வளவன் - 6
வளவனின் உடல் முழுவதும் மூலிகையின் வாசம் மட்டும் தான் நிறைந்து இருந்தது. அவனுக்கு அது ஒரு மாதிரி அசௌகரியத்தை கொடுத்தது. என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கூற நினைத்தான். ஆனால் அவனால் கூற முடியவில்லை.
ஏதாவது பேனா பேப்பர் இருந்தால் எழுதி காட்டலாம் என்று நினைத்தால் அங்கு இருப்பவர்களோ அப்படின்னா என்ன என்று தான் கேட்டார்கள்.
ஆம் அங்கு இருக்கும் யாருக்கும் கல்வி அறிவு என்பதை இல்லை. பின் எப்படி அந்த பொருள் எல்லாம் அங்கு இருக்கும்.
"என்னங்க மூலிகை செடி எல்லாமே குறைஞ்சு போச்சு. நீங்களும் இப்போ ஒரு வாரமா இந்தப் பையன பார்த்துட்டே இருக்கறதுனால வீட்டுல இருக்கீங்க. இப்ப தான் இந்த பையன் கண் விழிச்சிட்டான்ல இவனுக்கு எப்ப எந்த மருந்து கொடுக்கணும் எங்க கிட்ட சொல்லிட்டு போய் மூலிகை செடியை பறிச்சிட்டு வாங்க. நாங்க இவனை கவனிச்சிக்கிறோம் " என்று சமுத்திரா கூறவும் அவருக்கும் அதுவே சரி எனப்பட்டது.
காலை நேரம் அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை எல்லாம் அவரே கொடுத்து விட்டு மதியமும் மாலையும் என்ன கொடுக்க வேண்டும் என்று மகளிடம் கூறினார். பின் மூலிகையை பறிக்க தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தன் குடிசையில் இருந்து கிளம்பி விட்டார் நாச்சியன்.
தந்தை சில பொருட்களை காய வைக்க வேண்டும் என கூறி இருக்க அதற்கான ஏற்பாட்டினை செய்துக் கொண்டு இருந்தாள் செங்கமலி.
அவளின் அன்னையோ கஞ்சியை காய்ச்சி கொண்டு இருந்தார். இப்படி இவர்கள் இருவரும் வேலையை பார்த்துக் கொண்டிருக்க நித்திரை வராது அந்த சிறிய இடத்தில் படுத்து உடல் அரிக்க அதனை வாய் திறந்து கூறவும் முடியாது தடுமாறிக் கொண்டிருந்தான் வளவன்.
சில மணி நேரங்கள் செல்லவே, "ராக்கமாக்கா வத்தல் தரேன்னு சொல்லுச்சு. நான் போய் வாங்கிட்டு வரேன் நீ பார்த்துக்கோ " எனக் கூறி சமுத்திரா சென்று விடவே, அவளும் தன் வேலையை பார்த்தவாறு அந்த குடிசையின் வெளியே தான் உலாவிக் கொண்டிருந்தாள்.
திடீரென உள்ளே ஏதோ சத்தம் கேட்பதுப் போல் தோன்றவே வேகமாய் அப்படியே கையில் இருந்த பொருட்கள் எல்லாம் கீழே போட்டுவிட்டு பதட்டத்தோடு உள்ளே ஓடினாள். அவள் உள்ளே செல்வதை அந்த வழியாக வந்த கமுதி கவனித்து விட்டான்.
அவனுக்கு இப்பொழுதெல்லாம் முழு நேர வேலையும் செங்கமலியை பார்த்துக் கொண்டிருப்பது தான்.
தன்னந்தனியாக உள்ளே அவன் இருக்க இவள் வேகமாகச் செல்வது கமுதிக்கு சரியாக படவில்லை.
இப்பொழுது தான் அங்குச் செல்ல வேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு அங்கே சில சுரைக்காய்கள் இருப்பது தெரிந்தது. உடனே அதை பறித்துக் கொண்டு அவளின் வீட்டினை நோக்கி வேக நடையோடு சென்றான்.
அதற்குள் இங்கே உள்ளே வந்த செங்கமலி நேராக சத்தமிட்ட வளவனின் அருகில் தான் சென்றாள்.
"எதுவும் வேணுமா ?" என்றுக் கேட்க,
தன் மீது நிழல் படுவதை உணர்ந்து திரும்பி அவளைக் கண்டான்.
அவன் தன்னைக் கண்டதும் தான் செங்கமலிக்கு அவனிடம் தான் சைகையால் பேச வேண்டும் என்பதுப் புரிந்து ஏதாவது தேவையா என்றுக் கேட்க அவனோ இல்லை என்று தலை அசைத்தான்.
