வளவன் -9
அந்த ஊரில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அனைவரிடமும் கலந்துப் பேசி தான் எடுப்பார்கள். இப்பொழுது செங்கமலி வனப்பகுதிகள் சென்று அந்த மூலிகை செடி எல்லாம் பறித்து வருவதற்கு எப்படியும் ஒரு முழு பொழுது சென்றுவிடும். அவளின் பெற்றவர்கள் எவ்வளவோ மறுத்து பார்த்தும் அவளோ பிடிவாதமாக செல்வேன் என்று உறுதியாக இருந்தாள்.
அவர்களின் வாக்குவாதத்திலும் சுற்றி இருந்த அடர்ந்த காட்டுப்பகுதியைக் கண்டதிலும் விபரீதம் புரிந்து விட்டது வளவனுக்கு.
அன்று இரவு செங்கமலியின் கரங்களைப் பற்றி பற்றிக்கொண்டு, "எனக்கு பேச்சு வரலைன்னாலும் பரவாயில்ல. நான் இப்படியே இருந்துக்குறேன் ஆனா நீ போகாத. நீ போய் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா தாங்க முடியாது அப்பறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன். இதுக்கு அப்பறம் வாழ்ற ஒவ்வொரு நிமிஷமும் குற்ற உணர்ச்சியா தான் இருக்கும். நீ போகாத உன்னை கெஞ்சி கேட்கிறேன். போகாத " என்று அவளின் கரங்களை எடுத்து தன் நெஞ்சினில் வைத்து அவளை விடமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தான்.
பெற்றவர்களையே சமாளிக்க தெரிந்தவளுக்கு ஒரு மாதமாக தன்னோடு இருப்பவனையா சமாளிக்க தெரியாது.
"எனக்கு நம்பிக்கை இருக்கு என்னால இந்த காட்டுக்குள்ள போயி மூலிகை பறிச்சிட்டு வர முடியும். எனக்கு எதுவுமே ஆகாது. நான் திரும்ப நல்ல படியா வருவேன் உங்களுக்கு சத்தியம் பண்ணி தரேன். எனக்கு எதுவும் ஆகாது என் மேல நீங்க நம்பிக்கை வையுங்க முதல்ல "
"நான் உன் மேல முழு நம்பிக்கை வச்சிருக்கேன். ஆனா நீ ஏன் புரிஞ்சுக்கவே மாட்டிக்க ப்ளீஸ் " என்று அவளிடம் மன்றாடிப் பார்த்தும் ஒரு பயனும் இல்லாதுப் போனது. அவள் முடிவெடுத்து விட்டாள்.
மறுநாள் விடியல் நாச்சியன் வீட்டின் முன் அனைவரும் கூடி இருந்தனர். அவள் வனப்பகுதிக்குள் தனியாக செல்லப் போகிறாள் அதுவும் நீண்ட தூரம். இன்று சூரியன் உதிர்க்கும் போது என்றால் நாளை சூரியன் உதிர்த்த பின் தான் திரும்ப தங்களை நோக்கி அவளால் வர முடியும். இந்த இடைப்பட்ட நேரம் முழுவதும் அவள் பயணம் செய்தால் மட்டும் தான் அவளால் அந்த மூலிகையைப் பறித்து வர முடியும் என்பது அங்கிருந்து அனைவரும் அறிந்தது.
"இங்க பாரும்மா நீ தைரியமான பொண்ணு தான். நான் இல்லன்னு சொல்லலை. ஆனா கவனமா போயிட்டு வா. நீ பல வருஷத்துக்கு முன்னாடி போயிருக்கே. பாதைகள் இல்லாத ஒரு இடம் பாதுகாப்பும் இருக்காது. கவனமா இருக்கணும் தேவையான பொருள் எல்லாம் எடுத்து வச்சுட்டியா " என ஊர் பெரியவர் கேட்க, இவளும் சரி என தலையை அசைத்தாள்.
