• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரமாய் வந்தவள் 5

farhana

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
9
3
3
Udumalpet
மனதை திடப்படுத்திக் கொண்டாள் அப்படியே கழிந்தது அந்த நாள்

மறுநாள் காலை எழுந்தவுடன் டீவி ஆன் செய்து மெலோடி பாடலை ஓட விட்டாள் சத்தம் அதிகமாக இருந்தது அவள் குறைக்க ரிமோட்டை எடுக்கும் போது படார் என்று கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்

ஏன் இவ்வளவு சத்தம் காது கேக்காதா என்று கத்தி விட்டு சென்றான்

அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை சத்தத்தை குறைந்து விட்டு வேலையைத் தொடரச் சென்றாள்

துடைப்பத்தை எடுத்துக் கொண்டு அவன் அறைக்குச் சென்றாள்

என்ன என்றான்

இந்த ரூமை கிளீன் பன்னிக்கறேன்

அப்பறம் பன்னிக்க

இல்லை நீங்க இருக்கும் போதே பன்னிக்கறேன் அப்பறம் எதையாவது காணம் னா. என்ன தான் சொல்லுவிங்க. என்னால அத தாங்கிக்க முடியாது

அப்பறம் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன் நான் ஒன்னும் உங்க பணத்தை பார்த்து கல்யாணம் பண்ணிக்கவில்லை பணம் அது எனக்கு தேவையில்லை

அவள் சொல்லி விட்டு மடமடவென வேலையை முடித்து விட்டு கிளம்பி விட்டாள்

ஆனால் அவன் தான் பேயறைந்ததைப் போல் இருந்தான்

என்ன சொல்றாள் பணத்துக்காக கல்யாணம் பண்ணலையாமா பொய் சொல்ற மாதிரி தெரியவில்லை

சரி பார்ப்போம் என்று கிளம்பச் சென்றான்

கிச்சனில் நின்று அவனை வறுத்து எடுத்து கொண்டிருந்தாள் சட்னி தாளிக்கும் போது அவனையும் சேர்த்து தாளித்தாள்

அவன் உண்டு விட்டு ஆபீஸ் கிளம்ப இவளும் தன் அன்றாட வேலைகளை தொடர்ந்தால்

மாலை கார்டனில் சென்று உலாவி கொண்டு இருந்தாள் அங்க இருக்கும் குழந்தைகளுடன் விளையாட்டிக் கொண்டு இருந்தாள்

குழந்தைகளைப் பார்ப்பது மனதிற்கு இதமளித்தது. தனக்கும் குழந்தை வேண்டும் என்று ஆசையாக இருந்தது

குழந்தைகளைப் பார்த்தால் அவளுக்கு ஷ்ரவன் முகம் தான் ஞாபகம் வந்தது

பாசத்திற்காக ஏங்கி இப்போது ஏற்க மறுக்கும் முரட்டு குழந்தை

அவனுக்கு என்னதான் இவளைப் பிடிக்கவில்லை என்றாலும் இவளுக்கு அவனைப் பிடித்திருந்தது

அவளைப் பார்க்கும் பொழுது ஒரு புருவத்தை தூக்கி என்ன என்பதும்
சாப்பிடும் போது அவன் முகத்தில் தோன்றும் பல விதமான உணர்வுகளையும் தள்ளி நின்று ரசிப்பாள்

அவனைப் அவன் பிரச்சினை இருந்தது வெளி கொண்டு வந்து அவனுடன் சேர்ந்து வாழ நினைத்தால் ஆனால் அவன் அதற்கு தயாராக இல்லை

ஏனோ அவனை விட்டு செல்லும் எண்ணம் துளியும் இல்லை

Skv கன்ஸ்ட்ரக்ஸன் கம்பீரமாக காட்சி அளித்தது அதில் ஆறாவது தளத்தில் ஷ்ரவன் ஒருவனை கிழி கிழி என்று கிழித்து கொண்டு இருந்தான்

இது ஷ்ரவன் விஷ்வாவின் உழைப்பால் உருவாக்கப்பட்டது

அருகில் இருந்த விஷ்வா அவனை அமைதிப்படுத்திகப் படுத்திக் கொண்டிருந்தான்

அவனை விஷ்வா அனுப்பி விட்டான்

ஏன்டா

டேய் இது நாளைக்கு அனுப்ப வேண்டியது இதுல இவ்வளவு தப்பு

சரி சரி விடு பாத்துகலா பீபி வந்தரப் போகுது என்றவனைப் பார்த்து முறைத்தான் ஷ்ரவன்

மது எப்படி இருக்கா

விஷ்வா இவர்கள் திருமணம் முடிந்து இப்போது தான் வந்துள்ளான்

ஷ்ரவன் அவனைப் பார்த்து கல்யாணம் முதல் இப்போது வரை நடந்த அனைத்தையும் கூறினான்

வந்தது விஷ்வாவக்கு கோபம் விட்டான் ஒரு அறை

ஏன்டா நா எவ்வளவு தூரம் சொன்ன பொறுமையா இருன்னு ஏ இப்படி பண்னண

சொல்லுடா

ஸாரி விஷ்வா என்னால மறுபடியும் ஒரு ஏமாற்றத்தை தாங்க முடியாது ‌

இதை கேட்டதும் விஷ்வாவின் கோபம் சற்று மட்டுப்பட்டது

சரி அத கொஞ்சம் பொறுமையாக சொல்லி இருக்கலாம் இல்லை

அவளுக்கு நான் நம்பிக்கை கொடுக்க விரும்பல

சரி அப்பறம் எதுக்கு அவள உன்னோட வீட்ல வச்சிட்டு இருக்க அவங்க வீட்டுக்கு தாட்டி விட்டு

இதை கேட்கும் போதே கசந்தது ஷ்ரவனுக்கு

விஷ்வா அவனையே பார்க்க

அ அது அது என்று என்ன சொல்வது எனத் தெரியாமல் தடுமாறினான்

சரி விடு என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான் விஷ்வா

ஷ்ரவனுக்கு அவளை பிடித்து இருக்கிறது என்பதை அறிந்து கொண்டான் விஷ்வா

இருவரும் ஒருவரை ஒருவர் நினை
த்து கொண்டு இருந்தனர்

காலமும் அவர்களைப் பார்த்து சிரித்தது