வளவன் - 7
அன்று கமுதியின் பெற்றவர்கள் இருவரும் அந்த ஊரில் இருக்கும் பெரியவர்களை அழைத்துக் கொண்டு செங்கமலியின் வீட்டின் முன் தான் நின்றனர். திடீரென இவர்கள் அனைவரும் வந்திருக்கவே நாச்சியனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
'ஒரு வேலை தன்னிடம் இருப்பவனை பற்றி நலம் விசாரிக்க வந்திருக்கிறார்களா என்ன ? அப்படியென்றால் குடும்பத்தார் வரக் காரணம் என்ன ? ' என யோசித்து வரவேற்றார்.
"வாங்க எல்லாரும் உட்காருங்க " என்று வீட்டின் முன்னே அனைவரையும் அமரக் கூற, அவர்களும் அமர்ந்தனர்.
"என்ன விஷயம் எல்லாரும் என்ன தேடி வந்திருக்கீங்க ? " என்று நேராகவே பேச்சினை ஆரம்பித்தார்.
அவர்கள் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தாள் செங்கமலி.
"இப்ப அந்த பையன் எப்படிப்பா இருக்கான் ?" என்று அந்த ஊரின் பெரியவர் கேட்கவே,
"காயம் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா குணமாகிக்கிட்டே வருது. எழுந்து நடக்கிறதுக்கு எப்படியும் வர பௌர்ணமி ஆயிடும் " என்றார்.
"சரிப்பா நான் சட்டுபுட்டுன்னு நேரா விஷயத்துக்கு வாரேன். செங்கமலியும் வயசுக்கு வந்து ரொம்ப நாளாச்சு. எப்படியும் அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கணும். நம்ம இருவாயன் அவன் மகனுக்கு உன் மகளை பொண்ணு கேட்க நினைக்கிறான். அதுக்குத்தான் இப்ப என்ன கூட்டிட்டு இங்க வந்து இருக்கான். நீ என்ன சொல்ற பொண்ணு கொடுக்க உனக்கு சம்மதமா ?"
"ஐயா நீங்க சொல்லித்தான் என் பொண்ணு பெரிய பிள்ளையா வளர்ந்தது இப்ப தான் புரியுது. இருந்தாலும் என்ன பொறுத்தவரை பொண்ணு கல்யாண கட்டுற வயசு இன்னும் வரலைன்னு எனக்கு தோணுது. அவளுக்கு நான் சொல்லித் தர வேண்டிய விஷயங்கள் எல்லாம் ரொம்ப இருக்கு. ஒரு ரெண்டு வருஷம் போகட்டும் தான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன் "
"அப்போ என் பையனுக்கு தர மாட்டேன்னு நேரா சொல்றதுக்கு இப்படி சுத்தி வளைச்சி சொல்றியா ?" என்று கமுதியின் தந்தை நேராகவேக் கேட்க, இவர்களின் இந்த பேச்செல்லாம் ஏனோ செங்கமலிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
ஒரு வேலை புதிதாக ஒருவன் தன் இடத்திற்கு வராமல் இருந்திருந்தால் இவளுக்கு இந்த செயல் பிடிக்குமோ என்னவோ ? ஆனால் அவள் எண்ணம் முழுவதும் இப்பொழுது உள்ளே இருப்பவனிடம் மட்டும் தான் இருந்தது. அவன் எழுந்து நடக்க வேண்டும், நலமோடு இருக்க வேண்டும் இது மட்டுமே அவளின் எண்ணம் இப்பொழுது.
"நான் அப்படி எல்லாம் சொல்லல எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒண்ணா இருக்கோம். நீ ஏன்பா இப்படி நினைச்சுக்கிட்டு இருக்க ?" என்று நாச்சியன் கேட்கவே,
" நீ பேசுறதெல்லாம் அப்படித்தானே இருக்கு அதான் கேட்டேன். சரி அப்ப வேணா ஒரு உறுதி பண்ணிப்போம். எப்ப நீ உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நினைக்கிறையோ அப்ப என் பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடு. எவ்வளவு நாள் ஆனாலும் சரி உன் பொண்ணு எங்க வீட்டு மருமகளா நாங்க ஏத்துக்க தயாராத்தான் இருக்கோம். இப்போ உனக்கு சம்மதமா ?" என்றுக் கேட்கவே, நாச்சியனும் தன் மனைவியைக் கண்டு அவர் சரி என கூறியதும் இவரும் சரி என சம்மதித்தார். பின் பெரியவர்கள் உறுதி செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர்.
