வளவன் - 8
வீட்டின் பின்புறம் இருக்கும் வனப்பகுதிக்குச் சென்று நறுமண மலர்களை எல்லாம் பறித்துக் கொண்டு தாங்கள் தெய்வமாக வணங்கும் முதியோரின் சிலையை நோக்கிச் சென்றாள் செங்கமலி. அவளின் மனம் முழுமையாக வளவன் குணமடைய வேண்டும் என்று தான் எண்ணிக் கொண்டிருந்தது.
யோசனையோடு நடந்து சென்றவளின் எதிரே வந்தான் கமுதி.
"என்ன செங்கமலி சாமி கும்பிட போறியா ? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே சாமி கும்பிடலாம் " என்று அவளோடு நடக்க,
"உன்கிட்ட பேசணும் நினைச்சுக்கிட்டே இருந்தேன் கமுதி. உனக்கும் எனக்கும் நம்ம வீட்டுல கல்யாணம் பேசிக்கிட்டு இருக்காங்க. எனக்கு இப்போதைக்கு இதுல சுத்தமா விருப்பமே இல்ல. என்னை மன்னிச்சிரு. இனிமே இப்படி என்கிட்ட பேசுறதுக்கு நீ வராதே " எனக் கூறி அவளோ நிற்காது சென்று விட, இந்த வார்த்தை அவனை அப்படியே சிலையென நிற்க வைத்தது.
'ஏன் இவள் இவ்வாறு கூறுகிறாள் ?தன்னை பிடிக்கவில்லை என்று கூறினால் சரி ஆனால் இவள்... இந்த வார்த்தைகளை எல்லாம் கேட்கும் போது இவளின் மனதுக்குள் அவன் வந்து விட்டானா என்ன ?' என்று தான் நினைத்தான்.
திருமணம் பேசி முடித்த பின் எப்படியும் செங்கமலி தனக்குத்தானே என நினைத்து அவளை கவனிப்பதை விட்டு விட்டான் கமுதி. ஆனால் இப்பொழுது இவள் கூறிய வார்த்தைக்கு பின் மீண்டும் அவளை ஆழ்ந்த கவனிக்க ஆரம்பித்தான்.
அவர்களின் கடவுளின் முன் நின்று அந்த நறுமண மலர்களை எல்லாம் படைத்து வணங்கியவள் முன்னிருந்த சாம்பலை எடுத்து தன் நெற்றியில் பூசிக் கொண்டாள். பின் சிறிது கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் வீடு நோக்கி நடந்தாள்.
அவளைக் கண்டவாறு தான் இருந்தான் கமுதி. தங்களின் வீட்டுக்கு வரவே வீட்டின் வெளியே இருந்த கயிற்றுக் கட்டிலில் தான் ஒரு கம்பினை ஊன்றியவாறு மெல்ல நடந்து வந்து காற்று வாங்க அமர்ந்திருந்தான் வளவன்.
அவனைக் கண்டதும் புன்னகை உதிர்த்தவளோ அருகில் வந்து தன் கையில் இருந்த அந்த திருநீரை அவனின் நெற்றியில் கோடாய் பூசி விட்டு கண்ணில் விழாதவாறு ஊதியும் விட்டாள்.
வளவனின் மனமும் தான் காதலை கூறியதற்குப் பின் செங்கமலி பதில் கூறவில்லை என்றாலும் அவளின் கவனிப்பு சிறு துளி கூட குறையவில்லை. இன்னும் அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது. அவனின் உடல் நலம் சற்று தேறி இருக்கவே, வீட்டாரை எண்ணி கவலையும் உள்ளுக்குள் குடிக் கொண்டது.
தன் அன்னை தன்னைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பார்கள். ஒரு வேளை தான் இறந்ததாகவே அவர்கள் நினைத்துக் கொள்வார்களா ? இப்பொழுது என்ன தான் செய்கிறார்கள் ?என்றெல்லாம் ஒரு சில நேரங்களில் வளவன் மனம் நினைத்துக் கொண்டிருக்கும். அந்த நேரங்களில் எல்லாம் முன்னே வந்து நின்று அவனிடம் எதையாவது பேச்சுக் கொடுத்து மனதினை மாற்றி விடுவாள்.
இரவு நேரம் ஆனால் உள்ளே சென்றுப் படுப்பது பகல் நேரங்களில் வெளியே இருக்கும் கட்டிலில் அமர்ந்து அந்த ஊர் மக்களை வேடிக்கைப் பார்ப்பது தான் வளவனின் பொழுது. அந்த வழியாகச் செல்பவர்கள் எல்லாம் அவனிடம் வந்துப் பேச்சுக் கொடுத்து சந்தோஷமாக தங்கள் இனத்தவர் போலே நடந்து கொள்வார்கள்.
இந்த இடம் பிடித்திருக்கிறதா ? சாப்பிட்டியா ? ஏதாவது வேணுமா ?என்றெல்லாம் அக்கறையாக செங்கமலியின் வீட்டார் மட்டுமல்ல அந்த ஊர்க்காரர்களே அவனிடம் அக்கறையாக நடந்துக் கொண்டனர்.
அன்று கமுதி அவனைப் பார்ப்பதற்கு செங்கமலியின் வீட்டுக்கு வந்திருந்தான். செங்கமலியும் அவளின் அன்னையும் பொற்கொடியின் வயலில் நெல் அறுவடை நடக்க அங்குச் சென்று விட்டனர். நாச்சியன் குடிதண்ணீர் எடுக்க அருகில் இருக்கும் நீரோடைக்கு சென்றிருந்தார். கமுதியை இதற்கு முன் வளவன் பார்த்திருக்கிறான் என்பதால் அவன் தன் அருகில் வருவதைக் கண்டு புன்னகை உதிர்த்தான். அவனும் முன்னே வந்து அங்கிருந்த ஒரு மரக்கட்டையின் மேல் அமர்ந்தான்.
"நீ எப்போ இங்க இருந்து போவ ? உனக்கு செங்கமலியா பிடிச்சிருக்கா ? நீ அவளை கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறாயா ?" என்று கமுதியோ அவனுக்கு புரிய வைத்து விடும்படி கேட்கவே, அவனும் தனக்கு ஒருவேளை இவன் உதவி செய்ய நினைக்கிறானோ என்று நினைத்து ஆம் என்றான்.
"ஆனா அவ உனக்கு கிடைக்க மாட்டா. இங்க இருக்கிற பொண்ணுங்கள நாங்க தான் கல்யாணம் பண்ணுவோம். வெளியில கொடுக்க மாட்டாங்க. இதை அவ உன்கிட்ட நிச்சியமா சொல்லி இருக்க மாட்டா. உன்னால இந்த குடும்பத்துக்கு அவமானம் வரக்கூடாது. அதனால உனக்கு சரியானதும் நீ இந்த ஊரை விட்டு போயிரு நானே உன்னை கொண்டு போயி பக்கத்துல இருக்குற ஏதாவது ஒரு டவுன்ல விட்டுட்டு வந்துடுறேன். நீ அதுக்கப்புறம் உன் ஊரை பார்த்து போய்க்கிட்டே இரு " என்று அரை மணி நேரமாக வளவனிடம் கூறிக் கொண்டிருந்தான். அவன் கூறுவதில் ஓரிரு வார்த்தைகள் அவனுக்கும் புரிந்து விட்டது.
தன் முன் இருந்தவனுக்கும் செங்கமலிக்கும் திருமணப் பேச்சு நடக்கிறது. இங்குள்ள பெண்கள் இங்கே இருக்கும் ஆண்களை தான் திருமணம் செய்துக் கொள்வார்கள் அப்படி மீறினால் அவமானம் ஏற்படும் என்பதெல்லாம் இப்பொழுது தான் வளவனுக்கு புரிந்தது. அவனின் புறம் மட்டுமே யோசித்தான். தாங்கள் காதலித்து, சம்மதம் கிடைத்துவிட்டால் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று தான் அவனின் எண்ணம் இருந்தது.
ஆனால் தான் அப்படி செய்தால் அதற்கு அவளின் குடும்பத்தார் படும் அவமானம் இப்பொழுது தான் வளவனுக்குப் புரிந்தது. தான் எளிதாக அவளை திருமணம் செய்துக் கொண்டு போய் விடுவோம். ஆனால் இங்கு உள்ளவர்கள் தங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் தன்னிடம் அவள் காதலை கூற மாட்டேன் என்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டான்.
நேசம் கொண்ட ஆண்மகனுக்கு புரியாதா பெண்ணின் விழிகள் சொல்லும் காதல் பாஷைகள் என்னவென்று. தன்னை உயிராய் நேசிக்கிறாள். ஆனால் ஏன் அதைக் கூற மாட்டிக்கிறாள் என்பதற்கான விடை இன்று அவனுக்கு கிடைத்துவிட்டது.
யோசித்துக் கொண்டிருப்பதை கண்டதுமே அவனின் கரங்களைத் தட்டி, "நான் சொன்ன மாதிரி நீ செய்யணும். இல்லனா நீ இந்த இடத்திலயிருந்து உயிரோட போக முடியாது " என மிரட்டி விட்டு அங்கிருந்து எழுந்துச் சென்று விட்டான்.
அந்த இரவு முழுவதும் வளவன் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறானே என்ற நினைப்பில் அவனிடம், "எதுவும் பிரச்சனையா ? ஏதாவது தேவையா ?" என்று மீண்டும் மீண்டும் வந்துக் கேட்டாள் செங்கமலி. அவனோ இல்லையென்று கூறி விட்டான்.
ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் ஆட்கள் வளவனை தேட முயற்சிச் செய்ய அவர்களின் தேடல் தோல்வியில் தான் முடிந்தது. இரு வாரங்களாக தேடிப் பார்த்தும் ஒரு பயனும் இல்லாதுப் போக இதற்கு மேல் அவன் கிடைக்க மாட்டான் என்று தங்களின் உயர் அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து விட்டனர். அவர்களும் வளவனின் பெற்றோரிடம் அதை கூறிவிட்டனர்.
அவர்களுக்கு சிறிது இருந்த தன்னம்பிக்கையும் முழுவதுமாக இழந்து மனம் தளர்ந்து மகன் இறந்ததை ஏற்றுக் கொண்டனர்.
நாட்கள் வண்ணங்களாக கடக்க வளவன் வனதேவதையின் வீட்டிற்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாக கடந்திருந்தது. அன்று அந்த ஊரே விழா கோலமாக காட்சியளித்தது. அவர்கள் தெய்வமாக வணங்கும் சிலையின் முன் அந்த வருட அறுவடை எல்லாம் வைத்து வழிபட்டு சமமாக அனைத்து குடும்பத்தாரும் அதனை பிரித்துக் கொள்வார்கள். இதை ஒரு விழாவாக கொண்டாடி முடிப்பார்கள்.
வண்ணப் பூக்களாலும் இலைகளாலும் ஒவ்வொரு வீடுகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
" இங்க என்ன நடக்குது, எதுவும் பங்க்ஷனா ? " என்று செங்கமலியிடம் வளவன் கேட்கவே, அவளும் இன்று என்ன விழா எனக் கூறினாள்.
சூரியன் உச்சிக்கு வந்த நேரம் அந்த வருட தங்களின் விளைச்சலை எல்லாம் கொண்டு வந்து தெய்வத்தின் முன் வைத்தனர். ஊரே அங்கு தான் கூடியிருக்க. வளவனையும் அழைத்து வந்திருந்தனர். அவனும் எத்தனை நாட்கள் தான் வீட்டு வாசலே கதி என இருப்பான். சிறிதளவு நடந்தால் தானே அவனுக்கும் எலும்பு பலம் கொடுக்கும்.
அந்த இடத்திற்கு வளவன் வந்ததும் அவனை இன்முகமாக தான் அனைவரும் வரவேற்றனர்.
"வாங்க தம்பி எங்களோட சடங்குல நீங்களும் கலந்துக்கோங்க. இதெல்லாம் உங்களுக்கு புதுசு உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறோம் " என்று பெரியவர் கூறவே, அவர் என்ன கூறுகிறார் என்பதை செங்கமலி புரிய வைக்கும் படி சைகையில் கூறினாள். அவனும் இரு கரம் குவித்து சந்தோஷமாக அதில் கலந்துக் கொள்கிறேன் என்றான். பின் அவர்கள் பாட்டு பாடி நெருப்பு மூட்டி அந்த தானியங்களை எல்லாம் சிறிதளவு கொண்டு வந்து முன்னே வைத்து வழிபட்டு பின் அத்தனை குடும்பத்தாருக்கும் சமபாதியாக பிரித்து வழங்கினர்.
அவ்வப்போது கமுதியின் பார்வை வளவனை மிரட்டுவதுப் போல் இருப்பதை செங்கமலி கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். இப்பொழுது எல்லாம் வளவன் தன்னிடம் அதிகமாகப் பேசாததற்கும் தன்னை விட்டு அவன் விலக முயற்சிப்பதற்கும் காரணம் இவன் தான் என்பது அவளுக்கு புரிந்து விட்டது. ஒரு வகையில் இது நல்லதாகவே இருந்தாலும் வளவனின் விலகலை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவனிடம் காதலை கூறத்தான் உள்ளம் துடித்தது. அப்படி கூறினால் பின்னாடி வரப்போகும் பிரச்சனையை ஏற்க அவளின் மனம் முன் வரவில்லை.
தன்மையாக அங்கிருந்த பெரியவர்களிடம் பணிவாக, சிறியவர்களோடு சிரித்து பேசி என்று வளவனின் குணம் அனைவருக்கும் பிடித்துப் போனது.
இவ்வளவு விரைவில் தங்கள் ஆட்களோடு இவன் பழகுவது அவர்களுக்கு ஆச்சரியம் தான்.
ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது புதிதாகச் செய்தால் உடனே வளவனுக்கு வந்துக் கொடுத்து விடுவார். தம்பி இது சாப்பிடு ரொம்ப நல்லா இருக்கும் உடம்புக்கு நல்லது என்று. ஊரே தாங்கும் வளவனை கமுதி மட்டுமே எதிர்த்தான்.
"ரொம்ப நல்ல பையனா இருக்கான் என்ன பேச்சும், காதும் தான் கேட்க மாட்டேங்குது. அது மட்டும் எப்படியாவது இந்த பையனுக்கு நம்ம தெய்வம் நல்லபடியா கொடுத்திட்டா அதுவே போதும் " என்று அவனின் உடல் நிலைக்காக அவர்களும் வேண்டிக் கொண்டனர்.
அன்று செங்கமலியோ தன் வீட்டினை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு பழைய மரப்பெட்டியில் இருந்து சில ஓலைச்சுவடிகள் கீழே விழுந்தது. அதை எடுத்து கையில் வைத்துக் கொண்டிருந்த நேரம் உள்ளே அவள் தந்தை நுழைந்தார்.
"இதைத்தான் நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். ஏன் தாத்தா இதுல மருத்துவ குறிப்பு எல்லாம் எழுதி வச்சிருக்காரு. இதுல எல்லா நோய்க்கும் மருந்து இருக்கு. நல்ல வேலைக்கா இது உன் கையில கிடைச்சிருக்கு " எனக் கூறி, அதனை வாங்கவே, அப்பொழுது தான் அப்படி என்றால் இதில் வளவனுக்கு பேச்சு வர வைப்பதற்கான மருத்துவ குறிப்பு எதுவும் இருக்குமா ? என்ற நினைப்பில் அதனை தந்தையிடம் அப்படியே கேட்டாள்.
"அப்பா அவங்களுக்கும் பேச்சும் காதும் கேட்க மாட்டேங்குதுல. அதுக்கு ஏதாவது இதுல மருத்துவ குறிப்பு இருக்கா அப்படின்னு பாருங்க. அதுக்கு எந்த மூலிகை செடி வேணும்னாலும் நான் போய் படிச்சிட்டு வரேன்பா " என்க,
மகள் இவ்வளவு ஆர்வமாக இருக்கவே, அவளிடம் வேண்டாம் மனதை சலனப்படுத்தாதே எனக் கூற நினைத்தாலும் பெற்றவரால் முடியவில்லை அவருக்கு எப்பொழுதும் மகளின் சந்தோஷம் தான் முக்கியம் ஒற்றை மகளாகி விட்டாளே...!
"சரிம்மா நான் பார்க்குறேன் " என்று அப்பொழுது வெளியே வந்து வெளிச்சத்தில் அமர்ந்து அந்த ஓலைச்சுவடியை ஒவ்வொன்றாக திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் அவர்கள் எதிர்பார்த்தது கிடைத்து விட்டது.
"ஆமாம்மா நீ சொன்ன மாதிரியே பேசுறதுக்கு இதுல மருந்து எல்லாம் எழுதி வச்சிருக்கு. ஆனா காது கேக்குறதுக்கு எதுவும் இல்ல. இந்த மூலிகை எல்லாம் நமக்கு கிடைச்சா போதும் " என அந்த மூலிகையின் பெயர் எல்லாம் அவர் கூற, அதில் ஒரு சில மூலிகைகள் அவர்களிடம் இருந்தது. இன்னும் சில மூலிகைகள் வெளியேச் சென்று வனப்பகுதிகள் தான் தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டு வர முடியும்.
"அப்பா உங்களுக்கு ஞாபகம் இருக்கா ஒரு நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீங்களும் நானும் மூலிகை பறிக்க போனோம். அப்ப என்கிட்ட நீங்க இந்த மருந்து பேர் எல்லாம் சொன்னீங்க ? அந்த மூலிகை செடி எல்லாம் எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்குப்பா. நான் போய் அதை இப்போ பறிச்சிட்டு வரேன். நீங்க அந்த மருந்தை தயார் பண்ணுங்க. அவரை எப்படியாவது நம்ம பேச வச்சிரலாம் " என்று நம்பிக்கையோடு தந்தையிடம் கூறிக் கொண்டிருக்க அவரோ அதிர்ந்தே விட்டார்.
"என்னம்மா நீ என்ன விளையாடுறியா. இப்போ அந்த இடம் எப்படி இருக்கோ யாருக்கு தெரியும் ? நீ எப்படி போவே
" என்று கேட்க, அவளோ தான் சென்று பறித்து விட்டு வருவேன் என்பதில் உறுதியாக இருந்தாள்.
தொடரும் ...
படித்து விட்டு தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டு்க்கொள்கிறேன்