• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரம் 1

MK25

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
14
11
3
Tiruppur
அத்தியாயம் 1

கதிரவன் தன் செந்நிறத்தை, வானம் எங்கும் பூசித் தான் விடைபெரும் நேரம் நெருங்கி விட்டதை அனைவருக்கும் உணர்த்திக் கொண்டிருந்தான். இருள் நெருங்க போகிறது என்பதாலோ என்னவோ மிகவும் வேகத்துடன் தன் இலக்கை நோக்கி அந்த இரயில் சென்றது.

ஆனால் இவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளும் அளவிற்கு அந்த இரயிலில் பயணித்த அவளது மனமும் ரயிலின் வேகத்திற்கு இணையாக ஓடிக் கொண்டிருந்தது. மனதின் வேகத்திற்கு தடையேது. கடிவாளம் போட்டால் அடங்கிடக் கூடியதா மனம்?...

காலையில் அந்த அழைப்பு வந்ததில் இருந்தே அவளது மனம் அப்படிதான் இருக்கிறது. காற்றை கிழித்து முன்னுக்கு செல்லும் அந்த இரயிலைப் போல, அவளது வாழ்க்கையின் முந்தைய காலத்திற்கு அவளது மனம் கிழித்துக் கொண்டு சென்றது.

அதனால் அவளது மனதில் கசிந்துக் கொண்டிருந்த இரத்தத்தைக் காணத்தான் அங்கு யாரும் இல்லை. ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் அளவு அவளது மனதிற்குத்தான் இரக்கம் இல்லை பாவம். அது அவளது ஆரம்ப கால வாழ்க்கைக்கு அவளை அழைத்துச் சென்றது.

*எழு வருடங்களுக்கு முன்பு*

திருச்சியில் இயங்கி வந்த மிக முக்கியமான கல்லூரிகளில் அதுவும் ஒன்று. அதன் ஒரு கட்டிடத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர் இரு தோழிகள் ரம்யாவும் வள்ளியும்.

“ஏய்… அடியேய் வள்ளி நில்லுடி…” என முன்னே ஓடிக் கொண்டிருந்த தன் தோழியைக் கூப்பிட்டாள் ரம்யா.

“முடியாதுடி சீக்கிரும் வா”

“ஹே.. முடியலடி இதுக்கு மேல என்னால” என்றவளை வள்ளி பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

“இதுக்கு மேல ஓடுனா அப்பறம் நா ஆதினி கிட்ட சொல்லிடுவேன்டி பாத்துக்க” என்று ரம்யா கூறவும் நின்று முறைத்தவளைப் பார்த்து

“அப்பாடா.. இருடி கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்…
மனுசியாடி நீ எல்லாம்? எவ்வளவு நேரமா கத்துறேன்” என்றாள் மூச்சு வாங்கிக் கொண்டே.

வள்ளியோ அதற்கு “லூசு லேட்டா போனா அப்பறம் அட்டணன்ஸ் இருக்காது பரவாலையா?” என்றாள்.

“யார்கிட்ட கதை விடுற இன்னும் கிளாஸ் ஆரமிக்க பத்து நிமிஷம் இருக்கு” என்றவளை இடைமறித்த வள்ளி,

“இன்னைக்கு வெள்ளிக்கிழைமைடி லூசு” என்றாள்.

“ஐயையோ!!! இந்நேரம் சூரியா சார் கிளாஸ்ல இருப்பாருல டி!?” என்றவளுக்கு,

“ஆமாம்.. அதுலயும் ஆதினி வேற கிளாஸ்ல இருக்கா சோ கண்டிப்பா அங்கதான் இருப்பாரு சீக்கிரம் வா” என்று கூறியபடியே மீண்டும் ஓடத் தொடங்கினாள் வள்ளி.

அவளைப் பின் தொடர்ந்த ரம்யா
“ஏண்டி.. ஒருவேளை சூரியா சார் ஆதினிய உண்மையாவே.. லவ் பண்றாறோ?” என்றாள்.
“யேண்டி காலேஜ்கே தெரிஞ்ச விசயத்த இப்படி சந்தேகமா கேக்குற?!” என்றாள் வள்ளி.

“அது இல்லடி இதுவரை அவருதான் ஆதனி கிட்ட ஒண்ணுமே சொல்லலையே? அதான் அவரு சும்மா தான் பாக்குறாரோ போலனு தோணுச்சிடி” என்றவளிடம்,

“அவரு சொல்றதுலாம் இருக்கட்டும் நாம இப்படி பேசிட்டு வரதுலாம் ஆதினிக்குத் தெரிஞ்சா அவ்ளோதான் நம்மல கொன்னே போட்டுருவா அதுனால ஒழுங்கா இரு. உன் வாய வச்சிக்கிட்டு” என்று வள்ளி கூறவும்

“ஐயயையோ.. அவகிட்ட போட்டு குடுத்துராத தாயே” என்று அவள் கூறுவதற்கும் அவர்களது வகுப்பறை வருவதற்கும் சரியாக இருந்தது.

அங்கு அவர்கள் பேசிக் கொண்டு வந்ததைப் போலவே அவர்களது சூரியா சார் வகுப்பின் உள்ளேதான் நின்றுக் கொண்டிருந்தார்.

இவர்கள் சென்றதும் உள்ளே வருமாறு தலையசைத்தவர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். இருவரும் உள்ளே சென்று ஆதனியின் இருபக்கத்திலும் அமர்ந்து கொண்டனர்.

வள்ளி ஆதனியின் காதருகே குனிந்து கொண்டு “ஆதினி… நம்ம ரம்யாக்கு ஏதோ டவுட்டாம்டி.. கொஞ்சம் என்னன்னு கேளு” என்றாள்.

வள்ளி தன்னை ஆதனியிடம் மாட்டி விடப் பார்க்கிறாள் என்பதை புரிந்துக் கொண்ட ரம்யா “வள்ளி உன்னை கொன்றுவேன்டி பார்த்துக்க” என்றாள்.

அதற்குள் அவர்களிடம் வந்த சூரியா
“என்ன இங்க ஏதோ பெரிய மீட்டிங் போற மாறி இருக்கு?” என்றான்.

அதற்கு வள்ளி “சும்மாதான் சார் பேசிட்டு இருக்கோம்” என்றாள்
.
சூரியா மீண்டும் ஆதினியைப் பார்த்து “நீங்க நேத்து வரல போல இருக்கே ஆதினி? இல்லை நான்தான் கவனிக்கலையா?” என்றான்.

வள்ளி அதற்கு ‘அடேங்கப்பா என்ன உலகமகா நடிப்பு! இவரு அதினிய கவனிக்கலையாம்லா?...’ என மனதிற்குள் நினைக்க.

ரம்யாவோ வேகமாக “அவளுக்கு பீவர் சார்.. அதான் வரல” என்றாள்.

ஆதினி ரம்யாவைப் பார்த்து முறைக்க.. சூரியாவோ
“என்ன ஆதினி பீவரா? இப்போ பரவாலையா? முடியலனா ரெஸ்ட் எடுக்க வேண்டிதான ? ஏன் இன்னைக்கு வந்தீங்க?” என கேட்டான்.

அவளுக்கு உடல்நிலை சரி இல்லை என்று கேள்வி பட்டதும் அவனுள் தோன்றிய பதட்டத்தை ஒரு நொடியில் சரி செய்து கொண்டவன் மிகவும் சாதாரணமாகவே கேட்டான்.

இருப்பினும் கூட அதை யாரும் கவனிக்க தவறவில்லை.

இந்த முறை முந்திக் கொண்ட வள்ளி “சார் அதுலாம் அவ இப்ப நல்லா இருக்கா சார்.. ஒண்ணும் பிரச்சனை இல்லை” என்றாள்.

வள்ளியும் ரம்யாவும் வேண்டும் என்றே ஆதினயை பதில் கூற விடவில்லை. இதுவும் அடிக்கடி நடப்பது தான். ஏதாவது காரணம் கூறி சூரியா ஆதினியிடம் பேச வருவதும் அதை ரம்யாவும் வள்ளியும் சேர்ந்து தடுப்பதும் நடந்துக் கொண்டே இருந்தது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராம் என்னும் அவர்களுடன் படிக்கும் மாணவன் சூரியாவிடம்
“சார் நேத்து நீங்க நடத்துனதுல இந்த டாபிக் எனக்கு புரியல சார் திரும்ப சொல்ல முடியுமா?” என்று வந்து நின்றான்.

வேறு வழியே இல்லாமல் சூரியா அவனுடன் சென்றான். சிறிது நேரம் சூரியாவையும் ராமையும் பார்த்துக் கொண்டிருந்த ரம்யா மெதுவாக மீண்டும் தன் தோழிகளிடம் பேசத் தொடங்கினாள்.

“இரண்டு பேரும் இதக் கவனிச்சிங்களா?” என்றாள்.

“எத டி?” என்று வள்ளி கேட்க்கவும்

“ராமை தாண்டி”

“அவன கவனிக்க என்ன இருக்கு?” என்றாள் வள்ளி.

“அடிக்கடி அவன் சூரியா சார் கிட்ட டவுட்டு கேக்குறான்ல?” என்றாள்.

“ஏண்டி.. அவன்தான் நம்ம கிளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க் எடுக்குறான். அவனுக்கு டவுட்டு வரதுல உனக்கு என்னடி டவுட்டு?” என்றாள் வள்ளி சற்று கடுப்பாக.

“அது இல்லடி அவன் கரக்டா சார் ஆதினி கிட்ட பேச வரப்போ தான் டவுட்டு கேக்குறான்” என்றாள்.

இதை கேட்டு அதிர்ச்சி ஆன வள்ளி
“அடியேய்.. நீ புதுசா ஒரு கதை உருவாக்காத டி… ஆல்ரெடி சூரியா சார் கதையே போதும்.” என்றாள் வள்ளி வேகமாக.

ஆனால் ஆதினியோ எதுவும் கூறாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

ஒருவேளை கோவித்துக் கொண்டிருப்பாளோ என்று தோழிகள் இருவரும் நினைத்து பயத்தில் அவளிடமே
“ஆதினி ஏன் அமைதியாவே இருக்க? எங்க மேல கொச்சி கிட்டாயா? சும்மா விளையாட்டுக்கு தான் டி பேசுனோம்” என்றாள் வள்ளி.

ஆதினியோ அமதியாக “இல்லடி நான் வேற யோசிச்சிட்டு இருக்கேன்” என்றாள்.

மற்ற இருவருக்கும் அவள் கூறுவது புரியாமல் “அப்படி என்ன யோசிக்கிற?” என்றார்கள்

ஆதினியோ “நான் சூரியா சார நம்ம காலேஜ்க்கு முன்னாடியே எங்கையோ பார்த்து நல்லா பேசுன ஒரு ஆளு மாறி தெரியுது.. ஆன எங்கனு தெரியல” என்றாள்.

“என்ன!! அப்போ உனக்கு அவர முன்னாடியே தெரியுமா?!” என்றாள் ரம்யா.

“இல்லடி அவர நான் பார்த்ததே இல்ல” என்றாள். மற்ற இருவரும் அவள் கூறுவதை கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்து முழித்து கொண்டனர்.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஆரம்பமே அலப்பறையா 🤣🤣🤣

எங்கேயோ பாத்திருக்கேன் ஆனா பாக்கல 🤣🤣🤣

இப்போ ஆதினி சூர்யாவ பார்த்திருக்காளா இல்ல பார்க்கலையா? 🧐

ராம்க்கு ஏன் ஆதினிகிட்ட சூர்யா பேசும்போதெல்லாம் பாடத்துல சந்தேகம் வருது? 🤔

ஒருவேளை ஆதினி மேல லவ்ஸா இருக்குமோ? 🤔 அதான் பொறாமைல சந்தேகம் பொங்கி வருதோ 🤣🤣🤣 இது என் சந்தேகம் 🤩🤩

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 
  • Love
Reactions: MK25

MK25

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
14
11
3
Tiruppur
ஆரம்பமே அலப்பறையா 🤣🤣🤣

எங்கேயோ பாத்திருக்கேன் ஆனா பாக்கல 🤣🤣🤣

இப்போ ஆதினி சூர்யாவ பார்த்திருக்காளா இல்ல பார்க்கலையா? 🧐

ராம்க்கு ஏன் ஆதினிகிட்ட சூர்யா பேசும்போதெல்லாம் பாடத்துல சந்தேகம் வருது? 🤔

ஒருவேளை ஆதினி மேல லவ்ஸா இருக்குமோ? 🤔 அதான் பொறாமைல சந்தேகம் பொங்கி வருதோ 🤣🤣🤣 இது என் சந்தேகம் 🤩🤩

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
நன்றி