அவர்கள் சென்ற அடுத்த நொடியே நாச்சியன் வீட்டுக்குள் நுழைய, அவரின் பின்னோடு தான் மகள் அன்னை இருவரும் வந்தனர்.
"எனக்கு.. " என்று செங்கமலி பேச்சினை எடுக்க ஆரம்பிக்கும் போதே வளவன் படுத்திருந்த இடத்தில் சத்தம் கேட்டது.
சட்டென அப்படியே அதனை விடுத்து வேகமாய் ஓடினாள்.
அங்கே அவன் தான் எழ முயற்சி செய்துக் கொண்டிருந்தான் அவனால் முடியவில்லை.
"என்னாச்சு என்ன வேணும் ? என்னை கூப்பிடலாம்ல " என்க,
அவனுக்கு அப்பொழுது சிறுநீர் கழிக்க வேண்டும்.
அதனை கூற வருவதற்கு முன்னே, " ஓ சரி சரி எனக்கு புரிஞ்சிடுச்சு இருங்க வாரேன் " என அவனைக் கண்டே அவனுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து வேகமாய் ஒரு குவளையை எடுத்துக்கொண்டு அவனின் முன்னே வைத்தாள்.
பின் அந்த இடத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்கள் பின் அவள் மறுபடியும் அந்த குவளையை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டாள். இதையெல்லாம் அவளின் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.
"சொல்றேன் தப்பா நினைச்சுக்காதீங்க வயசு புள்ள இதெல்லாம் பண்றது எனக்கு தப்பா தெரியுது. அதுவும் இல்லாம நான் பண்றேன்னு சொன்னாலும் கேட்கவே மாட்டிக்கா. அந்த பையனுக்கு எதுனாலும் அவளே தான் பண்றா. வெளியில இந்த விஷயம் தெரிஞ்சா நம்மளை எதுவும் ஊர்க்காரங்க தப்பா பேசுவாங்க. சீக்கிரம் சரி பண்ணி இந்த பையனை அனுப்பி வச்சிட்டு பொண்ணுக்கு கல்யாணத்தை முடிக்கலாம் " என்று செங்கமலிக்கு கேட்காது கணவனிடம் கூறினார்.
தான் இப்பொழுது கண்டதையும் மனைவி கூறியதையும் கேட்ட நாச்சியனுக்கு இதுவே சரியாகப்பட்டது. பின் அந்த ஊரில் இருக்கும் பெரியவரை சந்தித்து தன் வீட்டில் இருப்பவனுக்கு சரியாகி விட்டதும் அவனை அனுப்பி வைத்து தன் மகளின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என கூறிவிட்டார்.
அந்த பெரியவரும் கமுதியின் வீட்டாரிடம் கூற, இந்த விஷயம் எல்லாம் ஒரே நாளில் கமுதியில் செவிக்கு வந்தடைந்தது.
தான் நேசித்தவள் தனக்கு உரிமையாகி விட்டாள் என்று சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான். செங்கமலியிடம் அவளின் பெற்றோர் இந்த விஷயத்தை கூறவில்லை.
நாட்கள் கடந்துக் கொண்டிருக்க வளவனின் தந்தை காவல் அதிகாரியிடம் கூறியிருந்ததால் அந்த மலைப் பகுதிக்குள் அவனை தேட ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் இருக்கும் பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் தூரம் தள்ளி தான் இவன் இருக்கிறான்.
இப்பொழுது வளவனால் சற்று எழுந்து நிற்க முடிந்தது. ஆனால் நடக்க வேண்டும் என்றால் எதையாவது பிடித்துக் கொண்டு தான் நடக்க முடியும். உணவு அருந்த நினைத்தாலுமே அவனது இடது கையை வைத்து தான் உணவருந்த முடியும். இடது கையில் ஏற்பட்டிருந்த காயங்கள் சரியாகிவிட வலது கையில் மட்டும் பெரிய கட்டு இருந்தது. இவன் இவ்வளோ விரைவில் குணமடைந்ததற்கு கூட முழு முழு காரணமும் செங்கமலியின் கவனிப்பு மட்டுமே.
தன் அன்னையின் மறு உருவமாகவே அவளை நினைத்தான். அவள் தனக்கு செய்யும் ஒவ்வொரு செயலும் அவனின் மனதில் நீங்காத நினைவாக மாறியது. அவள் தன்னோடு தன் வாழ்க்கை முழுக்க இருந்தால் எப்படி இருக்கும் ? இதை நினைத்தவனுக்கு இதழ்களில் மெல்லிய புன்னகை உதிர்த்தது.
அப்போது தான் அவனுக்கு கேப்பகூலோடு உள்ளே வந்த செங்கமலி அதனைக் கண்டாள்.
"என்னாச்சு சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க ?" என்று சைகையால் அவனிடம் கேட்கவே,
அவளின் அந்த மென்மையான கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டான். அவனின் அந்த செய்கை அவளுக்கு சில்லென்ற உணர்வினைக் கொடுத்தது.
ஏன் அவன் இப்படி செய்கிறான் ? என்று அவளுக்கோ புரியவில்லை. ஆனால் அவளுக்கும் அச்செய்கை பிடித்திருந்தது. மென்மையான தொடுகையோடு அவனின் உள்ளங்கைக்குள் தன் கரங்கள் பதிந்து விட்டது.
"நீ என் கூடவே எப்பவும் இருக்கையா ? என்னை கல்யாணம் பண்ணிக்கிறையா ? " என்று அவன் மனதில் தோன்றும் எண்ணங்களை மறைக்க முடியாது நேரடியாகவே அவளிடம் தன் நெஞ்சத்தை தொட்டு சைகையால் கேட்கவே, அவளோ அதைக் கேட்டு அதிர்ந்து விட்டாள்.
அவளின் அந்த அதிர்வு என்னவோ செய்தது. அவனின் முகவாட்டத்தை கண்டவனுக்கு அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
"நான் என் மனசுக்கு தோணுனதை கேட்டுட்டேன். நீ எதுவும் தப்பா நினைக்காதே " என்கவே, அவளோ தான் கொண்டு வந்த கூல்லை அவனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து அமைதியாக வெளியேறினாள்.
வளவனை அந்த அமைதி குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது. அவள் ஒரு வைத்தியராக தன்னை கவனித்துக் கொள்ள தன் மனம் அவளிடம் சரணடைந்தது மறக்க முடியாத ஒன்று.
சமுத்திராவோ மகளிடம், " ஏய் ! விறகு இல்லைடி காட்டுக்கு போய் விறகு எடுத்துட்டு வா " எனக் கூறவே, அவளும் இங்கிருந்து தனக்கு தனிமை வேண்டும் என்ற நினைப்போடுச் சென்றாள்.
எப்பொழுதுமே அவள் செல்லும்போது தோழி பொற்கொடியை அழைத்து தான் செல்வாள். இன்று மகள் தனியாக செல்லவே அவள் மனமோ எதையும் நினைத்து வாடுகிறது என்பதை பெற்றவள் புரிந்துக் கொண்டார்.
பக்கத்து வீட்டில் இருந்த பொற்கொடியை அழைக்க, "என்ன அம்மயி ? " எனக் கேட்டவாறு வெளியே வர,
"செங்கமலி தனியா விறகு எடுக்க போயிருக்கா. நீ கூட போ இப்ப தான் போறா " என்றதும்,
"நீங்க எதுக்கு பயப்படுறீங்க ? அவ காட்டையே வித்துட்டு வந்துருவா. சரி நான் போறேன் " என கூறி விறகு எடுப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
காட்டுக்குள் சென்ற செங்கமலிக்கு விறகு எடுக்கும் எண்ணமே இல்லை. ஒரு மரத்தின் கீழ் அப்படியே அமர்ந்து விட்டாள். அந்த நொடி திடீரென மேகங்கள் சூழ்ந்து இருள ஆரம்பித்தது. அந்தக் வனப்பகுதிக்குள் எப்போது எந்த நொடி மழை வரும் என்பது யாராலையுமே கணிக்க முடியாது. மேகம் கூடினால் மழை வந்துவிடும். அவளோ அதனைக் கூட உணராது மரத்தின் கீழே நெற்றியில் கை வைத்தவாறே இருந்தாள். அவளின் எண்ணம் முழுவதும் அவனிடம் தான் இருந்தது.
அவன் எதைப் பற்றியும் யோசிக்காது நேராக தன்னிடம் கேட்டு விட்டான். ஆனால் அவனுக்கு உடனே பதில் கூற முடியாதே ? தங்களின் இனத்தவர் என்ன நினைப்பார்கள். அவன் தங்களோடு இந்த வனப்பகுதிக்குள் வாழ்பவன் அல்ல. அவனை ஏற்றுக் கொண்டு அவனோடு தான் இங்கிருந்துச் சென்றால் தன் குடும்பத்தாரை இழிவாகப் பேசுவார்கள். அது மட்டுமல்லாது தன் பெற்றோர் இங்கே வாழவும் முடியாது.
சரி அப்படியே அவன் தன்னை ஏற்றுக் கொண்டு இங்கு இருந்தால் இங்குள்ளவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? இரு மனமாக தவித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் அறியாது கண்ணீர் வழிந்தோடியது. அவனை ஒரு பொழுதும் விடுவதற்கு மனமும் அவளுக்கு இல்லை.
அவனுக்கு சரியாக வேண்டும் தன்னோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் செங்கமலியின் மனதை அரித்தது.
தூரல் லேசாக விழுந்து பெரிய மழையாக ஆரம்பிக்க துவங்க, தன் மீது மழைத்துளி விழுந்தும் அவளின் என்னமோ சிதறாது அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. சரியாக அங்கு வேகமாய் ஒரு பெரிய இலையை தனக்கு குடையாக பிடித்துக் கொண்டு வந்தாள் பொற்கொடி.
"ஏய் செங்கமலி இங்க என்னடி பண்ற ? மழை வருது அப்படியே உட்கார்ந்துக்கிட்டு இருக்க " என்று கேட்க அவளிடமோ பதிலில்லை. அவளின் தோள்பட்டையை உலுக்கிய பின் தான் இந்த உலகத்திற்கே வந்தாள்.
இப்பொழுது பொற்கொடி வரவில்லை என்றால் அந்த இடத்தில் ஏதாவது காட்டு மிருகம் வந்து ஒரு நொடியில் கொன்று விட்டிருக்கும். அந்த அளவு நிதானம் இல்லாதது தான் அமர்ந்திருந்தாள்.
தன் தோழியைக் கண்டு திருதிருவன விழித்தவளோ சுற்றிக் கண்டாள். சுற்றிலும் காடு மழையோ அடித்து வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. தான் எப்படி இவ்வளவு நேரம் இதனை உணராது இருந்தோம் ?
எப்பொழுதுமே சுதாரிப்பாகவும் கவனமோடும் இருக்கும் தன் தோழி இப்படி தன் உணர்வை இழந்து அமர்ந்திருக்க காரணம் என்ன ? என நினைத்த பொற்கொடி நேராக அவளிடம் கேட்டாள்.
"என்னாச்சுடி உனக்கு. இப்ப எல்லாம் நீ சரியாவேயில்லை. எதையாவது நினைச்சு சுத்திக்கிட்டு வர்ற. அப்படி என்ன தான் உன் பிரச்சனை ?"
"எனக்கு அவங்கள புடிச்சிருக்கு அவங்க கூட இருக்கணும்னு என் மனசுக்கு தோணுது. அதே மாதிரி தான் அவங்களுக்கும் தோணுதுன்னு என்கிட்ட சொன்னாங்க. ஆனா நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்பறம் இங்க இருக்குற எல்லாருமே..." அதற்கு மேல் அவளால் கூற முடியவில்லை.
"என்ன விளையாடுறியா, ஆபத்தை நீயே தேடுற போல. ஒழுங்கா உன் மனசை மாத்தி சீக்கிரம் அவனை அனுப்பி வச்சிட்டு அந்த கமுதிய கல்யாணம் பண்ற வழியப் பாரு. நேத்து தான் எங்க அம்மா என்கிட்ட சொன்னாங்க உனக்கும் கமுதிக்கும் கல்யாணம் பேச்சு வார்த்தை ஓடிக்கிட்டு இருக்குன்னு. ஆனா நீ என்னடா இப்படி பேசிகிட்டு இருக்கே ? " என்க,
அப்பொழுது தான் அவளுக்கும் அன்று அவர்கள் வந்ததிற்கு தந்தை ஒத்துக் கொண்டதும் தெரிந்தது.
இருதலைக் கொள்ளியாக தவித்துக் கொண்டிருக்கிற தன் தோழியை அங்கிருந்து அழைத்துச் சென்றாள் பொற்கொடி.
தொடரும்
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

Last edited: