• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரம் - 19

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -19

மறுநாள் பொழுது அழகாக விடிய பால்காரர்கள் சத்தம் கேட்டதும் வேகமாக எழுந்த பூரணி “அச்சோ நேரமாகிடுச்சே” என சொல்லியபடியே புழக்கடையை நோக்கி ஓடினாள்.பின்னர் அவள் வரவும் பேச்சியம்மாள் தொழுவத்திற்கு வரவும் சரியாக இருக்க அவளை பார்த்தவர் “ இப்போ இங்க எதுக்கு வந்து மசமசன்னு நின்னுகிட்டு இருக்க...வீட்டுக்குள்ள போய் வேலையை பார்க்கலாமல “என்று அவர் ஒரு அதட்டல் போட தலையாட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அவர் சொன்ன வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் வந்தவள் “எல்லாம் முடிச்சுட்டேனுங்க ...அப்புறம் என்ன செய்யறதுங்க?” என்றபடி நின்றாள் பூரணி.
அவரோ “ம்ம்ம் ஒருத்தி சீலை இல்லைனு சித்தி வீட்டுக்கு போனாளாம்,அவள் ஈச்சம் பாயை கட்டிக்கொண்டு எதிரே வந்தாளம்.... நான் பார்க்கிற வேலைக்கு கூட மாட ஒத்தாசை செய்யறத விட்டுபுட்டு சும்மா என்ன செய்யணும்னு கேட்டுகிட்டு நிக்கிற” என அவர் இழுவையை ஆரம்பிக்கவும்
அப்போது சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் அங்க பாண்டி இவளை பார்த்து நக்கலாக சிரித்தபடி செல்ல......அவளோ பார்வையாலேயே அவனை எச்சரித்தவள் “டேய் லொடுக்கு பாண்டி என்னை பார்த்தா சிரிக்கிற......இருடி சீக்கிரம் வைக்கிறேன் ஆப்பு” என மனதிற்குள் முனகி கொண்டே நிற்கவும் அப்போது பேச்சியம்மாள் “இந்தா இந்த கீரையை அலசி வை என கொடுத்தவர் உனக்கு கீரை கடைய தெரியுமா ?”என அவளை பார்த்து கேட்க
அவளோ திருதிருவென முழித்தவள் ம்ம்ம் ....ம்கும் என ஆம் இல்லை இரண்டு பக்கமும் தலை ஆட்டி கொண்டே அதற்கும் திட்டு விழுமோ என அவர் முகத்தை பார்த்தாள்...ஏனெனில் அவளுக்கு கடையதெரியாது. அவரோ “சரி சரி நீ அலசி வை நான் வந்திடறேன்” என அவளிடம் கொடுத்தவர் “அப்புறம் பெரியவன் போகும்போது அந்த மஞ்ச காட்டுக்கு மருந்து எடுத்திட்டு போனானா “ என கேட்கவும்
அவளோ “அவரு போயிட்டாருங்களா” என வேகமாக கேட்டுவிட்டு பின்னர் அவர் முகத்தை பார்த்துவிட்டு உதட்டை கடித்தவள் “இல்லைங்க நான் சீக்கிரமா எந்திரிச்சதனால அவரை பாக்களைங்க” என இழுக்க
உடனே அவர் “இது நல்லா இருக்கு ... உன்ற புருஷன் கோழிகூப்பிடவே கிளம்பி போய்ட்டான்...நீ இப்போ கேட்கிறியாக்கும்.......புருசன் பொழப்ப பார்க்க போனதுகூட தெரியாம ஒரு பொம்பள தூங்கிட்டு இருந்தா குடும்பம் விளங்கிடும் ....அவன் என்னடானா என் பொண்டாட்டிய எழுப்பாதிங்கனு சொல்லிட்டு போறான்.....நல்ல புருசன் நல்ல பொண்டாட்டி என முகத்தை நொடித்தபடி சொன்னவர் சாப்பாடு மருதுகிட்ட கொடுத்து விட சொன்னான்...... நான் கம்ப குத்திபோட்டுட்டு வந்திடறேன்.....நீ இந்த வேலையை முடிச்சு வை”........என்றபடி அவள் கையில் கீரையை கொடுத்தார்.
அவளோ அதை வாங்கி கொண்டு வேகமாக உள்ளே சென்றவள் ஹப்பா என பெருமூச்சுவிட்டபடி நின்றவள் “ஐயோ இந்த அம்மா வாய் ரயில் இஞ்சின் மாதிரி லொடலொடனு நிக்காம பேசிட்டே இருக்கே...பாவம் இந்த பசங்க .....அடியே பூரணி உன் நிலமை இப்படியா ஆகணும்” என புலம்பவும் அதற்குள் “ஏலே செல்லாயி இங்க இருந்த உலக்கை எங்க காணோம்....இருட்டு வீட்டுக்கு போனாலும் திருட்டு கை நிக்காதுன்னு சொல்லுவாங்க ...எவடி அவ எங்க வீட்டு உலக்கையை எடுத்தது” என் ஊரே அதிரும்படி அவர் சத்தம் போடவும் இங்கு பூரணியின் சப்தநாடிகளும் அடங்கி வேகமாக கீரையை ஆய்ந்தாள்.
.அன்றையபொழுது புகழுக்கு வயலில் கழிய பூரணிக்கோ பேச்சியம்மாளின் உருட்டலிலும் மிரட்டலிலும் தட்டு தடுமாறி சில பல வேலைகளில் செல்ல பொழுது சாயும் நேரத்தில் கோவிலுக்கு அழைத்து செல்வதற்காக கனகா வீட்டிற்கு வந்தாள்.
“அத்தை நான் என்ற தங்கச்சிய கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்” என கேட்டுகொண்டே அவள் உள்ளே வர
“என்னது கோவிலுக்கா....இன்னைக்கு என்ன விசேஷம் என கேட்கவும்
“ம்ம்ம்ம் உங்க வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தது பின்னாடி எந்த விசேஷத்துக்கு கோவிலுக்கு போகமுடியுது...உங்களுக்கு வேலை செய்யவே நேரம் பத்தமாட்டேன்குது...எதோ என்ற தங்கச்சி வந்ததால போலாம்னு பார்த்தா நீங்க இப்படி பேசறிங்க” என அவளும் பதிலுக்கு பேச
“ சண்டிகுதிரைக்கு நொண்டி சாக்கு நீ ஊரை சுத்தறதுக்கு இது ஒரு சாக்கா என்றபடி அவளை பார்த்தவர் பின்னர் சரி சரி கூட்டிட்டு போ ...ஆனா அங்க இங்க வம்பு பேசாம சீக்கிரம் வீடு வந்து சேருங்க” என சொல்லவும்
“உங்க மருமகளை நாங்க ஒன்னும் கடிச்சு தின்றமாட்டோம்.எப்படி கூட்டிட்டு போனமோ அப்படியே திரும்ப கொண்டுவந்து விடுறோம்..நீங்க கவலைபடாதீங்க” என அவளும் சரிக்கு சரியாக பேசவும்
“அடியேய் ரொம்ப பேசி என்ற மருமகளையும் மாத்திபுடாத...பாவம் அப்பிராணி புள்ள...இந்த ஊரை பத்தி சரியா தெரியாது அதான் சொன்னேன் “ என அவர் சொல்லவும் கனகாவே தலை சுற்றி நிற்க பூரணியின் நிலை சொல்லவும் வேண்டுமோ.?
இது போன்ற பல அதிர்ச்சிகளுடன் பூரணி கோவிலுக்கு கிளம்பினாள்.
செல்லும் வழியில் “ஏம்புள்ள பூரணி உன்ற மாமியார் வாயில இருந்து இப்படி ஒரு வார்த்தையை நான் கேட்டதே இல்லைபோ.....உன்னை போய் அப்பிராணின்னு சொல்லுது” என ஆச்சரியமாய் சொல்வது போல நையாண்டி பேச ...பூரணியோ அவளை திரும்பி பார்த்து “எக்கா என்னாக்க நீங்களுமா என சிணுங்கலுடன் சொல்லவும் ....இல்ல புள்ள சிங்கத்தயே சாச்சுபுட்டியே எப்படிபுள்ள அதான் கேட்டேன்” என அவள் நையாண்டியை தொடரவும்
“எனக்கே அதானுங்கக்கா அதிர்ச்சியா இருக்கு....காலையில இருந்து ஒரே வசவு போங்க...எப்படா வெளியே வருவேன்னு இருந்திச்சு...நல்லவேளை நீங்க வந்து கூப்டிங்க...இல்ல எனக்கு மூச்சு முட்டி செத்திருப்பேன்” என சொல்லவும்
“ச்சி வாயை கழுவு எதுக்கு இப்படி பேசற......பேச்சியத்தை பேச்சு கொஞ்சம் ஏறுமாறா இருந்தாலும் இளகின மனசு புள்ள...நான் புள்ள பெத்து கிடந்தப்ப என்னை எப்படி பார்த்துகிட்டாங்க தெரியுமா ?என்ற மாமியார் கூட காட்டுல வேலை கிடக்குன்னு போய்டுச்சு.....இவங்கதான் பத்திய சாப்பாடு செஞ்சு கொடுத்து பாத்துகிட்டாங்க....என்ன நல்லா பேசுனா நல்லவங்க.....சண்டைன்னு வந்திடுச்சு சும்மா தார தப்பட்டை சத்தம் எல்லாம் இவங்க போட்ற சத்தத்துல ஓடிபோய்டும்......பேச ஆரம்பிச்சாங்க வாய் கொடுத்தவ அந்த இடத்திலேயே பேதியாகி ஓடிடுவா...அப்படி பேசுவாங்க “ என கனகா சிரித்து கொண்டே சொல்லவும் பூரணிக்கோ பயத்தில் அடிவயிற்றில் இருந்து ஒரு பந்து உருண்டு மேலே வருவது போல இருந்தது.
பேசிகொண்டே கோவிலுக்குள்ளே வந்தவர்கள் “ஏம்புள்ள புது பொண்ணு ..தலையில பூ இல்லாம வர என கேட்டுகொண்டே என்ன பூ பிடிக்கும் என கேட்கவும் அவள் மல்லிகை என்று சொல்லவும் இரண்டு முழம் வாங்கி தலையில் வைத்து விட்டு “ புது பொண்ணு பூ இல்லாம வெளியே வரகூடாதுபுள்ள” என ஒரு தாயின் அக்கறையோடு சொல்ல பூரணியோ சரி என தலை ஆட்டினாள்.
“ஏனுங்கக்கா உங்களுக்கு வேண்டாமா என அவள் கேட்கவும் அவளோ நாணி கோணியபடி என்ற மச்சானுக்கு ஜாதிமல்லிதான் ரொம்ப பிடிக்கும்...அது இங்க இல்லை...அந்த கடையில வாங்கிகலாம் என சொன்னவர் புகழு தம்பிக்கு மல்லிகை பூ தான் பிடிக்குமா?”என திரும்ப அவளை கேட்க பூரணியின் முகம் சட்டென்று வாடி விட ஏதும் பேசாமல் தலைகுனிந்து நின்றாள்.
அதை கண்டது “அட நான் ஒரு கிறுக்கி....இப்படிதான்புள்ள சில சமயம் பேச தெரியாம பேசிபுட்றேன்...உனக்கு தான் இப்படி பேசினா பிடிக்காதே .....இந்த காலத்து புள்ளைங்க நொம்ப விவிரமா இருக்கீங்க...எங்களை மாதிரி இல்லை என சொல்லிகொண்டே சரி வா பூசாரி கிளம்பிட போறார்” என்றபடி உள்ளே சென்றனர்.
அப்போது எதிரில் வந்த ஒரு பெண்மணி “என்ன கனகா இது யாரு உன்ற தங்கச்சியா?” என கேட்கவும்
“என்ற தங்கச்சி மாதிரிதானுங்க அண்ணி.... பேச்சியத்தையோட மருமக” என்றாள் கனகா .
உடனே அவர் “அட நம்ம பேச்சி மருமகளா இது...புகழு பொண்டாட்டியாக்கும்....கண்ணாலம் எப்போ முடிஞ்சுது .....எங்களுக்கு எல்லாம் ஒரு வார்த்தை சொல்லலை” என ஆரம்பிக்கவும்
“ அதிகமா யாருக்கும் சொல்லைங்க.....நாள் குறைவா இருந்ததால சொல்ல முடியலைனு சொன்னாங்க” என அவள் விளக்கவும்
“ம்ம்ம்ம் புகழுக்கு புள்ள கொஞ்சம் குள்ளம்மா இருந்தாலும் கண்ணு மூக்கு எல்லாம் எடுப்பா லட்சணமா தான் இருக்கா.......... பொண்ணு எப்படி அசலா ...இல்ல உறவா” என அவர் பூரணியை மேலும் கீழும் அளந்த படி கேட்கவும்
பூரணியோ ஏதும் பேசாமல் தலை குனிந்தபடி நிற்க
“சொந்தம்தானுங்க அண்ணி .....மாமாவோட தங்கச்சி பொண்ணுதான்...அத்தை மகதானுங்க “ என்றாள் கனகா.
“அட யார் மணி பொண்ணா இது....ஆத்தி அதான் எங்கயோ பார்த்த சாடையா இருக்கேனு யோசிச்சேன் .... பெரிய பொண்ணா இது என்றவர் ஆனா இரண்டு குடும்பத்துக்கும் ஆகாமல்ல இருந்தது......இப்போ எப்படி சம்பந்தம் பண்ற அளவுக்கு வந்தது” என தனது ஆராய்ச்சி கேள்வியை ஆரம்பிக்கவும்
பூரணிக்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் “நீங்க பேசிட்டு வாங்க ...நான் உள்ளே போறனுங்க” என கனகாவை பார்த்து சொல்லிவிட்டு வேகமாக முன்னே நடந்தாள்.
அவரோ பூரணியை ஒரு மாதிரி பார்க்க “அது ஒண்ணுமில்லைங்க அண்ணி.....தலைவலிக்குதுன்னு சொல்லிட்டு இருந்தா.....அதான் சீக்கிரம் போலாம்னு” என சமாளித்தவள் “இருபுள்ள நானும் வந்திடறேன்...சரிங்க அண்ணி ..நேரமாச்சுங்க...நாங்க கிளம்பறோம்” என்றபடி பூரணியை பின்தொடர்ந்து வேகமாக சென்றாள் கனகா .
அதற்குள் பூசாரியிடம் பூரணி தேங்காய் பழ தட்டை நீட்ட
அவரோ “பேரு நட்சத்திரம் சொல்லுங்க” என கேட்கவும்
சட்டென்று அவளுக்கு ஏதும் தோணாமல் முழிக்க
“என்னம்மா ஊருக்கு புதுசா ...யார் வீட்டுக்கு வந்து இருக்கீங்க என அவர் கேட்கவும்
அதற்குள் அருகில் வந்த கனகா “ பூசாரி இது நம்ம பேச்சியம்மா மருமக, பெரியவரு புகழு சம்சாரம் தான் “ என சொல்ல
அவரோ “அட புகழு தம்பி சம்சாரமா நீங்க..... எனக்கு தெரியாதுமா ...தப்பா நினைச்சுகாதீங்க என்றவர் அவங்க குடும்ப பேரு எல்லாம் எனக்கு தெரியும் நானே சொல்லிடறேன்” என்றபடி உள்ளே சென்றவர்
முதலில் பேச்சியம்மாள் பெயரை சொன்னவர் பின்னர் புகழ் பெயரை சொல்லிவிட்டு அடுத்தது பூரணி பெயரை சொல்லவும் அவள் அதிர்ச்சியடைய அதன் பின் பாண்டி பெயர் வந்தது.
பின்னர் பூசாரி “உங்க பேரு சொல்லுங்க” என கேட்க
அவளோ” பூரணி” என சொல்லவும்
“அதான் சொல்லிட்டனே...உங்க பேரு” என அவர் மீண்டும் கேட்க
“பூசாரி இவ பேருதான் பூரணி” என்றாள் கனகா.
“ அட அப்போ உங்க பேருக்குதான் இத்தன வருசமா தம்பி அர்ச்சனை பண்ணிட்டு இருக்கா என வியப்புடன் கேட்டவர் நான் கூட கேட்பேன்...யாரு தம்பின்னு....... சிரிச்சிகிட்டு எதுமே சொல்லாம சாமி கும்பிட்டு போய்டும்....இப்பதான் தெரியுது...கட்டிக்க போற பொண்ணுன்னு சொல்றதுக்கு வெக்கபட்டுட்டு தம்பி சொல்லையாட்ட இருக்கு...ரொம்ப சந்தோஷம்மா....ஆத்தாவுக்கு தம்பி கணக்கு பார்க்காம செய்யும்... ஆத்தா நம்பினவங்களை எப்பவும் கைவிட மாட்டா ...அதான் தம்பி மனசுக்கு பிடிச்ச பொண்ணே அமஞ்சிடுச்சு” என அவர் சொல்லி சிலாகிக்க
“அப்படியாஆஆ என வாய் பிளந்த கனகா ஏம்புள்ள பூரணி இத்தனை விஷயம் நடந்திருக்கு......நீ என்கிட்டே சொல்லவே இல்ல” என அந்த இடத்திலேயே கேட்க
“எனக்கே இப்பதனுங்கக்கா தெரியும்......நானும் உங்கள் மாதிரிதான்” என அவள் அப்பாவியாக சொன்னாள்.
பூசாரியோ “தம்பி பத்து பண்ணிரண்டுவருசமா இந்த பேருக்கு எல்லாம் தான் அர்ச்சனை பண்ணிட்டு இருக்கு...நீங்க என்ன இப்போ இப்படி வந்து கேட்கிறிங்க என சொல்லிவிட்டு அதும் திருவிழாவுக்கு சாமிக்கு மல்லிப்பூ அலங்காரம் தனியா செய்ய சொல்லும் தம்பி...அப்போ இவங்க பேருக்கு மட்டுமே அர்ச்சனை பண்ண சொல்லும் என சொன்னவர் நீ கொடுத்துவச்சவம்மா ...இப்படி ஒரு தங்கமான பையன் யாருக்கும் கிடைக்காது.அம்மணி மேல எம்புட்டு ஆசை இருந்தா இத்தனை வருசமா இத பண்ணிட்டு இருக்கும் என சொல்லிவிட்டு அவர் செல்ல உள்ளே அம்மன் சிலையா இல்லை வெளியே பூரணி சிலையா என்பது போல் கல்லாகி நின்றாள் அவள்.
அதற்கு பின் அர்ச்சனை முடிந்து தீபாராதனை எடுத்தது கனகாவுடன் வீட்டிற்கு வந்தது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை...அவள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது எல்லாம் “இவன் எதுக்கு என் பெயருக்கு அர்ச்சனை பண்றான்...அப்டினா” என யோசனை செய்தவாறே வீட்டிற்குள் நுழைய வாசலில் அமர்ந்திருந்த பேச்சியம்மாவோ அவள் முகத்தை பார்த்தவர் “இவ என்னடி கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு போனவ இப்போ பேய் அறஞ்ச மாதிரி திரும்பி வரா....ஏய் புள்ள கனகா கோவிலுக்குத்தான போனிங்க” என தன் வீட்டிற்கு செல்ல முயன்ற கனகாவை நிறுத்தி கேட்க
அவளோ “இங்க பாருங்க அத்தை சந்தேகம் இருந்தா பூசாரிகிட்ட கேட்டுக்குங்க...அங்க கருப்பாயி அண்ணியும் வந்து இருந்தாங்க .அவங்ககிட்டயும் கேட்டுக்குங்க ...நீங்களும் எங்க அத்தை மாதிரியே நம்பாம கேட்கிறிங்க” என அவள் ஒருவர்த்தைக்கு நூறு வார்த்தை பதிலாக சொல்ல
“இப்ப என்ன கேட்டுபுட்டேனு இந்த சிலிப்பு சிலிர்த்துகிற ....சந்தோஷமா போன புள்ள சங்கடமா திரும்பி வருதே அதான் கேட்டேன்” என அவர் சொல்லவும்
“அது வந்து” என கனகா ஆரம்பிக்க அதற்குள் “கனகா ஏய் கனகா” என அவள் மாமனின் சத்தம் கேட்கவும்
“அத்தை என்ற மாமன் வந்துட்டாங்க...நான் வரேனுங்க” என்றபடி வேகமாக தன் வீட்டிற்கு செல்ல பேச்சியம்மாவோ என்ன நடத்திருக்கும் என யோசித்து கொண்டு இருந்தார்.
இங்கு பூரணியோ பூசாரி சொன்ன வார்த்தையில் குழம்பி இருந்தவள் “எதுக்காக இந்த ஓரங்கொட்டான் என் பேருக்கு அர்ச்சனை பண்ணிக்கிட்டு இருக்கான்.என்னாவா இருக்கும்” என யோசித்து அவளுக்கு தலைவலியே வந்துவிட “அப்போ இவனுக்கு என் மேல பாசம் இருக்கா” என ஒரு வினாடி மனதில் தோன்ற உடனே “இல்லை...இல்லை அப்படி இருக்காது.....என்னை பார்த்தாலே இவனுக்கு பிடிக்காதே அப்புறம் எப்படி” என நினைத்தவள் “அச்சோ இவனால் எனக்கு எப்பவும் பிரச்சனைதான்” என சலித்தபடி எழுந்தவள் ஏனோ அவன் மேல் நல்ல அபிப்ராயம் வந்தாலும் அதற்கு ஒரு தகுமானத்தை சொல்லி அவள் ஒத்திபோட அங்கு அன்பின் ஆரம்பம் வெறுப்பு என்ற முகமூடியை மாட்டி கொண்டு தனது விளையாட்டை ஆரம்பித்தது.
மனம் பெரும் குழப்பத்தில் இருந்ததால் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு தலைவலிக்குது என சொல்லிவிட்டு அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள் பூரணி.
வேலை முடித்து விட்டு புகழ் வரவும் அவனுக்காக காத்திருந்த பேச்சியம்மா “ ஏன் தம்பி இப்பாதான கண்ணாலம் முடிஞ்சிருக்கு....தினமும் இப்படி பாதி ரவைக்கு வந்தா எப்படி....கொஞ்சம் நேரமே வாப்பா....அப்படி சோலி இருந்தாலும் சின்னவன் வீட்ல தான இருக்கான்...அவன்கிட்ட சொல்லு பாத்துக்குவான்”... என அவர் சொல்லவும்
“இல்லங்கமா மஞ்சகாட்டுல கொஞ்சம் தண்ணீ எடுத்துவிடற வேலை.....ரவைக்கு முழுசும் அங்க தங்க முடியாதுல...அதான் கொஞ்சம் இருந்து கட்டிவிட்டுட்டு வந்தேன்.....ஏன்ம்மா ஏதாவது பேசனுமா” என கேட்டான் புகழ் .
“அதெல்லாம் இல்ல தம்பி ....இன்னைக்கு என்னமோ அந்த புள்ளைக்கு முகமே சரியில்ல....ஏன்னு கேட்டா தலை வலிக்குதுன்னு சொல்லுது...மனசுக்குள்ள ஏதோ நினச்சு நோவுது போல.......நானும் புதுசுக்கு அப்படிதான் இருக்கும்னு நினச்சேன்....ஆனா என்னமோ என் மனசுக்கு சரின்னு படலை நான் சொல்றத சொல்லிட்டேன் என்றவர் சரி சீக்கிரம் வா சாப்பாடு போட்டுட்டு நான் படுக்க போகணும்” என்றார்.
“நீங்க போய் படுங்க அம்மா ...நான் சாப்பிட்டுகிறேன்” என அவன் சொல்லவும்
“அதெல்லாம் வேண்டாம் நான் எடுத்து வைக்கிறேன்..... நீ வா”.... என சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல புகழுக்கும் தெரியும்.இரவு எவ்ளோ நேரமானாலும் பேச்சியம்மாள் அவனுக்கு சாப்பாடு பரிமாறிவிட்டு தான் படுப்பார்.
ஏனோ இன்று அவர் பேசியது மனதிற்கு கஷ்டமாக இருக்க “கடவுளே என்னால் அம்மாவும் வேதனை படறாங்க ....... எல்லாம் இவனாளநேத்து நடந்ததுக்கு இன்னும் முகத்தை உர்றனு வச்சிருப்பா ...அதான் அம்மா இப்படி பேசறாங்க” என நினைத்து கொண்டே உள்ளே சென்றவன் அங்கு பூரணி கட்டிலில் படுத்திருந்தவள் அவனை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டாள்.
“இங்க பாரு பேசறதையும் பேசிபுட்டு முகத்தை தூக்கிவச்சுகிட்டு இருக்கா பாரு “ என நினைத்தவன் “இன்னைக்கு நீ என்ன பண்ண ....அம்மா வருத்த பட்டு பேசறாங்க” என கேட்டுகொண்டே சட்டையை ஆணியில் மாட்ட
அவளோ பதில் சொல்லாமல் திரும்பி படுக்க
எதிர்புறத்தில் இருந்து சத்தமே வராமல் இருக்க திரும்பி முறைத்தவன் கோபமாக “கேட்டா பதில் சொல்லணும்...இப்படி திரும்பி படுத்து இருந்தா என்ன அர்த்தம்” என கேட்கவும்
“ம்ம்ம்ம் உங்களோட பேச விருப்பம் இல்லைனு அர்த்தம்” என அவள் வெடுகென்று சொல்லிவிட
ஏதும் பேசாமல் அவளை சிறிது நேரம் முறைத்து பார்த்தவன் அதற்குள் பேச்சியம்மாள் சத்தம் கேட்கவும் “இருடி சாப்பிட்டு வந்து உன்னை வச்சுகிறேன்” என முனகி கொண்டே வெளியே சென்றான்.

அவனது முனகல் பூரணிக்கு கேட்க ...”போடா பெரிய இவன் ...என்னமோ வந்த உடனே எரிஞ்சு விழறான்.....இவங்க அம்மா வருத்தப்பட்டா நான் என்ன செய்ய முடியும் என்றவள் .....அதுக்குதான் சொன்னேன் அவனை நம்பாதேன்னு இந்த மனசு கேட்குதா? இல்லை அவனை கேளுன்னு சொல்லுச்சு ...இப்போ பாரு...அவன் என்னையே குத்தம் சொல்றான்....வர வர இந்த மனசு அவன் பேச்சை கேட்க ஆரம்பிச்சிடுச்சு “ என அவள் தனக்குதானே திட்டி கொண்டு இருந்தாள்.
