• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரம் 2

MK25

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
14
11
3
Tiruppur
அத்தியாயம் 2
அவர்கள் இருவரும் முழிப்பதை பார்த்த ஆதினி “சில நேரங்கள்ல நீங்க இரண்டு பேரும் பேசுறத பார்த்தா.. நீங்க என்னோட ஃபிரண்ட்ஸ் தானானு எனக்கே சந்தேகம் வந்துரும் டி” என்றாள்.
“அடிப்பாவி!” என்றவர்கள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. எப்படியும் ஆதினி பேச்சை மாற்றுகிறாள் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அதோடு பேசிக் கொண்டிருக்கும் விதமும் அவளுக்கு பிடிக்கவில்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அதுதான் ஆதினி. அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை கூட அடுத்தவர் மனம் நோகாமலும் அதே நேரத்தில் தெளிவாகவும் அவளால் கூற முடியும். அதேபோல தான் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதையும் யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுவிட முடியாது.
நாட்கள் வேகமாக நகர்ந்தது. அது அவர்களது படிப்பின் கடைசி வருடம் என்பதால் அனைவரும் அவர்களது ப்ராஜக்ட் வேலைகளில் தீவிரமாக இருந்தனர். அப்படித்தான் ஒரு நாள் அங்கிருந்த கேன்டீனில் ஆதினி தனியாக அமர்ந்து ஒரு புத்தகத்தை நீண்ட நேரம் புரட்டிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த ராம்
“என்ன அதிசயம்! ஆதினி தனியா உக்கார்ந்திருக்க? உன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் காணும்!?” என்று சிரித்துக் கொண்டே வந்து அவளது முன் அமர்ந்தான்.
ஆதினியும் பதிலுக்கு “அத விட பெரிய அதிசயமே நடந்துட்டே!!” என்றாள் அவளது பெரிய கண்களை இன்னும் பெரியதாக விரித்து.
“அப்படி என்ன அதிசயம்?” என்று அவன் புரியாமல் கேட்க,
ஆதினியோ “ஆமா பின்ன கிளாஸ் டாப்பர் இப்படி என்ன மாதிரி சாதாரன ஒரு பொண்ணுகிட்ட அவரா வந்து பேசுறாரே அததான் சொன்னேன்.” என்றாள்.
அவளது பதிலைக் கேட்டு அதிர்ச்சி ஆனவன்
“ஐயோ! ஆதினி அதுலாம் இல்ல” என்று அவன் பதற ஆரம்பிக்கவும் ஆதினியால் அதற்கு மேல் அவளது சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் சத்தமாக சிரிப்பதை பார்த்த பிறகுதான் ராமிற்கு அவள் தன்னை கிண்டல் செய்கிறாள் என்பதே புரிந்தது.
“கிண்டல் செய்றீயா?” என்றவனிடம்
சிரித்துக் கொண்டே “சும்மா” என்றவள் தொடர்ந்து அவனது முதல் கேள்விக்கு பதில் கூற தொடங்கினாள் “அவளுங்க இரண்டு பேருமே லீவு” என்றாள்.
“ஓ!” என்றவன் “என்ன ஒரே நேரத்துல லீவு?” என்கவும்
“ரம்யா அண்ணனுக்கு கல்யாணம். சோ அவ வரல. வள்ளிக்கு ஃபீவர்” என்றாள்.
“அதுசரி..” என்று இழுத்தவன் “நான் ஒண்ணு சொன்னா நீ சிரிக்க கூடாது” என்றான்.
ஆதினி ஒன்றும் கூறாமல் அவனையே பார்க்கவும் “இல்ல எனக்கு ரம்யாவ பார்த்தாலே கொஞ்சம் பயமா இருக்கும் அதான் உங்ககிட்டலாம் நான் வர்றதே இல்ல. இன்னைக்கே நீ மட்டும் இருக்கதாலதான் பேசவே வந்தேன்” என்று அவன் கூறவும் ஆதினி சிரித்த சிரிப்பிற்கு அளவே இல்லை. சிரிப்பினூடேயே “அவ என்ன மிருகமா? அவள பார்த்து பயந்து இருக்? அதுலயும் அவள பார்த்து” என்றவளுக்கு சிரித்து சிரித்து கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது.
“ஆதினி… நான்தான் சொன்னேன்ல சிரிக்க கூடாதுனு…” என்று அவன் கூறவும் ஆதினிக்கு மேலும்தான் சிரிப்பு வந்தது.
ராம் எதுவும் கூறாமல் ஆதினி சிரிப்பதையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான். ஆதினி மெல்ல மெல்ல அவளது சிரிப்பை அடக்க முயற்சித்துக் கொண்டிடுந்தாள். ஆனால் இவர்கள் இருவரும் கவனிக்காத இன்னும் ஒன்று அங்கு நடந்துக் கொண்டிருந்தது. அது அவர்கள் பேசத் தொடங்கியதில் இருந்தே தூரத்தில் இருந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து இரு கண்கள் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது தான். ஆம் அது சூரியாவின் கண்கள்தான்.
ஆதினி மட்டும் தனியாக அமர்ந்து இருந்ததில் இருந்தே அவளை பார்த்துக் கொண்டு நின்றவன் ராம் அங்கு வரவும் அந்த இடத்தை விட்டே நகரவில்லை. அதற்கு காரணமும் உண்டு. பொதுவாகவே ஆதினியை யாரும் வாய் விட்டு சிரித்து பார்ப்பது அரிதான செயல். எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பாள் இருப்பினும் வாய்விட்டு சிரிப்பது எப்போதாவது தான். அவள் இன்று இப்படி சிரிப்பதைத் தான் சூரியா பார்த்துக் கொண்டிருந்தான். இது எதுவும் தெரியாமல் ஆதினியும் ராமும் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆதினி தன் சிரிப்பை அடக்கவும் ராம் “சரி என்ன ரொம்ப சீரியஸ்-ஆ ஏதோ படிச்சிட்டு இருக்க” என்றான்.
“இல்ல.. என்னோட ப்ராஜக்ட்கு தான். அது பாதிலயே நிக்குது. ஒண்ணுமே புரியல அடுத்து என்ன செய்யனுனு அதான் இதுல எதாசும் இருக்குமானு பாக்குறேன்” என்றாள்.
“நான் வேணுனா உதவி செய்யவா?” என்றான்.”
“இல்ல.. உனக்கு எதுக்கு தேவை இல்லாத சிரமம்..” என்று அவள் இழுக்கவும்
“அதுலாம் ஒண்ணு இல்ல ஆதினி.. உனக்கு ஹெல்ப் பண்ற சாக்குல நானும் இத பத்தி தெரிஞ்சிப்பேன் ல.. இந்த டாபிக்லையும் என் அறிவ வளர்த்துப்பேன்” என்றவனை பார்த்து
“அடப்பாவி” என்று சிரித்துக் கொண்டே “சரி” என்றாள்.
சிறிது நேரம் அவளது ப்ராஜெக்டை பற்றி படித்தவன் “ஆதினி இதுக்கு இன்னும் சில புக்ஸ் வேணும் நா போயி லைப்ரரில எடுத்துட்டு வந்துரவா?” என்றான்.
“இரு நானும் வரேன்.. இரண்டு பேரும் சேர்ந்தே போவோம்” என்றவள் அவனோடு சென்றாள்.
ஒரு வாரம் இப்படியே சென்றது. ரம்யா ஏற்கனவே ஒரு வாரம் அண்ணன் திருமணத்திற்காக விடுமுறையில் இருக்க வள்ளியின் காய்ச்சலோ குறைந்த பாடில்லை. ராமும் அதினியும் சேர்ந்து இருவரது ப்ராஜக்ட் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்படி ஒருநாள் இருவரும் தங்கள் வீடுகளுக்கு செல்ல லைப்ரரியில் இருந்து கிளம்பி காலேஜ் கேட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் போது ராம்
“நீ சூரியா சார் சப்ஜெக்ட் ல தான் ப்ராஜக்ட் எடுப்பனு நினைச்சேன்” என்றான். அவன் அப்படி கூறவும் நடந்து வந்தவள் அங்கயே நின்று விட ராமும் நின்று அவளை நோக்கி
“சா.. சாரி ஆதினி.. நான் தப்பா எதுவும் சொல்லல..” என்று திணறவும் அவள் எதுவும் கூறாமல் அங்கிருந்து நடக்க தொடங்கி விட்டாள்.
ராம் அவள் பின்னாடியே ஓடிச் சென்று “ஆதினி.. ஆதினி.. நில்லு ஆதினி.. பிளீஸ்..” என்றான்
“ராம்.. நீ பண்ண ஹெல்ப்கு தாங்க்ஸ்..” என்றவள் நிற்காமல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.
ராமிற்கு தன்னையே அடித்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. என்னதான் இருவரும் ஒன்றாக படித்தாலும் இத்தனை வருடங்களில் அவன் இப்போதுதான் முதல்முறையாக ஆதினியிடம் பேசுகிறான். அதிலும் இந்த ஒரு வாரம் அவளது தோழிகளும் இல்லாமல் அவனும் ஆதினியும் மட்டும் நீண்ட நேரங்கள் ஒன்றாக செலவளிக்க முடிந்தது. அதை அப்படியே அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லாமல் இப்படி சொதப்பி விட்டோமே என்று இருந்தது அவனுக்கு.
ராமும் இதைப்பற்றி பேசி இருக்க மாட்டான் தான். ஆனால் ராமிற்கு விடை தேவையாக இருந்தது. அது ஆதினியும் சூரியாவை விரும்புகிறாளா என்பதற்கான விடை. ஆனால் அதை எப்படி கேட்பது என்று தான் அவனுக்கு தெரியவில்லை.
ஒருவாரம் விடுமுறை முடிந்து ரம்யாவும் வள்ளியும் ஒரேநாளில் கல்லூரி வந்தார்கள். ஆதினியோ பெரிதாக எதுவும் பேசாமல் புத்தகத்தினுள் மூழ்கி இருந்தாள்.
“அடியே.. ஒரு வாரமா ப்ராஜக்ட் தான பண்ற.. இப்போவும் அதேயே படிக்கிறியா டி? கொஞ்சம் எங்க கிட்ட பேசலாம்ல” என்றாள்.
அதற்கு ஆதினி பதில் சொல்வதற்குள் அங்கு வந்து நின்றான் ராம்.
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
இப்போ இந்த ராம் என்ன சொல்லப் போறான்? 🤔

சூர்யா என்ன நினைக்கிறான்? 🤔

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
  • Love
Reactions: MK25

MK25

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
14
11
3
Tiruppur
இப்போ இந்த ராம் என்ன சொல்லப் போறான்? 🤔

சூர்யா என்ன நினைக்கிறான்? 🤔

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
இதுல ஆதினி பதில் தானே முக்கியம் 😜