மனதிலோ யாராவது தன்னை அமர வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்க, அவனின் முதுகெல்லாம் அரிப்பது போன்ற உணர்வு. வயது பெண்ணிடம் அதனை கூறவும் முடியவில்லை. ஆனால் செங்கமலிக்கு அவன் என்ன நினைக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள்.
இப்போது அவனுக்கு மருந்து கொடுக்க வேண்டும் லேசாக தூக்கிப்பிடித்து கொடுத்து விடலாம்
எப்பொழுதுமே அவளின் தந்தை தான் கொடுப்பார். ஆனால் இன்று அவர் இல்லாது அன்னையும் வெளியேச் சென்று இருக்க, தானே கொடுக்க வேண்டும் நினைத்தவளோ அவனின் அருகில் வந்து அவனின் தோள்பட்டை இரண்டிலும் தன் கரம் கொடுத்தாள்.
அவனின் மற்றொரு கையையும் தன் கரங்களால் பிடித்து அவனை மெல்ல எழுப்பி அவள் அந்த இடத்தில் அமர்ந்து அணைத்து பிடித்து தன் மேனியில் சாய்த்துக் கொண்டான்.
திடீரென செங்கமலி இப்படி செய்வாள் என்பதை அவனும் எதிர்பார்க்கவில்லை அதிர்ந்து விட்டான். அவளிடம் இருந்து விலக நினைத்தாலும் அவனால் விலக முடியவில்லை. கால்களை தரையில் ஊன்ற முடியாது போக, அப்படியே விலகினாலும் பட்டென அவளின் மடியில் தான் விழுவோம் என்பது புரிந்தவனோ அமைதியாக இருந்தான்.
அவளின் தந்தை எப்படி தன் மேனியில் சாய்த்துக் கொண்டு மருந்தினை அவனுக்கு புகட்டி விடுவாரோ அதே போன்று அவளும் அவனுக்கு அந்த கசாயத்தை புகட்டி விட்டாள். அவனுக்கோ அதை எப்பொழுதுமே குடிக்கும் போது குமட்டிக் கொண்டு தான் வரும். ஆனால் இன்று ஏனோ அவளின் வாசம் தான் அவனுள் நிறைந்திருந்தது.
செங்கமலியின் மேனியில் இருந்து தூய மஞ்சள் வாசம் அவனின் நாசியை தொலைத்தது. அந்த மருந்து வாசத்தை நுகர்ந்து நுகர்ந்து அவனுக்கு சலித்துப் போய் இருக்க, அவளின் வாசமும் அவனுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுப் போன்று தான் இருந்தது.
மென்மையாக அவள் தன்னை தழுவிக் கொண்டு புகட்டுவது வளவனின் விழிகளுக்கு தன் அன்னையாகவே அவள் தெரிந்தாள்.
தனக்கு ஏன் இவள் இதெல்லாம் செய்ய வேண்டும் ? என்று அவன் மனம் நினைத்தாலும் அவளின் செய்கையோ அவனுக்கு பிடித்துப் போனது. அன்னையின் அரவணைப்பிலும் அன்பிலும் மட்டுமே ஒரு பெண்ணின் வாசத்தை நுகர்ந்தவன் இப்பொழுது இவளிடம் நுகர்வது தன் நெஞ்சத்தில் பதிந்துப் போன தருணமாக அவனுக்கு மாறியது. அவளின் தோளில் இதே போல் சாய்ந்துக் கிடக்கத்தான் அவனின் உள்ளமும் ஏங்கியது.
ஒரு பெண்ணின் கவனிப்பு இப்படியெல்லாம் ஒரு ஆண்மகனை மாற்றுமா என்ன ?
மருந்து முழுவதும் குடித்து முடித்ததும் அவளின் வலிய கரங்களால் அவனைத் தாங்கிக் கொண்டு மற்றொரு கரத்தால் அவனின் வெற்று மார்பினை நீவி விட்டாள். அவனின் மேனியில் சிந்திய சில துளி கசாயத்தை எல்லாம் ஒரு துணியை வைத்து ஒட்டி எடுத்தாள்.
முகம் சுளிக்காது புன்னகையோடு அவனைக் கண்டவாறு அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஈர்த்து விட்டது. அவளுமே அவனின் விழிகளைக் காண, இருவரும் அந்த தனிமையான இடத்தில் விழிகளால் பேசிக்கொண்டு இருந்தனர்.
அவளின் முன்னுச்சியில் தான் இதில் பதிக்க வேண்டும் என வளவனின் உள்ளமோ துடித்தது.
அந்த அளவுக்கு அவளின் சேவை அவனை சாய வைத்தது. இதை எல்லாம் வாசலில் நின்று கவனித்தவாறு தான் இருந்தான் கமுதி. அவனாலும் எவ்வளவு தான் பொறுத்துக் கொள்ள முடியும் ?
அவள் மருந்து புகட்டும் போது, சரி வைத்தியரின் மகள் அவளும் ஒரு வைத்தியர் என நினைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு நெஞ்சினை நீவி விடுவது சிந்தியதை துடைத்து விடுவது அவனைத் தாங்குவது இதெல்லாம் கமுதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அதை விட இருவரின் விழிகளோ மௌன பாஷைகளோடு கண்டு இருப்பது ஏதோ தவறாகவே தோன்றியது. உடனே அங்கிருந்த மரக்கதவில் தன் கரங்களால் தட்ட செங்கமலியின் பார்வையோ வாசல் புறம் தான் சென்றது. அந்த சத்தமும் வளவனுக்கு கேட்கவில்லை என்பதால் இவள் பார்வை திரும்பிய இடத்தில் அவனும் திரும்பிப் பார்த்தான்.
அங்கே கையில் காய்கறிகளோடு கமுதி நிற்பதைக் கண்டவளோ மெல்ல அவனை அப்படியே அருகில் இருந்த சுவரில் சாய்வாக அமர வைத்தாள்.
"என்ன கமுதி இங்க வந்திருக்கே ?" எனக் கேட்டவாறு அவன் அருகில் வரவே,
"இந்த காய் எல்லாம் உன்கிட்ட கொடுக்க தான் வந்தேன். என்ன செங்கமலி இதெல்லாம் நீ அவன தாங்கறது சரியே இல்லையே. அவன் ஒன்னும் நம்ம ஆளு கிடையாது. மறந்து போயிடாத நீ அவன் கிட்ட இருந்த தள்ளியே இரு. என்ன தான் நம்ம சாமி அவனால ஆபத்து இல்லன்னு சொன்னாலும் அவன் இங்க இருந்து போறவன் தான். நம்ம கூட தங்குறவன் கிடையாது " என முதலிலே ஒரு வார்னிங் மாதிரி அவளிடம் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான். ஆனால் அவள் எல்லாம் அதனை கேட்பவளா ?
தான் சொல்வதைக் அவள் கேட்பாள் சற்று அவனிடமிருந்து தள்ளி இருப்பாள் என்றெல்லாம் கமுதி நினைத்துக் கொண்டிருக்க, அவள் கேட்க மாட்டேன் என்பது போல் அடுத்த நொடியே சுடுதண்ணியை எடுத்துக்கொண்டு வந்தாள்.
அவனின் கால் கை மேனியெல்லாம் அதனை வைத்து துடைத்து எடுத்தாள்.
அப்படியே அவனை கை தாங்கலாக தூக்கி அருகில் இருந்த ஒரு மரச்சேரில் அமர வைத்து அவன் படுத்திருந்த அந்த கட்டிலையும் ஒதுங்குப் படுத்தினாள். புது போர்வை துணி அனைத்தையும் அந்த கட்டிலில் போட்டு விட்டு அவனின் காயத்திற்கும் மாற்று மருந்து கொடுத்துப் படுக்க வைத்தாள். அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்கு பிடித்துப் போனது. ஆனால் அதனை ஏற்கவோ கஷ்டமாக இருந்தது.
"உங்களுக்கு காலும் கையும் ரொம்ப வலிக்கா? வேற ஏதாவது தேவைப்படுதா மாத்துக்கட்டு போட சொல்லட்டா நாளைக்கு... உடம்புல வேற எங்கேயாவது வலி இருக்கா ?" என்று சைகையால் அவளோ அவனிடம் பேச, மங்கையின் அன்பில் மகிழ்ந்து தான் போனான்.
அவனும் எதுவும் இல்லை என்று தலை அசைக்கவே, "ஏதாவது தேவைனா கூப்பிடுங்க. நான் வரேன். எப்படி கூப்பிடனும்னு சொல்றேன் அதே மாதிரியே கூப்பிடுங்க " என்று சுற்றிப் பார்த்து சத்தம் எழுப்பக்கூடிய பொருள் எதுவும் இருக்கிறதா ? எனத் தேடினாள்.