அவளின் அன்னையோ அழுது கொண்டே இருந்தார். மகளை தனியாக வனப்பகுதிக்குள் அனுப்ப எந்த தாய்க்கு தான் மனம் வரும்.
"நான் உன் கூட வரேன் " எனக் கூறி கரங்களை வளவன் பற்றவே,
"உங்களால அவ்வளவு தூரம் நடக்க முடியாது. இன்னும் உங்களுக்கு முழுசா சரியாகல " என்று அவனின் கரங்களை தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டு ஆறுதலாய் கூறினாள். அவர்களின் அந்த செய்கையிலும் பேசும் பேச்சு வார்த்தையும் அந்த அன்பின் மொழியும் மற்றவர்களும் அதைக் கண்டவாறு தான் இருந்தனர்.
"நான் திரும்ப கண்டிப்பா இங்கே வருவேன் உங்க எல்லாரையுமே பார்ப்பேன் " என்று வளவனிடம் கூறிய அதையே தான் தன் இனத்தவர்களிடம் கூறி விட்டுச் அங்கிருந்துச் சென்றாள். கமுதிக்கோ உள்ளம் எரிந்துக் கொண்டிருந்தது. அவனுக்காக உயிரை கூட இவள் விட துணிந்து விட்டால் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை.
ஆம் என்ன தான் நம்பிக்கையாக அவள் கூறினாலும் உறுதியாக அவள் இங்கு திரும்ப வருவாள் என்பதை கூற முடியாதல்லவா !அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் இவனுக்கு இருக்கு என்று அங்கே அவள் செல்வதை கண்டவாறு நின்ற வளவனை பார்த்து தான் நினைத்துக் கொண்டான்.
பயமின்றி செங்கமலி உறுதியோடு அங்கிருந்துச் சென்று மறைந்து விட தன்னை அறியாது விழிநீர் சிந்த நின்றிருந்தான் வளவன். அவள் திரும்ப வரும் வரை அவனின் பார்வை அந்த திசையில் தான் நிலைத்தே இருந்தது.
அவள் சென்று விட்ட இந்த நொடிப் பொழுதுகள் எல்லாம் வளவனுக்கு இதயத்துடிப்பை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வாய் உணவு கூட அவனுக்கு இறங்கவில்லை. தனக்காக அவள் இவ்வளவு செய்கையில் அவளுக்காக தன் உயிரே கொடுக்கக் கூட வளவன் தயாராகத்தான் இருந்தான்.
"தம்பி நீ கவலைப்படாதே. சாப்பிடுப்பா சாப்பிடலைன்னா எப்படி உன்னோட உடம்ப நீ தேத்துவ " என்று நாச்சியன் கேட்கவே,
அவரிடம் மீண்டும் மீண்டும் செங்கமலியைப் பற்றிய தான் கேட்டுக் கொண்டிருந்தான். தன் மகளை நினைத்து இவன் தவிக்கும் தவிப்பு அவரை என்னவோ செய்தது. அவர் வளவனையும் சரி கமுதியையும் சரி ஒப்பிட்டுப் பார்த்தார். கமுதி வழக்கம் போல் தான் சுற்றி வந்துக் கொண்டிருந்தான்.
ஒரு நொடி கூட செங்கமலி காட்டுப் பகுதிக்குள் சென்று இருக்கிறாளே என அவளை நினைத்து அவன் கவலைப்படவில்லை. ஆனால் வளவனோ இப்பொழுது நன்றாக இருந்திருந்தால் அவளோடு இவன் சென்றிருப்பான் என்பது உறுதியான ஒன்று.
ஒரு வழியாக ஆதவன் மறைந்துவிட அந்த இரவு மழையோ அப்படி பெய்தது. அடிக்கும் மலையில் எத்தனை மரங்கள் தான் சரிந்ததோ எந்த நீரோடையில் இருந்து தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறதோ யாருக்குத் தெரியும்.