 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
பூரணி இப்படி புலம்ப காரணம் கோவிலில் இருந்து வந்ததில் இருந்தே மனதை போட்டு குழப்பி கொண்டு இருந்தாள். முதன் முதலாக புகழ் இவளுக்காக ஒரு காரியம் செய்து கொண்டு இருக்கிறான் என அறிந்ததும் ஏனோ அவளால் அதை எப்படி எடுத்து கொள்வது என புரியவில்லை.நேற்று நடந்த சண்டை நினைவில் இருக்க தன் மேல அவன் வெறுப்பை காட்டுகிறான் என புரிந்தாலும் அவனே பின்னர் நீ எனக்காக சாப்பிடாமல் இருந்தது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா என சொல்லி திரும்ப வந்து அவளிடம் கெஞ்சி அழைத்து சென்றது நினவில் வர அவனோட மனநிலை என்ன என புரியாமல் தடுமாறி போனாள். அவன் உன் மேல் பாசமாக இருக்கிறான்....உன்னை விரும்புவது போல் தெரிகிறது என மனசாட்சி சொல்ல ஆனால் அவளோ இல்லை இதுல வேறு ஏதோ இருக்கிறது....இவனோட அப்பா அதான் என்ற மாமாகூட இப்படி அர்ச்சனைக்கு சொல்லி இருக்கலாம்ல என சாக்கு சொல்ல ..உடனே அவள் மனசாட்சி அப்படியே இருந்தாலும் அவரோட தங்கச்சி பெயருக்குத்தான் சொல்லி இருப்பார்...தனியாக உன் பெயருக்கு ஏன் சொல்ல போகிறார் என கேள்வி கேட்கவும் ...பூரணியோ அதும் உண்மைதான் இப்போ என்ன பண்றது என எரிச்சலுடன் கேட்கவும்.....நீ ஏதும் பண்ணவேண்டாம்...புகழிடம் இதை பற்றி மனம் விட்டு பேசு...அப்போது தான் உனக்கு உண்மை தெரியும் என மனசாட்சி சொல்லவும் அவனிடம் பேசலாமா வேண்டாமா என இவள் ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்து கொண்டிருக்கும்போது தான் புகழ் உள்ளே வந்தான்.
அவனை கண்டதும் ஏனோ மனதில் தடுமாற்றம் வர உடனே அவள் திரும்பி படுக்க அதை அவள் கோபத்தில் இருக்கிறாள் என தவறாக புரிந்து கொண்ட புகழ் அவனும் கோபமாக பேச..... மீண்டும் பழைய பூரணி திரும்ப இப்போது அவனை மனதிற்குள் பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தாள்.
இங்கு அம்மாவிடம் பேசிகொண்டே அவன் சாப்பிட அவரோ பதில் சொல்லாமல் யோசனையில் இருக்க “என்னம்மா என்ன யோசனை...பூரணி ஏதாவது சொல்லிட்டாளா?” என சற்று பயத்துடன் கேட்டான் புகழ் .....
“அதெல்லாம் இல்ல தம்பி..... கண்ணாலம் முடிஞ்சு நாலுநாள் ஆகுது...பந்தலே பிரிச்சாச்சு.....இன்னும் மறுவீட்டு அழைப்பு போகலை...கொடுமுடி கோவிலுக்கு போகலை.....எனக்கு என்னமோ இதெல்லாம் தள்ளி போடறது நல்லதா படலை” என அவர் மனகுறையை சொல்லவும்
“இப்போ என்ன கொடுமுடி கோவிலுக்கு போகணும்...அவ்ளோதான நாளைக்கே போயிட்டு வந்திடறேன்” என்றான் அவன்.
“டேய் உன் பொண்டாட்டியோட போகனும்டா” என அவர் சொல்லவும்
“சரிம்மா அவளையும் கூட்டிட்டு போயிட்டு வந்திடறேன் ...இப்போ சந்தோஷமா...இதுக்குதான் இவ்ளோ யோசிச்சிங்களா “என அவன் சிரித்துகொன்டே கேட்கவும்
அவரோ அவனை உற்று பார்த்தவர் “நான் இன்னொன்னும் சொன்னேன் ...நீ பதிலே சொல்லலை தம்பி” என கேட்க
அவனோ “அம்மா இன்னிக்கு சட்னி ரொம்ப நல்லா இருக்கு.....அப்புறம் நாளைக்கு உளுந்த கஞ்சி வைக்கறீங்களா ......ரொம்ப நாள் ஆச்சு குடிச்சு” என அவன் சொல்லவும்
அவரோ பதில் சொல்லாமல் அவனையே பார்க்க
கடகடவென பேசிகொண்டிருந்தவன் தாயின் பார்வை புரிய சட்டென்று அமைதியானான்........பின்னர் ”அந்த பேச்சு இப்போ வேண்டாம்மா” என மெதுவாக அதே சமயத்தில் அழுத்தமாக சொன்னான்.
அவரோ அவன் முகத்தை பார்த்தபடியே “எத வேண்டாம்னு சொல்ற புகழு......முறைன்னு ஒன்னு இருக்குல்ல ...நேத்து ராசப்பரு மந்தைக்கு வந்திருந்தாரு.....மறுவீட்டுகு போயிட்டு வந்தாச்சானு கேட்டாரு...நான் என்ன சொல்றது” என கேட்டுவிட்டு அவன் முகத்தை பார்க்க
அவனோ “என்கிட்டே கேட்க சொல்லுங்க நான் பேசிக்கிறேன்” என்றான்.
“இல்ல புகழு இதெல்லாம் சம்பிரதாயம்...கண்டிப்பா போகணும்... மத்தவங்க இலக்காரமா பேசற மாதிரி வச்சுக்க கூடாது..... அப்புறம்பொண்ணு வீட்டுகாரங்க கேட்டா நம்ம என்ன பதில் சொல்றது “ என அவர் ஆரம்பிக்க
“அம்மா போதும்...நேத்து தான் அத்தை போன் பண்ணாங்க...நான் பேசிட்டேன்...நீங்க கவலை படாதீங்க ” என அவன் சொல்லி முடிக்கும் முன்
“என்னதுஊஊஊ அம்மா போன் பண்ணாங்களா...எப்போ? ...யாருக்கு?” என வேகமாக வார்த்தைகள் வர தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்த பூரணி அவனது வார்த்தையை கேட்டதும் அதிர்ச்சியும் சந்தோஷமுமாக கேட்டுகொண்டே அவன் அருகில் வந்தவள் ...”அம்மா பேசுனாங்களா ...என்ன சொன்னாங்க.....இங்க வரேன்னு சொன்னாங்களா? அப்பா பேசுனாரா ?என்னை ஏன் பார்க்க வரலையாம் என நிறுத்தாமல் கேள்வி கேட்கவும்
புகழே சற்று அதிர்ச்சி அடைந்தவன் பின்னர் “நேத்து பேசுனாங்க “ என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பிக்க
“என்னது நேத்து பேசுனாங்களா ...அப்புறம் ஏன் நீங்க என்கிட்டே சொல்லலை.....எங்க அம்மா என்கிட்டே தான பேசணும்....நீங்க ஏன் என்கிட்டே போன் தரலை” என அவள் வேகமாக கேட்கவும்
“பூரணி கொஞ்சம் அமைதியா இரு......அவன் சொல்வான் “என பேச்சியம்மாள் அவளை அடக்கினார்.
“இங்க பாருங்க அத்தை ....உங்களுக்கு என்ன தெரியும் நான் எங்க அம்மா அப்பா விட்டு ஒரு நாள் கூட இருந்தது இல்லை தெரியுமா? பாரிகூட இருந்து இருக்கா ?நான் இருந்ததே இல்லை.....நேத்து எல்லாம் எனக்கு எங்க அம்மாவ பார்க்கணும்போல இருந்தது ....ஆனா எப்படி” என அழுகையும் தேம்பளுமாக அந்த இடத்தில் வளர்ந்த குழந்தையாய் மாறி அவள் பேசவும் பேச்சியம்மாவின் மனமும் கலங்கி விட்டது.
“ஏண்டா புகழு நீ செஞ்சது தப்பு......பூரணிகிட்ட கொடுத்து பேச சொல்லி இருக்கலாம்ல....பாவம்டா அதான் புள்ள சோர்ந்த மாதிரி இருந்திருக்கு” என அவர் அக்கறையுடன் பேசவும்
ஆறுதலுக்கு ஆள் கிடைத்ததும் அந்த நேரத்தில் அவளிடம் இருந்த பயம் எல்லாம் மறைந்து “ம்ம்ம் நீங்க கேளுங்க அத்தை...நான் தான எங்க அம்மாகிட்ட பேசணும் “ என சொல்லிகொண்டே அவரின் அருகில் அமர்ந்தவள் போனை கொடுங்க நான் பேசறேன்” என்றாள்.
“என்ன பேசற நீ ...மணி என்னாவது தெரியுமா ?” என அவன் சிடுசிடுவென விழவும்
பேச்சியம்மாவோ “நீ கவலைபடாத பூரணி.... இப்போ எல்லாரும் தூங்கி இருப்பாங்க ......புகழு காத்தால அவங்க வீட்டுக்கு போன போட்டு கொடுக்கிற நீ என சொன்னவர் ...இப்போ நேரமாச்சு வேண்டாம்.....காத்தால பேசலாம்” என சமாளிக்க
அவளோ “இல்லை அத்தை அம்மா இப்போ தூங்கி இருக்கமாட்டாங்க” என அவள் பிடிவாதம் பிடிக்க
“சாமம் ஆகிடுச்சு பூரணி....காத்தால பேசிக்கலாம் இப்போ வேண்டாம்” என அவர் சற்று கண்டிப்புடன் சொல்லவும் அவள் முனகியபடியே அமர்ந்திருக்க
பின்னர் “சரிடா என்ன சொன்னாங்க” என அவர் ஆரம்பத்திற்கு வர
“அது வந்து வந்து” என பூரணியை பார்த்தபடி “எப்போ மறுவீட்டுக்கு வரிங்ன்னு கேட்டாங்கம்மா ” என்றான் புகழ்.
“பாரு அவங்க கூப்பிட்டு கேட்கிற அளவுக்கு நம்ம வச்சுகிட்டோம்.....தப்பு புகழு நீ நாளைக்கே போயிட்டு வந்திடு.......என்ன பூரணி நாளைக்கு போறிங்களா “ என மருமகளிடமும் அவர் ஒரு வார்த்தை கேட்க
அவளோ முகம் நிறைய பூரிப்புடன் “போலாங்கத்தை...நான் வேணா காத்தால நேரமே வேலை எல்லாம் முடிச்சிடறேன்” என அதற்கு ஏதாவது அவர் சொல்லிவிடுவாரோ என அவள் முன்கூட்டியே சொல்ல
“அதெல்லாம் நான் பார்த்துகிறேன்.....நீங்க போயிட்டு வாங்க ...சரி தம்பி நீயும் சாப்பிட்டு போய் தூங்கு...விடியலிலே கிளம்புனா காலை சாப்பாட்டுக்கு அங்க போய்டலாம்” என அவர் பயண திட்டத்தை தாயார் பண்ண
“அச்சோ அம்மா கொஞ்சம் நான் சொல்றத கேளுங்க” என இடையில் புகுந்தவன் “நான் இப்போ வரமுடியாதுன்னு அத்தைகிட்ட சொல்லிட்டேன்” என்றான் .
“ஏன்...எதுக்கு அப்படி சொன்னீங்க...யார கேட்டு சொன்னீங்க?” என்ற கேள்விகள் படபடவென பூரணியிடம் இருந்து வர
பேச்சியோ புகழின் முகத்தை பார்த்தே அவன் மனதை படித்தவர் அப்படியே அமைதியாகிவிட்டார்.
“புரியாம பேசாத பூரணி....மஞ்சகாட்டுல மஞ்ச புடுங்கி போட்டு அப்படியே கிடக்கு....இன்னும் அதை பிரிச்சுபோட்டு வேக வச்சு, காய வச்சு,சலிச்சு மண்டிக்கு அனுப்புறவரை நான் அங்க இங்க நகர முடியாது....எல்லாமே முடிச்சுட்டு பொறவு போலாம்.நான் அத்தைகிட்ட பேசிட்டேன்...அவங்க புரிஞ்சுகிட்டாங்க.....சரி நீங்க வரும்போது வாங்கனு சொல்லிட்டாங்க” என அவன் சொல்லவும்
அவள் கண்களில் இருந்து கண்ணீர் கடகடவென வர “எங்க அம்மா என்கிட்டே பேசறேன்னு சொல்லலியா” என கேட்கும்போதே அவள் குரல் உடைந்து அழுகையும் ஆத்திரமும் வர அதை பார்த்ததும் புகழ் தலை குனிய அவன் எப்படி சொல்வான்....மணியம்மை பலமுறை போன் செய்துவிட்டார். புகழ்தான் “அவள் இப்போது தான் கொஞ்சம் பழக ஆரம்பித்து இருக்கிறாள் ....உங்களிடம் பேசினால் அங்க வரணும்னு சொல்லுவா.அப்புறம் பிரச்சனை தான்” என பலவாறு சொல்லி அவரை சமாதனபடுத்தி இருந்தான்..ஏனோ பூரணி தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும்...தன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவனது மனதின் எண்ணத்தை அவன் எப்படி சொல்லுவான்.தவறு என்று தெரிந்தாலும் அவன் மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
சாப்பிட்டு கொண்டு இருந்தவன் அவள் அருகில் நகர்ந்து “இங்க பாரு பூரணி நம்ம மண்ணை நம்பி பொழப்பு நடத்துற ஆளுங்க.......இங்க மாசமான சம்பளம் வராது.நேரத்தை பார்த்து வேலை செய்ய முடியாது..... பருவத்துக்கு பயிர் செஞ்சு அறுவடை செஞ்சாதான் பொழப்பு ஓடும்.இப்படி திடீர் திடீர்னு நாம கிளம்பி போனா வேலை எல்லாம் அப்படியே கிடக்கும்....உனக்கும் தெரியும்தான.....வெண்டைக்காய் செடி,தக்காளி எல்லாம் பறிச்சுகிட்டு இருக்காங்க......நான் எப்படி விட்டுட்டு வரட்டும் சொல்லு .....அதான் அத்தைகிட்ட சொன்னேனே........ அவங்க சரின்னு சொல்லிட்டாங்க....பலவருசமா விவசாயத்துல இருக்கிறாங்கல்ல....அவங்களுக்கும் புரியும்” என அவன் அவர்களை உயர்த்தி பேசவும்
அவளோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் அவனிடம் இருந்து எழுந்து வேகமாக தன் அறைக்குள் சென்று விட்டாள்.
அவள் சென்றதும் சாப்பிடாமல் புகழும் எழ “எத்தன நாளைக்கு புகழு இந்த கண்ணா மூச்சி ஆட்டம் என பேச்சியம்மாள் கேட்கவும்
அவனோ நிமிர்ந்து அவரை பார்த்தவன் அவரது பார்வையின் வீச்சு தாங்க முடியாமல் தலை குனிய
“நான் கூட உன்னை என்னமோன்னு நினச்சேன்......ஆனா இது தப்பு புகழு...நீ செய்யறது சரியில்லை” என அவன்மேல் குற்றசாட்டை வீச
அவனோ தன் தாய் தன்னை கண்டு கொண்டார் என புரிந்து கொண்டவன் “என்னால் முடியலம்மா அதான்” என மனதின் வலி வார்த்தையில் வர
“அப்டினா நீ இந்த கண்ணாலத்துக்கு ஒத்துகிட்டு இருந்திருக்க கூடாது...பொண்ணோட பாவம் பொல்லாதது புகழு” என அவர் கோபமாக பேசவும்
“என்னங்கம்மா நீங்க உங்க பையன் மேல நீங்க வச்ச நம்பிக்கை இவ்ளோ தானா..... நான் என்ன அவளோ கொடுமைக்காரனா ........கண்ணாலத்துல எனக்கு எந்த வருத்தமும் இல்லை.......மனசு ஒத்துதான் இதுக்கு சம்மதிச்சேன் ......கடைசிவரைக்கும் இப்படிதான்னு நான் சொல்லலை....ஆனா இப்போ என் மனசு ஒத்துக்கலை” என அவன் தன் நிலையை விளக்க முற்பட
“இதை தான நானும் பாண்டியும் ஆரம்பத்துல சொன்னோம்......சரி முடிஞ்ச கதைய பேசவேண்டாம்...உங்க அம்மா நான் சொல்றேன்...... நல்ல யோசிச்சு சீக்கிரம் உன் மாமியார் வீட்டுக்கு கிளம்பற வழிய பாரு.....போ நேரமாச்சு...அவ அழுதுகிட்டு இருப்பா...போய் சமாதன படுத்து” என சொல்லிவிட்டு அவர் செல்ல புகழோ கனத்த மனதுடன் அறைக்குள் சென்றான்.



சாலையோர பார்வையாளராக
உனை நான் நினைத்திருக்க!
நீயோ துளசி மாடமாக
உன் இதயத்தில் எனை பூஜித்திருக்க
கண்களை தாண்டி கருத்தில்
பதியவில்லை உனது முகம்.
ஆனால் நீ தினமும் ஜெபிக்கும்
வேதமாக என் பெயர்.
புரியவில்லை எதுவும்
உன்னுள் நான் கலந்திருப்பதை
அறிந்ததும் என்னுள் உணர்வுகள்

உறைந்துபோனதே அது ஏனடா ?????