• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரம் - 24

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -24

அந்திசாமத்தில் தண்ணீர் குடிப்பதற்காக பூரணி சமையல் அறைக்கு வர அப்போது கதவு ஏதோ உருட்டும் சத்தம் கேட்கவும் அவள் வெளியே வந்து பார்க்க அங்கு பாண்டி திருட்டுத்தனமாக சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து கொண்டு இருந்தான்..

“நல்லவேளை எல்லாரும் தூங்கிட்டாங்க.....ஒரு படத்துக்கு போயிட்டு வரதுக்குள்ள எவ்ளோ அக்கபோருடா சாமி” என சலித்துகொன்டே உள்ளே வந்தவன் எதிரில் பூரணி நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான்.

பூரணியோ இடுப்பில் கைவைத்த படி அவனை உற்று நோக்கியவள் “என்னடா ரவைக்கு அப்போ அப்போ ஏதோ உருற்ற சத்தம் கேட்குதே ...பூனையா இருக்குமோனு நினச்சுட்டு இருந்தா இப்பதானே தெரியுது அது ரண்டு கால் திருட்டு பூனைன்னு ” என நக்கலாக சொல்ல

உடனே பாண்டி வேகமாக “இங்க பாரு பூரணி நான் சும்மா காத்து வாங்க வெளியே போனேன்..நீ நினைக்கிற மாதிரி சினிமாவுக்கு எல்லாம் போகலை” என உளறவும்

“ம்ம்ம் இதுக்கு பேர் தான் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு சொல்றது என கிண்டலாக சொன்னவள் நீயே உளறிட்ட” என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே “பூரணி இன்னும் என்ன பண்ற “ என்றபடி புகழ் எழுந்து வரவும்

“பூரணி அண்ணா வராங்க...என்னை மாட்டிவிட்றாத .....தெரிஞ்சுது எனக்கு வண்டி கொடுக்க மாட்டங்க” என சொல்லிகொண்டே வேகமாக தன் அறைக்குள் சென்றான். “மவனே அவ்ளோ பயம் இருக்கா...இது போதும் எனக்கு ” என வாய்க்குள் முனகியவள் “இதோ வந்திட்டேன்” என்றபடி தன் அறையை நோக்கி நடந்தாள்

மறுநாள் காலை தொழுவத்தில் மாட்டை இழுத்து கட்டி கொண்டிருந்தவள் பாண்டி பேப்பர் படித்து கொண்டு ஒய்யாரமாய் அமர்ந்திருப்பதை பார்த்தவள் “பாண்டி இந்த மாடு சண்டித்தனம் பண்ணுது...கொஞ்சம் பிடிச்சு கட்டுங்களேன்” என சொல்லவும்

“நான் பேப்பர் படிச்சிட்டு இருக்கேன்....இவ்ளோ நாளா வேலை செய்யறிங்க அது கூட தெரியாதா என அவளை பார்க்காமலே அவன் பதில் சொல்லவும்

“என்ன பண்றது நானும் இங்க வந்து மாசமாச்சு ..இப்பதான் தெரிஞ்சுது நாம் வீட்டு பூனைக்கு மட்டும் ரண்டு கால்னு ” என அவள் சாடை பேச அடுத்த நிமிடம் மாட்டின் அருகில் நின்றான் பாண்டி.

“மயிலே மயிலேனா இறகு போடாது போல...இப்டிதான் போடவைக்கனும்” என் அவள் சிரித்துகொன்டே சொல்லவும் பாண்டியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

பின்னர் ஒருமுறை நண்பர்களோடு சேர்ந்து பாண்டி புகை பிடிப்பதையும் பார்த்தவள் அதையும் வைத்து அவனை மிரட்டி உருட்டி கொண்டு இருந்தாள்.ஆனாலும் அவனுக்கு பிடித்த உணவு செய்து தருவது, அவன் துணிமணிகளை துவைப்பது என அவனுக்கும் பார்த்து பார்த்து செய்தாள்.

சில நேரங்களில் புகழின் கோழிபண்ணையில் இருந்து பாண்டி ஆட்டைய போடும் கோழிகள் பூரணியின் கைவண்ணத்தில் பிரியாணியாக மணக்கும். யாருக்கும் தெரியாமல் அவனது நண்பர்களுக்கும் சேர்த்து சமைத்து கொடுப்பாள்.பாண்டியும் இப்போது பூரணியிடம் கடிந்து கொள்வது இல்லை..ஆனால் சண்டை என்று வந்துவிட்டால் ஒருவர் செய்த தப்பை மற்றொருவர் போட்டு கொடுத்து புகழிடம் மாட்டிகொள்வர்கள்.. வேலை,பேச்சியம்மாவின் இழுவை என்று மட்டுமே இருந்த வீடு இப்போது சந்தோஷமும்,உற்சாகமும், பாண்டி பூரணிக்கு இடையே சின்ன சண்டைகள், என களை கட்டிகொண்டிருந்தது. ஒரு முறை புகழ் வெளியூருக்கு சென்றுவிட அப்போது பேச்சியம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போக அப்போது பூரணி பதறிய பதட்டமும் அவரை பக்குவமாக கவனித்து கொண்டதும் அவள் மேல அதிக மதிப்பை பேச்சியம்மாவிற்கு ஏற்படுத்தியது.எனக்கு மகள் இல்லாத குறையை இந்த பொண்ணு தீர்த்துட்டா என தனது மருமகளை பற்றி பெருமையாக ராசப்பரிடம் சொன்னார் பேச்சி.

ஒருமுறை டிவி பார்ப்பதில் பூரணிக்கும் பாண்டிக்கும் சண்டை வர “இப்படி ஊரை சுத்திட்டு இருக்கியே ...படிப்பை முடிச்சுட்டில அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசிக்கலாமல” என பெரிய மனுசி போல பூரணி சொல்லவும்

“இங்க பாருங்க.....இப்படி எல்லாம் பேசற வேலை வச்சுக்காதீங்க....நான் ஊரை சுத்றேனு உங்களுக்கு தெரியுமா...மரியாதையா பேசுங்க” என பாண்டி அவளிடம் எகிற

“இப்போ எதுக்குடா அவகிட்ட சிம்பிகிட்டு நிக்கிற.....நானே கேட்கலாம்னு இருக்கேன்.....பெரியவன் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான்....நீ இப்டி பொறுப்பில்லாம இருந்தா எப்படி?” என பேச்சியம்மாவும் கேட்கவும்

“இங்க பாருங்க அம்மா ...நான் அண்ணன் கிட்ட சொல்லிட்டேன்...நான் வெளியூர் எல்லாம் போகமாட்டேன்....இங்கே ஏதாவது தொழில் செய்யலாம்னு இருக்கேன்” என்றான் பாண்டி.

ஆமா இது பெரிய டவுனு ...இங்க தொழில் செய்யபோறாராம்...ஊரை சுத்தரதுக்கு ஒரு சாக்கு “ என பூரணி கேலியாக சொல்ல .

அப்போது உள்ளே வந்த புகழ் “நீ எந்த தொழில் செய்யறதா இருந்தாலும் முதல்ல அதை பத்தி நீ முழுசா தெரிஞ்சக்கணும் பாண்டி ...அப்புறம் தான் தொழில் தொடங்கணும்” என்றான்.

“அதான் நானும் யோசிச்சுட்டு இருக்கேண்ணா...என்ன தொழில் செய்யலாம்னு” என அவன் சொல்லவும்

“பாண்டி நான் ஒன்னு சொல்லட்டுமா ...நீ ஏன் இன்னும் மேல படிக்க கூடாது.வயசு குறைச்சல்தான் ....அதுமில்லாம நான் தான் படிக்காம விட்டுட்டேன்....நீ படி பாண்டி...வெளிநாட்டுக்கு போய் படிச்சு வா”...என்றான் புகழ் .

“இல்லண்ணா நான் ஊரைவிட்டு எங்கும் போகமாட்டேன்” என அவன் வேகமாக மறுக்க

“கொஞ்சம் நான் சொல்றத கேளு.....இப்போ நம்ம ஊர்ல உன் அளவுக்கு படிச்சா பசங்க கொஞ்ச பேர்தான் ...அதிலும் எல்லாரும் வேலை தேடி வெளியில போய்ட்டாங்க.....நீ இங்கே இருக்கணும்னு சொல்ற.... சொந்தமா தொழில் பார்க்கணும்னு சொல்ற.....அப்போ விவசாயம் சார்பான தொழில் தான் நமக்கு ஒத்து வரும். ...நீ வெளிநாட்டுக்கு போய் படி...முடிச்சுட்டு இங்க வந்து தொழில் ஆரம்பி” என்றான் புகழ்.

“அங்க போய் படிச்சுட்டு இங்க வந்து என்ன பண்றதுங்க அண்ணே விவசாயத்துல என்ன பண்ணமுடியும்?” என பாண்டி புரியாமல் கேட்க

“நம்ம நினச்சா எல்லாம் பண்ணலாம் பாண்டி..நம்ம ஊற சுத்தி பத்து கிராமம் இருக்கு.குறைஞ்சது ஐநூறு ஏக்கர் விவசாயம் பண்ணுவோம்.ஆனா நம்ம விளைஞ்ச பொருளை எல்லாம் கொண்டு போய் நேரடியா விற்க முடியறது இல்லை....புரோக்கர் மூலமா கொடுக்கும்போது கூலிக்கும் செலவுக்குமே சரியா போய்டுது. பத்து ரூபாய்க்கு நம்ம கொடுத்த மிளகாய்யை இருபது ரூபாய் கொடுத்து நம்மலே கடையில வாங்கிறோம்.இந்த கொடுமையை எங்க போய் சொல்றது. .உழைப்புக்கு ஏத்த வருவாய் நமக்கு இல்லை....நீங்க வெளிநாட்டுக்கு போய் மேற்படிப்பு படிச்சுட்டு நம்ம ஊருக்கு வாங்க...இங்க நம்ம தயாரிச்ச பொருளை நம்மலே விற்பனை செய்யற மாதிரி தொழில் ஆரம்பிங்க.....வியாபார நுணுக்கங்களை கத்துகிட்டு வாங்க......நிறைய புதுமைகளை விவசாயத்துல புகுத்துங்க.... நம்ம நேர்மையா தொழில் செஞ்சா எந்த வெளிநாட்டுகாரன் வந்தாலும் நம்ம பொருளோட போட்டி போட முடியாது. நம்ம உற்பத்தி செஞ்ச பொருளை நம்மலே விற்பனையும் செய்வோம் ........நீங்க படிச்ச படிப்பு உங்களையும் பெருமைபடுத்தணும்...ஊருக்கும் பயன்படனும் அதான் சொல்றேன் ...நீ மேல படி பாண்டி” என புகழ் சொல்லி நிறுத்த

அடுத்த வினாடி தனது அண்ணனை கட்டி அணைத்தவன் “உங்களை நினைச்சா எனக்கு பெருமையா இருக்குண்ணா.....எப்படி யோசிச்சு இருக்கீங்க.....நாங்க எல்லாம் காலேஜ்க்கு போய் படிச்சும் தெளிவில்லாம இருக்கோம்...ஆனா நீங்க எந்த அளவுக்கு யோசிச்சு பேசறிங்க ...கண்டிப்பாண்ணா நான் மேல படிக்கிறேன்....முடிச்சுட்டு நம்ம ஊருக்கே வந்து தொழில் ஆரம்பிக்கிறேன்....... என சொல்லிவிட்டு என் ப்ரிண்ட்ஸ்கிட்டயும் இத பத்தி சொல்றேண்ணா...அவங்களும் இதுக்கு ஒத்துக்குவாங்க....இன்னும் கொஞ்ச நாள்ள பாருங்க....பொருளை உற்பத்தி பண்றதும் நம்மதான் விற்பனை பண்றதும் நம்ம தான்...நம்ம பொருளுக்கு நம்மலே உரிமைகாரங்க...வேற யாரும் உள்ள வரமுடியாது” என இளரத்தத்தின் வேகம் அவனை பேச வைத்தது.

“சரிடா ரொம்ப உணர்ச்சிவசபடாத ...முதல்ல படிப்பை முடிச்சுட்டு வா அப்புறம் பேசிக்கலாம்” என்றவன் பூரணியிடம் திரும்பி “பசிக்குது பூரணி சாப்பாடு எடுத்து வை” என சொல்லிகொண்டே உள்ளே சென்றான்.

அவன் அறைக்குள் நுழைந்த சில வினாடிகளில் கதவு தாளிடும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தவன் அவனையே உற்று பார்த்தவாறு பூரணி நின்று இருந்தாள்.

புகழோ “என்ன பூரணி அப்படி பார்க்கிற” என சொல்லி முடிக்கும் முன் வேகமாக அவன் தோள்களில் கைகளை போட்டு அவன் முகத்தின் உயரத்திற்கு எம்பி ஒரு முத்தத்தை கொடுக்க இதை எதிர்பார்க்காத புகழ் “ஹே என்னடி இது......திடிர்னு முத்தம் எல்லாம் கொடுக்கிற” என அவளை வளைத்து அணைத்தபடி கேட்கவும்

“எனக்கு பெருமையா இருக்கு மச்சான்...மெத்த படிச்சவங்க தான் புத்திசாலின்னு நினைச்சுகிட்டு இருந்தேன்...ஆனா நீங்க இப்போ பேசினத கேட்டதும் எனக்கு எம்புட்டு ஆச்சிரியமா இருந்தது தெரியுமா? எங்க மச்சான் இதெல்லாம் கத்துகிட்டிங்க” என அவள் வியப்புடன் கேட்கவும்

அவனோ செல்லமாக அவள் கன்னங்களை கிள்ளியவாறு “என் பூசணி குட்டி இதுக்கு எல்லாம் பெரிய படிப்பு படிக்கணுமா என்ன? எனக்கு அனுபவம் தான் படிப்பு என்றவன் ...பதினைந்து வயசுல மண்ணுக்குள்ள இறங்கினேன்......மண்ணு நமக்கு எவ்ளோ செல்வத்தை அள்ளி கொடுக்குது தெரியுமா ?தாய்க்கு எப்படி எல்லா பிள்ளைகளும் சமமோ அதே மாதரிதான் இந்த மண்ணும்.....தகுதி தராதரம் பார்க்காம நம்ம சிந்தும் வேர்வைதுளி ஒவ்வொன்றுகும் தன் உதிரத்தையே விளைச்சலா கொடுக்குது...ஆனா அதற்கான பலனை தான் நம்ம அனுபவிக்க முடியலை...அந்த ஆற்றாமைதான் தான் பூரணி என்றான் அவன்.பின்னர் ஏன் மெத்த படிச்சாதான் இப்படி பேசணும? நானும் டிகிரி படிச்சு இருக்கேண்டி...உன்ற மச்சானும் படிச்சவன்தான்” என காலரை தூக்கியபடி அவன் பெருமையாக சொல்ல .

“என்னது நீங்க காலேஜ் படிச்சிங்களா?” என அவள் ஆச்சரியத்துடன் கேட்க

“காலேஜ் போய் படிச்சாதான் படிப்பா? நான் வீட்டில் இருந்தே டிகிரி முடிச்சேன்” என்றான் புகழ்.

“இத நீங்க என்கிட்டே சொல்லவே இல்லங்க மச்சான்” என அவள் குறையாக சொல்ல

அவளை அணைத்தவாறே அருகில் இருக்கும் கட்டிலில் அமர்ந்தவன் “அட என் மக்கு பொண்டாட்டியே” என ஆரம்பிக்க

“நீங்களும் அந்த வாத்தியார் மாதிரியே என்னை மக்குன்னு சொல்றிங்க பாருங்க” என அவள் அதில் குற்றம் கண்டுபிடிக்க

“சரி சரி என் புத்திசாலி பொண்டாட்டியே படிப்புங்கிறது அறிவை வளர்த்துக்க தானே தவிர அதுவே அடையாளம் கிடையாது.ஒருத்தன் எவ்ளோ தான் படிச்சு இருந்தாலும் அவனோட நடத்தைதான் அவன் குணத்தை சொல்லும். அதுக்காக நான் படிப்பை குறை சொல்லலை...ஆனா படிப்பு மட்டுமே வச்சு ஒருத்தனை புத்திசாலின்னு நம்ம சொல்ல முடியாது” என்றான் அவன்.

“அப்போ நான் படிக்கலைனாலும் அறிவாளிதானுங்க மச்சான்” என அவள் பெருமையாக கேட்கவும்

“ஆமா ஆமா ரொம்ப பெரிய அறிவாளி...ஒரு மரத்து கள்ள ஒருத்தியா குடிச்ச திறம்சாலியில்ல நீ” என அவன் கிண்டலாக பதில் கொடுக்கவும்

“என்னங்க மச்சான் நீங்க....அது எல்லாம் அப்போ என சொன்னவள் ஆனாலும் செம கிக்கா இருந்துச்சுங்க மச்சான் அது ” என சிரித்து கொண்டே அவனை ஓரகண்ணால் பார்த்து கண்ணடித்த படி சொல்ல

“திமிருடி உனக்கு” என செல்லமாக அவள் தலையில் கொட்டியவன் “ஆனா அதை விட கிக்கான ஒன்னு நான் குடிச்சிருக்கேன்” என்றான்.

“அப்டியா என்ன மச்சான் அது...அச்சோ நீங்க சாராயம் குடிப்பிங்களா? என அவள் அதிர்ச்சியுடன் கேட்க

“ம்கும் அதெல்லாம் இதுக்கு முன்னாடி எந்த மூல என்றவன் அவள் முகத்தை தன் அருகில் கொண்டுவந்து அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டவன் இதில இருக்கும் கிக்கு எத்தனை பட்ட சரக்கு அடிச்சாலும் வராதுடி என் மக்கு பொண்டாட்டி” என சரசமாக சொல்லிகொண்டே அதில் ஆழ்ந்து தேடலில் இறங்க மயக்கத்தில் கிறங்கி நின்றாள் அவன் மனைவி.

பிறகு ஒரு நாள் காலை உணவின் போது “பூரணி நாளைக்கு டவுனுக்கு போறேன் நீயும் வரீயா” என கேட்டான் புகழ்.

“இல்லைங்க மச்சான்.....அத்தை எதோ கம்பு புடைக்கனும்னு சொன்னாங்க...வேலை இருக்குங்க மச்சான்” என சொன்னாள் பூரணி.

“அதெல்லாம் அம்மா பார்த்துக்குவாங்க..நீ வா போயிட்டு வரலாம்....இல்லை இன்னைக்கே அந்த வேலையை முடிச்சிடு ” என சொல்லி கொண்டு இருக்கும்போதே

“ஆமாண்டா குத்தாலத்துல குளிக்க போக கும்பகோணத்திலே துணிய அவுத்தானாம் ஒருத்தன்.....நல்லா இருக்குடா உங்க நியாயம்” என கேட்டுகொண்டே பேச்சி உள்ளே வர

அவரை கண்டதும் புகழ் “அது வந்தும்மா..நான் என்ன சொன்னனேன்னா” என தடுமாற

அதற்குள் “அக்கா அக்கா” என்ற சத்தம் கேட்டதும்

“பாரி சத்தம் போல் கேட்குது” என சொல்லியபடி வெளியே வந்த பூரணி அங்கு நின்று கொண்டிருந்த பாரிய பார்த்ததும் “ஏய் பாரி எப்படி வந்த என்றபடி அவள் அருகில் சென்றவள் முகமெல்லாம் சந்தோசம் நிறைந்து இருக்க எப்டி இருக்க பாரி?... யாரு கூட வந்த அம்மா அப்பா வந்து இருக்கங்களா?...எங்க காணோம்?” என கேட்டுகொண்டே அவள் கைகளை விடுத்தது வெளியில் பெற்றவர்களை தேட பார்த்து கொண்டிருந்த பாரிக்கோ கண்களில் கண்ணீர் தேங்கிவிட்டது.

“அக்கா அம்மா, அப்பா எல்லாம் வரலை நான் தான் வந்தேன்” என அவள் சொல்லவும்

முகத்தில் இருந்த உற்சாகம் சட்டென்று குறைந்து விட “அவங்க வரலையா?” என உள்ளே சென்ற குரலில் கேட்கவும்

அதற்குள் பேச்சியம்மா “வந்த புள்ளைய இப்படி வாசல்ல நிக்க வச்சு பேசிட்டு இருக்க...உள்ளே கூட்டிட்டு போ பூரணி” என ஒரு அதட்டல போடவும் அதற்குள் புகழும் “பாரி நீ உள்ள போம்மா” என்றான்.

உடனே தங்கையின் பக்கம் திரும்பியவள் “சரி சரி உனக்காவது என்னை பார்க்கணும்னு தோனுச்சே வா பாரி உள்ள போலாம்” என வருத்தி மறைத்து அவளை அழைத்து சென்றாள்.

அவளது முக மாற்றத்தை புகழும் கவனித்து தான் இருந்தான்.முன்பு எல்லாம் அடிக்கடி அம்மா வீட்டிற்கு போலாம் என்ற பூரணி சில நாட்களில் அதை பற்றி கேட்பதில்லை.ஆனால் அவள் மனதிற்குள் வைத்து வேதனைபட்டிருகிறாள் என்பதை இப்போது புகழ் புரிந்து கொண்டான்.புரிந்து என்ன பயன்?......வாய்சண்டை கைசண்டயாக இருந்தால் தீர்வு உண்டு.....இந்த உரிமை போராட்டத்திற்கு தீர்வு என்பதே விட்டு கொடுப்பது தான். தகுதியும் தராதரமும் ஒரே நிலையில் இருக்கும்போது நான் ஏன் இரங்கி செல்ல வேண்டும் என இளரத்தம் சொல்ல,வயதிலும் அனுபவத்திலும் மற்றும் குடும்பத்திலும் பெரியவனான நான் ஏன் இரங்கி செல்ல வேண்டும் என பெருவட்டம் கேட்க விடை இல்லாத வினாவிற்கு விடை தேடி பயன் என்ன ????

“பரீட்சை எல்லாம் எப்படி எழுதிருக்க பாரி” என கேட்க

“சூப்பரா எழுதிருக்கேன்க்கா....கண்டிப்பா டாக்டர் சீட் கிடைச்சிடும்” என நம்பிக்கையுடன் சொன்னாள் பாரி.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு பாரி...நான் தான் படிக்கலை..நீயாவது நல்லா படிச்சு டாக்டர் ஆகிடு...அப்பத்தான் நம்ம அப்பாவுக்கும் பெருமையா இருக்கும்” என்றாள் பூரணி.

“அதெல்லாம் வாங்கிடலாம் விடு என்றவள் நீ எப்படிக்க இருக்க?...ஏன் வீட்டு பக்கம் வரவே இல்ல.....அம்மா தான் ரொம்ப கவலைபட்டுகிட்டு இருக்காங்க என்றவள் நீ நல்ல இருக்கியாக்கா ...மச்சான் உன்னை நல்லா பார்த்துகிறாரா? நீ கொஞ்சம் குண்டாகிட்டக்கா” என அவள் பேசிகொண்டே சொல்ல

நான் நல்ல இருக்கேன் பாரி.என்னடி சொல்ற...நிசமாத்தான் சொல்றியா ...ஐயோ ஏற்கனவே இந்த பாண்டி என்னை பூசணிக்காய்னு சொல்லி கிண்டல் பண்ணுவான். நீ வேற இப்படி சொல்லிட்டியே” என அவள் சிறுபிள்ளை போல கவலை பட

பாண்டியின் பெயரை கேட்டதும் பாரின் கண்களில் மின்னல் தோன்ற “பாண்டி மச்சான் இங்க தான் இருக்காறா?படிப்பு முடிஞ்சிருச்சா?” என ஆர்வமுடன் விசாரித்தாள்.

“இங்கதான் இருக்கான்.படிப்பு முடிஞ்சிருச்சு.....வெளிநாட்டுக்கு படிக்க போன்னு உங்க மச்சான் சொன்னாப்படி...அதுக்கு எதோ பரீட்சை எழுதணுமாம்...அதுக்காக டவுனுக்கு போயிட்டு வந்திட்டு இருக்கான்” என்றாள் பூரணி.

“ஓ அப்போ மச்சான் வெளிநாடு போய்டுவரா” என அவள் கேட்கவும்

“அதெல்லாம் தெரியாது பாரி...நீ அவனை விடு...நம்ம கதை பேசுவோம் வா...ஊர்ல எல்லாம் எப்படி இருக்காங்க....அப்புறன் இந்த மணி சாந்தி ரெண்டு பெரும் வந்தாங்களா.....வேற என்ன விசேஷம்” என ஊர்கதை பேச பாரியும் அனைத்திற்கும் பதில் சொல்லி கொண்டிருந்தாள்.

அதற்குள் பேச்சியம்மாள் காபி போட்டு கொண்டு வர

“ அவரிடம் நல்ல இருக்கீங்களா?” என நலம் விசாரித்தவள் “உங்களுக்கு எதுக்கு அத்தை சிரமம்.....நான் இப்பதான் வீட்ல குடிச்சிட்டு வரேன்” என பாரி சொல்லவும்

“பரவாயில்லை புள்ள.....வீட்ல பலகாரம் ஏதும் இல்லை.....அதான் காபி மட்டும் கொண்டு வந்தேன்...குடிச்சிட்டு பேசிட்டு இருங்க..நான் மதிய சமையலை பார்த்துகிறேன்” என சொல்லிவிட்டு சென்றார்.

பாரி வந்ததும் பூரணிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. வீட்டை எல்லாம் சுற்றி காட்டியவள் கனகாவிடம் சென்று அறிமுக படுத்த ஏற்கனவே திருமணத்தில் பார்த்து இருந்ததால் “ஏனக்கா இந்தாக்காவுக்கு வாய் துடுக்கு அதிகாமச்சே...நீ கொஞ்சம் பார்த்து இரு” என தமக்கையை எச்சரிக்க

“அப்படி எல்லாம் இல்ல புள்ள.....படபடன்னு பேசுவாங்க...ஆனா ரொம்ப நல்லவங்க” என்றாள் பூரணி.

“அப்புறம் அத்தை எப்படிக்கா? இப்போ நல்லாத்தான் பேசறாங்க...ஆனா ஊர்ல எல்லாம் இவங்களை” என சொல்லி நிறுத்த

“அவங்களும் அப்டிதான் பாரி.....தப்பு செஞ்சா திட்டுவாங்க.....மத்தபடி நல்லவங்கதான்.நானும் கொஞ்சம் பார்த்து நடந்துக்குவேன்” என சொல்லவும் பாரிக்கு பூரணியை பார்க்க ஆச்சிரியமாக இருந்தது.

“நீ ரொம்ப மாறிட்டாக்கா” என அவள் சிரித்து கொண்டே சொல்லவும்

“நானா மாறலை பாரி...சூழ்நிலை என்னை இப்படி மாத்திடுச்சு” என சொல்லும்போதே அவள் குரலில் வெறுமை தெரிய

“அக்காஆஆ” என அதிர்ந்த படி பாரி அவள் முகத்தை பார்க்கவும்

அதற்குள் “பூரணி சாப்பாடு செஞ்சுட்டேன்...உங்க தங்கச்சிய சாப்பிட சொல்லு” என பேச்சியம்மாவின் குரல் அவர்களது பேச்சை தடுக்க

“இதோ வந்திட்டோம் அத்தை” என்றபடி பாரியை சாப்பிட அழைத்து சென்றாள் பூரணி.

அவள் சாப்பிட அமரவும் பாண்டி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“இதோ பாண்டியும் வந்திட்டான் ...பூரணி அவனுக்கு சாப்பாடு எடுத்து வை” என்றார் பேச்சி.

உள்ளே நுழைந்தவன் பாரியை பார்த்து புருவத்தை சுளிக்க

பாரியும் இப்போது தான் பாண்டியை பார்க்கிறாள். சிறுவயதில் பார்த்தது.பெரியவனான பிறகு புகழை பார்த்து இருக்கிறாள். பாண்டியை பார்த்தது இல்லை. மாணிக்கத்தை பாண்டிக்கு பிடிக்காது....அவர் இருக்கும் திசை ஊர் என்றாலே எதற்கும் செல்ல மாட்டான் பாண்டி. அதனால் விழாக்களுக்கு கூட புகழ் தான் வருவான்.

பாண்டியும் பாரியும் பல வருடங்களுக்கு பின் இப்போது தான் முதல் முறையாக.பார்க்கிறார்கள்.

இருவரும் பார்த்துகொண்டே இருக்க “என்ன பாண்டி யாருன்னு தெரியலையா ..... அட நீதான் கண்ணாலத்துக்கு இல்லையில .......நம்ம பூரணி தங்கச்சி பாரிசாதம் தான்” என பேச்சியம்மாள் அறிமுகபடுத்த “ஓ” என ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லியவன்

அதற்குள் பூரணி அவனை சாப்பிட அழைக்க நான் பிறகு சாப்பிட்டுகிறேன் என்றபடி அறைக்குள் நுழைந்து கொண்டான் புகழ்.

பாரியும் பாண்டியை சிறு வயதில் பார்த்தது.பிறகு அவள் விடுதிக்கு சென்று விட்டதால் தோழிகள் தான் அடிக்கடி பேருந்தில் வம்பு செய்கிறான் என புகார் சொல்வார்கள்.சில சமயம் வண்டியில் செல்லும்போது பின்புறம் மட்டும் அதும் அவளது தோழிகள் “இங்க பாரு உங்க பாண்டி மச்சான் போறான்” என செல்லும்போது பார்த்து இருக்கிறாள்.

“பரவாயில்லை நம்ம ஆளு புகழ் மச்சான் மாதிரி இல்லை..... நம்ம உயரத்துக்கும் நிறத்துக்கும் ஒத்து வரும்” என மனசுக்குள் சொல்லிகொண்டாள்.

வேலை முடித்து வந்த புகழ் பாரியுடன் சிறிது பேசிவிட்டு பின்னர் பாண்டியை அழைத்து “பாண்டி பாரி முத முறை நம்ம வீட்டுக்கு வந்திருக்கு. எல்லாரும் சேர்ந்து சினிமாவுக்கு போலாம்” என்றான் .

பூரணிக்கோ சந்தோசம் தாங்க முடியவில்லை.தங்கள் வீட்டு சொந்தங்களை புகுந்த வீட்டில நன்றாக கவனிக்கும்போது எந்த பொண்ணும் உள்ளம் குளிர்ந்து போவாள். பூரணி நிலையும் அதுதான். பாண்டியோ டிக்கட் எடுத்து வர பாண்டி புகழ் பூரணி பாரி நால்வரும் தியேட்டருக்கு வந்தனர்.

பாரிக்கோ பாண்டியோடு சினிமாவுக்கு வருவதில் ஏகபட்ட சந்தோசம்.அதற்காகவே நன்றாக அலங்காரம் பண்ணி இருந்தாள்.பூரணியோ திருமணத்திற்கு பின் முதன் முறையாக புகழோடு படம் பார்க்க வருகிறாள்.அந்த சந்தோசமே அவளை அழகாக காட்டியது.

தியேட்டர் உள்ளே நுழைந்ததும் பாண்டியை பார்த்ததும் அங்கு இருக்கும் சில இளவட்டங்கள் வேகமாக அவனை நோக்கி வந்தவர்கள் “ என்ன தலைவரே சொல்லாம வந்து இருக்கீங்க...எங்க உங்க கூட்டாளிங்க எல்லாம்....எத்தன டிக்கெட் வேணும் ...நீங்க எப்பவும் கேட்கிற கார்னர் சீட் போடறோம் தலைவா” என்றபடி அவனை சூழ்ந்து கொண்டனர்.

“அச்சோ இவனுக எங்க இங்க வந்தானுங்க.. என மனதிற்குள் புலம்பியவன்...நான் டிக்கெட் எடுத்திட்டேன் வேண்டாம்” என அவர்களிடம் இருந்து விலகி வர

பார்ப்பதற்கு ரவுடிகள் போல் அவர்கள் தெரியவும் புகழோ பாண்டியை முறைத்தவன் ...”ஏண்டா நீ இவங்களுக்கு தலைவனா “ என கோபமாக கேட்க

“.ஐயோ இல்லங்கண்ணே ...சும்மா இவனுகளா சொல்றானுக.....இந்த பசங்க எல்லாம் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கானுக” என மலுப்பவும் பாரியோ அவன் தடுமாற்றத்தை கண்டு சிரித்து கொண்டு நின்றாள்.

அதற்குள் பூரணி எடை மிசினை பார்த்ததும் அதில் நிற்க வேண்டும் என சொல்ல புகழ் தடுத்தும் அவள் அடம்பிடிக்க “டேய் பாண்டி நான் அங்க போயிட்டு வந்திடறேன்...நீங்க இங்கே நில்லுங்க” என்றபடி பாரியை பாண்டியும் விட்டு சென்றான்.

பாண்டியோ புகழ் அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்ற நிலையில் “நீங்க போயிட்டு வாங்க அண்ணே நான் பார்த்துகிறேன்” என வேகமாக தலையாட்டினான்.அவனது செயலை கண்டு பாரி மீண்டும் சிரித்தவள் “ஏனுங்க மச்சான் இவங்க காலேஜ் படிக்கிறாங்களா?” என கேட்கவும்

அவளது சிரிப்பே அவள் நம்பவில்லை என அவனுக்கு உணர்த்த “அம்மா தாயே நீ கண்டுபிடிச்சுட்டியா.....எங்க அண்ணன்கிட்ட ஏதும் போட்டு கொடுத்திடாத...நாளைக்கு தல படம் வந்தா கட்டவுட் வைக்க இவனுகதான் வேணும்” என அவன் கெஞ்சுவது போல சொல்லவும்

“சரி பொழச்சு போங்க...நான் சொல்லை” என அவள் பெரிய மனசு போல சொல்லவும் ...”எல்லாம் என் நேரம்” என தலையில் அடித்தபடி நின்று இருந்தான் பாண்டி.

அப்போது அங்கு இருந்த ஒரு கும்பல் “ஹே அங்க பாருங்கடி நம்ம விடுகதை பார்ட்டி.....என்ன நண்பா கேர்ள் ப்ரிண்ட்சோட சினிமாவா...சூப்பரா இருக்காங்க” என சத்தமாக சொல்லி சிரிக்கவும்

“அச்சோ இது அண்ணாச்சி கடையில பார்த்த கும்பலாச்சே......மாட்னோம் கும்மி அடிச்சுருவாங்கலே” என அதிர்ந்தவன்

அதற்குள் “யாருங்க மச்சான் அவங்க ...உங்க காலேஜா...என்ன விடுகதை... “ என அவனை சந்தேக பார்வையோடு பாரி கேட்கவும்

“அது வந்து வந்து பக்கத்து காலேஜ் பாரி.....சும்ம்மா கிண்டல் பண்றாங்க” என சொல்லி சமாளித்தவன் நீ வா நம்ம உள்ள போலாம் என அழைத்து சென்றவன் நீ வசதியா உட்கார்துக்கோ...உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா” என கேட்கவும் அவனது அக்கரையில் மற்றதை மறந்து போனாள் பாரி.
அதற்குள் புகழ் வந்துவிட ஒருவழியாக படம் பார்த்து முடித்து வெளியே வந்தனர்.

மறுநாள் தனது தமக்கையுடன் பேசி கொண்டு இருந்தவள் “அக்கா நீ மாமாகிட்ட எப்படியாவது சொல்லி ஊருக்கு வாக்கா” என சொல்லவும்

“நான் சொல்லிட்டேன் பாரி....நான் கேட்டது எல்லாம் செஞ்சு தறார்,இந்த ஒரு விஷயத்துல மட்டும் பிடிவாதமா இருக்கார்...ஏன்னு எனக்கே புரியலை என சொல்லவும் பாரி நடந்த விபரங்களை சொல்ல “அச்சோ இவ்ளோ விஷயம் நடந்து இருக்கா...ஆனா அப்பத்தா நம்மகிட்ட வேற மாதிரி தானே சொன்னாங்க...நானும் அதை கேட்டு புகழ் மச்சானை தப்பாவே நினச்சுட்டு இருந்தேன்” என கவலயுடன் சொன்னாள் பூரணி..

“ஆமாக்கா... நடந்தது இதுதான்...எல்லாரும் இட்டு கட்டி பேசி பெருசு பண்ணிட்டாங்க..... என சொல்லவும்

“ஆனா அத்தை பழசை எல்லாம் மறந்து நம்ம வீட்டுக்கு வரது கண்டிப்பா நடக்காது பாரி.....மனசுல எவ்ளோ வைராக்கியம் இருந்தா தனி பொம்பளையா இருந்து இவ்ளோ தூரம் இந்த குடும்பத்த கொண்டு வந்து இருப்பாங்க.....உசிரே போனாலும் நம்ம வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டங்க” என்றாள் பூரணி.
 
“இப்போ என்னக்கா பண்றது....அப்பாவும் இரங்கி வர மாதிரி தெரியலை என்றவள் ஆனா புகழ் மச்சான் நல்லவர்க்கா.....அவர் மட்டும் இல்லைய்னா நம்ம நிலைமையை நினைச்சே பார்க்க முடியாது.....நம்ம குடும்ப மானத்தை அந்த மாமா விலை பேச ஆனா புகழ் மச்சான் தான் நான் இருக்கேன்னு சொல்லி தூக்கி நிறுத்தினார். அதை அப்பா கொஞ்சம் நினைச்சு பார்க்கலாம்.....ஆனா அப்பாவுக்கு அவரோட கௌரவம் தடுக்குது” என சொல்லவும் .

அவள் திருமணத்தை பற்றிதான் சொல்கிறாள் என புரிந்து கொண்ட பூரணி.....”ஆமா பாரி அப்போ மட்டும் புகழ் மச்சான் மத்தவங்க சொல்றத நம்பி என்னை வேண்டாம்னு சொல்லி இருந்தா நம்ம குடும்ப மானம் மரியாதை என சொல்லும்போதே அவள் குரலில் நடுக்கம் வர உனக்கு தெரியுமா?புகழ் மச்சான் ரொம்ப நல்லவர் பாரி.....அவருக்கு நான் தகுதியே இல்லை” என அவள் சொல்லி கொண்டிருக்க

அப்போது உள்ளே வந்த புகழ் அவர்கள் பேசுவதை கேட்டவன் தன்னை பற்றி தன் மனைவி பெருமையாக சொல்வதை கேட்டதும் அப்படியே நிற்க அவன் வந்ததை தமைக்கைகள் கவனிக்கவில்லை.

“அக்கா நீ அழகன் மச்சானை கண்ணாலம் பண்ணாம இருந்தது எவ்ளோ நல்லது தெரியுமா? அந்த கோமதி அத்தை மாமா மனசுக்குள்ள பழைய வஞ்சத்தை வச்சிட்டு தான் அப்பாவ அப்படி அவமானபடுத்தி இருக்காரு.....அழகன் மச்சான் உன்னை கண்ணாலம் பண்ணி இருந்தாலும் இதை சொல்லியே உன்னை கஷ்டபடுத்தி இருப்பாங்க” என்றாள் பாரி.

அதற்கு “எல்லாமே விதிப்படிதான் நடக்கும் பாரி...நம்ம நினைச்சது எல்லாமே நடந்திடவா போகுது” என அவள் விரக்தியாக பதில் சொல்ல

“ஏன்க்கா உனக்கு புகழ் மச்சானை பிடிச்சு இருக்குது தான” என அவள் கேட்கவும்

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாரி...ஆனா மனசுக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி என்னை கொல்லுது ....என்ன இருந்தாலும் என் பேரு கெட்டு போனது தான......எப்படி எல்லாம் என்னை பேசிட்டாங்க..... நான் நினைச்சே பார்க்கலை...என்வாழ்க்கையில இப்படி ஒரு அவமானம் ஏற்படும்னு.....மனசு ரொம்ப வலிக்குது பாரி.....சில சமயம் மச்சான் பேசும்போது என்னால எதிர்த்து பேசமுடியலை...உரிமையா என்னோட உணர்வுகளை எடுத்து சொல்ல கூட கூச்சமா இருக்கு...அதும் மச்சான் என் மேல உயிரே வச்சிருக்கும்போது ஆனா எனக்கு அதுக்கான தகுதி இல்லையே என நினைக்கும்போது செத்து பொழைக்கிறேன்” என மனதில் இருந்த வலிகள் எல்லாம் வார்த்தைகளாக வெளிவர

“அக்கா நீ என்ன சொல்ற” என பாரி பதறி கேட்க

“இல்ல பாரி....என் மனசில நான் என்னை நினக்கிறேனு எனக்கே புரியலை...ஆனா இந்த ரணம் அவ்ளோ சீக்கிரம் ஆறாது என்றவள் மச்சானோட நல்ல மனசுக்கு அவருக்கு என்னைவிட நல்ல பொண்ணா கிடைச்சு இருக்கலாம்” என தன் மனதில் இருப்பதை கொட்டிக்கொண்டு இருந்தாள் பூரணி.

அப்போது அவள் அருகில் வந்து நின்ற பாரி அக்கா நீயும் ரொம்ப நல்லவதான்க்கா...நீ ஏன் உன்னை குறைச்சு பேசற ..... மச்சான் இத பத்தி ஏதாவது சொன்னாரா” ? என கேட்க

அவளோ வெற்று புன்னகையை சிந்தியபடி ஏதும் சொல்லாமல் எழுந்தவள் “சில விஷயங்களுக்கு நம்ம விடை தேடக்கூடாது பாரி.தேட ஆரம்பிச்சா அதுவே நம்மை கேள்விக்குறியாக்கிவிடும்” என ஒரு மாதிரியான குரலில் சொல்லிவிட்டு நகர பாரியோ அதிர்ந்து போய் நின்றாள்.

அவர்கள் சந்தோஷமாக பேசுகிறார்கள் என கேட்க ஆரம்பித்த புகழ் முழுவதும் கேட்டவன் அவனது செயலின் விஸ்வரூபம் தெரிய அதுவரை மனதில் இருந்த சந்தோஷங்கள் எல்லாம் பொடிபொடியாக நொறுங்கி போக சிலையாகி போனான்.

மறுநாள் பாரி கிளம்பி செல்ல அவளை பேருந்தில் ஏற்றிவிடும் பொறுப்பு பாண்டியிடம் வந்தது.கிளம்பும்போது தமைக்கையிடமும் மச்சானிடம் சீக்கிரம் வீட்டிற்கு வர வேண்டும் என அவள் அழைக்க புகழும் வருவதாக வாக்கு கொடுத்தான்.

இவர்கள் செல்வதற்குள் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிளம்பிவிட புகழ் பாண்டியை அடுத்த நிறுத்தத்திற்கு அழைத்து செல்லமாறு சொல்ல பாண்டியுடன் வண்டியில் சென்றாள் பாரி.

மனதிற்கு பிடித்தவனுடன் தனியாக செல்வது எத்தனை இன்பம் என்பதை அணுஅணுவாக ரசித்து கொண்டு வந்தாள் பாரி.

அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நிற்க அவள் இறங்கி அவனிடம் சொல்லிவிட்டு மேலே ஏறியவள் “ஹே பொன்மலர் எப்படி இருக்க” என கேட்கவும் பாண்டியோ வேகமாக பேருந்துக்குள் பார்க்க அதில் பொன்மலர் அமர்ந்திருந்தாள்.சிலநாட்களாக பொன்மலரை பாண்டி பார்க்க முடியவில்லை.அருகில் இருக்கும் அரசி பாண்டியை பார்த்துவிட்டு பொன்மலருக்கு சொல்ல அவளும் அப்போது தான் பாண்டியை பார்த்தாள்.அதற்குள் பேருந்து கிளம்ப அவள் அருகில் சென்று அமர்ந்த பாரி “எப்படி இருக்க பொன்மலர்”...பரீட்சை எல்லாம் நல்ல எழுதினியா ?ஏன் வீட்டு பக்கம் வராதே இல்ல” என தனது விசாரணயை ஆரம்பிக்க பேச்சும் கவனமும் மாறிப்போனது.

பாரி வந்து சென்றதில் இருந்தே புகழ் அவளிடம் சரியாக பேசாமல் சிந்தனையிலே இருக்க பூரணியோ என்ன தவறு செய்தோம் என் புரியாமல் “ஏன் மச்சான் இப்படி இருக்கீங்க...நான் ஏதாவது தப்பு செஞ்சுட்டனா” என கேட்டாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் மனதில் எதோ எதோ தோன்ற “நீ ஒன்னும் செய்யலை...நான் தான் செஞ்சுட்டேன்...உன்மேல ஆசை வைச்சேன் பாரு அதான் தப்பு” என மனதில் இருக்கும் குழப்பத்தில் அவன் கோபமாக பேச வெகு நாட்களுக்கு பிறகு அவனது கோபத்தை பார்த்தவள் கண்களில் கண்ணீர் முட்ட நின்று கொண்டு இருந்தாள்.

அவளின் அருகாமை மேலும் அவனை எரிச்சலூட்ட “சே இந்த வீட்ல நிம்மதியே கிடையாது” என சொல்லியபடி காலை சாப்பாடு சாப்பிடாமல் எழுந்து சென்று விட்டான்.

அன்று மதியம் அவன் விரும்பி சாப்பிடும் நண்டு குழம்பும்,வருவலும் செஞ்சு வயலுக்கு எடுத்து சென்றாள் பூரணி.

அவள் சாப்பாடு கொண்டு வருவதை பார்த்தவன் “ஏய் மருது உன்னைத்தானே சாப்பாடு வாங்க போக சொன்னேன்” என சத்தம் போட

அவனோ மிரண்டு “அய்யா சின்னம்மா தான்” என இழுக்க

“ஆமா மறுபடியும் அவ காணாம போவா..நம்ம தேடனும்” என பழையதை பற்றி பேசவும்

பூரணியோ அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொண்டுபட்டியில் அமர்ந்து அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தவள் “இங்க பாருங்க மச்சான்...நீங்க என்ன வேணாலும் திட்டிகுங்க...எனக்கு உங்க மேல கோபம் வராது.....சும்மா சலசலன்னு பேசிட்டு இருக்காம சீக்கிரம் சாப்பிட வாங்க.....எனக்கும் பசிக்குது ” என சொல்லவும் என்ன பதில் சொல்வது என் தெரியாமல் நின்றான் புகழ்.

எதிர்பேச்சு பேசினால் வாயாடலாம்.அவளோ அதை சிரித்தபடியே எதிர்கொள்ள அவன் மீதே அவனுக்கு கோபம் வந்தது. அப்போது அலைபேசி ஒலிக்க எடுத்து காதில் வைத்தவன் “அண்ணா ஊர்ல இருந்து அழகன் அண்ணா வந்து இருக்காங்க நீங்க வரீங்களா?” என கேட்கவும் புகழின் இருதயம் ஒரு நிமிடம் நின்று போனது..

நாளை நடப்பது நமக்கு தெரிந்துவிட்டால்
இன்றிய வாழ்வு சுவையற்று விடும்.
பருவ வயது பார்ப்பதும் கேட்பதும்
சுகமான அனுபவத்தை தர
அது இலையின் மேல் உள்ள
நீர்த்துளி என்பதை பாவம்
அந்த பேதை அறியாள்.
உப்பை தின்றவன் தண்ணீர்
குடித்தே ஆகவேண்டும் அது விதி.
மலரின் புன்னகையை மட்டுமே
பார்த்து அவன் மகிழ்ந்திருக்க
அதன் வேர்கள் அழுகி கொண்டிருப்பதை
ஏனோ அவன் அறியவில்லை!
அறிந்த பின்பும் அவனால் ஏதும்
செய்ய முடியா நிலை?
காதல் மனதை வெல்லும்!
உயிரையும் கொடுக்கும்.
ஆனால் துரோகத்தை
மன்னிக்குமா??????????????

கேள்வியுடன் உங்களை போல் நானும்