இன்று வேணுமென்றே அந்த இயற்கை சதி செய்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்த இரவு பொழுது நாச்சியன் குடும்பத்திற்கு வேதனையான இரவாகத்தான் இருந்தது. அவள் சென்ற பாதையை கண்டு துளி கூட தூக்கம் என்பது இல்லாமல் அமர்ந்திருந்தான் வளவன்.
மறுநாள் ஆதவன் விழி திறந்து வெளிச்சத்தைக் கொடுக்க இப்பொழுது அனைவருமே செங்கமலி வந்து விட்டாளா என்ற எண்ணத்தோடு நாச்சியனின் வீட்டில் முன் கூடி விட்டனர். ஆனால் செங்கமலியோ வரவில்லை. நெஞ்சமெல்லாம் அரித்தது. தன் மகளுக்கு நிச்சயம் ஏதோ ஆகிவிட்டது என்று எண்ணத்தில் சமுத்திராவோ ஒப்பாரி வைத்து அழுது விட்டார்.
"சரி எதுக்கும் கொஞ்ச நேரம் பொறுத்து பார்ப்போம். நேத்து வேற நைட்டு மழை பெஞ்சு இருக்குல்ல. எங்கையும் நடுவுல கொஞ்ச நேரம் இருந்துருப்பா. இருந்து வருவாப்பா பார்க்கலாம் " என்று அங்கிருந்து பெரியவர் ஒருவர் கூற, பொற்கொடியோ அவர்கள் தெய்வமாக வணங்கும் சிலையின் முன் நின்று தன் தோழி திரும்ப நல்லபடியாக வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.
சூரியன் உச்சிப் பொழுதிற்கும் வந்து விட்டது. செங்கமலி வராததுப், போக, இதற்கு மேல் முடியாது என நினைத்த கமுதியோ வேகமாய் வந்து வளவனை போட்டு அடித்தான். திடீரென அவன் இப்படி காட்டு மிருகம் போல் ஏற்கனவே முடியாமல் இருப்பவனை அடிக்கவே அங்கிருந்தவர்கள் பிரிக்க முயற்சி செய்தனர்.
"டேய் விடுடா விடு. எதுக்கு இப்ப அந்த பையனை போட்டு அடிக்கிற ?"
"எல்லாத்துக்கும் காரணம் இவன் தான். இப்ப செங்கமலி வீட்டுக்கு வரலைன்னா அவளுக்கு ஏதோ ஆச்சு அப்படின்னு தான் அர்த்தம். இவனுக்கு பேச்சு வந்தா என்ன வராட்டி என்ன. இவனால தான் இப்போ அவள் உயிருக்கே ஆபத்தா போயிட்டு. டேய் உன்னை சும்மாவே விடமாட்டேன் " என்க,
அங்கிருந்தவர்கள் பிரிக்க முயற்சி செய்தாலும் அவர்களால் முடியவில்லை. அந்த அளவுக்கு சீற்றமோடு வளவனை போட்டு தாக்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் சற்று கட்டுகள் பிரித்து தன் கையை மெல்லத் தூக்க முயற்சிச் செய்த வளவனுக்கு அவனால் எதிர்த்து தாக்க முடியவில்லை. அடி வாங்கி உதட்டோரம் உதிரம் கசிய தரையில் சரிந்தான்.
ஒரு மாதம் தன்னோடு தங்களின் வீட்டில் தங்கி இருந்த வளவன் படும் துயரத்தை பார்த்துக் கொண்டிருந்த நாச்சியனோ வேகமாய் வந்து கமுதியைப் பற்றி பிடித்து தள்ளி விட்டார்.
"மாமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?" என்க, மாப்பிள்ளையான தன்னையே அவர் எதிர்க்கிறார் என்ற நினைப்பில் கமுதி கேட்டான்.
"இதுக்கு மேல நீ அவன் மேல கைய வைக்க கூடாது. இவன் என் வீட்டு பிள்ளை என் பொண்ணு எனக்கு எப்படியோ அப்படித்தான் இவனும் எனக்கு. ஒழுங்கா இங்க இருந்து போயிரு "
"மாமா செங்கமலிக்கு வராததுக்கு காரணமே இவன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னை அடிக்கிறீங்க ?"
"உண்மையிலே உனக்கு என் பொண்ணு மேல பாசம் இருந்துச்சா நேத்து அவ போகும் போது நீ ஒரு வார்த்தையாவது அவளை தடுத்தியா, இல்ல அவ கூட தான் போனையா, இல்ல அவளுக்காக கவலை தான் பட்டையா. இப்படி எதுவுமே பண்ணாம என் பொண்ணுக்காக நீ ஏண்டா பேசிட்டு வர. இப்படி காட்டு மிராண்டித்தனமான நடந்துக்கிற இவனுக்கு என் பொண்ண நான் கொடுக்கவே மாட்டேன் " என்று அனைவரின் முன்னிலையிலும் சத்தமிடவே அங்கே பிரச்சனை பெரிதாக வெடித்தது.
"என்ன நாச்சியா அன்னைக்கு உறுதிப்படுத்திட்டு இப்ப முடியாதுன்னு சொல்ற " என்று கமுதியின் தந்தை கேட்க,
"கோபம் வந்ததுன்னு சொல்லி இந்த பையன போட்டு இப்படி அடிக்கிறானே நாளைக்கு இதே தானே என் பொண்ணையும் போட்டு அடிப்பான் " என்று பெற்றவர் கேட்டார்.
"உன் பொண்ணுக்காக தானே அவன் சண்டையை போட்டுட்டு இருக்கான் " கமுதியின் தந்தை கூறினார்.
தன்னால் தான் ஒன்றாக இருந்த இந்த இனத்தவர்களுக்கு பிரச்சனை என்பது புரிந்த வளவனோ இரு கரம் குவித்து அவர்களிடம் சைகையால் தனக்கு சரியானதும் தான் இங்கிருந்துச் சென்று விடுகிறேன் என்று கெஞ்சுதலாய் மன்றாடினான்.
"நீ ஏன் இப்படி கெஞ்சிக்கிட்டு இருக்க. நீ எங்க ஊருக்கு வந்த விருந்தாளிப்பா. உன்னை நல்லபடியா நாங்க அனுப்பி வைக்கிறது தான் எங்களோட பண்பு. இது ஏதோ எங்களுக்குள்ள நடக்குற ஒரு சின்ன பிரச்சனை. நாள் போக்கில் சரியா போயிரும்பா " என்று கண்ணீர் விழிகளோடு மன்றாடி கெஞ்சும் வளவனை கண்டு ஒரு பெரியவர் வந்து கரம் பற்றி ஆறுதலாய் கூறினார்.
இவர்களின் இந்த வாக்குவாதம் இங்கு நடந்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அங்கு வந்துச் சேர்ந்தாள் செங்கமலி.
அனைவரின் பார்வை அங்கு இருக்க அவர்களின் முன்னே மூச்சு வாங்க தலைசுற்ற தன் கையில் கொண்டு வந்த மூலிகை அனைத்தையும் தந்தையும் கரங்களில் கொடுத்த நொடி அப்படியே கீழே மயங்கி சரிய அவளை வந்து தாங்கினான் வளவன்.
தண்ணீர் தெளித்து மயக்கம் அடைந்தவளை சரி செய்ய விழி திறந்தவளுக்கு அவ்வளவு சந்தோஷம் தான். கூறியதுப் போல் இவர்கள் அனைவரிடமும் இங்கு வந்துச் சேர்ந்து விட்டோம் அதை விட தான் எதிர்பார்த்துச் சென்ற அந்த மூலிகையைப் போராடி பறித்து விட்டோம். சீக்கிரம் வளவன் தன்னிடம் பேசி விடுவான். அந்த எண்ணமே அவளை அந்த அசதியிலும் புன்னகைக்க வைத்தது.
"சரி சரி செங்கமலி தான் நல்லபடியா வந்துட்டால. போங்க போய் எல்லாரும் வேலையை பாருங்க. நாச்சியா உன் மக நல்ல ஓய்வு எடுக்கட்டும். நீ இந்த மூலிகையை தயார் பண்ணி இவனை பேச வை " எனக் கூறி அந்த பெரியவர் சென்று விட்டார்.
வளவன் செங்கமலியின் கரங்களைப் பற்றியது தான் விடவே இல்லை. அவளோ அயர்ந்து நித்திரையில் இருந்தாள். அவளின் மேனியில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது. காட்டு விலங்குகளிடம் சண்டையிட்டதுக்கு அடையாளமாக நகக்கீரல்கள் இருந்தது. அவளுக்கு அதெல்லாம் சர்வ சாதாரணம் தான். ஆனால் அவளைக் கண்ட வளவனுக்கு தான் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நெஞ்சுருக்க அவளே தன் உயிர் மூச்சாக அமர்ந்திருந்தான்.
கொண்டு வந்த மூலிகைகள் எல்லாம் அரைத்து காய வைத்து அதனை வளவனுக்கு கொடுத்து அவனை தினமும் உண்ண வைத்தனர். செங்கமலியின் இப்பொழுது நன்றாக தேறி வந்து விட்டாள்.
வளவனுக்கு ஓரளவு அவனின் காயங்கள் எல்லாம் குணமாக இருந்தது. இப்பொழுது அவனால் நடக்கவும் முடிந்தது. அவனாக உண்ணவும் முடிந்தது. எலும்பு முறிப்பட்டதும் சரியாகி விட்டது.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதுப் போல் தான் கமுதியை கண்டாலே செங்கமலி மட்டுமல்லாது அவனின் குடும்பத்தாரே விலகிச் சென்றார்கள். கமுதிக்கு அப்பொழுது தான் தன் தவறு புரிந்தது. தான் அதிகம் கோபப்பட்டு விட்டோம் என்று.
தனக்கு பேச்சும், கேட்கும் திறனும் செயல்படாமல் போன அந்த நொடியில் இருந்து இந்த நாள் வரை ஒரு நாள் கூட பேச, கேட்க வேண்டும் என்றெல்லாம் வளவனின் மனம் நினைக்கவில்லை.
ஆனால் இப்பொழுது நினைத்தது செங்கமலியின் குரலைக் கேட்க வேண்டும். அவளோடு மணிக்கணக்காக பேச வேண்டும். தனக்காக அவள் எவ்வளவு கஷ்டப்பட்டால் அந்த வனப்பகுதிக்குள் என்பதை எல்லாம் கேட்க வேண்டும். அதனாலே தனக்கு பேச்சுத் திறனும் கேட்கும் திறனும் வேண்டும் என்று நினைத்தான்.
ஒரு வாரம் கடந்த நிலையில் அவனை பேச வைக்க இவர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தனர். அவனும் தன் நாக்கினை அசைத்து வாய் திறந்து உச்சரிக்க முயற்சி செய்ய மெல்ல மெல்ல அவன் பேசுவது ஓரளவு இவர்களுக்கு புரியும் படி செய்தது. அதிலே எளிதாக தெரிந்து விட்டது தான் கொடுக்கும் மருந்து வீரியம் அவனுக்கு வேலை செய்கிறது என்று இன்னும் சில நாட்க
ளில் அவன் முழுவதுமாக பேசி விடுவான் என்ற நம்பிக்கையில் செங்கலியோ ஆவலோடு காத்திருந்தாள்.
தொடரும்..
படித்து விட்டு தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.