அவள் நினைத்ததுப் போலே அங்கு மரத்தால் ஆன சீப்பு ஒன்று இருக்கவே அந்த சீப்பினை எடுத்துக் கொண்டு வந்து அவனின் தலையை வாரி விட்டு பின் அந்த சிரிப்பினை அவன் அருகிலே வைத்தாள்.
"இந்த சீப்பு இருக்குல இதை இப்படி அடிங்க சத்தம் கேட்கும் நான் வருவேன் சரியா ? " என்று அந்த கட்டிலில் விளிம்பில் இருக்கும் மரக்கட்டை கம்பில் அடித்தால் சத்தம் வரும் உதவிக்கு தான் வருவேன் என்று சைகையால் அவனுக்கு புரியும் படி கூறி விட்டாள்.
இதற்கு முன் எத்தனையோ பேர் அவனிடம் பேசினாலும் அவனுக்கு அவர்கள் பேசுவதுப் புரிந்து கொள்ளவே சிரமப்படும். ஆனால் ஏனோ இவள் பேசுவது மட்டும் அவனால் எளிதாக சட்டென்று புரிந்து கொள்வதுப் போன்று எண்ணம். அதே போல் தான் அவன் என்ன கூறினாலும் அவளும் ஒரே முயற்சியில் புரிந்துக் கொள்கிறாள்.
இது என்ன ஆச்சரியம் ? என்று தான் இருவரின் மனமும் நினைத்துக் கொண்டது.
அவனுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் அவள் கூறியது போலே அவன் அந்த மரத்தாலான சீப்பினை வைத்து சத்தம் கொடுக்கவே, அவளும் அடுத்த நொடி வந்து விடுவாள். இப்படியே அந்த நாள் கடந்து விட இரவு பொழுது வந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் மின்சாரம் என்பது கிடையாது தங்களிடம் இருக்கும் பொருள்களை வைத்து நெருப்பினை உருவாக்கிக் கொள்வர் அந்த நெருப்பே அவர்களுக்கு விளக்கு.
கமுதி குடிசையில் வெளியே இருந்த வெட்டிப்போட்ட மரத்தின் மீது அமர்ந்திருக்க, அவனுக்கு முன்னே நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது.
அந்த நெருப்பு எப்படி அனல் விட்டு எரிகிறதோ அதே போன்று தான் அவனின் உள்ளமும் எரிந்தது.
அவனால் இன்னுமே செங்கமலியையும் அவனையும் சேர்த்து வைத்து அருகருகே கண்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்ல.
தன் மகன் எதையோ அதி தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த அவனின் அன்னையோ அருகில் வந்தார்.
"என்னடா ரொம்ப நேரமா எதையோ யோசிச்சிட்டு இருக்கே ? என்ன விஷயம் சொல்லுடா " என்றுக் கேட்கவே,
"அம்மா எனக்கு வைத்தியர் நாச்சியன் இருக்காருல அவரோட பொண்ணு ரொம்ப புடிச்சிருக்கும்மா. எப்படியும் இந்த ஊருக்குள்ளே தானே கல்யாணம் பண்ணி வைப்பாங்க. ஏன் எனக்கு பண்ணி தரக்கூடாது ? நீங்க போய் பொண்ணு கேளுங்க " இது தான் தன் முடிவு என்று கூறி விட்டான்.
"டேய் என்னடா நீ திடீர்னு இப்படி சொல்ற ?"
"நான் ஒன்னும் ஊர கூட்டி வச்சு சொல்லலையே. பெத்தவங்க கிட்ட தானே சொல்றேன். அப்ப செய்யுங்க. நாளைக்கு நீங்க போயி அவங்க வீட்டுல பொண்ணு கேக்குறீங்க. ஊர் பெரியவர் கூட்டிட்டு போய் வர்ற பௌர்ணமில எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க " என கூறிவிட்டு அங்கிருந்து எழுந்துச் சென்று விட்டான்.
மகன் இவ்வளவு தீவிரமாக உறுதியோடு கூறிச் செல்லவே அவரின் மனதிற்கு அச்சம் குடி கொண்டது.
அவரின் அந்த அச்சத்திற்கு முழு காரணம் கமுதியை பொறுத்தவரை அவனுக்கு பிடித்த பொருள் அவனிடம் இருக்க வேண்டும்.
அப்படி இல்லையா அவனை விட்டு மீறிப் போகிறது என தெரிந்தால் இல்லாமல் செய்து விடுவது தான் அவனின் குணமே !
அவனுக்கு பிடித்ததை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது இதுவே அவனிடம் இருக்கும் ஒரு தீய எண்ணம்.
தொடரும்...
படித்து விட்டு தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Last edited: