மரங்களால் ஆன குச்சிகளை வைத்து நெருக்கமாக தட்டிப் போன்று வீட்டுக்குள் மறைவாக அமைத்திருந்தனர்.
செங்கமலியின் அறை தான் அது.

அவன் இனி கண் விழித்தால் மட்டுமே அவனுக்கு அடுத்து என்ன புதிதாக மருந்து கொடுக்க வேண்டுமென தெரியும் என்று நாச்சியன் மகளிடம் ஏற்கனவே கூறியிருந்தார்.

அந்த இரவு முழுவதும் ஏனோ அவளுக்கு நித்திரை என்பதே இல்லை. நேற்று இரவு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு இன்று தன் படுக்கையில் அவன் இருக்கிறான்.

அதை விட யார் என்றே தெரியாத அவன் ஏன் தன் விழிகளில் விழுந்தான் ?

தன் மனம் ஏன் அவனைக் காப்பாற்ற துடித்தது ? யாராக இருந்தாலும் காப்பாற்றி இருப்பேன் ஆனால் இந்த ஒரு நாளிலேயே தன் உள்ளம் அவனுக்கு விரைவில் சரியாக வேண்டும் என துடித்துக் கொண்டிருப்பது அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

ஒரு வேளை தங்களின் இனத்தை சேர்ந்தவன் அல்லாது வெளியில் இருந்து வந்ததால் தான் இவ்வளவு கரிசனம் கொள்கிறோமோ என நினைத்து அவளையே அவள் தேற்றிக் கொண்டாள்.

அடிக்கடி அந்த இரவு நேரம் எழுந்து அவன் கண்விழித்து விட்டானா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒரு வழியாக மறுநாள் வந்து விட அதே பழைய பச்சிலை மருந்தை தான் அவனுக்கு கொடுத்தனர். நாட்கள் கடந்தும் அவனோ கண் திறக்கவில்லை. ஆனால் உயிரோடு தான் இருந்தான்.

"என்னப்பா ரெண்டு நாளாச்சு இவங்க இப்படியே இருக்காங்க ?" என்று செங்கமலி தன் தந்தையிடம் கேட்க, அதையே தான் அவரின் மனைவியும் கேட்க,

"என்னங்க இது இவனையே நம்ம பார்த்துக்கிட்டு இருந்தா மத்த வேலையை பார்க்க வேண்டாமா ? " என்றார்.

"என்னம்மா பண்ண சொல்ற ?நானும் எல்லா வைத்தியமும் பண்ணி பார்த்துட்டேன். ஆனா இவன் ஏன் கண்ணு முழிக்கலைன்னு தெரிய மாட்டேங்குது. சரி பார்ப்போம் இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள். இல்லன்னா யாரையாவது விட்டு தகவலை சொல்ல சொல்லுவோம். அதுக்கு மேல நம்மளால எதுவும் முடியாது " எனக் கூறி விட்டார் நாச்சியன்.

மாலை நேரம் தன் தோழியோடு அவர்கள் தெய்வமாக வணங்கும் அந்த சிலையின் முன் நின்று, " கடவுளே அவர் எப்படியாவது கண் விழிக்கணும் " என்று அவனுக்காக வேண்டிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்ட பொற்கொடிக்கோ ஆச்சரியம்.

'அவளின் அன்னைக்கோ தந்தைக்கோ அல்லது மற்ற யாருக்கோ உடல்நிலை சரியில்லாமல் போனால் இப்படி எல்லாம் வந்து வேண்டுபவள் இல்லையே ? இவனுக்காக மட்டும் இப்படி வந்து வேண்டுகிறாலே ' என நினைத்து சந்தேகத்தோடு பொற்கொடி அவளிடம் நடந்து வந்தவாறேக் கேட்டாள்.

"என்னடி உனக்கு அவங்க மேல இவ்வளவு கரிசனை ?"

"ச்சே அப்படியெல்லாம் இல்ல. நான் படுத்து இருக்கிற என்னோட இடத்தில தானே அவங்க படுத்திருக்காங்க. சீக்கிரம் கண் முழிச்சிட்டனா போயிடுவாங்கல அதனால தான் " என்றுக் கூறவே,

"பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். பார்த்துடி நீ சொல்றத நம்புறேன். ஆனால் உன் போக்கு சரி இல்லை சொல்லிட்டேன் " என இவர்கள் பேசிக்கொண்டு நடக்கும் போது எதிரே வந்து நின்றான் கமுதி.

அவன் கையில் ஒரு சாக்குப்பை இருந்தது. அதை செங்கமலியின் முன் நீட்டினான்.

"என்னது ? எதுக்கு என்கிட்ட கொடுக்குறீங்க ?" என்றுக் கேட்கவே,

"இதுல மரவள்ளிக்கிழங்கு இருக்கு. உனக்கு தான் இது ரொம்ப பிடிக்குமே. அதனால தான் புடிங்கிட்டு வந்தேன் " எனக் கூறிக் கொடுக்க, அவர்கள் இருப்பது குக்கிராமம் என்பதால் ஒவ்வொரு பொருள்களையும் மாறி மாறி பரிமாறிக் கொள்வார்கள். அவளோ இவனின் எண்ணம் என்ன என்று தெரியாது சரி என வாங்கிக் கொண்டாள்.

தான் கொடுத்ததை அவள் வாங்கியதே அவனுக்கு அப்படியொரு உல்லாச உணர்வு. காற்றில் மிதப்பதுப் போன்று நடனமாட தான் அவனின் கால்களும் கைகளும் துடித்தது.

அதே நேரம் இங்கே பெங்களூரில் தாரகையை அவரின் சொந்தக்காரர்கள் அருகில் இருந்தே கவனித்துக் கொண்டாலும் தன் மகன் தன்னை விட்டுச் சென்று விட்டான் என்ற எண்ணத்திலே அவர் வாடி வதங்கி கொண்டே இருந்தார்.

வளவனின் வீட்டில் அவனின் புகைப்படத்திற்கு மாலையிட்டு ஊது பத்தி வாசனையோடு வீற்றிருந்தான். வந்தவர்கள் எல்லாம் துக்கம் விசாரித்துச் சென்றுக் கொண்டே இருந்தனர். திருச்சியில் இருந்து வந்து இரு நாட்கள் கடந்து விட்டது.

மயில் நாதனுக்கு ஓர் அழைப்பு வர அந்த அழைப்பினை எடுத்தார். அது கரிகாலனும் அவனின் தந்தை இருவரும் சேர்ந்து தான் அழைத்திருந்தனர். இருவரும் பெங்களூர் வந்திருந்தனர். பெங்களூரில் அங்கே கமிஷனர் ஆக இருப்பவர் கரிகாலனின் தந்தைக்கு தெரிந்த ஒருவரின் முக்கிய நண்பன். சென்னையிலும் திருச்சியிலும் இருந்த காவல் அதிகாரிகளிடம் பேசிப் பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போகவே கடைசியாக பெங்களூரில் இருந்த கமிஷனரிடமே உதவி கேட்க நினைத்து விட்டனர்.

மறுநாள் மூவரும் சேர்ந்து கமிஷனர் அலுவலகம் சென்றனர். அங்கே அவர்களை வரவேற்ற கமிஷனர் உட்காரக் கூறி விசாரணையை நடத்தினார்.

"சொல்லுங்க என்ன விஷயம் ? என்னை பார்க்கணும்னு நீங்க மூணு நாளா ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தீங்க அப்படின்னு கேள்விப்பட்டேன். என்ன பிரச்சனை ?" என்றுக் கேட்கவே, உடனே வார்த்தைகள் வர முடியாது தடுமாறிய மயில் நாதன் அழுதுவிட்டார்.

"என் புள்ளையோட உடல மட்டும் எப்படியாவது கண்டுபிடிச்சி கொடுத்துடுங்க சார். ஒரு தடவை அவனை நாங்கள் பார்த்துட்டா எங்களுக்கு அதுவே போதும் சார் " என்று கையெடுத்து கரம் குவித்து மன்றாடவே,

"முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க விசாரிக்கலாம் " என்றதும் நடந்த அனைத்தையும் உடன் வந்த இருவரும் கூறினார்.

"அங்க இருக்கிற லோக்கல் போலீசும் சரி மத்த போலீசும் சரி அந்த இடத்துல போயி விசாரிச்சா எங்களுடைய உயிருக்கு சேஃப் கிடையாது. அதனால நாங்க இதுல ரிஸ்க் எடுக்க தயாராயில்லை. இறந்ததா வேணா நாங்க ரிப்போர்ட் கொடுத்துடுறோம். கண்டிப்பா அவன் இறந்து தான் போயிருக்கணும் உயிரோட இருக்க மாட்டான் அப்படின்னு சொல்லிட்டாங்க. ஆனால் இவர் பையனோட பாடியவாவது எப்படியாவது பார்க்கணும்னு நினைக்கிறாங்க. அதுக்கு நீங்க ஏதாவது உதவி பண்ண முடியுமா ?உங்களுக்கு கீழ உள்ளவங்க கிட்ட சொன்னா ரொம்ப நல்லா இருக்கும் " என்று பணிவோடு அவரிடம் வேண்டவே, அவரும் சில நொடி யோசித்தார்.

"சரி நான் முதல்ல அந்த இடம் எப்படி அப்படிங்கறத விசாரிச்சிக்கிறேன். விசாரிச்சுட்டதுக்கு அப்பறம் சேஃப் ஆன வீரர்களை நான் அந்த இடத்துக்கு அனுப்பி தேட சொல்றேன். அந்த இடம் ஆபத்தானத இருந்துச்சுன்னா டக்குனு நான் வர சொல்லிடுவேன். அதுக்கப்புறம் நீங்க என்ன எதுவும் சொல்லக்கூடாது " என்றதும் தேடுவதற்கு முயற்சி எடுக்கிறார்கள் அதுவே போதும் என்று தான் இப்போதைக்கு அவர்கள் நினைத்தனர்.
நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஆனால் இவர்கள் என்னதான் அந்த இடத்தில் தேடினாலும் அங்கு கிடைக்கப் போவதில்லை.

அவன் தான் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து நீரோடு நீராக அடித்து பல மையில் தூரம் சென்று வன தேவதையிடம் சஞ்சம் புகுந்து விட்டானே பின் எப்படி கிடைப்பான் ?

செங்கமலியின் வீட்டுக்கு வந்து முழுதாக நான்கு நாட்கள் கடந்த பின் தான் விழி திறந்தான் வளவன்.

அவன் மட்டும் இன்று விழி திறக்கவில்லை என்றால் நாளை பெரியவரிடம் சொல்லி அருகில் இருக்கும் டவுனுக்குச் சென்று தகவல் கூறிவிட வேண்டும் என்று தான் நினைத்திருந்தனர். அதற்குள் இவன் கண் விழிக்கவே இது இவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்று தான் கூற வேண்டும். எப்போதுடா விழுப்பான் என்று தானே அவர்கள் மட்டுமல்லாது அந்த ஊரே காத்திருந்தது.

முதலில் மெல்ல கண் விழித்த வளவனுக்கு மங்கலான காட்சி தான் தென்பட்டது. அவன் இருந்த இடமே இருட்டாக அவனுக்கு இருப்பதுப் போல் இருந்தது. கூரையால் நெய்த அந்த ஓலையை தான் மேலே பார்த்தவாறு இருந்தான்.

"தம்பி இங்க பாருப்பா. கண்ணை திற, இங்க பாரு " என்று நாச்சியன் அவரின் கைகளை மெல்ல தட்டி மீண்டும் விழி திறக்க வைக்க முயற்சி செய்ய, அவனும் போராடி விழி திறந்து தன் அருகில் இருந்த நாச்சியனைக் கண்டான்.

அவனுக்கோ தமிழ்நாடு தான் பூர்வீகம் என்பதால் தமிழும் அவனுக்கு நன்கு தெரியும். என்ன வாய் அசைவை வைத்து தான் ஒரு சில வார்த்தைகளை அவனாக என்ன பேசுகிறார்கள் என்பதை கண்டு பிடித்து விடுவான்.

நாச்சியனின் அருகில் தவிப்போடு இருக்கும் செங்கமலியின் பார்வையோ அவனிடம் இருக்க அவனின் பார்வையும் இப்பொழுது அவளிடம் தான் இருந்தது.

யார் இவள் எதற்காக கரங்களை இரண்டையும் பிசைந்துக் கொண்டு, விழிகளில் விழி நீர் எட்டிப் பார்த்து விழுவது போல், மேனியில் ஒரு படபடப்போடு தவிப்பாய் தன்னை கண்டவாறு இருக்கிறாலே ?
"தம்பி நீ நல்லா தானப்பா இருக்கே ? " எனக் கேட்க,

அவன் பார்வையை அவளிடம் இருந்ததே தவிர அவர்கள் தன்னிடம் எதையோ பேசுகிறார்கள் என்பது அவனுக்கு புரிந்ததே தன் கையை தொட்ட உணர்வில் தான்.

தொடுகையால் தான் தன்னை விழித்துக் கொள்ள அவர் கூறுகிறார் என்பதை உணர்ந்தான்.

மற்ற எதுவுமே அவனுக்கு கேட்கவும் இல்லை அவர் இப்போது பேசுவது புரியவும் இல்லை அவனும் விழித்து விழித்து அவர்களை கண்டவாறு தான் இருந்தான்.

அவர்களுக்கு தான் தெரியாதே வளவனால் பேசவும் முடியாது கேட்கவும் முடியாது என்று.

அவனும் அவர்கள் மூவரையும் வித்தியாசமாகப் பார்த்து தன் மேனியும் தீயாய் வலிக்க சட்டென எழ முயற்சி செய்ய அவனால் முடியவில்லை.

உடல் முழுவதும் பச்சை மருந்துகளை தான் ஆங்காங்கே பூசி இருந்தனர். கைகளில் காலிலும் கட்டுப் போட்டு இருந்தது.

"படுப்பா படு உன்னால எந்திரிக்க எல்லாம் முடியாது. உனக்கு ரொம்ப அடிபட்டு இருக்கு. நீ நீரோடைல தண்ணியோட அடிச்சுக்கிட்டு வந்தே மூச்சி இல்லாம. அப்ப என் பொண்ணு தான் உன்னை காப்பாத்தி இங்கே கூட்டிட்டு வந்தா. நீ யாருன்னு எங்களுக்கு தெரியாதுப்பா. நாங்க இந்த காட்டுக்குள்ள வாழ்றவங்க. எங்களால உன்னுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. நான் வைத்தியம் தான் உனக்கு பார்க்கிறேன். பயப்படாதே சரியா " என்று அவன் விழிப்பதை வைத்து இவரே விரிவுபடுத்தி கூறவே, இவர் என்ன கூறினாலும் அவனுக்கு கேட்கவில்லை. ஆனால் அவரின் வாய் அசைவுகளை வைத்து தனக்கு உதவி செய்யகிறார்கள் என்பதை மட்டும் புரிந்துக் கொண்டான்.

அவனின் மற்றொரு கரத்தினை மெல்ல தூக்கி தன் வாயையும் காதையும் தொட்டு தன்னால் பேசவும் கேட்கவும் முடியாது என்பதை கைகளை அசைத்து கூற முயற்சித்தான்.

அதனை நாச்சியன் புரிந்துக் கொள்ளும் முன்னே செங்கமலியோ புரிந்துக் கொண்டு விட்டாள். அவளுக்கு இது வேதனையைக் கொடுத்தது.

அவனால் பேச முடியாதா கடவுள் ஏன் அவனுக்கு பெரிய தண்டனையை கொடுத்து விட்டார்.
"என்ன சொல்ற தம்பி ? வலிக்குதா முகத்துல எங்கேயும் " எனக் கேட்கவே,

"அப்பா அவருக்கு பேசவும், கேட்கவும் முடியாதாம். அதை தான் சொல்றாரு " என அவனை கூர்மையாக ஆழ்ந்த கவனித்த செங்கமலி தந்தையிடம் கூறினாள். அதனைக் கேட்ட அவளின் பெற்றவர்கள் இருவரும் வருத்தம் கொண்டனர்.

இவன் கண்விழித்து விட்டான் என்ற செய்தி அறிந்து ஊர்காரர்களும் வந்து விட்டனர். ஒரு சில பெரியவர்கள் நாச்சியனின் வீட்டுக்குள் வந்து அவனை தான் கண்டனர். அவனும் அங்கிருந்த அனைவரையும் கண்டான்.

அவர்கள் உடையும் அவர்கள் அணிந்திருந்த அணிகலன்கள் என்று அனைத்தும் வித்தியாசமாக இருக்க, இதனை அவன் வரலாற்று புத்தகத்தில் படித்திருப்பது நினைவுக்கு வரவே அதனை தான் யோசித்தான்.

அப்படி என்றால் இவர்கள் காட்டுக்குள் வாழும் மலைவாழ் மக்கள். இன்னும் இவர்கள் இருக்கிறார்களா என்ன ?ஆச்சரியமாக தான் மனதில் எண்ணிக் கொண்டே இருக்க, அவனின் பிரச்சனையை வந்த ஊர் பெரியவர்களிடம் கூறினார் நாச்சியன்.

"அப்போ ரொம்ப நல்லதா போச்சு இந்த பையனால எப்படியும் நமக்கு எந்த பிரச்சனையும் வராது. இந்த பையனால தான் பேச முடியாதுல நாச்சியன். இவனை முழுசா சரிப்படுத்த எவ்வளவு நாள் ஆகும் " என்றுக் கேட்கவே,

"எனக்கு தெரிஞ்சி எப்படியும் ஒரு ஒரு அமாவாசை போய் அடுத்த அமாவாசை ஆகும்னு நினைக்கிறேன். இந்த பையன் அதுக்கு எனக்கு ஒத்துழைத்து போயிட்டான்னா முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் குணப்படுத்தலாம் " என நாச்சியன் கூறியதும்,

"அப்படின்னா சரி. அவன சீக்கிரம் நம்ம குணப்படுத்திட்டு இங்க இருந்து அனுப்பி வச்சிடலாம். அவன் கிட்ட பக்குவமா பேசுவோம் இவனால நமக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு சொல்லிடலாம் " என்று இவர்களாகவே அவனை எண்ணி முடிவெடுத்துக் கொண்டனர்.

இவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் செங்கமலியின் நெஞ்சமோ துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. அவனுக்காக அவனின் பெற்றவர்களுக்குப் பின் வேதனைக் கடலில் தவித்தது என்னவோ அவளே...!

🌿 தொடரும்.. 🌿

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
வளவன் கண்முழிச்சதே சந்தோஷம் 😍

சீக்கிரம் அவனோட அப்பா அம்மாவை பார்த்திடணும் 😢 பாவம் அவங்க

செங்கமலியோட தவிப்பு எதனாலன்னு அவளுக்கே இன்னும் புரியல 🤔
 
MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106

valavan kan mulichuttan. avnaga parents pavam. kamaliyoda thavippu ean?